Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நானும் பாரியும்...! - 2


உறுப்பினர்

Status: Offline
Posts: 62
Date:
நானும் பாரியும்...! - 2
Permalink   
 


மாலை தீர்ந்து கொண்டு இருக்க ரயில் நிலையம் மனிதர்களால் நிறைந்து கொண்டு இருந்தது. இப்பொழுது சென்றால்  ரயிலில்  நிற்பதற்காவது இடம் கிடைக்கும். இருட்டிய பிறகு வரும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிய போகிறது. மூச்சு விட கூட முடியாது. அப்பொழுது தாம்பரம் நோக்கி செல்லும் ரயில் வந்து நின்றது. அது நீண்ட தூரம் செல்லும் ரயில். கூட்டம் வாசல் வரை பிதுங்கி கொண்டு இருந்தது. சிலரை உதிர்த்து விட்டு  காத்திருந்த பலரை சேர்த்து கொண்டது ரயில். சில நொடிகளில் கூவி கொண்டு புறப்பட தயாரானது.

ஒரு வருடத்தின் அருமை கல்லூரியில் அட்மிஷன் கிடைக்காதவனுக்கு தான் தெரியும்.  அரை வருடத்தின் மதிப்பு செமஸ்டரில் பெயில் ஆன மாணவனுக்கு தான் தெரியும்.  ஒரு மாதத்தின் அருமை குறைபிரசவத்தில் குழந்தை பெற்ற தாய்க்கு தான் தெரியும். ஒரு வாரத்தின் மதிப்பு வார பத்திரிக்கை ஆசிரியருக்கு தான் புரியும். ஒரு நாளின் மதிப்பு குடி போதையில் மட்டையாகி கிடந்தவனுக்கு தான் தெரியும். ஒரு மணி நேரத்தின் அருமை காத்திருக்க வைத்து காதலியை சந்திக்க விரையும் காதலனுக்கு தான் தெரியும். ஒரு நிமிடத்தின் அருமை  விபத்தில் தப்பித்தவனுக்கு தான் தெரியும். ஒரு வினாடியின் அருமை ரயிலை தவற விட்டவனுக்கு தான் தெரியும்.

சிலர் படிகளில் இறங்கி தட தட என ஓடி வந்து கடைசி பெட்டியில் ஏறினார்கள். அதில் ஒருவன் வியர்க்க விறுவிறுக்க கடைசி பெட்டியை தாண்டி ஓடி வந்தான். தலை முடி மேலும் கீழும் அலைந்தது. தோளில் இருந்து குறுக்காக நீண்ட கருப்பு பையும் ஆடிக்கொண்டு இருந்தது. அவன் என் எதிரில் இருந்த பெட்டியின் வாசலில் நின்று கம்பியை தொற்றிக்கொண்டு ஒரு காலை படியிலும் இன்னொரு காலை காற்றிலும் விட்டு பயணத்திற்கு தயாராக இருந்தான். ஒரு நொடி தான். நான் அடுத்த பக்கத்தை திருப்பி னேன்.  அவன் தான் என்னோடு இணைந்து காவியம் படைக்க போகிறான் என்பது தெரியாமலே உயிரில்லாத கருப்பு எழுத்துக்களை படிக்க தொடங்கினேன். ரயில் கிளம்பியது.

அடுத்து அடுத்த பக்கங்களை புரட்டி கடைசி பக்கத்தின் கடைசி எழுத்து வரை படித்து முடித்துவிட்டு தான் நிமிர்தேன். புத்தகத்தை சுருட்டி வைத்து ரயில் வரும் திசையை பார்த்தேன். இனி வரும் ரயிலில் சென்று விட வேண்டும். அப்பொழுது தான் அவனை கவனித்தேன். தலை தெறிக்க ஓடி வந்து ரயிலில் ஏறியவன் எதற்காக தொடர்ந்து செல்லாமல் அங்கேயே நின்று கொண்டு இருக்கிறான் என்பது முதலில் புரியவில்லை. ரயில் நெருங்கி வந்து கொண்டு இருந்தது. கூட்டம் வேறு குறைவாகவே இருந்தது. ரயில் வந்த திசையில் திரும்பி உள்ளே ஏற முயளும் போது தான் அவனை மீண்டும் கவனித்தேன். நான் நின்று இருந்த இடத்தில இப்போது அவன். அவனுடைய பார்வை பெண்டுலம் போல என் அருகிலே அசைந்து கொண்டு இருந்தது. முந்தைய ரயில் வந்து போனதில் இருந்து இவ்வளவு நேரமும் என்னை தான் பார்த்து கொண்டு இருந்தான் என்பது மிக லேட்டாகத்தான் எனக்கு உறைத்தது. ரயில் புறப்பட தயாரானது. நான் இன்னமும் ரயிலில் ஏறாமல் தரையில் நின்று கொண்டு இருந்தேன். அந்த தடுமாற்றம் புதிதாக இருந்தது. எத்தனை பார்வைகளை நான் சுருட்டி ரயில் சக்கரத்தில் போட்டு இருக்கிறேன். என் கால்களை கட்டி போட்டது எது? அவன் கண்களா, அல்லது அதில் இருந்த கேள்வியா?  

ஒரு நொடி தான். நான் இந்த ரயிலையும் தவற விட்டேன். எதிர்பக்கம் வந்த ரயிலும் நழுவி விரைந்தது. இப்போது சுற்றிலும் யாரும் இல்லை. இருவர் மட்டுமே. அவனை முழுமையாக பார்த்தேன்.

அவன் கருப்பிலும் மேன்மையான கருப்பு  நிறம். அடர்த்தியான மீசை.இரண்டு பக்கமும் உதடுகளை ஒட்டி கீழே இறங்கி இருந்தது. தினமும் ஷேவ் செய்து பச்சை நிறம் செழுமையான கன்னங்களில் ஒட்டி கொண்டு இருந்ததுகருப்பு பேண்டுக்குள் இருந்த சாம்பல் நிற சட்டை பாதி வெளியில் எட்டி பார்த்தது. முழுக்கை சட்டையை இரண்டு மடிப்பு மடித்து முழங்கைக்கு சற்றே கீழாக நிறுத்தி இருந்தான். மடித்த சட்டைக்குள் இருந்து கையை சுற்றி ரோமங்கள் விரவி இருந்தன. தோளில் தொங்கி கொண்டு இருந்த பையின் பட்டையை தடித்த விரல்கள் பற்றி கொண்டு இருந்தன. பட்டன்களை கழற்றி விட்டு காலரை பின்னுக்கு தள்ளி இருந்தான். சட்டைக்குள் மறைந்து இருந்த ரோமங்கள் கழுத்து வரை பரவி இருந்தது. ஒரு சிகப்பு கயிறு கழுத்தை சுற்றி இருந்தது. அந்த கயிற்றில் இருந்த டாலர் கறுப்பு ரோமங்களுக்குள் சிக்கி கொண்டு இருந்தது.

"நீ எப்படி இருந்த தெரியுமா? அந்த மஞ்சள் வெயில் உன் மேல பட்டு தக தகன்னு தங்கம் மாதிரி மின்னி கொண்டு இருந்துச்சு. சான்சே இல்லை. உன் கிட்ட ஒரு நிமிஷமாவது பேசமுடியுமானு தோணிச்சு. என்ன பேசறதுன்னு தெரியாம தவிச்சு கிட்டு இருந்தேன் தெரியுமா?.  என்னை மதிச்சு ஒரு வார்த்தையாவது என்னோடு பேசுவியான்னு பயமா இருந்துச்சு" இதை அவன் சில நாட்கள் கழித்து நெருக்கமான நேரத்தில் காதருகே கிசு கிசுத்தான்.

அந்த தொலைவு எப்படி குறைந்தது என்று தெரியவில்லை. அவன் மிக அருகில் வந்து விட்டான்.

"ஹலோ, என் பெயர் பாரி" என்று கைகளை நீட்டினான்.

பதிலுக்கு என் பெயரை சொல்லி கை குளுக்கினோம்,

"யாருக்காவது வெயிட் பண்றீங்களா?" என்று கேட்டான்.

இல்லை என்றதும், "அப்போ வெளியே போகலாமா? வெளியே போய் பேசலாமா? இங்க வேண்டாமே!" என்றான்.

"எதற்கு?"

"ஒரு டீ சாப்பிடலாம். ப்ளீஸ், ஒரு டென் மினிட்ஸ் எனக்கு தாங்க"

எனக்கும் தம் அடிக்க வேண்டும் போல் தோன்றியது.

"அந்த பத்து நிமிஷத்துல உன் கிட்ட பேசி உன்னை எப்படியாவது இம்ப்ரெஸ் பண்ணனும்னு ஒரு வெறி மனசுக்குள்ள நெருப்பா பரவிச்சு."

வெளியே வந்தோம்.

டீ  குடித்து விட்டு சிகரெட் பற்ற வைத்தேன்.

பெரிதாக கவர்கிற வசீகரம் அவனிடத்தில் இல்லை. இன்னும் பத்து நிமிடத்திற்கு பிறகு அவன் யாரோ நான் யாரோ. இருவரும் வேறு வேறு வழியில் பிரிய போகிறோம். அவனுடைய விருப்பத்திற்கு மதிப்பு  தந்ததில் பெரிதாக தவறில்லை என்றே தோன்றியது. அவனிடத்தில் பெரிதாக ஈடுபாடு எனக்கு ஏற்படவில்லை.

"நான் வர முடியாதுன்னு சொல்லி இருந்தா என்ன பண்ணி இருப்ப?"

"ஒரு நம்பிக்கை தான். நீ என்கிட்ட பேசுவன்னு நான் நினைச்சு கூட பார்க்கலை. என்னை அவமான படுத்தி விடுவியோன்னு நினைச்சு பயந்து போய்  இருந்தேன். ஓகே, என்னோடு டி குடிக்க வந்தப்பவே எனக்கு உயிர் வந்திடிச்சு"

பத்து நிமிடம் முடிந்தது.

"போகலாமா?" என்றேன்.

சிகரெட்டை நசுக்கி விட்டு அந்த இடத்தில இருந்து நகர்ந்தோம்.

"மறுபடியும் உங்களை பார்க்க முடியுமோன்னு எனக்கு தோணலை.உங்களை பத்தி எதுவும் சொல்லவே இல்லை. நான் உங்களை வற்புறுத்தவில்லை, இருந்தாலும் என்னோடு வந்தததற்கு ரொம்ப நன்றி.   எனக்கு பத்து நிமிஷம் தந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்"

மெல்லிய புன்னகையை உதிர்த்து விட்டு ரயில் நிலையம் நோக்கி நடக்க தொடங்கினேன். அவனும் என்னோடு  நடந்தான்.

 



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink   
 

Hope that you are going to take a leading role,good, keep writing.

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

நேரத்தை பற்றி சொன்ன விதம் நல்லாருக்கு....அதோடு நடந்து முடிந்ததை சொல்லும்போது அந்த சந்திப்பை பற்றி அவர்கள் பேசியதையும் சேர்த்து சொல்லுவது சினிமாவில் வரும் கட்ஷாட் மாதிரி நல்லாருக்கு ...இது போல் எழுதுவது படிக்க வித்தியாசமாக இருக்கு....I like this....கலக்குறீங்க

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

hmmmm

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

வித்தியாசமான கதையா இருக்கே... அடுத்தது என்ன?


__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Well talented..! Keep rocking..!

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard