"என்ன ஆயிற்று அவனுக்கு? இன்னும் மனசு சரியாகவில்லையா?" - என்று நினைத்தவன் அப்போது அறைக்குள் நுழைந்த ஸ்ரீதரிடம்,"என்ன மிஸ்டர் ஸ்ரீதர். கதிரவன் இன்னும் டூட்டியில் ஜாயின் பண்ணலையா?" என்று கேட்டான்.
"அவர் காலையிலேயே வந்துட்டாரே. ரூம் நம்பர் 301-லே இருந்த ரூம் பாய் ரங்கமணிகிட்டே ஏதோ தப்பா நடந்துக்க ட்ரை பண்ணி இருக்கார். அவன் கத்தி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டே வெளியே வந்துட்டான். அவர் உடனே ரூம்பாய் மரியாதை இல்லாம நடந்துக்கறான்னு கஸ்டமர் சர்வீஸ்லே கூப்பிட்டு ரிப்போர்ட் பண்ணி இருக்கார். அவரை சமாதானம் பண்ணறதுக்காக கதிரவன் சார் அவர் ரூமுக்கு அப்பவே போனாரு சார். இன்னும் வரலே." - என்றான் ஸ்ரீதர்.
"என்னது? ரூம் பாய் கிட்டே தப்பா நடந்துக்க பார்த்தாரா? வாட் டூ யூ மீன்?"- என்று கேட்டான் திவாகர் புருவம் சுருங்க.
"என்ன செய்வது சார்? பெரிய மனிதர்கள் கூட சமயங்களிலே சில்லரைத்தனமா நடந்துக்குறாங்க. அவர் ரங்கமணி கூட தகாத உறவு வச்சுக்க ட்ரை பண்ணி இருக்காரு. அவன் பாவம் சின்னப் பையன். பயந்துட்டான். வெளியே வந்து ஒரே அழுகை. "ஏதோ வீட்டுலே கஷ்டம்னு தான் சார் வேலைக்கு வரோம். இங்கே வந்தா இப்படில்லாம் அசிங்க அசிங்கமா நடந்துக்குறாங்க. தாங்க முடியலை சார்னு ஒரே அழுகை. கதிரவன் சார் தான் அவனை சமாதானப் படுத்தினார். அப்புறம் கஸ்டமர் சத்தம் போடவும் அங்கே அவரை கூல் டௌன் பண்ணப் போயிருக்கார்." - என்றான் ஸ்ரீதர்.
"அப்படியா? சரி.. கதிரவன் வந்ததும் என்னை வந்து பார்க்கச் சொல்லுங்க." - என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டு இருக்கையில் சாய்ந்த திவாகருக்கு ஏதேதோ கற்பனைகள்.
"ஸ்ரீதர் சொல்லறதை பார்த்தா அந்த ஆளு ஓரினச் சேர்க்கையிலெ இன்ட்ரெஸ்ட் இருக்கறவரா தோணுது. அவர் ரூமுக்கு கதிரவன் போயிருக்கான். ஏற்கெனவே அப்படித்தான் ராஜேந்திரன் ரூமுக்கு போனவனை அவன் அப்யூஸ் பண்ணிக்கிட்டு ... இப்போ இந்த கஸ்டமர் கிட்டே கதிரவன் போயிருக்கான்னா.. அங்கே என்னவெல்லாம் நடக்குதோ." - கற்பனையில் திவாகரின் உடம்பு லேசாக பதறியது.
ஏனோ தெரியவில்லை அவனது காதுமடல்கள் சூடேறின. இனம் தெரியாத கோபம் அவன் தலைக்கேறியது.
படபப்பு, ஆத்திரம், இனம் தெரியாத வேதனை என்று என்னவெல்லாமோ உணர்ச்சிகள் போட்டி போட்டுக்கொண்டு மனதை வியாபித்தன.
"மே ஐ கமின் சார்." - என்று குரலால் சிந்தனை கலைந்தவன் நிமிர்ந்து பார்த்தான்.
கதிரவன் உதடுகளில் அரும்பிய புன்னைகையோடு அவன் முன் வந்து நின்று கொண்டிருந்தான்.
முதல் நாள் இருந்த கோலத்துக்கு மாறாக சுத்தமாக ஷேவ் செய்து அவனது கட்டுடலை எடுப்பாக காட்டக்கூடிய வகையில் கச்சிதமாக உடை அணிந்து ஷர்ட்டை டக்-இன் பண்ணிக்கொண்டு படு ஸ்மார்ட்டாக உதடுகளில் குறுநகை தவழ நின்றுகொண்டிருந்தான் கதிரவன்.
அவனைப் பார்த்ததும் ஆத்திரம் தலைக்கேற, "ஆபீஸ் டயத்துலே கஸ்டமர் ரூமுக்கு போய் .. அவர் கூட... சீ..சீ.. சொல்லறதுக்கே எனக்கு வாய் கூசுது. உங்களாலே எப்படி முடியுது கதிரவன்?" -நரம்புகள் புடைக்க கத்தினான் திவாகர்.
"என்ன பண்ணுவது திவாகர். என் வேலையே கஸ்டமர் சர்வீஸ் தானே. வந்து இருக்குற வாடிக்கையாளர்கள் மனசு நோகாம நடந்துக்கத் தானே என்னை அப்பாயிண்ட் பண்ணி சம்பளமும் கொடுத்து வச்சிருக்கீங்க." - நமுட்டு சிரிப்புடன் பதிலளித்தான் கதிரவன்.
"உங்களுக்கு சம்பளம் கொடுத்து வேலைக்கு வச்சுகிட்டு இருக்கறது கஸ்டமர் கூட உடல் உறவு வச்சுக்கறதுக்கு இல்லே." - நெருப்பாக தெறித்து விழுந்தன வார்த்தைகள்.
"சாரி மிஸ்டர் திவாகர். நீங்க கொஞ்சம் டீசெண்டா பேசினா நல்லா இருக்கும் என்று எனக்கு தோணுது." - நிதானம் மாறாமல் புன்சிரிப்பு மறையாமல் பேசினான் கதிரவன்.
"என்னது? டீசென்சியைப் பத்தி நீங்க எனக்கு சொல்லிக் கொடுக்கறீங்களா? நீங்க முறை தவறி நடந்துக்குவீங்க. அதை பற்றி கேட்டா எனக்கே அட்வைஸ் பண்ணறீங்களா?" - கொதித்தான் திவாகர்.
"பின்னே என்னவாம்? நடந்தது என்னன்னு என்னை கேட்டு தெரிஞ்சுக்காம நீங்களாவே பேசிட்டு போனா என்ன அர்த்தம்?' - என்று கேட்டான் கதிரவன்.
"என்ன நடந்திருக்கும் என்று கெஸ் பண்ணக்கூட முடியாத அளவுக்கு நான் என்ன சின்னக்குழந்தையா? அந்த ஆளு ஒரு ஹோமோ. அவன் ரூமுக்கு அவனை ப்ளீஸ் பண்ண நீங்க போயிருக்கீங்க. என்ன நடந்திருக்கும்னு சொல்லியா தெரியணும்? அந்த அசிங்கத்தை கேட்டு வேற தெரிந்து கொள்ளவேண்டுமா?" என்றான் திவாகர் வெறுப்புடன்.
தொடர்ந்து அவனே,"லுக் மிஸ்டர் கதிரவன். இதுதான் உங்களுக்கு பர்ஸ்ட் அண்ட் பைனல் வார்னிங். இனிமேல் இது மாதிரி எல்லாம் நடந்துகிட்டீங்கன்னா அயம் ஸாரி உங்க மேல கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கும். அந்த அளவுக்கு என்னைப் போகவைக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.." - என்றான் திவாகர் அழுத்தமான தொனியில்.
கதிரவனின் முகம் சிவந்தது.
"மிஸ்டர் திவாகர். நீங்க இப்படி கடுமையாக நடந்துக்குற அளவுக்கு எந்த தப்பும் நான் செய்திருப்பதாக எனக்கு தோணலே. நடந்தது என்ன ஏது என்று என்னையும் கேட்டுத் தெரிஞ்சுக்காம நீங்களாகவே கண்டபடி இமாஜின் பண்ணிக்கிட்டு மேலே மேலே பேசிக்கிட்டே போகிறது உங்க ஸ்டேட்டஸ்ஸுக்கு உகந்த காரியமா எனக்கு படவில்லை." என்றான் கதிரவன். அவன் குரலும் சற்று உயர்ந்திருந்தது.
அந்த வார்த்தைகள் திவாகரை சற்று இயல்பு நிலைக்கு கொண்டுவந்தன.
"என்ன நடந்துச்சுன்னு சொல்லப் போறீங்க?" - என்று இறங்கி வந்து கேட்டான் திவாகர்.
"ஒன் மினிட்." என்று சொல்லி டேபிள் மேலிருந்த இண்டர்காமை தன் புறம் திருப்பிக்கொண்டு ரிசீவரை எடுத்துக்கொண்டு சில எங்களை அழுத்தினான் கதிரவன். மறுமுனையில் எடுத்ததும்,"ரூம் பாய் ரங்கமணியை கொஞ்சம் சார் ரூமுக்கு வரச்சொல்லுங்க." - என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தான் கதிரவன்.
"ரங்கமணியை எதுக்கு இங்கே வரச்சொல்லுறீங்க." என்றான் திவாகர் புருவங்கள் சுருங்க.
சில நிமிடங்களில் அறைக்கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்த ரங்கமணிக்கு பத்தொன்பது வயது இருக்கலாம். பால் வடியும் முகம். மேலுதட்டில் லேசாக அரும்பிக்கொண்டிருந்த மீசை "நான் வளர்கிறேனே மம்மி" என்று சொல்லாமல் சொல்லியது. முகத்தில் குழந்தைத்தனம் இன்னும் மாறாமல் இருந்தது.
பவ்வியமாக கைகளை மார்பின் குறுக்காக கட்டிக்கொண்டு வந்து நின்றவனிடம், "ரங்கமணி! காலையிலே என்ன நடந்துச்சுன்னு சாருக்கு கொஞ்சம் தெளிவா எடுத்துச் சொல்லு." - என்று கட்டளையிட்டான் திவாகர்.
"அதுவா சார்? ரூம் நம்பர் முனனூத்தி ஒண்ணுலே இருந்தவருக்கு வழக்கம் போல பெட் மாத்திப்போட நான் போனேன் சார். அப்போ அவர் என் கிட்டே வந்து.. வந்து.. என் கைய பிடிச்சு இழுத்து அவரோட பெர்முடாஸ் மேல.. " என்று சொல்லிக்கொண்டே வந்தவன் மேலே எப்படி சொல்வது என்று தெரியாமல் ஒரு கணம் தவித்தவன் மிடறு விழுங்கினான்.
"ம்ம். புரிகிறது. மேலே சொல்லு," என்பது போல அவனைப் பார்த்தான் திவாகர்.
"நான் அவர் கிட்டே சத்தம் போட்டுட்டு வெளியே வந்து கதிரவன் சார் கிட்டே நடந்ததை சொன்னேன். அதுக்குள்ளே அவர் போன் போட்டு ரூம் சர்வீஸ் சரி இல்லே அப்படி இப்படீன்னு கண்டபடி கத்தி இருக்காரு. நாங்க எல்லாம் குடும்ப கஷ்டத்தாலே தான் படிக்க வேண்டிய வயசுலே வேலைக்கு வரோம் சார். வந்த இடத்துலே இப்படி எல்லாம் நடதுட்டதாலே எனக்கு ரொம்ப பயமா ஆயிருச்சு சார். வேலைய விட்டு நின்னுக்கறேன்னு சார் கிட்டே சொல்லி அழுதேன். கதிரவன் சார் என்னை சமாதானப்படுத்திட்டு மறுபடி ரூம் நம்பர் 301-லே இருக்குறவர் கிட்டே
என்னைய கூட்டிட்டு போனாரு. அந்த ஆளுகிட்டே நிதானமா இங்கிலீசுலே என்னமோ பேசினாரு. சார் பேசப் பேச அந்த ஆளு தன்னோட தப்பை உணர்ந்துகிட்டான் போல. என் கிட்டே "ஸாரி " சொல்லி நடந்ததுக்கு மன்னிப்பு கேட்டுகிட்டாரு சார். அப்புறம் கதிரவன் சார் என் கூட வெளியே வந்து என்னை தேத்தி தைரியம் சொல்ல நான் சமாதானம் ஆனேன் சார்." - என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தான் ரங்கமணி.
திவாகருக்கு வியப்பாக இருந்தது.
அப்படியானால் கதிரவன் தவறாக நடந்துகொள்ளவில்லையா?
நான்தான் தப்பாக நினைத்து விட்டேனா?
ஜஸ்ட் பேசித்தான் நிலைமையை சமாளித்தானா?
அப்பாடா என்று இருந்தது திவாகருக்கு.
சற்று நேரத்துக்கு முன்பு கொந்தளித்த மனசு காரணமில்லாமல் இப்போது சந்தோஷத்தில் மிதக்க ஆரம்பித்தது.
"நன்றி சார்." என்று சொல்லிவிட்டு ரங்கமணி அறையை விட்டு வெளியேறினான்.
"அயாம் ஸாரி கதிரவன். வெரி ஸாரி. நான் தான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்."- என்று தன் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டவன், "ஆமா. அப்படி என்ன பேசி நீங்க நிலைமையை சமாளிச்சீங்க.?" - என்று கேட்டான்.
"அதுவா? எல்லாம் நீங்க கத்துக்கொடுத்த பாடம் தான் திவாகர். அன்னிக்கு அந்த ராஜேந்திரனை நீங்க எப்படி டீல் பண்ணினீங்களோ அப்படித்தான் நானும் இவரை டீல் பண்ணினேன். அவர் கிட்டே, "உங்க எதிர்ப்பார்ப்புகள் தப்பு இல்லை. ஆனால் அந்தி எல்லாம் புதுசா வந்து இருக்குற பையன் கிட்டே காட்டி இருக்கக்கூடாது. அவன் பாவம் சின்னப்பையன். நீங்க அவன் கிட்டே எக்குதப்பா நடந்துகிட்டு அதை அவன் வெளியே போய் நாலுபேரு கிட்டே சொல்லிட்டான்னா உங்களை மாதிரி பெரிய மனுசங்களுக்கு அது எவ்வளவு பெரிய அவமானம்? உங்க உணர்சிகளுக்கு வடிகால் கொடுக்கத்தான் இப்போ எவ்வளவோ வசதிகள் இருக்கே. உங்க கிட்டே லேப்டாப் கூட இருக்கு. அதுலே போய் சர்ச் பண்ணி உங்க டேஸ்டுக்கு சரியா இருக்குறவங்கள்ளே யாரையாச்சும் வரச்சொல்லி காதோட காது வச்ச மாதிரி உங்க தேவையா பூர்த்தி செய்துகிட்டு இருக்கலாமே. அதை விட்டுட்டு இப்படி போயும் போயும் ஒரு ரூம் பாய் கிட்டே எல்லாமா இப்படி நடந்துக்குவீங்க?'ன்னு பேசி அவர் தப்பை அவருக்கு புரிய வைத்தேன்." - என்று சொல்லி முடித்தான் கதிரவன்.
"ஈஸ் இட்? அப்படியா? வெல்டன் கதிரவன். இதை இதைத்தான் நான் உங்க கிட்டே எதிர்பார்த்தேன். யூ ஹாவ் டன் எ கிரேட் ஜாப்." என்று மனமெல்லாம் லேசாக பூரிப்புடன் பாராட்டினான் திவாகர்.
"இதை புரிசுக்காம நீங்க அவசரப்பட்டு என்னை என்னவோ அந்த ஆளு கூட செக்ஸ் வச்சுக்கிட்டதா நினைச்சு என்னவெல்லாம் பேசிட்டீங்க." - என்றான் கதிரவன். அவன் குரல் தழதழக்க ஆரம்பித்தது.
"அது.. வந்து.. கதிரவன்.. தப்புத்தான்.. ஸாரி. எனக்கு என்னமோ அன்னிக்கு ராஜேந்திரன் ரூமுலே நடந்த இன்சிடெண்ட் நினைப்புக்கு வந்துட்டுது. எங்கே இங்கேயும் அப்படி நடந்திருக்குமோன்னு நினைச்சிட்டேன். அந்த கற்பனையை என்னாலே தாங்கிக்கவே முடியலே. ரொம்ப பதறிப்போயிட்டேன் தெரியுமா? அதான் ஐ ஹாவ் லாஸ்ட் மை கண்ட்ரோல்." - என்றான் திவாகர்.
"என்னது பதறிப்போயிட்டீங்களா?" - என்று வினவினான் கதிரவன்.
"ஆமாம் கதிரவன்." - என்றான் திவாகர். அவன் தலை குனிந்திருந்தது.
"ஏன் அப்படி?" - விடாமல் கேட்டான் கதிரவன்.
ஒரு கணம் என்ன பேசுவது என்று தெரியாமல் மௌனம் சாதித்தான் திவாகர்.
தன் இருக்கையை விட்டு எழுந்து டேபிளைச் சுற்றி வந்து கதிரவனை நெருங்கிய திவாகர், "ஏன் அப்படீன்னா..? பிகாஸ் .. பிகாஸ்.. ஐ லவ் யூ கதிரவன். உங்களை மனப்பூர்வமா காதலிக்கறேன். தட் ஈஸ் தி ரீசன்." என்று பளிச்சென்று கூறியவன் அப்படியே தன்னிலை மறந்து கதிரவனே எதிர்பார்க்காத நேரத்தில் அவனை இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டு அவன் வாயோடு தன வாயைச் சேர்த்து அழுத்தமாக முத்தமிட்டான் திவாகர்.
அப்படியே மெய்சிலிர்த்துப் போனான் கதிரவன்.
அதே சமயம் -
அறைக்கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்த கல்பனா அந்தக் காட்சியைக் கண்டதும் நிலை குலைந்து போனாள்.
காலின் கீழிருந்த பூமி நழுவுவது போலிருந்தது அவளுக்கு.
கதையில் திவகர்க்கு திடீர்னு கதிர் மேல் காதல் வருவது கொஞ்சம் நம்ப முடியலையே....எதையும் நிதானமாக அணுகும் அவரின் குணம் பற்றி முதலில் சொன்னீர்கள் ...அவர் இப்போ கதிரின் ஆறுதலுக்காக மாறினாலும்...officeல kiss பண்ணுறது அவரின் தரம் குறைவது போல் உள்ளது ...ஏற்கனேவே gay என்பவர்கள் எங்குனாலும் indecent ஆ behave செய்வார்கள் மாதிரி ஒரு weeklyல படித்தேன் ...pls நீங்களும் அது போல் situation வைக்காதிங்க... எங்கயும் நடப்பது தானேன்னு சொல்லாதிங்க....office is also a public place...இதையே ஒரு பெண்ணை திவாகர் kiss பண்ணுவாரா... அதிலும் அப்படியே மெய்சிலிர்த்துப் போனான் கதிரவன்....என்று வேறு சொல்றீங்க...love சொன்னதோடு நிறுத்திருக்கல்லாமே...sorry if I hurt you...
You have lost your control of thinking, may be you can justify, but not acceptable, a person like Divakar with his calibration with out no reason got emotioned,and kissing his sub ordinate that too in his cabin, in a broad day light,....... Qualified peoples have some ethicks,dont portrait them..very cheap...any way keep writing, lets see.
ஒரு கதையா இத படிக்க நல்ல இருக்கு ஆனா திவாகர் இப்படி உடனே மாறியது வியப்பாகவும் இருக்கு.
கல்பனா நிலைமைதான் கொடுமை.....இனி அவர்கள் வாழ்வில் புயல் வீச போவதென்பது தெரிந்த ஒன்று.
Practical - ல இப்படி ஒன்னு நடந்தா வாழ்கை ஒரு நரகம் தான்.