நம்மவர்களுக்கு பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் மோசமான நிகழ்வுதான் இது. பொதுவாக ஆண்கள் எளிதாக நட்பை பகிர்ந்து கொள்வார்கள் . ஆனால் நம்மவர்களில் உண்மையான உறவில் உள்ள ஆழத்தை உணர தவறுகின்றனர். ஆண் என்ற கம்பீரத்தை விட்டு விடாதே என்று சொல்லியே வளர்க்கப்பட்டதால் நாம் அடுத்தவரின் அன்பை உணருவதில்லை அதே போல் மனதில் உள்ள காதலை ஒத்துக் கொள்ள மறக்கிறோம். தயவு செய்து இங்குள்ள அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.
நீங்கள் எதிபார்ப்பது வெறும் காமம் என்றால், தயவு செய்து நீங்கள் முன் கூட்டியே சொல்லி விடுங்கள். அது எவ்வளவோ மேலான செயல். ஆசை வார்த்தை பேசி ,குறுஞ்செய்திகளால் காதல் வளர்த்து , சில நாள் இன்பம் துய்த்து , பின் நிராதரவாய் விட்டு செல்லாதிர்கள்.
உங்களால் பாதிக்கப்பட்டவனும் ஆண் மகன்தான் . அவன் சோகத்தை வெளியில் சொல்ல முடியாமல் , மனதில் அழுது வெறும் நடை பிணமாய் வாழ்கிறான் .அல்லது போதைக்கு அடிமையாகிறான்.
அழகான நட்பு ,ஆழமான அன்பாய் மாற வேண்டும் . அழகான இந்த அன்பின் தொடக்கம் பின் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும். உங்களால் திருமணம் செய்து புரட்சிகரமான வாழ்க்கை வாழ முடியாவிட்டாலும், தொலைவில் இருந்தாலும் உண்மையான அன்புடன் இருங்கள்.
நமக்கான அன்புடன் யாரோ ஒருவர் இந்த உலகத்தின் எதோ
மூலையில் இருக்கிறார் என்பதே எவ்வளவு அழகான நம்பிக்கை.இதை
சிலர் காதல் என்று சொல்கிறார்கள். காதல் என்ற அழகான தமிழ் சொல்லுக்கு
நவீன கால அகராதியில் மோசமான அல்லது தவறான அர்த்தங்கள்
கற்பிக்க படுகின்றன.
உண்மையில் அது எல்லையில்லா அன்பு , எதிர்பார்ப்பற்ற ஆதரவு ...
இந்த உலகத்தை சுற்றி இருக்கும் கடலைப் போன்றது....
சமுத்திரத்தின் கரை ஓரமாய் நின்று கால் நனைத்துவிட்டு ....
அதை முழுவதாய் அளந்துவிட்டேன் என்பது போன்றது நம்முடைய நிலைப்பாடு.......
மூலையில் இருக்கிறார் என்பதே எவ்வளவு அழகான நம்பிக்கை....உண்மைதான் அந்த நம்பிக்கை நிச்சயம் ஒருவர் கொடுத்தாலே....வாழ்வை தன்னம்பிக்கை யுடன் எதிர் கொள்ளலாம்...உங்கள் வார்த்தைகள் கண்டிப்பாக படிப்பவர்களை யோசிக்க வைக்கும்.....