Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இது கடவுளின் காதல் கதை - 3


கவி

Status: Offline
Posts: 67
Date:
இது கடவுளின் காதல் கதை - 3
Permalink   
 




நோயாளியின் இரவு துன்பத்துடனும் ...

காதல் கொண்டவனின் இரவு கனவுகளுடனும் ...

போராளியின் இரவு நிச்சயமற்ற தன்மையுடனும் .....நீளும்.......

ஆனால் தயாளனின் இரவோ பெரும் போராட்டமாய் நீண்டது ...

இந்த நேரத்தில்தான் கண்ணதாசனின் அந்த வரிகள் ஞாபகம் வந்தது ...

"அவனுக்கென்ன தூங்கிவிட்டான் ... அகப்பட்டவன் நானல்லவா..."

கவிதையின் வரிகள் அவனுக்காக எழுதப்படவில்லை என்றாலும்....

தன் சூழ்நிலை அதனுடன் ஒத்துப் போகும் அதியசம் கண்டான்...

தன மார்புச்சூட்டில் இதமாய் தூங்கும் இவனை என்ன செய்வது...

அவனை நகர்த்தவும் முடியாமல் ...

அவனை விட்டு நகரவும் முடியாமல் ...

இது என்ன சோதனை ...

கடலில் மூழ்கியவனுக்கு தாகம் எடுத்தக் கதையாய் ..

தண்ணீரைக் குடிக்கவும் முடியாமல் ....

கடலை விட்டு வெளியே வரவும் முடியாமல் ....

ஜீவஇம்சை ....

ஆறுதல் சொல்ல வந்த ஆதவன் ...

தயாளனின் அவதியைப் பார்த்து ...

தன் பொன்கிரணங்களால் அந்த புதியவனின் கன்னத்தில் செல்லமாய் தட்டி எழுப்பினான்.....

அந்தப் புதியவனும் தூக்கம் கலைந்து , மயக்கம் நீங்கி

முதலில் தன் புத்தி திறந்தான் ...

தாய்மடியின் கதகதப்பு ...

அன்பான அரவணைப்பு ...

ஐயோ! இவைகளை நான் தொலைத்து நாட்கள் பலவாகின்றனவே.......

இது சத்தியமாய் என் அறை அல்ல...

அங்குதான் எல்லாம் செயற்கையாயிற்றே ....

எப்போதும் குளிர் கக்கும் எந்திரம் ...

சுத்தமாய் இருந்தாலும் சுகம் தராத படுக்கை ....

எப்போதும் நறுமணம் ...

பறவைக்கு எல்லாம் தந்து ...

வானத்தை மட்டும் பறித்துக்கொண்ட மூடர்களின் கூடமல்லவா ..

இல்லை இது என் அறை இல்லை...

என் மீது இதமான இளவெயிலின் சூடு ...

சுற்றிலும் பறவைகளின் ஆலாபனை ....

அதைக் காட்டிலும் முக்கியமாய்

பேருந்து பயணத்தில் அத்தனை தூக்கத்திலும் ....

தன் குழந்தையை இறுக பிடித்திருக்கும் அம்மாவைப்போல ..

என்னை பிடித்திருப்பது யார்?

புத்தியைத் திறந்த அந்த புதியவன் இப்போதுதான் தன் கண் மலர்ந்தான்.....




 


__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

கடலில் மூழ்கியவனுக்கு தாகம் எடுத்தக் கதையாய் ..

தண்ணீரைக் குடிக்கவும் முடியாமல் ....

கடலை விட்டு வெளியே வரவும் முடியாமல் ....

ஜீவஇம்சை ....இந்த இம்சை வெளிபாடு நல்லாருக்கு ...உங்கள் நகைச்சுவை உணர்வு "அவனுக்கென்ன தூங்கிவிட்டான் ... அகப்பட்டவன் நானல்லவா..."இதில் தெரிகிறது ....

வானத்தை மட்டும் பறித்துக்கொண்ட மூடர்களின் கூடமல்லவா ..கூண்டு பறவைகள் பார்க்கும்போது எனக்கும் இது போல் தோன்றும்....ரசிச்சுப் படித்தேன் புதியவனின் எண்ணங்களை .....சீக்கிரம் தயாளனை அவதியிலிருந்து விடுவிங்கள் ....பாவம்...


__________________


புதியவர்

Status: Offline
Posts: 7
Date:
Permalink   
 

romba nalla iruku..
** அங்குதான் எல்லாம் செயற்கையாயிற்றே ....

எப்போதும் குளிர் கக்கும் எந்திரம் ...

சுத்தமாய் இருந்தாலும் சுகம் தராத படுக்கை ....

எப்போதும் நறுமணம் ...

பறவைக்கு எல்லாம் தந்து ...

வானத்தை மட்டும் பறித்துக்கொண்ட மூடர்களின் கூடமல்லவா ..

இல்லை இது என் அறை இல்லை... **

Superb explanation of city life... :)


__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

//"அவனுக்கென்ன தூங்கிவிட்டான் ...அகப்பட்டவன் நானல்லவா..."
கவிதையின் வரிகள் அவனுக்காக எழுதப்படவில்லை என்றாலும்....
தன் சூழ்நிலை அதனுடன் ஒத்துப் போகும் அதியசம் கண்டான்...// good humour mama..!

//இது என்ன சோதனை ...
கடலில் மூழ்கியவனுக்கு தாகம் எடுத்தக் கதையாய் ..
தண்ணீரைக் குடிக்கவும் முடியாமல் ....
கடலை விட்டு வெளியே வரவும் முடியாமல் ....
ஜீவஇம்சை ....// wonderfully explained the situation of dhaya..! I THINK YOU MAY 'VE SO MANY EXPERIENCES AS THIS..! Lol..! :-p

//தாய்மடியின் கதகதப்பு ...
அன்பான அரவணைப்பு ...
ஐயோ! இவைகளை நான் தொலைத்து நாட்கள் பலவாகின்றனவே.......
இது சத்தியமாய் என் அறை அல்ல...
அங்குதான் எல்லாம் செயற்கையாயிற்றே ....// simply explained a guy's mindset who miss his mom for a while..!

//பேருந்து பயணத்தில் அத்தனை தூக்கத்திலும் ....
தன் குழந்தையை இறுக பிடித்திருக்கும் அம்மாவைப்போல..
என்னை பிடித்திருப்பது யார்?// wonderfull explanation of mother's love..! Keep rocking mama..! Waiting for the next..!

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 103
Date:
Permalink   
 

Lovely narration......

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

Am dumbfounded!

Exemplary presentation!! :)

Keep rocking buddy!!! :D

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

அவனை நகர்த்தவும் முடியாமல் ...

அவனை விட்டு நகரவும் முடியாமல் .../////

அழகான வரிகள்.... விழித்து பார்த்ததும் என்ன செய்ய போறானோ?....
கலக்குங்க....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

கவித்துவமான வரிகள்...

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard