Members Login
Username 
 
Password 
    Remember Me  
Forum: அரட்டை
அரட்டை

Sticky Topic   பட்டம் சூட்டுங்க......

November 25, 2012

இது முழுக்க முழுக்க ஜாலியான கற்பனைகளுக்கு உரிய இழை.... யாரும் தப்பா எடுத்துக்க மாட்டிங்கன்னு நம்பிக்கைல தொடங்குறேன்.... மாற்றுக்கருத்து இருந்தால் சொல்லுங்க, மாற்றிடலாம்...

 

 

இங்கு உள்ள நம் நண்பர்களை வழக்கமான பெயர் வைத்து கூப்பிட்டு போர் அடிக்குது..... அதுவும் அர்த்தமே புரியாம "ரோத்திஸ்" பத்து கோடி மக்களுக்கும் பொதுவான பெயரான "தமிழன்" இப்டி எல்லோருக்கும் இருக்கும் பெயரை விட்டுட்டு, அவங்களுக்கு தோதான பெயரை சொல்லுங்க..... முத்துக்கு "நாகப்பாம்பு"னு பெயர் வைக்கலாம்.... வேற காரணங்களை நீங்கள் கற்பனை பண்ணினா நான் பொறுப்பில்லை..... பாம்பைவிட அதிக படங்களை எடுத்து, அவற்றை வினியோகஸ்தர்களே இல்லாமல் வெளியிட்ட முத்துவுக்கு இந்த பெயர் நல்லா இருக்கும்னு தோணுது......

தம்பி "sat"க்கு  "குட்டி வலம்புரி ஜான்"ன்னு பெயர் வைக்கலாம்....

"வல்லாரை கீரையை வதக்கி, அதை மண்ணெண்ணெய் ஊற்றி கிளறி, மண்புழுவாய் மசித்து, கசாயமாக எடுத்து காயவைத்து காலில் தேய்த்தால், காலில் ஒட்டியிருக்கும் அழுக்கு காணாமல் போகும்" என்பது போன்ற அரிய தகவல்களை கொடுத்து, ஒரு குட்டி சேலம் வைத்தியர் ரேஞ்சுக்கு செய்வதால்....

 

அடுத்தடுத்த நபர்களுக்கு அப்புறம் சொல்றேன், நீங்களும் உங்களுக்கு தோன்றிய பெயர்களை சிபாரிசு செய்யுங்க.....

Started By: msvijay

Comments: 51

Views: 6382

Last Post: Aug 16, 2019 by Raj spr

 Add/remove tags to this thread

Sticky Topic   வார்த்தை விளையாட்டு!

November 18, 2012

இது நமக்கெல்லாம் ஏற்கனவே பரிட்சயமான விளையாட்டுதான்..


நான் இங்கு ஒரு வார்த்தை பதிவிடுகிறேன்.. அடுத்து வருபவர் அந்த வார்த்தைக்கு சமமான பொருள்தரும் வேறு வார்த்தையையோ, அல்லது அதே வார்த்தைக்கு எதிர் பொருள் தரும் வார்த்தையையோ அல்லது அந்த வார்த்தைக்கு தொடர்புடைய வேறு ஏதேனும் வார்த்தையையோ பதிய வேண்டும்... 
அதன்பின் அடுத்த வார்த்தை, அதற்கடுத்த வார்த்தை என தொடர்ந்து கொண்டே செல்லலாம்...

உங்களின் பதில் பதிவு ஒரே வார்த்தையில் இருக்க வேண்டுமென்பதும், அதுவும் தமிழ் வார்த்தையாக இருக்க வேண்டுமென்பதும் மட்டுமே விதிமுறைகள்...

ஆரம்பிப்போமா நண்பர்களே...

முதல் பதமாக ... இதோ... 

தமிழ்!

(புது பதிவுகள் இல்லாத குறையை இது ஒரளவேனும் தீர்க்கும் என நம்புகிறேன்!)

Started By: Rotheiss

Comments: 2856

Views: 159376

Last Post: Aug 31, 2015 by rithvik

 Add/remove tags to this thread

Sticky Topic   Idioms-மரபுத் தொடர்கள்

January 7, 2015

First Footer: புத்தாண்டு பிறக்கும்போது வீட்டுக்குள் நுழையும் முதல் நபர்

First Lady: ஒரு நாட்டின் முக்கிய அதிபரின் மனைவி

First String Player: மிகச் சிறந்த விளையாட்டு வீரர்

First Water: மிகவும் உயர்ந்த தரத்திலுள்ள களங்கமற்று ஒளிவிடும் வைரம் அல்லது முத்து

Oner: நிபுணர், அற்புத மனிதர் அல்லது அற்புதப் பொருள்

One horse Town: சிறிய பழைய கிராமம்

One Liner: ஒரு ஜோக், வேடிக்கையான குறிப்பு

Look after number one: பிறரைப் பற்றி கவலைப் படாமல் தன்னைப் பற்றி மட்டுமே அக்கறைக் கொள்ளுதல்

Second Banana: உதவும் நிலையிலுள்ள ஒருவர்

Play Second Fiddle: முக்கியத்தில் இரண்டாம் இடத்தில் இருப்பவர்

Second Sight: உள்ளுணர்வு, தீர்க்கத்தரிசனம



Second String: மாற்று ஆள்

Second Wind: நீண்ட களைப்புக்குப் பின் ஏற்படும் புத்துணர்ச்சி

Two Faced: ஏமாற்றுகிற, பொய்யான

Two Way Street: வேறு இருவருடைய உதவியை நாட வேண்டிய நிலை

Third Degree: குற்றவாளி அல்லது சாட்சியிடமிருந்து கேள்வி மேல் கேள்வி கேட்டு உண்மையை வரவழைக்க போலீஸ் மேற்கொள்ளும் கடின முறை, சித்திரவதை

Thirds-man: மத்தியஸ்தம் செய்பவர்

Third World: ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலுள்ள முன்னேறாத ஏழை நாடுகள்

Three ring circus: ஏகப்பட்ட வேலைகளால் ஏற்படும் குழப்பமான நிலை அல்லது இடம்

Three Line Whip: சட்டசபை அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்போது எப்படி வாக்களிக்க வேண்டுமென்று எழுத்து மூலம் வழங்கும் உத்தரவு

Fourth Dimension: காலம்

Fourth Estate: பத்திரிக்கை

Four Eyes: கண்ணாடி அணிந்தவர்

Four Flusher: பிறரை ஏமாற்றுபவர்

Four Letter Word: ஆபாச வார்த்தை

Fifth Column: சொந்த நாட்டிலிருந்தபடியே எதிரி நாட்டுக்காக இரகசியமாக செயல்படும் குழு

High Five: வெர்றியைக் கொண்டாட, வாழ்த்தைத் தெரிவிக்க தலைக்கு மேல் கைகளை உயர்த்தி அடுத்தவரின் உள்ளங்கையில் தட்டுதல்

To Take Five: சில நிமிடங்கள் ஓய்வெடுத்தல்

Sixth Sense: ஐம்பொறிகளுக்கு அப்பால் சில விஷயங்களை உணர்ந்து கொள்ளும் திறன், உள்ளுணர்வு

At Sixes and Sevens: ஒரே குழப்ப மயம்

In Seventh Heaven: பெரு மகிழ்ச்சியில் இருத்தல்

Behind the Eight ball: மிகவும் ஆபத்தான, இக்கட்டான நிலையில் இருத்தல்

On Cloud nine: மிகவும் மகிழ்ச்சியோடு இருத்தல்

Nine day's Wonder: சில தினங்களுக்கு மட்டுமே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்ச்சி

Dressed (up) to the nines: மிகச் சிறந்த உடைகளை அணிதல்

Ten to one Chance: அனேகமாக நடக்காது

Be ten a penny: மிக மலிவானது, சாதரணமானது

Ten Strike: பெரிய அதிர்ஷ்டம்

Eleventh hour: கடைசி நிமிடம்

Talk nineteen to the Dozen: நிறுத்தமால் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பது

Thirty Something: சுமார் 30 வயதுடைய நன்கு படித்த நல்ல நிலையிலுள்ளவர்

Forty Winks: உணவுக்குப் பின் ஒரு குட்டித் தூக்கம்

Go Fifty Fifty: பதிக்குப் பாதி பகிர்ந்து கொள்ளுதல்

64 Thousand dollar question: மிக மிகக் கடினமான கேள்வி

Look like a million dollars: மிகக் கவர்ச்சியாக காட்சி அளித்தல்

Last ditch Effort: இறுதி முயற்சி

Last straw that breaks the camel's back: பொறுமையின் எல்லை

Last Word the: மிக மிகச் சிறந்தது அதி நவீனமானது

Started By: anbaithedi

Comments: 1

Views: 2475

Last Post: Jan 28, 2015 by Butterfly

 Add/remove tags to this thread

Sticky Topic   அகத்தை புதுப்பிக்கும் "புத்தகம்"....

November 7, 2012

பொதுவாக இங்கே இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் வாசிப்பு பழக்கம் உடையவர்களாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்......

நீங்கள் படித்து பிடித்த, படித்துக்கொண்டிருக்கிற, படிக்க நினைக்கிற படைப்புகளையும், படைப்பாளர்களையும் பற்றி இங்கே சொல்லுங்கள்.....

கதைகள் படிப்பதில் விருப்பமே இல்லாத என்னை கதைகள் படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்தியது கல்கியின் "பொன்னியின் செல்வன்"....

கதைகள் படித்த என்னை, எழுதவும் தூண்டியது "சுஜாதாவின் சிறுகதைகள்".....

 

அவர்களின் படைப்புகளை பற்றி நேரம் கிடைக்கும்போது சொல்றேன்..... நீங்களும் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்களை பற்றியும் அவர்கள் படைப்புகள் பற்றியும் சொல்லுங்க.....

 

Sticky Topic   எல்லோரும் சேர்ந்து ஒரு கவிதை எழுதுவோம் ....

July 1, 2013

என்னுடைய முதல் வரி ......

 

பொன்மஞ்சள் வானம், தூரத்தில் கடல்அலை,  பக்கத்தில் நீ 

Sticky Topic   ஓரினச்சேர்க்கையும் இங்கிலாந்து ராணியும்!

December 3, 2012

டும் டும் டும் டும் டும்


நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி! சல்லாப மனிதர்களுக்கோர் அறிய வாய்ப்பு! இங்கிலாந்து ராணியின் அதிரடி உத்தரவு!

நமது நாட்டில் இனி ஆணும் ஆணும் காதலிக்கலாம். பெண்ணும் பெண்ணும் காமம் கொள்ளலாம்.

நாட்டில் எல்லோரும் ஓரினச்சேர்க்கை வைத்துக்கொள்ளலாம் என்று இங்கிலாந்து ராணியால் இனிதே ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறோம்.

டும் டும் டும் டும் டும்

மண்ணின் மைந்தன்: "இது என்ன அநியாயம்? இது அக்கிரமம். புனிதமான உணர்வுகளையெல்லாம் வக்கிரமான சட்டமியற்றி கொச்சையான உறவுகளாக மாற்ற நினைப்பதா? இது என்ன இங்கிலாந்து என்று நினைத்துக் கொண்டாளா உன் ராணி. இதை தம்பட்டம் அடித்து சொல்ல உனக்கே கூச்சமாக இல்லை? அருவறுப்பாக இல்லை? நீயும் இந்த மண்ணின் மைந்தன் தானே மடையனே!"

காவலாளி: ஏய்! நீ என்ன புரட்சிக்காரனா! ராணிக்குத் தெரிந்தால் உன் தலை சீவப்படும்! உடனே இங்கிருந்து போய்விடு.

ண்ணின் மைந்தன்: ஐந்தாயிரம் வருடங்களுக்கும் பழமையான செம்மைப்படுத்தப்பட்ட புனிதமான எங்கள் கலாச்சாரத்தை அழிப்பதே தனது வேலை என எண்ணி சட்டம் இயற்றுகிறாள் உன் ராணி. இதைக்கண்டும் வாய்மூடி அடிமையாக இருக்கச் சொல்கிறாயா! வெள்ளைத் தோல் மாயை கொண்டவனே! வெள்ளைக்காரன் சொல்வது தான் நாகரீகம் என்று எண்ணுபவனே! உன் ராணியிடம் போய்ச் சொல், இந்நாட்டில் இது போன்ற இழிசட்டங்கள் இயற்றத் தேவையில்லையென்று.

காவலாளி: சல்லாபமாயிருப்பவர்களுக்கு துணைபோகும் சட்டம். உனக்கு ஏன் வலிக்கிறது?

ண்ணின் மைந்தன்: ஏன்? நீ சட்டம் இயற்றாவிட்டால் அவர்கள் சல்லாபிக்கப்போவதே இல்லையா? இல்லை இது போன்ற இழி மனிதர்களை இங்கே யார் தடுத்தார்கள்? இவர்கள் இருட்டறைக்குள் எட்டிப்பார்த்தவர்கள் யார்? அல்லது இது வரை இவர்களை ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று சொல்லி என்றாவது கைது செய்திருக்கிறீர்களா? மக்கள் தங்கள் தர்மத்திற்க்கு கட்டுப்பட்டுத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஓரினச்சேர்க்கையாளர்களை யாரும் சீண்டாத பொழுது தேவையில்லாமல் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து நல்ல கலாச்சாரத்தில் வாழ்பவர்களை முறையற்ற வாழ்வுக்குத் தூண்டுகிறீர்கள். இந்த பாரதத்தின் கலாச்சார ஆணிவேரை அசைத்துப்பார்க்கத் துணிகிறீர்கள். ஒரு நாள் இந்த கேவலமான போக்கிற்க்கு நீயும் உன் ராணியும் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

காவலாளி: மூடனே! அதிகப்பிரசங்கி. அரசியின் சட்டத்தை அவமதிக்கிறாயா! உன்னை ராணியின் முன் நிறுத்துகிறேன் பார்.

ண்ணின் மைந்தனை இழுத்துச் சென்று இங்கிலாந்து ராணியின் முன் நிறுத்தினான் காவலாளி.

இங்கிலாந்து ராணி: என்ன பிரச்சனை?

காவலாளி: மகாராணி! இவன் மண்ணின் மைந்தன். ஓரினச்சேர்க்கை செய்யுங்கள் என்று நீங்கள் இயற்றிய உயர்வான சட்டத்தை அவமதித்துப் பேசுகிறான்.

இங்கிலாந்து ராணி: மண்ணின் மைந்தா! உனக்கு ஓரினச்சேர்க்கை பிடிக்காதா? அல்லது உனக்கு ஒத்துப்போக சரியான ஆண் கிடைக்கவில்லை என்ற கோபமா?

ண்ணின் மைந்தன்: தூ... வெட்கம் கெட்டவளே! கூச்சமில்லாதவளே! நாயைப்போல் வாழும் உங்கள் வாழ்க்கையைப் பேயைப்போல் வந்து எந்நாட்டில் திணிக்கப்பார்க்கிறாயே! தர்மமும் இந்நாட்டின் கலாச்சாரமும் உன்னையும் சேர்த்து வாழவைக்கும். நுனிக்கிளையில் உட்கார்ந்து அடிக்கிளையை வெட்ட நினைக்காதே!

இங்கிலாந்து ராணி: என்னடா பெரிய தர்மமும் உனது கலாச்சாரமும்! நீங்கள் எல்லோரும் காட்டுமிராண்டிகள் என்று உங்கள் ஊர்க்காரர் பெரியாரே சொல்லிவிட்டார். கருணாநிதியும் அதையே தான் வழிமொழிகிறார். உங்கள் சொந்தநாட்டுக்காரர்களே எங்கள் பக்கம் தான்! இங்கிலாந்து நாட்டுச் சட்டத்தை நீ ஏற்றுக்கொள்ள வேண்டியது உனது தலைவிதி. 

ண்ணின் மைந்தன்: அவர்கள் தர்மத்தை எப்படி வேண்டுமானாலும் பழிப்பார்கள். அதை ஏற்றுக்கொள்ளும் அவசியம் எனக்கு இல்லை. இந்த நாட்டின் தர்மங்களும் மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்ற உயர்ந்த சிந்தனைகளுடைய கலாச்சாரமும் உன்னால் நசுக்கப்படுவதை நான் அனுமதிக்கமாட்டேன்!.

இங்கிலாந்து ராணி: ஏய்! நீ அதிகம் பேசுவாய் போலிருக்கிறது. இதோ பார். மிருகங்களுக்குக் கூட ஓரினச்சேர்க்கை உண்டு என்றும் இது ஒரு இயற்கையான உணர்ச்சி என்றும் நிபுணர்களே சொல்லியிருக்கிறார்கள். எதுவும் தெரியாமல் எக்காளமிடாதே..

ண்ணின் மைந்தன்: மமதை கொண்ட ராணியே! புணர்ச்சியின் உணர்ச்சிகள் இயற்கையானதே என்று உணர்ந்து, அத்தகைய உணர்ச்சிகள் உண்டாவதற்க்கான காரணமும் அறிந்து அவற்றை முறைப்படுத்தி முழுமையான மனிதனாக ஒருவன் வாழ என்ன செய்யவேண்டும் என்பதனை வகுத்து முறையாக அதன் படி வாழ்பவர்கள் நாங்கள். நீ எனக்குச் சொல்லித்தராதே!

இங்கிலாந்து ராணி: ஹும்! நீ சாகாமல் போக மாட்டாய்! இதோ.. உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன்...எங்கே ஓரினச்சேர்க்கையை நீங்கள் கலாச்சாரம் கொண்டு எப்படிக் கட்டுப்படுத்தினீர்கள் என்று நான் திருப்தியடையும் வகையில் சொல் பார்க்கலாம். என் மனம் அதை ஏற்றுக் கொண்டால் உன்னை விடுவிக்கிறேன். இல்லையேல் உன் தலை கொய்யப்படும் ஜாக்கிரதை.

ண்ணின் மைந்தன்: முதலில் அது உண்டாகும் காரணத்தை புரிந்து கொள். எல்லா மனிதர்களுக்கும் பதின் வயதுகளின் ஆரம்பத்தில் தோன்றும் ஒரு பரவச உணர்ச்சி தான் ஓரினக் கவர்ச்சி. அது உடலுறவுக்கு ஏங்கும் உணர்ச்சி அல்ல. 

அது உடல் மாற்றத்தைக் கண்டு பரவசம் கொண்டு தம்மைப்போல் உள்ள சக மனிதனுக்கும் அதுவே தானா என்று ஆராய முற்படும் முயற்ச்சி. ஆணுக்கு ஆண் முழுமையாக தங்களை அறிந்து கொள்ளவும், அதே போல் பெண்ணுக்குப் பெண்ணும் தங்களை முழுமையாக புரிந்து கொள்ளும் ஒரு ஆர்வக் கோளாரின் வெளிப்பாடு. 

பின்னர் நான் மட்டும் தனித்தவன் அல்ல. எல்லோரும் என்னைப்போல் தான் என்று உணர்ச்சிகள் ஒரு நிலைக்குத் திரும்பும் போது மனிதனின் வயது பதின் வயது துவக்கத்திலிருந்து பதினைந்தைத் தொட்டிருக்கும். பதினைந்து வயதைத் தொடும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இப்போது தங்களைப்பற்றித் தெரிந்து கொண்டதைப்போல் எதிர் பாலரைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மேலெழும். இது தான் இயற்க்கை. 

இந்த உணர்ச்சி தான் ஆணையும் பெண்ணையும் இயற்க்கையான புனர்ச்சிக்குக் கொண்டு செல்லும். காதலும் காமமும் இந்த வயதில் தான் தலை தூக்கும். ஆணுக்குப் பெண்ணையும் பெண்ணுக்கு ஆணையும் அடையத்துடிக்கும் வயது. இந்த வயதில் காதலும் காமமும் முறையான உறவான திருமணம் என்ற சடங்கின் மூலமாக நிகழ்த்தப் பட்டு இல்லற வாழ்க்கை என்னும் தர்மத்திற்க்குள் நுழைந்து இயற்கையாக உண்டாகும் முறையான உணர்ச்சிகளை முழுமையாக அனுபவிக்கும் படி எங்கள் கலாச்சாரம் கட்டுக்கோப்பாக இயற்றப்பட்டுள்ளது.

இங்கிலாந்து ராணி: சரி அப்படியானால் ஓரினச்சேர்க்கை உருவாவது ஏன்?

ண்ணின் மைந்தன்: ஒரு ஆண் தன்னை முழுமையான ஆண் என்பதை உணரத் தவறும் போது. ஒரு பெண் தன்னை முழுமையான பெண் என்பதை உணரத் தவறும் போது, அவர்களின் உணர்வு ஒரே பாலினரிடமிருந்து மாறி எதிர் பாலினரை ஏற்கத் தடுமாறும். அவ்வாறு தடுமாறும் சமயங்களில் ஒருவருடைய மனம் சக பாலினரிடமே தம்முடைய உணர்வுக்கு ஆதரவை எதிர் பார்க்கும். அப்படிப்பட்ட இணக்கமான ஒரு ஆதரவு சக பாலினரிடம் இருந்தே கிடைக்கும் பொழுது அதையே இன்பமாகக் கொண்டு விடுகின்றனர். 

அதிலிருந்து விடுபட மனம் மறுக்கிறது. இது தான் உலகம், இதுவே இன்பம் என்று மனம் முடிவு செய்துவிடுகிறது. ஆணுக்கு பெண்ணின் அவசியமும், பெண்ணுக்கு ஆணின் அவசியமும் தேவையில்லை என்ற எண்ணம் தலைதூக்கி விடுகிறது. 

இது இயற்கையான இல்லற வாழ்விலிருந்து அவர்களை வெளியேற்றி விடுகிறது. இவ்வாறான வாழ்க்கை சமூகத்திற்கு ஒவ்வாது. குடும்ப வாழ்க்கைக்குக் கேடு விளைவிக்கும். குடும்பம் குடும்பமாக வாழும் சமூகத்தின் நடுவே இப்படிப்பட்டவர்கள் வாழ்வது அந்த சமூகத்தின் மற்ற தரப்பினரின் வாழ்க்கையை பாதிக்கக் கூடியதாக அமையும். 

அதனாலேயே அவ்வாறானவர்களை சமூகத்திற்க்கு அப்பாற்ப்பட்டவர்கள் என்று ஒதுக்க நேர்கிறது. அனால் இங்கிலாந்து ராணியே! ஒட்டு மொத்தச் சமூகமும் ஓரினச்சேர்க்கையாளர்களாகவே ஆக வேண்டும் என்று நீ விரும்புகிறாய். இது சரிதானா? நீயே யோசித்துப்பார்!

இங்கிலாந்து ராணி: சரி, இத்தகைய உணர்ச்சிகளை உங்கள் கலாச்சாரம் மூலமாக எப்படித் தடுக்கிறீர்கள்?

ண்ணின் மைந்தன்: சுலபம். ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ தங்களுடைய பாலுணர்வை முழுமையாகப் புரிந்து கொள்ளச் செய்தால் போதும். 

உதாரணமாக பதின் வயதைத் தொடும் போது பெண் பூப்பெய்துகிறாள். எங்கள் கலாச்சாரப்படி பூப்பெய்தும் பெண்ணை உடனே மற்ற பெண்கள் எல்லோரும் சேர்ந்து அலங்காரம் செய்து அவளைச் சுற்றி நின்று பாட்டு பாடி அவளுடைய அழகை வார்த்தைகளால் சொல்லி , அவளுடைய பெண்மையை உணரச் செய்கிறார்கள். 

மனோரீதியாக அந்தப் பெண் தன்னுடைய பெண்மையை யாருடன் ரசிக்க வேண்டியவள் என்பதை பாட்டால் உணரச் செய்கிறார்கள். 'கட்டழகன் வருவான்', 'காளை உன்னைக் கட்டுவான்','வீரன் உன்னைக் கவர்ந்து செல்வான்' என்றெல்லாம் அவளது பாலுணர்வை ஆண்மீது செலுத்தச் செய்கிறார்கள். இதனாலேயே பருவம் எட்டும் வயதில் ஒரு பெண் தன் பெண்மையை முழுதாக உணர்கிறாள் மேலும் அவள் தன்னுடன் கூட வேண்டியது ஒரு ஆண் தான் என்று முழுமையாக மனதை எதிர் பாலரிடம் செலுத்த தயார் செய்து கொள்கிறாள். மாறாக அவள் பெண்ணைக் காதலிக்க விரும்பமாட்டாள்.

அதே போல் ஒரு ஆண் அரும்பு மீசை முளைத்தவனாக ஆகும் போது அவனிடம் ஆண் என்ற உடற்திமிரை ஏற்றி வைப்பார்கள். வீர விளையாட்டுக்கள், மல்யுத்தம், காளை அடக்குதல் போன்றவை எல்லாம் இப்படி வந்தவை தான். 'ஆம்பளப்புள்ள, நெஞ்ச நிம்த்தி நடப்பா!' என்று உசுப்பேற்றுகிறார்களே! அது ஆணாதிக்கம் உருவாகவும் பெண்ணை அடிமையாக்கவும் இல்லை. அப்படியெல்லாம் இருந்தால் தான் ஒரு ஆண் மனோரீதியாக தன்னை ஆண் என்று முழுமையாக உணரும் சூழல் உண்டாகிறது. (இந்த காலத்தில் ஆண் என்ற திமிர் ரவுடித்தனமும் அடியாள் வேலைக்கும் என்று ஆகிவிட்டது வேறு விஷயம்).

இப்படி ஒவ்வொரு ஆணும் முழுமையான ஆண்மகனாக நெஞ்சு நிமிர்த்தி நடப்பவனாக இருந்தால் அவன் சக ஆண்மகனிடம் தனது உணர்வுக்கு வடிகால் தேட மாட்டான். அவனது உணர்வு பெண்ணைக் கவர வேண்டும் என்பதிலேயே இருக்கும். ஆணும் ஆணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் போது காந்தத்தின் ஒரே துருவங்கள் ஒன்றை ஒன்று எதிர்க்கும் என்ற தத்துவப்படி இருவரும் விலகிச் சென்று விடுவார்கள். காதல் கொள்ள மாட்டார்கள்.

பெயர் வைப்பதிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் காட்டுவதும் ஒருவரை பெயர் சொல்லி அழைக்கும் போதே அவருடைய பாலின உணர்வு ஒவ்வொரு முறையும் உணரப்படுவதற்க்கே.

அதுமட்டுமல்ல ஆடைகளிலும் ஆண் பெண் என்று வேற்றுமை காட்டுவதும் நாம் எதிர் பாலரைப் பார்க்கிறோம் என்ற உணர்வு ஆணுக்கும் 

பெண்ணுக்கும் உண்டாக வேண்டும் என்பதற்க்கே. உங்கள் நாட்டிற்கு வரும் எல்லோரும் சொல்லும் ஒரு விஷயம் என்ன தெரியுமா? அங்கே ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை என்பதே.

இங்கிலாந்து ராணி: இது என்ன வேடிக்கை ஆணுக்கும் பெண்ணுக்கும் சீருடை இருக்குமா என்ன?

ண்ணின் மைந்தன்: ஏன் இருக்கக் கூடாது? உமது காவல் துறைக்கு ஏன் சீருடை? கயவர்கள் கண்டால் கழிந்து ஓட வேண்டும் என்பதற்க்குத் தானே! பள்ளிக் குழந்தைகளுக்கு ஏன் சீருடை? பார்ப்பவர்களுக்கு பரிவு உண்டாக வேண்டும் என்று தானே! ஏன் உமது அமைச்சர்கள் எல்லாம் ஏன் வெள்ளையும் சொள்ளையுமாக அலைகிறார்கள்? அவர்களை பார்த்தவுடன் பொதுமக்கள் பயப்பட வேண்டும் அதற்குத் தானே!

இதில் எல்லாம் எந்தக் காரணத்திற்க்காக சீருடை உள்ளதோ அதே போல் தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் உளவியல் ரீதியாக புரிந்துணர்வு உண்டாக உடையில் வித்தியாசம் காண்பிக்கப்பட்டது.

இப்படி பல முறைகளில் எங்கள் கலாச்சாரத்தில் ஒரு ஆணை முழுமையான ஆணாகவும் ஒரு பெண்ணை முழுமையான பெண்ணாகவும் உணரச் செய்து அவர்களை முறையான இல்லற வாழ்க்கை வாழச் செய்கிறோம்.

ஆனால் நீயோ தேவையில்லாமல் சட்டமியற்றி எங்கள் கலாச்சாரத்தை அடியோடு உடைக்கப் பார்க்கிறாய்!

இங்கிலாந்து ராணி: ம்ம்ம்! நீ சொல்வதை கேட்கும் போது எனக்கு சரியென்று தான் படுகிறது. ஆனால் இந்த நாட்டை இங்கிலாந்து சாம்ராஜ்ஜியமாக 
மாற்ற வேண்டும் என்று எனக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் என்னால் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. 

அப்போது ஒரு காவலாளி ஓலை ஒன்றைக் கொடுக்கிறான். இங்கிலாந்து ராணி சத்தமாகப் படிக்கிறாள். "பாரதத்தை ஆளும் இங்கிலாந்து ராணியே! நீ இயற்றிய புதிய சட்டம் பற்றி கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள். இந்தியாவில் கலாச்சாரம் அடியோடு அழிக்கப்பட்டது என்ற நல்ல செய்தியை விரைவில் சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். பதில் தேவை. இப்படிக்கு அரசர்"

இங்கிலாந்து ராணி: பார்த்தாயா ஓலையை! இதோ உனக்காக ஒரு வாய்ப்பைத் தருகிறேன். கண்காணாமல் இந்த நாட்டிலிருந்து ஓடி விடு. உயிர் 
மிச்சமாகும். இல்லையேல் நீ செத்து மடியும் காலம் சில வினாடிகளில் வந்து விடும்! என்ன சொல்கிறாய்.

ண்ணின் மைந்தன்: அந்நியநாட்டுப் பிசாசே! இத்தனைக்காலம் எங்களை ஆயுதத்தால் அடிமையாக்கினாய்! இப்பொழுது உன் கலாச்சாரத்தால் அடிமையாக்கப் 
பார்க்கிறாய். நீ ஒழிந்தால் தான் தர்மத்தையும் இந்த நாட்டையும் காப்பாற்ற முடியும். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை. எங்கள் 
உணர்வுகளை அவமதிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து விட்டு பின்னால் எங்கள் தலைவர்களை குற்றம் சொல்லிப் பயன் இல்லை. ஏன்னென்றால் நீ அவமதிப்பது எங்களைப் போன்ற அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை. அசைக்கப் பார்ப்பது எங்கள் தாய்மை உணர்ச்சியை. இதற்கு நீயும் உன் இங்கிலாந்து நாடும் ஒரு நாள் பதில் சொல்லியேத் தீர வேண்டும் என்பதை மறக்காதே!

இங்கிலாந்து ராணி: சீ மூடனே! உனக்கு சாவுதான் ஒரே முடிவு. இவனை சிரச்சேதம் செய்யுங்கள்.

காவலாளிகள் மண்ணின் மைந்தனை அழைத்துச் செல்கிறார்கள். கற்பாறையில் அவன் தலை வைக்கப்பட்டது. 

ஓங்கிய வாள் வேகமாக கீழே இறங்க, குதித்துத் தெறித்தது உதிரம். சிதறி உருண்டது சிகரம். வீழ்ந்தது மண்ணின் மைந்தனின் அங்கம். இன்பமாய் இளித்தாள் இங்கிலாந்து ராணி.

புறாவின் கால்களில் கட்டி ஓலை ஒன்றை அனுப்பினாள்...

"மதிப்பிற்குரிய அரசர் அவர்களுக்கு, 

ஒரு இந்தியப் பூச்சி நசுக்கப்பட்டது. இந்தியா விரைவில் இங்கிலாந்து ராஜ்ஜியம்...! வெற்றிப் பெருங்கூட்டம் விரைவில் நடக்கும், 

உங்கள் தலைமையில்....!

(சில பல காரணங்களுக்காக.. இந்த கற்பனைப் படைப்பின் மூலம் மாற்றம் செய்யப்பட்டே இங்கு பதிவிடப்பட்டுள்ளது)



-- Edited by Rotheiss on Tuesday 4th of December 2012 01:08:14 PM

No New Posts   பாடலை குறைந்தது இருமுறையாவது படித்துப்பாருங்க

December 5, 2012

தகதகதக தகவென ஆடவா
சிவசக்தி சக்தி சக்தியோடு ஆடவா

ஆல காலனே ஆலங்காட்டினில் ஆடிடும் நாயகனே
நீல கண்டனே வேத நாயகா நீதியின் காவலனே

தாள வகைகளொடு மேள துந்துபிகள்
முழங்கிட ஓர் கணமே
காலைத் தூக்கியே ஆனந்த தாண்டவம்
ஆடுக மன்னவனே


முத்துக்கொடி சக்திக் குலமகள் வித்துக்கொரு
வெள்ளம் துணையென
பக்திக் கொடி படரும் நெஞ்சினில் விளையாட
தித்திப்பது இறைவன் செயலென பத்தி தரும்
பரமன் துணையென சுத்தக்கொரு மனிதர் குலமொரு இசை பாட
கற்றுத் தரும் ஒரு வகை அறிவினில்
முற்றும் தெரிவது போல் மனிதர்கள்
வெற்றுப் புகழ் பெறுவார் அவர்களும் உறவாட


திக்குப் பல திமிதிமிதிமியென
தக்கத் துணை தகதகதகவென
தக்கக் கடல் அலையென நடமிடு உலகாள

இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றாகி
எழிலோடு எமையாள வா
இயல் இசை நாடகம் முத்தமிழ் தன்னிலே
இயற்கையே உலகாள வா

அம்மைக்கும் நாயகா அப்பனே ஐயனே
அரசனே நடமாட வா
ஆடுகிற கால் அழகில் காடு பொடியாக வென
அம்மையுடன் நீயாடவா

ிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ
நெருப்புக்குள் நீர் ஒன்று தரச் செய்த நீ

கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ
களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா

உலகத்து நிதியே சமயத்துப் பொருளே
இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே


ஆடவா நடமாடவா விளையாடவா உலகாடவா
நாத கீத போத வேத பாவ ராக தாளமோடு

அடியவர் திருமுடி வணங்கிட
கொடி உயர்ந்திட படை நடுங்கிட

தகதகதக தக என ஆடவா
சிவசக்தி சக்தி சக்தியோடு ஆடவா

No New Posts   hi frds, need your valuable suggestions

December 12, 2015

If u r chatting with ur friend or known person

U both r in the same area/work place, but u didn't met eachother

Just chatting alone. After few days, he started avoiding u ( no msg, no reply)

How u will handle this situation.

How ull take this

Started By: arasu

Comments: 1

Views: 1059

Last Post: Dec 31, 2015 by Rotheiss

 Add/remove tags to this thread

No New Posts   யாராவதும் இருகிங்களா ????

February 28, 2015

என்ன நண்பர்களே \ சகோதர்களே -இந்த வெப்சைட் லாகின் பன்றிங்கலா இல்லையா ??? ரொம்ப நாள் ஆகுது  இந்த பக்கம் வந்து 

No New Posts   Hi Friends..

February 9, 2015

Is this site active? Even i visit after log time.. 

Looking for some like minded friends..

Started By: Arawind

Comments: 1

Views: 1032

Last Post: Feb 10, 2015 by anbaithedi

 Add/remove tags to this thread

No New Posts   Idioms-மரபுத் தொடர்கள் 1

January 29, 2015

001.A bed of roses

       English meaning:comfortable or pleasant situation

       thamizh meaning:இனிமையான,சௌகரியமான சூழல்

       leading a honest life is not  a bed of roses

 

002, Rains cats and dogs      

        English meaning:heavy rain

        Thamizh meaning:கனமழை,பேய் மழை

        As it rained cats and dogs yesterday,the streets were flooded

Started By: anbaithedi

Comments: 0

Views: 1052

Last Post: Jan 30, 2015 by anbaithedi

 Add/remove tags to this thread

No New Posts   ரயிலில்

January 7, 2015

ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிற

ீர்களா?
ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?
WDP 3A
முதல் எழுத்து:
முதல் எழுத்து ரயில் எந்த வகைப் பாதைக்கானது என்பதைக் குறிக்கும்
W - அகன்ற இருப்பு பாதை (Broad Gauge / Wide Gauge - 1,676 மில்லி மீட்டர்)
Y - மீட்டர் இருப்புப் பாதை (Metre Gauge - 1000 மில்லி மீட்டர்)
Z - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 762 மில்லி மீட்டர்)
N - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 610 மில்லி மீட்டர்)
WDM 2
இரண்டாம் எழுத்து:
இரண்டாம் எழுத்து ரயில் எந்த வகை சக்தியால் இயங்குகிறது என்பதைக் குறிக்கும்.
D - டீசல் இஞ்சின்
A - மின்சக்தி - மாறுதிசை மின்னோட்டம் (AC traction)
C - மின்சக்தி - நேர் மின்னாட்டம் (DC traction)
CA - மின்சக்தி - எந்த மின்னோட்டத்திலும் ஓடும் (AC & DC traction)
B - பேட்டரி சக்தி
இவற்றில் எதுவும் இல்லாமல் கீழ்காணும் மூன்றாம் எழுத்தில் உள்ள எழுத்துகள் இருந்தால், அது நீராவி இஞ்சின்.
YG
மூன்றாம் எழுத்து:
மூன்றாம் எழுத்து ரயிலின் பயன்பாட்டைக் குறிக்கிறது. (நீராவி இஞ்சினில் இரண்டாம் எழுத்து)
G - சரக்கு ரயில் (Goods)
P - பயணிகள் ரயில் (Passenger)
M- சரக்கு & பயணிகள் ரயில்
U - புறநகர் ரயில்
சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து எல்லா இஞ்சின்களிலும் மூன்று எழுத்துகளுக்குப் பிறகு, நான்காவதாய் ஒரு எண் மட்டும் இருக்கும். அந்த எண் இஞ்சினின் மாடல் எண்ணைக் குறிக்கிறது
( WAP 5 என்றால் அந்த இஞ்சினின் மாடல் எண் ஐந்து!)
WAP 1
மேலே "சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து" என்று சொன்னேன் அல்லவா? அந்த சில இஞ்சின்களில் மட்டும் நான்காவதாய் ஒரு எண்ணும், அதன் பிறகு ஒரு எழுத்தும் இருக்கும்.
இவை இரண்டும் அந்த இஞ்சினின் சக்தியைக் குறிக்கின்றன. இவை அனைத்தும் 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட இஞ்சின்களாகும். WDM1 மற்றும் WDM2 ஆகிய இஞ்சின்கள் மட்டும் இதில் வராது!!
WDG 3A
நான்காம் எண்ணை ஆயிரத்தால் பெருக்கிக் கொள்ளுங்கள். ஐந்தாவதாய் இருக்கும் எழுத்திற்கு இணையான எண்ணை (A - 1; B - 2; C - 3; D - 4; E - 5; F - 6) எழுதி அதை நூறால் பெருக்கிக் கொள்ளுங்கள். இரண்டையும் சேர்த்தால் கிடைப்பது தான் அதன் சக்தி (குதிரைச்சக்தியில்).
எடுத்துக்காட்டாக, WDM 3E இஞ்சினின் சக்தி = 3*1000+ 5*100 = 3500 hp ஆகும்.
அதன் பிறகு எதுவும் குறியீடுகள் இருந்தால் அவை அந்த ரயில் இஞ்சினின் சிறப்பம்சங்களைக் (Technical Features) குறிக்கும். பெரும்பாலும் சரக்கு ரயில்களில் தான் அவை இருக்கும்.
WAG 5
சில ரயில்களில், குறிப்பாக வடநாட்டு ரயில்களில், ஆங்கிலத்தைப் பார்க்க இயலாது. இந்தியில் குறியிட்டு இருப்பர். அதை (இந்தி தெரிந்தவர்கள்) எழுத்துக் கூட்டிப் படித்தால், மேற்கண்ட குறியீடே வரும்!! அதாவது, ஆங்கிலத்திற்குப் பதில் அப்படியே இந்தியில் எழுதி இருப்பார்கள்....

Started By: anbaithedi

Comments: 0

Views: 2173

Last Post: Jan 8, 2015 by anbaithedi

 Add/remove tags to this thread

No New Posts   பல மாதங்களுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன் நண்பர்களே ஒரு எளிதான இனிப்பு செய்முறையோடு

December 6, 2014

ரவா கேசரி 

Rava%20Kesari.jpg

 

தேவையான பொருட்கள் :

 

வறுத்த ரவை - 1 கப்

சர்க்கரை - 1 கப்

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

தண்ணீர் - 1 ¼ கப்

கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை

முந்திரி, பாதாம் மற்றும் உலர்ந்த திராட்சை - உங்கள் விருப்பம் போல் சேர்கவும்  

 

செய்முறை :

 

 சமையல் பத்திரத்தை  அடுப்பில்  வைத்து  தண்ணீர் உற்றவும்  தண்ணீர் கொதித்தவுடன்  கேசரி பவுடர் சேர்கவும் பிறகு 

அதனுடன்  வறுத்த ரவை சேர்கவும்  ரவையை நன்றக கிளறவும் பின்னர்  சர்க்கரையை சேர்த்து கிளறவும் ரவை நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும் 

தண்ணீர் வற்றும்வரை  பிறகு நெய்  சேர்த்து கிளறவும் அதில் நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் மற்றும் உலர்ந்த திராட்சை சேர்கவும் 

 5 நிமிடங்கள் பிறகு துண்டுகளாக வெட்டி விடுங்கள்  சுவையான ரவா கேசரி  தயார் இதை 

எளிதான முறையில் நிங்களே  வீட்டில்  செய்து சுவைக்கலாம் ...

IMG_3854.jpg

 

No New Posts   I Love You In 100 Languages..!

October 10, 2014

1. English - I Love you
2. Afrikaans - Ek het jou lief
3. Albanian - Te dua
4. Arabic - Ana behibak(to male)
5. Arabic - Ana behibek (to female)
6. Armenian - yes kez sirumen
7. Bamabara - M'bi fe
8. Bangla - Ami tomake bhalo basi
9. Belarusian - ya tabe kahayu
10. Bisaya - Nahigugma ako kanimo
11. Bulgarian - obicham te
12. Cambodian - soro lahn nhee ah
13. Cantonese chinese - Ngo oiy neya
14. Catalan - T'estimo
15. Cheyenne - Ne mohotatse
16. Chichewa - Ndimakukonda
17. Corsican - Ti tengu caru (to male)
18. Creol - Mi aime jou
19. Croatian - volim te
20. Czech - Miluji te
21. Danish - jeg elsker Dig
22. Dutch - Ik hou van jou
23. Esperanto - Mi amas vin
24. Estonian - Ma armastan sind
25. Ethiopian - Afgreki
26. Faroese - Eg elski teg
27. Farsi - Doset daram
28. Fillipino - Mahal kita
29. Finnish - Mina rakastan sinua
30. French - Je t'aime Je'adore
31. Frisian - Ik hâld fan dy
32. Gaelic - Ta gra agam ort
33. Georgian - Mikvarhar
34. German - Ich liebe dich
35. Greek - S'agapo
36. Gujrati - Hoo thunay prem karoo choo
37. Hawaiian - Aloha wau ia oi
38. Hebrew - Ani ohev otah (to female)
39. Hebrew - Ani ohev et otha (to male)
40. Hiligaynon - Guina higugma ko ikaw
41. Hindi - Hum tumhe pyar karte hai
42. Hmong - kuv hlub koj
43. Hopi - Nu'umi unangwa'ta
44. Hungarian - Szeretlek
45. Icelandic - Eg elska tig
46. Ilonggo - plangga ko ikaw
47. Indonesian - saya cinta padamu
48. Inuit - Negligevapse
49. Irish - Taim i'ngra leat
50. Konkani - Tu magel moga cho
51. Korean - sarang Heyo
52. Latin - Te amo
53. Latvian - Es tevi miilu
54. Lebanese - bahibek
55. Lithuanian - tave myliu
56. Malay - saya cintakan mu/ aku cinta padamu
57. Malayalam - Njan Ninne premikunnu
58. Mandarin chinese - wo ai ni
59. Marathi - Me tula prem karto
60. Mohawk - kanbhik
61. Morroccon - Ana moajaba bik
62. Nahuati - Ni mits neki
63. Navaho - Ayor anosh'ni
64. Norwegian - jeg elsker Deg
Oriya:
Mun tumaku vala paye
65. Pandacan - Syota na kita!!
66. Pangasinan - Inaru Taka
67. Papiamento - Mi ta stimabo
68. Persian - Doo-set Daaram
69. Pig latin - Iay ovlay ouyay
70. Polish - Kocham ciebie
61. Morroccon - Ana moajaba bik
62. Nahuati - Ni mits neki
63. Navaho - Ayor anosh'ni
64. Norwegian - jeg elsker Deg
65. Pandacan - Syota na kita!!
66. Pangasinan - Inaru Taka
67. Papiamento - Mi ta stimabo
68. Persian - Doo-set Daaram
69. Pig latin - Iay ovlay ouyay
70. Polish - Kocham ciebie
80. Slovak - Lu `bim ta
81. Slovenian - Ljubim te
82. Spanish - Te quiero/ Te amo
83. Swahili - Ninapenda wewe
84. Swedish - Ja alskar dig
85. Swiss-German- Ich lieb Di
86. Tagalog - Mahal kita
87. Taiwanese - wa ga ei li
88. Tahitian - Ua Here vau Ia Oe
89. Tamil - Nan unnai kathalikaraen
90. Telugu - Nenu ninnu premistunnanu
91. Thai - chan rak khun (to male)
92. Thai - phom rak khun (to female)
93. Turkish - seni seviyorum
94. Ukrainian - Ya tebe kahayu
95. Urdu - main aap se pyar karta/karti hoo
96. Vietnamese - Anh ye^u em (to female)
97. Vietnamese - Em ye^u Anh (to male)
98. Welsh - 'Rwy'n dy garu di
99. Yiddish - Ikh hob dikh
100. Yoruba - Mo ni fe

IF YOU KNOW THE MEANING OF I LOVE IN MORE LANGUAGE PLEASE SAY HERE..!

Started By: Butterfly

Comments: 3

Views: 1056

Last Post: Dec 9, 2014 by Anonymous

 Add/remove tags to this thread

No New Posts   நண்பர்களே எனக்கு கொஞ்சம் அட்வைஸ் தேவை

December 3, 2014

4 வருஷத்துக்கு  முன்னாடி  ஒருத்தர்கிட்ட நான்  லவ் ப்ரொபோஸ் பண்ணேன்  அப்போ அவர் என்ன பிடிகலனு  சொல்லிடரு 

ஆன இப்போ தான் அவருக்கு 

என் நியாபகம் வந்துச்சாம் ...........

 

(facebook chat  history)

 

Siva Ram:(நான் )

Akhil Kumar:(அவன் )

 

Conversation stared March 30, 2012

 

 

Siva Ram:

 Ennala unna maraka mudiyala da.

 

Akhil Kumar:

 am not good

 Siva Ram:

 Ne illama iruka kastama iruku da

un maraka mudiyadhu da

un madiri oru nalavan kidaikaradhu kastam da.

 

Akhil Kumar:

sorry da

pls

enna purinchiko

 

Siva Ram:

Un kuda irundha varaikum nan happyaa irundhen da

andha happy life venum da.

Ne mattum podhum da

Ennala unna full purinjika mudiyala da.

But un kuda iruka pidichi iruku da

 

Akhil Kumar:

plssssssssssssss

dont kill me

 

Siva Ram:

Un life inni yaro oruthar vara porainga but adhu yen nana iruka kudadhu

Illa da life long thaniya irukaradhu romba kastam da adhuvm unna nan love pandren da

un ninaichu na dhinam dhinam sagren da.

Ne dhan enna kasta paduthara

Un nan appo contact pana arambhichanno appavey unna love panna armbichiten

Unna mattum ninaichi vazhara indha anadhaiku vazhakai kudu da.

en life la yaru illa

inni nee mattum dhan da.

Really no one in my life da.

 

Akhil Kumar:

dont blabber da

search u will get soon

dont get angry on me

 

Siva Ram:

Inni yarum vendam da

ne irukum pothu vera yaru venum

Plz da.

Un kuda irukum podhu dhan nan happya iruken da.

Life  nan enna love nan enna nu ne illadha timela than puringikiten da.

Ne venum da

ne illa ma anadha madiri iruken da.

Life long nan unna mattum than ninaichi vazhven da.

 

 Akhil Kumar:

hmmm

 

Siva Ram:

Ne mattum dhan venum da.

Life long nan wait pandren da

enaku 50 vayasu analu parava illa wait pandren

Kandipa wait panuven da.

En lifela ne mattum dhan

Kandipa nan wait panuven da.

En lifela yaro oruthara vara nan virumbala da ne than venum.

 

Siva Ram:

Un lifela yaro vara porainga adhu yen nana iruka kudathu

Manasuku pidichavainga kuda irundha dhan life happyaa irukum da

ne enaku venum da

Enna anadhaya agidatha da.

Ne illama nan illa da

Nan dhan da unna purinjikala

Unna nan puringikala da

adhunala dhan nan ippa ipdi iruken da

Nan vazhindha adhu un kuda mattum dhan.

 

Siva Ram:

Unna enaku pidichi iruku da adhan maraka mudiyala.

Nan vazhindha adhu un kuda than.

Siva Ram:

En life unkuda irukanum nu asai padren da.

Nan un kuda vazha asai paduren da sanju

enaku nee mattum podhum da.

Inni nan unna mattum than ninaipen da

vera yarukum en lifela idam illa da.

 

Siva Ram:

Nan uiere oda irukara varikumavadhu sms panu da plz

May 1, 2012

 

************************

 

11/28/2014 4:06pm

Akhil Kumar:

En mela kovama da ?

Plz da en mela kova padatha plz

Akhil Kumar:

hi dear 

Siva Ram:

hmm

Akhil Kumar:

Video call?

 

Siva Ram:

no way

why mr.sanjay do u wanna see me ??

how's ur wife  & son  ??? all r fine ?

 

 

Akhil Kumar:

all r good

Akhil Kumar:

Video call? ? ? ? ?

Akhil Kumar:

dai blackie

 

Siva Ram:

ippo patha therium nee karupa illa nan karupanu ?

body color change agiduchi 

hahah

 

Akhil Kumar:

bujji

Call me urgent

 

Siva Ram:

y ?

chatting ku ippo yarum illa ya

 

Akhil Kumar:

Dai phone LA call pannuda loose

 

Siva Ram:

no 

kandipa nan unaku call pana matten

chatting la sollu podhum

 

Akhil Kumar:

Y ?

 

Siva Ram:

call panna than enna nu solluviya ?

 

Akhil Kumar:

Dai enna achi unaku nalla thaana iruntha ?

 

Siva Ram:

4 year gap la nan nala than iruken romba nala than iruken

 

Akhil Kumar:

4 yr gap ah

Dai

 

Siva Ram:

nan yaru nu unaku niyabam iruka illa nan yarum nu niyabam illa ya ??

 

<he don't know who i'm but he's chatting>

 

 

 

Akhil Kumar:

Sundara Moorthi

Correct ah

Loose

 

Siva Ram:

super innum athan per irukainga un list la

 

Akhil Kumar:

Poda

Po

Sethru

 

Siva Ram:

nan life la neriya pakanum idhukula nan yen pa saganum

nan onnum unna madiri marreid illa innum single

 

Akhil Kumar:

Edhuku intha dialogues

Unna en best friend nu ninachane

Ana

 

Siva Ram:

time kidicha chating history paru purium nan yaru nu

 

Akhil Kumar:

Neeyum enna vittutu porala

Po

 

Siva Ram:

nan un friend ha enna pa sudden ha comedy pandra

 

Siva Ram:

enna sanju innum confusing ha iruka

 

Akhil Kumar:

poda pakki

Ramesh thaana nee

Dai pls

 

Siva Ram:

innum avlo name unnaku therium?

 

Akhil Kumar:

Dai pls say ur name

Hey

 

Akhil Kumar:

Dai

Enna ivalo love panniruka

Ramesh thaana

 

Siva Ram:

hmm

 

Akhil Kumar:

how r u da

College la mudinchatha

Call pannuda

Pesanum

 

Siva Ram:

vennam sanju

 

Akhil Kumar:

Pesi romba naal aguthu

Yenda

Pls

 

Siva Ram:

ipdiye iru ne sandhosam irudha adhuvey enaku podhum

 

Akhil Kumar:

That's k

Pls call

As a friend

 

Siva Ram:

vendam sanju  marubadium enna la kastapada mudiyadhu

plz thapa ninaichika vendam

 

Akhil Kumar:

Pakki ah da nee

Unaku onnu theeiyuma

Ajay dead

 

Siva Ram:

okok nambiten

 

Akhil Kumar:

2 weeks before

 

Siva Ram:

what happen ?

 

Akhil Kumar:

Accident

 

Siva Ram:

ippo nee apdi iruka

 

Akhil Kumar:

Good

U

 

Akhil Kumar:

Today

busy ya ?

 

 

********************************

 

நான் இதுக்குமேல என்ன பண்றது அவன்கிட்ட பேசலாமா வேண்டாமா ?   

 

 

 

 

 

 

 

 

 



-- Edited by shivakutty on Thursday 4th of December 2014 07:45:31 AM

No New Posts   உலகின் கிறுக்குத்தனமான‌ 10 செக்ஸ் சட்டங்கள்

January 6, 2014



1. கொலம்பியாவில், காலி மாநிலத்தில் மனைவி கணவனுடன் மட்டுமே உடலுறவு கொள்ள வேண்டும், அது முதல் முறை நடக்கும் போது மனைவியின் தாய் அறையினுள் தங்கி அதற்கு கண்ணால் பார்த்த சாட்சியாக இருக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது

2. ஒரு ஆண் ஒரு பெண்ணுடனும் அந்த பெண்ணின் மகளுடனும் ஒரே நேரத்தில் உடலுறவு கொள்வது பொலிவியாவில் சாண்டா குரூஸ்சில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

3.டாப்லெஸ் சேல்ஸ் உமன்கள் இங்கிலாந்தில் லிவர்பூலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், ஆனால் இது மீன்கடைகளில்(tropical fish stores ) மட்டும் தான் இதற்கு அனுமதி

4.துரோகம் செய்த கணவனை அடித்து கொல்ல மனைவிக்கு சட்டப்பூர்வமான உரிமை உண்டு, ஆனால் வெறும் கையால் தான் அடித்துக்கொள்ளவேண்டும், இந்த விதி இருப்பது ஹாங்காங்கில்

5. குவாம் (Guam ) நாட்டில் கன்னிப்பெண்களை திருமணம் செய்ய தடை உள்ளது, எனவே பல ஆண்கள் கன்னிப்பெண்களுடன் உறவு கொள்வதை ஃபுல்டைம் ஜாப் ஆக வைத்துள்ளார்கள்

6. இந்தோனேசியாவில் சுயஇன்பம் மேற்கொண்டு பிடிபட்டால் அபராதம் கட்ட வேண்டும். 

7. இஸ்லாமியர்கள் உயிரழந்தவர்களின் பாலுறுப்புகளை பார்க்க தடை உள்ளது, எனவே இறந்தவர்களின் பாலுறுப்பின் மீது செங்கல் அல்லது கட்டையை வைத்துவிடுவார்கள்.

8. பக்ரைனில், ஆண் மருத்துவன் பெண்களின் பிறப்புருப்புகளை சோதனை செய்யலாம், ஆனால் நேரடியாக அதை பார்க்க கூடாது, கண்ணாடி பிரதலிப்பின் வழியாக பார்க்கலாம்.

9. லெபனாலில், ஆண்கள் மிருகங்களுடன் உறவு கொள்ள அனுமதியுண்டு, ஆனால் உறவு கொள்ளும் மிருகம் பெண்ணாக இருக்க வேண்டும், ஆண் மிருகங்களுடன் ஒரு ஆண் உறவு கொண்டால் அது மரண தண்டனைக்குறிய குற்றம்.

10. ஆட்டுகுட்டியுடன் உடலுறவு கொள்வது அனுமதிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதே ஆட்டை அடித்து சாப்பிட்டால் அது மரணதண்டனைக்குறிய குற்றம், இந்த சட்டம் பல‌ மிடில்ஸ் ஈஸ்ட் நாடுகளில் உள்ளது

No New Posts   சமையலில் செய்யக்கூடியவை மற்றும் கூடாதவை

December 27, 2013

...சமையலில் செய்யக்கூடாதவை...

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

....செய்ய வேண்டியவை....

* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.

*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

No New Posts   என் அனுபவம்....

March 9, 2014

தலைப்பை பாத்ததும் நெறய பேர் பல வித கற்பனைகளோட உள்ள வந்துருப்பிங்க இல்ல...... அவங்களுக்கு இது "அந்த மாரி" இல்லனு சொல்லிகிறேன்....
enna pantrathu.... "anupavam" apdingra word'oda arthathaye inga maathi vachutangappa.....
sari sari mokka podama, matter ku vaa nu neenga nenaikarathu enaku kekuthu.... ok right...
athellam onnumilainga.... chumma site romba bore adikuthe.. ethachu interesting ah poduvomey nu yosichen....
atha nethu nadantha ennoda anupavatha share pannamenu thonichu unga kooda...
nethu train la ennoda relative veetuku poitu irunthen....
anga than oru accident nadathuchu.... ithu train accident'o ila car accident'o illainga..
ithu eye accident.... yes... i just be seated nearby window.... apo tha oru 3 or 4 station thaandi poirupen..
sari train la ukkara bore adichuthu.... nan vera enga college la solo singing competition la join pannirukena...
so oru difficult ah na song eluthivachurunthen pocket la...
atha eduthu practice pantra mari munumunuthute vanthen...
apo than oruthana kavanichen... correct ah enaku ner opposite la ninnutu irunthan... (green shirt, some what white pant, black num solla mudiyathu.. maaniram num solla mudiyathu... sari vidunga.. namaku colorah mukiyem... thappa yosikathingo boss... paaka namma vijay'oda cousin actor vikranth maaari irunthan). ethatchiya nan paka... avan enna paathute irunthan...
first time serious ah edithukala... second time thirumpothum ennaye paathan... haiyeiyo ivan yen ennaiye paakuran.....? oru vela namma paatu paaditu varatha paakurano?
ok nu sollitu nan padikaratha stop pannitu.... ulla vachuten.... apram konjam nera nan chumma irunthen... then again check panna, marupadiyum ennaye paakuran...
( nan apdiye shock aagiten).... ennada ithu yen ivan nammalaye pathutu irukan... ( namaku sight adikurathu intha maari pothu edathula arave pudikthu... nambunga boss)..
ipdiye nan paaka avan paaka... aanalum avan ethukaha paakuranu therla.. intha gap la enga rendu perukum idaila oruthar moonji innorutharuku theriyatha maari oruthan vanthu ninnan.... apo nan nenachen 'ivan nammala paakurathu unmaiya iruntha ipo anga irunthu move panni nan theriyura maari idathula vanthu nippan".... wat a suprise... he did so...
thiru[piyum anga ninnu adikadi thirumbi thirumbi ennaye paathan... i confirmed... ipdiye romba neram pochu... then oru stop la train romba neram ninnuchu...
avan keela irangi veliyaninnu nan paakurenna nu check pannan.... but nan paakathathu maariye build up pannitu irunthen.... then train started to move.... he got in again...
then thirumbavum palaya maariye kannum kannum nokia than.... shabaaa ipave kanna kattuthu... then he took his lunch bag... and got down at next station.... (achacho vada poche..!).... apothan thonichu number ah vaangirukalamo nu.......... enna pantrathu.... "ponaal pogatum poda.. intha boomiyil nilaiyai vaalbavar yaarada"nu
naane enna samathana paduthikitten.... ooooooooops... ana onnu mattum nichayem... ipdi paaka poi oru velaiyum urupaiya nadakala... en paatuku sivanenu ukkanthu paatu padichutu irunthen... athuvum pochu... mind vex aanathuthan micham... athanala nan enna solla varennna... ipdi ungaluku oru anupavam yerpatta thayavu senji ithula concentrate pannama, urupadiya ethachu velaiya paarunga.... ithuthan ennoda theerpu... hmm...avlothan mudinju pochunga.. innum enna padichutu irukinga...
( itha sollava ivlo periya essay eluthi enga neratha waste pannita.. naanga ennamo ethonla nenachom" apdinu neenga nenacha marupadiyum first line ah padinga bos
s)
var
ta....... ta ta

-- Edited by Jo on Sunday 9th of March 2014 05:37:29 PM

Started By: Jo

Comments: 13

Views: 2913

Last Post: Mar 19, 2014 by Butterfly

 Add/remove tags to this thread

No New Posts   பொறிவிலங்காய்

March 18, 2014

"பொருளங்காய் உருண்டை"( "பொரி விளாங்காய் உருண்டை")
(
கெட்டி உருண்டை - இதை "பொரி விளாங்காய் உருண்டை" என்றும் கூறுவார்கள். இதுவே பெயர் மருவி, "பொருளங்காய் உருண்டை" என்றும் அழைக்கப்படுகிறது. கெட்டியாக (கடினமாக) இருப்பதால் கெட்டி உருண்டை. இதில் சேர்க்கப்படும் பொருள்களையெல்லாம் பொரித்து, பொடித்து, விளாங்காய் தோற்றத்தில் உருண்டை பிடிப்பதால் "பொரி விளாங்காய் உருண்டை". சிலர் "பொருள் விளங்கா உருண்டை" (இதில் போடப்படும் பொருள்கள், மற்றவர்களுக்கு விளங்காது) தான், பெயர் மாற்றம் பெற்றது என்றும் கூறுவார்கள். இதில் சேர்க்கப்படும் தானியங்கள், இடத்திற்கு இடம் மாறுபட்டிருக்கும். அடிப்படையான பொருட்கள், வெல்லமும், பச்சைபயறும்தான். இத்துடன் அவரவர் விருப்பத்திற்கேற்றார்போல், கோதுமை, அரிசி, பொட்டுக்கடலை போன்றவற்றைச் சேர்த்து செய்வார்கள். "சத்துருண்டை" என்ற பெயர் சரியானதாய் இருக்கும்.
தஞ்சை மாவட்டதில், பழங்காலத்தில், பயறை வெறும் சட்டியில் போட்டு வறுத்து, தரையில் கொட்டி, ஆறியவுடன், அதன் மேல் ஒரு கட்டையை வைத்து உருட்டி, தோலை பிரித்தெடுத்து,நன்றாகப் புடைத்து விட்டு, திருவையில் போட்டு அரைத்தெடுப்பார்கள். இப்பொழுது அதெல்லாம் முடியாது. அதனால் தோல் நீக்கிய பயத்தம் பருப்பை உபயோகித்து இந்த உருண்டையை செய்யலாம். அப்படி செய்தால் உருண்டை நல்ல நிறத்தில் இருக்கும். ஆனாலும், சத்து கருதி நான் முழு பயறை தோல் நீக்காமல் உபயோகித்து செய்துள்ளேன். நிறம் சற்று மங்கலாக இருந்தாலும், சுவையில் ஒன்றும் குறைவில்லை.
தேவையானப்பொருட்கள்:
பச்சை பயறு - 2 கப்
புழுங்கலரிசி - 1/2 கப்
பொட்டு கடலை - 1/2 கப்
தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) - 1/2 கப்
வெல்லம் (தூளாக்கியது) - ஒன்றரைக் கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
சுக்குப் பொடி - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
வெறும் வாணலியில் பச்சைப்பயறையும், அரிசியையும், தனித்தனியாகப் போட்டு, சிவக்க வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் பொட்டுக்கடலையைப் போட்டு, 2 அல்லது 3 நிமிடங்கள் வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காய்த்துண்டுகளைப் போட்டு சிவக்க வறுத்தெடுத்து, அதையும் தனியாக வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் வறுத்த பயறையும், அரிசியையும் சிறிது சிறிதாகப் போட்டு நன்றாக அரைத்தெடுக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அரைத்த மாவு, வறுத்த பொட்டுக்கடலை, தேங்காய்த்துண்டுகள், ஏலக்காய் பொடி, சுக்குப்பொடி ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கலந்துக் கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும், அதை எடுத்து வடிகட்டி விட்டு மீண்டும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி கம்பி பாகு பதத்திற்கு காய்ச்சவும். அடுப்பை நன்றாகக் குறைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு தட்டில், 3 அல்லது 4 கரண்டி மாவைப் போட்டு, அதன் மேல் ஒன்று அல்லது இரண்டு கரண்டி வெல்லப்ப்பாகை ஊற்றி, ஒரு ஸ்பூனால் கலந்து, உடனடியாக உருண்டை பிடிக்கவும். தட்டிலுள்ள மாவில் பாகு அதிகமாக தெரிந்தால், அதில் மேலும் சிறிது மாவைச் சேர்த்துக் கொள்ளவும். மாவு அதிகமாக இருந்தால் பாகைச் சேர்த்துக் கொள்ளவும். இப்படியே எல்லா மாவையும் பாகையும் சேர்த்து உருண்டை பிடிக்கவும். சில சமயங்களில், பாகு அடுப்பிலேயே இருப்பதால் கெட்டியாகி விடும், அப்பொழுது ஓரிரு டீஸ்பூன் தண்ணிரைச் சேர்த்து பாகை கிளறி விடவும்.
மேற்கண்ட அளவிற்கு சுமார் 20 உருண்டைகள் கிடைக்கும்

Started By: anbaithedi

Comments: 1

Views: 2261

Last Post: Mar 18, 2014 by samram

 Add/remove tags to this thread

No New Posts   தேடல்

January 7, 2014

நீ தேடும் ஒருவர் உன் தேடலில் கிடைப்பது இல்லை...
உன்னை தேடும் ஒருவரை நீ திரும்பி கூட பார்ப்பது இல்லை...

Started By: stud bull

Comments: 4

Views: 2055

Last Post: Feb 15, 2014 by praveenkumar

 Add/remove tags to this thread

No New Posts   Proud To Have Him..!

January 9, 2014

I'm really feeling proud to be his friend who can draw an amazing portrait with the soulfull eyes without even using eraser..! Lucky to 've you sam bro..! smile.gif wink.gif biggrin.gif 993822_378442445634519_836935428_n.jpg

Started By: Butterfly

Comments: 12

Views: 1096

Last Post: Feb 15, 2014 by samram

 Add/remove tags to this thread

No New Posts   தலை வலி vs கால் வலி

January 17, 2014

சார் : தலை வலி'ன்னு 1 நாள் லீவ் எடுத்த சரி,
கால்வலி'ன்னு ஏன் 2 நாள் லீவ் எடுத்த?
மாணவன்1 : தலை ஒன்னு தானே இருக்கு,
ஆனா கால் இரண்டு இருக்கே சார்!
சார் : ??????
"
"
"
"
மாணவன்2 : எனக்கு பல் வலி சார்.
__________________

Started By: bangaloreboy

Comments: 3

Views: 1080

Last Post: Jan 31, 2014 by ramnav

 Add/remove tags to this thread

No New Posts   ஈரோடு நண்பர்கள்

December 25, 2013

ஈரோடு நண்பர்கள் யாரேனும் இருந்தால் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்.

Started By: ineedsoulmate

Comments: 5

Views: 2093

Last Post: Jan 22, 2014 by shankar

 Add/remove tags to this thread

No New Posts   கோபத்தை அடக்க சுலபமான வழிகள் !!!

January 14, 2014

1. பொருட்படுத்தாதீர்கள்(Objects do not)
உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.
2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்(Do not expect anything to anyone)
ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான். எனவே , யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.
3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்(Please disregard opponents)
தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப்பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம்.
தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.
4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்(Please stop unwanted thoughts)
பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.
நமது புராணங்களும் கோபத்தின் தீமைகளைப் பற்றி விபரமாக விளக்குகின்றன.
பாருங்கள் இங்கொரு முனிவரின் கோபத்தை..
துர்வாசர் என்றொரு முனிவர் இருந்தார். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் அடிக்கடி கோபப்படகூடியவர். கோபத்தின் மறு உருவமாகவே அவரை புராணங்கள் சித்தரிக்கின்றன. அவர் அடிக்கடி சாதாரண விசயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு, தனது தவவலிமைகளை இழந்தவர். மகாமுனிவரையே ஆட்டுவித்த கோபம், சராசரியான மனிதனை பாடாய்படுத்துவதில் என்ன அதிசயம்?
எனவே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற , முதலில் நம்முடைய கோபத்தை ஆட்சி செய்ய வேண்டும். அதாவது தேவைப்படும் இடத்தில் அளவான கோபம் மட்டுமே கொள்ளலாம். அதுவும் நம் சுயமதிப்பை காப்பாற்றிக்கொள்ள கூடிய அளவில் இருந்தாலே போதுமானது. என்ன நண்பர்களே !இனி எடுத்ததற்கெல்லாம் கோபப்படமாட்டீர்கள்தானே..!

No New Posts   happy pongal

January 13, 2014

happy pongal to all..........biggrinbiggrinbiggrinbiggrinbiggrinsmilesmilesmilesmilesmilesmile

Started By: Jo

Comments: 1

Views: 1054

Last Post: Jan 14, 2014 by Butterfly

 Add/remove tags to this thread

No New Posts   எதையும் பிளான் பண்ணி செய்யணும்!

January 6, 2014

ஒரு ஊர், அங்கு ராஜா 5 வருஷம் தான் ஆட்சி செய்யமுடியும்,
5 வருஷம் முடிந்தவுடன் அவர் காட்டுக்கு அனுப்படுவார்.
அங்குள்ள மிருகங்களுக்கு இரையாக நேரிடும்.
-
அதனால் யாரும் 5 வருஷம் ஆட்சி செய்யமாட்டாங்க.
1 வருஷம் இல்லை 2, 3 வருஷத்துல காட்டுக்கு
போகணும்னுகிறதை நினைச்சி உடம்பு சரியில்லாம
இறுந்துடுவாங்க.
ஒருத்தர் மட்டும் சந்தோஷமாக 5 வருஷம் ஆட்சி செஞ்சாரு,
5 வருஷம் முடிஞ்சிடுச்சி, இப்போ அவரு காட்டுக்கு போகணும்,
எல்லாரும் ராஜாவை வழியனுப்ப வந்திருந்தாங்க.
அப்போ அந்த ராஜா என்ன ராஜா மாதிரியே அந்த காட்டில்
விட்டுடுங்கன்னு சொன்னாரு.
போகும் வழியில் ஒருத்தர் ராஜாவை பார்த்து நீங்க மட்டும்
எப்படி சந்தோஷமா இருக்கீங்கனு கேட்டாரு. அதற்கு ராஜா நான்
ஆட்சி செஞ்ச முதல் வருஷம் என் படையை அனுப்பி அந்த
காட்டுல இருந்த கொடிய மிருகங்களை எல்லாம் கொன்றுவிட்டேன்.
இரண்டாவது வருஷம் அந்த காட்டுல ஒரு அரண்மனை கட்டிட்டேன்.
இப்போ அங்க ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிட்டேன்.
இப்போ நான்தான் அங்க ராஜா என்றாராம்.
-
திட்டமிட்ட வாழ்க்கை இனிக்கும்.

No New Posts   நம்மதளத்துல யாராவது இருக்கிங்களா

January 11, 2014

இந்த சாதனைய முறியடிக்க நம்ம தளத்தில் யாரும் இருக்கிங்களா.......

__________________________________________________________

ஈரான் நாட்டைச் சேர்ந்த 80 வயதுடைய அமோவ் ஹாஜி என்ற முதியவரொருவர் 60 ஆண்டுகளாக குளிக்காமல் சாதனை படைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
 
இளவயதில் தனது வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபவங்களை தொடர்ந்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அமோவ் ஹாஜி, இவ்வுலக வாழ்க்கையையே வெறுத்து, பற்றற்ற துறவியின் நிலையில் வாழ்ந்து வருகிறார்.
 
இவரை பிடித்து குளிக்க வைக்க அவரது  ஊர்க்காரர்கள் எவ்வளவோ முயன்றும் பலனில்லாமல் போனது.
 
புகைப்பிடிக்கும் பழக்கத்தைக்கொண்ட முதியவர், கெட்டுப்போன இறைச்சியையும், உயிரிழந்திருக்கும் உயிரினங்களின் மாமிசத்தையுமே விரும்பி உண்கின்றார்.
 
இந்த சாதனையை இவர் எட்டுவதற்கு முன்னர் 66 வயதான நபரொருவர் 38 ஆண்டுகளாக குளிக்காமல் வாழ்ந்தது தான் சாதனையாக கருதப்பட்டது.
 
ஆனால் குறித்த சாதனையை தற்போது ஈரானை சேர்ந்த அமோவ் ஹாஜி என்ற 80 வயதுடைய முதியவர் முறியடித்து விட்டார்.
 
இந்தியாவின் வாரணாசி பகுதியைச் சேர்ந்த கைலாஷ் சிங் என்பவரே முந்தைய சாதனைக்கு சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் 1974 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரை 38 ஆண்டுகளாக குளித்ததே கிடையாது.

No New Posts   மௌனம் - மொழி

January 7, 2014

இன்பமான நேரங்களில் மௌனம் சம்மதம்!
உண்மையானவரை பிரியும் போது மௌனம் துன்பம்!
காதலில் மௌனம் சித்ரவதை!
தோல்வியில் மௌனம் சாதனை படி!
வெற்றியில் மௌனம் அடக்கம்!
இறுதியில் மௌனம் மரணம்!

Started By: bangaloreboy

Comments: 2

Views: 2196

Last Post: Jan 8, 2014 by Jo

 Add/remove tags to this thread

No New Posts   கவனிச்சுக்கோங்க

December 14, 2013

 வாழைப்பூ சாப்பிட்டு வந்தா விந்து அதிகரிக்கும். வெத்திலை போடும்போது கூடவே துளசி விதை பொடியை சேர்த்து சாப்பிட்டா தாது கட்டும். நீர்முள்ளி விதை, நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை இது மூணையும் நசுக்கி போட்டு கஷாயம் வச்சி குடிச்சாலும் தாது பலப்படும். வெடிக்காத தென்னம்பாளையில் உள்ள பிஞ்சுகளை பசும்பாலில் அரைத்து 2 கிராம் வீதம் 4 8 நாட்கள் சாப்பிட்டாலும் தாது வந்து சேரும். திப்பிலி பொடியை நெய்யுடன் சேர்த்து சாப்பிடுவது பலன் தரும்.

இப்படி பலவிதமான முறைகள் இருக்கு. ஆனா எல்லாத்தையும் ஒண்ணா சாப்பிடாதீங்க, எதையாவது ஒண்ணை சாப்பிட்டு பலனை அனுபவியுங்க. முருங்கைப்பூ, பிஞ்சு முருங்கை காய், முருங்கை விதை இவை எல்லாத்தையுமே தனித்தனியா பால்ல சேர்த்து சாப்பிட்டாலும் ஆண்மை பெருகும்.

FILE
ஆண்மை பறி போவதற்கு முக்கிய காரணமாக இன்றைய உணவு முறை. அதிலும் குறிப்பாக மதுப்பழக்கம் ஆண்மை பறி போவதற்கு காரணமாக இருக்கிறது. இதை புரிந்து கொண்டு செயல்பட்டால் பலன் கிடைக்கும். அது இல்லாம மருந்து மட்டும் சாப்பிடுறதால எந்த பிரயோஜனமும் இல்லை

Started By: anbaithedi

Comments: 4

Views: 1246

Last Post: Jan 8, 2014 by samram

 Add/remove tags to this thread
1 2 39  >  Last»  | Page of 9  sorted by
Forum Information
Total Posts: 4718
No New Posts New Posts
Topic is Closed Sticky
Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard