Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இது கடவுளின் காதல் கதை - 2


கவி

Status: Offline
Posts: 67
Date:
இது கடவுளின் காதல் கதை - 2
Permalink   
 


 

அங்கே கேள்விக்குறியாய் கிடந்தான் ஒருவன்.
 
அவன் தலையில் உறைந்த ரத்தத் திட்டுக்கள்.
 
அவசரமாய் அருகில் சென்று பார்த்தான் தயாளன்.
 
முகம் கவிழ்ந்து கிடந்தாலும் ..
 
நெஞ்சு ஒரே தாள லயத்தில் அசைந்துக் கொண்டிருந்தது.
 
அப்பாடா , உயிர் இருக்கிறது.
 
உடனடியாய் நீர் கொணர்ந்து மூர்ச்சை தெளிவிக்க முயன்றான்.
 
ஆனால் அவன் இமைகள் பிடிவாதமாய் திறக்க மறுத்தன.
 
அப்போதுதான் அவனைக் கவனித்து பார்த்தான் தயாளன்.
 
அவன் உடைக் கிழிப்பட்டு , முட்டி சிராய்ந்து , நெற்றியில் ரத்தம் வழிய கிடந்தான்.
 
அவை அள்ளித் தூக்கி நடக்க நடக்க ஆச்சர்யப்பட்டான் தயாளன்.
 
பொதுவாய் மயங்கியவர்கள் உடல் கனக்கும். ஆனால் இவன் இவ்வளவு லேசாய் இருக்கிறானே.
 
மரத்தின் மேல் தனக்கென அமைக்கப்பட்ட சிறிய குடிலில் அவனை கிடத்தினான்.
 
அன்று முழுமதி நாள். கானகத்தில் காயும் நிலவால் யாருக்கும் பயன் இல்லை என்பார்கள் , ஆனால் தயாளன் அன்று முழு பலனையும் அனுபவித்தான்.
 
முதலுதவி செய்து ரத்தக்கறை துடைத்து பார்த்த பின் தான் தெளிந்தது அவன் முகம்.
 
முகத்தில் அபரிமிதமான தேஜஸ் ..
 
நாட்காட்டியில் இருக்கும் முருகன் வேஷம் கலைத்து 
 
படுத்திருப்பது போன்று இருந்தான்.
 
காயத்திற்கு மருந்திட்டு , ரத்தம் தோய்ந்த ஆடை நீக்கி ,
 
தனது சிறு போர்வையை அவன் மேல் போர்த்திவிட்டான்.
 
அது சிறிய இடம். ஒருவர் படுக்கலாம். இருவர் அமரலாம்.
 
தயாளனின் கண்களும் தூக்கம் கேட்டன. உடல் படுக்க சொல்லி அடம் பிடித்தது. எத்தனை நேரம் அமர்ந்திருப்பது..
 
ஒரு பக்கம் சாய்த்து பாற்கடல்வாசனாய் புஜங்கசயனம் கொண்டான் தயா.
 
படுத்திருந்தவன் முனங்கினான். சட்டென்று தூக்கம் தொலைத்த தயாளன், அவன் நெற்றியை தொட ... வெளியில் காயும் நிலவை விட அவன் காய்ந்தான் காய்ச்சலில். நடுங்கினான் குளிரில்.
 
எதிர்பாராத விதமாய் அந்த புதியவன் இன்னும் நெருங்கி தயாளனின் மார்பில் முகம் புதைத்து சுகமாய் தூங்க ஆரம்பித்தான் .
 
இப்போது இன்னும் அதிகமாய் காய்ச்சல் அடித்தது ...
 
தயாளனுக்கு .... 
 
 
 
 
 


__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

ஆனால் தயாளன் அன்று முழு பலனையும் அனுபவித்தான்..
..இப்போது இன்னும் அதிகமாய் காய்ச்சல் அடித்தது ...

தயாளனுக்கு .... ஓஹோ இனிமேல் தான் பலன் ஆரம்பமாக போகிறதா .....கலக்றீங்க ஸ்ரீனிவாசன்...



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink   
 

Yenakkuthaan...

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

//ஒரு பக்கம் சாய்த்து பாற்கடல்வாசனாய் புஜங்கசயனம் கொண்டான் தயா.//
//இப்போது இன்னும் அதிகமாய் காய்ச்சல் அடித்தது ...
தயாளனுக்கு//

word by word you're rocking mama..! Just continue..! Keenly waiting for rest..!

__________________


புதியவர்

Status: Offline
Posts: 34
Date:
Permalink   
 

Superb narration
Waiting fr ur next post

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

அழகான நடை..... சிறப்பான போக்கு.....
மேற்கொண்டு சொல்லுங்க....

(தயாளனுக்கு ரத்த பரிசோதனை செஞ்சு பார்க்க சொல்லுங்க ஸ்ரீனி, பன்றி காய்ச்சலா இருக்க போவுது!!!)

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 103
Date:
Permalink   
 

waiting to hear more....

__________________


கவி

Status: Offline
Posts: 67
Date:
Permalink   
 

@vijay...

iyarkai yodu sernthu vaalntha.... namakku entha kaaichalum varathu

__________________


கவி

Status: Offline
Posts: 67
Date:
Permalink   
 

Karuthukkalaiyum , paarathukkalaiyum therivitta samram,butterfly,nishanth,just for fun, msvijay,ruben...anaivarukkum en nanrigal

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

தயாளனக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் காய்ச்சல் துவங்கிவிட்டது.

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard