Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இது கடவுளின் காதல் கதை - 1


கவி

Status: Offline
Posts: 67
Date:
இது கடவுளின் காதல் கதை - 1
Permalink   
 


எங்கும் அமைதி அந்த காட்டில் 

 
லேசாக கால்கள் மரத்துப் போன உணர்வு ....
 
அத்தனை வலியிலும் அவன் முகத்தில் குறுஞ்சிரிப்பு ...
 
வரம் வேண்டி தவம் செய்யும் முனிவனைப் போல ...
 
ஓர் இரவுப் பறவையின் நிழற்படம் எடுக்க சில மணி நேரமாய் 
 
காத்திருப்பதை நினைத்து ....
 
தயாளன் ...
 
காடுகளின் காதலன்
 
டாலர் தேச கனவுகளை தாரை வார்த்துவிட்டு 
 
இயற்கையை ரசிக்கும் இனியவன் ...
 
காட்டு வாழ்க்கைப் பற்றி அவன் தாய் பயந்தபோது ..
 
" அம்மா காட்டில் வாழும் எந்த விலங்கும்  மனிதனை விட 
 
 கொடுமையானது இல்லை...துரோகம் வஞ்சகம் எதுவும் அறியாதவை
 
பசி இல்லாதபோது அருகில் இருக்கும் மானை கூட சிங்கம் தொடுவதில்லை ...
 
எல்லாவற்றையும் தனதாக்கிக் கொள்ள நினைப்பதில்லை ...
 
எல்லாவற்றுக்கும் மேல் காட்டில் புலி புலியாக , நரி நரியாக இருக்கிறது...
 
போலி முகமூடியோடு திரிவதில்லை ...." என்ற பதிலில் சமாதானப்படுத்தினான்.
 
அப்பாவுக்கு சொல்லி புரிய வைப்பதில்தான் அதிகம் மெனக்கெட்டான்.
 
"அன்றாடம் அலுவலகம் சென்று ..நாலு கண்ணாடி சுவற்றுக்குள் அமர்ந்து கணினியுடன் போராடி 
நாள் முழுவதையும் தொலைத்து இரவில் தொலைகாட்சிப் 
பார்த்து தூங்கும் சராசரி மனிதனாக என்னால் வாழ முடியாது .."
 
இறுதியாக அப்பாவாலும் புரிந்துக் கொள்ளப்பட்டது.
 
நினைவுகள் கலைந்திட , நிஜத்திற்கு வந்தான்.
 
இதோ அவனுக்கான தெய்வம் காட்சி தந்தது.
 
அந்த பறவையை வெவ்வேறு கோணங்களில் தம் மூன்றாம் கண்ணில் (கேமரா) பதிவு செய்தான்.
 
அத்தனை நேரம் காத்திருந்த களைப்பு அவனை ஆட்கொண்டது.
 
மெதுவாய் மரம் இறங்கி , அருகினில் உள்ள ஓடையில் உடல் நனைத்து , ஆயாசம் தீர குளிர்ந்த நீர் பருகினான்.
 
தூரத்தில் ஏதோ சத்தம் ...
 
தயாளனின் ஐம்புலன்களும் கூரடைந்தன.
 
காட்டில் கேட்கும் எந்த சத்தத்தையும் அலட்சியம் செய்யக்கூடாது.
 
ஒலிக் கேட்ட திசை நோக்கி சென்றான்.

 



__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

நாங்களும் அந்த திசையைத்தான் நோக்குகிறோம்... அழகான கவி நடையில் கதை....
மேற்கொண்டு கவியுங்கள்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

எல்லாவற்றுக்கும் மேல் காட்டில் புலி புலியாக , நரி நரியாக இருக்கிறது...வாவ் உண்மைகளை சூப்பராக சொல்றீங்க....எளிமையான அழகான கவிதை நடை படிக்க நல்லாருக்கு...வித்தியாசமான locationல கதை ஆரம்பமாகிறது ...தொடரட்டும் உங்கள் கவி பயணம்....

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

புதுமையான கருத்துக்கள்... உங்கள் அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard