மென்பொருள்கள், மற்றும் கணினி மொழிக்குறியீடுகள் பற்றி ஒரு பிரிவைத்துவக்கலமே தமிழன், நிறைய ஆங்கில தளங்கள் இருந்தாலும் ஜாவா பற்றி பேச, சி ++, பற்றி பேச தளங்கள் இல்லை பார்த்தீர்களா? என்னை போன்றவர்கள் இன்னும் கூட விசுவல் பேசிக் 6 ல் தான் செயல்திட்டம் செய்கிறோம், தவிர லினக்ஸ் உபன்டு வில் மாற்றியமைக்கக்கூடிய கட்டளைகள் பற்றி விவாதிக்கலாம்,விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8,8,1 ஒருங்கமைவு பற்றி பேசலாம், இலக்கியம் கதைகள் தவிர வாழ்க்கை திறனும் முக்கியம்அல்லவா? விரும்பினால் துவக்குங்கள், கோரல்டிரா,சிஎஸ் பிஎஸ் மற்றும் விசுவல்ஸ்டுடியோ 9 ல் அனுபவமுள்ள நான் விளக்கத்தயார்,தவிர மென்பொருள் எழுதும் திறனை நமக்கு நாமே அதிகரித்து கொள்ளலாம்,
டேமன் ஸ்மால் லினக்ஸ் இயங்குதளத்தை சற்று மாற்றிஅமைப்பதின் மூலம் வைரஸ் அனுகாத இயங்குதளத்தை உருவாக்கலாம்,சோதனை முயற்சியாக நான் மாற்றி அமைத்த என் சொந்தஇயங்கு தளத்தையே என் கணினியில் நிறுவியுள்ளேன்,( compatibility with firefox,MS office 2013 and animation technology software's except Photoshop )விரும்புபவர்களுக்கு சிடி பதிவை இலவசமாக கூட தர தயார்,சிடி தொகையை தவிர்த்து, இளைஞர்கள் நிரம்பிய இந்த களத்தில் புது கட்டளைகள் இடைசெருகல்கள் சேர்த்து உருவாக்கிய நிரல்கள் யாரடமாவது உள்ளனவா? பதிலிடுங்கள்,நிறைய பேசலாம்,