நீங்க சொன்னதுக்கப்றம் மாற்று கருத்து உண்டா? கண்டிப்பா தஞ்சைக்கு நல்ல படியா கொண்டு வந்துடுவோம்!! தொடர்ந்து வாழ்த்துங்கள்
திரு திருப்பூர் பாபு, திரு ஹாட் குரு , அவர்களுக்கு !!
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் தொடர்ந்து நல்லாதரவு தர வேண்டுகிறேன்!!
திரு ரோதிஸ் அண்ணாச்சி அவர்களுக்கு!!
இவ்வளவு தூரம் ரசித்து படிப்பதற்கு நன்றிகள், மேலும் காராகிருகம் என்பது சிறைச்சாலையை குறிக்கும். பெரும்பாலான
பழைய திரைப்படங்களில் இது அதிகம் சொல்லாட பட்டிருக்கும் அதனால் தான் விளக்கம் அளிக்க வில்லை ஔடதம், ஆநிரை போன்ற பதங்களை தமிழ் புத்தகங்களில் தான்
படித்திருப்போம் அதனால் தான் பொருள் குறிப்பிடிருந்தே. என் தவறுதான் பொறுத்தருள்க!! தொடர்ந்து நல்லாதரவு தரவும்
திரு அரவிந்த் மெக்கன்சி அவர்களுக்கு!!
பாராட்டுகளுக்கு நன்றிகள், ஆலோசனைகளுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்
எவ்வளவு தான் திரும்ப திரும்ப தேடி பார்த்தாலும் சில எழுத்து பிழைகள்
கண்களில் படாமல் தப்பித்து விடுகின்றன. இது என் தவறுதான் பொறுத்தருள்க. தற்கால பேச்சு வழக்குகளை
இயல்பு கருதி பின் புத்தி இருப்பேன் பிழை என்றால் பொறுத்தருள்க.
அதே சமயம் ஒரு சின்ன விஷயத்தை தாங்கள் கவனிக்க மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறன்.
அந்த மிருக நல வைத்தியர் வேளிர் குலத்தை சேர்ந்தவர் அதாவது மாடுகள் மேய்ப்பதை குலத்தொழிலாக கொண்டவர்
(முல்லைநில மக்கள்).
இந்த குலத்தில் தான் திருமால் கண்ணனாக
அவதரித்ததாக பாரதம் முழுவதும் நம்ப படுகிறது, ஸ்ரீமத் பாகவதமும், இதைத்தான் உறுதி செய்கிறது,
துவாரகையை ஆண்டகண்ணனின் வழி வந்தவரே வேளிர் என்பதைப் புறநானூற்றுப் பாடல் ஒன்றும் நச்சினார்க்கினியரின் தொல்காப்பியப் பாயிர உரைக்குறிப்பும் புலப்படுத்துகின்றன.
(ஆதாரம்:விக்கிபீடியா)
எனவே திருமாலை குல தெய்வமாகவும் (பார்க்க ஐந்திணை கருப்பொருள் அட்டவணை) அவரது வரலாற்றுடன் தொடர்புடையவர்களின் பெயர்களே தங்களுக்கு வைத்து கொள்வதையும்
இம்மக்கள் இன்றும் பின்பற்றுகின்றனர்.
அதனால் தான் அப்பெண்களுக்கு யசோதை, ருக்மணி என்ற பெயரையும், மருத்துவருக்கு நித்தவினோத மதுசூதன பூபதி என்று பெயரையும் சூட்டினேன்.
நம் தமிழகத்தை பொறுத்த வரை யார் ஆட்சி செய்தாலும் மக்கள் தத்தமது குல வழக்கங்களை விட்டு கொடுக்க மாட்டார்கள்
என்ற அடிப்டையில் தான் இந்த செயல்பாடு. மாற்று கருத்துக்கள் இருந்தால் குறிப்பிடவும். எமது குரு நாதரை ஆமோதித்தற்கு ஆயிரம் கூடி நன்றிகள்
தொடர்ந்து நல்லாதரவை நல்கும் படி தாழ்மையுடன்
விண்ணப்பிக்கிறேன்!!
-- Edited by rajkutty kathalan on Wednesday 16th of October 2013 11:20:36 AM
ராஜ்குட்டி,
நீங்க ஒவ்வொருமுறை என்னை "குருநாதா"னு கூப்பிடும்போதும், ஒரு படத்தில் வடிவேலு தன் குருநாதரை கூட்டிக்கொண்டு சண்டைக்கு போவாரே அதுதான் நினைவுக்கு வருது.....
"டேய் இப்ப வாங்கடா, இப்ப வாங்கடா.... பாருங்கடா இந்த சிங்கத்த..... குருநாதா!, இங்கதான் என்னைய அடிச்சாணுக குருநாதா"னு வடிவேலு சொல்ற மாதிரியே காதுக்குள் கேட்குது....
உங்க கதைப்படி அது "அசிரீறி"யா? அல்லது என் கதைப்படி "ஹாலுசினேஷன்'ஆ?னு தெரியல.....
@அர்விந்...
ஏன்பா உனக்கு இவ்ளோ கொலைவெறி?.... இதற்கல்லாம் என் அடுத்த கதையில் நான் உருவாக்கபோகும் கதாப்பாத்திரத்தில் சேர்த்து வச்சுக்கறேன்... (தம்பிக்கு நாலு தலை பார்சல் பண்ணுங்கப்பா....!)
ஆலய வளாகம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. நந்திக்கான மேடையில் கல்லை ஏற்றும் வன்னம்
சிறிய சாரம் அமைக்க பட்டிருந்தது. ஆங்கங்கு சிவாச்ரியார்கள் பூரண கும்பங்களுடன் தயார் நிலையில்
இருந்தனர் அரசரின் வருகைக்காக. கல்லை எதிர்கொண்டு வரவேற்கும் பொருட்டும் அதற்கு நடை பெற
இருக்கும் சிறப்பு ஆராதனைகளில் கலந்து கொள்ளுவதற்கும் அரசர் வர இருப்பதால் பாதுகாப்பும்
சற்று பல படுத்த பட்டிருந்தது. ஆனால் பணிகள் தொய்வில்லாமல் நடந்து கொண்டிருந்தன.
வேகமாக ஆலயத்தின் உள்ளே சென்ற மாறன் ஆலயத்தின் அனைத்து பகுதிகளிலும் சென்று சொக்கன்
இருக்கிறானா என்று பார்த்தான். வெகுவாக யானை படை வீரர்களின் எண்ணிக்கையும்
குறைந்து காணப்பட்டது.
“வரும் பொழுது கூட யானை படை வீரர்கள் எங்கோ சென்று கொண்டிருந்தனரே!! எங்கு சென்றார்கள்,?
அவர்களில் சொக்கனும் ஒருவனா? அப்படியானால் நான் எப்படி கவனிக்காமல் வந்தேன்.?”
என்று யோசித்து கொண்டே இருக்கும் பொழுது எதிரில் வந்த பணியாளர் ஒருவரை மறித்து
“அய்யா இங்கு பணிக்கு வந்த யானை படையை காணுமே எங்கே?” என்று விசாரித்தான்
“யானை படை போருக்கு போயிருக்கும்” என்று நக்கல் தொனிக்க கூறி விட்டு சென்று விட்டான் அவன். ஆனால் இதனை கேட்டவுடன் மாறனின் மனம் அடைந்த கவலை சொல்லி மாளாது.
“அப்படியானால் இனிமேல் சொக்கனை காண முடியாதா? அவனுடன் ஒட்டி உறவாடி உள்ளம் களிக்க வேண்டும் என்று நான் கண்ட கனவெல்லாம் பகற் கனவாய் போய்விட்டதா? “ என்று அவன் என்னும் பொழுது கண்ணீர் தாரை தரையாக ஓடி தரையை நனைத்தது.
பின் தலைமை சிற்பியின் அழைப்பால் அவரிட்ட வேறு பணிகளில் மனகவலையுடன் ஈடு பட்டான். பின்
கல்லுக்கு நடந்த பலத்த வரவேற்பிலும், அரசரின் வருகையிலும் கூட அவனது மனம் நாட்டம் கொள்ள
வில்லை.
ஒருவழியாக பொழுது சாய்ந்த பொழுது சொக்கனை இறுதியாக பார்த்த
இலுப்பை தோப்பிற்கு சென்று அங்கு தனிமையில் சொக்கனின்
சிரத்தை இல்லாமல் சோர்வுடன் குதிரையை செலுத்திய சொக்கனோ மாறனை கண்டதும்
ஒரு உந்து உந்த குதிரை மின்னலென பறந்து மாறன் அருகே வந்தது. குதிரயில் இருந்து இறங்கியவுடன்
நேருக்கு நேர் இருவரும் பார்த்து கொண்டனர். ஆனால் அங்கு பேச்சு எழ வில்லை. ஆயிரம் ஆயிரம்
உணர்சிகளை வெளிபடுத்தி அதில் ஆறுலட்சம்
கேள்விகளை மாறி மாறி கண்களாலேயே கேட்டு கொண்டனர் இருவரும். கண்ணீர்
வழிந்து காட்டை நனைத்தது. பின் உணர்ச்சி பெருக்கெடுத்து ஓடிவந்து அனைத்து கொணடனர். இந்த
அணைப்பில் காதல் தீ கொழுந்து விட்டு எறிய துவங்கியது. எறிந்த தீயில் ஏற்பட்ட வெப்பம் அவர்களின்
கட்டுகடங்காத காமத்தை தூண்டி விட, காதல்தீயும் காமத்தீயும் சேர்ந்து அந்த
காட்டை கொளுத்தி கொண்டிருந்தது. காமக்கடலில் மூழ்கி முத்தெடுத்து நள்ளிரவு வரை மூன்று நாள்
கதையையும் பேசிய பொழுது சொக்கன் தான் ஆசை காதலனுக்கு வங்கி வைத்திருந்த
பரிசை கொடுத்தான்.
இதே வேலையில் மருத்துவர் மாளிகையில் சொக்கனை எண்ணி உறங்காமல் கிடந்தால் யசோதை.
காதல் கொண்ட மனங்கள் என்றுமே எதிர் காலத்தை பற்றி எண்ணுவதில்லை. காலங்கள் மாறும்
பொழுது காட்சிகள் மாறும் என்பதையும் அது அறிந்திருப்பதில்லை.
விடிய போகும் அந்த நாளில் மாறனின் கண் முன்பே சொக்கன் மிகப்பெரிய ஆபத்தில் சிக்க போகிறான்
என்பதை அறியாமல் மாறனும், மாறன் தன்னிடம் ஒரு மிக பெரிய உண்மையை மறைத்திருக்கிறான்
அது தெரிய வரும்பொழுது காதல் கொண்ட சொக்கனின் மனம் சுக்கு நூறாக சிதறும்
என்பதை அறியாமல் சொக்கனும், சொக்கன் வேறொருவனுக்கு சொந்தமானவன் என்பதை அறியாமல்
காதல் கொண்டுள்ள யசோதைக்கு காலம் பல பரிசுகளை தர காத்திருக்கிறது என்பதை அறியாமலும்
யசோதையும் அந்த இரவுக்கு விடை கொடுத்தனர்.
அப்படி மாறன் மறைத்த உண்மை என்ன? சொக்கன் என்ன ஆபத்தில் சிக்க போகிறான்,
யசோதைக்கு காலம் கொடுக்க போகும் பரிசு என்ன? அறிந்த கொள்ள காத்திருங்கள் அடுத்த பகுதி வரை.
-ஒசைகேட்கும்
* கஜகர்ணம்- யானையை கட்டி போட்டிருக்கும் பொழுது அது நிலையாக நிற்காமல், கால்கள், துதிக்கை, தலை முதலானவற்றை அசைத்து கொண்டே இருக்கும். இதனைத்தான் கஜகர்ணம் என்பார்
* கற்றுளி- இரும்பை பழுக்க காய்ச்சி உடனடியாக எண்ணெயில் குளிர்விக்கும் பொழுது அதன் கடின தன்மை அதிகபடும். இவ்வகை இரும்பால் செய்த உளிகளை தான் கற்களை பொளிய பயன் படுத்தினர் அக்கால சிற்பிகள்.
பின்குறிப்பு: எண்ணெய் மற்றும் தீபந்தம் கொண்டு கல்லை இளக்கும் முறையை நான் முன்னெப்போதோ ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன். அது ஒரு வார இதழ். அதை ஆதாரமாக கொண்டுத்தான் இங்கு எழுதியுள்ளேன். மேலும் ஆதரங்கள் இருந்தால் குறிப்பிடலாம் மற்று கருத்து இருந்தாலும் குறிப்பிடலாம்.
//எண்ணெய் மற்றும் தீபந்தம் கொண்டு கல்லை இளக்கும் முறையை நான் முன்னெப்போதோ ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன். அது ஒரு வார இதழ். அதை ஆதாரமாக கொண்டுத்தான் இங்கு எழுதியுள்ளேன். மேலும் ஆதரங்கள் இருந்தால் குறிப்பிடலாம் மற்று கருத்து இருந்தாலும் குறிப்பிடலாம்.//
படிக்க படிக்க ஆச்சரியம்....பொதுவாக பெரிய கோயிலே நிறைய ரகசியங்கள் மறைந்த இடம் என்று எங்கள் classical dance madam சொல்லுவார்கள் அதில் இதுவும் ஒன்றோ என்று நினைக்கும் அளவு இருக்கிறது உங்கள் கற்பனை கதை...கடைசியில் வரும் விளக்கம் படிப்பவர்களுக்கு உங்கள் உழைப்பை உணர்த்தும்...Proud of u...
@rotheiss
பாவம் ராஜ்...இவ்வளவு பிரமாதமாக எழுதுறார் அவர்க்கு பொய் புண்ணு மண்டையான்னு...ஹா ஹா ஹா அதுவும் ஸ்டைலாக கொஞ்சம் ஓவர் ...உங்கள் அம்மா குட்டுன்னா எங்கள் வீட்டில் அம்மா,அக்காவிடம் கிள்ளு தமிழ் படிக்க...அந்த பயத்தில் எழுத்து விடாமல் மனப்பாடம் பண்ணி...ஆனால் எதற்கும் சரியான அர்த்தம் புரியாமல்...நான் வாசிக்கும்போது சரியாக இருக்கும் அவர்கள் வாசிக்கும்போது தப்பாக இருக்கும் அந்த ரகசியம் இப்போ வரை புரியல...
//மூன்று பக்கம் கழனிகளாலும் ஆறுகளாலும் சூழ பட்ட தஞ்சையில் அடி முதல் நுனிவரை உயர்ந்த ரக
செவ்வரியோடிய கருங்கற்கள் கொண்டு இப்படி ஒரு கோயிலை//
felt like seeing it on live..!
//இரண்டு ஆண்கள் கட்டி பிடித்து ஒழுக்கு ஏற்படுவதால் உண்டாகும் தீட்டும், மாடுகள் பூட்டிய வண்டியில்
உடலுறவு கொள்வதால் ஏற்படும் பாவமும், கட்டியஉடையுடன் நீரில் மூழ்கும் போது போய்விடும்//
i'd heard about this..! And still some lorry drivers afraid about .ving sex in their truck..!
//இந்த காதல்நோய் படுத்தும் பாடு இருக்கிறதே... எதிர்ப்பு வரும் போது கடுவாய் புலியைக்கூட
கடுகை போல என்ன வைக்கும்.பிரிவு வரும் பொழுது நடக்கும் தொலைவை கூட நாலாயிரம்
அடி போல எண்ணி தவிக்க வைக்கும்//
it's absolutely true..! And and you've a wonderfull talent in narrating a story..! Keep it up..! And sorry for the late..!
ஒருவழியாக முதல் பகுதியில் எவ்வித ரத்தமும், யுத்தமும் இல்லாமல் கதையை நகர்த்தி இருக்கீங்க..... ரொம்ப அற்புதம்.... ஒரு உண்மை சம்பவத்தில் பின்னணியில், நம் கற்பனையை திணிக்கும்போது உண்மைக்கு பங்கம் வராமல் எழுதுவது ரொம்ப சிக்கலான விஷயம்... அந்த சிக்கலை ரொம்ப எளிதா கையாண்டு விட்டீர்கள்.... சிறப்பு....
எல்லோரும் ப்ளஸ்'களை அதிகம் சொல்வாங்க என்பதால் ஒருசில மைனஸ் களை நான் இங்க சொல்றேன்....
கதைக்கும் காட்சிக்கும் தேவையான சில வரலாற்று விஷயங்களை நீங்க முன்வைக்கும்போது, உங்கள் பணிகள், முயற்சிகள் அபாரம்.... ஆனால், அந்த விஷயங்களில், நீங்க சொல்ல வரும் காதல் விவரிக்கப்படவில்லையோ'னு தோணுது..... அவங்க காதலுக்கு இன்னும் உயிர் கொடுத்திருக்கலாமோன்னு தோணுது....
மற்றபடி கதையும், களமும், கருவும், அதை நகர்த்திய விதமும் என்று எல்லாமும் கலக்கல்....
அடுத்த பாகத்தில் நான் குறையே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு காட்சிகளை நகர்த்துவீங்கன்னு நான் நம்புறேன்..... வாழ்த்துகள்....
நல்லா இருக்கு ராஜ்குட்டி.... சம்பவங்கள் கண்முன் நடப்பவை போல் உள்ளன... ராஜராஜசோழனுக்கு அணுக்கி ஒருவர் உண்டென்று பாலகுமாரன் நாவல்களில் படித்திருக்கிறேன்... அவர் இதிலெல்லாம் கலந்து கொள்ள மாட்டாரா?
யானையின் மதனனீருக்கு வண்டுகள் சுற்றி வருவதாக... தமிழ் செய்யுள்களில் படித்ததாக ஞாபகம்... அந்த மதனனீரும்.. இந்த மத நீரும் ஒன்றா?
(இந்த மதனனீர வச்சி பசங்க பெரிய ஆராய்ச்சியே நடத்துவாங்க.. :D)
Good job buddy... very very informative... Muacks!!!!!
ஒரு வார தாமதத்தால் என்ன ஆகிவிடும் என்று கேட்டவன், அந்தத் தாமதம் அவன் உயிரையே வாங்கிவிடுமென்று நினைத்திருக்க மாட்டான். கதை குதிரையில் ஏறி வேகமெடுத்துவிட்டது. இன்னும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைய இருக்கும் என்று நினைக்கிறேன்.
கதையின் ஊடே பல தகவல்களை நெய்திருக்கிறீர்கள். கதைக்காக நிறைய ஆராய்ச்சி செய்திருப்பது தெரிகிறது.
அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்...
கதைக்காக உங்களின் உழைப்பு பிரமிக்க வைக்கின்றன....வானத்தில் வெள்ளிதட்டு ஒன்றிலிருந்து கற்கண்டு சிதறி கிடப்பதை போன்ற .... ஆரம்பத்தில் மகிழ வைத்து முடிவில் பதைபதைப்புடன் படிக்க வைத்துவிட்டிர்கள் ...வழக்கம் போல் கடைசி தகவல்கள் அருமை....மாறனோடு மேலிருந்தும் சொக்கனோடு கிழேயும் ஒரே நிகழ்வுகளை சொல்வது நேரில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது...keep it up
அற்புதமான நடை.. அருமையான தமிழ். குழப்பம் இல்லாத கதா பாத்திரப் படைப்பு.
செந்தமிழ் அருவியில் முங்கிக் குளித்தது போல ஒரு உணர்வு.
"வானத்தில் வெள்ளிதட்டு ஒன்றிலிருந்து கற்கண்டு சிதறி கிடப்பதை போன்ற பிம்பத்தை வெண்ணிலவும் விண்மீன்களும் ஏற்படுத்தி கொண்டிருக்கும் அந்த இரவு வேலையில், மாறனை கட்டி தழுவி இன்பம் கண்டதால் அவனது உடல் மணம் தன் உடலிலும், உதட்டின் மணம் தன் உதட்டிலும் வீசுவதை உணர்ந்து .உள்ளுக்குள் சிலிர்த்த படியே பாசறையை அடைந்தான் சொக்கன்." // -
எத்தனை முறை படித்தாலும் அப்போதுதான் புதிதாகப் படிப்பதுபோல என்னை சிலிர்க்கவைத்த வைர வரிகள் இவை.
மதயானை மீது இன்னொரு மதயானை போல வீற்றிருந்த சொக்கனை வருணித்த விதமும் அருமை.
நிறைய தேடுதல், உங்கள் வரிகளில் தெரிகிறது...... அதற்காகவே சிறப்பான பாராட்டுக்கள்.....
மூன்று தேவியரின் வருகையை அழகாக காட்சி படுத்தி இருக்கிறீர்.... எதிர்பாராத விதமாக மதம் பிடித்த நிகழ்வு அதிர்ச்சியான ஒன்று.....
போனவன் மீண்டு வருவானா? தெரியவில்லை.....
மாறனை போல காத்திருக்க மட்டும்தான் முடியும் இப்போதைக்கு.....
தீபசந்திரனை துதிக்கையால் வளைத்து பிடித்து விசிறி அடித்தார் போல இனி யானையால் செய்ய
முடியாது என்று உறுதி படுத்தி கொண்ட
சொக்கன் கையிலிருந்த தனுசை கண்களில் ஒற்றி அதற்கு மரியாதையை செய்து விட்டு
அதனையும் அம்பூரா துளியையும் கழற்றி தரையில் எறிந்தான்
பின் யானைக்கு வெகு சமீபமாக சென்று அதன் வேகத்திற்கு ஈடு கொடுத்தபடியே
அதனை சுற்றி சுற்றி வந்தான். யானையும் நின்ற இடத்திலேயே சுழன்ற படி அவனை பிடிக்க முயன்றது.
ஒரு கட்டத்தில் சுழற்சி காரணமாக யானைக்கு அழற்சி ஏற்பட துவங்கவே இதுதான்
சமயம் என்று, அது சுதாரிப்பதற்குள் மின்னலென குதிரையில் இருந்து தாவி யானையின் மத்தகத்தில் கால்
வைத்து கழுத்தில் கட்டபட்டிருந்த
கயிறை பிடித்து அதன் பிடரியில் ஏறி அமர்ந்தான் சொக்கன்.
யானை ஒரு கனம் திகைத்தாலும் அங்கு சுற்றி கொண்டிருந்த குதிரையை துத்திக்கையால்
ஒரு தட்டு தட்டவே அது தூரத்தில் தூக்கி எறிய பட்டு கனைத்த படியே எழுந்தோடி சென்று மறைந்தது.
அதற்குள் சொக்கன் தன் மேல் அமர்ந்திருக்கிறான் என்பதை உணர்ந்த யானை துதிக்கையை
தூக்கி அவனை பிடிக்க முயற்சித்தது ஆனால் அம்பு கொடுத்த வலியால்
அதனால் சொக்கனை பிடிக்க முடிய வில்லை. இதுதான் தக்க சமயம் என்று உணர்ந்த சொக்கன்
தன் இடுப்பில் இருந்த தோல்பையில் கை விட்டு அதிலிருந்த குப்பிகளில் ஒன்றை எடுத்தான்
ஆனால் அது இடுகளி* உண்டாக்கும் மருந்து என்பதால் பின் யானையின் மதத்தை
கட்டுபடுத்தும் மருந்தை எடுத்தான். இந்த இடத்தில் மேற்சொன்ன மருந்துகளை பற்றி
விளக்க வேண்டியது காதாசிரியனாக நமது கடமை ஆகிறது.
போர்களத்தில் எதிரிகள் எய்யும்அம்பு முதலான ஆயுதங்கள் கொடுக்கும் வேதனையை
பொருட்படுத்தாமல் களிறுகள் முன்னேற “குளுகு” எனும் தழையால் செயற்கையாக
மதத்தை (இடுகளி) உண்டாக்கும் மருந்துதான் முதலில் சொக்கன் எடுத்த மருந்து.
இடுகளி ஏற்படுத்த பட்ட யானைகளின் மதத்தையும், இணை சேர்க்கை திமிரால் உண்டாகும்
இயற்கை மதத்தையும் கட்டுபடுத்த “வாழை குருத்து” கொண்டு செய்யபட்ட மருந்துதான்
சொக்கன் எடுத்த இரண்டாவது மருந்து.
சரி இதனை கொண்டு சொக்கன் என்ன செய்கிறான்
என்று பார்ப்போம் வாருங்கள்.
அந்த மதம் தெளிய வைக்கும் மருந்தை இடுப்பில் இருந்த குறுவாளில் ஊற்றி தோய்த்து
யானையின் தலை பகுதியில் உள்ள பள்ளமான பகுதியில் ஓங்கி செருகினான் சொக்கன்.
ஒருமுறையோடு நிறுத்தாமல் மேலும் மேலும் அந்த மருந்தை உட்செலுத்தும் பொழுது ஏற்பட்ட
காயம் கொடுத்த வேதனையையும், அதில் இருந்து பெருக்கெடுத்த குருதியாலும், ஏற்கனவே
துதிக்கையில் தைத்த அம்பு கொடுத்த வேதனையாலும் துடித்து கொண்டே தன் வேகத்தை
குறைத்தது யானை. பின் மேலிருக்கும் சொக்கனை மறந்து விட்டு மெல்ல தள்ளாடிய படியே
நடந்து கரிய குன்று ஒன்று சூறாவளியால் பெயர்ந்து விழுந்தது போல தரையில் மயக்கமுற்று சாய்ந்தது
அந்த யானை. அது சாய்வதற்குள் சொக்கன் அதன் மேலிருந்து குதித்து
வீசியெறிந்த தனுசை போய் எடுத்து கொண்டான்.
இந்த காட்சியை வாய்மூடாமல் பார்த்த தஞ்சை மக்களும், கண்மூடாமல் பார்த்த
மாறனும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
தன் காதலனின் வீரத்தையும் ஆற்றலையும் குறைத்து மதிப்பிட்ட குற்ற உணர்வில் தவித்தாலும்,
இத்தகைய வீரமகன் தனக்கே உரியவன், அவனது நெஞ்சம்
தன் தலை சாய்க்கும் மஞ்சம், அவனது உள்ளம் கொண்டிருக்கும் வெள்ளம் தன் மீதுள்ள
காதல் பிரவாகம், அவனது வலிமை பொருந்தியதோள்கள் தான் தலை சாய்க்கும் தலையனை,
என்று எண்ணிய பொழுது மாறனுக்கு காதல் உணர்ச்சி பிடுங்கி தின்றது.
இப்பொழுதே ஓடி சென்று சொக்கனை அனைத்து கொள்ள வேண்டும் அவனது
வீரமிக்க கழல்களுக்கும் தீரமிக்க கைகளுக்கும், தர்மசாஸ்தாவை போன்ற அழகிய முகத்துக்கும்,
முருகனின் கரவேல் போன்ற கண்களுக்கும் தன் உதடுகளால் ஒற்றடம் கொடுக்க வேண்டும்
என்று எண்ணிய படி கோபுரத்தில் இருந்து இறங்க துவங்கினான்
அதற்குள் சொக்கனின் சக வீரர்களும் தஞ்சைவாழ் மக்களும் ஓடி சென்று ஆனையை
கொல்லாமல் வென்ற சொக்கனை தங்கள் தோள் மீது சுமந்து கொண்டு அரசிகள் எழுதருளி இருக்கும் மண்டபத்திற்கு கொண்டு வந்து கொண்டிருந்தனர். அதற்குள் மற்றைய வீரர்கள் கனமான
இரும்பு சங்கிலிகள் கொண்டு மயக்க முற்ற யானையை பிணைத்து கொண்டிருந்தனர்,
மேலும் கால்நடை மருத்துவரான மதுசூதனருக்கு தகவல்தெரிவிக்க பட்டிருந்ததால் அவரும்
யானைக்கு மருத்துவம் பார்க்க வந்து விட்டிருந்தார் அவருடன் அரசிகளை காணும் ஆவலுடன்
வந்திருந்த யசோதையும் கூட்டத்தோடு கூட்டமாக கலந்த படி சொக்கனை சுமந்து வரும்
கூட்டத்திற்காக ஆவலுடன் காத்து கொண்டிருந்தாள்.
-- Edited by rajkutty kathalan on Saturday 17th of August 2013 04:28:25 PM