திறந்திருக்கும் வீட்டில் யார் அழைப்புமணியை அழுத்துவது ...
கோபமாய் தயா திரும்ப அங்கே நின்றிருந்தது சக்தி ...
" வாருங்கள் வருங்கால முதல்வரே ...
உங்கள் பாதம்பட இந்த ஏழையின் குடிசைக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..."
" தயா நீயும் என்னை வேதனைப்படுத்தாதே "
" போதும் சக்தி , முத்தமிழில் மூன்றாம் தமிழை என்னிடம் அரங்கேற்றாதே , நீ மாலைச் சூடி , புன்னகை புரிந்தக் காட்சியைப் பார்த்த கோடிக்கணக்கானவர்களில் நானும் ஒருவன் ...."
"தயா நான் ஒரு சூழ்நிலைக்கைதி"
"ஏமாற்றங்கள் புதிது அல்ல எனக்கு சக்தி , ஆனால் நீயும் ஒரு சராசரி
மனிதன் தான் என்று நிரூபித்துவிட்டாய் "
"தயா என்னை புரிந்துக்கொண்டது அவ்வளவுதானா, வெறும் புகழ் வெளிச்சத்தில் மயங்கி அதில் விழுந்து மாயும் விட்டில் பூச்சி என்று என்னை நினைத்தாயா ?"
"உன் வாழ்க்கை , உன் விருப்பம், வாழ்க்கை என்பது அவரவர் தரப்பு நியாயம் தான்"
" தயா , நிலவின் பின்பக்கம் போல் , என் வாழ்வும் இருட்டானது ...
கல்லூரி தமிழ் விழாவில் தலைமைத் தாங்க வந்து ,அதில் கவி பாடிய என் தாயை தன் அதிகாரத்தால் துணைவியாக்கிக் கொண்டவர் ....
ரவாணனால் சிறைப்பிடிக்கப்பட்ட சீதையாய் .....
தன் காதலையும், வாழ்வையும் தொலைத்து நடைபிணமாய் வாழ்கிறார் என் தாய் ....
அந்த வாழ்க்கையும் எனக்காகத்தான் ...
அந்தத் தாயின் உயிர் காக்கவே இந்த வேடம் ..."
"சக்தி என்ன சொல்கிறாய் ?"
"தயா, என்னதான் கல்லறையை அழகாய் கட்டினாலும் , உள்ளே இருப்பது வெறும் அழுகிய உடலும் , அதனை மட்க செய்யும் புழுக்களும் தான் ....
என் அப்பாவும் அதுமாதிரிதான் ...."
"சக்தி சினம் கொண்டவன் தானும் கெட்டு ,மற்றவரையும் துன்பப்படுத்துகிறான் என்ற பொய்யில் புலவனின் வார்த்தையை நான் இன்று மெய்ப்படுத்திவிட்டேன் .....மன்னிப்பாயா என்னை ....?"
" பிறந்தநாள் கொண்டாடும் குழந்தைக்கு என் மன்னிப்பு பரிசாக வழங்கப்பட்டது "
"என் பிறந்தநாள் என்று உன்னிடம் சொல்லவில்லையே ?"
"என் அலைபேசி எண்ணை நீ கண்டுபிடிக்கும்போது , உன் பிறந்தநாளை என்னால் கண்டுபிடிக்க இயலாதா?..."
" பிறந்தநாள் என்று தெரிந்தும் வெறும் கையுடன் வந்து இருக்கிறாய் ..எங்கே எனக்கான பரிசு"
ஒளித்து வைத்த இனிப்பை அம்மாவிடம் கேட்கும் குழந்தைப் போல ..என்னிடம் கேட்டான் தயா.
புகழுக்கு மயங்காத மனிதர் இல்லை... சக்தியை போன்ற அபூர்வமானவர்கள் கதைகளில் மட்டும்தான் சாத்தியமான்னு தெரியல....
அழகான பிறந்தநாள் பரிசு....
மிக தெளிவான கதை நகர்வு, மேற்கொண்டு கவிதையுங்கள்....