Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நானும் பாரியும்….! - 5


உறுப்பினர்

Status: Offline
Posts: 62
Date:
நானும் பாரியும்….! - 5
Permalink   
 


அதற்கு பிறகு சில நாட்களுக்கு தனிமை பூதம் தலை தூக்கவில்லை அடுத்த நாளும் அதற்கடுத்த நாளும் அவன் நினைவுகள் எழுந்து கதவை தட்ட வில்லை. வார கடைசியில் ஊருக்கு போய் வந்தேன். அந்த வாரம் துவங்கியதில் இருந்து அதிக வேலை பளு மற்றும் பயண களைப்பு இரண்டும் சேர்ந்து அடுத்தடுத்த நாட்களுக்கு கண்கள் மூடியதும் நிறைவான உறக்கத்தை தந்தது. பாரியின் நினைவுகள் இந்த ஒரு வாரத்தில் துளியும் எட்டிப்பார்க்கவில்லை. நல்ல வேலையாக அவன் நம்பரை அழித்து விட்டேன்.

அன்றைக்கு உறக்கத்தில் இருந்து நான் கண் விழித்தது பறவைகளின் குரலுக்கு அல்ல. மாறாக மொபைல் போன் அலறியது போல் உணர்ந்தேன். அதில் பாரியின் பெயர் மின்னியது. அது எப்படி என் நம்பர் அவனுக்கு தெரிந்து இருக்கும், வாய்ப்பே இல்லையே. நம்பிக்கை இல்லாமல் எடுத்து பார்த்தால் போன் திரை வெறுமையாக இருந்தது. அட, இது என்ன பிரமையா?

அன்றைய தினம் விழித்ததில் இருந்து அவன் நினைவு நாய்க்குட்டி போல் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. குளித்து, சாப்பிட்டு, வேலைக்கு புறப்பட்டு வரும் போது கூடவே அவனும் நிழலாக வந்தான்.. ரயிலில் வரும்போது எங்காவது தென்படுகிறானா என்று தேடினேன். அவன் முகம் முற்றிலும் மறந்து போனது. பதிலுக்கு இருளில் உணர்ந்த அவன் பெருத்த தேகமும், இறுதியில் கைகளை கோர்த்து அவன் பார்த்த பார்வையும் தான் மனதில் பதிந்து இருந்தது. அலுவலகத்தில் வேலையை துவங்கிய சிறிது நேரத்திலே மங்கலாக அவன் நினைவுகள் மானிடர் திரையில் ஓடியது. இது நாள் வரை உறங்கி கொண்டிருந்த அவன் நினைவுகள் பொறுத்தது போதும் என திமிறிக்கொண்டு வெளியே வந்தது.

ஓர் ஆண் இன்னொருவனிடம் எதுவரை பகிர்ந்து கொள்வான் என்பது அவரவர் எல்லை வரை இருக்கிறது. குழந்தைகளாக இருந்தால் குதூகலத்தையும், சிறுவர்களாக இருந்தால் கிரிக்கெட் மட்டையும், இளைஞர்களாக இருந்தால் சிகரெட்டும், நண்பர்களாக இருந்தால் கடனும், உறவினர்களாக இருந்தால் கர்வமும், வயோதிகர்களாக இருந்தால் அனுபவமும் என்பதாக தான் இருக்கும். எல்லை இல்லாமல் எல்லாவற்றையும் இன்னோர் ஆணிடம் பகிர்ந்து கொள்வதற்கு ஒரே கருவறையில் இருந்த இரட்டையர்களால் கூட இயலாது. எல்லா ஆண்களையும் ஒரு தயக்க வளையம் சுற்றி கொண்டே இருக்கும். அதை தாண்டி வர இயலாமல் ஆயுசுக்கும் ரகசிய மூட்டைகளை சுமந்து கொண்டே அலைவார்கள். பாரியிடம் நிறைய மூட்டைகள் இருந்தது. முதல் சந்திப்பிலேயே ரகசியங்களை என்னிடம் அவிழ்த்து விட்டான். என்பது வியப்பாக இருந்தது.

இது தான் நான். இதுவரை நான் இப்படித்தான் இருந்தேன் என்பதை தயக்கமில்லமால் சற்று முன்பு அறிமுகமான என்னிடம் வெளிப்படுத்தியது பிரமிப்பாக இருந்தது.  நான் யாரென்பதே தெரியாமலே என் மீது அவன் வைத்திருந்த நம்பிக்கை அளவற்றது. நான் தான் அவனை புறக்கணித்தேன். அதை நினைக்கையில் குறுகிப்போனேன். அவனை உடனே காண வேண்டும் என்ற ஆவல் பொங்கியது. நோக்கியா போனை பார்த்தேன். அவசரப்பட்டு அவன் எண்ணை அழித்ததை நினைத்து வருத்தப்பட்டேன்.

அவனை மீண்டும் சந்திக்க முடியும் என்ற நம்பிக்கை அந்த நொடியில் இருந்து கிடு கிடு என வளர்ந்தது. அவன் என் மீது எல்லையற்ற அன்பை பொழிய காத்திருக்கிறான். அவன் கண்டிப்பாக என்னை தேடி வருவான்.

அவனை சந்தித்து இன்றோடு எட்டு நாட்கள் ஆகி விட்டது. மாலை வரை எப்படி அலுவலகத்தில் விநாடிகளை நகர்த்தினேன் என்று தெரியவில்லை. ரயில் நிலையதில் காத்திருந்தேன். சென்ற வாரம் இதே நாள், இதே நேரம் தான். இதே இடம், இதே போல் அன்றும் என் கையில் இந்த வார பத்திரிக்கை. இன்று பத்திரிகையில் இருந்த கருப்பு எழுத்துக்களில் மனம் பதியவில்லை. கண்கள் எறும்பு எழுத்துக்களில் ஊர்ந்து கொண்டு இருந்தது. ஆனால், நெஞ்சமோ ரயில் வந்து நின்ற பின் தடதடக்க ஓடி வரும் பயணிகளின் முகங்களில் அவனை தேடியது. வழக்கத்தை விட சிறிது நேரம் அங்கே கடத்தி விட்டு தான் நான் நகர்ந்தேன். ஒவ்வொரு இடத்தில் ரயில் நிற்கும் போதும் அவனை தேடினேன். நான் இறங்கும் இடம் வந்தது.

"போகாதே, ப்ளீஸ். என்னோடு வா" என்ற அந்த குரல், அவன் வாசனை. புத்தகத்தில் முன் பக்கங்களை புரட்டினால் நினைத்த பக்கத்திற்கு போவது போல் வாழ்க்கையிலும் அந்த வாய்ப்பு இருந்தால் மீண்டும் நினைத்த இடத்திற்கு போய் விடலாம். இந்த ஏக்கம் இந்த தவிப்பு இது தான் வாழ்கையின் சுவையா? கிடைத்ததை தவற விட்டு புலம்புவது தான் மனித மனமா? ஒரு முறை கடவுள் தோன்றி எனக்கான ஒருவனை காட்டினான். நான் மறுத்து விட்டேனே, இறைவா, என் மீது இரக்கம் உண்டெனில் இன்னொருமுறை அவனை கண்ணில் காட்ட மாட்டாயா?

அன்றைக்கு எனக்கு அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை. அந்த இரவை பீர் துணையோடு கரை ஏற்ற முயன்றேன்அந்த கட்டிடமும் அவனும் என்னை ஒவ்வொரு செங்கலாக பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தனர். மூச்சு முட்ட முட்ட முழுவதுவமாக அடக்கி கொண்டிருந்த பேராற்றல் தான் அவனுடைய சிறப்பு. சீராக முடிவுக்கு வந்த பிறகு இனி நீ என்று என்னை இழுக்கவில்லை. அது அவனுடைய பெருந்தன்மை. கடைசி வரை கரிசனமாக துணையாக வந்தது அவனுடைய ஆண்மை. அவனுடைய ஆற்றலும் அவனுடைய ஆளுமையும் ஆண்மையும் என்னை தள்ளாட வைத்தது.

"எத்தனை நாள் தெரியுமா நுங்கம்பாக்கம் ஸ்டேஷன்ல சாயங்காலம் அஞ்சு மணியில இருந்து காத்திருந்தேன் தெரியுமா? நீ வர்ற திசையை பார்த்து படிக்கட்டுல தவமா இருந்தேன். நீ வேற வழியில வந்திடுவியோன்னு திரும்பி திரும்பி பிளாட்பார்ம் முழுக்க உன்னை தேடினேன். தினமும் காலையில உன்னோட ஸ்டேஷன் வந்து காத்திருந்தேன். சனி ஞாயிறு முழுக்க உங்க ஸ்டேஷன் ஆட்டோ ஸ்டாண்ட் எல்லாம் உன் முகத்தை தேடிகிட்டு இருந்தேன். ஒரு வாரம் நான் எப்படி தவிச்சு போய் இருந்தேன் தெரியுமா? கல் நெஞ்சக்காரன்டா  நீ. உன் கிட்ட இருந்து போன் வரும்னு நான் காத்திருந்தா உன்னை சந்திக்க முடியாதுன்னு தெரிஞ்சு நான் ஒரு முடிவுக்கு வந்தேன். நல்ல வேளை அது வொர்க் அவுட் ஆச்சு."

மறுநாள் கண் விழித்ததில் இருந்து சோர்வு கால்களை சங்கிலியால் கட்டி கொண்டது போல் இருந்தது. அன்று முழுவதும் சோர்வையும் இழுத்து கொண்டே தான் நகர்ந்தேன். ஒருவனுடைய நினைவுகள் இவ்வளவு கோரமாக என்னை உருக்குலைக்கும்?. எவ்வளவு துயரங்கள் வந்தாலும் நிலை குலையாத திடமான மனதை பெற்றிருந்தேன். என்னுடைய சக்திகள் அத்தனையும் விரயமாகி கொண்டு வருவது போல் உணர்ந்தேன்.

அன்று அலுவலகத்தில் நிறைய தவறுகள் செய்தேன். மாலை நெருங்கி கொண்டு வந்தது. அன்றைக்கும் விரைவிலேயே ஸ்டேஷன் சென்று அவனுக்காக காத்திருக்கலாம் என்று முடிவு செய்தேன். வேலைகளை முடித்து விட்டு சைன் அவுட் பண்ணும் போது யாரோ என்னை அழைத்தார்கள். செவியில் விழுந்தாலும் கேளாதது போல் வெளியேறும் போது எனக்கு போன் வந்திருப்பதாக சொன்னதை கேட்டேன். ஆச்சரியமாக இருந்தது. புதிய வேலைக்கு வந்த பிறகு என்னுடைய ஆபீஸ் நம்பரை யாருக்கும் கொடுக்கவில்லை. என் மொபைல் நம்பர் நெருங்கிய எல்லோருக்கும் தெரியும்இது யாராக இருக்கும் என்ற ஆர்வம். அந்த ஒரு நொடி என் முடிவை மாற்றியது, உள்ளே வந்து  என் டெஸ்க்கில் இருந்த போனை எடுத்தேன்.

ஒரு நொடி தான் எல்லோருடைய வாழ்வையும் மாற்றி அமைக்கிறது. அந்த ஒரு நொடியை நான் அவமதித்திருந்தால் வாழ் நாளெல்லாம் நான் பழியை ஏற்று கொண்டு இருப்பேன்.  ஒரு நொடியில் நான் அவனை பார்க்காமல் இருந்து இருந்தால் பாரி அந்த ரயிலில் சென்று இருப்பான். அந்த ஒரு நொடியை அவன் மதிக்காமல்  இருந்தால் ரயிலை பிடிக்க வேகமாக ஓடி வந்து என்னை கண்டு என் எதிரில் நிலை குத்தி நின்று இருக்க மாட்டான். ஆயுசு முழுக்க எத்தனையோ வினாடிகள். அதில் ஒன்றிரண்டு மட்டுமே முழு ஆயுளையும் மாற்றி அமைக்கும், அதில் ஒன்று தான் இந்த வினாடி.

"ஹலோ"

"ஹலோ, நான் தான், பாரி"

தூக்கி வாரி போட்டது.

"நான் உங்க ஆபீஸ் வாசல்ல தான் இருக்கேன், இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்.? நான் வெயிட் பண்றேன். "

கடவுளே, இவனுக்கு எப்படி என் ஆபீஸ் விலாசம் கிடைத்தது?, எப்படி ஆபீஸ் நம்பர் கிடைத்தது?

"நீ உன்னோட ஆபீஸ் பெயர் சொன்னதை வைச்சு டெலிபோன் டைரக்டரில நம்பர் தேடினேன். உனக்கு போன் செய்து நீ கோவிச்சு கிட்டாலும் பரவாயில்லைன்னு முடிவு பண்ணி போன் பண்ணினேன். நீ என்னை திட்டி உதறி விட்டாலும் என்னோட இந்த எட்டு நாள் தவிப்பு ஒரு முடிவுக்கு வரும் இல்லையா? தைரியமா உங்க ஆபீசுக்கு போன் பண்ணலாம்னு  முடிவு பண்ணினேன். வொர்க் அவுட் ஆயிடிச்சு"

எட்டாவது மாடியில் இருந்து லிப்டில் இறங்கும்போது கண்ணாடி சுவர் வழியாக எதிர் சாலையில் அவனை தேடினேன். முதல் முதலாக பரவசம் என்னுள் பெருகி கொண்டு இருந்தது. என்னை ஒருவன் தேடுகிறான். என்னை ஒருவன் விரும்புகிறான் என்பதே பேருணர்வாக எனக்குள் பொங்கி கொண்டு இருந்தது.

 

முதல் முறையாக மேல் தோளையும் தாண்டி ஒருவனின் நெஞ்சம் எனக்கு புரிய ஆரம்பித்தது.



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

முதல் முறையாக மேல் தோளையும் தாண்டி ஒருவனின் நெஞ்சம் எனக்கு புரிய ஆரம்பித்தது.//

class......

__________________



உறுப்பினர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink   
 

When you are in love the entire world is different, the narration looks like a confession!


Nice, keep writing.

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

skimming.. உங்கள் கதைகளுக்குப் பொருந்தாத ஒன்று..!

நீங்கள் சொல்லியது போலவே கண் எறும்புகள் கருமமே கண்ணாய்.. அந்த கறுப்பு எழுத்துக்களை மேய்ந்தன..

அவ்வப்போது.. மீண்டும் மீண்டும் வாசித்து.. புரிந்து கொண்டேன்.. பின்னொரு நாளில் பாரி சொன்னவைகளை italicize செய்திருக்கிறீர்கள் என்று உணரவே எனக்கு நேரம் பிடித்தது...

நீங்கள் ஒரு extensive reader என்பதை உணர முடிகிறது.. the way you have emancipated your story is amazing.. keep rocking!! :)

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

எல்லா ஆண்களையும் ஒரு தயக்க வளையம் சுற்றி கொண்டே இருக்கும். அதை தாண்டி வர இயலாமல் ஆயுசுக்கும் ரகசிய மூட்டைகளை சுமந்து கொண்டே

அலைவார்கள்....எவ்ளோ சாதாரணமாக எளிதாக உண்மைகளை சொல்றீங்க....ஆச்சரியமா இருக்கு....

முதல் முறையாக மேல் தோளையும் தாண்டி ஒருவனின் நெஞ்சம் எனக்கு புரிய ஆரம்பித்தது....

அருமையான வரிகள்....நீங்கள் உங்கள் கதையில் சொன்னதை போன்ற கிளி நிறைந்த வீடு (சென்னைக்கு நடுவே கீச் ..கீச் ..கீச் ..

) பற்றி ஆனந்தவிகடனில் பார்த்தேன் ....அதை பார்த்தும் உங்கள் எழுத்து ஞாபகம் வந்தது....நீங்கள் பார்த்தீங்களா ?



-- Edited by rajkutty kathalan on Sunday 6th of October 2013 12:41:41 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

என்ன ஒரு நேசம்.... என்ன ஒரு தேடல், புரிதல் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்....

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

I took 1.30 hrs to read this posting..! Really enjoyed it..! Those lines which impressed me alot 're below..!

//ஓர்ஆண்இன்னொருவனிடம்எதுவரைபகிர்ந்துகொள்வான்என்பதுஅவரவர்எல்லைவரைஇருக்கிறது.குழந்தைகளாகஇருந்தால்குதூகலத்தையும்,சிறுவர்களாகஇருந்தால்

கிரிக்கெட்மட்டையும்,இளைஞர்களாகஇருந்தால்சிகரெட்டும்,நண்பர்களாகஇருந்தால்கடனும்,உறவினர்களாகஇருந்தால்கர்வமும்,வயோதிகர்களாகஇருந்தால்

அனுபவமும்என்பதாகதான்இருக்கும்.எல்லைஇல்லாமல்எல்லாவற்றையும்இன்னோர்ஆணிடம்பகிர்ந்துகொள்வதற்கு

ஒரேகருவறையில்இருந்தஇரட்டையர்களால்கூடஇயலாது//


//"எத்தனைநாள்தெரியுமாநுங்கம்பாக்கம்ஸ்டேஷன்லசாயங்காலம்அஞ்சுமணியிலஇருந்துகாத்திருந்தேன்தெரியுமா?//

it reminds me the dialogue from the climax scene of "engeyum eppodhum" movie done by sherwanand..!

//ஒருவனுடையநினைவுகள்இவ்வளவுகோரமாகஎன்னைஉருக்குலைக்கும்?.எவ்வளவுதுயரங்கள்வந்தாலும்நிலைகுலையாததிடமானமனதைபெற்றிருந்தேன்.

என்னுடையசக்திகள்அத்தனையும்விரயமாகிகொண்டுவருவதுபோல்உணர்ந்தேன்.// i felt those feelings..!

//முதல்முறையாகமேல்தோளையும்தாண்டிஒருவனின்நெஞ்சம்எனக்குபுரியஆரம்பித்தது//

thats really a good thing but there's a spelling mistake yar..! On the whole i love this

portion..! Situation song ah J.J moviela vara KADHAL MAZHAIYE song ah background la odavitta madhiri irundhuchu..!



-- Edited by rajkutty kathalan on Sunday 6th of October 2013 12:44:57 PM

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 62
Date:
Permalink   
 

@Butterfly - ungaludaya commentskku nandri. adutha murai ungal commentsai word wrap seithu pathiyavum. miga neelamaaga horixontal scroll seiyya vendi irupathu niraya vaasagarkalukku siramamaaga irukirathu polum. adutha murai alosanaiyai muyarchi seiyavum



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

Wow! Ithuthaan unmail natpu...

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard