சாக்லெட் பிரியர்களுக்கு சாக்லேட் மில்க் ஷேக் ஒரு விருந்தாக அமையும். இந்த மில்க் ஷேக்கோடு, நொறுங்கிய சாக்லெட் துகள்களை சேர்ப்பது மேலும் ஊக்கம் அளிக்கும். அதிலும் சாக்லேட் துகள்களை சேர்ப்பது நல்லது.
தேவையான பொருட்கள்:
சாக்லெட் ஐஸ்கிரீம் - 1-2 ஸ்கூப் பால் - 8 அவுன்ஸ் (240 மி.லி) சாக்லேட் குச்சிகள் அல்லது ஸ்ட்ரா - தேவையான அளவு சாக்லேட் - இரண்டு (நொறுக்கப்பட்டது) திரிக்கப்பட்ட க்ரீம் - தேவையான அளவு சாக்லேட் சிரப் அல்லது சாஸ் - தேவையான அளவு
செய்முறை:
1. 8 அவுன்ஸ் பாலை பிலண்டர் அல்லது கலப்பானில் (Blender) சேர்க்கவும்.
2. பின் சாக்லேட் ஐஸ்கிரீமை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
3. ஐஸ்கிரீம் மற்றும் பால் நன்றாக ஒரு கலவையாக மாறும் வரை கலக்கவும்.
4. பின்னர் சாக்லேட் துகள்களை சேர்க்கவும். பின்பு திரிக்கப்பட்ட க்ரீம், சாக்லெட் சிரப் அல்லது சாஸ் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
5. மில்க் ஷேக் மிருதுவாக வரும் வரை நன்றாக கலக்கவும்.
6. இறுதியில் பிலண்டரை அணைத்துவிட வேண்டும். இப்போது அந்த ட்ரிப்பிள் சாக்லெட் மில்க் ஷேக்கை கண்ணாடி கோப்பைகளில் ஊற்ற வேண்டும்.
7. பின் அதன் மேல் சாக்லேட் சிரப் அல்லது சாஸை தெளித்து, ஸ்ட்ரா போட்டு பரிமாறவும்.
குறிப்பு: வேண்டுமெனில் இதில் சாக்லெட் சுவை மற்றும் வாசனை அதிகமாக இருப்பதற்கு, சாக்லேட் துகள்களை அதிகமாக சேர்க்கலாம்.
-- Edited by shivakutty on Sunday 24th of November 2013 11:02:36 PM
-- Edited by shivakutty on Sunday 24th of November 2013 11:07:56 PM
முதலில் நான் இதை இங்கே பகிர்ந்துகொல்லலாமா வேண்டாமா என்று
தயங்கிநேன் தெரிந்து கொன்ட விஷயத்தை இங்கே பகிர்வது தவறு இல்லை என்று நினைக்கிறேன்...
நான் சொல்வது சரியா அண்ணா ????
எதற்கு தயக்கம்...தொடருங்கள்...உங்களின் கடைசி குறிப்புக்கள் நல்லா இருக்கு...easy,fast nd tasty items made by egg,bread,fruits...try பண்ணுங்க...bcaz...more working nd studying guys dont try long time cooking...வாழ்த்துக்கள் சிவா