இளமையின் இனிமை! --------------------------------------- கதிரவன் மறைந்த மாலை, இளங்காற்று மெல்லிய வெப்பம் கலந்து தவழ்ந்து திரிந்தது, அலைகளின் ரீங்காரம் இனிய இசை ஆரவாரங்கள் எதுவும் நெருங்காத ஒரு மறைவிடத்தில் நீயும் நானும்! உன் இதயத் துடிப்புகள் என்னால் கேட்க முடிகிறது உன் நெஞ்சின் மெல்லிய வெப்பம் என் காது துளை வழியே புகுந்து தீண்டியது, நான் அறிவேன் உன் பக்கத்தில் படுத்திருக்கும் காரணம்- இந்த கடற்கரையில் உன் போன்ற இளவயது தோழமையுடன்!
உன் மேனியின் கதகதப்பு, வாலிப வயதின் மெருகேறிய பருவம், உன்னை ஒரு கணம் பார்த்தேன் நம் பார்வைகள் மோதியது நீ கண்களுக்குள் பள்ளிகொண்டாய் நாம் புன்னகைகள் பரிமாறினோம் உன் அருகாமையில் எனை இழுத்தாய் ஆசையோடு அள்ளி அணைத்தாய் உன் தீண்டல்கள் நான் உணர்ந்தேன் வாலிப தவிப்புகள் அறிந்தேன் என் முகமெங்கும் சூரிய கதிர்கள் முத்தங்கள் களவாட கனிந்த தருணம் இது.
உதடுகள் உணர்ச்சிகளின் குவியல் சிறு தீண்டல்கள் கூட சிலிர்க்க வைக்கும் மென்காதலின் மெல்லிய கிளர்ச்சிகள் கனிந்த பருவத்தின் கவிதைகள். காதலை பரிமாற உதடுகள் போதும் உதடுகளின் பரிபாஷை உயிர் அறியும் ஈர இதழ்களின் மென் தீண்டலில் சுகம் அறிவோம் கிளர்ந்தெழும் போதையை இமை மூடி ரசிப்போம்! நுரைந்து பொங்கும் உணர்ச்சிகள் உச்சங்கள் தேட ஏங்கித் தவித்திருந்த கணங்கள் கண்ணெதிரே கவிய நாம் மட்டும் தனிமையில் உதடு கலந்து உயிர் ஊட்டினோம்!
நீளும் உன் தழுவல்கள், விரல்கள் என் மேனி எங்கும் விளையாடி மகிழும், ஈர இதழ் குவித்து தருவாய் தேன் கலந்த முத்தங்கள், காமம் கசிந்து வழியும் நம் காதலின் நிர்வாண நிலை, நம் கனவுகள் கைகூடியது நம் ஏக்கங்கள் திரை மூடியது நம் ரகசியங்கள் பொதுவானது நாம் இனி இளமையின் வசந்தங்களை பகிர்ந்து கொள்வோம்!!