Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பனித்துளியில் சில மலர்கள் - 28


எழுத்தரசர்

Status: Offline
Posts: 196
Date:
பனித்துளியில் சில மலர்கள் - 28
Permalink   
 


கல்பனாவை அந்த நேரத்தில் அங்கே திவாகர் எதிர்பார்க்கவே இல்லை.
 
தன்னைச் சமாளித்துக்கொண்டு கதிரவனை விட்டு விலகியவனாக எதுவுமே நடக்காததுபோல, "வா கல்பனா. என்ன இந்த நேரத்துலே?" என்று அவளிடம் கேட்டவன் கதிரவனின் புறம் திரும்பி," கதிரவன் இவங்களை நீங்க பார்த்ததே இல்லையே.  இவங்க தான் என் மனைவி கல்பனா." என்று அறிமுகம் செய்துவைத்து நிலைமையைச் சமாளிக்க முயன்றான்.
 
அவனுக்கே அவன் செய்கை அபத்தமாகப் பட்டது.
 
நெருப்புக் கோளமாக மாறிய விழிகளில் வெறுப்பு நிரந்த பார்வையைத் தேக்கி இருவரையும் மாறி மாறிப் பார்த்த கல்பனா மறுகணம், "ச்சே. டிஸ்கஸ்டிங்." என்ற வார்த்தைகளை வெறுப்பாக உமிழ்ந்துவிட்டு அவனது பதிலுக்குக் கூடக் காத்திராமல் வெகுவேகமாக அந்த அறையை விட்டே வெளியேறினாள்  கல்பனா.
 
என்ன செய்வதென்று புரியாமல் ஒருகணம் தவித்த திவாகர் கதிரவனைப் பார்த்தான்.
 
"பார்த்தாயா?  உன்னுடைய காதலை நான் ஏற்றுக்கொண்டது எங்கே போய் முடிந்திருக்கிறதென்று இப்போது புரிந்ததா?" என்பது போல இருந்தது அந்தப் பார்வை.
 
என்ன செய்வது  என்ன பேசுவது என்று புரியாமல் ஒரு கணம் தவித்துப் போனான் கதிரவன்.
 
“ஸாரி திவாகர் .  நான்  இதை  எதிர்பாக்கவே இல்லை.  சத்தியமா நான் எதிர்பார்க்கவே இல்லை.  இன்பாக்ட் நீங்க இப்படி என்னை கிச் பண்ண வருவீங்கன்னு நான் நினைக்கவே இல்லை. உங்க காதலை நீங்க சொன்னப்போ ரொம்ப சந்தோஷமா இருந்ததென்னவோ உண்மைதான்.
ஆனால் அதுக்காக உங்க குடும்ப வாழ்க்கையிலே ஒரு சின்ன சலனத்தைக் கூட உண்டு பண்ண நான் என்னிக்குமே நினைச்சது கிடையாது திவாகர்.  ப்ளீஸ் என்னை நம்புங்க." - பரிதவிப்புடன் பேசினான் கதிரவன்.
 
அதற்குள் திவாகர் தனது வழக்கமான நிதானத்துக்கு வந்து விட்டான்.
 
"கூல் டௌன் கதிரவன்.  கூல் டௌன்.  என்னை மறந்த நிலையிலே நான் நிதானம் தவறி நடந்துக்கிட்டதாலே வந்த வினை இது.  இதை நான் தான் பேஸ் பண்ணி ஆகணும்.  இதுலே உங்க தப்பு எதுவுமே இல்லை கதிரவன்.  வீணா உங்க மனசைப்போட்டு வருத்திக்காதீங்க.  போய்  உங்க வேலையைப் பாருங்க." - என்று தேற்றினான் திவாகர்.
 
"இல்லே திவாகர்.  நான் தப்பு பண்ணிட்டேன். பெரிய தப்பு பண்ணிட்டேன். என் மனசுலே உங்க மேல ஏற்பட்ட காதலை எனக்குள்ளேயே வச்சுகிட்டிருந்தேன்னா இந்த நிலைமை வந்தே இருக்காது." - என்றான் கதிரவன் குற்ற உணர்வுடன்.
 
"ஆனால் நீங்க நொறுங்கிப் போயிருப்பீங்களே கதிர்.  வேலையிலே   கவனம் செலுத்த முடியாம வாழ்க்கையிலே பிடிமானத்தை இழந்து வளரவேண்டிய நீங்க தேங்கிப் போயிருப்பீங்க கதிர்.  வாழ்க்கையிலே உயர்ந்து வரவேண்டிய நீங்க காணாமப் போயிருப்பீங்க.  ஏதாச்சும் ஒரு சோட்டா கம்பெனியிலே கணக்கு எழுதிக்கிட்டு பத்தோட பதினொண்ணா அடையாளமே தெரியாம அமுங்கிப் போயிருப்பீங்க." - என்றான் திவாகர்.
 
"ஸோ வாட் திவாகர்? நானெல்லாம் சாதிச்சு என்ன ஆகப்போகுது?  உங்களை மாதிரி நல்ல குடும்பச் சூழ்நிலையிலே இருக்கற ஒருத்தர் உசந்து நல்ல நிலைமைக்கு வரணும் திவாகர்.  நான் எல்லாம் ஏற்கெனவே கேர் ஆப் பிளாட்பார்ம்.  நான் ஒசந்து வரலைன்னா அது ஒண்ணும்  பெரிய தப்பு இல்லை.  ஆனால் உசரத்துலே இருக்குற பெரிய இடத்து வாரிசான நீங்க கீழே இறங்கக்கூடாது. அது பெரிய அவமானத்தையும் பழியையும் கொண்டு வந்து சேர்த்துவிடும்.  வாழ்க்கையிலே உங்களுக்கு தீராத களங்கத்தை உண்டு பண்ணிடும் திவாகர்." - என்றான் கதிரவன் ஆற்றாமையுடன்.
 
மெல்ல  அவன்  முதுகைத்  தட்டிக்கொடுத்த  திவாகர் , “கதிரவன்!.  அவமானம் , பழி  இவை  எல்லாம்  எல்லாருக்குமே பொதுதான்.  நாம எல்லாருமே அதையெல்லாம் வாழ்க்கையிலே ஏதாவது ஒரு கட்டத்துலே ஏதாவது ஒரு விதத்துலே சந்திச்சேதான் ஆகணும்.  இதுலே பெரிய இடம், சின்ன இடம் என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது.  நீங்க கேர் ஆப் பிளாட்பார்ம்னா அப்படியே இருக்கலாமுன்னு யார் சொன்னது? சக்சஸ் என்பது எல்லாருக்கும் போதுதான்.  இந்த பூமியிலே பிறந்திருக்குற எல்லாருக்கும் வாழ்க்கையிலே ஜெயிக்கிற உரிமையும் அதுக்கான தகுதியும் இருக்கு. கடவுள் எல்லாருக்கும் பொதுவானவர்ன்னு சொல்கிறோமே அது ஏன் தெரியுமா?  பிறக்கிற எல்லாருக்குமே வெற்றிக்கான வாய்ப்புகளை சரி சமமாகத்தான் படிச்சு வச்சு இருக்காரு.  ஆனால் அதுக்கான பாதைகள் மட்டுமே இங்கே மறைவாக இருக்கு.  அவரவர் தன்மைக்கு ஏற்றபடி அவங்க அவங்க திறமைக்கேற்ற பாதையை கண்டுபிடிச்சு செயல்படுவதற்கான அறிவையும் கடவுள் நமக்கு கொடுத்திருக்காரு.   அவன் கேர் ஆப் பிளாட்பாரமா இருந்தாலும் சரி இல்லே பார்ன் வித் எ சில்வர் ஸ்பூனா இருந்தாலும் சரி.  எல்லாரும் பிறக்கிறதும் ஒரே வழிதான். போறதும் ஒரே பாதைதான்.  இடைப்பட்ட வாழ்க்கையிலே சாதிக்கறதுக்கும்  எல்லாருக்கும் உரிமை இருக்கு.  உங்க உரிமையை நீங்க யாருக்காகவும் எந்தக் காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்கக் கூடாது கதிரவன். இதுக்கெல்லாம் மனசு தளர்ந்து போகாதீங்க." - என்றான் திவாகர் தெளிவாக.
 
அவன் பேசுவதையே கேட்டுக்கொண்டிருந்த கதிரவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
 
"இருந்தாலும் திவாகர்.  இப்போ ஏற்பட்டு இருக்கும் சிக்கலுக்கு நான் தானே காரணம். ஐ பீல் கில்ட்டி" - என்றான் கதிரவன். 
 
லேசாகச் சிரித்த திவாகர், " நீங்களா?  நீங்க எப்படி காரணமாவீங்க கதிரவன்?  நீங்க என் கிட்டே வந்து."வாங்க திவா.  வந்து என்னை லிப் டு லிப் கிஸ்  அடிங்கன்னு  சொன்னீங்க?  இல்லையே.  ஏதோ உணர்ச்சி வேகத்துலே என்னை கண்ட்ரோல் பண்ணிக்க முடியாம நான் தானே உங்களை கிஸ்  பண்ணினேன்.  என்ன இப்போ?  என் மனைவி பார்த்துவிட்டதாலே நமக்கு கொஞ்சம் உறுத்தலா இருக்கு.  ஒருவேளை அவங்க இங்கே வராமலே இருந்திருந்தா இப்படி தோன்றி இருக்குமா என்ன?  இந்த ப்ராப்ளத்தை நான் தான் பேஸ் பண்ணி ஆகணும்.  ஸோ  ரிலாக்ஸ் மை டியர்." என்று அவன் கன்னத்தை செல்லமாக தட்டிக்கொடுத்துவிட்டு வெளியே கிளம்ப ஆயத்தமானவனாக இண்டர்காமில் ஸ்ரீதரை அழைத்து, "ஸ்ரீதர்.. நான் இப்போ கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்.  முக்கியமான கால்ஸ் வந்தா நோட் பண்ணி வச்சுக்குங்க.  ஐ வில் பீ பாக் ஸூன்." - என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வேகமாக வெளியேறினான்.   
 
*********
 
ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாள் கல்பனா.  அவள் மனம் எரிமலையாகக் கனன்று கொண்டிருந்தது.  ஏமாற்றம், அவமானம், ஆத்திரம், ஆவேசம் எல்லாம் கலந்த ஒரு உணர்ச்சி அவளை ஆக்கிரமித்து அலைக்கழித்துக்கொண்டிருந்தது.
 
"திவாகரா?  என் திவாகரா இப்படி நடந்துகொண்டார்?" - கண்ணால் கண்டதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் புழுங்கித் தவித்தாள் அவள்.
 
"வெளியே தெரிந்தால் எவ்வளவு பெரிய அவமானம்?  வெளியே யாரிடமும் சொல்லக்கூடிய விஷயமா இது?  இதைவிட அவர் ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்தால்  அதுகூட எவ்வளவோ பரவாயில்லையே.  இவர் இப்படி எனக்கு துரோகம் பன்னர்ருன்னு வெளிப்படையா சொல்லிக்க முடியும்.  ஆனால் இதை..?  எப்படி யாரிடம் சொல்லமுடியும்?  நான் அவர் மீது எவ்வளவு அன்பு செலுத்தினேன்.?  எத்தனை நம்பிக்கை வைத்திருந்தேன்?  அதையெல்லாம் நினைத்துப் பார்த்திருந்தால் இப்படி ஒரு காரியத்தை அவர் செய்திருப்பாரா?"  - பலவிதமாக எண்ணி எண்ணிக் குமைந்துகொண்டிருந்தாள் அவள்.    
 
அவள் மனதில் திவாகரைப் பற்றி உருவாக்கி வைத்திருந்த உயர்வான பிம்பம் தவிடுபொடியாகிக்கொண்டிருந்தது .
 
"படித்தவர்.  பண்பு நிறைந்தவர்.  நாகரீகம் தெரிஞ்சவர். நிதானம் தவறாதவர்.  பெரிய இடத்து வாரிசு என்பதற்கேற்ற அருமையான மற்றவர் பார்த்துப் பொறாமைப்படுகிற அளவுக்கு உயர்வான எண்ணங்களும் குணங்களும் பொருந்தியவர்.  யாருக்கு கிடைப்பார்கள் இப்படி ஒரு கம்பீரமான கணவர்!" - என்று தனக்குள் பெருமையாக நினைத்துக்கொண்டிருந்த எண்ணங்களெல்லாம் கல்லடி பட்ட கண்ணாடி போல தூள் தூளாகச் சிதறிக்கொண்டிருந்தன. 
 
ஏமாற்றம் அவள் மனதை நிறைக்க விழிகளிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருகி கன்னங்களில் வழிந்துகொண்டிருந்தது.
 
ஆட்டோ டிரைவருக்கு தெரியாமல் கண்களை அழுந்தத் துடைத்துக்கொண்டாள் அவள்.
 
"எல்லாம் அந்தக் கதிரவனால் வந்த வினை.  வசதியான பெரிய இடத்து வாரிசைப் பார்த்ததும் விடுவானா என்ன?  வலை விரித்து மடக்கி இருக்கிறான்.  அவன் ஏதோ ஒரு பெரிய திட்டத்துடன் தான் வேலைக்கே சேர்ந்திருக்கிறான்.  திவாகரை கூடாத உறவுக்கு பழக்கி அவரிடமிருந்து ப்ளாக் மெயில் பண்ணி அவரை வளைத்துப் போடப் பார்க்கிறான்" - அவள் ஆத்திரம் எல்லாம் கதிரவன் மீது திரும்பியது.
 
“சரி.  அவன்தான் அப்படி என்றால் இந்த திவாகருக்கு என்ன ஆயிற்று ? மனிதர்களின் தராதரம் புரியாதவரா அவர்?  சாதரணமாக ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் எப்படிப்பட்டவர் என்று கணித்துவிடுவாரே?  அவருக்குள் இப்படி ஒரு பலவீனம் எப்படி வந்தது? இப்போதுதான் வந்திருக்கிறதா?  இல்லை ஏற்கெனவே அவருக்கு ....." எண்ணி எண்ணிக் குமைந்து போனாள் அவள்.
 
ஆட்டோ சாய்பாபா காலனியை நெருங்கிக்கொண்டிருந்தது.
 
"சாய்பாபா காலனி வந்துட்டோம்மா.  எங்கே போகணும்?. ரூட் சொல்லுங்கம்மா" - டிரைவரின் குரலால் சிந்தனை கலைந்தாள்  கல்பனா. 
 
வீட்டுக்குப் போகும் பாதையை அவனுக்கு சொல்லிவிட்டு ஸீட்டில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள் அவள். மூடிய கண்களில் சிறைப்பட்டிருந்த கண்ணீர் கன்னங்களில் கோடுகிழிக்க ஆரம்பித்தது.
 
சுடிதாரின் துப்பட்டாவால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்  கல்பனா.
 
வீட்டு வாசலில் ஆட்டோ வந்து நின்றது.
 
ஹான்ட்பாகில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து ஆட்டோவை செட்டில் பண்ணிவிட்டு ஓட்டமும் நடையுமாக வீட்டுக்குள் நுழைந்தாள்  கல்பனா.
 
ஹாலிலிருந்த சோபாவில் அமர்ந்தபடி தொலைக்காட்சியில் மூழ்கி இருந்த சொர்ணா வேகமாக உள்ளே நுழைந்த மருமகளை அந்த நேரத்தில் பார்த்ததும் பதறிப்போனாள். 
  
""என்னம்மா கல்பனா?  இந்நேரத்துக்கே வந்துருக்கே?  உடம்பு சரியில்லையா என்ன?" - கனிவுடன் விசாரித்த மாமியாரை ஒரு கணம் ஏறிட்ட கல்பனா, "ஒரே தலைவலி.  வாந்தி வேற அதிகமா வந்துட்டு இருக்கு.  உட்கார்ந்து வேலை செய்யமுடியலே.  அதான் லீவு போட்டுட்டு வந்திட்டேன்." - என்றாள்.
 
"இந்த சமயத்துலே இப்படித்தான் இருக்கும்.  பயப்படாதேம்மா. போய்  படுத்துகிட்டு நல்லா ரெஸ்ட் எடுத்துக்க.  நான் வேணுமானா ஒரு டம்ளர் மோர் தரட்டுமா?" - பரிவுடன் கேட்டால் சொர்ணா.
 
"மோர் எல்லாம் வேண்டாம் அத்தை.  நீங்க சொன்ன மாதிரி நல்லா படுத்துட்டு ஒரு தூக்கம் போடப்போறேன் அத்தை." - என்று சொல்லிவிட்டு மாடியிலிருந்த படுக்கை அறையை நோக்கி படிகளில் ஏறினாள் கல்பனா.
 
அறைக்குள் நுழைந்ததும் அதுவரை அடக்கி வைத்திருந்த துயரமெல்லாம் வெளிப்பட படுக்கையில் விழுந்து அழ ஆரம்பித்தாள்  கல்பனா.
 
பத்து நிமிடங்கள் கடந்தன.
 
அழுகையை நிறுத்திவிட்டு ஒரு கணம் யோசிக்க ஆரம்பித்தாள்  கல்பனா.
 
"இப்போ என்ன நடந்துடுச்சுன்னு நாம இப்படி அழுதுகிட்டு இருக்கோம்?  இப்படி அழுகிற அளவுக்கு அப்படி என்ன ஆயிருச்சு?"  - என்று தன்னையே ஒரு கணம் கேட்டுக்கொண்டு நிதானத்துக்கு வர ஆரம்பித்தாள்  கல்பனா.
 
உடனே எழுந்து அங்கிருந்த இணைப்புக் குளியலறைக்குள் சென்று முகத்தை நன்றாகக் கழுவிக்கொண்டு தன்னைச் சீர்படுத்திக்கொண்டு வந்து படுக்கையில் அமர்ந்தவள் இந்தப் பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது என்று நிதானமாக யோசிக்க ஆரம்பித்தாள் கல்பனா.
 
முதல் நாளிரவு முதல் நடந்த சம்பவங்களை நினைவுக்கு கொண்டுவந்தாள் கல்பனா.
 
தன்மடிமீது படுத்திருந்த திவாகர் யாரோ உலுக்கிவிட்டாற்போல எழுந்தது, அவன் முகம் மாறியது, காரணம் கேட்டபோது ஏதோ சொல்லிச் சமாளித்தது, ஒருவழியாக தூங்கத் தொடங்கியபோது தூக்கத்தில் "என் கல்பனாவுக்கு என்னாலே துரோகம் செய்யமுடியாது கதிரவன்" என்று புலம்பியது - என்று எல்லாமே அவள் மனக்கண்முன் ஒருமுறை தோன்றி மறைந்தன.
 
அவற்றை சற்று நேரத்துக்கு முன் தான் கண்ட காட்சியுடன் இணைத்துப் பார்த்தாள் கல்பனா.
 
அப்படிஎன்றால்..?
 
அவளுக்கு தானும் திவாகரும் திருமணமான புதிதில் கே.ஜி. காம்ப்ளெக்சில் பார்த்த "தோஸ்தானா" படம் நினைவுக்கு வந்தது.
 
அப்படி என்றால் திவாகர்  ..?.
 
"ச்சே. ச்சே.  என் திவா அப்படிப்பட்டவர் இல்லை.  அப்படிப்பட்டவராக அவர் இருந்திருந்தால் "என் கல்பனாவுக்கு துரோகம் செய்ய என்னால் முடியாது" என்று புலம்பி இருப்பாரா?
 
ஸோ..  அந்தக் கதிரவன் ஒரு ஹோமோசெக்ஸ் பேர்வழியாக இருக்கவேண்டும். அவன்தான் திவாகரை தவறு செய்யத் தூண்டி இருக்கிறான்.  
 
கதிரவன் மீது ஏற்கெனவே அவள் வைத்திருந்த தவறான அபிப்பிராயம் இன்னும் அழுத்தமாக வேரூன்ற ஆரம்பித்தது.
 
(தொடர்ந்து மலரும்)

 



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 80
Date:
Permalink   
 

நல்லதொரு அத்தியாயம், ஆனால் ஓர் அதிர்சிகரமான காட்சியைக் கண்ட மனைவி கோபத்தில் வெளியேறும் போது, அவளது கணவன் பின்தொடர்ந்து சமாதானம் செய்ய முயலாளது ஏன்?

கல்பனாவின் அப்பாவால் ஏற்கெனவே வாழ்க்கையில் துன்பப்பட்ட கதிரவன், அவளால் என்னென்ன விஷயங்களை எதிர்கொள்ளப் போகிறானோ?

திவாகர், கல்பனா மற்றும் கதிரவன் மூவருமே அவரவர் பார்வையில் நல்லவர்களாகவும் நேர்மையானவர்களாகவுமே இருக்கின்றனர். யாரை குறை சொல்வது என்றே தெரியவில்லை. பார்க்கலாம், அடுத்து என்ன நடக்கின்றது என.



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink   
 

Mr fridger,

Why are you making these types of twists?
When you cant able to solve these issues,why are you inviting the trouble by yourselves
And you want to portrait all the charectors are good,what do you want to say?



__________________
rsd


புதியவர்

Status: Offline
Posts: 3
Date:
Permalink   
 

வணக்கம். இந்தத் தளத்தினில் இதுதான் என் முதல் பதிவு. பனித்துளியில் சில மலர்கள்...! என்னை இங்கே பல முறைகள் ஈர்த்து வந்திருக்கிறது. இந்தத் தகவல் உங்களுக்கு நான் கூறி ஏற்கனவே தெரியும். இந்த என் மடலையும், உங்களுக்கு தனிமடலாகவே தான் எழுதிட நினைத்தேன். தொடர்ந்து பொதுவில் எழுதாமலே இருப்பதுவும் கூடாது எனத் தோன்றியதால், இங்கேயே எழுதுகிறேன்.

கதிரவன், திவாகர் பாத்திரப் படைப்புகள் பற்றியும், கதிரவன், கல்பனா பற்றியும் சிந்தித்த பின்புதான் ஒரு தெளிவுக்கு வந்து திவாகரிடம் பேச முயற்சித்திருக்க வேண்டும் என்றும் ஏற்கனவே உங்களுக்கு எழுதியிருந்திருக்கிறேன். ஆனால், இப்போது அந்தப் பாத்திரப் படைப்புகளின் உருவம் மெல்ல சிதைவதாகத் தெரிகிறது.

கல்பனா போன்ற ஒரு பெண்ணின் முன் இனி திவாகரின் பிம்பம் நேராக வாய்ப்பில்லை. அவர்களுக்குள்ளேயான தாம்பத்ய வாழ்வு கல்பனாவுக்கு இனி சகித்துக் கொள்ள இயலாததாக இருக்கும். ஒரு புரளியாகக் கேள்விப்படுவதற்கும், நேரடி அதிர்ச்சிக்கும் வேறுபாடு இருக்கிறது. அதிலும், தாய்மையை அனுபவிக்கத் துவங்கியிருக்கும்போது என்கிற போது, அது இரட்டிப்பு வேதனையையும், கடும் முடிவையுமே எடுக்கச் சொல்லும். ஏனென்றால், ஒரு பெண்.., இன்னொரு பெண்ணுடனான தொடர்பை சிந்திக்கும் விதமும், ஆண்மகனுடனான தொடர்பைச் சிந்திக்கும் விதமும் முற்றிலும் வேறுபாடானது. பெண்ணுடன் என்றால், காமாந்தகனாக மட்டும் எண்ணுவாளாக இருக்கும். ஆணுடன் என்றால்..., தீண்டத்தகாத ஏதோ இழிநிலைப் பிறவி என்பதாக உடனடி எண்ணம் தோன்றி விடும். நம் சமூகத்தின் கட்டுக் கோப்புகள் இன்னும் அப்படித்தான் இருக்கிறது. இதிலிருந்து, திவாகர் - கல்பனாவின் வாழ்வு நேராகி விடுவதாக நீங்கள் எழுதினால், அது மிக மிக செயற்கையாக இருக்கும்.

ஏற்கனவே, சில அத்தியாயங்களாக, கதிரவன், திவாகரின் இயல்புகள் மாறி இருக்கிறது. கதிரவன், திவாகரின் குடும்ப வாழ்வு பற்றித் தான் கொண்டிருக்கும் கருத்தை, தன் காதலை திவாகரிடம் கூறிய பிறகு பேசத் துவங்குவது இயல்புக்கு மாறானது. யாரோ ஒருவருடன் கதிரவன் உறவு கொள்கிறானோ என்று கற்பனை செய்வதும், அதனடிப்படையில் பேசுவதும், திவாகர் போன்ற ஆண்மகனுக்கு மிக செயற்கையாக இருக்கிறது. திவாகர் போன்று தெளிவாக சித்திகரிக்கப்பட்ட ஆண்மகன், இது போல் குழம்பிட வாய்ப்பு மிகக் குறைவு. வேறு பல இடையீடுகள் இல்லாத பட்சத்தில் மட்டுமே, கதிரவனின் மீதான இந்தக் கேள்விகளும், அன்பு கொண்டுவிட்டதன் அடையாளத்தினைச் சடாரெனப் புரிந்து கொள்ளுதலும் நிகழும்.

இந்தக் கதை, திடீரென ஓரின உணர்வு கொள்ளும் ஒருவன், தன் மீது அன்பு கொண்ட ஒரு நேர் ஆண்மகனை நேசிப்பதும், அவனை நேசிக்க வைப்பதும் என்கிற வகையில் அருமையான துவக்கத்தைக் கொண்டிருந்தது. ஆனால்.. நீங்கள் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறபடியும் எங்கேனும் உண்மையிலேயே காரியங்கள் நடக்க வாய்ப்பு உண்டுதான் என்றாலும், அப்படி நடந்து கொள்கிறவர்கள், முதலில் நீங்கள் விவரித்த திவாகர், கதிரவனின் தெளிவைக் கொண்டிருந்திருக்க மாட்டார்கள். இது குறித்து மேலும் மேலும் எழுதத் தோன்றுகிறது.

இப்போதும் நீங்கள் தொடரும் விதம் அறிய ஆவல் கொண்டே இருக்கிறேன். தொடருங்கள். நன்றி.



-- Edited by rsd on Tuesday 1st of October 2013 03:05:49 PM

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

hello Mr. Fridger,



As for me its already afternoon here its 12.35pm and i have to wish you GUd Morning, well

i already reads the new episode story goes on well very well but i feel very sad for Kalpana and Kathir.

Thivager mithu KOvam analum konjam Khatal Pookuthu.


__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

கதை எழுதிய விதம் வழக்கம்போல் அருமை ....எழுதிய விஷயம் கொஞ்சம் நெருடலாக உள்ளது ....சிக்கலான உறவுகளுடன் வரும் பாலசந்தர் படம் போல் உள்ளது... கதிரவனின் அம்மாவின் தியாகம் அவன் வாழ்க்கையில் அடையும் உயர்வில் தான் இருக்கு...அவன் நல்ல உதாரணமாக இருக்க வேண்டும்...all the characters looses their individuality nd going in a confused way...edp thivakar....anyway waiting for the next...

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

continue boss

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

அடுத்தது என்ன? நடந்தது என்ன? குற்றமும், பின்னணியுமா?

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard