Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: You Are Cordially Invited - இரண்டாம் பாகம்


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
RE: You Are Cordially Invited - இரண்டாம் பாகம்
Permalink   
 


Mr. Rotheiss,

why this sudden break pa aiyo. wish for another one da. keep rocking


regards

Thiva

__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

எனதன்பு ரோதீஸ் மச்சான் அவர்களே!!

         தெரிந்த கதைதான் எனக்கு இது; ஆனால் தெரியாத தகவல்.

அதாவது முயற்சிக்கு பிரம்ம பிரயத்தனம் என்ற வார்த்தையை குறிப்பிடுவதை சொன்னேன். விளக்கத்துக்கு நன்றிகள்.

மேற்சொன்ன காட்சியை சோழர் காலத்திற்கு பிறகு கட்ட பட்ட அனைத்து சிவாலயங்களிலும் 

கருவறையின் பின் புறத்தில் லிங்கோத்பவர் என்ற பெயரில் இருக்கும் சிலையில் காணலாம் . அந்த தாழம்பூவிற்கு

விமோசனமாக சிவராத்திரி அன்று மட்டும் ஆராதனையில் கலந்துகொள்ள சிவன் அனுமதி வழங்கியுள்ளதாகவும் ஒரு கதை உண்டு. நிற்க

 

###பேரிரை(எரி)ச்சலாக இருந்தது.. ### அழகான வர்ணிப்பு, வாழ்த்துக்கள்

 



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
நன்றி!
Permalink   
 


samram : எமோஷனலா பதிவுக்கு ரொம்ப நன்றிங்க..! 

thiva : ப்ரேக் இல்லாம எழுதலாம் தான்... வேலைப்பளு.. என்னங்க பண்றது.. கருத்து பதிந்தமைக்கு நன்றி!

rajkutty kathalan : லிங்கோதப்வர் பற்றிய விஷயம் அறியத்தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி..! :)

 



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - இரண்டாம் பாகம் - 9
Permalink   
 


என்னடா சொல்ற.. யூ மீன் அபௌட்... surrogacy?

ஆமா கிச்சா.. அதுக்காகத் தான் இப்ப வந்திருக்கோம்.. உன் குழந்தைய சுமக்கற பாக்கியம் தான் நேக்கில்ல.. அட்லீஸ்ட் அத வளக்கற வாய்ப்பயாவது கொடுடான்னு என்ன நேரடியாவே கேட்டா... என்னால மறுக்க முடியலடா... தனியா இருந்த வரைக்கும் நேக்குன்னு தனியா preferences இருந்ததென்னவோ உண்மை தான்.. இப்போ இவளுக்காக என்ன மாத்திக்கறதுல ஒண்ணும் தப்பில்லைன்னு தோணறதுடா.. சோ என் வாசவிக்காக தான் இந்த முறை இண்டியா வந்திருக்கோம் ”

“வெல் செட்.. முரளி..”

ஒரு வித மனநிறைவோடு வீடு வந்தோம்.. எங்களுக்குத் தான் அன்று இயர்லி டின்னர்... நல்ல வேளையாக அவ்வளவு நேரமாகியிருக்கவில்லை... சௌம்யாவின் கோபத்துக்கு ஆளாகாமல் தப்பித்தேன்.. தவிர ஃபலூடாவும் கை கொடுத்தது...

க்ருஷ் தான்... தன் கிச்சாப்பாவைக் கண்டதும்.. “என்ன ஏமாத்திட்டு போயிட்டல்ல” ....கத்திண்டே அவன் கைக்கு சிக்காமல் ஓடி கலவரப்படுத்தினான்.. வாசவி அவன் சேஷ்டைகளை அதிகம் ரசித்தாள்.

குழந்தைகளுக்கு அம்மாக்கள் ஊட்டியதை வாசவி ஏக்கத்தோடு பார்த்தாள்.. பாவமாக இருந்தது.. அவள் ஆசை நிறைவேற மானசீகமா வேண்டிக்கொண்டேன்... அம்மாக்களும் சாப்பிட்டு முடித்ததும்.. எல்லோரும் வட்டமாக ஹாலிலேயே அமர்ந்து கொண்டோம்... 

அடுத்து என்ன...? வாசவியும் இருப்பதால்.. கஸ்டமைஸ்ட் அந்தாக்ஷரி தான்...! அவரவர் இஷ்டப்படி பாடுவதாக முடிவானது..! துள்ளலான பாடல்களில் ஆரம்பித்தோம்.. !!

“ஹோஸ்ட் தான் ஸ்டார்ட் பண்ணனும் ஒண்ணுமில்லையே.. ஒரு சேஞ்சுக்கு கெஸ்ட்ஸ் நாங்க ஆரம்பிச்சி வைக்கப் போறோம்..” முரளி எழுந்து நின்றான்..

“நேக்குத் தமிழ் பாட்டெல்லாம்.. சான்ஸே இல்ல.. மதராஸி ஸ்டைல் ஹிந்திப்பாட்டு ஒன்னு பாடறேன்...” பலமான பீடிகையோடு.. பாட ஆரம்பித்தான்.... “ட்ரீமும் வேக்அப்பும்.. க்ரிட்டிக்கல் கண்டிஷனும்” அடுத்த வரிக்கு இடுப்பை ஆட்டி... ஆடவே ஆரம்பித்தான்.. “எர்த்தும் க்வேக்அப்பும் ஹில் டூல் ஸப் ஷேக்அப்பும்”

கிச்சாவும் நானும் மூலைக்கு ஒருவராக உருண்டு பிரண்டு சிரித்தோம்.. பெண்களும் கண்ணில் நீர் முட்ட சிரித்தார்கள்.. அவன் எதையும் பொருட்படுத்தாமல்.. கடமையே கண்ணாயினான்.. அவன் அழைத்து வந்த லேட்டின் அங்குசம் சொல்லவும் தான் அந்த மதயானை ஆடி ஓய்ந்தது..

வாசவி... முரளியை.. கைகாட்டி.. "Nobody nobody but you" பாட... குழந்தைகள் எழுந்து ஆட்டம் போட... குதூகலமாக இருந்தது.. எனக்குத் தான்.. பக்கத்து வீட்டு ஷெட்டி எப்போது வந்து கத்தப் போகிறானோ என்று அடித்துக் கொண்டது...!

கொஞ்சம் க்ளாசிக்கல் பாடல்கள் என்று மாறத் துவங்கியதும்.. கிச்சா.. “மானச சஞ்சரரே” ஆரம்பித்தான்.. தலைக்கு மேல் கும்பிடு போட்டேன்... 

“வேற எதனா பாடு.. இது மட்டும் வேணாம்... இங்க நிறைய பேருக்கு இது பிடிக்கல..”

“வேற என்னடா பாடறது...”

“கிச்சாப்பா... ஸாமஜ வர கமன... பாட்லாமா?” 

க்ருஷ்ஷை ஆச்சர்யமாகப் பார்த்தேன்... என் மகனா இவன்..? எனக்கு சுட்டுப் போட்டாலும் வராத விஷயத்தை அநாயசமாக தன் பிஞ்சு கைகளில் தாளம் போட்டபடி கிச்சாவுடன் பாடியதை சௌம்யா அதிகம் ரசித்தாள்.. 

....ஆதீத விக்யாத” வில் அவன் அதிகம் தலையாட்டியதை வாசவி இமையசைத்து தலைசாய்த்து ரசித்தாள்.. பாடி முடித்ததும்.. வாசவி எழுந்து வந்து க்ருஷ்ஷைத் தூக்கி முத்தமிட்டாள்... 

அவ்வளவு தான்.. சௌம்யாவுக்குப் பொத்துக் கொண்டது.. மடியிலிருந்த ஸ்ரீநிஷாவை.. ஏழ்ந்திருடி...” என எழுப்பி... ஜதி சொல்ல.. அது அபிநயம் பிடித்தது... வாசவி புரிந்து கொண்டு... அவளையும் தூக்கி முத்தமிட்டு இறக்கிய பிறகே... சௌம்யா ஓய்ந்தாள்... இதில் என்னை வேறு ஒரு பார்வை...

ஸ்ரீநிஷா வளரைப் போலவே ஸுபுத்தி... சௌம்யாவை விட்டு என் மடிக்குத் தாவினாள்.. 

“சகிக்கலை சௌம்யா..” நான் பார்வையால் பேச... “மூட்றேளா..” என்பதாய் அவளும் பார்வையாலேயே பதில் சொல்ல.. கிச்சாவும், முரளியும் அவஸ்தையாய் சிரித்தார்கள்..!

இது தான் சௌம்யா..! தான் பெற்ற பிள்ளை பாடியது பெரிதாகப் படவில்லை... தான் வளர்த்த பிள்ளையின் சாகசம் சொல்லி அதன் மூலம் தன் திறமை வெளிப்படுத்துவதில் தான் எவ்வளவு ஆர்வம் இவளுக்கு.. இவளை மட்டுமல்ல .. இந்த பெண்களை புரிந்து கொள்வதே பெரும்பாடு!

நேரம் செல்ல செல்ல.. பாடல்கள் சற்றே மிதமான ரகத்தை எட்டின.. முரளி பாடிய Mohabbatein பாடல் வரிகள் என் மனதை அதிகம் படுத்தின.. 

தூர் கஹின் ஆஸமான் பர்... ஹோதே ஹை யே சாரே ஃபைஸலேன்.. கௌன் ஜானே கோயி ஹம்ஸஃபர்... கப் கைஸே.. கஹான் மிலேன்...” 

நிதர்சனமான உண்மை.. ஒத்துக்கொள்ளத்தான் மனது வேண்டும்.. “வானில் எங்கோ வெகு தூரத்தில் முடிவுகள் செய்யப்படுவதால்... நமக்கான வழித்துணையை.. நாம்.. எப்போது, எப்படி, எங்கு சந்திப்போம் என்பது நாம் அறியாத ஒன்று...”

முரளியால்.. விண்டு போயிருந்த மனதை... அடுத்து வாசவி பாடிய Every night in my dreams.. ரணப்படுத்தியது... எவ்வளவு கட்டுப்படுத்தியும் முடியவில்லை.. கண்ணீர் கரை புரண்டது.. 

பிள்ளைகள் எங்கள் மடியில் தூங்கியிருக்க.. சௌம்யாவும் வளரும் தத்தமது பிள்ளைகளை எங்களிடமிருந்து தூக்கிக் கொண்டு.. அமைதியாக விடைபெற்றார்கள்.. போகும் போதும் .... “இப்ப எதுக்கு கண்ல ஜலம்?” என்பதாய்.. பார்வையால் குடைந்தபடியே நகர்ந்தாள்.. 

ஹாலில் நாங்கள் நால்வர் மட்டுமிருந்தோம்.. வாசவி... தன் மிருதுவான குரலில் இன்னும் பாடி முடித்திருக்கவில்லை... எனக்கு டைட்டானிக் கப்பலில்.. நானும் கிச்சாவும் ஒருசேர மூழ்கியதாகவே ஒரு தோற்றம்... கண்ணீர்... என் நெஞ்சை நனைத்திருந்தது..!



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - இரண்டாம் பாகம் - 10
Permalink   
 


தனை மறந்து பாடிக் கொண்டிருந்த வாசவி.. பாடி முடித்து கண் திறந்ததும்... என்னைப் பார்த்து பதறினாள்... 

“ஐயோ.. ஏன் சின்னா அழறீங்க?”

முரளியும், கிச்சாவும் திடுக்கிட்டு என்னைப் பார்த்தார்கள்

ஏண்டா மானத்த வாங்கற.. இவன் இப்படித்தான்.. நீ ஒண்ணும் கண்டுக்காத வாசவி... முரளி.. நீ சொல்லேண்டா அவளுக்கு.. பார் ரொம்ப பேனிக்காயிட்டா.. நோக்குத் தான் இவனப் பத்தி தெரியுமே..”

ஆனாலும் அவளுக்கு என் வேதனை புரிந்திருக்க வேண்டும்.. அவள் எந்த தேசத்தவளாக இருந்தாலென்ன.. காதல்... மொழி, இனம், மதம்.. இவ்வளவு ஏன் பாலினம் கூட கடந்த ஒன்று தானே.. அவள் என்னை ஆதூரமாய்ப் பார்த்தாள்.

அத்தோடு கச்சேரியை நிறைவு செய்தோம்.. முரளியும் வாசவியும் மாஸ்டர் பெட்ரூமில் அடைக்கலமாக.. நானும் கிச்சாவும் மற்றொரு பெட்ரூமில் புகுந்து கொண்டோம்.. 

நான் மல்லாந்து படுத்திருக்க.. கிச்சா என்னருகே ஒருக்களித்து நெஞ்சை வருடினான்.. 

“ஏண்டா.. இவ்ளோ எமோஷனாலாயிருக்கே..?”

“நோக்குத் தெரியாது கிச்சா.. நேக்கென்னமோ.. அந்த பாட்ட கேட்டதும்.. ஜேக், ரோஸ்.. பத்தின ஞாபகம் வந்துடுத்து... "

சரி தான்.. ஜேக்கோடவே சேந்து அட்லாண்டிக்ல மூழ்கினதா தோணித்தாக்கும்..”

“நான் மட்டுமில்லை..  நாம ரெண்டு பேருமே மூழ்கிண்டதா ஒரு கற்பனை... அதான்.. தாங்கிக்க முடியலை...”

ஏண்டா.. நீயா. விபரீதமா எதாவது நினச்சிக்கற? அப்படி மூழ்கிப் போற அளவுக்கு இப்போ என்ன ஆயிடுத்து?”

அவன் கைவிரலில் நான் அணிவித்த அந்த மோதிரத்தைத் தடவியபடியே கேட்டேன்.. “நம்ம காதலும் கிட்டத்தட்ட அப்படித்தானடா.. நேக்கு முரளிய பாத்தா பொறாமையா இருக்கு கிச்சா.. பார்.. நினைச்சபடி வாழ்க்கைய அமைச்சி... இப்போ... அவன் partner ஆசப்பட்டானுட்டு ஒரு surrogate mother தேடி வந்திருக்கேன்றான்.. நாம.. மத்தவாள திருப்தி பண்றதா நினச்சி.. நம்மள நாமளே ஏமாத்திண்டிருக்கமோன்னு தோணறது கிச்சா...”

“...............”

அவன் முகம் நோக்கி கேட்டேன்.. “ஏண்டா எதுவும் பேசமாட்ற..? நான் தப்பா எதனா ஆசப்பட்டதா நினைக்கறியா..?”

“சே.. சே.. சத்தியமா இல்லடா... உன்ன கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க.. என் மனச எவ்வளவு கல்லாக்கிக்க வேண்டியிருந்ததுன்னு நோக்குத் தெரியாது.. நோக்கு ஞாபகமிருக்காடா... உன்ன ஃபர்ஸ்ட் நைட்டுக்கு தைரியம் சொல்லி அனுப்பி வச்சது... அப்படி அனுப்பி வச்சிண்டு... ராத்திரியெல்லாம் அழுதேண்டா... என்னால எடுத்துக்கவே முடியலடா... நேக்கு சொந்தமான ஒண்ண நானே தாரை வார்த்துக் கொடுத்த மாதிரி.. ஐயோ... இதுக்கு மேல கேக்காதடா... இப்பக் கூட பதர்றது... “

ஐயோ.. கிச்சா.. இப்ப போய் சொல்றியேடா.. அன்னிக்கே சொல்லியிருந்தா.. நாம ஒண்ணாவாவது செத்துப் போயிருக்கலாமேடா..?”

“தப்பு சின்னா... நாம சாகறதுக்குப் பிறக்கல.. இப்போ... நம்ம குடும்பம்.. குழந்தேளல்லாம் பாக்கறச்ச... நாமளும் அர்த்தமுள்ள வாழ்க்கை தான் வாழ்ந்திருக்கோம்னு தோணறதா இல்லியா?”

“அப்படித் தோணறதா நாம கற்பனை பண்ணிண்டு... நம்மள நாமளே ஏமாத்திண்டிருக்கோம்னு வேணா தோணறது...” 

“நேக்கு உன் மனநிலை ஒண்ணும் புரியாம இல்லடா.. இன்ஃபக்ட்.. என்தும் அதே மனநிலை தான்.. ஆனா நமக்கு வேற வழியில்லை... முரளி மாதிரி சந்தோஷமா வாழ்க்கைய அமைச்சிண்டவாள பாத்து நம்மள தேத்திப்போம்.. ஒரு விஷயம் மட்டும் சங்கல்பமா எடுத்துக்கணும்டா.. விரும்பி பண்ணினோமோ.. இல்ல சூழ்நிலையோ... நம்மள நம்பி வந்த ஜீவன்களையும் சரி.. நம்ம மூலமா பிறந்த ஜீவன்களையும் சரி... நாம ஒருக்காலும் உதாசீனப்படுத்தக்கூடாதுடா

சொன்னவன்.. நிமிர்ந்து மல்லாந்து படுத்தான்.. 

“இவன் சொல்றதுல தப்பென்ன இருக்கு..? என் கிச்சா சொன்னா சரியாத் தானிருக்கும்” நான் அவன் நெஞ்சில் தலை வைத்துப் படுத்தேன்.. அவன் என்னை அணைத்துக் கொண்டு என் முதுகை வருடினான்..

எனக்கு மட்டும் கேட்கும்படி... மெல்லிய குரலில் அவன் பாடிய அவன் ஃபேவரைட்.. மானச சஞ்சரரே.. மயிலிறகாய் வருடியது... 

என் கிச்சாவின் அரவணைப்பில் நான் ஒருவித மனநிறைவோடு கண்ணயர்ந்தேன்!

(தொடரும்)  



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
RE: You Are Cordially Invited - இரண்டாம் பாகம்
Permalink   
 


அண்ணா.. சின்னாவோட சேர்த்து எங்களையும் அழவெச்சுட்டீங்க... சந்தோசம், ஏக்கம், பெருமிதம், வலி இதெல்லாத்தையும் சேர்த்து ஒன்னா தர்ரதுக்கு காதலால மட்டும்தான் முடியும்.
பொதுவா ஒரு பதிவ படிச்சு முடிச்சதும் அதில் பிடிச்ச வரிகள Quote பண்ணி கமெண்ட் போடுவேன்.. ஆனா இப்ப அப்படிப்பண்ண இந்த முழுப் பதிவையும் காப்பி பண்ணி quote பண்ண வேண்டிவரும்... ஆனா என் மனச ரொம்ப பாதிச்ச வரிகள மட்டும் இங்க Quote பண்றேன்.. ஆனால் நோ கமெண்ட்ஸ்....
// “வானில் எங்கோ வெகு தூரத்தில் முடிவுகள் செய்யப்படுவதால்... நமக்கான வழித்துணையை.. நாம்.. எப்போது, எப்படி, எங்கு சந்திப்போம் என்பது நாம் அறியாத ஒன்று...”//

//அவளுக்கு என் வேதனை புரிந்திருக்க வேண்டும்.. அவள் எந்த தேசத்தவளாக இருந்தாலென்ன.. காதல்... மொழி, இனம், மதம்.. இவ்வளவு ஏன் பாலினம் கூட கடந்த ஒன்று தானே.//

//எனக்கு மட்டும் கேட்கும்படி... மெல்லிய குரலில் அவன் பாடிய அவன் ஃபேவரைட்.. “மானச சஞ்சரரே..” மயிலிறகாய் வருடியது//

ஆனா நீங்க அங்கங்க கிள்ளிப்போடும் திரிகள், பின்னால ஒரு டைம் பாம் வெடிக்க தயாரா இருக்கறத காட்டுது. கொஞ்சம் பதமா பாத்து பண்ணுங்க.. பாவம் எங்க கிச்சாவும் சின்னாவும்...

__________________

gay-logo.jpg

 



இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

மாமா.........,

காலம் பிரித்த காதல் ஜோடி 

கண்ணயறும் வேலையில் காதலை பரி மாறி கொண்டதில் 

கண்கள் கலங்கி விட்டது

அதோடு எனக்கு பயமும் தொற்றி கொண்டது மாமா

ஏன்னு உங்களுக்கு புரியும்ன்னு நெனைக்கிறேன்!!



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

nys felings ...

tis is way v can liv in a country such as our INDIA

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

You made my eyes as ponds..! Really i feel so sad and so touching..! //“சகிக்கலை சௌம்யா..” நான் பார்வையால் பேச... “மூட்றேளா..” என்பதாய் அவளும் பார்வையாலேயே பதில் சொல்ல.. கிச்சாவும், முரளியும் அவஸ்தையாய் சிரித்தார்கள்..!// real ah ve husband and wife kulla nadakkara chinna chinna vishayatha romba azhaga kaatti irukel..!

//எனக்கு டைட்டானிக் கப்பலில்.. நானும் கிச்சாவும் ஒருசேர மூழ்கியதாகவே ஒரு தோற்றம்... கண்ணீர்... என் நெஞ்சை நனைத்திருந்தது..!// nekkum andha paattu ketkaracha appadi thaan thonum..!

//. அவள் எந்த தேசத்தவளாக இருந்தாலென்ன.. காதல்... மொழி, இனம், மதம்.. இவ்வளவு ஏன் பாலினம் கூட கடந்த ஒன்று தானே.. அவள் என்னை ஆதூரமாய்ப் பார்த்தாள்.// ofcourse..! Love has no limits..! And a real peoples who all're in love can feel the other loving people's feelings..!

//எனக்கு மட்டும் கேட்கும்படி... மெல்லிய குரலில் அவன் பாடிய அவன் ஃபேவரைட்..“மானச சஞ்சரரே..”மயிலிறகாய் வருடியது...// so touching..! And cried a lot..! Can't speak anything more..!

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
நன்றி!
Permalink   
 


ArvinMackenzie : ஜீனி.. என்ன ஆச்சு..?? ///எங்களையும் அழவெச்சுட்டீங்க/// :(

////ஆனா நீங்க அங்கங்க கிள்ளிப்போடும் திரிகள், பின்னால ஒரு டைம் பாம் வெடிக்க தயாரா இருக்கறத காட்டுது. கொஞ்சம் பதமா பாத்து பண்ணுங்க.. பாவம் எங்க கிச்சாவும் சின்னாவும்... //// இது வரைக்கும் அப்படி எந்த நோக்கமும் இல்ல.. :)

எமோஷனலான உங்கள் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றி!! 

rajkutty kathalan : நீங்க ரெண்டு பேரும் திடமான முடிவெடுத்துட்டதா சொல்வீங்களே.. அப்புறம் என்ன.. எதுகை மோனைல கவித்துவமா கவலைப்பட்டிருக்கீங்க.. Don't worry.. A saying says so.. "Time heals all wounds" :)

cutenellaimdu : ///tis is way v can liv in a country such as our INDIA /// hope this changes in the near future!

Butterfly : அழுகாச்சி எபிசோட் போஸ்ட் பண்ணிட்டனோன்னு கவலையா இருக்கு.. :( 

////nekkum andha paattu ketkaracha appadi thaan thonum..!//// உண்மை தான்.. ரொம்ப ரணப்படுத்தும்ல.. அந்த பாட்டு!

/////. அவள் எந்த தேசத்தவளாக இருந்தாலென்ன.. காதல்... மொழி, இனம், மதம்.. இவ்வளவு ஏன் பாலினம் கூட கடந்த ஒன்று தானே.. அவள் என்னை ஆதூரமாய்ப் பார்த்தாள்.///// இது நம்ம basher -ஓட signature statement-ஆ முன்னால இருந்துச்சு... கதைக்கோசரம் சுட்டுட்டேன்.. !!!

கருத்து பதிந்தமைக்கு என் உளமார்ந்த நன்றி!! :)



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
RE: You Are Cordially Invited - இரண்டாம் பாகம்
Permalink   
 


எல்லோரையும் கலங்க வச்சுட்டீங்க....ரொம்ப நல்லாருக்கு இந்த கதைல கிச்சா தன்னை வருத்திக் கொண்டாலும் எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறது பெருமை பட வைக்கின்றன....ஒரு விஷயம் மட்டும் சங்கல்பமா எடுத்துக்கணும்டா.. விரும்பி பண்ணினோமோ.. இல்ல சூழ்நிலையோ... நம்மள நம்பி வந்த ஜீவன்களையும் சரி.. நம்ம மூலமா பிறந்த ஜீவன்களையும் சரி... நாம ஒருக்காலும் உதாசீனப்படுத்தக்கூடாதுடா”...வாவ் இது தான் ஒரு இண்டியன் பெருமை படுத்தற மெயின் விஷயம்...நிறைய குடும்பங்கள் நல்ல நிலைமையில் இருக்கவும் இது தான் காரணம்...அதை gay partnerக்கும் இருக்கு என்று எழுதியது அருமை நண்பா....என் கிச்சாவின் அரவணைப்பில் நான் ஒருவித மனநிறைவோடு கண்ணயர்ந்தேன்!...even a hug satisfies a lot nd give more energy...proud of you...keep it up



__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Azhugaachi episode illa mama..! Romba touchingaana episode post pannirukel..! Mathavaalukaaga thangaloda viruppatha thiyagam pannindavaaloda manasu enna paadu padumndradha padampuduchu kaatirukael..! Really an amazing work mama..! :'(

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 108
Date:
Permalink   
 

No words to comment mama!

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

Mr. Rotheiss

very Nice da your not made kicha in tears but alos me. keep rocking. see you in next one

regards

thiva

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 80
Date:
Permalink   
 

//எனக்கு மட்டும் கேட்கும்படி... மெல்லிய குரலில் அவன் பாடிய அவன் ஃபேவரைட்.. “மானச சஞ்சரரே..” மயிலிறகாய் வருடியது... // எங்கள் மனதையும் தான்.

சமயங்களில் என் கிச்சாவிற்கு போன செய்து "பூக்கள் பூக்கும் தருணம்" பாட சொல்லி கேட்பதுண்டு.. மலரும் நினைவுகள்.

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
நன்றி!
Permalink   
 


chathero2006 : நெகிழ்ச்சியான மலரும் நினைவுகள்... 

நானும் கேட்பேன்... “மீனம்மா.. அதி காலையிலும்” ஆட்டோமேட்டிக்கா.. கண்ல நீர் கோர்த்துரும்.. (ஆனா... அவன பாட சொல்லியெல்லாம் கேட்க மாட்டேன்.. that'll be suicidal... biggrin)

thiva : no Apa macam??? எதுக்கு tears...??? Cheers buddy!

basher : :)

Butterfly : Thank you butterfly! :)

samram : ரொம்ப ரொம்ப நன்றி samram :)

 

ஏனைய நண்பர்களுக்கு THANK+YOU.jpg



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - இரண்டாம் பாகம் - 11
Permalink   
 


 

காலையில் சௌம்யாவும் வளரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்... முரளி... ரொம்ப நாளானதாலா என்னவோ... இட்லியை ஈடீடாக கபளீகரம் செய்து கொண்டிருந்தான்.. பசியாறியவாறே தான் இண்டியா வந்ததன் நோக்கம் பற்றியும்.. Surrogacy பற்றியும் ஆரம்பித்து.. விவரித்தான்..

“சோ... தட்ஸ் இட்... இது தான் எங்க இண்டியா ட்ரிப்போட ப்ளான்... Surrogacy பத்தி ஆரம்பிச்சதென்னவோ வாசவி தான்.. ஆனா இப்ப அது எங்களோட ஒருமித்த முடிவாயிருக்கு... எக்சப்ட் தட்.. அது gestational surrogacy-ஆ மட்டும் தானிருக்கணும்னு நான் விரும்பறேன்... 

வாசவிக்கு இதப் பத்தி பெரிசா ஒண்ணும் அபிப்பிராயமில்லை.. அப்படி கண்டிப்பா gestational - ஆ தான் இருக்கணுமா.. traditional-ஆ இருந்தாலும் நேக்கு பரவாயில்லன்னு அவ பெருந்தன்மையா சொன்னா... தவிர நமக்கும் செலவு கம்மி... artificial insemination-ஓட மட்டுமே முடிஞ்சு போயிடுமேன்னா... 

பட்.. நேக்கு அதுல உடன்பாடில்ல.. செலவு ஒரு பிரச்சனையில்ல...  எந்த விதமான செண்டிமெண்டல் குளறுபடிகளும் வந்துடப்படாது.. அந்த குழந்தை என் வாசவிக்கு சொந்தமானதா மட்டுமே இருக்கணும்னு நான் ஆசப்படறேன்...”

“ஏன் முரளி.. தப்பா எடுத்துக்காதேள்.. அப்படியென்ன உங்க ரெண்டு பேருக்கும் வயசாயிடுத்து... நார்மலாவே முயற்சி பண்ணலாமே...?” என் செல்லம் சௌம்யாவின் நியாயமான கேள்வி... 

எனக்கு தொண்டையில் இட்லி சிக்கிக் கொண்டது.. விக்கலெடுக்கவும்.. தண்ணீர் எடுத்து அருகே வந்தவளின் காலில் மிதித்தேன்.. ஏதோ புரிந்து கொண்டவளாய்.. “அம் சாரி.. ப்ளீஸ்.. டோண்ட் மைண்ட் வாசவி..” என்று அத்தோடு கழண்டு கொண்டாள்...

நான் கையலம்ப எழுந்ததும்.. பின்னாலேயே வந்து.. “சாரின்னா.. கொஞ்சம் அவசரப்பட்டு கேட்டுட்டேன்..”

“நீ அவசரப்படல சௌம்யா.. அஸ் யூஷுவல் அவசரப்பட்டுட்டேன்னு வேணா சொல்லு...”

“ஏன்னா.. எப்பவும் என்ன வில்லங்கமாவே பாக்கறேள்.. நான் ஒரு ஆதங்கத்துல தான் அப்படி கேட்டேன்.. அப்படி என்ன தான்னா அவளுக்கு பிரச்சனை.. நன்னா தானிருக்கா.. மூக்கும் முழியுமா... “

சௌம்யா அப்படி சந்தேகப்பட்டதில் ஆச்சர்யமில்லை... வாசவியின் SRS ஒரு முழுமையான பேக்கேஜ்ஜாக இருந்திருக்க வேண்டும்.. Facial / Voice feminization, Breast/Buttock augmentation, Tracheal shaves என்று பார்வைக்குத் தெரிந்த வரையில் கனகச்சிதமாக.. இம்மியளவும் சந்தேகம் ஏற்படுத்தாதவாறு இருந்தது..  மற்றபடி அவள் vaginoplasty, Labiaplasty, hormone therapy செய்து கொண்டாளா... எடுத்துக் கொண்டாளா என்பதை பற்றியெல்லாம் முரளியிடம் கேட்டு என் ஆவலைத் தீர்த்துக் கொள்ளும் அளவிற்கு.. நான் ஒன்றும் இங்கிதமில்லாதவனில்லை...!

“அது சௌம்யா..... அவளுக்கு.. ஏதோ... Hysterectomy and Oophorectomy எல்லாம் பண்ணிண்டா மாதிரி தான் முரளி பேசினான்.. நேக்குமே சரியாத் தெரியலை.. நீயா எதையாவது கேட்டு வைக்காத...”

“ஐயோ.. பெருமாளே... கண்டிப்பா மாட்டேன்னா..  பாவம் இந்த சின்ன வயசுலயே... சே.. ரொம்ப பாவம்னா வாசவி... நேத்து அவ்ளோ திவ்யமா பாடினா...   இவளுக்குப் போய் இப்படி ஒரு சோதனையா... அவா நினச்சது நடக்கணும்னு நானும் வேண்டிக்கறேன்னா...”

“அப்பாடா.. உருப்படியா ஒரு விஷயம் சொல்லியிருக்க சௌம்யா.. குட்.. கீப் இட் அப்..”

என் கிண்டலை புரிந்து கொள்ளும் மனநிலையிலில்லை... அவள் முகம் நிஜமாகவே வாசவிக்காக பரிதபித்தது..

என்ன செய்வது.. எனக்கு மட்டும் இவளை ஏமாற்றுவது நோக்கமல்லவே.. சில நேரங்களில்.. ”பொய்மையும் வாய்மையிடத்து புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்” !!!

(PS: எல்லா Medical Term-க்கும் links கொடுக்க ஆசை தான்.. தாவு தீர்ந்துடுது... கோச்சுக்காம... கூகிள் நண்பனை நாடவும்)

 



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - இரண்டாம் பாகம் - 12
Permalink   
 


சாப்பிட்டு முடித்தும் கையைக் கழுவாமல் முரளி இன்னும் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தான்.. கிச்சாவும் வளரும் எதிரில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.. 

நானும் ஒரு சேரில் என்னை ஆக்ரமித்துக் கொண்டு.. “இன்னும் நீ இவாளுக்கு எக்ஸ்ப்ளெயின் பண்ணி முடிக்கலையாக்கும்.. அதையே சொல்லிண்டிருக்காம அடுத்து என்னன்னு சொல்லுடா..”

ம்.. இரு.. வர்றேன்..” அவன் வேகமாக பேசினில் கழுவி வந்து... “அதாண்டா.. ஆனந்த் போலாம்னு இருக்கோம்.. எல்லாரும் முதல்லயே பேசிண்டுதான் அவாளாண்ட போவா... நாங்க போய் பேசிப்போம்னு பாக்கறோம்...”

“அதுக்கு எதுக்கு நீங்க குஜராத் வரைக்கும் போகணும்.. முன்ன அது ரொம்ப ஃபேமஸா இருந்ததென்னவோ உண்ம தான்.. இப்ப எல்லா இடத்துலயும் வந்துருச்சே... ஏங்க.. உங்க ஹாஸ்பிட்டல்லயே கூட இருக்கு தானங்க?”

“ஆமா முரளி... வளர் சொல்றது சரிதான்.. நீ வேணா.. ஒருமுறை... வேணாம்.. இப்பவே கூட கிளம்பி போய் கேட்டுட்டு வந்துடலாம்..”

“அப்பாய்ன்மெண்ட் ஒண்ணும் தேவையில்லாயாடா கிச்சா..”

“இல்ல சின்னா... பின்ன.. நான் எதுக்கு அங்க லேப் இன் சார்ஜ்னு.. உத்யோகம் பாக்கறேனாம்? ... என்னடா முரளி யோஜனை.. சீக்கிரம் கிளம்புடா..  வாசவி.. கமான்... ஹரி அப்...

கிச்சாவோடு... முரளியும் வாசவியும் கிளம்பி வாசலை விட்டிறங்கி காரை நோக்கி நடக்க.. கிச்சா ஏனோ திரும்பி... வளர்மதியைப் பார்க்க... அவள்.. சிட்டாய் உள்ளே பறந்து.. நொடியில் தயாராகி அவர்களுடன் இணைந்து கொண்டாள்... 

எனக்கு இது பல நேரங்களில் பொறாமையாக இருக்கும்.. ஆதர்ஷ தம்பதிகள்னா அது கிச்சாவும் வளரும் தான்.. இருவரும் பார்வையாலேயே செய்தி பரிமாறிக் கொள்ளும் வித்தை அவ்வளவு அலாதியாக இருக்கும்... இத்தனைக்கும் அவர்களுக்கென்ன.. அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நடந்த கல்யாணமா.. ஒரு ஜானவாசமோ.. காசியாத்திரையோ.. கன்னிகாதானமோ.. மாங்கல்யதாரணமோ.. நலங்கோ.. ஒன்றும் கிடையாது... ! எல்லாம் அவரவர் வாங்கி வர்ற வரம்.. ! 

அவர்கள் கிளம்பி செல்லவும்... நாங்கள் உள்ளே வந்தோம்.. நான் சோஃபாவில் அமர்ந்து கொள்ள.. சௌம்யா என் மடியில் தலை சாய்த்தாள்.. பிள்ளைகள் நிமிர்ந்து எங்களை ஒரு நோட்டம் விட்டு பின் விளையாட்டில் கவனமாயினர்.. 

சௌம்யா கண்மூடித் தூங்கவில்லை.. ஏதோ தீவிர சிந்தனையாய் இருந்தாள்.. அநேகமாக வாசவி பற்றித் தான் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும்.. 

“என்ன சௌம்யா யோஜனை..?”

“இல்லன்னா.. நான் எப்பவுமே.. என்னோட postpartum haemorrhage பத்தி மட்டுமே பெருசா நினச்சிண்டிருப்பேன்.. நான் மட்டும் தான் இந்த லோகத்துலயே அபாக்கியசாலின்ற மாதிரியெல்லாம் நினச்சிண்டிருப்பேன்.. மத்தவா கஷ்டத்தையும் நாம பாக்கும் போது தான்... சே.. நாம எவ்வளோ தேவலாம்னு தோணறது..”

“உண்மை தான் சௌம்யா.. யாருக்குத்தான் கஷ்டமில்லை சொல்லு... இதுகள் மாதிரி குழந்தேளுக்கு வேணா கஷ்டமில்லாம இருக்கும்... பார்.. வருங்காலம், வேலை, கேரியர், அடுத்த வேளை சாப்பாடுன்னு எதனா இதுகளுக்குத் தோணறதா பாரேன்.. அப்படி என்னதான் விளையாட்டோ.. வாழ்க்கை முழுக்க இவாள மாதிரியே இருந்துடலாம் போல..”

“ஓஹோ... அப்ப.. வாழ்க்கை முழுக்க... நேக்கு டாய்லெட் போகணும்.. ஜட்டிய கழட்டி விடுன்னு யாரையாவது எதிர்பார்த்து நிக்க போறேளாக்கும்.. அது ஒரு வகையான dependency-னா.. உங்களாண்ட புலம்பினேன் பாருங்கோ.. என்ன சொல்லணும்...” அவள் எழுந்து கிச்சனை நோக்கி நடந்தாள்... 

நான் வழக்கம் போல அவளிடம் பல்பு வாங்கிக் கொண்டு.. அந்த திலக் நகர் ஹாஸ்பிட்டலிலிருந்து எப்போது நல்ல செய்தியோடு வருவார்கள் என காத்திருக்கத் தொடங்கினேன்.. 

(தொடரும்)



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
RE: You Are Cordially Invited - இரண்டாம் பாகம்
Permalink   
 


சஸ்பென்ஸ இழுத்துட்டே போறீங்க.. இனி என்ன நடக்கும்? அடுத்த பதிவுக்குக் காத்திருக்கேன்..

//இருவரும் பார்வையாலேயே செய்தி பரிமாறிக் கொள்ளும் வித்தை அவ்வளவு அலாதியாக இருக்கும்//
"கண்ணொடு கண்இணை நோக்கொக்கின்/ வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல" இல்லையா? மனம் ஒன்றாக இருக்கும்போதுதான் கண்களின் மொழி புரியுமாம்.. அற்புதமான பகுதி..

__________________

gay-logo.jpg

 



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

nice , continue

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 108
Date:
Permalink   
 

Hospitalil yeathavathu twist vachirukingala mams!

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 103
Date:
Permalink   
 

Rotheiss ஜி,
மன்னிக்கவும் நடுவுல கொஞ்சம் உங்க கதைய படிக்காம மிஸ் பண்ணிட்டேன்......
படிக்கும்போதே அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு எழுவதை தடுக்க முடியல.....

பல வசனங்கள் காட்சிகள் என் வாழ்வோடு நடந்ததை கண் முன் கொண்டு வருகிறது......

ரொம்ப சந்தோசமா ரசிச்சு படித்தேன்....next episode காக ரொம்ப ஆர்வமாக காத்திருக்கிறேன்....

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

கதை புது புது விஷங்களோடு நல்லா போகுது அதற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்....நீங்கள் சொல்ற terms எல்லாம் படிக்க படிக்க வாசவி போன்றவர்கள் மேல் பரிதாபம் வருகிறது ....மனதிலோடு உடல் அளவிலும் எவ்ளோ வேதனை ....சௌம்யா சொல்வது போல்... சே.. நாம எவ்வளோ தேவலாம்னு தோணறது..”....iஇந்த கதையில் ஆதர்ஷ தம்பதிகள் விட சௌம்யா ஜோடி நல்லாருக்கு...அவரை போன்றோர்கள் தான் உண்மையா இருப்பாங்கன்னு எனக்கு தோணும்....சீக்கிரம் அடுத்து பதிங்க....

__________________
«First  <  1 2 | Page of 2  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard