அதற்கு பிறகு சில நாட்களுக்கு தனிமை பூதம் தலை தூக்கவில்லை அடுத்த நாளும் அதற்கடுத்த நாளும் அவன் நினைவுகள் எழுந்து கதவை தட்ட வில்லை. வார கடைசியில் ஊருக்கு போய் வந்தேன். அந்த வாரம் துவங்கியதில் இருந்து அதிக வேலை பளு மற்றும் பயண களைப்பு இரண்டும் சேர்ந்து அடுத்தடுத்த நாட்களுக்கு கண்கள் மூடியதும் நிறைவான உறக்கத்தை தந்தது. பாரியின் நினைவுகள் இந்த ஒரு வாரத்தில் துளியும் எட்டிப்பார்க்கவில்லை. நல்ல வேலையாக அவன் நம்பரை அழித்து விட்டேன்.
அன்றைக்கு உறக்கத்தில் இருந்து நான் கண் விழித்தது பறவைகளின் குரலுக்கு அல்ல. மாறாக மொபைல் போன் அலறியது போல் உணர்ந்தேன். அதில் பாரியின் பெயர் மின்னியது. அது எப்படி என் நம்பர் அவனுக்கு தெரிந்து இருக்கும், வாய்ப்பே இல்லையே. நம்பிக்கை இல்லாமல் எடுத்து பார்த்தால் போன் திரை வெறுமையாக இருந்தது. அட, இது என்ன பிரமையா?
அன்றைய தினம் விழித்ததில் இருந்து அவன் நினைவு நாய்க்குட்டி போல் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. குளித்து, சாப்பிட்டு, வேலைக்கு புறப்பட்டு வரும் போது கூடவே அவனும் நிழலாக வந்தான்.. ரயிலில் வரும்போது எங்காவது தென்படுகிறானா என்று தேடினேன். அவன் முகம் முற்றிலும் மறந்து போனது. பதிலுக்கு இருளில் உணர்ந்த அவன் பெருத்த தேகமும், இறுதியில் கைகளை கோர்த்து அவன் பார்த்த பார்வையும் தான் மனதில் பதிந்து இருந்தது. அலுவலகத்தில் வேலையை துவங்கிய சிறிது நேரத்திலே மங்கலாக அவன் நினைவுகள் மானிடர் திரையில் ஓடியது. இது நாள் வரை உறங்கி கொண்டிருந்த அவன் நினைவுகள் பொறுத்தது போதும் என திமிறிக்கொண்டு வெளியே வந்தது.
நீங்கள் சொல்லியது போலவே கண் எறும்புகள் கருமமே கண்ணாய்.. அந்த கறுப்பு எழுத்துக்களை மேய்ந்தன..
அவ்வப்போது.. மீண்டும் மீண்டும் வாசித்து.. புரிந்து கொண்டேன்.. பின்னொரு நாளில் பாரி சொன்னவைகளை italicize செய்திருக்கிறீர்கள் என்று உணரவே எனக்கு நேரம் பிடித்தது...
நீங்கள் ஒரு extensive reader என்பதை உணர முடிகிறது.. the way you have emancipated your story is amazing.. keep rocking!! :)