Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இது கடவுளின் காதல் கதை - 4


கவி

Status: Offline
Posts: 67
Date:
இது கடவுளின் காதல் கதை - 4
Permalink   
 


சட்டென கலைந்தது அந்த அழகிய கனவு ..

 
பட்டென்று அறுந்த பட்டத்தின் நூல் போல ...
 
விருட்டென்று விலகினான் அந்த புதியவன்..
 
இப்போது இருவருமே ஒருவருக்கொருவர் புதியவர்கள் ....
 
மந்தையிலிருந்து தவறிய வெள்ளாடாய் , கொஞ்சம் குழப்பத்துடன் கேட்டான் 
 
அந்த புதியவன் ....
 
"நான் எப்படி இங்கே ? "
 
" கவலைப்படாதே இந்த காட்டில் எனக்கான கூடு இது, உன் பெயர் ?"
 
"சக்தி"
 
"நான் தயாளன்,காடுகளையும் ,அதில் வாழும் உயிர்களையும் படம் எடுப்பவன், தக்க பாதுகாப்பின்றி இங்கு வரலாமா? " 
 
"மனிதனைவிட கொடிய மிருகங்கள் ஏதேனும் இந்த காட்டில் உள்ளதா ?
 
கேள்விக்கு பதில் சொல்லாமல் கேள்வியையே பதிலாய் தருகிறானே என்று தயா வியந்தான்.
 
தயா  "புரியவில்லை "
 
"நீங்கள் அதிக நாள் காட்டில் செலவிடுவதால் நாட்டில் இருப்பவர்களைப்பற்றி அறியாமல் இருப்பது  ஒன்றும் அதியசமில்லை "
 
சக்தியே தொடர்ந்தான் ..
 
" தேவைக்கு அதிகமாய் சேர்க்கும் அயோக்யத்தனம் ..
 
அதிகாரம் வேண்டி சொந்தநாட்டு மக்களை மாக்களாக நடத்தும் கயமைத்தனம் ..
 
தான் வாழ எதையும் அழிக்கும் அரக்கத்தனம்  
 
அத்தனையும் நிறைந்தது மனித இனம் "
 
தயா " நீ மக்களின் சிலரைப் பற்றி பேசுகிறாய் ..
 
எத்தனையோ நல்லவர்கள் இல்லையா இந்த நாட்டில் ...."
 
சக்தி " கற்புடைய மகளிர்க்கு ஒன்று ..
 
நீதி தவறாத கோவுக்கு ஒன்று ..
 
அறம் வழுவாத மக்களுக்கு ஒன்று என மாதம் மும்மாரி பொழிந்தது மழை ....
 
இப்போதெல்லாம் ஆண்டிற்கு சில நாள் பெய்தாலே அதிசயம் ..."
 
தயா " ஒரு வெள்ளைத்தாளில் இருக்கும் கருப்பு புள்ளியை மட்டும் பார்க்கிறாய் ...."
 
சக்தி" ஒரு குடம் பாலை நஞ்சாக்க ஒரு துளி விஷம் போதும் "
 
பேசும்போதே தொண்டை வரண்டது ...நாக்கு உலர்ந்தது ...
 
"தயா எனக்கு தண்ணீர் வேண்டும் உங்களுடன் நான் தெம்பாய் விவாதம் செய்ய ..."
 
"தயா" இது என் அன்னை அழைப்பல்லவா இது ...
 
எத்தனை நாள் ஆனது இந்த அழைப்பைக் கேட்டு ..
 
பத்து ஆண்டிற்கு முன்னால் விபத்தில் சிக்கி சாகும் தருவாயில் கேட்ட அழைப்பு ....
 
மீண்டும் இப்போதுதான் கேட்கிறான் ...
 
மீண்டும் சக்தி "தயா, பிறகு கனவு காணுங்கள் எனக்கு தண்ணீர் தாருங்கள் ..."
 
தயா தண்ணீர் குடுவை எடுத்துத்தர, அதை வாங்கும் போதுதான் கவனித்தான் சக்தி , தயாவின் விழி நீரை ...
 
"கண்களில் தூசியா"
 
"இல்லை நெஞ்சில் முள் "
 
" என்ன சொல்கிறாய் தயா?"
 
கசப்பான மாத்திரையை கணப்பொழுதில் விழுங்கும் குழந்தைப்போல ..
 
நடந்த அத்தனையும் சொன்னான்....
 
"கவலைப்படாதே தயா ... அன்பிற்குரியவர்கள் எப்போதும் நம்மை விட்டு எப்போதும் அகலுவதில்லை ..."
 
" சக்தி நீ எப்படி இங்கு வந்தாய் ?"
 
"நானும் எனது நண்பர்களும்  சுற்றுலா வந்தோம் ....அவர்களுக்கு மது மீது மயக்கம்  ... எனக்கு இயற்கை மீது மயக்கம் என்பதால் ...இந்த பக்கம் வந்தேன் ... வந்த வழி மறந்து நின்ற போது  ஒரு காட்டு மாட்டின் அன்பால் இதோ உங்கள் முன்னாள் இருக்கிறேன் "
 
" தக்க பாதுகாப்பு இல்லாமல் காட்டிற்குள் வருவது ஆபத்து "
 
"இல்லை ...அவர்களின் வீட்டிற்கு வந்த அழையா விருந்தாளி நான்  ..தவறு என் பக்கம் இருக்கிறது ...
 
" அழகாய் பேசுகிறாய் "
 
"பேசி பேசி கட்சி வளர்த்து 
 
ஆட்சியைப் பிடித்த ஒருவரின் மகனுக்கு 
 
அழகாய் பேச தெரியவில்லையென்றால்தான் ஆச்சர்யம்"
 
" அப்படியென்றால் உன் அப்பா ..."
 
" அமைச்சர் அருட்செல்வம் "
 
 
 
 
 
 
 
 
 


__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink   
 

Just like that....

Super, keep writing...

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

வாதங்களின் வர்ணனை அழகு....
இறுதியில் முடித்திருக்கும் "அமைச்சர் அருள் செல்வம்" ஏதேனும் ஆபத்துக்கு அறிகுறியா?....
மொட்டாய் அரும்பிய காதலை,
முளைக்கும் முன்பே கருக்காமல் கதை நகருமென்று எதிர்பார்க்கிறேன்....
சிந்தையை மயக்கும் சிலிர்ப்பான கதையை இன்னும் இனிதாய் தொடருங்கள்.... வாழ்த்துகள்...

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

"கண்களில் தூசியா"

"இல்லை நெஞ்சில் முள் "

அழகான சொற்கோர்வை 

நன்றாக இருக்கிறது நண்பா!!



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

அருமை... அருமை...

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Fantastic mama..! Wonderfull story..! The conversating between them is so poetic..! After a long gap i'm reading a poetic story like this..! Simply wow..!

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard