Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உளியின் ஓசை (சரித்திர குறுநாவல்)


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
RE: உளியின் ஓசை (சரித்திர குறுநாவல்)
Permalink   
 


1524820462_934821141b_z.jpg

தக்ஷிணமேரு பத்தின விஷயம் கேள்விப்படாதது... அதனால தான் தேடிப்பிடிச்சி ஒரு படத்தோட கமெண்ட்ட ஆரம்பிக்கறேன்.. (படத்த பாத்தாலே புல்லரிக்குதுல்ல.. தருமமிகு தமிழ்நாட்டில் தமிழனாவே பொறந்தது.. பெருமையா இருக்கு...!)

யானையை போக்குக் காட்டி.. அலைகழித்து.. பின் அதன் மதத்தை அடக்கிய சொக்கனின்(ராஜ்குட்டியின்) மதிநுட்பம்... "அபாரம் பரிமளா" ரகம்!

குழவிகளுக்கு கூட இன்பம் நல்கும் குறும்பு கார யானை போலல்லாமல் இதுக்கும் ஒரு விளக்கத்த போட்டிருக்கலாம்..!

மாறனின் பரிதவிப்பு.. பெருமிதம்.. காதலுணர்வு... எல்லாமே நேர்த்தியா இருந்துச்சு.. 

நல்ல வேளையா யானைய கொன்னு போடல... அதுக்கு ஸ்பெஷல் தேங்ஸ்..!

"குளுகு" என்னன்னு பாக்கலாம்னு நெட்ல தேடினா.. "குளுகு"ளு ஏசி பத்தின விவரங்கள் வருது..no வாழ்க (இணையத்) தமிழ்!!

(12வது உலகத்தமிழ் இணைய மாநாடு நடக்கற நேரத்துல.. இதப்பத்தி சொல்றது அவசியம்னு தோணுது..

 ////அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கான்பூர் ஐ.ஐ.டி., தலைவரும், "இன்பிட்' நிறுவனத்தின், கவுரவ ஆலோசகருமான, பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணன் பேசியதாவது:இந்திய மொழிகளிலேயே, தமிழ் மொழிக்குத் தான், உலக அளவில், இத்தனை மாநாடுகள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கென நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டு கட்டுரை புத்தகத்தில், வெளியாகி உள்ள, 100 ஆராய்ச்சிக் கட்டுரைகளும், தரமானவை.தமிழில், "மெஷின் டிரான்சிலேஷன்' செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அப்போது தான், "விக்கி பீடியா' போன்ற, தகவல் களஞ்சியங்களில் உள்ள, பல லட்சக்கணக்கான ஆங்கிலம் மற்றும் மற்ற மொழிகளில் உள்ள தகவல்கள், தமிழில் வெளிவர இயலும். அதற்கு, குறைந்தபட்சம், இரண்டு லட்சம் வார்த்தைகளாவது, தமிழில் சேர்க்கப்பட வேண்டும். அதற்கான பணியை, இளைஞர்கள் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.//// நன்றி: தினமலர்)

Coming back to the point.. குளுகு, வாழைக்குருத்து பற்றிய இலக்கியச் சான்றுகள்.. Superb! Hats off!! :)

ஆனையடக்கி பட்டத்தோடு.. வெயிட்டா கிஃப்ட் ஐட்டமெல்லாம் வேற தேத்திகிட்ட சொக்கன்.. தீபச்சந்திரனின் ஈமக்கிரியைகளக் கூட புறக்கணிச்சிட்டு.. இலுப்பைத் தோப்புக்கு ஓடுனது.. confuse.. பாவம்... புள்ளைக்கு அவ்வளவு வேட்கையா... ??

சைக்கிள் கேப்புல.. யசோதா வேற.. சோலோவா சிந்து பாடுது... பாக்கலாம்.. யாருக்குக் கொடுத்து வச்சிருக்குன்னு..!

//நாம் இங்கு கடமை பட்டுள்ளோம்.// //இந்த இடத்தில் மேற்சொன்ன மருந்துகளை பற்றி விளக்க வேண்டியது காதாசிரியனாக நமது கடமை ஆகிறது.//

வெளியில தெரியறது ஒரு உருவம்... உள்ள இருக்கறது.. பல ரூபங்கள் மாதிரியான விஷயமா இது.. biggrin

Good job Rajkutty.. Keep rocking!!!!! 



__________________


புதியவர்

Status: Offline
Posts: 41
Date:
Permalink   
 

romba suspense vaikuringa irunthalum nalla kadhai


__________________


எழுத்தரசர்

Status: Offline
Posts: 196
Date:
Permalink   
 

அருமை.. அற்புதம்.. அபாரம். ம்ம்ம்.. போதாது.. இந்த வார்த்தைகள் போதவே போதாது.. உங்கள் திறமையைப் பாராட்ட.. இருங்கள்.. காதலா... தமிழ் அகராதியை தேடிப்பார்த்து உங்களைப் பாராட்ட சிறப்பான, மிகச் சிறப்பான, மிகமிகச் சிறப்பான வார்த்தைகள் இருக்கிறதா என்று நானும் தேடித் தேடித் பார்த்துவிட்டேன். கிடைக்கவே இல்லை.. நான் தோற்று விட்டேன். உங்களைப் பாராட்ட சரியான வார்த்தைகள் கிடைக்காமல் தோற்றுத்தான் போய்விட்டேன்.
உங்கள் திறமையும், கடின உழைப்பும் என்னை வியக்க வைக்கின்றன.
உங்கள் ஆளுமைத்திறன் கண்டு (அதாவது தமிழை எடுத்தாலும் திறனைச் சொல்கிறேன்.) பிரமிக்கிறேன்.
சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் நண்பா.

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

// மெல்லிய பாதத்தில் கருவேல முள் குத்தினாலே வேதனையால் யானைகள் துடிக்கும் என்ற நிலையில்,

நாற்பதாயிரம் வகை தசை பிரிவால் வடிமைந்த துதிக்கையில் //

உங்கள் ஆராய்ச்சி, மெனக்கெடல், இந்த வகை கதைகளோடு நிற்காமல், நல்ல பல காவியங்கள் படைக்க வேண்டுமென்று ஆசைபடுகின்றேன்.

//காதல் கொண்ட பறவைகள் காம தேவனின் கூட்டுக்குள் அடைக்கலம் புக துவங்கிய

இதே வேலையில்//

உங்கள் கற்பனைத் திறன் வியக்க வைக்கிறது.

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

யானையை அடக்குவதின் விளக்கம் அருமை....
ஏனோ குந்தவை பிராட்டியாரை பார்க்கும்போதல்லாம் எனக்குள்ளும் ஒரு சிலிர்ப்பு உண்டாகுது..... அம்மையாரிடம் நல்ல பட்டத்தையும் வாங்கிவிட்டான் சொக்கன்.... எப்போ விஷயம் தெரிந்து, சிரச்சேதம் செய்யப்பட போகிறானோ?னு பயமா இருக்கு....
ஒரு ஐடியா வேணும்னா சொல்றேன், அப்படியே கப்பல்ல ஏத்திவிட்டு "கனடா" அனுப்பிடுங்க ரெண்டுபேரையும்......


__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

@Rotheis
//தக்ஷிணமேரு பத்தின விஷயம் கேள்விப்படாதது// ????

@ராஜ்குட்டி
இப்படி தகவல் எல்லாம் எங்கப்பா பிடிக்கறீங்க? ஒரு மனிதன் செய்த தவறால அந்த யானை கொல்லப்பட இருந்தது. காப்பாத்திட்டீங்க.. யானையோட மதத்த அடக்கியாச்சு.. இன்னும் மனிதர்களுக்கு (மனுஷிகளும் சேர்த்து தான்) பிடித்திருக்கும் மதம் என்ன என்ன பண்ணப் போகுதோ.. அதுக்கும் மருந்து இருந்தா சரி..

@msvijay
//ஏனோ குந்தவை பிராட்டியாரை பார்க்கும்போதல்லாம் எனக்குள்ளும் ஒரு சிலிர்ப்பு உண்டாகுது//
எதுக்கும் நீங்க ஒரு "நல்ல" டாக்டரப் பாக்குறது நல்லது.

__________________

gay-logo.jpg

 



இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

முதற்கண் அனைவருக்கும் நன்றிகள்

@ஷியாம்,: நன்றிப்பா....

@பிரிட்ஜெர், திருபூர்பாபு: பாராட்டு மழயில் குளிர் தங்க முடியவில்லை நன்றிகள் பல தொடரட்டும் வாழ்த்துக்கள்

@குருஜி: அந்த கப்பலை ஓட்ட ஏற்கனவே நிறைய  பேரை அனுப்பி வைத்த நீங்கள் வந்தால் நன்றாக இருக்கும். நன்றி தல

@அர்விந்த்: தகவல்கள்ளம் புத்தகம், இனைய உதவியுடன் தான் பெறுகிறேன். நன்றிகள்



__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

உளியின் ஓசை தொடர்ச்சி.....

பொழுது புலர்ந்து ஒரு நாழிகை கடந்திருந்தாலும் ஆதவன் எழும்பியதை கூட கவனிக்காமல் சந்திரனும்போட்டிபோட்டு கொண்டு தஞ்சையின்அழகை ரசித்து கொண்டிருந்தான்.காலை வேளையில் பாட சாலைகளுக்கு

புறப்படும் முன் தெருவில் விளையடி கொண்டிருந்த சிறுவர்கள் கூட

“டேய்அங்கே பாருங்களடா நிலாவும் சூரியனும் ஒன்னாவே இருக்கு” என்று வானத்தை பார்த்து பேசிகொண்டிருந்தனர்.

கிருஷ்ணபட்சம்* (தேய்பிறை நாட்கள்)என்பதால் நிலவு மறைய சிறிது காலம் பிடிக்கும் அந்த இனிய காலை பொழுதில் வானை முட்டி கொண்டு எழும்பி இருக்கும் பெரிய கோயிலின் முதல் வாயிலில் கரும சிரத்தயாக மாறன்

நேற்று பாதியில் விட்டு சென்ற சிற்பத்தை பொளிந்து கொண்டிருந்தான். “நேற்று இட்ட சிறிய வேலையை

இன்னுமா முடிக்க வில்லை” என்ற தலைமை சிற்பியின் கடிதலுக்கு இடம் கொடுக்க கூடாது என்ற எண்ணத்தில்

காலையிலேயே வந்து மாறன் பணியை தொடங்கியிருந்தாலும் அதற்கு வேறு சில காரணங்களும் இருக்கும் என்பது போலவும் தெரிகிறது.’

கூர்ந்த சிந்தனையுடன் கல்லை கலை ஆக்கி கொண்டிருக்கும் மாறனின் கவனத்தை

“ஜல் ஜல் ஜல்” என்ற சலங்கை ஓசையும், மாடுகளை விரட்டும் வண்டிக்காரனின்

சத்தமும் சிதறடிக்கவே என்னவென்று குனிந்து பார்த்தான்.. நான்கு ஐந்து மாட்டு வண்டிகள்

துணியை கொண்டு வாய் கட்டபட்ட பானைகளை சுமந்து கொண்டும், மூட்டை மூட்டையாக

எதையோ .ஏற்றி கொண்டும் ஆலயத்திற்குள் நுழைந்தன.

“பணியாளர்கள் அனைவரும் வருவதற்கு இன்னும் ஒரு நாழிகை நேரம் இருக்கிறது என்றாலும்

இது என்ன புதியதாக மாட்டு வண்டிகள் வருகின்றன” என்று யோசித்த வாறே அதனை பற்றிய

கவனத்தை விடுத்து தன் வேலையில் ஈடுபடலானான் மாறன்.

“பார்த்தடா கீழே போட்டு விடாதீர்கள்!!! எல்லாம் விலைமதிப்பு மிக்கவை!! என்று ஒருவன் அதட்டி வேலை

வாங்கி கொண்டிருக்க சில பணியாளர்கள் அந்த பானைகளை கவனமாக இறக்கி வைத்து கொண்டிருந்தனர்.

“நினைத்தேன் ஒரு சிறிய வேலையை செய்ய கூட இப்படி தடுமாருகிறீர்களே மடையர்களே!!!” என்று அவன்

யாரையோ வசை பாடும் சத்தம் கேட்டு மாறன் அங்கு நோக்கிய பொழுது இறக்க பட்ட மூட்டைகளில் ஒன்று

கீழே விழுந்து தெறித்ததில் பை கிழிந்து அதிலிருந்து வெண்மை நிற பொடி போல எதோ கொட்டியிருந்தது. சற்று

யோசித்த மாறன் பிறகு அந்த பானைகளில் கட்ட  பட்டிருந்த துணிகளை பார்த்தான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு

வண்ணத்தில் இருந்தன. அவை  சற்றே ஈரமாகவும் இருந்தது.

“ஒஹ்ஹ்ஹ ஓவியங்கள் தீட்டுவதற்கான தளவாடங்களா?” என்று தனக்குள் நினைத்து கொண்டே வேலையில் கவனம் செலுத்தினான்.

 

சிறிது நேரத்தில் கொண்டு வந்த பொருட்களை இறக்கி விட்டு அந்த வண்டி புறப்பட்டு விட்டது. இதமாக இருந்த

கதிரவனின் கிரணங்கள் மெல்ல சூடாக உரைக்க துவங்கும் நேரத்தில் பணியாளர்கள் அனைவரும் சாரை சாரையாக்

வர துவங்கி இருந்தனர். அவர்களில் ஒருவனாக சொக்கநாதனும் வந்து கொண்டிருந்தான். நேற்று நடந்த சம்பவங்களால்

சொக்கநாதன் நகர் முழுவதும் பிராபல்யமாகி இருந்தான். ஆங்காங்கு கூடி இருக்கும் மக்கள் அவனை நோக்கி புன்னகைத்த

 

 படியும், சிறுவர்களும் இளஞர்களும் கைகளை உயர்த்தி ஆங்கங்கு ஆரவாரம் செய்து கொண்டும் இருந்தனர்.

இவர்களை கடந்து ஆலயத்தின் உள்ளே சொக்கன் நுழைந்த பொழுதுதான் மாறன் அவனை கவனித்தான். ஆனால்

சிறிய புன்முறுவலுடன், அவனை கூப்பிட்டு தன் இருப்பை உணர்த்தாமல் வேலையில் லயிக்கலானான் மாறன்.

 

பேராலய பணிகள் சுமூகமாக துவங்கி விட்ட படியால் அனைவரும் வேலையில் கவனமாக இருந்தனர்.

சிலர் பாரங்களை ஏற்றுவது, சிலர் சங்கிலிகளை இழுப்பது, சிலர் ஆங்கங்கு இருக்கும் குடிநீர் தொட்டிகளில் நீரை நிரப்புவது,

கல்தச்சர்கள் பொளிவது, சில சிற்பிகள் ஏற்கனவே செதுக்கிய சிற்பங்களில் இறுதி வேலைகளை பார்ப்பது, யானை பாகர்கள்

அவர்களுக்கு உதவுவது, அந்த யானைகள் போடும் இலண்டங்களை (சானங்களை) உடனே சிலர் அள்ளுவது பின் நீரிட்டு

துடைப்பது என அந்த வளாகமே மும்முரமாக் இருந்தது.

மாறன் அமர்ந்திருப்பது முதற் வாயில். அங்கிருந்து பார்க்கும் பொழுது வராகி அம்மன் சன்னதி அமைந்திருக்கும்

இடமும் அதற்கு பின்னல் இருக்கும் பகுதிகளும் தெளிவாக் தெரிந்தன. கொஞ்சம் இந்த பக்கம் எட்டி பார்த்தால்

தற்காலத்தில்  பெரியநாயகி அம்மன் சன்னதி இருக்கும் இடம் தெரிந்தது. ஏன் அப்பொழுது இல்லையா? என்று

நினைக்க வேண்டாம் சைவம், வைணவம், சாக்தம், காந்தாரம்.கானபத்தியம், கௌமாரம் என்ற அறுவகை

சமயங்களில் சைவ சமயத்தை பின்பற்றிய சோழர்கள் “ஈசனே முழுமுதற் கடவுள், அவனுடைய “சக்தி அவனுள்ளேயே

ஒடுங்கி இருக்கிறது. எனவே காமகோட்டம் (அம்மன் சன்னதி) தேவை இல்லை என்று எண்ணியதாலும்,

பெண்மையை பறை சாற்றும் சாக்தத்தின் கடவுளான அம்பிகைக்கு தனி சன்னதி எழுப்ப வேண்டாம் என்ற

எண்ணத்திலும் அம்மன் சன்னதி அமைக்காமல் விட்டிருந்ததால் அக்காலத்தில் அது வெற்றிடமாகத்தான் இருந்தது.

இப்பொழுது அனுக்ரக வீசனத்தில்* இருக்கும் பிரஹன்நாயகி அம்மன் ஆலயம் பிற்காலத்தில் பாண்டியர்களின்

ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டது. ஆனால் இப்படி எண்ணிய அக்கால சோழர்கள் ஆலய வளாகத்தில் வராகிக்கு சன்னதி எழுப்பி இருப்பது அவள் மீது இருக்கும் அளவு கடந்த பக்தியையும் காட்டுகிறது.* சரி கதைக்கு வருவோம்

அம்மன் சன்னதி அமைய உள்ள இடத்தில்தான் ஓவியங்களுக்கான தளவாடங்கள் இறக்க பட்டுள்ளன.

அந்த இடத்தில் பணியாளர்கள் மூட்டைகளில் இருந்த சுண்ணாம்பை கொட்டி அதில் வேறு சில பொருட்களை

கலந்து நீரில் குழைத்து கொண்டிருந்தனர். மேலும் சில ஆண்கள் துணியில் தீட்ட பட்ட வண்ண ஓவியங்களை

விரித்து வைத்து அதை பற்றி தீர்க்கமாக விவாதித்து கொண்டிருந்தனர். நாம் இங்கிருந்து பார்ப்பதால் அதில்

என்ன ஓவியம் இருக்கிறது என்று புலப்படவில்லை பல வண்ணங்களில் தெரிகிறது அவ்வளவுதான். இதற்கிடையில்

பணியில் ஈடு பட்டிருக்கும் சொக்கன் இதோடு நான்கு ஐந்து முறை கண்ணில் பட்டு விட்டான் மாறனுக்கு.

வேலை நேரத்தில் அங்கும் இங்கும் அவன் அலைந்து கொண்டிருப்பது தன்னை தேடித்தான் என்பது அவனுக்கு புரியாமலும் இல்லை.

“நேற்றுதான் இங்கு நம்மை பார்த்தான் அதற்குள் நாம் இங்குதான் இருப்போம் என்பதை மறந்து விட்டு

தேடுகிறான் திருடன் என்று தனக்குள் எண்ணியபடி மெலிதாக சிரித்து கொண்டு வேலையில் ஈடுபடலானான்.

சிறிது நேரத்தில் மோர்கார பெண்மணிகள் வரத்துவங்கி இருந்தனர்.

“பணியாளர்கள் அனைவரும் வந்து தகை ஆற்றிகொள்ளுங்கள் என்று யாரோ கூவும் சத்தம் கேட்டு

அவரவர் பணிகளை விட்டு விட்டு இறங்கி போய் கொண்டிருந்தனர். நேற்று மதியத்திலிருந்து இடைவிடாது

பொளிந்ததில் எண்ணத்தில் இருந்த வடிவம் உளியின் வழியே இறங்கி கல்லில் நிலை கொண்டு விட்டதில் மாறனுக்கு

மனம் ஆனந்த பட்டது. உளியை கீழே வைத்து விட்டு ஒருமுறை தொட்டு தடவி பார்த்து அகமகிழ்ந்தவனாக கீழே

இறங்கி சொக்கனை தேடி சென்றான்.



__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

ஆங்காங்கு பணியாளர்கள் மோர் பருகி கொண்டிருந்தனர். மோர்கார பெண்கள் இடுப்பில் இருக்கும் தவளையிலிருந்து

கலயத்தில் மொண்டு வழங்கி கொண்டிருந்தனர். தென்முக கடவுள் சன்னதி அருகே சொக்கன் யானையின் மேலிருந்து

கீழே இறங்கி நின்று கொண்டிருந்தான். அவனருகே ஒரு மோர்கார பெண்மணியும் நின்று கொண்டிருந்தாள் அவள்

சொக்கனுடன் எதையோ தீவிரமாக் பேசிகொண்டிருகிறாள் என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது. சொக்கன் இவனை

பார்த்து விட்டான் ஆனால் முகத்தில் மலர்ச்சி இல்லை மாறாக குழப்ப ரேகை படிந்துள்ளது. “என்னவாக இருக்கும்?

என்று சிந்தித்த படியே நெருங்கி சென்று கொண்டிருந்தான். அந்த பெண் யாராக இருக்கும் என்று வாசகர்களுக்கு

சொல்ல தேவை இல்லை, வாருங்கள் மாறனுக்கு முன்பே அங்கு என்ன நடக்கிறது என்று நாம் பார்த்து விடுவோம்.

 

ஆலய வளாகத்திற்குள் வந்ததிலிருந்தே இந்த மாறன் எங்கு போனான் என்று தான் தேடிகொண்டிருந்தான் சொக்கன்.

ஆங்காங்கு ஒரு சில பணிகளை செய்தாலும் அவனை யாரும் அதை செய்யுங்கள் இதை செய்யுங்கள் என்று

கோர வில்லை. நேற்று அரசியற் கையால் பரிசு பெற்றதிலிருந்து அவனது மரியாதையை அங்கு பெருகி இருந்தது.

அதனால் மாறனை தேடுவதில் அவனுக்கு சிரமம் இல்லாமல் போயிற்று. நான்கு முறை ஆலயத்தை சுற்றிய பின்தான்

அவன் முதற்கோபுரத்தில் நேற்று பொளிந்தது நினைவுக்கு வரவே அவனை நோக்கி வாயிலுக்கு செல்ல எத்தனித்த

பொழுது மோர்கார பெண்கள் வந்திருந்தனர் “சரி பருகி விட்டு போவோமே என்று அங்கு நிற்கும் ஒரு பெண்ணிடம்

போக எத்தனித்தவனை யசோதை ஓடி வந்து மறைத்து ஒரு கலயத்தில் மோரை மொண்டு கொடுத்தாள். அதனை சிரித்த

படி வாங்கி பருகி கொண்டே

 

“தாங்கள் மருத்துவரின் மகள் தானே!!! ஏன் இங்கு மோர் விற்க வந்துள்ளீர்கள். அன்றைக்கு கூட

என்னை தெரிய வில்லையா என்று கேட்டீர்களே நினைவிருக்கிறதா?

என்று கேட்டு வேலியில் போகிற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டு கொண்டான் சொக்கன்.

“அப்பாடா இப்பொழுதாவது கேட்டீர்களே !! என் முகம் கூட உங்களுக்கு நினைவில் இருக்கிறதா?

இத்துணை நாட்களாக நான் தங்களையே சுற்றி சுற்றி வருகிறேன் அதுகூட உங்களுக்கு தெரிய வில்லையா?

ஒருவகையான ஆனந்தமும், படபடப்பும் கலந்த குரலில் பேசினாள் யசோதை.

“ஆங்.. என்னது? என்னை ஏன் தாங்கள் பின் தொடர வேண்டும் ? உண்மையாகவே குழப்பத்துடன் கேட்டான் சொக்கன்.

தன்னை அவனும் காதலிக்கிறான் அதனை சரியான நேரத்தில் வெளிபடுத்துவான் என்று கனவு கண்டு கொண்டிருந்த அந்த

பேதை பெண்ணிற்கு சொக்கனின் இந்த அதிர்ச்சி கலந்த விசாரணை மனதில் நெருஞ்சி முள்ளாய் தைத்தது. கண் கலங்க பேசத்துவங்கினாள்.

“என்ன வீரரே இப்படி கூறுகிறீர்கள். உண்மையில் நான் தங்களை பின் தொடர்வதையும், தங்கள் மீது கொண்டுள்ள

விருப்பத்தையும் அறியாமல்தான் என்னை பார்த்து கொண்டும், நான் இருக்கும் இடத்தை சுற்றி சுற்றி வந்தும் தேடினீர்களா?

“நீ என்ன சொல்கிறாய் என்று எனக்கு புரிய வில்லை பெண்ணே!!! நான் எப்பொழுது உன்னை தேடினேன் என்ன உளறுகிறாய்?,

உன்னை யானைக்கு மருத்துவம் பார்க்கும் பொழுது பார்த்தேன் அதன் பின் இன்றுதான் பார்கிறேன்

என்று ஒரேடியாக சொல்லிமுடித்தான் சொக்கன். அவனது குரலில் கொஞ்சம் கோவமும் தூக்கலாக இருந்தது.

 

கண்களில் இபோழுது நீர் வழிய துவங்கி விட்டது யசோதைக்கு

“ஐயோ!!! இதென்ன வேதனை? ஏன் இப்படி ஈட்டி போன்ற சொற்களால் என் இதயத்தை துளைக்கிறீர்கள்?.

உண்மையில் தாங்கள் என்னை காதலிக்க வில்லையா? இதற்கு பதில் அந்த யானையை விட்டு என்னை மிதிக்க

செய்து கொன்று விடுங்கள்!!. தங்களது அன்பும் காதலும் எனக்கு கிடைக்காத பொழுது இனி இந்த உலகத்தில்

நான் இருந்தென்ன பயன்!!???

 

‘இதோ பார் பெண்ணே இது ஆலயம். நீ இவ்வாறு என்னிடம் பேசுவதே பெருங்குற்றம், யாரேனும் பார்த்தால்

நம் இருவருக்குமே அவப்பெயர். நான் உன்னை காதலிக்க வில்லை வீணாக கற்பனை செய்து கொண்டு கவலை

படாதே என்னை விட வேறொரு திறமையான ஆடவன் உனக்கு துணையாக அமைவான் தயவு செய்து உன்ன மனதை மாற்றி கொள்

 

“போதும் போதும் நிறுத்துங்கள்!! இனி நான் வேறொரு ஆண் மகனை நினைத்து கூட பார்க்க இயலுமா?

அப்படி நினைத்தால் நானும் ஒரு தமிழ் குல பெண்ணா? என் உயிர் போனாலும் போகுமே தவிர உங்களை

அன்றி வேறொருவனை நான் இனி நினைக்க வாய்ப்பு இல்லை என்று அவள் கூறும் பொழுது மாறன் வந்து

கொண்டிருப்பதை சொக்கன் பார்த்தான்.

 

“அவனுக்கு இந்த விஷயம் தெரிந்தால் நம்மை தவறாக் எண்ணுவானோ? இந்த பெண்ணிடம் தேவை இல்லாமல்

ஆசையை வளர்த்து விட்டோம் என்று எண்ணி நம்மிடம் பேசாமல் போய் விட்டால் என்ன செய்வது என்று குழம்பிய படியே

“இது சரியாக வராது நீ முதலில் புறப்படுஎன்று முன்னோக்கி நடக்கவும்

“எல்லாம் சரியாகத்தான் வரும் அடுத்த முறை நாம் சந்திக்கும் பொழுது எனக்கான நற்செய்திக்காக

காத்திருப்பேன் இல்லை என்றால் எமனுக்கு என் உயிரை படைத்திருப்பேன் என்று அழுத படி கூறி விட்டு

யசோதை அங்கிருந்து நகரவும் மாறன் அங்கு வரவும் சரியாக இருந்தது.

 

“என்ன சொக்கா ஏன் அந்த பெண் அழுகிறாள் அவளிடம் ஏதும் வம்பு செய்து விட்டாயா? என்று மாறன் கேட்டான்

“இல்லை... ம்ம்,.... கும்...!! அன்ஹ்க்!!!! இல்லை.... அதெல்லாம் ஒன்றும் இல்லையே மோரில் ஏன் இவ்வளவு உப்பு

போட்டிருக்கிறாய் என்று கேட்டேன் அதற்குள் அந்த பெண்ணுக்கு அழுகை வந்து விட்டது அவ்வவளவுதான்

தடுமாறிய படி சமாளித்தான் சொக்கன்.

 

“இவ்வளவுதானா நான் என்னவோ? ஏதோ? என்று அஞ்சி விட்டேன்புலியை முறத்தால் அடித்த

பெண்கள் வாழ்ந்த இந்த மண்ணில் சிறு சொல்லை கூட பொறுக்க முடியாத பெண்கள். பாவம்!!!,

நீதான் கொடுமை காரனாயிற்றே உன்னை பார்த்தே பயந்திருப்பாள் அவள். சரி வா உனக்கு ஒரு

பரிசு காத்திருகிறது “ என்று ஆசை நாயகனின் அகன்ற தோளில் கையை போட்டு இழுத்து சென்றான் மாறன்.

“ஆஹா என்மீது இவனுக்கு எவ்வளவு நம்பிக்கை என்று வியந்த படியே தாய் ஆட்டின் பின்னால் ஓடும் குட்டியை போல

அவன் பின் சென்றான் சொக்கன்



__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

“என்ன பரிசு மாறா எனக்கு தாள வில்லை உடனே கூறு என்று அவனை அவசர படுத்தினான் சொக்கன்

“பொறு பொறு உன்னிடம் தானே முதலில் காட்ட போகிறேன் அந்த பரிசு உயரமான் இடத்தில் இருக்கிறது.

வா வா என்று அவனை அழைத்து சென்றான் மாறன். அவர்கள் இருவரும் இரண்டாம் திருவாயிலை

கடந்து வெளியேறிய பொழுது அங்கு எதிர் பட்ட ஒருவன் சொக்கனை அடையாளம் கண்டு அழைத்தான்.

 

“டேய் சொக்கா!! சத்தம் கேட்டு திரும்பிய சொக்கன் முகம் மகிழ்ச்சியில் விரிய மாறனின் முகம் ஆச்சர்யத்தில் விரிந்தது.

“அட நரேந்திரா!! என்ன ஆச்ச்சர்யம் நேற்று கூட உன்னை நினைத்து கொண்டேனடா!!

இன்று பார்ப்பேன் என்று கருத வில்லை. “என்றான் ஆச்சர்யம் விலகாத சொக்கன்.

“ஆஹா அப்படியா? ஆமாம் நீ என்ன இங்கு சுற்றுகிறாய்?

“நாங்கள் ஆலய பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளோம். நீ என்ன திடீர் விஜயம்

“நானும் ஆலய பணிக்கு தானடா வந்திருக்கிறேன். சாந்தார நாழியில்* ஓவியம் தீட்டும் பணி துவங்க விருக்கிறதல்லவா?

அங்கு தீட்ட போகும் ஓவியர்களில் நானும் ஒருவன்

 

இவர்கள் பேசிகொண்டிருக்கும் இடைவெளியில் மாறன் சொக்கனின் கையை பிடித்து புதியவன் கவனிக்காத

மாதிரி கிள்ளினான். என்னவென்று திரும்பிய சொக்கனை பரத்ததும்.

“வா போவோம் எவ்வளவு நேரம் இன்னும் அளப்பாய்?’” என்று கண்களாலேயே கடிந்தான் மாறன்

“சரிடா நீ எங்கு தங்கி இருக்கிறாய்

“படைவீரர் பாசறைக்கு அருகில் எங்களுக்கு இடம் ஒதுக்க பட்டுள்ளதடா அங்குதான் தங்குவோம்

“ஆஹா!! நாங்களும் அங்குதான் தங்குவோம் அப்படியானால் நாம் பிறகு சந்திப்போம் இபோழுது வேறு வேலை

இருக்கிறது நான் வரட்டுமாடா? என்று நாசூக்காக கழன்றான் சொக்கன்.

புதியவனோ மாறனை ஒரு மாதிரி ஏற இறங்க பார்த்து விட்டும்ம்ம்ம் சரி கிளம்பு பார்க்கலாம் என்று அங்கிருந்து அகன்றான்

“யாரவன்? பார்வையே சரி இல்லையே? இது மாறன்

“அவனா? அவன் வீரநரேந்திரன் எனது நண்பன் எங்களது ஊர் அருகே தான் அவனுக்கும் இல்லம்.

சிறந்த ஓவியன், ஓவியம் பயின்று சோழ தேச ஓவியர்களின் தலை சிறந்த ஓவிய குழுமத்தில் பணி புரிகிறான்

இங்கு பணி புரிய வந்திருக்கிறான் போலும் என்று சொக்கன் முடிப்பதற்குள்

“ம்ம் போதும் போதும் வர்ணனையெல்லாம் பலமாகத்தான் இருக்கிறது மூடி கொண்டு வா என்று பொய்யாக

அதட்டிய படி நடந்தான் மாறன்

“சொக்கன் சிரித்த படியே மாறனுக்கு தன் மீது இருக்கும் அளவு கடந்த அன்பின் வெளிபாடு இது என்றுநினைத்த வாறே

பின் தொடர்ந்தான். பின் இருவரும் முதற் கோபுரத்தின் மீது ஏறி ஏற்கனவே மாறன் சிலை வடித்த இடத்தை அடைந்தனர்

 

“சொக்கா நேற்றிரவு எனக்கு என்ன பரிசு தர போகிறாய் என்று கேட்டாயே அதன் படி நான் உனக்கு வழங்க போகும்பரிசு இதுதான்

என்று மாறன் கை நீட்டிய இடத்தை பார்த்த பொழுது அங்கு கஜசம்ஹார மூர்த்தியின் (யானையின் தோலை உரித்து போர்த்தி கொண்டு

அதன் தலை மீது நடனம் புரியும் சிவனின் ஒரு வடிவம்) உருவமும் அதன் அருகில் ஒரு வீரன் யானையின் மீது அமர்ந்து

 அதனை அடக்கும் காட்சியும் வடிக்க பட்டு இருந்தது. அந்த யானையின் தும்பிக்கையில் ஒரு அம்பு தைத்திருப்பது தத்ரூபமாக 

இருந்தது. மேலும் அருகில் ஒரு கோபுரத்தின் மீது ஒரு சிற்பி ஆனையடக்கும் காட்சியை  வடிப்பது போலவும் தத்ரூபமாக

வடித்திருந்தான் மாறன். ஆனால் சிற்பியின் முகம் தெரியாமல் பின்புறம் மட்டும் தெரியும் படி இருந்தது.

 

மிக சிறிய சிற்பம் தான். ஆனால் மிக தெளிவாக நுணுக்கமாக வடிக்க பட்டிருந்தது. முதலில் சாதரணமாக

எண்ணிய சொக்கனுக்கு, அந்த மூர்த்தியின் முகமும் வீரனின் முகமும் ஏற்கனவே பார்த்த முகம் போல தோன்றிற்று.

நன்கு யோசித்து பார்த்தான். அது ஆடியில் அடிக்கடி பார்க்கும் அவனது முகம் தான் என்பது விளங்கியது.

இரண்டு சிற்பங்களில் இருக்கும் முகமும் அச்சு அசலாக சொக்கனை ஒத்திருக்கும் படி செதுக்கி இருந்தான் மாறன்.

கீழிருந்து பார்பவர்களுக்கு கஜசம்கார மூர்த்தியின் உருவம் பெரியதாக தெரியும்படியும் யானை வீரன் தெரியாத படியும்

நுணுக்கமாக வடித்திருந்தான் மாறன். ஆச்சரியம் விலகாத சொக்கனின் காதுகளில் மாறன் பேசுவது கேட்டது.

 

“சொக்கா மாமன்னர்..... எழுப்பும் இந்த பார் போற்றும் கற்றளி இருக்கும் வரை இந்த சிற்பமும் இருக்கும்.

இந்த சிற்பம் இருக்கும் வரை நம் காதலும் இருக்கும். சாதரணமாக பார்பவர்களுக்கு இது வெறும் சிற்பம் தான்

ஆனால் நமக்கு இது நம் காதல் சின்னம். இது தான் நான் உனக்கு அளிக்கும் பரிசு போதுமாடா? என்று கேட்டான்

சொக்கனுக்கு கண்ணீர் முட்டி கொண்டு வந்தது வார்த்தைகள் எழ வில்லை

 

“மாறா என்னை மன்னித்து விடடா நேற்று அற்ப பொருளை உணக்கு வழங்கி விட்டு பெருமிதம் அடைந்திருந்தேன்

ஆனால் இன்றைக்கு உன் காதல் கடலினும் பெரிதுன்னு சொல்லாம சொல்லி விட்டயடா? நீ எனக்கு கிடைத்தது நான்

செய்த பாக்கியம் என்று கூறி கொண்டே அவனை அணைக்க முற்பட்டான் சொக்கன் தன்னை மறந்து.

 

“ம்ம்... அய்யா இது பள்ளியறை அல்ல கோபுரம், நமது உறவு இந்த தஞ்சைக்கே தெரிந்து விடும் பார்த்து

என்று பொய்யாக அதட்டி அவனை சுய நினைவுக்கு கொண்டு வந்தான். பின் இருவரும் கீழே இறங்கினர்.

“ஆம் சொக்கா உறையூர் செல்வது பற்றி அனுமதி வாங்கி விட்டாயா??

“ம்ம் இன்னும் இல்லை தங்கம் மாலையில் தான் குழுத்தலைவர் வருவார் அவரிடம் கேட்கிறேன் முடிந்த அளவு

நாளை புறப்படலாம் தயாராக இரு!!

 

மாறன் தனக்களித்த பரிசை நினைத்தும் நாள் முழுதும் மாறனுடன் இருப்பதை நினைத்தும் நாளை புறப்பட இருக்கும் உறையூர்

பயணத்தை நினைத்தும் சொக்கன் சொக்கி போயிருந்தான். ஆனால் காலையில் ஒரு பெண்ணின் மனதை காய படுத்தியதையோ,

அவள் காயப்பட்ட மனதை பற்றியோ, அவளது காதலை பற்றியோ அவன் நினைத்து கூட பார்க்க தயாராக இல்லை.

 

குறிப்பிட்ட வேலையை மிக சிறப்பாக முடித்துள்ளதாக தலைமை சிற்பி வழங்கிய பாரட்டாலும் உறையூர் சென்று

வர கொடுத்த அனுமதியை நினைத்தும் நாள் முழுவதும் சொக்கனுடன் இருப்பது மட்டுமல்லாமல் இரவில்

இலுப்பை தோப்பில் நடக்க போகும் லீலைகளை நினைத்தும் மாறனும் ஆனந்தத்தில் இருந்தான்.

 

தேய்பிறை நிலவு மங்கிய ஒளியை பாய்ச்சி கொண்டிருக்கும் இரவு வேலையில் இலுப்பை தோப்பில் சொக்கன்

கூறிய செய்தி மாறனுக்கு அவ்வளவாக உவப்பாக இல்லை.

 

“என்ன சொக்கா நாளை புறப்படுவதில் என்ன குழப்பம் ஏன் நாளை வேலை?

 

“எனக்கும் குழப்பமாக தான் இருக்கிறது கடந்த வாரம் தான் யானைக்கு பரிசோதனை செய்ய பட்டது ஆனால்

அதனுடைய ஓலை குறிப்பில் நாளைய தினம் பரிசோதனைக்கு வர வேண்டும் என்று குறிப்பு உள்ளது

போன முறை சென்ற பொழுது குறிக்க பட்டுள்ளது. அதனால் தவிர்க்க முடிய வில்லை எப்படியும் மதியத்திற்குள் 

முடிந்து விடும் மாலை வேலையில் புறப்பட்டு விடலாமடா.

 என்று கூறிய சொக்கன் மனது மிகவும் குழப்பமாக இருந்தது.அது நாளை குறித்த நேரத்தில் உறையூர்

புறப்பட முடியாதோ என்ற ஏக்கமாக இருக்கும் என மாறன் எண்ணினான்.

ஆனால் சொக்கன் அங்கு போனால் யசோதையை பார்க்க நேரிடுமே என்றுதான் குழம்பி உள்ளான் என்பது

மாறனுக்கு தெரிய வில்லை. எது எப்படியோ நாளைய பொழுது ஒரு மறக்க முடியாத நாளாக விடிய போகிறது.

ஒரு வாரத்திற்குள் மீண்டும் ஏன் யானைக்கு பரிசோதனை? சொக்கன் போகும் பொழுது யசோதையின் மனநிலை என்ன?

அறிந்து கொள்ள காத்திருங்கள் அடுத்த வாரம் வரை

                                        -ஓசை கேட்கும்

 



__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

கிருஷ்ணபட்சம்: சந்திரனின் நிலையை வைத்து கணக்கிடப்படும் (சந்திரமானம்) மாதத்தின் முப்பது நாட்களும்

கிருஷ்ணபட்சம், சுக்கில பட்சம் என இரண்டு பட்சங்களாக பிரிக்க பட்டுள்ளது. பவுர்ணமிக்கு மறுநாளான

பிரதமை (பாட்டிமுகம் என்று தற்காலத்தில் மருவி உள்ளது) திதியிலிருந்து அமாவாசைக்கு முதல் நாளான சதுர்த்தசி

(பதினான்கு)திதி வரை உள்ள தேய் பிறை நாட்கள் கிருஷ்ண பட்சம் எனப்படும். வளர்பிறை நாட்கள் சுக்கில பட்சம்.

 

*அனுகிரக விசனம்: சிவாலயங்களில் அம்மன் சன்னதியும், சிவன் சன்னதியும் ஒரே திசையை நோக்கி இருந்தால் 

இது சமான வீசனம் எனப்படும். இருவரும் சமம் என்று உணர்த்துவது இது. (மயிலாடுதுறை உள்ளிட்ட தளங்கள்).

இரண்டு சன்னதிகளும் எதிரெதிர் திசையில் இருந்தால் அபிமுக்த வீசனம். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்த

வண்ணம் இருப்பது சங்கமத்தை குறிப்பது, இருவரும் ஒன்று என்று குறிப்பது. மிகவும் சக்தி வாய்ந்தாக கருதபடுவது

(திருக்கடையூர் உள்ளிட்ட தளங்கள்) சிவன் கிழக்கு நோக்கி இருந்தால் அம்மன் வடக்கு நோக்கியும்,

சிவன் மேற்கு நோக்கி இருந்தால் அம்மன் தெற்கு நோக்கியும் இருப்பது அனுக்கிரக வீசனம். இவ்வகை

சன்னதிகளில் ஒரே இடத்தில் இருந்து இருவரையும் தரிசிக்கலாம். ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை

என்று குறிப்பது, இருவரும் சமமாக அனுக்கிரகம் புரிபவர்கள் என்று குறிப்பது. இதனால் தான் சோழர்களின்

பெருவுடையாருக்கு எங்கள் அம்மன் சளைத்தவர் இல்லை என்று அனுகிரக வீசனத்தில் பாண்டியர்கள் அம்மன்

சன்னதி அமைத்துள்ளனர்.

 

*வராகி சன்னதி: பன்றி முகம் கொண்ட பெண் கடவுள், சப்த கன்னியர்களில் ஐந்தாமானவள். 

அம்மன் வழி பாடு சோழர்களிடம் பரவலாக இல்லாத பொழுதும் வராகிக்கு பெரிய கோவில் வளாகத்தில்

அரசன் தனி சன்னதி அமைத்தது அவள் புவனேஸ்வரியின் தளபதி என்பதால் தான். வெற்றியின் வடிவம்,

கோபத்தின் உச்சி, நீதியின் தலைவி என்பதால் தான். முக்கிய முடிவுகள் எடுக்கும் பொழுதும், போருக்கு

செல்லும் பொழுதும் வராகி சன்னதியில் சிறப்பு ஆராதனை முடித்துதான் கிளம்புவாராம் இராஜராஜர்

 

*சாந்தாரநாழி: தஞ்சை பெரியகோயிலில் கருவறையை சுற்றி இருக்கும் அறை. இதில்தான் அளப்பரிய

பொக்கிஷங்களான இராஜஇராஜன் காலத்து ஓவியங்கள் உள்ளன.(இராஜராஜனின் முழு உருவ படமும் அடக்கம்)

சுன்ன சாந்தை சுவற்றில் பூசி அதன் ஈரம் காய்வதற்குள் ஓவியங்கள் தீட்ட பட்டதால்தான் அவை இன்றளவும் நிலைத்திருகின்றன.

அங்குள்ள மகிஷாசுற மர்த்தினி ஓவியத்தில் அம்மனின் கண்கள் கோபத்தையும், இதழ் புன்னகையையும் காட்டுமாம்,

ஈரம் காய்வதற்குள் இத்துணை நுணுக்கத்துடன் வரையபட்ட ஓவியங்கள் மீது பின்னாட்களில் நாயக்கர்கள்

மீண்டும் சுன்ன சாந்து பூசி அவர்கள் பாணி ஓவியத்தை வரைந்தததால் நமக்கு முழுமையாக கிடைக்காமல்

சிதைந்துள்ளது துரதிர்ஷ்டமே.

 

*கஜசம்கார மூர்த்தி: தாருகா வனத்தில் வசித்த முனிவர்கள் ஆணவத்தால் சிவனை அழிக்க ஏவிய யானையை

உரித்து அதன் தோலை உடுத்தி அதன் தலை மீது ஒருகாலை வைத்து ஒருகாலை தூக்கி உள்ளங்கால்

தெரியும் படி நர்த்தனம் செய்யும் காட்சி. இது அட்ட வீரட்ட தளங்களில் ஒன்றான வழுவூரின் தல புராணம்.

இக்காட்சியை ஏறத்தாழ அனைத்து சிவாலய கோபுரங்களிலும் பார்க்கலாம். அருகில் உமையம்மை

பாலமுருகனை இடுப்பில் தூக்கி ஈசன் ஆடுவதை கை நீட்டி காட்டுவது போல அமைக்க பட்டிருக்கும்.



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

வழமை போல.. புதுமையான பல தகவலகளுடன்... மாறன், சொக்கன் - இருவரது காதலையும் நயம்பட உரைத்துள்ளீர்கள்...

அரச அலுவலான ஆலயப் பணியை நிறைவேற்றிய அதே சமயம்.. தன் அன்புக்குரியவனையும்.. கல்லிலே கலைவண்ணம் கண்டு.. கௌரவித்த மாறனின் மதிநுட்பம் வியக்கத்தகுந்தது..

இவர்களது காதலின் ஆழத்தை கண்டு ஆனந்திக்கும் அதே வேளை மோர்க்காரி யசோதையின்.. கைக்கிளை கலவரப்படுத்துகிறது..

வீரநரேந்திரனின் வருகையும்.. வயிற்றில் புளி கரைக்கிறது...!

(எந்த காலகட்டம்னாலும்.. காதலர்கள் சேர்வதென்பது... அத்தனை எளிதான விஷயமன்று போலும்... அதிலும் இவர்கள் ஓர்பாலீர்ப்பு கொண்டவர்கள்.. பாவம்!)

சரி... இனி ஒரு FAQ session:

//காலை வேளையில் பாட சாலைகளுக்கு புறப்படும் முன் தெருவில் விளையடி கொண்டிருந்த சிறுவர்கள்// Macaulay-யின் பாடத்திட்டம் அப்போது அமலிலிருந்ததா??? :D

சந்தியாவந்தனத்திற்கு முன்பாகவே அக்கால பாடசாலை வகுப்புகள் ஆரம்பித்து விடும் என்று ஒரு நூலில் அறியப்பெற்றிருக்கிறேன்..!



-- Edited by Rotheiss on Monday 26th of August 2013 07:32:18 PM

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

வழக்கம்போல நுணுக்கமான விஷயங்கள் நிறைய சொல்லி புருவங்களை உயர்த்த வைத்திருக்கிறீர்கள்.....
இருந்த ஒரு இடையூறு "யசோதை" பத்தாதுன்னு, புதிய இடையூறாக நரேந்திரன் வந்துவிட்டான் போலும்..... அழகான பரிசு கொடுத்து அசத்தி இருக்கிறான் மாறன்... தொடருங்கள்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

உங்கள் கதையைப் படித்தால் எவ்வளவு வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கிறது பாருங்கள்.... மிகவும் எதிர்பார்த்து, இரசித்துப் படிக்கும் கதை... இனி விரைவில் அடுத்த கட்டத்திற்கு செல்கிறதோ?

__________________


எழுத்தரசர்

Status: Offline
Posts: 196
Date:
Permalink   
 

பல சுவையான நுணுக்கமான தகவல்களை ஒருங்கிணைத்து ..... அப்பப்பா.. உங்கள் உழைப்பு என்னை பிரமிக்க வைக்கிறது நண்பரே.
மறுபடி சொல்கிறேன்.. உங்கள் உழைப்புக்கும், திறமைக்கும் நான் தலை வணங்குகிறேன்.
இனிமையான தமிழ்மொழியை வெகு லாவகமாக கையாளுகிறீர்கள்.
தொடரட்டும் உங்கள் நற்பணி.

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

very interesting

post next parts

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

//“சொக்கா மாமன்னர்..... எழுப்பும் இந்த பார் போற்றும் கற்றளி இருக்கும் வரை இந்த சிற்பமும் இருக்கும்.

இந்த சிற்பம் இருக்கும் வரை நம் காதலும் இருக்கும். சாதரணமாக பார்பவர்களுக்கு இது வெறும் சிற்பம் தான்

ஆனால் நமக்கு இது நம் காதல் சின்னம்//

அற்புதம்.. அழியாத காதலின் சின்னம்..

ஆனால், இந்தக் காதலுக்கு ஓவியன் வடிவில் வில்லனைக் கூட்டிவந்திருக்கிறது போல இருக்கிறதே.. ஏற்கன்வே ஒரு மோர்க்காரி.. இன்னும் எத்தனை பேர் இவர்களுக்கு வினையாய் வரப் போகின்றனரோ??

__________________

gay-logo.jpg

 



உறுப்பினர்

Status: Offline
Posts: 62
Date:
Permalink   
 

உங்களுடைய பேராண்மை என்னை பெரிய கோவிலுக்கு இழுத்து செல்லும் போல் இருக்கிறது. அடுத்த முறை சென்றால் அந்த சிற்பத்தை தேடும் ஆவலை இங்கே விதைத்து விட்டீர்கள். அருமை, அற்புதம்.



__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

 

யசோதையின் கூற்றை கேட்டதும் சொக்கனுக்கு ஆத்திரம் பீறிட்டுகொண்டு வந்தது. “ச்சே நீயெல்லாம் ஒரு பெண்ணா??உனக்கு எத்தனை உரம் இருந்திருந்தால் இப்படி நடந்து கொண்டிருப்பாய். இந்த செய்தி உன் தந்தைக்கும் மற்றவர்களுக்கும் தெரிந்தால் என்னையும் அல்லவா குற்றம் சொல்லுவார்கள் சொக்கன் பொரிந்து தள்ளினான் யசோதைக்கு கண்கள் குளமாகி வழிந்தோடியது.

 

“இல்லை சுவாமி தங்களை சந்திக்கும் ஆவலில் தான் செய்து விட்டேன் தவறுதான் என்னை மன்னித்து ஏற்று கொள்ள மாட்டீர்களா?? உங்களுக்காக இத்தனை துணிச்சலாக நான் செயல் பட்டிருப்பதில் கூட என் காதல் உங்களுக்கு விளங்க வில்லையா? ஏன் உங்களுக்கு என்னை பிடிக்க வில்லை சொல்லுங்கள்?

 

“தேவை இல்லாமல் மனதில் ஆசையை வளர்க்காதே பெண்ணே!! உனது காதல் எனக்கு புரிகிறது!! ஆனால் என்னால் அதனை ஏற்று கொள்ள முடியாது புரிந்துகொள்

 

“ஏன் ஏற்று கொள்ள முடியாது சொல்லுங்கள் சொல்லுங்கள்

 

“நான் வேறொருவரை விரும்புகிறேன் பெண்ணே!!! என் உடல் பொருள் ஆவி எல்லாம் அவருக்குத்தான் சொந்தம், நான் வேறொருவருக்கு உரிமையான பொருள். புரிந்து கொள் என்று சொக்கன் கூறிய வார்த்தைகள் அவளது காதுகளில் இரும்பை காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.

 

அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கும் யசோதையின் பதிலை பொருட்படுத்தாதவனாய் சொக்கன் யானையை குனிய சொல்லி மேலேறி அமர்ந்து கொண்டு புறப்பட்டு விட்டான். அதற்குள் தூரத்தில் இருந்து பார்த்த ருக்மணிக்கு யசோதை அழுவது தெரிய, அவளும் அருகில் வந்து விட்டாள். யசோதையின் தோழிகள் தவிர வேறெவரும் அங்கு இல்லை என்பதாலும் மருத்துவரும் அவருடன் நிற்கும் பெண்ணும் மருத்துவத்தில் கவனமாக இருந்ததாலும் இங்கு நடந்தவற்றை யாரும் கவனிக்கவில்லை.

 

“என்னடி என்ன ஆயிற்று? அழாதே யசோதை!! அருகில் வந்து அவள் தோளை பற்றி உலுக்கினாள் ருக்மணி.

 

கண்களில் வழியும் நீரை துடைக்காமல் அவளை பார்த்து ஒன்றும் பேசாமல் அழுதுகொண்டே வீட்டினுள் சென்று மறைந்தாள்.

 

 

 

யசோதையால் ஏற்பட்ட மன சஞ்சலத்தில் இருந்த சொக்கன் நேராக மாறனை காண ஆலயத்திற்கு வந்து கொண்டிருந்தான். ஆலயத்தின் கட்டுமான பணிகள் ஏறக்குறைய முடிவடைந்து விட்ட நிலையில் பெரிய கோயில் வளாகம் குடமுழுக்கிற்கு தயாராகி கொண்டு இருந்தது. ஆலயத்தின் வெளிப்புறம் தென்புறத்தில் இருந்த பெரிய திடலில் வேள்வி சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு பெரிய அளவில் கொட்டகைகள் அமைக்க பட்டு கொண்டு இருந்தன. அதனருகே சூளையில் வைத்து சுடப்டாத பச்சை கற்கள் அடுக்க பட்டு இருந்தது. அருகில் சதுர்வேதி மங்கலத்தில் இருந்து வந்த அந்தணர்கள் வேள்வி சாலையின் நீள,அகலம், அதில் அமைக்க பட வேண்டிய குண்டங்கள், இறை ஆசனங்கள், வாசல்கள் போன்றவற்றை பணியாளர்களுக்கு விளக்கி கொண்டிருந்தனர்.. 

 

அவர்களை தாண்டி உள்ளே நுழையும் பொழுது பொற்கொல்லர்கள் பலர் சிறு சிறு ஆணிகளை வைத்து தட்டி கொண்டு இருந்தனர் அருகில் ஆலய விமானத்தில் பதிக்க பட வேண்டிய தங்க தகடுகள் அடுக்க பட்டிருந்தன. இவற்றை கண்டதும் சொக்கனுக்கு எதுவும் விளங்க வில்லை. அவர்களை கடந்து சென்ற பொழுது அங்கு மாறனும் ஏனைய சிற்பிகள் பலரும் அமர்ந்து உரையாடி கொண்டிருந்தனர். சொக்கனை கண்டதும் மாறன் அவர்களிடும் இருந்து எழுந்து வந்தான்.

 

“என்ன சொக்கா!! ஏன் முகம் வெளிறி காணப்படுகிறாய் என்ன விஷயம் ? அவனது முகத்தை பார்த்ததும் மாறன் அவனிடம் குடி கொண்டிருந்த குழப்பத்தயும், சோகத்தையும் கண்டு கொண்டான்,

 

“அதெல்லாம் ஒன்றும் இல்லை!! தலை வலிப்பது போல உள்ளது!!

 

“ஆஹா வா! மருத்துவரிடம் சென்று வருவோம்!!

 

“இல்லை இல்லை அதெல்லாம் வேண்டாம் மாறா இப்பொழுது குறைந்து விட்டது

 

“எனக்கு ஒன்றும் அப்படி தெரிய வில்லையே.!! சரி யானைக்கு மருத்துவ பரிசோதனை முடிந்ததா?? மாலை உறையூர் புறப்படலாமா??

 

புறப்படலமடா!!! அந்தி சாயும் பொழுது நான் ஆலய வாசலில் காத்திருக்கிறேன் நீயும் முன்னதகாவே சென்று தயாராகி வந்து விடு குதிரை இருகிறதல்லாவா?

 

“ம்ம் இருக்கிறது. சரி நீ போய் ஓய்வெடுத்துக்கொள் மாலை பார்க்கலாம் என்று மாறன் கூறியதை கேட்டு திரும்பி யானையை நோக்கி நடக்க துவங்கியவன் திரும்பி

 

“மாறா.!! என்று அவனை அழைத்து ஏதோ சொல்ல வந்தவனாய் தயங்கி நின்றான்

 

“என்ன்ன சொக்கா?? என்ன விஷயம் சொல் ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்?

 

“ஆஹ!! அது! அது!! ஒன்றும் இல்லை!! ஆமாம் இதென்ன பொற்கொல்லர்கள் ??

 

இவர்களுக்கு இங்கென்ன வேலை? பேச்சை மாற்றினான்

 

“இதற்குத்தான் இப்படி மென்று முழுங்கினாயா? விண்முட்டும் இந்த கோபுரம் முழுவதும் மாமன்னர் தங்க தகடுகளால் போர்த்தி பொன் வேய போகிறார் அல்லவா?/ அதான் அதற்கான பணிகளை மேற்கொண்டு உள்ளனர் கொல்லர்கள். குடமுழுக்கிற்கு இன்னும் சில நாட்கள் தானே இருக்கிறது? அநேகமாக நாம் தஞ்சை திரும்பும் பொழுது தஞ்சை  விழாகோலம் பூண்டிருக்கும் விமானமும் பொன் வேய பட்டிருக்கும். கும்பாபிஷேக தினத்தன்று நாமிருவரும் இன்பமாக ஊர் சுற்றலாம் இல்லையா சொக்கா?

 

நிகழ்ச்சிக்காக எண்ணற்ற கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய பட்டிருக்கிறதாம். அனைத்தையும் நீயும் நானும் சேர்ந்து கண்டு களித்து இன்புற வேண்டும் சொக்கா, என் மனம் இன்றே அந்த நாட்களை எண்ணி மகிழ்கிறது..

 

“ஆமாம் ஆமாம் உண்மைதான், சரி நான் புறப்படுகிறேன் நீ மாலை தயாராக இரு. வருகிறேன் என்று கூறி விட்டு சொக்கன் அங்கிருந்து புறபட்டான்.

 

 

 

மறுநாள் காலை சொக்கனும் மாறனும் தஞ்சையில் இருந்து அரைநாள் பயண தொலைவில் உள்ள ஒரு ஊரின் ஒதுக்கு புறமாக இருந்த மண்டபத்தில் கண்விழித்தனர். அவர்களின் குதிரை அருகில் உள்ள மரங்களில் கட்ட பட்டிருந்தது. நேற்று மாலை திட்டமிட்ட படி தஞ்சையில் இருந்து புறப்பட்ட இருவரும் உறையூர் செல்லும் ராஜ பாட்டையில் மக்கள் குடி இருக்கும் பகுதிகளில் வேகமாகவும் யாரும் இல்லாத இடங்களில் மிக மெதுவாகவும் பயணித்து பேசி கொண்டே வந்தனர். ஒரு கட்டத்தில் அடர்ந்த வனம் போன்ற பகுதி வந்ததும், இதற்கு மேல் இரவில் பயணம் செய்தலாகாது என்றெண்ணி மேற்சொன்ன மண்டபத்தில் கையோடு கொண்டு வந்திருக்கும் சில பழங்களை உண்டு விட்டு படுத்துகொண்டனர். இருவரும் ஒன்றாக இருக்கும் முதல் இரவு என்பதால் இருவருக்கும் அன்று முதல் இரவுதான்,. வெகுநேரம் கூடி பின் பேசி மகிழ்ந்தனர். இதில் சொக்கன் யசோதை பற்றிய சிந்தனைகளை அடியோடு மறந்தும் விட்டான்.

 

நேற்றிரவு வெகு நேரம் விழித்திருந்ததில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த சொக்கனை எழுப்பாமல் அவனது நெறியில் ஒரு முத்தத்தை பதித்து விட்டு எழுந்து போய் காலைகடன்களை முடித்து அருகில் ஓடிய காவிரியில் நீராடிவிட்டு வந்து சொக்கனை எழுப்பினான் மாறன்.

 

“சொக்கா.. சொக்கா... எழுந்திரு!! சொக்க!!

 

“ம்ம்ம் என்னடா அதற்குள் எழுப்புகிறீர்கள் இருங்களடா என்று கண்களை விழித்தவன் முழுமதி போன்ற மாறனின் முகத்தை கண்டு; தான் பாசறையில் இல்லை என்பதை உணர்ந்து சிரித்தான். பின் சொக்கனை இழுத்து அணைக்க முயன்றான்.

 

“ம்ம் முதலில் போய் நீராடி விட்டு வாருங்கள் அய்யா!! நாம் அருகில் இருக்கும் ஆலயம் எதிலாவது சென்று பூஜை முடிக்க வேண்டும் பிறகு துவங்கலாம் உங்கள் லீலைகளை என்று கூறி சிரித்தான் மாறன்.

 

“ம்ம்ஹ்ஹும் ம்ம்ஹும் என்று சிணுங்கியவாறே எழுந்து சென்றான் சொக்கன்.

 

இருவரும் நீராடி நெற்றி நிறைய திருநீறு அணிந்து அங்கிருந்து புறப்பட்டனர்.

 

செல்லும் வழியிலேயே ஒரு வேம்பின் அடியில் ஒரு சிவலிங்கம் ஆவாகனம் செய்ய பட்டிருப்பது கண்டு. அங்கு இறங்கி வழிபட்டனர். மாறன் யாழை பழிக்கும் வகையில் திருமுறை பாடல் ஒன்றை பாடினான். அதனை பாடும் பொழுது அவனது கண்களில் நீர் வழிந்தோடியது. சொக்கனுக்கு தன் நாயகனின் குரல் வளமும், அவனது பக்தியும் மிகுந்த பெருமையையும் வியப்பையும் வழங்கியது. பின் இருவரும் நிலத்தில் விழுந்து வணங்கி விட்டு குதிரையில் ஏறி பயண பட்டார்கள்.

 

“மாறா அருமையாக பாடினாயடா!!! இத்துணை நாட்களாக என்னிடம் சொல்லவே இல்லை நீ பாடுவாய் என்று!!. ஏழிசைமாறன் என்று உனக்கு பொருத்தமாகத்தான் பெயர் வைத்திருகிறார்கள் உன் இல்லத்தில்.

 

அவன் இல்லத்தில் என்றதும் மாறனின் மலர்ந்த முகத்தில் ஒரு குழப்ப ரேகை படிந்தது.

 

“என்ன மாறா என்ன யோசனை?

 

“இல்லை! இல்லை!! அதெல்லாம் ஒன்றும் இல்லை எனக்கு மிகவும் பசிக்கிறதடா சொக்கா

 

“ஹோ அதான் முகம் வாடி போயிருகிறதா? என் செல்வத்துக்கு. சரி இதோ!! மக்கள் வசிக்கும் பகுதி வந்து விட்டது ஏதேனும் சத்திரம் இருக்கும் நல்ல உணவாய் உண்ணலாம் என்றான் சொக்கன்.

 

பின் இருவரும் சோழ பேரரசி செம்பியன் மாதேவியார் பெயரால் அந்த ஊரில் அமைக்க பட்டிருந்த அன்னசத்திரம் ஒன்றில் போய் அங்கு வழங்கப்பட்ட நீராகாரம், அரிசி கஞ்சி, முருங்கை கீரை துவட்டல், என்று எளிமையாக சிற்றுண்டியை முடித்து கொண்டு புறப்பட்டனர்.

 

“அப்பா........ இப்பொழுது தானடா!! நிறைவாக இருக்கிறது!! பசி வந்திட பத்தும் பறக்கும் என்பார்களே!! அது சரியாகத்தான் இருக்கிறது!! என்றான் மாறன்.

 

“ம்ம் சரிதான் மாறா!! நேற்றிரவு வேறு பழம் மட்டும்தான் உண்டோம் இல்லையா? அதனால் இந்த உணவும் சாப்பிடவில்லை என்றால் கட்டி இருக்கும் கோவனம் கூட பறந்தால் ஆச்சர்ய படுவதற்கில்லை!! என்று சொக்கன் கூறியதை கேட்டதும் மாறன் அடக்க மாட்டாமல் சிரித்தான்.

 

காதல் கொண்ட நாள் முதலே இலுப்பை தோப்பு தவிர வேறு எங்கும் தங்கள் காதலை வெளிபடுத்தி கொள்ளாததால்; இந்த பயணம் அவர்களுக்கு மேலும் இனிதாகவே இருந்தது. காலையில் சத்திரத்தில் இருந்து புறப்பட்டவர்கள் மேற்கு நோக்கி பயணித்ததால் அவர்களுக்கு வெயிலின் தாக்கம் தெரியாமல் இருந்தது சூரியன் உச்சிக்கு வந்துவிட்ட இந்நிலையில் பசியோடு எதிர்வெயிலும் சேர்ந்து கொண்டதால் கொஞ்சம் வாடி காணபட்டான் மாறன்.

 

“என்ன மாறா!! மீண்டும் பசிக்கிறதா?? எப்படியும் சிறிது தூரத்தில் ஏதேனும் சத்திரம் இருக்கும் இரு சாப்பிடலாம் “ என்றான் சொக்கன்

 

“பசி அதிகமாக இல்லை சொக்கா!! ஆனால் வெயில் வாட்டுகிறது என்று அவன் கூறி கொண்டிருக்கும் பொழுதே கருமேகம் சூழதுவங்கி இருந்தது.

 

“அடிசக்கை!!! உனக்கு வெயில் தாள வில்லை என்ற உடனேயே சூரியன் கூட மூடி கொள்கிறதே!! என்று சீண்டினான் சொக்கன்.

 

இன்னும் மேலும் அவர்கள் பேசிக்கொண்டே சிறிது தூரம் கடப்பதற்குள் மழை தூற துவங்கி விட்டது.

 

“ஆஹா!! மழையும் வந்து விட்டதடா மாறா!! நனைந்து கொண்டே போக வேண்டும் போலிருக்கிறதே!!!

 

“சரி சரி விரைந்து வா! அங்கு ஒரு மண்டபம் இருக்கிறது அங்கு போய் விடுவோம்.

 

இருவரும் நுழைந்த அந்த பாழடைந்த மண்டபம் இருள் சூழ்ந்ததாக இருந்தது அந்த மண்டபத்திற்கு இரண்டு புறம் இருந்தது. சாலையை ஒட்டிய படி இருந்த பகுதியை விடுத்து பின் புறம் இருக்கும் அடர்ந்த காட்டை நோக்கிய மண்டபத்தின் மற்றொரு பகுதியில் இருவரும் நுழைந்தனர்.

 

 சாரல் அடிக்காத பகுதியில் குதிரைகளை கட்டினர். பின் அங்கிருந்த ஒரு மரத்தின் தழையை புடுங்கி தரையில் படிந்திருந்த தூசி, குப்பைகளை சுத்த படுத்தினான் சொக்கன். நீண்ட நாட்களாய் மக்கள் உபயோக படுத்தி இருப்பதற்கான அடையாளம் எதுவும் இன்றி காணப்பட்டது அந்த இடம். ஆங்கங்கு மூலையில் ஆட்டு பிழுக்கைகள் மட்டும் கிடந்தன. ஆட்டுகிடாயின் மீது வீசும் மொச்சை வீச்சமும் வீசி கொண்டிருந்தது அந்த மண்டபத்தில்.

 

“சொக்கா!! இந்த மண்டபம் எனக்கு மிகவும் பிடித்திருகிறதடா; நாம் மழை விட்டாலும் இன்றிரவை இங்கேயே கழித்து விட்டு செல்வோமடா!!

 

“தங்கள் உத்தரவு எனது பாக்கியம், உங்களது அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற இந்த அடிமை காத்திருக்கிறேன்’” என்றான் சொக்கன்

 

“ம்ம் உனக்கு எப்பொழுதும் அதே நினைப்புதானடா!! சரி!! மழை விட்டதும் அருகில் எங்காவது போய் சாப்பிட்டு விட்டு இரவுக்கு தேவையான உணவையும் சேகரித்து வந்து விடுவோமடா என்று மாறன் கூற சொக்கன் அதற்கு பதில் கூற. வெளியில் சாரல் மழை வீச, உள்ளே காதல் மழை வீசி கொண்டிருந்தது.

 

உலகத்தை மறந்து உறவாடும் இந்த உல்லாச பறவைகளுக்கு தெரிய போவதில்லை மறைக்க பட்ட உண்மைகள் தெரிய வரும் பொழுது காட்சிகள் மாற போகின்றன என்று.

 

                                                   -ஒசைகேட்கும்

 

  

 

 

 



-- Edited by rajkutty kathalan on Saturday 21st of September 2013 03:12:20 PM

__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

அனைவருக்கும் நமது நன்றிகள்!! நீண்ட நாட்களுக்கு பிறகு கதையை தொடருகிறேன்

வழக்கம் போல தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே!!!

@ரோதிஸ்: நீங்கள் குறிப்பிடுவது சரிதான். அது வேதபாட சாலைகளுக்கு பொருந்தும்

இது வெறும் நீதி போதனை வகுப்பு , வில் வித்தை பயிற்சி அது இது என்று வைத்து கொள்ளுங்களேன்.

 



__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

உளியின் ஓசை- தொடர்ச்சி

ஆசை நாயகனுடன் ஆவலாய் ஊர் சுற்றலாம் என்று இருந்த சொக்கன் மிகுந்த சலிப்புடனும் குழப்பத்துடனும்

யானையை ஒட்டி கொண்டு மருத்துவர் இல்லம் நோக்கி போய்கொண்டிருந்தான்.

எப்படி இருந்தாலும் மாலைக்குள் உறையூர் கிளம்பி விடலாம் என்றாலும் அவனது குழப்பத்திற்கு சில காரணங்களும் இருந்தது. கடந்த முறை அவனுடன் பரிசோதனைக்கு சக வீரர்கள் பலர் வந்திருந்தார்கள். ஆனால் இன்றோ அவன் மட்டும் தான் போய் கொண்டிருந்தான். கடந்த முறை உடன் வந்தவர்களில் சிலருக்கு மறு வருகை நாள் குறிப்பிட பட்டிருந்தாலும் தனக்கு மட்டும் இவ்வளவு விரைவாக அதுவும் தனியாக தியதி குறிப்பிட்டிருப்பதை என்னும் பொழுது அவனுக்கு மேலும் குழப்பங்கள் கூடின. மாறன், உறையூர், யசோதை, யானை என்று சிந்தித்து கொண்டிருந்த மாறன் சாலையில் சென்று கொண்டிருந்த சில மொட்டை தலை மனிதர்களை பார்த்து வியந்தான்.

“ஒஹ் சமண சமய துறவிகளா?? ஆஹா நமது மன்னருக்குத்தான் எத்தனை பரந்த உள்ளம். முழுக்க முழுக்க சைவ சமயத்தை பின்பற்றும் நாட்டுக்குள் வேற்று மதத்தினர் எத்தனை சுதந்திரமாக நடமாடுகிறார்கள்!!! என்ன நமது சோழ தேசத்தின் பெருமை வாழ்க சோழம்!!! வாழ்க சோழம்!!! என்று மனதிற்குள் எண்ணிய பொழுது சல சலத்து ஓடும் காவிரியை அதன் மீது உள்ள கற்பாலத்தில் ஏறி கடந்து கொண்டிருந்தான் சொக்கன். கடந்த முறை இவ்வழியே வந்த பொழுது யானைகளால் சிறிது நெரிசல் ஏற்பட்டது. அதனால் நதியின் ஓட்டத்தை ரசிக்க முடிய வில்லை சொக்கனால். ஆனால் இன்று ஆர்ப்பரித்து ஓடும் காவிரியின் போக்கை பார்த்த பொழுது அவனது மனம் சொல்லவொண்ண உற்சாகத்தில் துள்ளி குதித்தது.

“சோழ தேசம் இத்தனை செழிப்புடன் உள்ளதென்றால் அது இந்த நதியால் தான், மாடமாளிகை கூட கோபுரங்களால் இன்றுதஞ்சை மிளிர்கிறது என்றால் அது இந்த நதியால் தான், பசி என்றால் என்னவென்று கேட்கும் அளவிற்கு இன்று மக்களும் ஏனைய உயிரினங்களும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் என்றால் அதுவும் இந்த நதியால்தான், குடத்திலிட்ட விளக்காய் இருந்த சோழ தேசம் இன்று குன்றிலிட்ட விளக்காய் கடல் கடந்தும் விரிவடைந்துள்ளது என்றால் அதுவும் இந்த நதியால்தான் , இத்தகைய வளம் கொழிக்கும் நாட்டில் நான் வந்து பிறக்க என்ன தவம் செய்தேனோ தெரிய வில்லை, அம்மா காவிரி தாயே!! உன்னை வணங்குகிறேன்!! என்று மானசீகமாய் வணங்கிய பொழுது மருத்துவரின் மனையை நெருங்கி கொண்டிருந்தான் சொக்கன்.

கடந்த முறையை போல இன்றும் ஆங்காங்கு மருத்துவர்களும், அவர்தம் உதவியாளர்களும்,கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்க வந்த மக்களும், குழுமி இருப்பார்கள் என்று நினைத்தவனுக்கு அந்த இடமே வெறிச்சோடி கிடந்ததது வியப்பாக இருந்தது. “என்ன ஆச்சர்யம் இந்த இடமே வெறிச்சோடி இருக்கிறது?” சொக்கன் தன்னை தானே கேட்டு கொண்டான்.

பட்டிகளில் அடைக்க பட்டிருந்த ஆடுகளும், தொழுவத்தில் அடைக்க பட்டிருந்த மாடுகளும் மேய்ச்சலுக்கு ஒட்டி செல்ல பட்டிருந்தன. அங்கிருந்த மரத்தடியில் ஒருவர் காலுடைந்த ஆடு ஒன்றிற்கு கட்டு போட்டு கொண்டிருந்தார் அருகில் ஒரு பெண்மணியும் நின்றிருந்தாள். மருத்துவரின் இல்லத்தில் மட்டும் பெண்கள் சிலர் அளவளாவி கொண்டிருந்தனர். அதில் ஒரு பெண்மணி மட்டும் விரைந்து இல்லத்திற்குள் நுழைந்ததும் தெரிந்தது.

யானையின் மணி ஓசை கேட்டு கவனம் திரும்பிய அந்த மருத்துவர் நிமிர்ந்து நோக்கிய பொழுது நேற்று ஆனையை அடக்கிய வீரன் என்று அடையாளம் கண்டு எழுந்து வந்தார். அதற்குள் சொக்கனும் இறங்கிவிட்டிருந்தான்.

“வணக்கம் வீரரே!! யானைக்கு ஏதும் உடல் நல குறைவா??

“அதெல்லாம் ஒன்றும் இல்லை ஐயா!! இன்று பரிசோதனைக்கு வரும்படி குறிப்பு உள்ளது அதான் யானையை ஓட்டிகொண்டு வந்தேன்?

“என்ன?? இன்று வர சொல்லி குறிப்பு உள்ளதா?? என்ன சொல்லுகிறீர் நன்றாக பாருங்கள் இன்று யாரையும் வர சொல்லி இருக்க மாட்டார்களே

“இதோ பாருங்கள் என்று அந்த ஓலை நறுக்கினை எடுத்து காட்டினான் சொக்கன் அதனை வாங்கி பார்த்த மருத்துவனும்

“ஆம் இன்றுதான் வர சொல்லி இருக்கிறது ஆனால் இன்று துவாதசி ஆயிற்றே மருத்துவர் மாதா மாதம் இந்த நாளில் திருவரங்கம் போய்விடுவாறே அவருடன் மற்ற மருத்துவர்களும் சென்றுள்ளனர் நான் மட்டும் தான் அவசர பணிகளுக்காக இருக்கிறேன். பிறகு எப்படி இன்று வர சொல்லி இருப்பார்?இதில் ஏதோ குளறுபடி இருக்கிறது தயவு செய்து பொறுத்தருள்க. மருத்துவர் வந்ததும் அவரிடம் தெரிவித்து தங்களின் மறுவருகை நாளினை தெரிவிக்கிறோம் என்று கூறி கொண்டிருந்த பொழுது அங்கு யசோதை வந்து விட்டிருந்தாள்.

“பொறுங்கள் மருத்துவரே!! அவர் சரியாகத்தான் வந்திருக்கிறார். இவரை இன்று வர சொல்லி இருப்பதாக தந்தை என்னிடம் கூறி சென்றுள்ளார். சில மருந்துகளை வழங்க சொல்லி கொடுத்துள்ளார், தாங்கள் புதியவர் ஆதலால் இந்த பொறுப்பை என்னிடம் கொடுத்துள்ளார். தாங்கள் சென்று பணியை தொடருங்கள். என்றாள் யசோதை.

“அப்படியா சரி தாயே!!நான் வருகிறேன் என்று அந்த கட்டு போடும் பணிக்கு திரும்பினார் அவர்.

“இவ்வளவு அதிகாரத்துடன் பேசும் பெண்ணா நேற்று நம்மிடம் அழுது விட்டு சென்றாள்? என்று நினைத்து கொண்டிருந்த சொக்கன் வேறு எங்கோ பார்த்து கொண்டிருந்தான்.

“வாருங்கள் வீரரே!! என்ன முடிவு செய்துள்ளீர்கள்? என் காதலை ஏற்று கொண்டு விட்டீர்களா? மிகுந்த ஆவலுடன் அவள் கேட்டாலும் அந்த குரலில் ஒரு இனம் புரியாத சோகம் குடி கொண்டிருந்தது.

“இதோ பார் பெண்ணே!! உன் தந்தை குறிப்பிட்ட மருந்துகளை கொடுத்தால் நான் புறப்பட்டு விடுவேன். அதை விடுத்து வேறெதுவும் நான் இங்கு பேச வர வில்லை. நீ சென்று அந்த பொருட்களை கொண்டுவா நான் இங்கேயே காத்திருக்கிறேன். எனக்கு பல வேலைகள் உள்ளது.

“என்னை புரிந்து கொள்ளுங்கள் சுவாமி!! ஏன் என்னை நிராகறிக்கிரீர்கள் உங்கள் உள்ள கோயிலில் இடம் பெயரும் வாய்ப்பு எனக்கு கிடைக்காதா? நான் அழகாயில்லை என்று கருதுகிறீர்களா? இல்லை வேறு எதுவும் காரணமா?

“நீ இவ்வாறு பேசுவது மற்றவர்களுக்கு தெரிந்தால் நம் நிலைமை என்ன வென்று தெரியுமா? உன் தந்தையின் மானம் கப்பலேறி விடும்  போய் அந்த மருந்துகளை........”” அவன் முடிப்பதற்குள் யசோதை குறுக்கிட்டாள்.

“சுவாமி!! என்னை மன்னித்து விடுங்கள் தங்களை தனிமையில் சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் நான்தான் இன்று பரிசோதனைக்கு வரவேண்டும் என்று தங்கள் ஓலையில் எழுதி விட்டேன். இது எனது தந்தைக்கு தெரியாது.

அவர் எந்த மருந்தும் கொடுக்க வில்லை.

(இந்த இடத்தில கடந்த முறை பரிசோதனைக்கு வந்த பொழுது சொக்கனுக்கான ஓலையை யசோதை தான் எழுதினாள் என்பதை வாசகர்ளுக்கு நினைவூட்ட வேண்டியது நமது கடமை ஆகிறது.)



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

superb

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

சிறப்பான கதையின் போக்கு... தொடரவும்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

இதுக்கு மேலும் சஸ்பென்ச உடைக்கலன்னா, எங்க தலை வெடிச்சுடும். அப்படி என்னதான் செய்ய போறீங்க?? சீக்கிரம் சொல்லிடுங்க..

__________________

gay-logo.jpg

 



புதியவர்

Status: Offline
Posts: 7
Date:
Permalink   
 

Semaya iruku boss.. Continue fast.


__________________


எழுத்தரசர்

Status: Offline
Posts: 196
Date:
Permalink   
 

மிக அருமையாக கதையை நகர்த்தி செல்கிறீர்கள்.
தங்களுடைய தமிழின் ஆளுமைக்கு தலை வணங்குகிறேன்.


__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 62
Date:
Permalink   
 

அருமையாக கதை நகர்கிறது. திரை விலகியதும் காட்சிகள் மாற போகிறதா?



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

அடிக்கடி சஸ்பென்ஸ் வைத்து எங்களை காக்க வைத்துவிடுகிறீர்கள்....

__________________


புதியவர்

Status: Offline
Posts: 34
Date:
Permalink   
 

super ah irukku boss continue pannunga

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

ஒவ்வொரு எபிசோடிலும் சஸ்பென்ஸா??? மூவேந்தர் காலத்து கோவில்கள், மண்டபங்கள் சில இப்போது பாழடைந்த நிலையில் உள்ளன.. சோழர் காலத்திலுமா??

யசோதையின் கைக்கிளை பெருந்திணையாக உருமாறப் போகிறதா?



__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

தஞ்சை இப்படி விழாக்கோலம் பூண்டிருக்க, மழைக்காக மண்டபத்தில் ஒதுங்கி இருந்த நமது நாயகர்கள் இருவரும் அன்று இரவை ஆனந்தமாக கழித்தனர். கோடைநாளில் பெய்த மழை ஆதலால் கொசுக்களும் கொண்டாட்டமாகத்தான் இருந்தன. ஆனால் வேம்பு, நொச்சி போன்ற தழைகளையும், அருகில் கிடந்த ஒரு வைக்கோல் போரில் இருந்து சிறிது ஈர வைக்கோலையும் கொண்டு தீமூட்டி புகைமூட்டம் போட்டு கொசுக்களை விரட்டினான் சொக்கன். திரயோதசி இரவு, எதிரில் உள்ளோர் முகம் தெரியாத இருட்டு, இனிமையான தனிமை எல்லாம் காதல் வயப்பட்ட காளைகளுக்கு கசக்கவா செய்யும்?

இன்பம் தந்த இரவிற்கு விடையளித்து புலர்ந்த பொழுதில், குளித்து முடித்து வேகமாக பயணித்து கல்லணையை அடைந்தனர் இருவரும். மாறன், ஏற்கனவே பலமுறை கல்லணையை பார்த்திருந்தாலும் சொக்கன் பார்க்க விருப்ப பட்டதால்தான் இருவரும் கல்லணைக்கு சென்றனர். சொக்கனுக்கு பிறந்த ஊர் திருவாரூர் அருகே குடவாயில். அவனது குடும்பமே வீரவரலாறு நிரம்பிய ஒன்று. சொக்கனுடைய பாட்டனார் ஈழமண்டலத்து போரிலும், அவனது தகப்பனார் கேரளப்போரிலும் சோழதேசத்திற்காக இன்னுயிரை ஈந்தவ்ர்கள். சொக்கனுக்கு ஒரு சகோதரி உண்டு அவளை மன்னார்குடியில் மணம் முடித்துள்ளனர். சிறு வயதில் இருந்தே போர் பயிற்சி, உடற்பயிற்சி, மல்யுத்தம், என்று வீரத்தை வளர்க்கும் பயிற்சிகளிலேயே சொக்கன் தன்னை ஈடுபடுத்தி கொண்டதால் அவன் அதிகமாக வெளியூர் பயணமெல்லாம் சென்றதில்லை. அவனது அதிகபட்ச பயணமே ஒரு முறை தில்லை வரை சென்று ஆடல்வல்லானை தரிசித்ததும், தஞ்சையும் தான். ஒருமுறை நாகபட்டினம் சென்றிருப்பதாக கூட அறிய முடிகிறது. ஆனால் வெளியூர்களில் உள்ள ஆலயங்களை பற்றியும், அங்கு உள்ள மற்றைய புராதான இடங்களை பற்றியும் பிறர் சொல்ல அடிக்கடி ஆரவமுடன் கேட்டிருக்கிறான். அவ்வகையில் சோழ மன்னர்கள் மீதும், சோழ பரம்பரை மீதும் மாறாத காதலும், பக்தியும், பற்றும் கொண்ட சொக்கனுக்கு கரிகால் சோழவளவன் எழுப்பிய கல்லணையை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்பது வாழ்நாள் ஏக்கம் என்றே சொல்லலாம்.

   சித்திரை மாதம் என்பதால் அவ்வளவாக நீர்வரத்து இன்றி காணப்பட்டது கல்லணை. ஓரளவிற்கு கேள்விப்பட்டதை வைத்து கல்லணையின் தோற்றத்தை மனதிற்குள் கற்பனை செய்து வைத்திருந்த சொக்கனுக்கு மிகுந்த ஏமாற்றமும் ஆச்சரியமும் தான் மிஞ்சியது. ஏனெனில் சொக்கன் எண்ணியதை விட பலமடங்கு பிரமாண்டமாக இருந்தது கல்லணை.

“என்ன? மாறா!! எப்படிப்பட்ட கட்டமைப்படா இது? எத்தனை அறிவும், உடல் வலுவும், பொருளும் இருந்தால் இப்படி பட்ட அணையை அவர் கட்டி இருப்பார்? என்று விழி விரிந்தான் சொக்கன்.

“ஆமடா சொக்கா!! நமது மாமன்னர் இராசராசர் கட்டும் ஆலயம் கூட இத்தனை பிரமாண்டமானது தானடா, இன்று நாமெல்லாம் ஆலயமாக பார்க்கும் அதனை பிற்கால மக்கள் அதிசயங்கள் பல நிறைந்த ஒன்றாக பார்ப்பர். இதிலிருந்தே நம்மவர்களின் திறத்தை விளங்கி கொள்ளலாம்.

“பூதங்களின் உதவியோடு இவ்வணையை கரிகாலர் கட்டியதாக கூறப்படுகிறதே!!

“இல்லை!! அதெல்லாம் சுத்த கட்டு கதைகளடா சொக்கா!! கடற்கரையில் நாம் கால் நனைத்தால் பாதத்தின் அடியில் உள்ள மண் அரிக்கபட்டு நாம் கீழே அமிழ்கிறோம் அல்லவா? அந்த தத்துவத்தின்படி சுழன்று ஓடும் காவிரியில் நீரில் கரையாத கல்லொட்டும் கலவை பூசிய பாறைகள் ஒன்றன் மீது ஒன்றாக போடப்பட்டு பலமான அஸ்த்திவாரம் அமைத்து இந்த அணையை உருவாக்கி உள்ளனர் நமது மூதாதையர்கள் என்று ஒரு சிற்பிக்குரிய தெளிவுடன் கூறினான் மாறன்.

இன்னும் பலகதைகளை பேசி அன்றைய பொழுதை அங்கேயே கழித்தபின், மறுநாளான அமாவாசை தினத்தில் உறையூர் வெக்காளியம்மனின் ஆலயத்தை அடைந்தனர் இருவரும். ஆலயம் அவ்வளவாக பெரியதாக இல்லை என்றாலும் அம்மனின் கருவறையை சுற்றி மட்டும் கல் மண்டபம் அமைக்க பட்டு மேற்கூரைக்கு பதில் வெட்டிவேரில் பந்தல் அமைக்க பட்டு இருந்தது.

அமாவசை தினம் என்பதால் தேவிக்கு சிறப்பான முறையில் அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தப்பட்டன. திரையை விளக்கி தீபாராதனை கட்டிய பொழுது குங்கிலிய புகையின் வெள்ளத்தில் சிவப்பு நிற பட்டுடுத்தி, எண்ணற்ற ஆபரணங்களுடன் எழிலுற தரிசனம் அளித்த அம்மனை கண்டதும் மாறனுக்கு கண்களில் நீர் பெருக்கெடுத்தது, சொக்கனும் பயபக்தியுடன் தேவியை தரிசித்தான். பின் ஆலயத்தை வலம் வந்த பொழுது வாசலில் ஒரு மரத்தில் எண்ணற்ற பனையோலை சுருள்கள் கட்டபட்டிருந்தன. அருகிலேயே ஒரு சிறிய கல்மேடையும் இருந்தது. அதனை காட்டி

“அன்னையிடம் வேண்டும் காரியங்களை ஓலையில் எழுதி கட்டினால், இரவு நேரத்தில் இந்த மேடை மீது அமர்ந்து கொண்டு அன்னை இந்த ஓலைகளை வாசித்து விட்டு மக்களின் குறைகளை தீர்த்து விடுவாராம் என்று .மாறன் கூறியதை கேட்டு சொக்கன் அதிசயித்தான். தொடர்ந்து அருகில் இருக்கும் சிறிய கடையில் ஒரு ஓலை நறுக்கும், எழுத்தாணியும் வாங்கிய மாறன்,

அம்மா தாயே!!

          பணிவுடன் சொக்கன், மாறன் எழுதி கொள்வது, இன்று உன் சன்னதிக்கு நாங்களிருவரும் சேர்ந்து வந்துள்ளது போலவே என்றும் சேர்ந்தே இருக்க வேண்டும், நாங்கள் ஒருவரை ஒருவர் பிரியாமல் வாழ்வின் இறுதி வரை ஒன்றாக இருக்க அருள் புரித்தாயே!! என்று அந்த ஓலையில் கீறி சொக்கனின் கைகளால் அந்த மரத்தில் கட்ட செய்தான்.

“சரி மாறா புறப்படுவோமா?

“ஆம் சொக்கா!! தஞ்சை இந்நேரம் விழாக்கோலம் பூண்டிருக்கும், இனி வேகமாக செல்ல வேண்டும்

“ஆஹா!! நல்ல கதை. என்ன விளையாடுகிறாயா மாறா? இவ்வளவு தூரம் வந்து சீரபள்ளி செல்லாமல், உனது இல்லத்தை காணாமல் எப்படி செல்வது?

“எனது இல்லத்திற்கா? அதெல்லாம் வேண்டாம் மாறா!!

“ஏன்? நான் உங்கள் இல்லத்திற்கெல்லாம் வரக்கூடாதா?, உனது தாய் தந்தையர் யாரென்று கேட்டு ஏதேனும் வசை பாடுவார்களா?

“ஐயோ!! அதெல்லாம் இல்லை சொக்கா !! என்று திணறி நின்றான் மாறன்.

“பிறகு என்ன? சரி, புறப்படு உனது இல்லத்திற்கு சென்று விட்டு உடனே புறப்பட்டு விடலாம், ஆலயத்திற்குத்தான் வந்தோம் தஞ்சை உடனடியாக தஞ்சை புறப்பட வேண்டும் என கூறி விட்டு புறப்பட்டு விடலாம் வா!! என்று அவனே சீரபள்ளி நோக்கி குதிரையை செலுத்தினான்.

“ஏன் இப்படி தயங்குகிறான்? என்று சொக்கனின் மனதிற்குள் ஒரு கேள்வி இருந்தாலும் அதனை காட்டி கொள்ளாமல் மாறனிடம் பேசிக்கொண்டேதான் வந்தான் சொக்கன். மாறனும் முகத்தில் அவ்வளவாக சுரத்தை இன்றிதான் பேசி கொண்டுதான் வந்தான்.

ஏற்கனவே பலமுறை வந்ததாலோ என்னவோ மாறனின் குதிரை அவனது இல்லத்தில் சரியாக போய் நின்றது. நல்ல பெரிய மச்சு வீடுதான். மிகுந்த கலை நயத்துடன் கட்ட பட்டிருந்தது. குதிரையின் குளம்படி கேட்டு வெளியில் வந்த பொன்னிகர் பெண்ணொருத்தி படீரென மின்னல்போல முகம் காட்டி

“அத்தை!! அத்தான் வந்திருக்கிறார்!! என்று வேகமாக உள்ளே ஓடினாள்

மாறனுக்கோ படபடப்பு, சொக்கனுக்கோ எதிர்பார்ப்பு!!

மஞ்சள் பூசியதால் நெற்றிக்கு மேல் உள்ள நரை முடியெல்லாம் மஞ்சள் நிறத்துடனும், வகிட்டில் குங்குமத்துடனும், ஆடம்பரமில்லாத தெய்வீக அழகுடன் நாற்பது வயது மதிக்க தக்க பெண்மணி ஒருவர் வெளிபட்டார்.

பார்த்ததும் இவர்தான் தன் உள்ளகோயிலை ஆட்சி செய்யும் மாறனை ஈன்றெடுத்த மாதரசி என்று விளங்கி கொண்ட சொக்கன்,

“வணக்கம் தாயே!! என்னை ஆசிர்வதியுங்கள் என்று கால்களில் விழுந்தான்.

“ஆஹா!! பதினாறு செல்வங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ்வாய் மகனே!!

நன்றாக இரு என்று வாழ்த்திய அப்பெண்மணி “மாறா!! யாரடா இந்த பண்பு மிக்க பிள்ளை? என்றார்

“எனது நண்பன் அம்மா!! பெயர் சொக்கநாதன்

“அப்படியா? என்ன பொருத்தமான பெயர்!! வா மகனே! உள்ளே வாருங்கள் இருவரும்.

உள்ளே சென்று கூடத்தில் அமரவைக்க பட்ட சொக்கனிடம் ஒரு பழக்குவளையும், சிறிது நீர் மோரும் வைக்க பட்டது. மகிழ்வுடன் ஏற்று கொண்ட சொக்கனிடம் மேளும் பல விசாரணைகளை போட்டார் மாறனின் தாயார். ஆனால் அவரது பேச்சில் மாறனை பற்றிய ஆதங்கம்தான் அதிகம் வெளிப்பட்டது.

“என்ன? அம்மா யார் வந்தாலும் ஒரே பாட்டுத்தானா? போய் உள்ளே சமையல் வேலையை கவனியுங்கள், உணவருந்தி விட்டு நாங்கள் உடனே புறப்பட வேண்டும்.

“ஓஹோ!! அப்படியென்றால் இது போல நிறைய நண்பர்களை இவன் அழைத்து வருவான் போலிருக்கிறதே!! மனதிற்குள் விசன பட்டான் சொக்கன்.

சிறிது நேரத்தில் வாசலில் ஒரு குதிரை வண்டி ஓசை கேட்டது. தொடர்ந்து ஐம்பது வயது மதிக்க தக்க இரண்டு ஆடவர்கள் உள்ளே நுழைந்தனர். அதிலொருவர் நேரடியாக சொக்கனை பார்த்து வா!! அப்பா!! என்று அழைத்து விட்டு புழக்கடைக்கு சென்றார், மற்றொருவர் மருமகனே!! என்று மகிழ்ச்சி பொங்க மாறனை விசாரித்து விட்டு, பின் சொக்கனை யார், என்னவென்று விசாரித்தார். மாறனின் முகத்தில் எண்ணற்ற குழப்ப ரேகைகள் சீறி பாய்ந்து கொண்டிருந்தன. சொக்கனுக்குத்தான் ஒன்றும் பிடிபடவில்லை.

“ஏன் இவன் கடுக்காய் விழுங்கிய கள்ளன் போல விழிக்கிறான்?” என்று உள்ளுக்குள் கேட்டுகொண்டான்

தொடர்ந்து அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது, மாறனின் தாயார் பதார்த்தங்களை எடுத்துவைக்க, அடிக்கடி வடிவழகி!! மோர் கொண்டு வாம்ம்மா!! வற்றல் கொண்டுவாம்மா!! என்று விளித்து கொண்டிருந்தார், அந்த பெண்வந்ததும் தெரியாமல், போவதும் தெரியாமல், ஓசையும் படாமல் வந்து சென்றாள், மாறனும், சொக்கனும் குனிந்த தலை நிமிராமல் உணவருந்தி கொண்டிருந்தனர். மாறனின் தந்தையும், மாமாவும் ஏதேதோ பேசிக்கொண்டு உணவருந்தினர், அவ்வப்பொழுது அவனது தந்தை கோயில் பணிகளை பற்றியும், தஞ்சை நிலவரங்களையும் கேட்டதற்கு மட்டும் பதில் அளித்து கொண்டிருந்தான் மாறன்.

விரைவாக உண்டு முடித்த சொக்கன் எழுந்திருக்கவே!! அவனுக்கு புழக்கடை பக்கம் தண்ணீர் இருப்பதாக வழிகாட்ட பட்டது. அவன் எழுந்து சென்ற மறுவினாடியே இலையை மூடி விட்டு மாறனின் மாமா பின்னாலேயே ஓடினார்.

இருவரும் ஒன்றாகவே கைகளை கழுவினர், பின் அவரே பேச்சு கொடுத்தார்

“சொக்கநாதா!! மாறன் உனக்கு உற்ற நண்பனா?

“ஆம் அய்யா!! ஏன் கேட்கிறீர்கள்?

“நீ எதை வேண்டினாலும் உனக்காக செய்வானா?

“நிச்சயம் செய்வான், கூறுங்கள் என்ன கேட்க்க வேண்டும்?

“தம்பி!! எனது மகள் வடிவழகி, மாறனின் மீது உயிரையே வைத்திருக்கிறாள், சிறு பிராயம் முதலே இருவருக்கும் திருமணம் செய்வதாக முடிவு, ஆனால் மாறன் இந்த திருமணத்திற்கு ஒப்ப மறுக்கிறார். கடந்த ஐப்பசி மாதம் கட்டாய படுத்தி இருவருக்கும் முகூர்த்த ஓலை எழுதி விட்டோம், ஆனால் பெரிய கோயில் கும்பாபிஷேகம் முடிந்ததும் திருமணம் செய்து கொள்வதாய் கூறியிருந்தார், ஆனால் இப்பொழுது நாட்டமில்லாதது போல இருக்கிறார், தாங்களே கூறுங்கள் அவர் வயதிலும், என் மகள் வயதிலும் யாரேனும் திருமணம் செய்யாமல் இருகிறார்களா? ஏன் உங்களுக்கு கூட இந்நேரம் திருமணம் முடிந்திருக்கும், எனக்காக பெரிய கோயில் கும்பாபிஷேகம் முடிந்ததும் அவரை திருமணம் செய்து கொள்ளும் படி கூறுங்கள் தம்பி!! இல்லை என்றால் என் மகளை உயிரோடு பார்ப்பதே அரிதுதான், என்று கண்களில் நீர் விட துவங்கினார். அதற்குள் மாறன் வந்து விட்டான்.

“எது நிகழ கூடாது என்று எண்ணினோமோ அது நிகழ்ந்து விட்டது என்று எண்ணிய படியே பதற்றத்துடன் சொக்கனின் அருகில் மாறன் வர அவனது மாமன் உள்ளே சென்றார்.

கண்களில் நீர் கொப்பளிக்க, கடு கடு என்று நின்று கொண்டிருந்தான் சொக்கன் , அருகில் வந்த மாறன் அவனது தோளில் படபடப்பாக கைகளை வைத்தான். “சொக்கா!!

“உன்னை நம்பியதற்கு நல்ல பாடம் கற்று கொடுத்து விட்டாய் மாறா!! ஏமாந்து விட்டேன்!! ஏமாந்து விட்டேன்!! காலம்முழுவதும் ஒன்றாக இருக்கலாம் என்று நினைத்தேனே!! எல்லாம் பாழாய் போய்விட்டது. இனி இங்கு எனக்கென்ன வேலை? நான் செல்கிறேன் என்று வேகமாக புறப்பட்டு, அவனது தாய் தந்தையரிடம் பணிவுடன் வணக்கம் கூறி குதிரையில் ஏறி தஞ்சை நோக்கி. விரைந்தான் சொக்கன்.

படபடப்பில் ஒன்றும் புரியாதவனாக திகைத்து நின்றான் மாறன்,

கண்ணீரை காற்றில் கரையவிட்டு சொக்கன் தஞ்சை சென்றாலும் “எப்படியும் மாறன் நமக்குத்தான் சொந்தம், அவன் அனைத்தையும் உதறி விட்டு எனக்காக வருவான்.” என்று எண்ணியபடிதான் அவன் சென்று கொண்டிருந்தான்.

காதலன் “மனம் நோகும் படி ஆகி விட்டதே? எத்தனையோ முறை உன்னிடம் இதனை சொல்ல வந்து தயங்கி போய் நின்றிருக்கிறேனடா சொக்கா!!, நீ என்னை புரிந்து கொள்வாய், என் உயிர் போகும் வரை உன்னோடுதனடா நான் இருப்பேன். நீதானடா எனது உயிர்” என்று நினைத்து கொண்டு மனதில் எதையோ உறுதி செய்தவாறு வீட்டுக்குள் நுழைந்தான் மாறன்’.

 மனித மனங்களுக்கு கனவுதான் காணத்தெரியும்’ காலம் வேறுமாதிரியான கோலம் போட இருப்பது தெரியுமா? .அதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும்

                                                                                                                        -ஒசைகேட்கும்



-- Edited by rajkutty kathalan on Friday 4th of October 2013 12:36:52 PM

__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

அனைவருக்கும் நமது சிரம் தாழ்ந்த நன்றிகளும் வணக்கங்களும்!!

@ரோதீஸ்: மூவேந்தர்களுக்கு முன்பே பலதலைமுறை மன்னர்கள் ஆட்சியில் இருந்துள்ளனரே'

அவர்கள் யாரேனும் கட்டி இருக்க கூடும்.



__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

 உளியின் ஓசை தொடர்ச்சி

 

பூலோக வைகுண்டமா? இல்லை பொன்னார் மேனியனின் கையிலாயமா? அல்லது ஆறுகாலமும் ஆடல் பாடல் நிகழும் அமராபதியா? என்று காண்போர் வியக்க, காணதவர் திகைக்க தரணிக்கெல்லாம் சோறிட்ட தஞ்சையம்பதி தன்னிகரில்லாத விழா ஒன்றிற்கு தயாராகி கொண்டிருந்தது.

ஆறேழு ஆண்டுகளாக அரும்பாடு பட்டு கட்டிய பெரியகோயிலின் கும்பாபிஷேகத்தை விண்ணோரும் வியக்கும் படி நிகழ்த்த எண்ணிய மும்முடி சோழன், முதற்கட்ட வேலைகளாக தஞ்சை நகர் முழுவதும் விழாக்கோலம் பூண வைத்தான்.

வீதியெங்கும் பந்தல், வாயிலெங்கும் தோரணம், நாதியில்லா மக்களுக்குக் கூட நாலுவேளை சோறு என திருவிழா கோலம் பூண்டது தஞ்சை. நகரின் எல்லை முதல் முக்கிய வீதிகளின் சந்திப்பெல்லாம் அலங்கார வளைவுகளும், நீள நீள புடவைகளில் வண்ண குழம்பால் பெரிய கோவில் விமானத்தை வரைந்து கும்பாபிஷேக திதியையும், என்னென்ன திதிகளில் என்னென்ன பூசைகள் நடக்க போகின்றன என்றும், அந்த அந்த பூசை வேளைகளில் மக்கள் எங்கு எங்கு நிற்க வேண்டும் என்றும்அறிவிப்பு பலகைகளும் வைக்க பட்டன. விழா நாட்களில் எந்தெந்த சந்திகளில் என்னென்ன கலைநிகழ்ச்சிகள் நடக்க போகின்றன என்றும் அறிவிப்புகள் வைக்க பட்டன.   

மக்களும் தங்களால் இயன்ற அளவிற்கு அவரவர் இல்லத்தில் கமுகங்கூந்தல், தென்னங்கூந்தல், மாவிலை, பனங்குலை, ஈச்சங்குலை, இளநீர் குலை, துணியால் ஆன தோரணம், வாழைகன்று, குலைவாழை, மல்லிகை சரம், சம்பங்கி சரம் என்று அலங்காரம் செய்தனர். முதல்நாள் பூசையில் துவங்கி பதினோரு கால யாகபூஜை முடிந்து கும்பாபிஷேகம் நிகழ இருப்பதால் இந்த ஆறு நாட்களும் மக்கள் இந்த அலங்காரங்களை புதுபித்து கொண்டே இருப்பார்.

தனபண்டாரம், தானியபண்டாரம், அரசு அங்காடிகள், மருத்துவமனைகள், காவல் மன்றங்கள், நீதி மன்றங்கள் முதலான அத்தியாவசிய நிறுவனங்கள் தவிர மற்ற அரசு வாரியங்கள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்க பட்டது, சோழ தேசத்தின் நட்பு நாடுகளுக்கும், அதற்கு திறை, கப்பம் முதலானவை செலுத்தும் நாடுகளுக்கும் அதிகார பூர்வமாக அரச முத்திரையுடன் விழாவிற்கு அழைப்பு அனுப்ப பட்டது. தஞ்சை மட்டுமல்லாது தேசத்தின் அனைத்து பகுதிகளிலும் விழாவின் அழைப்பிதழ் பெரிய பெரிய புடவைகளில் எழுதி வைக்க பட்டது. அதில் மக்களை விழாவில் கலந்து கொள்ளுமாறு மன்னரே நேரடியாக அழைத்திருந்தார். அதுமட்டுமல்லாது தனிப்பட்ட முறையில் தண்டோரா போட்டும், பறை அறைந்தும் நாடு முழுவதும் மக்களுக்கு விளங்கும் படி நிகழ்ச்சி நிரல்கள் வாசிக்க பட்டன. விழாவினை காண வெளியூர்களில் இருந்தும், வெளி தேசங்களில் இருந்தும் வரும் மக்களுக்கெல்லாம் தஞ்சை நகர மக்கள் தத்தமது வீடுகளில் தேங்காய் தாளிதம், எலுமிச்சை தாளிதம், தயிர் தாளிதம், நெய் சோறு, போன்ற சைவ உணவுகளை வழங்கினர். விழா காலம் முழுவதும் ஊரை சேர்த்து ரக்ஷாபந்தனம் (காப்பு) செய்யபட்டிருந்ததால் மக்கள் அனைவரும் பாயில் படுக்காமல், பதி பத்தினி கூடாமல், கறி உணவு சேர்க்காமல் விரதம் பூண்டிருந்தனர்.

எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளே இத்தனை விழாகோலம் பூண்டிருக்கிறது என்றால் தனவந்தர்களும், அரண்மனை பணியாளர்களும் வசிக்கும்  பிரமகுட்டத்துதெரு, ஜய பீமதளித்தெரு, ஆனைக்காடுவார்தெரு, பன்மையார்தெரு, வீர சோழப்பெருந்தெரு, இராசராச வித்யாதரப்பெருந்தெரு போன்ற தெருக்களில் இந்த வீட்டை பார்க்கலாமா!! இல்லை அடுத்த வீட்டை பார்கலாமா!! என்று வீதியில் போவோரெல்லாம் வாயை பிளந்து கொண்டு பார்த்து சென்றனர். தனவந்தர்கள் வசிக்கும் தெருக்களே இப்படி என்றால் தஞ்சை மன்னன் வசிக்கும் அரண்மனையோ! சொர்க்கலோகம் இதுதானோ,!! சுவர்ண லோகம்இதுதானா!!? என்று வியக்கும் வகையில் அலங்காரம் செய்ய பட்டு இருந்தது.

 மாமன்னனின் அறுபத்தி ஏழாம் அகவை ஆண்டில் நிகழும் இந்த சித்திரை மாதத்தில் சுக்கில பட்சத்தில் எதிர்வரும் ஷஷ்டி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் பெரிய கோயில் குடமுழுக்கு நிகழ இருப்பதால் அமாவாசை நாளான இன்று துவக்க பூசைகளில் கலந்து கொள்வதற்காக மன்னனும், அவரது பதினைந்து மனைவி மார்களும் அவர்கள் பெற்ற பெண்டு, பிள்ளைகளும் அரண்மனையில் இருந்து புறப்பட்டு ஆலயத்திற்கு எழுந்தருளி விட்டனர். வடக்கே வேங்கியை கைப்பற்ற நிகழும் போருக்கு படை தலைமை ஏற்று சென்றிருக்கும் இளவரசர் இராஜேந்திர சோழர் மட்டும், விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக வருவதாக ஓலை அனுப்பி விட்டார்.

ஆலயவளாகம் முழுவதும் பரபரப்புடனும், ஜனக்கூட்டம் நிறைந்ததாகவும் காணப்பட்டது. விமானத்தின் பாதி அளவிற்கு பொன் வேய பட்டிருந்தது, மற்ற பகுதிகளில் மும்முரமாக பணிகள் நடந்து கொண்டிருந்தன. விமானத்தை சுற்றி பொற்கொல்லர்கள் ஏறி இறங்குவதற்கும், கும்பாபிஷேகத்தின் பொழுது கலசத்தை கொண்டு செல்வதற்கும் ஏற்ற வகையில் சாரம் அமைக்க பட்டிருந்தது. ஆலயம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்ய பட்டு, வெளிப்புறம் லட்ச்சக்கணக்கான மக்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் பெரிய பந்தல் அமைக்க பட்டு அதன் அருகிலேயே பெரிய கொட்டகையில் வேள்வி சாலை அமைக்க பட்டிருந்தது.

“சிவாகமம் சொல்லும் விதிகளின்படி “ருத்ரசூத்ரக்கிரமம் என்ற வடிவமைப்பில் முப்பத்திமூன்று குண்டங்கள் அமைக்க பட்டு, நூறு தூண்களுடன் எழிலுற உருவாக்க பட்டிருந்தது அந்த வேள்விசாலை. பூமியை ஒரு முழஆழத்திற்கு வெட்டி, புதுமண் பரப்பி,  கீழே ரத்னங்களிட்டு, மட்டம் செய்து பூசி, அதன் மீது தாமரை ஆசனம், , கூர்மாசனம், சிம்மாசனம், நாகாசனம், இடபாசனம் முதலான ஐந்து வகையான ஆசனங்கள் அமைக்க பட்டு அதன் மீது வெட்டிவேர் பந்தல் இட்டு வாழை மர தோரணம் கட்டப்பட்டு “பெருவுடையார் கும்பத்தில் எழுந்தருளுவதற்கான மேடை அமைக்க பட்டிருந்தது. மேற்சொன்ன விதிகளின் படியே மற்ற பரிவார தெய்வங்களுக்கும் இறையாசனங்களும், குண்டங்களும் அமைக்க பட்டு தயார் நிலையில் இருந்தன. அந்த யாக சாலை முழுவதும் சதுர்வேதி மங்கலத்து அந்தணர்கள் குடங்களில் முப்புரிநூல் சுற்றிகொண்டும், நானற் புல்லால் கயிறு திரித்து கொண்டும் இன்ன பிற பணிகளை மேற்கொண்டும் இருந்தனர். ஆலயத்தின் உள்ளே மங்கள வாத்தியங்கள் முழங்க சில முதற்கட்ட பூசைகள் துவங்கி இருந்தன.

அரசனின் முன்னிலையில் பிராதான அந்தணர் “அனுஞை எனப்படும் விநாயகர், மற்றும் பரிவார தெய்வங்கள் முதலானவர்களிடம் விழாவிற்கான அனுமதி கேட்கும் பூஜையை துவங்கினார்.

தொடர்ந்து கணபதி ஹோமம் முடித்து “கிராம சாந்தி எனும் பூஜை மேற்கொள்ள பட்டது. இதில் பைரவ பெருமானை வேண்டி தஞ்சை நகர் முழுவதும் விழா முடியும் வரை காவல் இருக்கும் படி நகரின் எல்லைகளில் பலிகள் கொடுக்க பட்டன. தொடர்ந்து “பிரவேசபலி எனப்படும் கிரியையில். ஆலயத்தைச் சுற்றி எண்திசைகளிலும் இன்னும் பிரம்மஸ்தானம் என்ற இடத்திலுமாக சேர்த்து ஒன்பது இடங்களில் (நவசந்திகளில்) நீற்று பூசுனைக்காய் வெட்டி பலி கொடுத்து, ராஷஸர்களை அழிக்கும் ரஷோக்னதேவரை முன்னிறுத்திப் போற்றி “ரஷோக்ன ஹோமம் செய்து.

சிவாஸ்திரம் (சிவனின் ஆயுதம்), அகோராஸ்திரம் (ருத்திர ஆயுதம்), பிரத்தியங்கிராஸ்திரம் (எரிசின கொற்றவையின் ஆயுதம்), பாசுபதாஸ்திரம் (சிவனின் மழு) ஆகிய நாற்பெரும் ஆயுதங்களைப் போற்றி திசாஹோமம் (திசைகளுக்காண வேள்வி) செய்து சிறப்பாக கோபூஜை, கஜபூஜை ஆகியவற்றையும் செய்தனர்.

தொடர்ந்து வாஸ்து சாந்தி எனப்படும் பூசையில் பூமியின் அடியில் உறங்குவதாக கருதப்படும் “வாஸ்து புருஷன் அசையாமல் (அசைந்தால் பூகம்பம் ஏற்படுமாம்) இருக்க அவனை நாகபந்தனம் (நாகத்தால் கட்டுதல்) செய்தனர். பின் வைக்கோலால் ஒரு ஆளுருவம் செய்து அதில் வாஸ்து புருஷனை ஆவாகித்து அதன் மீது பிரம்மன் உட்பட ஐம்பத்தி மூன்று தேவர்களை ஆவாகனம் செய்து  அதன் தலையில் ஹோமத்தீயை கொளுத்தி ஆலயம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இழுத்து வந்து அதன் மீது சாந்தி நீர் தெளித்தனர் .

பின்னர் நவகிரகங்களையும் அவற்றிற்கு உரிய வண்ண துணி, தானியம், ரத்தினம் முதலானவைகளுடன் அவற்றின் திசைகளில் இருத்தி நவகிரக மகா யாகம் செய்தனர்.

தொடர்ந்து அனைவரும் யாக சாலை நோக்கி வந்து அங்கு அங்குரார்ப்பணம் (முளைபாலிகை) எனப்படும் சடங்கை நிகழ்த்தினர். இதில் “பூ சுக்தம் (மண்ணின் பெருமைகளை சொல்லும் வேதமந்திரம்)என்ற மந்திரம் ஓதபெற்று எடுக்கப்பட்ட மண்ணை வேள்விசாலையின் வடமேற்கு மூலையில் இட்டு அதன் மீது பாலில் ஊறவைத்த நவதானியங்களை விதைத்தனர்.

பின்னர் ரக்க்ஷாபந்தனம் எனப்படும் காப்புகட்டும் நிகழ்ச்சியில், அரசனுக்கும் அவனது மற்றொரு மகனுக்கும் இன்ன பிற முக்கிய அதிகாரிகளுக்கும், வேள்வியில் கலந்து கொள்ள இருக்கும் அந்தணர்களுக்கும் மஞ்சளில் நனைத்த பருத்தி நூலை வலக்கை மணிக்கட்டில் கட்டினர். இந்த ரக்ஷாபந்தனம் என்ற நிகழ்ச்சியுடன் முதற்கட்ட கிரியைகள் அனைத்தும் முடிவடைந்து யாகசாலை பூஜைகள் துவங்க இருந்தன. ஆனால் அமாவசை முடிந்து பிரதமை திதி துவங்கி இருந்ததால் மறுநாள் மாலையில் இருந்து வேள்விசாலை பூஜைகள் துவங்கும் என அறிவிக்க பட்டது.

                                                                       *****

 

 



__________________


கவி

Status: Offline
Posts: 67
Date:
Permalink   
 

Excellent narration... wonderful information..... great wordings..... super rajkutty kaathalan.... hats off

__________________


எழுத்தரசர்

Status: Offline
Posts: 196
Date:
Permalink   
 

அற்புதம் என்ற வார்த்தைக்கு மேல் அதியற்புதம் என்று சொல்லலாம்.

இல்லை இல்லை.. அதற்கெல்லாம் மேலே..

எவ்வளவு அருமையாக குடமுழுக்குக்காக விழாக்கோலம் பூண்டிருந்த தஞ்சை மாநகரத்தையும் மக்களையும், விழா நிகழ்சிகளையும் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள்.

வரலாற்று புதினம், அதுவும் செந்தமிழ் நாட்டின் பின்னணியில் எழுதுவது என்பது சாதாரண விஷயமல்ல.

கதை நடக்கும் காலகட்டத்து மாந்தர்கள் பேசிய வழக்கு மொழியை கையாண்டு எழுதுவது என்பது சாதரணமான விஷயம் அல்ல.

மொழியின் பால் ஆழ்ந்த ஈடுபாடும், புலமை அறிவும், ஆராயும் திறனும் இருந்தால் மட்டுமே இதை செய்ய முடியும்.

நீங்கள் அதை செய்திருக்கிறீர்கள்.

உண்மையிலேயே நீங்க தான் எழுத்தரசர்.

உங்கள் திறமைக்கு முன்பாக நான் தலைவணங்குகிறேன் நண்பா.

வாழ்க நீவிர். வளர்க உங்கள் எழுத்தாற்றல்.

அன்புடன் - உங்கள் மனதுக்கினிய நண்பன் Fridger

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

great

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

விழாக்கோலம் பூண்டிருக்கும் வீதிகளை பற்றிய வர்ணனை ரொம்ப அழகு.... மிக ஆழமான வர்ணனைகள்....
புதிய பெண்ணின் வரவு எத்தகைய சிக்கலை உண்டாக்கப்போகிறது?னு புரியல....
அந்த மனித மனங்களின் கனவை மகேசன் என்ன செய்ய காத்திருக்கானோ????

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

super...இன்று ஒரே நாளில் முழுவதும் படித்தது ஒரு சினிமா பார்த்த பிரமிப்பும் ஆச்சரியமும் தருகிறது....

பல வார்த்தை பிரவாகம் எப்டி இது போல் எழுத முடிகிறது என்று யோசிக்க வைக்கிறது....

இது போல் ஒரு கதை தந்தற்கு நன்றிகள் பல....

nd proud to be in this forum...nd bcaz of little busy with project submission got only few minutes free

...so I cant follow ur story...so sorry for that...ok keep rocking...



-- Edited by rajkutty kathalan on Sunday 6th of October 2013 01:17:32 PM

__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

அனைவருக்கும் நமது நன்றிகள்

@srinivasan: நன்றி நண்பரே!!

@FRIDGER: உங்களின் மனம் திறந்த பாராட்டில் நெகிழ்ந்து போகிறேன். நன்றிகள்

@cutenellaimdu: நன்றிகள் நண்பரே!!

@msvijay, samram  :நன்றிகள் பல கோடி

தொடர்ந்து நல்லாதரவு தாருங்கள்



__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

உளியின் ஓசை தொடர்ச்சி........

   தஞ்சை நகரின் எல்லையில் செய்யபட்டிருந்த அலங்காரங்களையும், நாற்றிசையும் கேட்கும் பாட்டிசையயும் கண்டபோதும், கேட்டபோதும் “நாம் மீண்டும் தஞ்சை திரும்பும் பொழுது நகரமே கோலாகலமாக இருக்கும், அதில் ஆலோலம் பாடி அனந்த வானில் சிறகடிக்கலாமடா சொக்கா... என்று மாறன் கூறிய வார்த்தைகள் சொக்கனுக்கு நினைவில் வந்தன. முட்டிக்கொண்டு கண்ணீரும் வந்தது.

“நாம் ஏன் அழ வேண்டும் நாமா அவனை ஏமாற்றினோம்?, நாமா ஒரு பெண்ணை நிச்சயித்து திருமணத்திற்கு ஓலை எழுதி விட்டு வந்து காதல் நாடகம் ஆடினோம்?,  இப்பொழுது ஏமாந்து விட்டோமே!! நாம் ஏன் அழ வேண்டும்? நான் அழ மாட்டேன்

கண்களை துடைத்து கொண்டான். கண்களை துடைத்தால் போதுமா? மனதின் துக்கத்தை யார் துடைப்பது? அது கொடுக்கும் வேதனை மீண்டும் கண்ணீரை பெருக்கெடுக்க வைத்தது. ஒருவாறு சமாளித்து கொண்டு பாசறைக்கு சென்றான். விழா உற்சாகத்தில் இருந்ததால் அங்கு யாரும் இவனை கண்டு கொள்ளவில்லை. மாலை நேரம் என்பதால் போர் பயிற்சிக்கு சென்றிருந்த மற்ற வீரர்களும் அப்பொழுதுதான் வந்து கொண்டிருந்தனர். அவசர அவசரமாக அனைவரும் எங்கோ புறப்பட்டு கொண்டு இருந்தனர். தனது மஞ்சத்தில் சோகமே உருவாய் அமர்ந்திருக்கும் சொக்கனின் தோளில் கை வைத்து

“என்ன சொக்கா! எப்பொழுது வந்தாய் என்றான் அவனது நண்பன் அதிவீரன்.

“ம்ம்ம்!!! இப்போது தானடா வந்தேன்!! தடுமாறினான்

“ஏணடா!! ஒரு மாதிரியாக இருக்கிறாய்? முதற்கால யாக பூசைகள் துவங்க இருக்கிறது, தஞ்சை மக்கள் அனைவரும் அங்குதான் கூடி உள்ளனர் நாங்களும் அங்குதான் புறப்பட இருக்கிறோம், நாமெல்லாம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டிருக்கிறோம் புறப்பட வில்லையா நீ??

“அப்படியா? இதோ புறப்படுகிறேனடா என்று கூறிவிட்டு எழுந்து போய் நீராடி சீருடை அணிந்து அவர்களுடன் புறப்பட்டான் சொக்கன். மனதில் மாறனின் மீது கோபம் இருந்தாலும் அவனுக்கு மாறனை காண வேண்டும் போல இருந்தது.

“எப்படியும் அவன் இந்நேரம் இல்லத்திலிருந்து புறப்பட்டு வந்திருப்பான், நம்மை காண துடியாய் துடிப்பான். இலுப்பை தோப்பிற்கு செல்லக்கூடும் என்று எண்ணி கொண்டான். ஆனால் பணி நிமித்தமாக ஆலய வளாகத்திற்கு புறபட்டான்

                                                                                                                        *******

   சொக்கன் விருட்டென்று புறப்பட்டதும் எதையோ முடிவெடுத்தபடி வீட்டிற்குள் சென்ற மாறன் நேராக தனது மாமாவிடம் சென்று

“இதோ பாருங்கள் மாமா!! நீங்கள் எனது நண்பனிடம் என்ன கூறினீர்கள் என்று எனக்கு தெரியாது, ஆனால் ஒன்று மட்டும் கூறி கொள்கிறேன், தங்களின் மகளை நான் மணந்து கொள்வேன் என்று மட்டும் கனவிலும் எண்ணாதீர்கள் என்று கூறி விட்டு தனது தாய் தந்தையரிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் புறப்பட எத்தனித்தான். அடுப்பங்கரையில் நின்று கொண்டிருந்த வடிவழகியின் காதுகளில் ஈட்டியை பாய்ச்சியது போல இருந்தது மாறனின் வார்த்தைகள்.

பதினெட்டு வயது நிரம்பிய பதுமை அவள், வடிவழகி என்ற பெயருக்கு ஏற்ப வடிவான முகத்துடனும், வாகான வடிவுடனும், தெளிவான சிந்தையுடனும், தேர்ந்த அறிவுடனும் இருப்பவள், மாறனை தன் மணாளனாக வடித்து கொண்டவள். சிறு பிராயம் முதல் மாறனை நினைக்க துவங்கிவிட்டால், மாராப்பு விலகுவது கூட அறியாமல் அவனை நினைத்து உருகும் மாறனின் மாமன் மகள் அவள். மனிதர்கள் போட்ட கோலம் இப்படி இருக்க, காலம் போட்ட கோலமோ மாறனின் மனதை சொக்கனின் பக்கம் திருப்பி விட்டது.

“நில்லடா!! எங்கேயடா செல்கிறாய் மூடா!! ஒரு பெண்ணின் வாழ்க்கையை இப்படி சீரழிக்கிறாயே!! நீ வாழ்வாயா??

“வாழையடி போல வாழ்வாய் என வாழ்த்த வேண்டிய மாறனின் தாயின் வாயிலிருந்துதான் மேற்சொன்ன வசவு வெளிபட்ட்டது.

“நான் வாழவில்லை என்றால் ஒன்றும் குறைய போவதில்லை அம்மா!! நானா வடிவழகியை மணக்க விரும்பினேன்? இதுவரை அவளிடம் ஒரு வார்த்தையாவது பேசி இருப்பேனா?? தேவை இல்லாமல் அந்த பெண்ணின் மனதில் ஆசையை வளர்த்து விட்டு இப்பொழுது எல்லாவற்றிற்கும் நான்தான் காரணம் என்றால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்?நானும் மனிதன் தானம்மா எனக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் உண்டு, என்னை புரிந்து கொள்ள இங்கு யாருமே இல்லை மனதில் உள்ள வேதனை சொற்களாய் வெளிப்பட்டது மாறனிடம்

அவனது தந்தை ஒன்றும் பேச இயலாமல் ஓரமாய் அமர்ந்திருந்தார், அவனது மாமனும், வடிவழகியும் மாறி மாறி வெதும்பி கொண்டிருந்தனர்.

தன்னால் முடிந்த வரை மாறனின் தாயாரும் போராடி பார்த்தார் மறுதலித்து புறப்பட்டுவிட்டான் மாறன்.

“அம்மா!! வடிவழகி அழதேம்மா... பெரியகோயில் குடமுழுக்கிற்கு இரண்டொரு நாட்களில் நாம் தஞ்சை செல்லத்தான் இருக்கிறோம். அங்கு போய் அவனது காலில் விழுந்தாவது உனக்கும் அவனுக்கும் திருமணம் செய்து வைத்து விடுகிறோம். கவலை படாதே அம்மா!! பெரிய கோயில் கும்பாபிஷேகத்திற்கு பின் மாறன் ஒன்று திருமணம் செய்துகொள்ள வேண்டும் இல்லையென்றால், எனக்கும் அவருக்கும் எள்ளும் தண்ணீரும் இறைக்க வேண்டும். இந்த இரண்டில் ஒன்று நிச்சயம் நடந்தே தீரும். என்று சபதமிட்டு அவளை தேற்றினாள் அந்த பெண்மணி.

                                                                                                                       ******

 



__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

 

ஐந்து நாட்களில் முதல் நாள் இரவு ஒன்றும், கும்பாபிஷேக தின காலை வேளையில் ஒன்றும், இடைப்பட்ட மூன்று நாட்களில் தினத்திற்கு மூன்று காலமுமுமாக மொத்தம் பதினோரு காலமாக நிகழ இருக்கும் யாக சாலை பூசையின் முதற்கட்ட வேலைகளாக யாக சாலை பிரவேசம் என்ற  சடங்கு ஆலய வளாகத்தில் துவங்கி இருந்தது. வேள்விசாலையின் முகப்பில் ஒரு பகுதியில் அரச குடும்பத்தினரும், முக்கிய அதிகாரிகளும் அமர்ந்து பார்க்கும் வண்ணம் இருக்கைகள் அமைக்க பட்டிருந்தன. மற்றொரு பகுதியில் திருமுறை இசைகலைஞர்களும், மங்கள வாத்தியக்காரர்களும் அமர்ந்து இசைக்கும் வண்ணம் வடிவமைக்க பட்டிருந்தது. மக்கள் அமர்ந்து பார்க்கும் பகுதிகளில் நெரிசல் அதிகம் காணப்பட்டது. சொக்கன் உள்ளிட்ட திறமையான வீரர்கள் பலர் அரச குடும்பத்திற்கு சமீபமாக அமர்ந்திருக்கும் மக்கள் அருகே பணியில் ஈடு பட்டிருந்தனர். ஆலய வளாகத்தில் மங்கல இசை ஒலிக்க சில சடங்குகள் நிகழ்ந்து கொண்டிருந்தன.

இதில் “கடஸ்தாபனம் என்ற கிரியையில்  வெண்துணியால் வடித்து எடுக்கப்பெற்ற காவிரியின் புனித நீர் மந்திரபூர்வமாக பிரகதீஸ்வரர் எழுந்தருள இருக்கும் பிராதான குடத்திலும், ஏனைய பரிவரங்களின் குடங்களிலும் சேர்க்கப்பட்டு அதில் வெட்டிவேர், குங்குமபூ, சாதிக்காய்,கடுக்காய் வில்வம் உள்ளிட்ட சில மூலிகைகள் போடப்பட்டு குங்கிலிய புகை கட்டப்பட்டு மாவிலை, தர்ப்பை, தேங்காய் முதலியவை கொண்டு மூடபட்டது. இதன்பின் கும்பங்கள் அலங்காரம் செய்யப்பட்டு “கலாகர்ஷணம் என்ற கிரியை மூலம் உரிய வேதமந்திரங்கள் முழங்க இறைசாந்நித்யம் கும்பங்களில் சேர்க்கப்பட்டது. அடுத்து மங்கல வாத்திய கோஷத்துடனும் வேத, திருமுறைப் பாராயணங்களுடன் கும்பங்கள் வேள்விசாலைக்கு எடுத்து வரப்பெற்று வேதிகையில் ஆவாககிக்க பட்டது.

அரசன் உள்ளிட்ட அனைத்து மக்களும்

“தென்னாடுடைய சிவனே போற்றி!!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

“நமபார்வதி பதயே!! ஹர ஹர மகா தேவா!!

என்று விண்ணதிர முழங்கி தலைமேல் கைகூப்பி வணங்கினர்.

அந்தணர்கள் திருவாச்சி வைத்தும், மலர் சரங்கள் கொண்டும், பொன்னாபரனங்கள், பட்டாடைகள் கொண்டும் இறை சாந்நித்தியம் புகுத்த பெற்ற குடங்களை அலங்கரித்தனர். திருமுறை பராயணம் துவங்கி இருந்தது. முக்கிய அதிகாரிகள் அமரும் பகுதியில் தலைமை சிற்பிக்கும் இடம் ஒதுக்க பட்டிருந்தது, அவரின் பிடிவாதத்தால் மாறனும் அங்கு அமரவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி போனான்.

ஆம்.!! சிராப்பள்ளியில் இருந்து புறப்பட்ட மாறன் சொக்கனை கான வேண்டிய ஆவலில் முதலில் படைவீரர் பாசறைக்கு சென்று விசாரித்தான், பிறகு அவர்கள் அனைவரும் ஆலயத்திற்கு சென்றுள்ளதாக தகவல் அறிந்து நீராடி, நீர் பூசி ஆலய வளாகத்திற்கு வரும்போது சரியாக தலைமை சிற்பி கண்ணில் படவே, அவர் அவனை வேற்றிடத்திற்கு அகல விடாமல் தன்னுடனேயே வைத்து கொண்டார். சொக்கனை தேடுவதற்கு வாய்ப்பு இல்லாமல் முன்னர் சொன்ன சடங்குகள் நிகழும் இடத்தில் தவித்து நின்று இப்பொழுது இங்கு வந்து அமர்ந்திருக்கிறான் மாறன். mமற்றவர் கண்கள் பூசைகளில் நிலைத்து இருந்தாலும் மாறனின் கண்கள் சொக்கன் எங்காவது நிற்கிறானா?? என்றுதான் தேடிகொண்டிருந்தன. ஆனால் மாறனால் ஏற்பட்ட மனகேதத்தில் இந்த மகத்தான சடங்குகளில் கவனம் இன்றி வேள்விசாலை பகுதிக்கு முதுகு காட்டி சொக்கன், மக்கள் அமர்ந்திருக்கும் ஒரு பகுதியில் நின்று கொண்டிருந்தான்.

தொடர்ந்து மிக மிக விரிவாக பிரதான குண்டத்தில் பிரதான ஆச்சார்யரால் சிவாக்னி ஆவாஹனம் செய்யப்பெறும் “அக்கினி காரியம் என்ற சடங்கு துவங்கியது. இதில் “சூரிய காந்தாக்னி சங்கிரகம் என்ற சடங்கின் மூலம் சூரியனிலிருந்து பூதக்கண்ணாடி மூலம் பெறப்பட்ட நெருப்பை  “கனபதிக்கான குண்டத்தில் இட்டு பின் பெருவுடையாரின் பிராதான குண்டத்தில் இட்டு யாகத்தை துவக்கினர். ருத்ர மந்திரம், சமகம், மந்திர புஷ்பம், காயத்திரி ஜபம், நால் வேத பாராயணம் உள்ளிட்ட முக்கிய மந்திரங்கள் முழங்க அக்னியில் பழங்கள், காய்கள், மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், வெண்ணெய், நெய், பலகாரங்கள், பட்டாடைகள் போன்ற பொருட்கள் “ச்ருக்ச்ருவம்என்ற மரகரண்டிகளால் ஹோமம் செய்ய பட்டது.

இது போல எத்தனை சடங்குகள் நிகழ்ந்தால் என்ன? காதலின் கால்வாயில் துணையை தொலைத்த கயல்களாய் தவித்தனர் சொக்கனும் மாறனும். அவ்வபொழுது சொக்கன் வேள்விசாலை பக்கம் திரும்பினாலும் மாறன் அமர்ந்திருக்கும் பகுதியை கவனிக்காமல் இருந்தான். ஆனால் சொக்கன் அந்த பகுதியில் நிற்கிறான் என்பதை மாறன் கண்டு கொண்டு, அவன் எப்பொழுது தன் பக்கம் திரும்புவான் என்று காத்து கொண்டிருந்தான். ஆனால் யாகத்தின் உச்சகட்டமான “பூரண ஆகுதி கொடுக்க பட்ட பொழுது அனைவரும் எழுந்து நின்றனர். அப்பொழுது கூட சொக்கன் மாறனின் பக்கம் திரும்ப வில்லை.

பின்னர் குடத்தில் ஆவாகனம் செய்யபட்டிருக்கும் பெருவுடையாருக்கு பதினாறு வகையான உபசாரங்கள் செய்யப்பட்டு, நான்கு வேதங்கள், பன்னிரு திருமுறைகள், மங்கள வாத்தியங்களில் புண்ணிய ராகங்கள் இசைக்கபட்டு, பஞ்சதீபம் காட்டப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. மக்கள் அனைவரும் விண்ணதிர கோஷமிட்டனர்.

“அப்பாடா....... ஒருவகையாக பூஜை நிறைவு கட்டத்தை நெருங்கி விட்டது, இனி நாம் புறப்பட்டால் ஒன்றும் கேள்வி இருக்காது என்று எண்ணிய சொக்கன் மெல்ல கூட்டத்திலிருந்து நழுவி “தீ பந்த வெளிச்சம் இல்லாத பகுதிக்கு ஊடுருவினான்.

இதனை கண்ட மாறன் அருகில், கசிந்துருகி இறைவழிபாடு நிகழ்த்தும் தலைமை சிற்பியின் கண்களில் படாமல் அங்கிருந்து நழுவி சொக்கன் சென்ற அந்த இருட்டான பகுதிக்கு சென்றான்.

அந்த பாதை சிவகங்கை குளத்திற்கு செல்லும் பாதை என்பதை அறிந்த மாறன், “சொக்கன் ஏன் அங்கு செல்கிறான் என்ற குழப்பத்துடன் பின் தொடர்ந்தான். ஆலய வளாகத்திலிருந்து ஒரே இரைச்சலான சத்தம் கேட்டு கொண்டிருந்தது. சிறு சிறு புதர் செடிகள், பூசெடிகளுடன், புல் வெளியுமாக இருந்தது அந்த இடம். ஆலய சுற்று மதிலின் மீது கொளுத்தி வைக்க பட்டிருந்த தீபந்தங்கள் நல்கிய வெளிச்சத்தில் கோபுரம் முழுவதுமாக கண்களுக்கு புலப்பட வில்லை என்றாலும் சுற்று பகுதிகளில் ஓரளவிற்கு தெரிந்த வெளிச்சத்தில் சொக்கனை பின் தொடர்ந்த மாறன்.

“சொக்கா......!! நில்லடா!! உனது மாறன் வருகிறேன் அதை கூட உன்னால் அறிந்து கொள்ள முடிய வில்லையா?? என்றான் கத்தும் குரலில்.

குரல் கேட்டு திரும்பிய சொக்கன்

“என்னது? எனது மாறனா? உன்னை நேருக்கு நேராக பார்க்க வேண்டிய சூழல் வந்து விடுமோ என்றுதான் நான் அங்கிருந்து புறபட்டே வந்தேன். இங்கேயும் வந்து விட்டாயா?? இன்னும் என்னிடம் என்ன இருகிறதடா?? நான் ஏமாந்தது போதும். தயவு செய்து இங்கிருந்து சென்று விடு குரல் உடைந்து விம்மினான் சொக்கன்.

“என்னையா ஏமாற்று காரன் என்கிறாய்? சொக்கா உன்னிடம் இதை பற்றி சொல்லாமல் விட்டது எனது தவறுதானடா!! ஆனால் இந்த திருமணத்தில் எனக்கு துளிக்கூட விருப்பம் இல்லையடா, என்னை புரிந்து கொள்ள மாட்டாயா? என் உடல்,பொருள்,ஆவி அனைத்திலும் நீதான் நிரம்பி உள்ளாய். நீ இல்லாமல் இனி என்னால் வாழ முடியாது. உனது ஆதங்கம் எனக்கு புரிகிறது, ஆனால் ஒன்றை தெரிந்துகொள் என் வாழ்வின் இறுதி வரை உன்னோடுதான் இருப்பேன். ஒரு வேளை வேறு யாரோடும் நான் சேர வேண்டிய நிர்பந்தம் உண்டானால், நான் உயிர் தறிப்பது அரிதடா.. எனக்கு நீதான் வேண்டும் சொக்கா...!! தயவு செய்து என்னை ஏற்று கொள்ளடா என்று கதறிய பொழுது அருகில் இருந்த ஆளுயர புதரில் “சர சர “ என்று ஏதோ ஓசை கேட்டு திடுக்கிட்டனர் இருவரும். பின்னர் ஏதேனும் புதர் விலங்காக இருக்க கூடும் என்றெண்ணி கொண்ட சொக்கன் பேச துவங்கினான்.

“மாறா... என்னை மன்னித்து விடடா உன்னை புரிந்து கொள்ளாமல் சினந்து விட்டேன். உன்னை என்னால் யாருக்கும் விட்டு கொடுக்க முடியாதடா அழுதுகொண்டே ஓடி வந்து கட்டி பிடித்தான்.

இருவரும் மாறி மாறி கதறினர் பின் சமாளித்து சொக்கன் பேச துவங்கினான்.

“மாறா!! கும்பாபிஷேகம் நிகழ்ந்ததும் எப்படியும் உனக்கு திருமண ஏற்பாடு செய்வார்கள், என்னடா செய்வது?”

“உண்மைதான் சொக்கா!! நம் நிலைமை காதலிக்கும் யாருக்கும் வரக்கூடாது, நான் இன்னாரை காதலிக்கிறேன், அதனால் என்னால் திருமணம் செய்து கொள்ள இயலாது என்று கூறக்கூட தகுதி அற்றவர்களாகி விட்டோம். மீறி நாம் ஒன்றாக போராடினாலோ அரச தண்டனையில் இருந்து தப்ப முடியாது, அப்படியே தப்பித்தாலும் ஆணும் ஆணும் சேர்ந்து வாழ்வதை இந்த சமூகம் ஏற்று கொள்ளுமா? நம்மை குத்திக்காட்டியே மானத்தை வாங்குவார்கள், நம்மால் நம் தாய் தந்தையரும் இழி சொற்களுக்கு ஆளாவார்கள், அரச தண்டனையில் சிக்குண்டு சாவதை விடவும், அதற்காக பயந்து ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்வதையும் விட மேலானது மனமொத்த மரணம், ஆலய கும்பாபிஷேகம் முடிந்ததும் இருவரும் ஏதேனும் நஞ்சை உண்டு ஒருவரை ஒருவர் பிரியாமல் எங்கேனும் சென்று அமைதியாக உயிரை விட்டுவிடுவோமடா சொக்கா!!

ஒருகணம் அமைதியாக மாறனின் கண்களை உற்று நோக்கிய சொக்கன் அவனை மேலும் இறுக்கி அனைத்தபடி

“என் மனம் நினைத்ததையே நீயும் கூறுகிறாய் மாறா!! இந்த ஐந்து நாட்களும் நீ ஆசை பட்டது போல தஞ்சையின் அனைத்து கடைவீதிகளிலும் திரிந்து, எல்லா நிகழ்ச்சி களையும் பார்வையிட்டு மகிழ்வாக இருப்போமடா.. ஆறாவது நாள் நாம் திட்டத்தை செயல் படுத்துவோம் இனி நீ அழக்கூடாது வா!! ஆலய வளாகத்தில் இந்நேரம் இறையமுது விநியோகிக்க துவங்கி இருப்பார்கள் போய் உண்டு விட்டு நிம்மதியாக உறங்குவோம் என்று கூறி அவனது தோள்களை பற்றி அழைத்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் சொக்கன்.

ஆனால் இதுவரை அவர்கள் பேசிகொண்டிருந்த அனைத்தையும் அடி பிறழாமல் கேட்டுகொண்டிருந்த அந்த ஆஜானு பாகுவான ஆண் உருவம் அருகிலிருந்த ஆளுயர புதரில் இருந்து வெளிப்பட்டது.

“சொக்கா!! உன்னை அன்று ஆலய வாயிலில் மாறனுடன் பார்த்த பொழுதே எனக்கு சந்தேகம் எழுந்தது, இன்று நிச்சயமாகி விட்டது. சரி... நினைத்த படி ஐந்து நாட்கள் மகிழுங்கள் ஆனால் ஆறாம் நாள் உங்கள் திட்டம் நிறைவேற போவதில்லை என்று நினைத்தவாறே அந்த புதரிலிருந்து வெளிப்பட்ட சொக்கனின் நண்பனான வீரநரேந்திரன் எனும் ஓவியன் மனதிற்குள் திடமாக எதையோ எண்ணிய வாறே குளத்தின் படித்துறையில் இறங்கினான்.

மாறனை பெற்றவள் பூண்ட சபதம் ஜெயிக்க போகிறதா? காதலர்களின் திட்டம் நிறைவேற போகிறதா?, இவர்களை காதலித்த அபலை பெண்களின் கதி என்ன? நரேந்திரன் என்ன செய்ய போகிறான்?  அறிந்து கொள்ள காத்திருங்கள் அடுத்த பதிவு வரை

                                                                                                                                                                                   -ஒசைகேட்கும்

 



__________________


கவி

Status: Offline
Posts: 67
Date:
Permalink   
 

Suspense thaanga mudiala?? seekiram adutha pativu idungal

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

தஞ்சை விழாவிற்கு எங்களையும் அழைத்து சென்றதை போல மிக விரிவான விவரிப்புகள்.... கடைசியில் வில்லனின் நுழைவு, எந்த விதமான விபரீதத்தை ஏற்படுத்தப்போகுதோ?... அதைவிட அதிகமா இந்த காதலர்கள் எடுத்திருக்கும் முடிவு இன்னும் அதிக பதட்டத்தைத்தான் உண்டாக்குது.... சிறப்பா போகுது, தொடருங்க...

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

எதோ கோயில் பூஜைகள் நடக்கும் இடத்தில் இருப்பது போல் ஒரு உணர்வை தருகிறது உங்கள் எழுத்து....அருமை....ராஜாவாக இருந்தால் 1 கோடி பொற்காசுகள் பரிசு தரலாம் உங்கள் வார்த்தை தேடலுக்கு....இப்போ தர முடிந்தது 1 கோடி வாழ்த்துக்கள் ....கடைசியில் கலங்க வைத்து விட்டீர்கள் ....ஓவியனின் மூலம் நல்லது நடந்தால் சந்தோசம்....

__________________


எழுத்தரசர்

Status: Offline
Posts: 196
Date:
Permalink   
 

அடேயப்பா.. தஞ்சைப் பெரியகோயிலின் குடமுழுக்கு விழாவை நேரில் கண்டு களித்த நிறைவை உங்கள் எழுத்துக்கள் மூலம் கொடுத்துவிட்டீர்கள்.

நிறைய உழைத்திருக்கிறீர்கள்.

ஆழ்ந்த ஈடுபாடு இல்லாவிட்டால் இத்தகைய உழைப்பும், எழுத்தும் கடினம்.

"யாரங்கே இவரைப் பாராட்ட தமிழில் புதிய வாத்தைகளை கண்டுபிடித்து தருமாறு தமிழ் மன்றத்து புலவர்களை நான் பணித்தேன் என்று உத்தரவு போடுங்கள்" - என்று ராஜராஜ சோழனே வந்து கட்டளை பிறப்பிக்கவேண்டும்.

அத்தனை உயர்வான எழுத்துக்கள்.

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

அடடா.. இரண்டு பேர் சேர்ந்து வாழ விடாமல் தடுக்க இருநூறு பேர் வருகிறார்கள்.. இன்னும் என்னென்ன நடக்க போகிறதோ? சீக்கிரம் அடுத்த பகுதியைப் பதியவும்.

__________________

gay-logo.jpg

 



இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

உளியின் ஓசை- தொடர்ச்சி

 

இன்னும் ஒரு தினம் கழிந்தால் கோலாகலமாக நிகழ இருக்கும் கும்பாபிஷேகத்தை காண சோழதேசத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் தஞ்சையில் குவிந்த வண்ணம் இருந்தனர். ஒவ்வொரு நாள் யாகபூஜைகள் முடிந்தவுடன் விதவிதமான கலைநிகழ்சிகள் நகர் முழுவதும் அரங்கேற்றபட்டு கொண்டிருந்தன. குடக்கூத்து, பொம்மலாட்டம், குதிரையாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காளையாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம், போன்ற நாட்டுபுற நடனங்கள் ஒரு பக்கம் என்றால், பரதநாட்டியம், மலையாளத்து பாணி மோகினி ஆட்டம், களியாட்டம், மற்றும் பாரத கண்டம் முழுவதும் பல்வேறு இன மக்களால் ஆடப்படும் பாரம்பரிய நடனங்கள் ஒரு பக்கம் ஆடப்பட்டது. போதாதென்று இராமர் பட்டாபிஷேகம், அரிச்சந்திரன் மயான காண்டம், சிலப்பதிகார வழக்குரை காதை, மகாபாரத காட்சிகள் போன்ற பல புராண இதிகாசங்களும் வீதிக்கு வீதி நாடகமாக நடித்து காட்டப்பட்டது.

இன்று, ஒருபகுதியில் நடனம் என்றால், நாளை நாடகம், நாளை மறுநாள் நாட்டுபுறக்கலைகள் என்று சுழற்சி முறையில் தஞ்சை முழுவதும் நிகழ்ச்சிகள் அரங்கேற்ற பட்டுகொண்டிருந்தன. அவை நடைபெறாத வீதிகளில் பெண்கள் பலர் தோழியர்களுடன் சேர்ந்து கும்மியடித்து ஆடிப்பாடி தங்களது மகிழ்வை வெளிபடுத்தி கொண்டிருந்தனர்.

திருவிழா என்றால் கடைகள் இல்லாமலா? ஆலயத்தை சுற்றியும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் விதவிதமான தற்காலிக கடைகளை வணிகர்கள் ஸ்தாபித்து பெண்களுக்கான அணிகலன்கள், குழந்தைகளுக்கான தின்பண்டங்கள்,துணிக்கடைகள், வீட்டு உபயோகபொருட்கள் விற்பனை செய்தனர். வேங்கி, கலிங்கம், ஈழம், சேரம், சாளுக்கியம் போன்ற வெளி தேச வியாபாரிகள் கூட தஞ்சையில் குழுமி அந்தந்த தேசத்திற்கே உரித்தான பொருட்களை விற்று கொண்டிருந்தனர். இதில் ஈழத்திற்கே உரிய பெரிய தேங்காய்களும், அதிலிருந்து பிழிய பட்ட உயர்ந்த ரக எண்ணெயும், தென்னம்பிள்ளைகளும் விற்பனையில் முதலிடம் வகித்து கொண்டிருந்தது.

. இந்நாட்களில் மாறனுக்கு அவ்வளவாக பணி இல்லை என்றாலும் சொக்கன் மட்டும் சில இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்த பட்டிருந்தான். ஆனால் கிடைக்கும் நேரத்தில் இருவரும் இணைந்து நிகழ்சிகளை ரசிப்பது, கடை வீதிகளில் வேண்டிய மட்டும் பொருட்களை வாங்கி மாறி மாறி பரிசளிப்பது என்று கடந்த இரண்டு நாட்களையும் மகிழ்ச்சியாகவே ஒட்டினர்.

இன்று ஆலயத்தில் புதிய மூர்த்திகளின் சிலா ரூபங்கள் ஸ்தாபிக்கபட்டதால் இருவருக்கும் சிறிது தாமதமாகவே சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.

“இன்றைய நிகழ்ச்சிகள் ஒன்றும் சுவாரஸ்யமாக இல்லை”தானே!! என்று கூறினான் மாறன்

“ஆம்!! மாறா.. எனக்கும் ஒன்றும் பிடிக்கவில்லை. வேண்டுமானால் ஒன்று செய்வோம், வா!! இலுப்பைதோப்பில் போய் அமர்ந்து கொண்டு ஏதேனும் உரையாடி மகிழலாம்”

“ம்ம்!! போலாமே!! ஐயா!! ஊரே விரதத்தில் திளைக்கிறது உங்களுக்கு இலுப்பை தோப்பு கேட்கிறதா?”

“ம்ம் க்கும்!! அப்படியெல்லாம் இல்லையடா பேசிக்கொண்டிருக்க தனிமையாக இருக்குமே என்று கூறினேன்”

“ஆஹா!! எலி ஏன் அம்மணமாக ஓடுகிறது என்று எங்களுக்கு தெரியாதா?”

என்று மாறன் நக்கலடிக்க இருவரும் சிரித்து கொண்டே அடுத்த வீதியில் நுழைந்தனர். அங்கு பெண்கள் பலர் வட்டமாக கூடி சோழதேசத்து புகழை இசையாக பாடி கும்மி அடித்து கொண்டிருந்தனர். அந்த பாடலின் இசையும், சொற்களும் அனைவரையும் கவரவே சொக்கனும் மாறனும் அங்கேயே நின்று அதனை ரசித்து கொண்டிருந்தனர்.

தன்னன்ன நானே!! தன்னன்ன நானே!!

கல்லுடைக்கும் கல்லில் நாறுரிக்கும்

சொல்லில் தேன வெச்சு சொந்தம் வாழ வைக்கும்

சொக்க விலாசமாம் சோழதேசம்-அத

சொல்லி சொல்லி நீ கும்மியடி!!!

தன்னன்ன நானே!! தன்னன்ன நானே!!

 

சே நாடு என்ன? பா நாடு என்ன?

ஈ நாடும் வெல்லும் எங்க புலி.

சோ நாடு காக்கும் காவேரி- அத

சொல்லி சொல்லி நீ கும்மியடி!!!

தன்னன்ன நானே!! தன்னன்ன நானே!!

 

நாத்து கொஞ்சுமந்த நஞ்ச நெலம்- நல்ல

வாழ வைக்குமந்த புஞ்ச நெலம்.

பஞ்சம் பசி இல்லா தஞ்சாவூர்- அத

சொல்லி சொல்லி  நீ கும்மியடி!!

தன்னன்ன நானே!! தன்னன்ன நானே!!

 

என்று நயத்துடன் பாடப்பட்ட பாடலையும், அதற்கேற்ப கைகொட்டும் பெண்களின் நளினங்களையும் ரசித்து கொண்டே சொக்கனின் தோள்மீது கையை போட்டிருந்த மாறனை யாரோ அருகிருந்து தொட்டு அழைப்பது தெரிந்தது.

திரும்பி யாரென்று பார்த்த பொழுது அவனுடன் பணிபுரியும் சக சிற்பி காந்தரூபன் நின்று கொண்டிருந்தான்.

“என்ன? காந்தா.. நீயும் இங்குதான் நிற்கிறாயா? நான் கவனிக்கவே இல்லையே!!”

“இல்லை மாறா!! நான் உன்னை தேடித்தான் வந்தேன். உன்னை உடனடியாக கையோடு அழைத்து வரச்சொல்லி தலைமை சிற்பி என்னை அனுப்பினார் புறப்படு”

“அப்படியா!! என்ன விஷயமடா?? அதற்கு ஏன் இவ்வளவு பதற்றமாய் இருக்கிறாய்?”

“அதெல்லாம் எனக்கு தெரியவில்லையடா, ஆனால் உன்மீது ஏதோ கோபமாய் இருக்கிறார் என்று மட்டும் புரிந்தது. வா!!”

“சரி காந்தா!! நீ போ நான் பின்னாலேயே வருகிறேன்” என்று மாறன் கூறியதும்

“சரி மாறா சிற்பியின் இல்லத்திற்கு செல் என்று கூறிவிட்டு கூட்டத்தில் சென்று மறைந்தான் அவன்.

“என்ன சொக்கா!! எனக்கு அச்சமாக இருகிறதடா, திடீரென்று வரசொல்லி இருக்கிறார். அதுவும் கோபமாக இருப்பதாக வேறு சொல்கிறான், ஒருவேளை நமது விஷயம் ஏதும் தெரிந்திருக்குமா?”

“ஹேய் அதெல்லாம் ஒன்றும் இருக்காது ஏதேனும் அரசு அலுவலாக இருக்கும் நீ புறப்படு, நான் வேண்டுமானால் உடன் வரட்டுமா?”

“இல்லை சொக்கா வேண்டாம், நான் மட்டும் போகிறேன். நாளை மதியம் உனக்காக ஆலயவளாகத்தில் காத்திருப்பேன்”

 என்று கூறி அவனது கையை ஒருமுறை இறுக்கமாக பிடித்து கண்கள் நான்கின் வழியே காதலை பரிமாறி அங்கிருந்து அகன்றான் மாறன்.

சொக்கன் ஒருவாறு சொல்லவொண்ணா உணர்வுடன் பாசறை நோக்கி நடக்கலானான்

கூட்டத்திலிருந்து விலகிய மாறன் தலைமை சிற்பி வீடிருக்கும் இராசராச வித்யாதர பெருந்தெருவில் நுழைந்து அவரது இல்லதிற்குள் புக எத்தனித்த பொழுது தங்கள் வீட்டு கூண்டு வண்டி வாசலில் நிற்பதை கவனித்து பின் பிரச்சனை என்னவாக இருக்கும் என்று யூகித்த படியே உள்நுழைந்தான்.

அங்கு எதிர்பார்த்தபடியே மாறனின் தந்தையும், மாமனும் சிற்பியோடு அமர்ந்து உரையாடி கொண்டிருந்தனர். உள்ளே தன் தாயின் குரலும், சிற்பியின் துணைவியார் குரலும் ஒலித்து கொண்டிருந்தது.

“வா!! மாறா.. உன்னைத்தான் எதிர்பார்த்து கொண்டிருந்தேன்.”

“ஆம் ஐயா!! காந்தன் கூறினான் அதான் ஓடோடி வந்தேன்.” என்று அவரிடம் கூறியவன் பின் அருகில் இருப்பவர்களை பார்த்து

“ வாங்க மாமா!! வாங்கப்பா!! எப்பொழுது வந்தீர்கள்” என்று கேட்டான்

ஆனால் இருவரும் பதில் கூறவில்லை மாறாக சிற்பியே தொடர்ந்தார்

“மாறா!! உன்னிடம் ஒரு முக்கிய விஷயமாக பேசவேண்டி உள்ளது, இன்று இரவு நீ உன் தாய் தந்தையருடன் தங்கிக்கொள். அவர்கள் பிரம்மகுட்டத்து வீதியில் உன் மாமனுக்கு சொந்தமான இல்லம் ஒன்று இருக்கிறதல்லவா?? அங்கு தங்குவர். நீயும் அங்கே சென்று விடு. நான் உன்னை நாளை காலை வந்து பார்க்கிறேன். என்ன புரிகிறதா?”

“சரி ஐயா!” மறுபேச்சின்றி பணிந்தான் மாறன்.

பின் சிறிது நேரம் அங்கிருந்த மாறனின் பெற்றோர் அவனையும், அவர்களுடன் வந்திருந்த வடிவழகியையும் அழைத்து கொண்டு மேற்சொன்ன இல்லத்திற்கு விரைந்தனர்.

மாறன் யாரிடமும் பேசவில்லை என்றாலும் வடிவழகியின் முகத்தை பார்த்து அவள் இத்துணை நாட்களாக அழுதுகொண்டே இருந்திருக்கிறாள் என்பதை மட்டும் விளங்கி கொண்டான்.

மாறனின் தாய் எவ்வளவோ வற்புறுத்தி பார்த்தும் அவன் ஒன்றும் சாப்பிட எத்தனிக்காததால். சிற்பியின் இல்லத்திலிருந்து கொடுத்தனுப்ப பட்ட  உணவை யாரும் உட்கொள்ளாமல் அனைவரும் படுத்து விட்டிருந்தனர்.

 கதவை தாழிட்டு படுக்கையில் கிடந்த மாறனின் எண்ண அலைகள் சொக்கன் எனும் கடலை நோக்கியே அடித்து கொண்டிருந்தது.

“இந்நேரம் சொக்கன் பாசறைக்கு போயிருப்பானா?, நம்மை பற்றித்தான் சிந்தித்து கொண்டிருப்பான் பாவம், நமக்கு ஏதும் பிரச்சனை என்று கூட எண்ணி தவிப்பான். நாம் நன்றாகத்தான் இருக்கிறோம் என்பதை எப்படி சொல்வது” என்று எண்ணிக்கொண்டே’ எழுந்து போய் அருகிலிருக்கும் சன்னல் வழியே எட்டி பார்த்தான். வானத்தில் வளரும்நிலவு பிறையாக தெரிந்தது.

“இந்த நிலாவை இந்நேரம் அவனும் பார்ப்பானா? இல்லை தூங்கி இருப்பானா? ஏய் நிலாவே நீதான் மேலே இருக்கிறாயே, அப்படியே என் சொக்கன் என்ன செய்கிறான் என்று பார்த்து சொல்லேன்.

என்று மனதிற்குள் நினைத்தவாறே சிரித்து கொண்டான்.

அவனது சிந்தனையை களைக்கும் விதமாக அந்த சன்னல் மாடத்தில் ஒரு சிறுகல் எங்கிருந்தோ வந்து விழுந்தது. அதனை எடுக்கும் பொழுதே ஓலை நறுக்கு ஒன்று அதன் மீது சுற்றபட்டிருப்பது தெரிந்தது.

ஓலையை  பிரித்த படியே கல் வந்த திசையை நோக்கிய மாறனுக்கு சொக்கன் குதிரையின் சேணத்தை பிடித்தபடி நிற்பது தெரிந்தது.

புருவங்களை ஆச்சர்யத்தில் உயர்த்தியபடியே சொக்கனுக்கு ஒரு புன்முறுவலை பரிசளித்து ஓலையை படிக்க துவங்கினான்.

 

மாறா!!

       உன்னை பார்க்க வேண்டும் போல இருந்ததடா!! உன் நண்பன் உன்னை அழைத்து சென்ற பின் உனக்கு ஏதும் ஆபத்து நேருமோ என்று அஞ்சினேன். பிறகு உன்னை அறியாமலேயே பின் தொடர்ந்தேன். உன் பெற்றோருடன் நீ செல்வதை கண்டு ஒருவாறு யூகித்து கொண்டேன். இதை உன்னிடம் தெரிய படுத்த எண்ணினேன்.

                                                                                                                                                       அன்புடன் சொக்கன்

லிகிதத்தை படித்த மாறனுக்கு அளவில்லா மகிழ்ச்சியில் உடனே ஓடி போய் சொக்கனை கட்டி கொள்ள வேண்டும் போல இருந்தது. ஆனால் சமயம் சரி இல்லை என்று உணர்ந்து தயங்கி நின்றான். சொக்கனும் அதற்கு மேல் அங்கு நிற்பது சரி இல்லை என்று உணர்ந்து கொண்டு “சென்று வருகிறேன் என்று சைகையில் சொல்லி விட்டு அவ்விடம் விட்டு அகன்றான்.

கணப்பொழுதில் நிகழ்ந்த சம்பவங்கள் மாறனின் மனதில் இருந்த அச்ச இருளை ஒருவாறு போக்கி இருந்தது.  

புலரப்போகும் பொழுதில்தான் காதலர்களின் கனவுகளை தகர்க்க தோதான பல காட்சிகள் அரங்கேற போகிறது என்பதை அறியாமல் வாழ்நாளின் இனி நிகழ வாய்ப்பில்லாத நிம்மதியாக உறக்கம் கொள்ள போயினர் இருவரும்.

 



-- Edited by rajkutty kathalan on Wednesday 23rd of October 2013 10:00:26 PM

__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

 

பிரம்ம குட்டத்து தெரு பெரிய கோயிலுக்கு வெகு அருகாமையிலேயே அமைந்திருந்த காரணத்தால் யாகசாலையிலிருந்து கேட்கும் வேதமந்திர கோஷங்களும், வாத்திய ஒலிகளும் மாறனை அதிகாலையிலேயே எழுப்பி விட்டிருந்தது.

 

ஏற்கனவே ஓரிரு முறை இந்த இல்லத்திற்கு அவன் வந்திருப்பதால் பழக்க பட்ட வீடு போல எழுந்து புழக்கடைக்கு பகுதிக்கு போனான். அங்கிருந்த இருண்ட மரங்களில் எண்ணற்ற பறவைகள் இன்னிசை கீதம் பாடி புதிய பொழுதை வரவேற்று கொண்டிருந்தன. தொட்டியில் நிரப்ப பட்டிருக்கும் நீரை கைகளால் அள்ளி முகத்தில் அடித்து கழுவி, பின் வாயை கொப்பளித்து துப்பினான்.

 

முகத்தில் இருந்து வழியும் நீர் அவனது பரந்த தோளிலும் விரிந்த வெற்று மார்பிலும் இறங்கி ஓடியது. அதனை கைகளால் வழித்து விட்டபடி உள்ளே நுழைந்தவனுக்கு எதிரே ஒரு சிறிய துண்டு துணியை நீட்டிய கரம் ஒன்று தென்பட்டது. வளையல்கள் அணிந்த கரம். விரல்களின் நகங்களில் எப்பொழுதோ வைத்த மருதாணி சிவந்து மேலேறி இருந்தது. ஆனால் அந்த கரத்திற்குரிய சிரத்தை தாங்கிய உடல் கதவிடுக்கில் மறைந்து கொண்டிருந்தது.

 

வடிவழகிதான் என்பதை உணர்ந்து கொண்ட மாறன், குற்ற உணர்வில் சிறிது தயங்கினாலும் “இந்த காலை வேளையிலேயே அவள் மனதை ஏன் காயபடுத்த வேண்டும் என்று எண்ணிய படி அந்த துணியை வாங்கி முகத்தை துடைத்து கொண்டே

 

“அத்தை, மாமாவெல்லாம் எங்கே சென்றுள்ளார்கள்? என்றான்

 

“அவர்கள் எட்டாம் காலை யாக பூஜைகளை காண்பதற்காக அதிகாலையிலேயே எழுந்து சென்று விட்டனர்.

 

“ஏன் நீ செல்ல வில்லையா?

 

“இல்லை அத்தான்!! அவர்களுக்கான தெய்வம் அங்கிருக்கிறது, ஆனால் எனக்கான தெய்வம் இங்குதானே இருக்கிறது?!! அவளது குரலில் அளவு கடந்த தெளிவும் விரக்தியும் தெரிந்தது.

 

சற்று நேரம் மவுனமாக நின்றிருந்த மாறன்                    

 

“சொக்கனை பற்றியும், அவர்களது உறவை பற்றியும் இவளிடம் சொன்னாலென்ன? இவள் நிச்சயம் புரிந்து கொண்டு நம்மை மணந்து கொள்ளும் எண்ணத்தை விட்டு விடுவாள் அல்லவா??!! என்று நினைத்து கொண்டான். ஆனால் மனதிற்குள் இருந்த தயக்கம் தடுக்கவே,

 

“சரிதான்!! இந்த தெய்வங்கள் படுத்தும் பாடுதானே பெரும்பாடாய் இருக்கிறது, வடிவழகி!!

 

என்று கூறி விட்டு, உள்ளே சென்று மேல் சட்டையையுடன் வேறு சில பொருட்களை எடுத்து கொண்டு வெளியேறியவன், காலை கடன்களை முடித்து, ஆலயத்திற்கு சென்று வழிபாடு முடித்து மீண்டும் வரும் பொழுது சூரியன் இரண்டு பனை உயரம் எழும்பி இருந்தான்.

 

கூடத்தில் தாய் தந்தையருடன், மாமனும் தலைமை சிற்பியும் அமர்ந்திருந்தனர். சிற்பிக்கு மெலிதாக ஒரு வணக்கத்தை போட்டுவிட்டு உள்ளே நுழைய எத்தனித்தவன், சிற்பியின் “நில் மாறா!! என்ற குரலை கேட்டு அதிர்ந்து நின்றான்.

 

“மாறா நீ நல்ல பிள்ளை என்று இது நாள் வரை எண்ணினேனே, நேற்றுதான் நீ உன் தாய் தந்தையர் சொல்லை செவி மடுப்பதில்லை என்று கேள்விபட்டேன்

 

“ஐயா!! ஏதேனும் பிழை செய்திருந்தால் பொறுத்தருள்க, ஆனால் நான் அப்படி என்ன குற்றம் செய்து விட்டேன் என்று எனக்கு ஒன்று புலப்படவில்லையே!! மாறன் வாய் புதைத்து நின்றான்.

 

“சரி நான் நேரடியாகவே கேட்கிறேன், வடிவழகியை மணப்பது குறித்து என்ன முடிவு செய்துள்ளாய், உன் தாய் தந்தையரை விடு மகனே!! சிறுவயதில் இருந்து உன்மேல் ஆசை வைத்திருக்கும் அந்த அபலை பெண்ணையாவது நீ எண்ணி பார்க்கக்கூடாதா?? ஏன்தான் திருமணம் குறித்து இவ்வளவு விசனப்படுகிறாய்,?

 

மாறன் பதிலேதும் பேசாமல் மௌனித்து நின்றான்

 

“ஏன் மாறா கேட்பது உனது செவிகளில் ஏறுகிறது தானே!! ஏன் இந்த மவுனம்?. ஒருவேளை உனக்கு வடிவழகியை பிடிக்க வில்லையா?? அவளை அழகில் குறையுள்ளவளாக எண்ணுகிறாயா?? இல்லை அவளின் நடத்தையில் ஏதேனும் குற்றம் கண்டுள்ளாயா?? என்னவாயிருந்தாலும் நேரடியாக சொல்லிவிடு மாறா!! உன்னால் ஒரு பெண் வாழ்வை இழப்பது என்பது பெரும்பாவம்.

 

“சுவாமி!! என்ன வார்த்தை சொல்லி விட்டீர்கள், வடிவழகியின் நடத்தையில் நான் குற்றம் சொல்வதா??!! நிச்சயம் இல்லை என்றான் மாறன்

 

“அப்படியானால் அவள் அழகில்லை என்று எண்ணுகிறாயா??

 

“அப்படியில்லை ஐயா!!

 

“பின்?? வேறு யாரையேனும் மணக்க விரும்புகிறாயா?? இல்லை ஏற்கனவே யாரையேனும் மணந்து விட்டாயா??

 

கடுமையான கேள்விகள் வரிசையாக் விழுந்ததில் தவித்து போனான் மாறன். இந்நேரம் இத்துணை கேள்விகளை தன் தாயோ, தந்தையோ கேட்டிருந்தால் எப்பவோ அந்த இடத்தை விட்டே அகன்றிருப்பான். ஆனால் இவர் தனக்கு பாடம் சொன்ன குரு என்பதாலும், தான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கும், அதேசமயம் அரசனிடம் மிகுந்த செல்வாக்கு உள்ள தலைமை சிற்பி என்பதாலும் மாறன் எதிர்த்து பேச இயலாமல் குறுகுறுத்தான். திருமண விஷயத்தை இவர் வரையில் கொண்டு சென்ற அவனது பெற்றோர் மீது  ஆத்திரம் பொத்து கொண்டு வந்தது அவனுக்கு.

 

“என்ன மாறா? என்ன மௌனம் சாதிக்கிறாய், அப்படியானால் எந்த பெண்ணையாவது காதலிக்கிறாயா??, சொல் மகனே அவள் எந்த குலத்தை சேர்ந்திருந்தாலும் உனக்கு ஆதரவாக நானிருக்கிறேன்.

 

“அதெல்லாம் நான் எந்த பெண்ணையும் காதலிக்க வில்லை ஐயா!! ஆனால்.. என்று வார்த்தையை விழுங்கி விக்கித்து நின்றான் மாறன்

 

“ம்ம் சொல் ஏன் தயக்கம்

 

“அதெல்லாம் ஒன்று இல்லை ஐயா!! நீங்கள் எண்ணுவது போலெல்லாம் ஒன்றும் இல்லை

 

“அப்படியானால் உனக்கு வடிவழகியை மணப்பதில் சம்மதம்தானே!!

 

“ஐயோ இறைவா!! என்னை ஏன் இந்த பாடு படுத்துகிறாய், நான் செய்த குற்றம்தான் என்ன? நான் விரும்பும் உறவை வெளிபடுத்தவும் இயல வில்லை, என்னை விரும்பும் உறவை ஏற்கவும் இயல வில்லை. மனதிற்குள் குமுறினான் மாறன். நமக்காக சொக்கன் எதையும் செய்ய முன் வருவான், நாளை வரை ஒத்தி வைத்திருந்த முடிவை இன்றே செயல் படுத்திவிட வேண்டியதுதான். நாளை வரை நான் இருந்தால்தானே எனக்கு திருமணம் செய்வீர்கள்.?? என்று மனதிற்குள் எண்ணி கொண்டே

 

“ம்ம் சம்மதம்!!, நான் திருமணம் செய்து கொள்கிறேன். என்றான் மாறன்

 

இதை கேட்டு வடிவழகி உட்பட அனைவரும் ஆனந்தத்தில் திக்கு முக்காடி போயினர். மாறனின் தாய் அவனை அருகில் வந்து அனைத்து உச்சி முகர்ந்தாள்.

 

“நல்லது மாறா!! இனியும் காலம் தாழ்த்த முடியாது. நாளை கும்பாபிஷேகம் முடிந்ததும் பெரிய கோயில் வளாகத்திலேயே உங்கள் திருமணத்தை நடத்துவதே சால சிறந்ததாக இருக்கும், ஆலயத்தில் நடக்கும் முதல் திருமணம் உங்களுடையது என்ற பெருமையும் கிடைக்கும், அரசரும் மகிழ்வார்; முடிந்தால் நான் இப்பொழுதே பேசி அரசரையும் வரவழைக்க முயல்கிறேன் என்று கூறிய சிற்பி தன்னால் ஒரு காரியம் முடிந்த விட்டதை எண்ணி பெருமிதத்துடன் வெளியேறினார்.

 

அவசரப்பட்டு திருமணத்திற்கு ஒப்புதல் கொடுத்துவிட்டோமோ!! எதற்கும் சொக்கனிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமோ! இவர் வேறு நாளையே திருமணம் என்கிறாரே!! அரசரை வேறு அழைக்கிறேன் என்கிறாரே!! என்று எண்ணிக்கொண்டு யாரிடமும் எதுவும் பேசாமல் சொக்கனை காண ஆலயம் நோக்கி நடக்க துவங்கினான் மாறன்.

 

இதே சமயம் இன்று காலை சொக்கனை தொடர்பு படுத்தி தஞ்சை அரண்மனையில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை அறியாமல் சொக்கனும் ஆலயம் நோக்கி வந்து கொண்டிருந்தான்.

 

                                                                                                                                                          -ஒசைகேட்கும்

 

 

 

                                      இன்னும் ஒன்று அல்லது இரண்டு பதிவுகளில் நிறையும்.

 

 

 

 

 



-- Edited by rajkutty kathalan on Wednesday 23rd of October 2013 10:14:28 PM

__________________


கவி

Status: Offline
Posts: 67
Date:
Permalink   
 

Waiting for next parts... finally i will give my comments....

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

விழாக்கோலம் பூண்டிருக்கும் நகரில், மாறனின் மனம் மட்டும் கண்ணீரால் கோலம் போட்டிருக்கிறது.... வடிவழகியை நினைத்தால் பாவமாக இருக்கு... "தென்மேற்கு பருவக்காற்று" படத்தில் வரும் நாயகனின் மாமன் மகளின் முகம் நினைவுக்கு வருது.... சில நிமிடங்கள் மட்டுமே வரும் அந்த பெண், நிச்சயம் பார்ப்பவர்களின் மனதை கலங்க வைப்பாள்... அப்படி ஒரு பாத்திரம் தான் வடிவழகியும்....
நாட்டுப்புற கலைகள் பற்றிய விளக்கங்கள் அருமை....
நாளை நடைபெற இருக்கும் அந்த அதிர்ச்சிய காண நானும் காத்திருக்கேன்...

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 

«First  <  1 2 3 4  >  Last»  | Page of 4  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard