" எங்களை விட்டுவிடுங்கள் ....நாங்கள் வாழ நினைத்ததை தவிர்த்து....
எந்த தவறும் செய்யவில்லை......"
"சக்தி ..ஆறாம் அறிவு வேலை செய்யாதவர்களிடம் ஆதரவை எதிர்பார்க்காதே .... "
துப்பாக்கியின் முனை சக்தியை நோக்கி நீண்டது ...
தயா, சக்தியை நோக்கி ஓட ...
அதற்குள் மற்றொருவன் ..... தயாவை சுட்டான் ....
சிலவினாடிகளில் நடந்த இந்த சம்பவத்தால் ...சக்தி மூர்ச்சை அடைந்தான்....
அவனையும் சுட துப்பாக்கி உயர்ந்த பொழுது ...
" தயவு செய்து அவனை விட்டுவிடுங்கள்.... இத்தனைத் துன்பங்களுக்கும் நான்தான் காரணம்....நான் எப்படியும் இறந்துவிடுவேன் ...அவனை விட்டுவிடுங்கள் ...."
கருணையினாலோ ...கடமை முடிந்ததென்று நினைத்ததாலோ ..
வந்தவர்கள் அவர்களைவிட்டு சென்றுவிட்டனர்......
நீண்ட அமைதி .....
கண்விழித்தான் சக்தி....இப்போதும் அதே கோலத்தில் ..தயாவின் மார்பில் சக்தி....
பதறி எழுந்தான் ...
"ஐயோ தயா ! எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ ..அது நடந்துவிட்டது .....நான் சென்று யாரையாவது உதவிக்கு அழைத்து வருகிறேன் ...."
"வேண்டாம் சக்தி..எல்லாம் முடிந்துவிட்டது ....உன்னுடன் பேச வேண்டும் ....இங்கிருந்து ஊருக்குள் சென்று மருத்துவரை அழைத்து வருவதற்குள் நான் போய் விடுவேன் "
" கடவுளே பாவம் செய்தவர்களை விட்டுவிட்டு ..பாசம் காட்டியவனுக்கு நீ தரும் பரிசா ...சொல் தயா "
" நீ எக்காரணம் கொண்டும் தற்கொலை செய்துக் கொள்ள கூடாது ...
நான் உன் மனதில் வாழும்வரை என்னால் மரிக்க முடியாது.....
காதலன் இறந்தால் காதல் சாவதில்லை ....
மண்ணில் பிறந்த எல்லோரும் தன் அடையாளமாய் தன் வாரிசுகளை விட்டுச் செல்வார்கள் ....
நான் என் காதலை விட்டு செல்கிறேன்....
சாதி சாயத்தில் மூழ்கி நிறம் தொலைத்து இருக்கும் வெள்ளை மனங்களை உன் அன்பெனும் நீர் ஊற்றி கழுவிவிடு.....
இமயம் வென்று .... கடல் கடந்த நாடுகளை தன் கப்பல் படையால் வென்ற தமிழன் ..இன்று... சுயம் தொலைத்து ...
வெளிச்சம் என்று நம்பி தீயில் விழுந்து சாகும் விட்டில் பூச்சிகளைப் போல் ..
எதையெதையோ நாகரீகம் என்று நம்பி தன் அடையாளத்தை தொலைத்துவிட்டான் ..... அவனை மீட்டெடு ....
தமிழனுக்கு தமிழை அறிமுகப்படுத்து ...."
" தயா கொஞ்சம் பொறுத்து பேசு...மூச்சிரைக்கிறாய் ..."
"இன்னும் கொஞ்ச நேரம்தான் ..சக்தி ...பிறகு நான் நினைத்தாலும் ...
அந்த மூச்சை நான் வாங்க முடியாது ...
நான் சொன்ன எல்லாம் உன்னால் முடியும் ....
யாருக்கும் வாய்க்காத அரசியல் வாய்ப்பு உனக்கு கிடைத்து இருக்கிறது.... தமிழை பேசி தமிழ்நாட்டை பாதியை வளைத்துப் போட்ட ...உன் தந்தையிடமிருந்து ....உன் தமிழ் ஞானத்தால் இந்த தமிழ் நாட்டையே காப்பாற்று .....
சக்தி எனக்கு தாகமாய் இருக்கிறது ..."
" கொஞ்சம் பொறு தயா... நான் சென்று நீர் எடுத்து வருகிறேன் ...."
" வேண்டாம் சக்தி .... என் பக்கத்தில் வா ..உன் இதழால் என் தாகம் தீர்த்து விடு ....."
அவர்களின் இதழ்கள் சேர்ந்தன .... கடைசியாக
தயா சுவாசித்தது சக்தியின் மூச்சுக்காற்றை தான் .....
"ஐயோ தயா ...என்னை விட்டு சென்றுவிட்டாயா ?
நீ இறந்து என்னுள் வாழ்கிறாய் ....
நான் வாழ்ந்து உன்னுள் மரித்துவிட்டேனடா ....!!!!!!"
மிக மிக அருமை....நிறைய இடங்கள் என் மனதில் உள்ளவற்றை நீங்கள் சொல்லிருக்கிங்க....." நீ எக்காரணம் கொண்டும் தற்கொலை செய்துக் கொள்ள கூடாது ...
நான் உன் மனதில் வாழும்வரை என்னால் மரிக்க முடியாது.....
காதலன் இறந்தால் காதல் சாவதில்லை ....
மண்ணில் பிறந்த எல்லோரும் தன் அடையாளமாய் தன் வாரிசுகளை விட்டுச் செல்வார்கள் ....
நான் என் காதலை விட்டு செல்கிறேன்....
சாதி சாயத்தில் மூழ்கி நிறம் தொலைத்து இருக்கும் வெள்ளை மனங்களை உன் அன்பெனும் நீர் ஊற்றி கழுவிவிடு.....
இமயம் வென்று .... கடல் கடந்த நாடுகளை தன் கப்பல் படையால் வென்ற தமிழன் ..இன்று... சுயம் தொலைத்து ...
வெளிச்சம் என்று நம்பி தீயில் விழுந்து சாகும் விட்டில் பூச்சிகளைப் போல் ..
எதையெதையோ நாகரீகம் என்று நம்பி தன் அடையாளத்தை தொலைத்துவிட்டான் ..... அவனை மீட்டெடு ....
தமிழனுக்கு தமிழை அறிமுகப்படுத்து ....".....உங்களை நினைத்து பெருமையாக இருக்கு ஸ்ரீனி ....நிறைய உழல்கள் நடுத்தர வயதை கடந்தவர்களே காரணமாக இருப்பது அவர்களுக்கு அரசியல் வியாபாரமாக நினைத்து வளர்ந்த சூழலே காரணம் என்று தோன்றும்....நீங்கள் சொன்ன மாற்றமே படிக்க சந்தோசமாக இருக்கு....தயா முடிவால் கலங்கவும் வச்சுட்டீங்க ....வாழ்த்துக்கள்....
////வீரம் செறிந்த புலிகள் தாய்மண் காக்க போராடினாலும் .... சூழ்ச்சிக்கண்ணிக்குள் சிக்கிக் கொண்ட ஈழப்படைப் போல் ...
ஈனப்படையிடம் சிக்கிக் கொண்டனர்////
காதலைவிட, தமிழின் வாசத்தை இன்னும் அதிக மணத்தோடும், குணத்தோடும் புகட்டி இருக்கிறீர்கள்.... ரொம்பவே ரசித்தேன்... இறப்பின் சோகத்தைவிட, அந்த இறப்பில் உண்டான ஒரு புது பிறப்பின் உணர்ச்சியை அதிகமாய் உணரமுடிந்தது.... வித்தியாசமான முடிவு..... ரொம்ப சிறப்பா இருந்துச்சு....
மீண்டும் இன்னொரு அழகான படிப்போடு வருவீர்கள் என்று நினைக்கிறேன்.... வந்திட வாழ்த்துகள்...
Hi Srini,
Great work man congrats no words to say how i felt while reading the climax.
Just amazing to read the way u present t story.....keep rocking . Best wishes