நம்மாளு ஒருத்தரு , வெளியூரு ( சென்னை கிடையாது ) , இவரு சென்னைக்கு வேலை விஷயமா வந்திருக்காரு .... வந்தவரு , இங்க இருக்கும் பேஸ்புக் நட்புக்களை அழைத்தும் பேசியிருக்காரு , பெரிய நிறுவனத்தில் வேலை செய்யும் நபரான அவர் கம்பெனி விஷயமாக சென்னைக்கு வந்திருக்கிறார் .... வந்தவருடன் பேஸ்புக் மூலம் நட்பில் இருந்த ஒரு நபர் ( 19 வயது மட்டுமே இருக்கும் ) ... உங்களை எப்ப பார்க்க வரலாம்னே என்று கேட்க , அவரும் மாலை வரச் சொல்லியிருக்கிறார் , மாலை மற்ற பேஸ்புக் நண்பர்களை சந்தித்த பிறகு , மீண்டும் இந்த பையனிடமிருந்து அழைப்பு வர , தான் மட்டுமே ஹோட்டலில் தங்கியிருப்பதாகவும் , மற்ற பேஸ்புக் நண்பர்களை சந்தித்து விட்டு இப்பொழுது அறைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாகவும் சொல்ல ....
அந்த பைய்யன் , நான் உங்களை அறையில் வந்து சந்திக்கலாமா என்று கேட்க , இவரும் சரி என்று கூறியுள்ளார் , வந்தவன் , அண்ணே , எனக்கும் ட்ரிங்க்ஸ் சொல்லுங்க பிளீஸ் என்று கெஞ்ச , இவரும் ஆர்டர் செய்துள்ளார் , அப்படியே , நேரம் அதிகமாக , அந்தப் பய்யன் , அண்ணே நான் வீட்டுக்கு போக முடியாது , ரொம்ப நேரம் ஆயிடுச்சு என்று சொல்ல ஆரம்பிக்க , இவரும் , சரி , இங்கயே இருந்துட்டு நாளைக்கு காலை கிளம்பிக்கலாம் , ஆனால் 8.30 மணிக்கெல்லாம் கிளம்பிடனும் என்றும் , தனது அலுவலகத்தை சார்ந்த சக ஊழியர்கள் அவருடன் தங்க அங்கே காலையில் வந்து விடுவார்கள் என்றும் கூறியுள்ளார் ....
சரி என்றும் மேலும் ட்ரிங்க்ஸ் ஆர்டர் செய்து இருவரும் குடித்துள்ளனர் .... எப்பொழுது உறங்கினார் என்று அவருக்குத் தெரியவில்லை , காலை 7 மணி வாக்கில் கண் விழித்தால் , அந்த பய்யன் , உடைகள் எதுவும் அணியாமல் டவல் மட்டும் அணிந்துக் கொண்டிருந்தான் , இவரும் உடைகள் எதையும் அணியவில்லை .... அதிர்ச்சி அடைந்த இவர் , என்ன ஆச்சுன்னு கேட்க , அவன் ஏதேதோ மழுப்பியுள்ளான் ... சரி , நேரம் ஆயிடுச்சு நீ கிளம்பு என்று சொன்ன பொழுது தான் மேலும் அதிர்ச்சி இவருக்கு காத்திருந்தது ....
சார் நான் வரும் பொழுது 8000 ரூபாய் கொண்டு வந்திருந்தேன் , அதை காணோம் , எப்படி போவது என்று கேட்டுள்ளான் , இவருக்கு எதுவும் புரியவில்லை , நான் எதையும் எடுக்கலையே , அப்பறம் எப்படி தொலைந்திருக்கும் என்று கேட்கத் துவங்கி மெதுவாக , இவன் வேறு எதோ திட்டத்தில் தான் இதை எல்லாம் செய்கிறான் என்று புரிய வர , நீ முதல்ல கிளம்பு என்று சொல்ல ஆரம்பிக்க , அவன் குரலும் மாறியிருக்கிறது
சார் , நீங்க என்ன என்னெல்லாம் நேத்து பண்ணீங்கன்னு உங்க சக ஊழியர்கள் வரட்டும் நானும் சொல்றேன் , என்று ஆரம்பித்துள்ளான் ....டேய் நீ கிளம்பரியா போலீசை கூப்பிடட்டுமா என்று மிரட்டிப் பார்த்துள்ளார் , சார் நீங்க கூபிடுங்க , ஆனால் ன்ன நடந்துச்ஹுன்னு எல்லாருக்கும் தெரிய வரட்டும் என்று சொல்ல , இவரால் யோசிக்கவும் முடிய வில்லை , சக ஊழியர்கள் வரும் நேரமும் நெருங்க , அசிங்கமாகி விடுமோ என்று பயமும் தொற்றிக் கொள்ள ...
தான் ஹோட்டல் டிராயரில் பூட்டி வைத்திருந்த பர்சிலிருந்து 4500 ரூபாயை எடுத்து , இது தான் ஏன் கிட்ட இருக்கு , ஏன் கிட்ட வேற பணமில்லை என்று சொல்ல , அவனோ மிகவும் ஆனாயிசமாக , சரி சார் , இதை வாங்கிக் கொள்கிறேன் , மிச்சப் பணத்தை மாலையே வந்து வாங்கிக்கறேன் அது வரைக்கும் உங்க போன் ஏன் கிட்ட இருக்கட்டும் என்று கூறியுள்ளான் , அதுமட்டுமில்லை , தன்னை வெளியே செல்ல நிர்பந்தித்தாலோ , அல்லாதோ ஹோட்டல் ஊழியர்களை அழைக்க முற்பட்டாலோ , அறையில் இருக்கும் பொருட்களை எல்லாம் உடைத்து விடுவதாகவும் , மிரட்ட ....
இவருக்கு மயக்கமே வந்து விடும் போல் ஆகிவிட்டது , வேறு வழியின்றி காலில் விழாத குறையாக கெஞ்சி , அவனை உடைகளை அணிய வைத்து வெளியில் அனுபியுள்ளார் ....
பாவம் என்று சொல்லி , அல்லது இதை படித்து விட்டு சிரித்துச் செல்பவர்கள் ஒரு புறம் இருக்க , கண்டிப்பாக , இதிலிருந்து பாடத்தை கற்றுக் கொள்பவர்களும் இருப்பீர்கள் என்றே கருதுகிறேன் ...
இது போன்ற சம்பவங்களில் சிக்க நேரிட்டால் டேய் சொல்லுடா , அதுனால என்ன இப்ப என்று கேட்கும் என்னை போன்றவர்களும் இருக்கிறார்கள் தான் ... ஆனால் ஒரு அலுவலகத்தில் பணி புரிந்துக் கொண்டு , சக ஊழியர்களுக்கும் அது தெரிய வரட்டும் என்று எத்தனை பேர் இருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை ...
இது அவரது கோழைத் தனமா , அல்லது அவர் வேறு மாதிரி இதை கையாண்டிருக்கலாமா என்கிற விவாதத்தை விட , இது போன்ற சம்பவங்களை எப்படி தவிர்ப்பது என்று யோசிப்பது நலம்