Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இது கடவுளின் காதல் கதை -நிறைவுப்பகுதி


கவி

Status: Offline
Posts: 67
Date:
இது கடவுளின் காதல் கதை -நிறைவுப்பகுதி
Permalink   
 


 

அவர்கள் ஆரம்பித்த இன்பக் கதை இறுதியை அடையாமலே முடிந்தது ...

" தயா மனிதர்களின்  காலடி ஓசை "

" சக்தி, காட்டில் விலங்குகளின் காலடி ஓசைக் கேட்டால்தான் 

அச்சம் கொள்ளவேண்டும் ..."

"தயா, விலங்குகளின் இயல்பு நாம் அறிவோம் ...

ஆனால் மனிதர்களின் இயல்பை யாராலும் அறிய முடியாது ..."

தயா மரம் ஏறிப் பார்க்க தூரத்தில் ஐந்து மனித தலைகள் தெரிந்தன ...

இவர்கள் யார் ??

அவர்களில் ஒருவன் கையில் இருக்கும் மின்னணு சாதனத்தை 

உற்றுப் பார்த்து திசையை அனுமானித்து வர ...சட்டென்று 

பொறி தட்டியது தயாவுக்கு ....

மரம் இறங்கிய தயா 

" சக்தி உன் அலைபேசி எங்கே ??"

" இதோ இங்கே வைத்திருக்கிறேன் தயா  .."
 
"ஐயோ, அதை தூக்கி எறி , அதை வைத்துதான் அவர்கள் நம்மை நோக்கி வருகிறார்கள் ....."
 
இருவரும் ஓட ஆரம்பித்தனர்....
 
அந்த காலை நேர அமைதியை இவர்களின் பரப்பரப்பான ஓட்டம் கலைத்துப் போட்டது.....
 
தயாவால் எளிதாக காட்டின் பாதையில் ஓட முடிந்தது.....
 
சக்தி எளிதாய் களைப்படைந்தான் ....
 
" தயா என்னால் முடியவில்லை ... இத்தனை நாள் நான் சேர்த்து வைத்த கொழுப்பும் ...பாவமும் ...என்னை நகரவிட மறுக்கிறது....."
 
"வா அந்த புதரில் மறைந்துக் கொள்வோம் சக்தி.... "
 
மறைவிடம் சேர்வதுக்குள் அவர்கள் அந்த நபர்களால் சூழப்பட்டார்கள்......
 
அறிவைத் தவிர்த்து அங்கங்கள் அனைத்தும் அபரிமிதமாய் வளர்ந்த அவர்களில் ஒருவன் பேச ஆரம்பித்தான்.....
 
"சக்தி ...நீ எங்களோடு வர சம்மதித்தால், உன்னை உயிருடன் கொண்டு வர உத்தரவு ...இல்லையென்றால் ....
 
உன்னையும் இவனுடன் சேர்த்துக் கொல்ல உன் அப்பா சொல்லியிருக்கிறார் .....
 
" சீ ...வாயை மூடு ...அப்பா என்று அழைக்க அருகதை அற்றவன் அவன் ...."
 
வீரம் செறிந்த புலிகள் தாய்மண்  காக்க போராடினாலும் .... சூழ்ச்சிக்கண்ணிக்குள் சிக்கிக் கொண்ட ஈழப்படைப் போல் ...
 
ஈனப்படையிடம் சிக்கிக் கொண்டனர் தயாவும் சக்தியும்.....
 
" எங்களை விட்டுவிடுங்கள் ....நாங்கள் வாழ நினைத்ததை தவிர்த்து....
 
எந்த தவறும் செய்யவில்லை......"
 
"சக்தி ..ஆறாம் அறிவு வேலை செய்யாதவர்களிடம் ஆதரவை எதிர்பார்க்காதே .... "
 
துப்பாக்கியின் முனை சக்தியை நோக்கி நீண்டது ...
 
தயா, சக்தியை நோக்கி ஓட ...
 
அதற்குள் மற்றொருவன் ..... தயாவை சுட்டான் ....
 
சிலவினாடிகளில் நடந்த இந்த சம்பவத்தால் ...சக்தி மூர்ச்சை அடைந்தான்....
 
அவனையும் சுட துப்பாக்கி உயர்ந்த பொழுது ...
 
" தயவு செய்து அவனை விட்டுவிடுங்கள்.... இத்தனைத் துன்பங்களுக்கும் நான்தான் காரணம்....நான் எப்படியும் இறந்துவிடுவேன் ...அவனை விட்டுவிடுங்கள் ...."
 
கருணையினாலோ ...கடமை முடிந்ததென்று நினைத்ததாலோ ..
 
வந்தவர்கள் அவர்களைவிட்டு சென்றுவிட்டனர்......
 
நீண்ட அமைதி .....
 
கண்விழித்தான் சக்தி....இப்போதும் அதே கோலத்தில் ..தயாவின் மார்பில் சக்தி....
 
பதறி எழுந்தான் ...
 
"ஐயோ தயா ! எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ ..அது நடந்துவிட்டது .....நான் சென்று யாரையாவது உதவிக்கு அழைத்து வருகிறேன் ...."
 
"வேண்டாம் சக்தி..எல்லாம் முடிந்துவிட்டது ....உன்னுடன் பேச வேண்டும் ....இங்கிருந்து ஊருக்குள் சென்று மருத்துவரை அழைத்து வருவதற்குள் நான் போய் விடுவேன் "
 
" கடவுளே பாவம் செய்தவர்களை விட்டுவிட்டு ..பாசம் காட்டியவனுக்கு நீ தரும் பரிசா ...சொல் தயா "
 
" நீ எக்காரணம் கொண்டும் தற்கொலை செய்துக் கொள்ள கூடாது ...
 
நான் உன் மனதில் வாழும்வரை என்னால் மரிக்க முடியாது.....
 
காதலன் இறந்தால் காதல் சாவதில்லை ....
 
மண்ணில் பிறந்த எல்லோரும் தன்  அடையாளமாய் தன் வாரிசுகளை விட்டுச் செல்வார்கள் ....
 
நான் என் காதலை விட்டு செல்கிறேன்....
 
சாதி சாயத்தில் மூழ்கி நிறம் தொலைத்து இருக்கும் வெள்ளை மனங்களை  உன் அன்பெனும் நீர் ஊற்றி கழுவிவிடு.....
 
இமயம் வென்று .... கடல் கடந்த நாடுகளை தன் கப்பல் படையால் வென்ற தமிழன் ..இன்று... சுயம் தொலைத்து ...
 
வெளிச்சம் என்று நம்பி தீயில் விழுந்து சாகும் விட்டில் பூச்சிகளைப் போல் ..
 
எதையெதையோ நாகரீகம் என்று நம்பி தன் அடையாளத்தை தொலைத்துவிட்டான் ..... அவனை மீட்டெடு ....
 
தமிழனுக்கு தமிழை அறிமுகப்படுத்து ...."
 
" தயா கொஞ்சம் பொறுத்து பேசு...மூச்சிரைக்கிறாய் ..."
 
"இன்னும் கொஞ்ச நேரம்தான் ..சக்தி ...பிறகு நான் நினைத்தாலும் ...
 
அந்த மூச்சை நான் வாங்க முடியாது ...
 
நான் சொன்ன எல்லாம் உன்னால் முடியும் ....
 
யாருக்கும் வாய்க்காத அரசியல் வாய்ப்பு உனக்கு கிடைத்து இருக்கிறது.... தமிழை பேசி தமிழ்நாட்டை பாதியை வளைத்துப் போட்ட ...உன் தந்தையிடமிருந்து ....உன் தமிழ் ஞானத்தால் இந்த தமிழ் நாட்டையே  காப்பாற்று .....
 
சக்தி எனக்கு தாகமாய் இருக்கிறது ..."
 
" கொஞ்சம் பொறு தயா... நான் சென்று நீர் எடுத்து வருகிறேன் ...."
 
" வேண்டாம் சக்தி .... என் பக்கத்தில் வா ..உன் இதழால் என் தாகம் தீர்த்து விடு ....."
 
அவர்களின் இதழ்கள் சேர்ந்தன .... கடைசியாக 
 
தயா சுவாசித்தது சக்தியின் மூச்சுக்காற்றை தான் .....
 
"ஐயோ தயா ...என்னை விட்டு சென்றுவிட்டாயா ?
 
நீ இறந்து என்னுள் வாழ்கிறாய் ....
 
நான் வாழ்ந்து உன்னுள் மரித்துவிட்டேனடா ....!!!!!!"
 
சக்தியின் கதறல் கேட்க சகிக்காத சூரியனும் மேகத்தில் மறைந்துக் கொண்டான் ...
 
இறைவனும் அழுதான் பெரு மழையாய் ......."
 
இதுதான் என் காதல் கதை சொல்லி முடித்தான் சக்தி ...
 
பிறகு நடந்தவை உங்களுக்கு தெரியுமே  ....!
 
தயாவின் வார்த்தைகளைக் காப்பாற்ற நானும் அரசியல் கற்றேன் ..
 
எல்லாரையும் ஏமாற்றி பிழைத்த என் அப்பா ..எமனை ஏமாற்ற முடியாமல் ..மாரடைப்பில் காலமானார் ....
 
இன்று தமிழகத்தின் முதல்வராய் நிற்கிறேன் ....
 
அவன் இறந்த இடத்தில் வளர்ந்த இந்த மரம் தான் என் ஆறுதல் ....
 
இதில் சாயும்போது நான் தயாவின் மார்பில் சாய்ந்ததாய் உணர்கிறேன்......
 
நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று ..தேடித்தேடி 
 
உங்களைக் கொண்டு வந்தேன் ...
 
குமார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ....
 
தீபன் தொழில் மேம்பாட்டுத் துறை அமைச்சர் .....
 
பாலா தகவல் தொழிநுட்பத்துறை அமைச்சர் ...
 
ஸ்ரீனி உள்துறை அமைச்சர் .....
 
அருண் மருத்துவத்துறை அமைச்சர் ..
 
இப்போது நான் நிம்மதியாக இருப்பேன் ....
 
இனி வருங்காலம் உங்கள் கையில் ....
 
ஸ்ரீனி கடைசியாக சொன்ன வார்த்தைகள் .....
 
" சக்தி  . ..இது சாதாரண காதல் கதையல்ல ...
 
தான் இறந்தும் இந்த தமிழகம் வாழ உங்களைத் தந்த ..
 
தயா என்னும் கடவுளின் காதல் கதை ......."
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


 


__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

மிக மிக அருமை....நிறைய இடங்கள் என் மனதில் உள்ளவற்றை நீங்கள் சொல்லிருக்கிங்க....." நீ எக்காரணம் கொண்டும் தற்கொலை செய்துக் கொள்ள கூடாது ...

நான் உன் மனதில் வாழும்வரை என்னால் மரிக்க முடியாது.....

காதலன் இறந்தால் காதல் சாவதில்லை ....

மண்ணில் பிறந்த எல்லோரும் தன் அடையாளமாய் தன் வாரிசுகளை விட்டுச் செல்வார்கள் ....

நான் என் காதலை விட்டு செல்கிறேன்....

சாதி சாயத்தில் மூழ்கி நிறம் தொலைத்து இருக்கும் வெள்ளை மனங்களை உன் அன்பெனும் நீர் ஊற்றி கழுவிவிடு.....

இமயம் வென்று .... கடல் கடந்த நாடுகளை தன் கப்பல் படையால் வென்ற தமிழன் ..இன்று... சுயம் தொலைத்து ...

வெளிச்சம் என்று நம்பி தீயில் விழுந்து சாகும் விட்டில் பூச்சிகளைப் போல் ..

எதையெதையோ நாகரீகம் என்று நம்பி தன் அடையாளத்தை தொலைத்துவிட்டான் ..... அவனை மீட்டெடு ....

தமிழனுக்கு தமிழை அறிமுகப்படுத்து ....".....உங்களை நினைத்து பெருமையாக இருக்கு ஸ்ரீனி ....நிறைய உழல்கள் நடுத்தர வயதை கடந்தவர்களே காரணமாக இருப்பது அவர்களுக்கு அரசியல் வியாபாரமாக நினைத்து வளர்ந்த சூழலே காரணம் என்று தோன்றும்....நீங்கள் சொன்ன மாற்றமே படிக்க சந்தோசமாக இருக்கு....தயா முடிவால் கலங்கவும் வச்சுட்டீங்க ....வாழ்த்துக்கள்....

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 



////வீரம் செறிந்த புலிகள் தாய்மண் காக்க போராடினாலும் .... சூழ்ச்சிக்கண்ணிக்குள் சிக்கிக் கொண்ட ஈழப்படைப் போல் ...

ஈனப்படையிடம் சிக்கிக் கொண்டனர்////

காதலைவிட, தமிழின் வாசத்தை இன்னும் அதிக மணத்தோடும், குணத்தோடும் புகட்டி இருக்கிறீர்கள்.... ரொம்பவே ரசித்தேன்... இறப்பின் சோகத்தைவிட, அந்த இறப்பில் உண்டான ஒரு புது பிறப்பின் உணர்ச்சியை அதிகமாய் உணரமுடிந்தது.... வித்தியாசமான முடிவு..... ரொம்ப சிறப்பா இருந்துச்சு....
மீண்டும் இன்னொரு அழகான படிப்போடு வருவீர்கள் என்று நினைக்கிறேன்.... வந்திட வாழ்த்துகள்...



__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

ஸ்ரீனி!!! நிச்சயம் நா குழறுகிறது!!

உயிர் பிரிவதை கூட இத்தனை உணர்ச்சியுடன் காட்ட முயுமா?

"முத்தத்திற்கு இதழை சேர்க்கும் போது காதலன், பிரிக்கும் போது பிணம்"

நிச்சயம் யாருக்கும் வரக்கூடாத நிலை.

###

இமயம் வென்று .... கடல் கடந்த நாடுகளை தன் கப்பல் படையால் வென்ற தமிழன் ..இன்று... சுயம் தொலைத்து ...
 
வெளிச்சம் என்று நம்பி தீயில் விழுந்து சாகும் விட்டில் பூச்சிகளைப் போல் ..
 
எதையெதையோ நாகரீகம் என்று நம்பி தன் அடையாளத்தை தொலைத்துவிட்டான் .....###
 
சாகும் போதும் இனத்திற்காகவும் மொழிக்காகவும்
 
ஆதங்கப்படும் "தயா" இமயத்தை விட உயர்ந்துவிட்டார்
 
இந்த காதல் பயணத்தில் என்னையும் இணைத்து கொண்டதற்கு
 
பெருமகிழ்சி! சிறு நெகிழ்ச்சி!!,
 
உங்களுக்கு என்னுடைய சிறு பாராட்டு பத்திரம்!!
 
 
கவிதையிலே ஒரு கதை!
 
அதில் காலத்தின் அவலங்களுக்கு ஏகப்பட்ட உதை!!
 
 
இனிமையான நடை!
 
இது தமிழுக்கு இன்னொரு உடை!!
 
 
இப்படைப்பு "அன்பைதேடிக்கு" ஒரு அணி!
 
இனி தொடரட்டும் உங்கள் தமிழ்பணி!!
 
- அன்புடன் ராஜ்குட்டி காதலன்

 



__________________


கவி

Status: Offline
Posts: 67
Date:
Permalink   
 

@samram:ஒவ்வொருமுறை நீங்கள் தந்த கதையைப் படித்து ..

அதில் வரும் வரிகளை பாராட்டும் போது இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்னை நானே தட்டிக் கொடுத்துக் கொள்வேன் .......

ஊக்கம் தந்த தந்த தங்கள் வார்த்தைகளுக்கு நன்றி ....


@msvijay: ஒவ்வொரு முடிவும் மற்றொரு ஆரம்பத்தை காட்டுகின்றன ...

ஆனால் காதலில் மட்டும் அதற்கு மாறாக நடக்கிறது ....

காதலனின் நினைவுகளுடன் ..அவன் கண்ட கனவுகளை நனவாக்கும்

சக்தி இன்றைய இளைஞர்களுக்கு ஓர் முன்னுதாரமாய் இருக்க வேண்டும் என்ற நோக்கில் தான் அந்தப் பாத்திரம் அமைத்தேன் ...

நம்மில் இருக்கும் சோகமே வைராக்கியமாய் மாறும்.....

தங்கள் கருத்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி...


@rajkutty kathalan:என் கதைக்கு சிறப்புப்பாயிரம் பாடிய தங்களுக்கு நன்றி...

உண்மையில் நீங்கள் இந்த எந்த அளவுக்கு ஒன்றியிருக்கிறீர்கள் என்பதை

உங்கள் வார்த்தைகள் காட்டுகின்றன ...

உங்களுக்குள் இருக்கும் கவிஞரை சீக்கிரம் வெளிக் கொண்டு வாருங்கள் .....



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 103
Date:
Permalink   
 

Hi Srini,
Great work man congrats no words to say how i felt while reading the climax.
Just amazing to read the way u present t story.....keep rocking . Best wishes

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink   
 

To meet, to love and than to part is the sad tale of many human heart,
Congrats, keep writing,
All the best.

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

Good job Sirni!

நல்ல மெசேஜ்ஜோட முடிச்சிருக்கீங்க.. அருவியாய்த் தமிழ்.. வாழ்த்துக்கள்!!!

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

மிக அருமை... உங்கள் ஏக்கமும், தமிழ் தாகமும் புரிகிறது...

__________________


புதியவர்

Status: Offline
Posts: 7
Date:
Permalink   
 

nice story

__________________

I PROMISE I WILL BE THERE WHENEVER U NEED ME



உறுப்பினர்

Status: Offline
Posts: 80
Date:
Permalink   
 

இன்றைக்குத்தான் அத்தனை பகுதிகளையும் முழுமையாக படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மிக அழகான காதல் கதை. காதலன் இறந்தாலும் அவன் காதலுடன் வாழ்வதே சிறப்பு. கவித்துவமான வரிகள் கதையை இன்னுமின்னும் அழாகக்கின.

சக்தி போன்ற ஆட்சியாளர்கள் வந்து 'நமக்கான' உரிமையை தருவார்கள் என நம்புகிறேன்.

__________________


புதியவர்

Status: Offline
Posts: 12
Date:
Permalink   
 

சமூக நோகோடு அழகான ஆழமான உயிர் ஓட்டம் உள்ள கதை காதல் எனக்கு மிகவும் பிடித்தது சீனு

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard