நேற்று முதல் நம்ப முடியாத ஒரு செய்தியாக இது வலம் வருகிறது... கிரகிக்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், நண்பரை இழந்து வாடும் குடும்பத்தினை இனியாவது அந்த இறைவன் கஷ்டப்படுத்தாமல் இருக்க வேண்டுமென, இறைவனை பிராத்திக்கிறேன்....
இருக்கவேண்டும் என்று மாதாவிடம் மன்றாடினேன், கடைசியாய் அவர் அண்ணன் அலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய போதுதான் அதிர்வுகள் உள்ளிறங்கியது, எனக்கென்னவோ அவன் முகத்தை பார்த்த போது, உறங்குவதாய் தான் பட்டது, என் வீட்டிற்கு வாருங்கள் என்று பலமுறை அழைத்தும் நான் சென்றதில்லை, நான் சென்றபோது வரவேற்க அவன் இல்லை, பொதுவாக இது வாலிபர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள், சின்ன சின்ன விஷயங்களுக்கு சிரிக்கும் நீங்கள்,அற்ப காரணங்களுக்காக மனதை தளர விடாதீர்கள், நூறு வருட வாழ்க்கையை பத்து வருடத்தில் வாழ துடிக்காதீர்கள், நிஜ வாழ்வில் நாயகனாக முயற்சிக்காதீர்கள்,
I like to convey my deep condolence for the demise of Mr. Muththu. I know about him through his stories and had a few chats with him through some other activeboard and gmail. He always insists me to write in Tamil. Still now I haven't practised it. Atleast hereafter I will try to use Tamil. I pray god to rest his soul in peace. --- Avid Fascination Towards Seraph.
சற்றுமுன் ஒருவர் வேறு ஒரு தளத்தில் எழுதிய பதிப்பை பார்த்தபோது எனக்கு அழுவதா, சிரிப்பதா, என்றே தெரியவில்லை, என்னடா உலகம் இது, காமப்பிசாசு,என்று கரித்துகொட்டியவர்கள் இன்று வருத்தம் தெரிவிப்பது எனக்கு வியப்பாக உள்ளது, எரிகின்ற நெருப்பில் பெட்ரோல் ஊற்றாதீர்கள், கர்தரின் பெயரால் உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்,
யாரையும் தண்டிக்கும் அதிகாரம் எப்படி எனக்கு வழங்கப்படவில்லையோ அதை போலவே யாரையும் மன்னிக்கும் அதிகாரமும் எனக்கு வழங்கப்படவில்லை,
அடி வயிற்றை கிழித்து குருதி சிந்தி உயிர்களைத்து அன்னை பெற்றதெல்லாம் எவனுக்கோ தாரை வார்க்கவென்றால் பிரசவத்திலேயே சவமாக்கி இருக்கலாம்,கேவலமான பிணமாகி போவதே வாழ்வின் குறிக்கோள் எனில் பிறப்பு கூட இறப்புதான்