Cutenellaimdu@sorry for the intreption..! But try to contact him in private messages or ask the reason in mail at evening time..! Then he'll be online..! And just chat with him for sometimes surely you'll know about him..! and actually he's use to come to online by his mobile often..! Which he can't able to use comfortably to do messages..! Chat with him you'll know..! And he is a good friend to everyone..!
@நெல்லை.... பட்டாம்பூச்சி சொன்னதுபோல நேரமின்மை தான் பா காரணம்.... மற்றபடி நான் யாரையும் புறக்கணிக்கவோ ஒதுக்கவோ மாட்டேன்... வேலை பழு மட்டுமல்ல, வீட்டில் விரைவில் நடக்க இருக்கும் ஒரு சுபகாரியத்தால் கூட இன்னும் கூடுதல் வேலை பழு ஆகிவிட்டது... அதனால்தான் இணையம் வரவே நேரமில்லை....
நான் வாசிக்காத ஒவ்வொரு நாளையும் எனது நாட்குறிப்பில் இருந்து நீக்கி விடுங்கள் ..... என்று சர்ச்சில் குறிப்பிட்டுள்ளார். அந்த அளவிற்கு வாசித்தல் மிக அவசியம்.
நீங்கள் எல்லோரும் பொதுவாக கல்கியையும், சுஜாதாவையும் கொண்டாடுகிறீர்கள். அதில் ஒன்றும் தவறு இல்லை. இவர்களை தவிர மிக முக்கியமான சம கால எழுத்தாளர்கள் உண்டு.
சாண்டில்யன் மிக முக்கியமான வரலாற்று நாவல் எழுத்தாளர்.
இவருடைய தமிழ் நடையும், கற்பனையும். வரலாற்று அறிவும் வியக்க தக்கது.
கடல் புறா , யவன ராணி, ராஜா திலகம் , ஜலதீபம் போன்ற புதினங்களை படித்து பாருங்கள். தமிழனாய் பிறந்ததற்கு கர்வம் கொள்வீர்கள்.
சத்தியமாய் சொல்கிறேன் .....உங்களால் முழுதாய் அந்த புதினங்களை முடிக்காமல் கீழே வைக்க முடியாது.
பாலகுமாரன் :
வாழ்வின் யதார்த்தம் புரிய வேண்டுமா ? முகமூடி மனிதர்களை அறிந்து கொள்ள வேண்டுமா ? உண்மையான அன்பு புரிய வேண்டுமா ?
கட்டாயம் நீங்கள் பாலகுமாரனின் புதினங்களை தான் படிக்க வேண்டும் . அவ்வளவு எளிமை. அத்தனையும் உண்மை.
இரும்பு குதிரைகள் , மெர்குரி பூக்கள் ....தோழன் ... உடையார்....இவை குறிப்பிடத்தக்க புதினங்கள்.
இந்திரா சௌந்தர்ராஜன் :
அமானுஷ்யம்,இந்து மதம் சம்மந்தப்பட்ட கேள்விகள் , ஆவிகள் ...மர்மம் ..... இவை அனைத்தும் இவருக்கு கை வந்த கலை ....
சிவமயம், கோட்டைபுரத்து வீடு , விடாது கருப்பு .... கட்டாயம் படிக்க வேண்டியவை.
இன்னும் நிறைய பேர் மற்றும் நிறைய புத்தகங்கள் உள்ளன... நேரம் கிடைக்கும் போது உங்களுடன் பகிந்து கொள்கிறேன்
-- Edited by srinivasan on Tuesday 2nd of July 2013 10:16:05 PM
@ஸ்ரீனிவாசன்.... சுஜாதாவையும், கல்கியையும் கொண்டாடுவதால் மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை படிப்பதில்லை என்று இல்லை நண்பா.... சாண்டில்யன் படைப்புகளில் கடல் புறா படிச்சிருக்கேன்... நிஜமாவே அற்புதமான படைப்பு அது.... மற்ற கதைகள் படிக்க வாய்ப்பு கிடைக்கல.... இந்திரா சௌந்தரராஜன் கதைகள் நான் படித்ததில்லை... ஆனால், மெகா சீரியலாக அவர் கதைகள் வந்தவை பார்த்திருக்கேன்....
"பாலகுமாரன்" என் நண்பர்கள் பலரும் அவரோட ரசிகர்கள்... ஏனோ அவர் எழுத்து என்னை அவ்வளவாக வசீகரிக்கவில்லை.... ரொம்ப மெதுவாக கதை நகர்வதை போல இருக்கும்.... இது என் தனிப்பட்ட கருத்து... அவர் மிகப்பெரிய ஜீனியஸ் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை... இவர்கள் இல்லாமல் என்னை கவர்ந்த ஒரு எழுத்தாளர் "எஸ்.ராமகிருஷ்ணன்"... சுஜாதாவின் கதைகளுக்கு அடுத்ததாக என்னை கவர்ந்த சிறுகதைகள் இவருடையதுதான்.... புத்தகங்கள் அதிகம் கிடைக்கவில்லை என்பதுதான் ஒரு வருத்தம்....
இப்போ வண்ணதாசனையும், முத்துலிங்கத்தையும் படித்து வருகிறேன்.... முற்றிலும் வித்தியாசமான எழுத்தாளர்கள்....
எவர் க்ரீன் "ஜெயகாந்தனை" இங்கு நான் குறிப்பிடவில்லை என்றால், இந்த பதிவு முற்றுப்பெறாது... நண்பர்கள் நிச்சயம் அவருடைய கதைகளை (குறைந்தப்சம் சிறுகதைகளை) படிக்கணும்.... புதிய எழுத்தாளர்களில் தனக்கென பாணியை உருவாக்கி வைத்திருக்கும் "சோபா சக்தி" அவர்களின் "ம்" நாவல் ரொம்ப அருமை.... வாய்ப்பு கிடைத்தால் ஒவ்வொரு புத்தகத்தை பற்றியும் தனித்தனி பதிவுகளாக பதிகிறேன்...
எனினும் "சந்திரவதனா........." என்றொரு சரித்திர நாவலை நீங்களாம் படிசிருந்திங்கனா.........!!!!!!
பொன்னியன் செல்வனை பற்றி பேசமாட்டீர்கள்............ மிகுந்த ஆதாரங்களுடனும், தகவல்களுடனும் நான்கு பாகங்களாக வெளிவந்த இந்த காவியத்தை படிப்பவர் மனம் கரையவில்லை எனில் அவர் மனம் கல்.
திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் இந்நாவல் பொன்னியின் செல்வன் எனும் காவியத்தால் அதிகம் வெளிச்சத்துக்கு வராமல் போய் விட்டது.
மேற்கண்ட நாவலை படித்தவர்கள் இதை பற்றி பேசுங்கள். படிக்காதவர்கள் முயற்சியுங்கள்.
உங்களது ஒப்பீடு.. எப்படிப்பட்டது என்று என்னால் வரையறுக்க முடியவில்லை..
“பொன்னியின் செல்வன்” முழுக்க முழுக்க பண்டைய தமிழகத்தின் மூவேந்தர்களுள் ஒருவரான சோழப்பேரரசின் சிறப்புகளை நவிலும் ஒரு படைப்பு.
“சந்திரவதனா” தஞ்சை நாயக்க மன்னர்களின் ஆட்சி முறைகளை பறைசாற்றும் ஒன்று.
என்ன தான் புத்தக சான்றுகளோடு மொழி ஆளுமையோடு படைத்திருந்தாலும்.. இது தமிழர் தம் வரலாற்றைப் பற்றிக் கூறுவதாக அமையாது.. ஒரு வகையில் தமிழரின் வீழ்ச்சி பற்றியதே..
(பி.கு: இதன் மூலம்... நான் எந்த ஒரு மொழிப் பிரிவினருக்கும் எதிரானவன் என்று அர்த்தமாகாது... என் வரையில் தமிழ் அறிந்த எவருமே.. தமிழர் தாம்..! இதில சாதி, சமய பேதத்துக்கோ... தாய்மொழி பேதத்துக்கோ.. கிஞ்சித்தும் இடமில்லை!)
நேற்றுத்தான் சுஜாதாவின் "கனவுத் தொழிற்சாலை" படித்து முடித்தேன். சுஜாதாவின் எழுத்துக்கு நான் தரச்சான்று தர வேண்டியது இல்லை.. ஆனாலும் அந்தக் கதையில் என்னைக் கவர்ந்த, பாதித்த சில விஷயங்களை இங்கு பகிரலாம் என்று நினைக்கிறேன்..
"கனவுத் தொழிற்சாலை" -- முழுக்க திரையுலகின் பின்னணியில் பின்னப்பட்ட ஒரு நாவல். உச்சத்தில் இருக்கும் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகனைச் சுற்றி கதை நகர்கிறது. நாவல் "A star is a person who has a swimming pool in his house and worried look in his face" என்ற பொருத்தமான மேற்கோளுடன் துவங்கும் கதை, கடைசி வரை, அந்த மேற்கோளின் உண்மையை ஒவ்வொரு பத்தியிலும் உணர்த்துகிறது.
கணக்கற்ற பணமும்,வானளவு புகழும் இருந்தாலும், திருப்தியற்ற வாழ்க்கை வாழும், நடிகன் என்பதால் காதலை இழக்கும் நாயகன், பெற்றோர் பார்த்த சந்தேக புத்தி கணவனைக் கட்டிக்கொண்டு பாடுபடும், இருந்தாலும் அவனை விட்டி நீங்க மறுக்கும் 'அக்மார்க்' தமிழ் பெண்மணி, சினிமாவில் பாடலாசிரியராக முயன்று, வேலை இழந்து பணத்தை ஏமாறித் தொலைத்து, பிறந்து 20 நாளில் பிள்ளையைப் பறிகொடுத்து, பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்து, கிட்டத்தட்ட ஒரு அதிர்ஷ்டத்தால் வாய்ப்புக் கிடைத்து, பின் பணம் வந்ததும் குணம் மாறும் ஒருவன், கேடுகெட்ட அப்பாவிடமிருந்து அம்மாவுடன் தப்பி வந்து துணை நடிகையாகி, ஒரு கவர்ச்சிப் படத்தில் நடிக்கும்நிலைக்கு வந்து, வேசியாகி, கடைசியில் தீக்குத் தன்னை தின்னக்கொடுக்கும் அபலை என கதை முழுதும் அசாதரணமான 'சாதாரணர்கள்' நிறைந்து இருக்கின்றனர்.
எல்லோரும் கதையை ஒரு கோபுரம் போல எழுப்புவர். அதில் கடைசி அத்தியாயம், அதாவது கிளைமேக்ஸ், கலசமாய் இருக்கும். ஆனால் சுஜாதா அப்படியல்ல. அவர் ஆரபம்பத்திலேயே ஒரு சுழர்புயலை உருவாக்குவார். நாம் அந்தக் கதைப்புயலின் உச்சத்திற்குச் செல்லும்போது, நம்மை அங்கேயே அம்போவென விட்டுவிட்டு கதை முடிந்தது என வெளியே வந்துவிடுவார். இந்த நாவலும் அதற்கு விதிவிலக்கல்ல. கதையை யதார்த்தமாக, பெரிய திடுக்கிடும் சஸ்பென்ஸ் ஏதும் இல்லாமல், ஆனால் கடைசி வரை இதுதான் முடிவு என யூகிக்க முடியாதபடி எழுத அவரால்தான் முடிகிறது. கொஞ்சம் பெரிய நாவல்.. இருந்தாலும் கண்டிப்பாய் படிக்க வேண்டிய படைப்பு ...
@ராஜ்குட்டி...
ரோத்திஸ் அவர்கள் சொன்னதை நீங்க தவறாக புரிந்துகொண்டுள்ளீர்கள்....
நீங்கள் சொல்வதை போல சொற்சுவை, பொருட்சுவை போன்ற விஷயங்களில் சந்திரவதனா நாவல் "பொன்னியின் செல்வனை"விட சிறப்பாக இருந்தாலும் கூட, பொன்னியின் செல்வன் அளவுக்கு அது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காது..... அதற்கு காரணம் அத்தகைய சுவைகளை தாண்டி நான் படித்தபோது என்னுள் உண்டான உணர்வுகள்.... அதற்கு காரணம், ராசராசனை நான் அங்கு அரசனாக பார்க்கவில்லை, தமிழ் குலத்தின் வீரனாகத்தான் பார்த்தேன்... அருண்மொழிதேவன் ஈழத்தை அரசாண்டதை படித்தபோது எனக்குள் ஒரு பெருமிதம், தமிழன் ஒருவன் அங்கே சாதித்ததில்... படிக்கும்போது அவன் "என் நாயகன்" "என் தலைவன்" "என் நாடு" "என் வெற்றி" என்ற "என்" விஷயங்கள் தான் அந்த உணர்வுகளை கட்டி எழுப்பும், அந்த உணர்வு எனக்கு நாயக்கர் வரலாற்றை படிக்கும்போதோ, சாலுக்கியரின் வரலாற்றை படிக்கும்போதோ கிடைக்காது....
உதாரணமாக சொல்கிறேன்... எனக்கு மணிரத்தினத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் படம் ரொம்ப பிடிக்கும்... இதுவரை நூறு முறை பார்த்திருப்பேன்.... ஆனால், அதைவிட டெக்னிக்கல் விஷயத்திலும், கதை நேர்த்தியிலும் திறமையாக படைக்கப்பட்ட "ராவணன்" படத்தில் எனக்கு "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தின் உணர்வு கிடைக்கவில்லை.... அதற்கு அந்த படத்தில் எனக்கு உண்டான உணர்வு.....
நான் எதையும் தவறாக நினைக்கவில்லை.... நான் சொல்ல வந்த விஷயத்தை நீங்கள் புரிஞ்சுக்கல.... உதாரணமாக நான் சொன்ன மணிரத்தினம் படம் பற்றி கூட நீங்க தவறா புரிந்துகொண்டுள்ளீர்கள்... "ராவணன்" எவ்வளவு திறமையான திரைக்கதையோடு எடுக்கப்பட்டிருந்தாலும், "கன்னத்தில் முத்தமிட்டால்" தாக்கம் எனக்கு அதில் ஏற்பட்டிருக்காது... அதற்கு காரணம் "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தில் எடுத்துக்கொண்ட கரு, எம் ஈழம் தொடர்பானது.... அதனால், அது என்னை அந்த உணர்வை தூண்டிவிட்டது... இப்பவும் அதில் வரும் ஒவ்வொரு வரி வசனமும் எனக்கு நினைவில் இருக்கு....
அதே போலத்தான் "பொன்னியின் செல்வனும்"... அதே கல்கியின் "சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு" போன்றவை கூட எனக்கு பொன்னியின் செல்வன் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை... அதற்கு காரணம் பொன்னியின் செல்வன் எனக்கு "தமிழன் என்ற உணர்வை ஏற்படுத்தியது, ஈழத்தை வென்ற தமிழனை அடையாளம் காட்டியது, தமிழரின் ஒவ்வொரு பண்பாட்டையும் எனக்கு சொல்லித்தந்தது" என்பதால்தான்... ஒரு வாசகனின் உணர்வை தூண்டிவிடும் அம்சம், நிச்சயம் சொர்சுவையிலோ, பொருட்சுவையிலோ இருக்காது... அது அந்த கதையின் கருவில் இருக்க வேண்டும்...
மேலும் ஒவ்வொரு வாசகனுக்கும் அந்தந்த ரசனைகள் மாறுபடலாம்.... உங்களை போன்று எனக்கு பொன்னியின் செல்வனின் தாக்கம் ஒருவாரம் நீடிக்கவில்லை, வருடம் கடந்தும் இன்னும் அந்த கதையின் தாக்கம் என் மனதை விட்டு அகலவில்லை....
எந்த ஒரு படைப்பும் குறைந்த பட்சம் ஒரு வாரகாலமாவது தாக்கத்தை வைத்திருக்கும் என்று உதாரணத்திற்கு கூறியதால் எனக்கும் அதே தாக்கம் தான் இருந்தது என்று எண்ணி கொள்ள வேண்டாம்........ நிச்சயமாக இணை கற்பிக்க இயலாத நூல்தான் பொன்னியின் செல்வன். அதில் மாற்று கருத்து எனக்கு இல்லை. உதாரணத்திற்கு உங்களுடைய நெசமாத்தான் சொல்றீங்களா படிச்சு முடிச்ச அன்னைக்கு காதல் படத்தோட" எங்கே நான் போனாலும்" அப்டின்னு தொடங்குற பாடலை எதேச்சயாக கேக்க நேர்ந்தது அந்த பாடலின் வலி மிகுந்த வரிகளுடன் நான் சாந்தனின் வலியை ஒப்பிட்டு கொண்டேன் அதனால் அந்த பாடலை இன்று கேட்டாலும் எனக்கு சாந்தன் நினைவில் வந்து கண்களை குளமாக்கி விடுவான்.
சாந்தன் எனக்குள் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்த காரணம் அவன் ஈழ தமிழன் என்ற காரணம் இருந்தாலும் அதிகபட்சமான காரணம் அவனது விட்டு கொடுக்காத காதல்தான்.
அதே போலதான் சந்திரவதனாவிலும் காதலின் வலியை கண்கள் கலங்க ஆசிரியர் கூறி இருப்பார்.
ஈழம் காரணமாக உங்களக்கு இருக்கும் தாக்கம் எனக்கு பிரமிப்பை உருவாக்குகிறது குருஜி.!!!
அதற்காக நான் ஈழத்திற்கு எதிரானவன் என்று கருதி கொள்ளாதிர்கள்!!!
மொத்தத்தில் "இந்த உலகத்தில் எழுத பட்ட புத்தகங்கள் எதுவும் கெட்ட புத்தகம் இல்லை" என்ற பொன்மொழியுடன் இந்த விவாதத்திற்கு ஒரு முற்று புள்ளி வைப்போம்.
Namakku roja pidikkum enbathal .. malligai tharam thazhthadu endra artham kidayaathu.....ovvonrukkum oru sirappu... athai pola than padaippukalum.../////
நடந்த கலவரங்களுக்கு நடுவே அரவிந்த் குறிப்பிட்டுள்ள "கனவு தொழிற்சாலையை" இன்றுதான் முடித்தேன்....
ஒவ்வொரு முறை சுஜாதாவின் படைப்புகளை படிக்கும்போதும், சுஜாதா வாசகன் என்பதில் ஒரு கர்வம் கூட துளிர்க்கிறது.....
கனவு தொழிற்சாலை அந்த துளிரை, இன்னும் அதிக மிளிர வைத்துவிட்டது.....
நாயகனுக்கு நல்லதே நடக்கனும்னு நான் கடைசிவரை படபடத்ததில் ஒரு தனி காரணமும் உண்டு, அது அந்த நாயகனின் பெயர்....
கதை முழுக்க படித்த போது என்னை விட்டு அகலாத கதாபாத்திரம் "மனோன்மணி".... கதையில் வரும் பலராலும் ஏமாற்றப்பட்ட அவளை பற்றி அரவிந்த் கூட அதிகம் சொல்லாமல் விட்டது "அவள் ஏமாறுவதற்காகவே பிறந்தவள்" என்று தோன்ற வைக்கிறது.... துணை நடிகைகளை "ஐட்டம்" என்ற ஒரே அளவீடில் சொல்லி முடித்திடும் இயல்பான மக்களுள் ஒருவனான என்னையும், அவள் படுப்பதற்கு பின்னால் இருக்கும் வலிகளை அழகாக சொல்லி இருப்பார் சுஜாதா....
அருமை ராசன் எதார்த்தமான பாத்திர படைப்பு, அவர் மனைவி மேரி அக்மார்க் குடும்பத்தலைவி.....
பாஸ்கர் பாத்திரம் கூட ரொம்ப நேர்த்தியா வந்திருக்கு, நான் கூட பாஸ்கர் இறுதியில் வில்லனாக ஆகிடுவானொன்னு நினச்சேன்..... ஆனால், சுஜாதா நம்மை தாண்டி எப்போதும் சிந்திப்பவர் என்பதை இப்போதும் நிரூபித்துள்ளார்.....
மொத்தத்தில் ஒரு அருமையான படைப்பு, இன்னும் அகலாத மனோன்மணி மனதிற்குள்......
@msvijay
//கதை முழுக்க படித்த போது என்னை விட்டு அகலாத கதாபாத்திரம் "மனோன்மணி".... கதையில் வரும் பலராலும் ஏமாற்றப்பட்ட அவளை பற்றி அரவிந்த் கூட அதிகம் சொல்லாமல் விட்டது "அவள் ஏமாறுவதற்காகவே பிறந்தவள்" என்று தோன்ற வைக்கிறது....//
கதாபாத்திரம் பற்றி ரொம்ப விவரித்தால் வசிப்பவர்களுக்கு சுவாரசியம் இருக்காது என்றுதான் சில வார்த்தைகளில் வர்ணனையை முடித்துக்கொண்டேன். இருந்தாலும் நானும் சேர்ந்து மனோன்மணியை ஏமாற்றியதுபோல கூறிவிட்டீர்களே.. நாயகனைப் பற்றி கூட 12 வார்த்தைகளில் கூறிவிட்டு, இந்த பெண்ணைப் பற்றிதான் 18 வார்த்தைகள் கூறியிருந்தேன்.
//நாயகனுக்கு நல்லதே நடக்கனும்னு நான் கடைசிவரை படபடத்ததில் ஒரு தனி காரணமும் உண்டு, அது அந்த நாயகனின் பெயர்....//
கொய்யால.. உங்களுக்கு வந்தா இரத்தம். எங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா?
இங்க யாரும் அந்தக் கதைய படித்ததில்லை என்பதால் ஏதும் சொல்லாம இருந்தேன். இப்ப நீங்க படிச்சுட்டதால உங்கட்ட கேக்கறேன். முதல் அத்தியாயம் படிக்கும்போது, அதுவும் குறிப்பா, பாஸ்கரிடம் நாயகன் "நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல" அப்படின்னு கேக்கும்போது எனக்கு ஒன்னு தோணுச்சு. உங்களுக்கும் அதேதான் தோணுச்சா? கடைசி வரைக்கும் நான் அந்த நினைப்போடவே தான் கதைய படிச்சு முடிச்சேன். உங்களுக்கு என்ன தோணுச்சு?
. நாயகனைப் பற்றி கூட 12 வார்த்தைகளில் கூறிவிட்டு, இந்த பெண்ணைப் பற்றிதான் 18 வார்த்தைகள் கூறியிருந்தேன்.
/////
இந்த பையனுக்கு இதே வேலையா போச்சு.... வார்த்தைகளை உட்கார்ந்து பொறுமையா எண்ணி பார்த்திருக்கார் பாருங்க.....
என்னப்பா இது, அண்ணனை இப்டிலாம் பேசுற?.... "வெற்றிக்கொடிகட்டு" படத்தில் வடிவேலுவை திட்டும் ஊர்க்காரன் தான் ஞாபகம் வருகிறான்.....
சரி விடுப்பா...... கொரங்குன்னா தாவுறதும், கதைன்னா சாவுறதும் சகஜம்தானே!
////எனக்கு ஒன்னு தோணுச்சு. உங்களுக்கும் அதேதான் தோணுச்சா? கடைசி வரைக்கும் நான் அந்த நினைப்போடவே தான் கதைய படிச்சு முடிச்சேன். உங்களுக்கு என்ன தோணுச்சு?
/////
தோணுச்சு.... அது தோனுறதுக்கு முன்னாடி வேற தோணுச்சு.... அப்படி தோன்றியபோது, தோணாத விஷயம் ஒன்னும் தோணுச்சு.... இப்போ என்ன தோனுச்சுன்னு யோசிச்சா, தோன்றியது தோன்றாமல் போச்சு.... (உனக்கு மட்டும்தான் குழப்பத்தேரியுமா?.... நாங்கல்லாம் குழப்புறதுல முனைவர் பட்டமே வாங்குன ஆளுக)
@msvijay
தொனுறதப்பத்தி என்னென்னமோ தோணும்படிக்கு நீங்க எழுதியிருக்கறதப் பார்க்கும்போது, எனக்குத் தோணுனது உங்களுக்குத் தோணலைன்னு தோணுது. இப்ப எனக்கு என்ன தோணுதுன்னா, அந்த அத்தியாயத்த மறுபடியும் ஒருக்கா வாசிச்சீங்கன்னா எனக்கு தோணுனது உங்களுக்கும் தோணலாம். அல்லது எனக்கு தோணுனது என்னவயிருக்கும்னாவது உங்களுக்குத் தோணலாம். இப்ப உங்களுக்கு என்ன தோணுது?
முதலில் "நிர்வாண நகரம்"
சமூகத்தால் விரக்திக்கு ஆளாக்கப்படுகிறான் சிவராஜ்... ஒரு நீதிபதி கொல்லப்படுகிறார்... அந்த கொலையை செய்தது தான்தான் என்று "ஜீவராசி" என்கிற பெயரில் கடிதம் வருகிறது.... அடுத்தடுத்த மூன்று கொலைகள்.... ஜீவராஜ் என்பதை ஜம்புல் செய்து சிவராஜ் என்பதை கண்டுபிடிக்கிறார்கள் (அந்நியன் இதைத்தான் காப்பி அடிச்சிருக்காங்க)... இறுதியில் வழக்கம்போல கொலைகாரன் நான் எதிர்பார்த்தவன் இல்லை என்கிற வித்தியாசமான முடிவோடு கதை முடிகிறது..... புலன் விசாரணை தான் முழுக்கதையும், ரொம்ப அழகா இருக்கு... படிச்சு பாருங்க....
இரண்டாவது, "காகித சங்கிலிகள்"....
சுஜாதாவின் "தி பெஸ்ட்" கதைகளின் வரிசையில் இதுவும் நிச்சயம் ஒன்று.... ஒரு மருத்துவமனையில் நடக்கும் கதை... ஆரம்பம் முதல் இறுதிவரை "சோகம் சோகம் சோகம்"தான்..... உறவுகள் எவ்வளவு கொடுமை என்பதை கதையை படிப்பவர்கள் உணர்வார்கள்... எதிர்காலத்தில் இந்த கதையை யாரேனும் படமாகவோ, குறும்படமாகவோ எடுத்தால் நிச்சயம் கதை ஒன்றுக்காகவே பெரிய ஹிட் அடிக்கும்..... கண்டிப்பா படிங்க....
மூன்றாவது, "நைலான் கயிறு"....
சுஜாதாவின் முதல் நாவலாம் இது..... சொன்னா ஆச்சரியமா இருக்கும்... முதல் நாவலின் முதல் பகுதியே "நைலான் கயிற்றால் ஒருவன் கழுத்தை இறுக்கி கொலை செய்வதுதான்" காட்சி..... இப்போ புரியுதா "கொலை மேனியா" எனக்கு எங்கிருந்து வந்ததுன்னு?....
இது அவர் முதல் நாவல் என்பதால் நிறைய முயற்சி செய்து பழகி இருக்கிறார்.... வித்தியாசமான சில அம்சங்கள்.... இலக்கியத்தோடு புகுத்து விளையாடி இருப்பார் தலைவர்.....
கடந்த ஆறு மாதங்களாக நான் படித்து கொண்டு இருப்பது "அஞ்ஞாடி", சாஹித்ய அகாடமி விருது பெற்ற ஆயிரம் பக்கங்களை கொண்ட புதினம். நூறு வருடங்களுக்கு முந்தைய தமிழகம் கண் முன்னே விரியும் போது ஆச்சரியம் அப்படியே ஆளை அள்ளி கொண்டு போகும் சூப்பர் அனுபவம்.
எக்கச்சக்கமான சுஜாதா நாவல்கள் கட்டுரைகள். எதை படிக்காமல் மிஸ் பண்ணி இருக்கிறேன் என்று தெரியவில்லை. முதன்முதலாக நான் படித்தது தினமணி கதிரில் வெளியான அவருடைய தொடர் "சிலிக்கன் சில்லு புரட்சி". எலக்ட்ரானிக்ஸ் பற்றிய தூண்டுதலை அந்த பள்ளி வயதில் தோற்றுவித்தது. பிறகு என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, பேசும் பொம்மைகள், ஸ்ரீரங்கத்து தேவதைகள், பிரிவோம் சந்திப்போம், இன்னும் நிறைய.
ஸ்டெல்லா ப்ரூஸ், ஒரு மாபெரும் படைப்பாளி. தனி மனித உணர்வுகளின் போராட்டங்களை அழகு குறையாமல் எழுத்துக்களில் வார்த்தெடுத்தவர். ஒரு முறை தான் பூக்கும், அது ஒரு நிலா காலம், மீண்டும் அந்த ஞாபகங்கள், அது வேறு மழைக்காலம். இவற்றை நீங்கள் தற்போது ஆன் லைனிலும் காணலாம். கூகுளில் தேடுங்கள்.
கல்கி, தி ஜா, அகிலன், சாண்டில்யன், பாலகுமாரன், எஸ். ராமகிருஷ்ணன், சுபா. - இன்னும் நிறைய பட்டியலில் இருக்கிறது.
ஏதேச்சையாக இணையத்தில் உலவிக் கொண்டிருந்தபோது, இரா. நடராசன் அவர்கள் எழுதிய "ஆயிஷா" என்ற குறுநாவலைப் பற்றி அறிய நேரிட்டது. அதைப் பற்றித் தேடியபோது, அதை எழுதிய ஆசிரியர், அதை இலவச பதிப்பாகவே அவர் தளத்தில் தந்திருப்பதாக அறிந்தேன். அதைத் தரவிறக்கிப் படித்த போது, "ஆயிஷா" என் மனதிலும் ஒரு வடுவை ஏற்படுத்திவிட்டாள்.
நம் நாட்டின் "ஆட்டுமந்தை" கல்விமுறையை, கல்வி எனும் பெயரில் நடக்கும் "தேர்வுத் தொழிற்சாலைகளை" உள்ளபடி காட்டும் ஒரு இயல்பான, ஆழமான படைப்பு. உங்களில் பலர் இதை ஏற்கனவே படித்திருக்கலாம். வாசித்திராதவர்கள் கண்டிப்பாக வாசிக்கவும்.
இதை வாசிக்கும்போது, எதாவது ஒரு சந்தேகத்தைக் கேட்டு, ஆசிரியரிடம் வெறுப்பை சம்பாதித்துக்கொள்ளும் உங்கள் பள்ளித் தோழனை, எதைப் படிக்கிறோம், எதற்குப் படிக்கிறோம் என்றே தெரியாமல் கடந்த உங்கள் பள்ளி நாட்களை இந்தக் கதை சில இடங்களிலேனும் நினைவுபடுத்தாவிட்டால், கண்டிப்பாக உங்கள் நினைவுத் திறனில் பெரிய பழுது இருக்க வேண்டும்.