அனைவருக்கும் அன்பு வணக்கம். எனது பெயர் ஜோய் ( உண்மையான பெயர் அல்ல ).பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றவன். நான் ஒரு மகிழ்வன் (bottom).எனது சொந்த ஊர் கன்னியாகுமரி. நான் ஒரு மகிழ்வனானதால் எனக்கு பெண்களிடம் எத்தகைய ஈர்ப்பும் இல்லை. ஆண்களிடமே ஈர்ப்பு அதிகம். இந்த தளம் எனக்கு நல்ல நண்பர்கள் பலரை கொடுத்துள்ளது.அந்த நண்பர்கள் எனக்கு காட்டிய வழிகள் என் வாழ்வை மாற்றியது. பல பிரச்சனைகளை வாழ்வில் சந்தித்த எனக்கு இந்த தளம் ஆறுதலாகவும் நிம்மதியாகவும் இருந்தது இருக்கிறது. விஜய் அண்ணாவோட கட்டுரைகள படித்த எனக்கு ஒரு மகிழ்வனோட வாழ்க்கைல அவன் தெரிந்து இருக்க வேண்டிய சில விஷயங்கள் தெளிவாயிற்று.அந்த தெளிவோட என்னோட profila chennai guyss forumla இருந்து மாத்திக்கிட்டு இங்க என் மனதின் எண்ணங்களை சொல்ல வந்திருக்கிறேன்.
என் வாழ்வை மகிழ்விப்பதற்க்கும், முழுமைப்படுதவும் ஒரு துணை தெடி இந்த பதிவை பதிவு செய்கிறேன். அன்னையாக, தந்தையாக, மனைவியாக,கணவனாக, நண்பனாக, குருவாக என் வாழ்வை முன்னெற்றமான பாதையில் கொண்டு செல்ல ஒரு நல்ல துணை வேண்டும். அவரது உணர்வுகளுக்கு மதிப்பழித்து அவரோடு ஒன்றாய் இருப்பேன்.உயிருள்ள வரை அவரோடு அவாருக்காக வாழ்வேன். என் கண் இமைக்குள் வைத்து அவரை பாதுகாப்பேன். இங்கு துணைவனை தேடும் அன்பு நண்பர்களே என்னோடு நண்பராகுங்கள் பேசுவோம் ஒருவர் மற்றவரை பற்றி அறிவோம். இறைவன் விரும்பினால் இணைவோம் அவனியில் சிறந்த துணைவர்காளாக.