கடல் மீன் - ஒரு கிலோ அரைத்த வெங்காயம் - 2 பூண்டு - 1 டீஸ்பூன் சிரகம் - 1/2 டீஸ்பூன் மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகு - 1/2 டீஸ்பூன் தக்காளி - 1 தயிர் - கால் கப் கேசரி கலர் - கொஞ்சம் உப்பு - ருசிக்கேற்ப எண்ணை - பொரிக்க தேவையான அளவு
செய்முறை: மீன்களை நன்றாக சுத்தம் செய்து மெல்லிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். மசாலாப் பொருட்களையும் உப்பு, வெங்காயம், தக்காளி, பூண்டு விழுது கலந்து கழுவி வைக்கப்பட்டுள்ள மீன் துண்டுகள் மீது சமமாகப் பூசிவிடவும். தயிர் சேர்ப்பதால் மீனின் வாடை நீங்கி விடும். 2 மணி நேரம் மசாலா மீனில் ஊறினால் வறுவலின் ருசி அதிகாறிக்கும். சூடாக்கப்பட்ட தவாவில் மீன் துண்டுகளையும் போட்டு கொஞ்சமாக எண்ணை விட்டு 2 புறமும், திருப்பிப்போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். இதன் ருசியே தனிதான்.
-- Edited by shivakutty on Sunday 24th of November 2013 11:21:04 PM
மன்னிக்கவும் காலம் கடந்த பதிலுக்கு மன்னிக்கவும் jo முழு தக்காளி இல்லை தக்காளி விழுது தான் பயன்படுத்த வேண்டும்.....சமையல் முறை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேறுபடும்.....