அதனால் தான் என்னைப் பார்க்கும் பார்வையில் ஏதோ ஒரு சொல்லமுடியாத பரிவு ஏற்பட்டதாக எனக்கு தோன்றியதா?
என் தாயை நிர்க்கதியாக விட்டுவிட்டுப் போனவர் இவர்தானா?
ஊரும் உலகமும் ஏசும் ஒரு வாழ்க்கை என் அம்மாவுக்கு அமையக் காரணம் இவர்தானா?
மனதுக்கு சந்தோஷமும் அதே சமயம் ஆத்திரமும் ஒருசேரக் கதிரவனின் மனசை வியாபித்தன.
பழைய சம்பவங்களை ஒரு திரைப்படம் போல உணர்ச்சி மேலிட விவரித்துக்கொண்டிருந்தார் சந்திரசேகர்.
"ஜமுனா! சத்தியமா சொல்லறேன். உன் கூட வாழ வந்தப்புறம் அப்போதைக்கப்போது என் மனசு வசதியா வாழ்ந்த காலத்தை நினைச்சுப் பார்த்தது என்னமோ நிஜம் தான். ஆனால் அதுக்காக உன்னை விட்டுட்டு ஓடிப்போகனும் என்று நான் நினைச்சதே இல்லை. ஆனால் என்னை என் அப்பா ஆளை வைச்சு கடத்திக்கிட்டு வந்தப்புறம் நான் துடிச்ச துடிப்பும் தவிச்ச தவிப்பும் என் மனசுக்குத்தான் தெரியும். மறுபடி உன்னை சந்திக்க வரதுக்குள்ளே உன் வாழ்க்கையே திசை மாறிப்போயிடிச்சு. அப்போ கூட என் ஜமுனா என்னவென்ன கஷ்டப்பட்டுகிட்டு இருக்காளோ என்று தான் நான் நினைச்சு மனசுக்குள்ளே துடிச்சுட்டு இருந்தேனே தவிர இப்படி ஒரு அவல வாழ்க்கை வாழுற நிலைமை உனக்கு ஏற்படும் என்று கற்பனை கூட செய்து பார்த்ததே இல்லே. ஆனால் திவாகர் மூலமா கதிரவனோட அம்மா நீ தான் என்கிறதும், உன்னோட வாழ்க்கையிலே நீ எவ்வளவும் தூரம் கேவலப்பட்டு இருக்கேன்னு தெரிய வந்ததுக்கு அப்புறம் என்னாலே நிம்மதியாவே இருக்க முடியலே ஜமுனா. கதிரவனுக்கு அவன் வாழ்க்கைக்கு ஏதாவது செய்தே ஆகணும் என்று எனக்கு தோணிச்சு. அப்போ தான் என் கம்பெனி கணக்கு வழக்குகளை நேர் பண்ணிக்கொடுக்குற வாய்ப்பை அவனுக்கு கொடுக்கலாம் என்று சோமு சொன்னான். இப்படி அவனுக்கு எங்களாலே ஆன உதவிகளை மறைமுகமா செய்து கொடுத்து அவன் உழைப்பாலேயே அவனை முன்னுக்கு வர மாதிரி செய்து சமூகத்துலே அவனுக்கு நிலையான ஒரு அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்று நாங்கள் ஆயிரம் ஆயிரமா கற்பனைகளை வளர்த்துக்கிட்டு இருக்கோம். தயவு செய்து அதைக் கெடுத்துடாதே ஜமுனா. எனக்கு ஏதாவது தண்டனை கொடுக்கணும் என்று நீ நினைச்சா அதை எனக்கே கொடுத்துடு. ஆனா உன்னை கைவிட்ட பாவத்துக்கு என் மகனை கஷ்டப்பட வைத்துவிடாதே ஜமுனா. ப்ளீஸ்." - என்று அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு மன்றாடினார் சந்திர சேகர்.
"ஆமாம் ஜமுனா. சந்துரு சொல்லறதெல்லாம் உண்மை தான். நடந்த தவறுக்கு அவன் காரணமே இல்லே. என் நண்பனுக்கு அவ்வளவு கடினமான மனசு கிடையாது ஜமுனா. உன்னை பிரிஞ்சு வந்ததுக்கு அப்புறம் அவன் ஒரு நாள் கூட நிம்மதியா இருந்ததே இல்லே. நீ இறந்துட்டதா நினைச்சுத்தான் அவன் அம்மாவோட வற்புறுத்தலுக்காக இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டானே தவிர வாழ்க்கையை நம்ம விருப்பப்படி அனுபவிக்கலாம் என்ற சுயநலத்துலே இல்லே. அப்போதைக்கப்போது தன மனைவிக்கும் தெரியாம, மகளுக்கும் தெரியாம அவன் அழுத அழுகை தவிச்ச தவிப்பு எனக்குத் தான் தெரியும். அப்போதெல்லாம் ஒரு நண்பனா அவனுடைய சுமையை எல்லாம் நான் தான் தாங்கிக்கிட்டேன். நீ உயிரோட இருக்கறதும், உன் மகனை வளர்ப்பதற்காக .. என்ன சொல்லறதுன்னே தெரியலே. உன்னுடைய தற்போதைய நிலைமை என்னிக்கு தெரிஞ்சதோ அன்னியிலே இருந்து அவன் தவிச்ச தவிப்பும், துடிச்ச துடிப்பும் - வெளியே ஒண்ணுமா உள்ளே வேற ஒண்ணுமா நிம்மதியே இல்லாம வாழ்ந்துக்கிட்டு இருக்கான். இப்போ இவ்வளவு வெளிப்படையா உன்னையும் கதிரவனையும் ஏத்துக்க கொஞ்சம் கூட தயக்கம் இல்லாம முன்வந்திருக்கான். தயவு செய்து அவனை மன்னிச்சு இனிமேயாச்சும் நிம்மதியா வாழ விடு ஜமுனா."- சோம சேகரின் குரல் தழ தழைத்தது.
அவர்களையே பார்த்தவண்ணம் இருந்த ஜமுனாவின் மனதில் பலவிதமான உணர்ச்சிகள் எழும்பின.
"ஜமுனா. இன்னும் நீ என்னை நம்பவில்லையா? நாளைக்கே ஊரறிய உலகமறிய உன்னை என் மனைவியா ஏற்றுக்கொள்ள தயாரா இருக்கேன். "- என்றார் சந்திரசேகர்.
"புரியாமே உணர்ச்சி வேகத்துலே பேசாதீங்க. அப்படி செய்தா அதுக்கு நீங்க கொடுக்கவேண்டிய விலை உங்க கவுரவம். அதை ஞாபகம் வச்சுகிட்டு பேசுங்க." என்றால் ஜமுனா வேகத்துடன்.
"அது எனக்கு நல்லா தெரியும் ஜமுனா. தெரிஞ்சு தான் பேசுறேன். இந்த சமூகம் என்னை பற்றி என்னவெல்லாம் பேசுமோ அதை எல்லாம் உனக்கு செய்த பாவத்துக்கு பரிகாரமா ஏத்துக்க தயாரா இருக்கேன் ஜமுனா."
"நீங்க தயாரா இருக்கலாம். ஆனா அப்படி நீங்க அசிங்கப்பட நான் தயாரா இல்லே. ஒருநாளும் உங்க கெளரவம் கெட்டுப்போக நான் காரணமா இருக்க மாட்டேன்." - என்றாள் ஜமுனா உறுதியாக.
"ஆமாங்க. நான் உங்களை விட்டு பிரிஞ்சு எங்கேயோ இருந்த காலத்துலே நீங்க நல்ல கௌரவத்தோடும், கண்ணியத்தோடும் இருந்தீங்க. உங்களுடைய கடும் உழைப்பாலே ஒரு பெரிய ஸ்தாபனத்துக்கே நிர்வாகியா உயர்ந்திருக்கீங்க. உங்களாலே இன்னிக்கு பல குடும்பங்கள் வாழுது. அந்தக் குடும்பங்களை சேர்ந்தவங்களோட வாழ்த்துக்கள் உங்களுக்கு இன்னி வரைக்கும் பெரிய சொத்து. அந்த பெரும் புகழும் என்னாலே சிதையக்கூடாது. நாம ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்தா இந்த உலகம் என்ன சொல்லும் தெரியுமா? பெரிய தொழிலதிபர் சந்திரசேகர் இவ்வளவு வயசுக்கு அப்புறம் ஒரு விபச்சாரியை சின்ன வீடா வச்சுக்கிட்டு இருக்காருன்னு பேசும். அவங்களுக்கு தெரியுமா நம்மோட அந்தரங்கம். இல்லே அப்படிப் பேசுற ஒவ்வொருத்தர் கிட்டேயும் போய் "அப்படி எல்லாம் இல்லேப்பா. நீங்க நினைக்கறது தப்பு. நடந்து என்னன்னா....அப்படீன்னு ஒவ்வொருத்தருக்கும் விளக்கம் கொடுத்துகிட்டா இருக்க முடியும்? என்னையும் என் மகனையும் விட்டுத்தள்ளுங்க.. நாங்க சந்திக்காத அவமானம் இல்லே. ஆனா உங்க மகள் கல்பனாவை நினைச்சுப் பாருங்க. கல்யாணம் ஆகி ஒரு குழந்தைக்கு தாயாகிற நிலைமையிலே இருக்குற அவளுக்கு இப்படி பட்ட கேவலமான பேச்சுக்களை கேட்கணும் என்று தலை எழுத்தா என்ன? அப்படி ஒரு நிலைமை என்னாலேயோ என் மகனாலேயோ உங்க குடும்பத்துக்கு ஏற்படக் கூடாது. ஏற்படுத்தவும் மாட்டோம்." - ஆவேசமாகப் பேசிக்கொண்டே போனாள் ஜமுனா.
என்ன செய்வது, மேலே என்ன பேசுவது என்றே புரியாமல் வாயடைத்து நின்றார் சந்திரசேகர்.
அங்கிருந்த ஒவ்வொருவர் மனத்திலும் ஒவ்வொரு விதமான உணர்ச்சிகள் கொந்தளித்துக்கொண்டிருந்தன.
நீண்ட அமைதி அந்த அறையில் வியாபித்தது.
அந்த மௌனத்தை கலைத்தார் சோம சேகர்.
"அப்போ.. உன் முடிவிலே மாற்றம் இல்லையா ஜமுனா." - என்று கேட்டார் அவர்.
"எனக்குள்ளே ஒரு உறுத்தல் இருந்துக்கிட்டு இருந்துச்சு. கணவனாலே கைவிடப்பட்ட ஒரு பொண்ணு வாழறதுக்கு கஷ்டப்படலாம். ஆனா எந்த சூழ்நிலையிலேயும் அவ தன்னோட தன்மானத்தை மட்டும் இழந்துடக்கூடாது. என் நிலைமை அப்படி இல்லே. தன்மானத்தை இழந்தப்புறம் உயிரை விடமுடியாம என் வயத்துலே இவனைச் சுமந்துகிட்டு இருந்தேன். இவனுக்காக எந்த கஷ்டத்தையும் ஏத்துக்க என்னை பக்குவப்படுத்திக்கிட்டேன். என் மனசோட உணர்ச்சிகளை சாகடிச்சுட்டு ஒரு பட்ட மரமா, இயந்திரமா என்னை நானே மாத்திக்கிட்டேன். ஆனால் அப்போ ஒரு வைராக்கியத்தையும் நான் வளர்த்துக்கிட்டேன். என் மகன் சமூகத்துலே ஒரு உயர்ந்த ஜாதிக்காரருடைய மகன். என்னிக்காவது ஒருநாள் அவரை அவன் சந்திக்க நேர்ந்தா அவனை நினைச்சு அவர் பெருமைப் படணும். இப்படிப்பட்ட ஒரு மகனோட வாழக் கொடுத்துவைக்க வில்லையே என்று அவர் ஏங்கணும். அப்படித்தான் இவனை வளர்க்கணும். என்று உறுதி எடுத்துக்கிட்டேன். அதுலே நான் ஜெயிச்சுட்டேன். அது போதும் எனக்கு. நீங்க ஊரறிய என்னை ஏத்துக்கிட்டா கூட எனக்கு இவ்வளவு சந்தோஷம் இருக்காது. உங்க குடும்பத்தார் முன்னாலே என்னை உங்க மனைவின்னு சொன்னீங்களே.. இதுவே எனக்கு போதும்."- என்றாள் ஜமுனா.
"அம்மா" - என்று அழைத்தபடி ஜமுனாவை நெருங்கி அவள் கரங்களைப் பற்றிக்கொண்ட கல்பனா, "எனக்கு ஒரு அண்ணன் இருந்தா நல்லா இருக்குமே என்று நான் அடிக்கடி நினைச்சது உண்டு. உண்மையிலேயே எனக்கு ஒரு அண்ணன் இருக்காரு. அதுவும் என் கணவர் உயிரையே அவர் மீட்டுக்கொடுத்திருக்காரு என்று நினைக்கறப்போ என் மனசுக்குள்ளே என்னவெல்லாம் தோணுது தெரியுமா. எனக்காக நீங்களும் அண்ணனும் எங்க கூடவே இருக்கணும்." - என்றாள். அவள் கண்கள் பொங்கின.
"ஆன்ட்டி. இவ்வளவு தூரம் தெளிவா இருக்குற நீங்க கதிரவன் விஷயத்துலே மட்டும் தெரிஞ்சே தப்பு பண்ணுறீங்களே." - என்றான் திவாகர்.
"என்னப்பா சொல்லறே?"- புரியாமல் அவனை ஏறிட்டு நோக்கினாள் ஜமுனா.
"ஆமா. உங்க மகனை ஒரு நல்லவனா, அவன் கூட வாழ கொடுத்துவைக்கலையேன்னு அங்கிள் ஏங்குற மாதிரி வளர்த்திருக்கீங்க சரிதான். அதுக்காக அவனுடைய எதிர்காலத்தை பாழடிக்கற முடிவை எடுத்து அவனுடைய வாழ்க்கையையே ஒரு போராட்டம் நிறைந்த ஒன்றாக மாற்றப் பார்க்கிறீர்களே. அது எந்த வகையிலே நியாயம்?" என்றான் திவாகர்.
"என்ன சொல்லறேப்பா நீ?" என்று புரியாமல் கேட்டாள் ஜமுனா.
"கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க. இத்தனை நாள் தகப்பனோட அன்பையும் ஆதரவையும் இழந்து கதிரவன் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பான். எத்தனை வேதனைகளையும் விமர்சனங்களையும் தாங்கிகிட்டு இருப்பான். அத்தனையும் தாங்கிட்டு அவன் படிச்சது தன்னோட திறமையை வளர்த்துக்கிட்டது எல்லாமே ஒரு சராசரி வாழ்க்கை வாழறதுக்குத்தானா? நீங்க சொல்லறீங்களே உலகம் என்ன பேசும் உலகம் என்ன பேசும்னு. அந்த உலகம் ஒருத்தனோட வெற்றியை எதை வச்சு எடை போடுது தெரியுமா? பணத்தை வச்சுத்தான். ஒருத்தன் எவ்வளவு சம்பாதிக்கிறான். எவ்வளவு அமவுண்ட் அவனோட பேங்க் அக்கவுன்ட்லே இருக்கு. அவனுக்கு சொந்த வீடு, கார், நிலம், நீச்சு, தோட்டம் துரவுன்னு ஒருத்தன் கிட்டே இருக்குற செல்வத்தை அளவுகோலா வச்சுத்தான் உலகம் ஒருத்தனோட வெற்றியைக் கணிக்கிறது. ஏற்கெனவே இந்த ஊரும் உலகமும் பிறந்துலே இருந்து இன்னி வரைக்கும் கதிரவனை பேசிய பேச்சுக்களும், ஏச்சுக்களும் இன்னியோட போகட்டும் ஆண்ட்டி. அவன் இந்த சமூகத்துலே ஒரு உயர்ந்த அந்தஸ்தோட வாழணும் ஆண்ட்டி. அதுக்கு சரியான வாய்ப்பை கொடுக்க நாங்க எல்லாருமே தயாரா இருக்கோம். அதனாலே இங்கேயே இருங்க ஆண்ட்டி. " - என்றான் திவாகர்.
சற்று நேரம் மெளனமாக இருந்தாள் ஜமுனா.
பிறகு திவாகரைப் பார்த்தவளாக, "சரி தம்பி.. நீங்க இவ்வளவு தூரம் சொல்லுவதாலே நான் இங்கே இருக்க சம்மதிக்கிறேன். ஆனால்.."- என்று நிறுத்தியவள் சந்திர சேகரைப் பார்த்து, "இவரோட மகனா இல்லே. உங்க நண்பனாகத்தான் இருப்பான்."- என்றாள் ஜமுனா.
"ஜமுனா! நீ என்ன சொல்லறே?" - ஏதும் புரியாமல் கேட்டார் சந்திர சேகர்.
"ஆமாங்க. உங்க மகன் தான் இவன் என்பது இந்த நாலு சுவருக்குள்ளே இருக்குற நமக்கு மட்டுமே தெரிஞ்ச உண்மையா இருக்கட்டும். என்னதான் இருந்தாலும் நான் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவ. நீங்க உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர். நம்ம காதலுக்கு நடுவுலே இந்த ஜாதி பாகுபாடுதான் பெரிய குறுக்குச்சுவரா இருந்தது. இப்போ என் மகன் உங்களோட உறவு கொண்டாடினா அதுக்கு தடையா இந்த ஜாதி உணர்வு தன்னோட சுயரூபத்தை காட்டிடும். இந்த ஜாதிக் கொடுமையை ஜெயிச்சு என் மகன் வாழணும். நாம தான் அதனாலே ரொம்பவே பாதிக்கப்பட்டோம். அடுத்த தலைமுறையும் அந்தக் கொடுமைக்கு பலியாகக் கூடாது. அதுக்கு சரியான வழி நட்பு ஒன்றுதாங்க. ஆமாங்க. நட்பு என்கிற உறவு சாதாரணமானது இல்லே. எந்த சாதிக்காரனும் யார் கூடவும் நட்புறவை ஏற்படுத்திக்கலாம். நட்புக்கு தான் மேல் ஜாதி கீழ் ஜாதி என்கிற பாகுபாடு கிடையாது. ஜாதி, மொழி, இனம், மதம் எல்லாவற்றையும் கடந்து ஜெயிக்கக்கூடியது நட்பு ஒன்று மட்டும் தான். எந்த ஜாதிய ஆதிக்க வெறியும் அதுக்கு முன்னாலே தோற்றுத் தலை குனிந்து விடும். அப்படிப்பட்ட நட்பு என்கிற உறவோட மட்டும் தான் என் மகன் உங்க கூட இருப்பான். இதுக்கு சம்மதம் என்றால் சொல்லுங்க. நாங்களும் இங்கேயே ஒரு தனிவீடு எடுத்துகிட்டு தங்கி இருக்கோம். உங்க மனைவிக்கு ஒரு நல்ல சிநேகிதியா நான் இருக்கேன். திவாகருக்கு ஒரு நல்ல நண்பனா கதிர் இருப்பான். என்ன சொல்லுறீங்க?" என்று கேட்டாள் ஜமுனா.
"மச்சான். எங்க வீட்டுக்கு பின்னாலே கெஸ்ட் ஹவுஸ் காலியாத்தான் இருக்கு. அங்கேயே குடி வந்துடுடா." என்ற திவாகர், "என்ன கல்பனா? இவங்களை அங்கேயே குடி வச்சுடலாமா?"என்று உற்சாகமாகக் கேட்டான் திவாகர்.
"இப்போ தானே சொன்னேன்? இந்த மாப்பிளை மச்சான் உறவெல்லாம் வேணாமுன்னு" - என்று பொய்க்கோபம் காட்டினால் ஜமுனா.
முடிவு ok...but கதிர் திவாகரின் உறவு பற்றி ஒரு முடிவை சொல்லாமல் விட்ட மாதிரி தோணுது...நட்பை பற்றி சொன்னது நல்லாருக்கு...ஜமுனா character வித்தியாசமாக இருக்கு...உங்கள் எழுத்தில் பிடித்த விஷயம் அந்த continuity of characters...ஜமுனா வார்த்தைகளில் ....எந்த சூழ்நிலையிலேயும் அவ தன்னோட தன்மானத்தை மட்டும் இழந்துடக்கூடாது...கண்டிப்பாக ஜமுனா இழக்கவில்லை....nd அதன் முலம் நீங்கள் மிக உயர்ந்து விட்டீர்கள் ....வாழ்த்துக்கள்...இனி மாமா மச்சான் உறவுமுறையில் இருவரையும் சேர்த்து அடுத்த பாகம் தொடருங்க...really proud of you...nd praying god to have good health and wealth...
Kadhaiyila ellaamae arpudham..! Frame to frame wonderful..! But Padma aunty oda feel mattum missing..! Friendship ah highlight panninadhu story oda plus point...! Excellent story..!
Eventhough you have finished the ending part nicely but there is few things you have been missed out:-
1) the reaction of Mrs. Santhira shekar. whether she accept Madam Jamuna and her son;
2) the reaction of Mrs. Somu;
3) last but not least eventhough the 2 inlaws happily accept their new relationship will they continue their love.
so what i am trying to say here is Mr. Nattamai Thirpai Mathi Sollu. hahhahahahahahhaha
Excellent closing... Happy ending... Thanks for writing a very good interesting story for the past few months... expecting more stories from you... All the best!