Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இது கடவுளின் காதல் கதை - 5


கவி

Status: Offline
Posts: 67
Date:
இது கடவுளின் காதல் கதை - 5
Permalink   
 


 

பூமி முழுவதாய் இருபது முறை சுற்றி முடித்துத்திருந்தது .....
 
இப்போது நினைத்தாலும் தித்திக்கிறது ....
 
தயாளளுடனான சந்திப்பு ...
 
அவனுக்கு நன்றிகூட சொல்ல அவகாசம் தராமல் சக்தியை 
 
அழைத்து சென்றது காவல்துறை .....
 
இன்னும் அவனின் வாசத்தை என் நுரையீரல் பத்திரமாய் வைத்திருகிறது ......
 
கடைசியாய் பார்த்த அவன் புன்னகைமுகம் நெஞ்சில் நிழற்படமாய் 
 
ஒட்டிக்கொண்டது ......
 
இப்போது எந்தக் காட்டில் இருக்கிறானோ?
 
தயாளன் ...
 
அரசனின் கம்பீரம் ..
 
ஞானியின் அமைதி ....
 
பார்வையில் வசீகரம்...
 
குரலில் ஆண்மை ....
 
அத்தனையும் சேர்ந்த 
 
ஆளுமையாளன் ....
 
உயிரை உலுக்கிய அவன் ஒற்றைப் புன்னகையில் 
 
தயாளனுக்கான காதல் பூவை உதிர்த்தான் சக்தி ....
 
நான் என்பதைத் தொலைத்து 
 
அவனுடன் கலந்த அத்வைத நிலை அடைந்தான் சக்தி ....
 
எதேச்சையாய் அவன் தொலைக்காட்சிப் பார்க்க ...
 
அதிலும் தெரிந்தது தயாளனின் முகம்தான் ...
 
காதலில் இருப்பவனுக்கு காட்சிப்பிழை சகஜம்தானே ...
 
சமீப காலமாய் இது பலமுறை சக்திக்கு நிகழும் ஒன்றுதான் ....
 
இப்போது அவன் பெயரும் கேட்டது...
 
இது கனவல்ல ...நிஜம்...
 
இந்த ஆண்டின் சிறந்த நிழற்படக் கலைஞனாக தயாளன் தேர்வாகி இருந்தான் ...
 
இதோ அவனிடம் ஒரு பெண் செயற்கை புன்னகையுடன் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தாள் ..
 
" இந்தத் தருணத்தில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ..?"
 
தயா " கலைஞனுக்கு முக்கியம் பாராட்டும் அங்கீகாரமும்தான் ....
 
இரண்டும் கிடைத்ததில் மகிழ்ச்சி ..."
 
அவன் இன்னும் என்னவோ பேச...சக்திக்கு எதுவும் கேட்கவில்லை ....
 
அடிபொடிகளின் உதவியால் தயாவின் அலைபேசிஎண்  கிடைத்தது.
 
அமைச்சனின் மகனாய் பிறந்ததற்கு அன்றுதான் சந்தோசப்பட்டான் ,,,
 
வாழ்த்துக்கள் என்று ஒற்றைச் சொல்லில் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு பதிலுக்கு காத்திருந்தான் ..
 
வெயில் நேரத்தில் திடீரென முகத்தில் அடிக்கும் 
 
எதிர்பாராத குளிர்க்காற்றுப் போல குறுஞ்செய்தி வந்தது ..
 
நன்றி சக்தி ....
 
எப்படி தெரியும் நான்தானென்று ...
 
காதலில் மட்டும் புத்தியும் மனமும் ஒரே திசையில் பயணிப்பதில்லை ....
 
வேண்டாம் என்று புத்தி சொன்னாலும் ..
 
மனம் அவன் எண்ணை அலைபேசியில் அழுத்த ஆரம்பித்திருந்தது ...இதோ அவன் குரல் ...
 
"சொல் சக்தி நலமா?"
 
ஒரே நேரத்தில் கைநிறைய மிட்டாய் கொடுத்தால் 
 
சாப்பிட திணறும் குழந்தைப்போல் தடுமாறி நின்றான் சக்தி, தயாவின் குரல் கேட்டு .....
 
"சக்தி, ஏன் மௌனம் ?"
 
" தயா, நலமாக உள்ளேன்... எப்படி தெரியும் என் அலைபேசி எண் ?"
 
" பத்திரிக்கை நண்பரின் உதவியால் உன் எண்ணை எப்போதோ வாங்கிவிட்டேன் ..."
 
"பின் தாமதம் ஏன் பேசுவதற்கு?"
 
"பேச நினைத்தேன் ஆனால் உன் அந்தஸ்தின் வெளிச்சம் என் கண்ணை கூசச் செய்தது ...."
 
" நான் வெறும் அலங்கார விளக்கு அதிகார மின்சாரம் போய்விட்டால் ....வெற்று விளக்கு ..."
 
பேசினார்கள் ...பேசினார்கள் ...இன்றுதான் கடைசி நாள் என்பதுபோல் ..எல்லாம் பேசினார்கள் ....
 
இருவர் மனதிலும் காதல் இருந்தாலும் அதை வெளிப்படுத்தாமலே ...பேசினார்கள் ..
 
அவர்களுக்கு தெரியும்....
 
 வேகமாய் வளரும் மூங்கிலைவிட ...
 
மெதுவாய் வளரும் ஆலமரத்திற்கு உறுதி அதிகம் என்று....
 
அவர்களுக்குள் மெதுவாய் வளர்ந்தது காதல் ...
 
 
 
 
 
 
 
 
 
 


__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink   
 

Kathirukkiren...

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

வேகமாய் வளரும் மூங்கிலைவிட ...

மெதுவாய் வளரும் ஆலமரத்திற்கு உறுதி அதிகம் என்று....

அவர்களுக்குள் மெதுவாய் வளர்ந்தது காதல் ... சூப்பர் வரிகள் ....கலக்குறீங்க...


__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 71
Date:
Permalink   
 

kathaya vita nenka eluthura tamil than athikama rasika vaikuthu...

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

///////////வாழ்த்துக்கள் என்று ஒற்றைச் சொல்லில் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு பதிலுக்கு காத்திருந்தான் ..

வெயில் நேரத்தில் திடீரென முகத்தில் அடிக்கும்

எதிர்பாராத குளிர்க்காற்றுப் போல குறுஞ்செய்தி வந்தது ..

நன்றி சக்தி ....

எப்படி தெரியும் நான்தானென்று ...

காதலில் மட்டும் புத்தியும் மனமும் ஒரே திசையில் பயணிப்பதில்லை ....//////////////////

ரொம்ப ரசித்தேன்... நிஜத்தின் அனுபவித்ததாலோ என்னவோ, வார்த்தைகளை காணும்போது உள்ளுக்குள் ஒரு உற்சாகம்....
அழகான பதிவு.... தொடருங்கள்...

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

Mr. Srinivasan,

Story Super pa very nice story line cant say any down fall words or line in your story, please write the next episode soon. this time write more lines then before please.

thanks.

Regards,

Thiva

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

//ஒரே நேரத்தில் கைநிறைய மிட்டாய் கொடுத்தால்
சாப்பிட திணறும் குழந்தைப்போல் தடுமாறி நின்றான் சக்தி,// your story is also a suprising gift to me..! Keep rock it mama..!

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

///காதலில் இருப்பவனுக்கு காட்சிப்பிழை சகஜம்தானே ...///

ம்ம்ம்... உண்மை தான்...!

அழகான கதை நகர்வு...!

அப்புறம் என்ன ஆச்சு..??

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard