Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாடலை குறைந்தது இருமுறையாவது படித்துப்பாருங்க


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
பாடலை குறைந்தது இருமுறையாவது படித்துப்பாருங்க
Permalink   
 


தகதகதக தகவென ஆடவா
சிவசக்தி சக்தி சக்தியோடு ஆடவா

ஆல காலனே ஆலங்காட்டினில் ஆடிடும் நாயகனே
நீல கண்டனே வேத நாயகா நீதியின் காவலனே

தாள வகைகளொடு மேள துந்துபிகள்
முழங்கிட ஓர் கணமே
காலைத் தூக்கியே ஆனந்த தாண்டவம்
ஆடுக மன்னவனே


முத்துக்கொடி சக்திக் குலமகள் வித்துக்கொரு
வெள்ளம் துணையென
பக்திக் கொடி படரும் நெஞ்சினில் விளையாட
தித்திப்பது இறைவன் செயலென பத்தி தரும்
பரமன் துணையென சுத்தக்கொரு மனிதர் குலமொரு இசை பாட
கற்றுத் தரும் ஒரு வகை அறிவினில்
முற்றும் தெரிவது போல் மனிதர்கள்
வெற்றுப் புகழ் பெறுவார் அவர்களும் உறவாட


திக்குப் பல திமிதிமிதிமியென
தக்கத் துணை தகதகதகவென
தக்கக் கடல் அலையென நடமிடு உலகாள

இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றாகி
எழிலோடு எமையாள வா
இயல் இசை நாடகம் முத்தமிழ் தன்னிலே
இயற்கையே உலகாள வா

அம்மைக்கும் நாயகா அப்பனே ஐயனே
அரசனே நடமாட வா
ஆடுகிற கால் அழகில் காடு பொடியாக வென
அம்மையுடன் நீயாடவா

ிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ
நெருப்புக்குள் நீர் ஒன்று தரச் செய்த நீ

கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ
களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா

உலகத்து நிதியே சமயத்துப் பொருளே
இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே


ஆடவா நடமாடவா விளையாடவா உலகாடவா
நாத கீத போத வேத பாவ ராக தாளமோடு

அடியவர் திருமுடி வணங்கிட
கொடி உயர்ந்திட படை நடுங்கிட

தகதகதக தக என ஆடவா
சிவசக்தி சக்தி சக்தியோடு ஆடவா


__________________



உறுப்பினர்

Status: Offline
Posts: 52
Date:
RE: பாடலை குறைந்தது இருமுறையாவது படித்துப்பாருங்க
Permalink   
 


ஆம் இதனை அறிவியல் வழி பார்த்தால் ...

பிரபஞ்சத்தில் எங்கும் பரவி தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருக்கக்கூடிய Light Electromagnetic Particle லின் செயலை வேறுவிதமாக குறிப்பிடுகிறார்கள். வேகமான, தூய்மையான இதன் இயக்கத்தை Cosmic Dance என்று சொல்வார்கள். இந்து மதத்தில் நாம் இதை "மகா சக்தி" என்று சொல்கிறோம்.  "சிவம்" என்பது இதனோடு இணைந்து இருந்தாலும் இதிலிருந்து மிகவும் தனித்துவமானது. ஆனால் சிவத்தில் ஏற்படும் சலனத்தால்தான் சக்தி என்பது (Light Electromagnetic Particle) பிறக்கிறது. சிருஷ்டியின் தேவைக்காக இது பிறக்கிறது.

சிவம் என்பது நமது அறிவியலின் பிடிக்குள் அடங்காதது. அறிவியல் எந்த காலத்திலும் அதை தொடவே முடியாது என்பது பெரிய உண்மை. ஏனென்றால் அதில் எந்த ஒரு பொருளின் எந்த ஒரு அடிப்படை கூறும் கிடையாது. எந்த ஒரு பொருளாகவும் இல்லாத ஒன்றை எப்படி நமது அறிவியல் விளக்கிட முடியம் சொல்லுங்கள்.

இது எனது கருத்தல்ல. இதுவே மகா உண்மை. 

 

 



__________________

for ct: eds.3333@yahoo.com



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

நன்று நண்பா,நன்றி. . .

__________________



புதியவர்

Status: Offline
Posts: 18
Date:
Permalink   
 

yen oru dhadava padichaley theilva thane puriyudhu... yen 2 dhadava padikkanum...

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

வரிகளின் ஆழம் புரிவதற்காகத் தான் இருமுறை படிக்க சொன்னன்

__________________



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

நல்ல பாடல் . ஏற்கனவே தமிழன் மூலமே இதை ஒரு முறை ரசித்து படித்து இருக்கிறேன் . எப்படியோ இத்துடன் இரண்டு முறை ஆயிற்று . உண்மையில் இதெல்லாம் படிக்க படிக்க அமுது சுரக்கும் வரிகள் தான் .சரண் சொல்லும் தகவல்கள் மேலும் அழகு சேர்க்குது ..

__________________


புதியவர்

Status: Offline
Posts: 32
Date:
Permalink   
 

அருமை அருமை அருமை... (1/0 என்ற மட்டும் மிக அருமை)

__________________
Anonymous

Date:
Permalink   
 

நன்றி!!!!



__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard