வணக்கம் நண்பர்களே, “அது என்ன இவன் புதுசா மனம் திறக்க போறான்?.... இவனுக்கு வேற வேலையே இல்ல.... ஒருவேளை அவன் நல்லாவே எதாவது சொல்லிருந்தாலும், அதுக்கு கருத்தை சொல்லி அவனை பெரிய ஆளா ஆக்கிட கூடாது” என்று இந்த தலைப்பை பார்த்து உள்ளே வருவதற்கு இடைப்பட்ட அந்த கணப்பொழுதில் உங்கள் மனதில் தோன்றி இருந்தால், மேற்கொண்டு நான் சொல்லப்போவதை படிக்க வேண்டியது நீங்கள்தான்.... வழக்கம்போல, இதை படித்துவிட்டு, படிக்காததை போல ஒதுங்கி சென்றாலும் பரவாயில்லை, நான் சொல்ல வேண்டியதை சொல்லிடுறேன்....
இரண்டொரு நாட்களுக்கு முன்பு இங்கிருந்து கிடைத்த நண்பரிடம் பேசினேன்... பேசி முடித்தபோது அவர் ஒரு விஷயம் சொன்னது எனக்கு குழப்பமாக இருந்தது, “உங்கள நான் திமிர் பிடிச்ச ஆளோன்னு நினச்சேன், ஆனால் பேசுனப்புறம் தான் அப்டி இல்லைன்னு புரியுது” என்றார்... இது அவர் ஒருவர் மட்டுமல்ல, நான் பேசிய பெரும்பாலானவர்கள், என்னிடம் பேசுவதற்கோ பழகுவதற்கோ முன்பு அப்படித்தான் நினைக்கிறார்கள்....
ஒரு நபரிடம் பேசாமல், பழகாமல், அவரை பற்றிய எந்த விஷயத்தையும் தெரியாமல் அவரை ஒரு தவறான பிம்பத்துக்குள் அடைக்க என்ன காரணம்?....
சில தளங்களில் என் மீது வார்த்தைகளை நெருப்பை உமிழ்வது போல கொட்டுவதை நான் பார்க்கிறேன், அதற்கான காரணத்தையும் நான் அறிவேன்.... அதனால் அதை ஒரு பொருட்டாக கூட நான் இப்போதல்லாம் மதிப்பதில்லை.... ஆனால் ஒரு காரணமே இல்லாமல், அதை நானாக கேட்கும்வரை வெளிப்படுத்தவும் இல்லாமல் என்னை பற்றிய ஒரு பிம்பத்தை உருவாக்க காரணம் என்ன?...
·“உங்கள் கட்டுரைகள்ல நீங்கள் சொல்ற கருத்துகள் ரொம்ப உறுதியா இருக்கும்... அப்படி எழுத்தை பாக்குறப்போ உங்களுக்கு தலைக்கனம் இருக்குமோன்னு தோணும்”
இதல்லாம் ஓரளவு என்னோடு நெருங்கி பழகிய பின்பு, ஒரு காலத்தில் என்னை பற்றி அவர்கள் நினைத்த விஷயங்களாக சில நண்பர்கள் சொன்ன விஷயம்... ஒரு கட்டுரையில் வேகம் இருந்தால், அதில் உறுதி இருந்தால் அந்த எழுத்துக்கு சொந்தக்காரனுக்கும் அப்படி குணம் இருக்கணும்னு அவசியமா என்ன?...
ப்ரைவேட் மெசேஜ் பற்றி நிறையபேர் சொன்னதுண்டு.... அதுக்கு காரணம் சொல்றேன்.... நான் பெரும்பாலான நேரம் ஆன்லைனில் இருப்பது மொபைல் மூலம், அதனால் நீங்கள் அனுப்பும் செய்திகளை படிக்கும் என்னால், அதில் பதிலளிக்க முடியாது... ஒரு நாளில் சராசரியாக என்னால் ஒரு மணி நேரம்தான் கணினி மூலம் இணையம் வர முடியும்... அந்த நேரத்தில் என் முதல் முன்னுரிமை, என் மின்னஞ்சல்களுக்கு தான் கொடுப்பேன்.... வாழ்க்கையின் துன்ப விளிம்பில் இருக்கும் நண்பர்கள் பலரும் அவர்கள் வாழ்க்கைக்கான குழப்பம் தீர்க்க கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்வது என் கடமை... அதனால், அந்த குறுகிய நேரத்துக்குள் சில நேரம் சிலரது தகவல்களுக்கு பதில் சொல்ல முடியாத சூழல் ஏற்படும்....
என்னை பற்றிய தனிப்பட்ட தகவல்களை, தொடர்பு இணைப்புகளை நீங்கள் கேட்டு நான் கொடுக்கவில்லை என்பதற்கு என்ன காரணம்? என்பதை இங்குள்ள சில நண்பர்கள் அறிவார்கள்.... நான் வேதனையின் விளிம்பிற்கே சென்ற சில கசப்பான நிகழ்வுகளால், இப்போதல்லாம் புது நபர்களிடம் பேச ஒரு பயம் எனக்குள் இருக்கிறது.... ஆனால், என் மனதிற்குள் உள்ளூற ஒரு நம்பிக்கை ஏற்படும்போது, எதிர்பாராத நேரத்தில் நான் பல நண்பர்களிடம் தொடர்புகொன்டதை இங்குள்ள நண்பர்கள் அறிவார்கள்....
சிலர் நான் இந்த கே விஷயத்தை வைத்து புகழ் பெறுவதாக நினைத்து பொறாமையால் பேசாமல் இருப்பதாக நண்பர் சொன்னார்.... கொஞ்சம் யோசிச்சு பாருங்க, இந்த புகழால் எனக்கு ஒரு ரூபாய் லாபம் உண்டா? என்று... குறைந்தபட்சம் இங்கு கிடைக்கும் பாராட்டையோ, புகழையோ என் அம்மாவிடமோ, என் உற்ற நண்பனிடமோவாவது சொல்ல முடியுமா? சொல்லுங்க... சிறுவயதில் நாம் விளையாடிய “business world” என்ற விளையாட்டு உங்களுக்கு நினைவிருக்கலாம்... அதில் சென்னை, டெல்லி, மும்பை என்று நகரங்களை விலைபேசி வாங்கும்போது நமக்கு கிடைத்த அந்த தற்காலிக ஒரு சந்தோசம் இருக்குமல்லவா, அதுதான் இங்கு கருத்துகள் கிடைக்கும்போதும் கிடைக்கும் அற்ப சந்தோசம்... இது ஒரு மாய உலகம், இதிலும் ஏன் அடுத்தவர் மீது காரணமற்ற போட்டி, காரணமில்லாத பொறாமை எல்லாம்....
ஆரம்ப காலத்தில் நான் கதை எழுதியபோது இப்படி விஷயங்களை நான் எதிர்கொள்ளவில்லை... ஆனால், அதன்பிறகு நான் வலைப்பூ தொடங்கியது நிறையபேருக்கு ஒரு பிடிக்காத விஷயமாகிவிட்டது.... “இதற்கு மேல் இவனை நாம பெரிய ஆளா ஆக்கிட கூடாது” என்று சிலர் எண்ணம் கொண்டு இருப்பதை உணரமுடிகிறது... கவலைப்படாதிங்க, இதற்கு மேல் நான் வளரனும்னா, என்னை வெளிப்படுத்தி ஆகணும்.... அது என்னால் முடியாது என்பதால், என் வலைப்பூவை தாண்டி நான் சென்றிட மாட்டேன்....
கே விஷயத்தை நான் ப்ரமோட் செய்வதாக ஒரு நண்பர் என்னை வசைமாரி பொழிந்தார்... ப்ரமோட் செய்து ஒருத்தனை நான் கே’வாக ஆக்க முடியாதுங்க... அது என்னால் மட்டுமில்ல, எப்பேற்பட்ட விஞ்ஞானியாலும் மாற்ற முடியாது...
எதற்காக இவ்வளவையும் சொல்ற?னு நீங்க கேட்கலாம்... இது நீண்டநாட்களாக என் மனதிற்குள் உறுத்திய ஒரு விஷயம்... காரணமே இல்லாமல், திடீர்னு என்னை புறக்கணிக்கும் நண்பர்களை நான் பார்க்கிறேன்.... ஒருவேளை அந்த “காரணமில்லாத” காரணத்திற்கு பின்னால் நான் சொன்ன காரணங்கள் இருந்தால், அதற்கு நான் பதில் சொல்ல வேண்டுமல்லவா?... அதற்குத்தான் இந்த விளக்கம்...
ஒருவேளை உங்களுக்கும் அப்படி ஒரு எண்ணமோ, கேள்வியோ இருந்தால் தயங்காமல் இங்க சொல்லுங்க.... அதற்கு பதில் சொல்ல வேண்டியது என் கடமை...
இப்போ கொஞ்சம் நிம்மதியா இருக்கு.... இதை நீங்கள் ஏற்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை, வழக்கம்போல இதையும் புறக்கணித்துவிட்டு போங்க.... ஆனால், என் தன்னிலை விளக்கத்தை கொடுத்த மனநிம்மதியோடு இப்போ நான் விடைபெறுகிறேன்......
ஹாய் விஜய், உங்கள் விளக்கம் பார்த்தேன் . நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை thn why are you feeling like this ?. சாதாரணமா ஒரு பரிசு வாங்கினாலே evn close frnds got jealous nd avoid us but உங்களுக்கு இவ்ளோ பாராட்டுக்கள் கிடைக்கும் போது இதல்லாம் சகஜம்தான்...உன்னை நிராகரிக்க முடியாதவர்கள்தான் உன்னை எதிர்க்கிறார்கள்....அப்பவே உங்கள் வார்த்தைகள் மதிக்க படுகிறது என்றே அர்த்தம் உங்களை தவறாக பேசி தங்கள் இயலாமையை மறைக்க பார்க்கிறார்கள்... வாழ்க்கையின் துன்ப விளிம்பில் இருக்கும் நண்பர்கள் பலரும் அவர்கள் வாழ்க்கைக்கான குழப்பம் தீர்க்க கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்வது என் கடமை... Proud of you vijay..மற்றவர்களின் சந்தோஷம் பகிரலாம் கஷ்ட நேரத்தில் ஆறுதலாக இருப்பது உயர்ந்த விஷயம் really those frnds are lucky to have you...(bcaz நம்பிக்கையான நண்பர்கள் இல்லாதவர்களுக்கு தான் அதன் அருமை புரியும் )...என் வாழ்க்கையில் உங்கள் எழுத்துகள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது ...first I thank you for vanishing my inferior complex...keep your rocking service...
வாழ்க்கையின் துன்ப விளிம்பில் இருக்கும் நண்பர்கள் பலரும் அவர்கள் வாழ்க்கைக்கான குழப்பம் தீர்க்க கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்வது என் கடமை.... Hats of to you vijay
இப்படி ஒரு பதிவை நீங்க போடுவீங்கன்னு நான் எதிர்பார்க்கல அண்ணா... முதலில் நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்.. முட்டாள்தனமாக உங்களைப் புண்படுத்தியவர்கள் பட்டியலில் இடம்பெற்றதற்காக..
எப்படியோ இத்தனை காலம் மனதுள் அடக்கி வைத்திருந்த கவலையை இறக்கிவைத்ததில் உங்கள் பாரம் குறைந்து இருக்கும் என நினைக்கிறேன். அந்த வகையில் மகிழ்ச்சி.
//ஆனால் ஒரு காரணமே இல்லாமல், அதை நானாக கேட்கும்வரை வெளிப்படுத்தவும் இல்லாமல் என்னை பற்றிய ஒரு பிம்பத்தை உருவாக்க காரணம் என்ன?...//
எங்கோ என்னைபோல ஒரு மூடன் காரணம் இல்லாமலோ அற்பக் காரணத்திற்காகவோ உங்களைப் பற்றி மனதுள் ஒரு தவறான கருத்தை ஏற்படுத்திக் கொள்வதைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? நீங்கள் எழுதும் கருத்துக்களின் காரணமாய் பிற்போக்கான எண்ணமும் ராட்சச குணமும் கொண்ட விலங்குகள் உங்களை எப்படியெல்லாம் சாடியிருக்கின்றன என்பது எங்களுக்குத் தெரியும். அதை நீங்கள் கண்டுகொள்வதில்லை என்பதும் அறிந்ததே.. அதேபோல என்னைப் போன்ற மூடர்கள் முடிவும் ஒருவகையில் பிற்போக்கானதே.. தன்னையே மையமாகக் கொண்டு சிந்திக்கும் மனப்போக்குடையவர்களின் பிற்போக்குத்தனம். இதையும் பொருட்படுத்தாதீர்கள்.
உங்கள் சுய அடையாளங்களை வெளிப்படுத்த இயலாததால் சிலரின் அதிருப்திக்கு ஆளாக நேரிட்டது என வருந்துகிறீர்கள். அப்படிக் கேட்பவர்கள் ஒன்று உண்மையிலேயே கயவர்களாகத் தான் இருப்பார்கள். அல்லது இன்னும் இந்த 'கே' சமூகத்தின் கோரமான முகத்தை உண்மையாய் அறியாதவராய் இருப்பார்கள். அவர்களே ஒருநாள் பட்டுத் தெளியும்போது உங்களைப் புரிந்துகொள்வார்கள். மற்றபடி, உண்மையாய் உங்கள் நட்பை நாடுபவர் உங்கள் உணர்வுகளையும் அச்சத்தையும் மதிக்கவே செய்வார்.
//சிலர் நான் இந்த கே விஷயத்தை வைத்து புகழ் பெறுவதாக நினைத்து பொறாமையால் பேசாமல் இருப்பதாக நண்பர் சொன்னார்.... கொஞ்சம் யோசிச்சு பாருங்க, இந்த புகழால் எனக்கு ஒரு ரூபாய் லாபம் உண்டா? என்று//
சமீபத்தில் ஒரு இதழில் வாசித்தது. உலகில் 18 நாடுகள் மட்டுமே மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் அவர்களை விட பணபலம் உடையவையாய் இருக்கின்றனவாம். ஆனால் அவரே ஒருமுறை பேட்டியில் கூறினார், தன்னிடம் இருக்கும் அளவற்ற பணத்தால் தனக்கு எந்தப் பயனும் இல்லை என்று. ஆனால் நமக்கு எது நினைவில் இருக்கும்? அவரின் பணம்தான். எப்போதும் இக்கரைக்கு அக்கரை பச்சை தானே.. வெற்றுக் காகிதமாய் உங்களிடம் இருக்கும் புகழ் மற்றவருக்கு பொன்னாகத் தான் தெரியும். அந்த செல்லாத புகழை அடையவும் நீங்கள் கொட்டும் உழைப்பு? அந்தக் கண்களுக்கு தெரியாது.
//கே விஷயத்தை நான் ப்ரமோட் செய்வதாக ஒரு நண்பர் என்னை வசைமாரி பொழிந்தார்... ப்ரமோட் செய்து ஒருத்தனை நான் கே’வாக ஆக்க முடியாதுங்க... அது என்னால் மட்டுமில்ல, எப்பேற்பட்ட விஞ்ஞானியாலும் மாற்ற முடியாது...//
ப்ரமோட் என்ற வார்த்தையிலேயே அவரின் அறியாமை தெரிகிறதே.. கே`யிசத்தை லைப் பாய் சோப்பு போல ஒரு வஸ்துவாகப் பார்ப்பவர்க்கு உங்கள் வார்த்தைகள் முட்டாள்தனமாகத் தான் தெரியும். சொரிநாய் இருக்கிறதே.. சுத்தமான உடை அணிந்து செல்பவனைப் பார்த்துக் குறைக்கும். அதைப் போலவே நாறும் இன்னொரு நாயைக் கண்டால்தான் உச்சிமுகர்ந்து (வேறு சிலவற்றையும் கூட) மெச்சிக்கொள்ளும்.
சாரி.. ரொம்ப சீரியஸா போய்டுச்சு..
இப்ப உங்க பிரச்சனைக்கு 'சூது கவ்வும்' விஜய் சேதுபதி ஸ்டைலில் ஐந்து அம்ச தீர்வு ஒன்னு சொல்றேன்..
1. இனிமே கதை, கட்டுரை, கழுதை எது எழுதவும் பேனாவ தொடாதீங்க..
2. ராத்திரி முழுக்க தூங்காம இருந்து உங்களுக்கு வர்ற PM, மெயில் எல்லாத்துக்கும் ரிப்ளை பண்ணி உங்க உடம்ப கேடுத்துக்குங்க. இல்லை வேலைய ரிசைன் பண்ணிட்டு பகல்ல இதப் பண்ணுங்க..
3. உங்க மொபைல் நம்பர், போட்டோ, அட்ரஸ், ரேசன் கார்டு, பால் கார்டு எல்லாத்தையும் போஸ்டர் அடிச்சு ஒட்டுங்க.
4. ஒரு 11 பேர் கொண்ட குழு அமைச்சு எல்லாரோட எல்லா போஸ்டுக்கும் கமென்ட் போடச் சொல்லி வேலைக்கு வையுங்க.
5. கழிசடைகளின் மனதை திருப்திப்படுத்த கண்ட கழிசடை வகையறா கதையையும் எழுதுங்க.
இதெல்லாம் முடியுற காரியமா? இல்லைல.. அப்ப நம்ம சூப்பர் ஸ்டார் சொல்ற தீர்வ பாலோ பண்ணுங்க. உங்க தனி வழியில போய்ட்ட்டே இருங்க.
நம்ம நண்பர் சீனிவாசன் ஏற்கனவே சொன்ன மாதிரி,
"Those who can understand you never expects an explanation. Those who expects an explanation can never understand you"
எம்மைப் போன்ற கூழாங்கற்களை எண்ணி வருந்தாதீர்கள். உங்களிடம் அருமையான வைரங்கள் இருக்கின்றன.
[ ஏதேனும் தவறாகக் கூறியிருந்தால் அனைவரும் மன்னிக்கவும். ]
@msvijay -- பொக்கிஷ வாசகர்.....விஜய் இந்த வார்த்தையை படிக்கும் போதும் கண்களில் கண்ணீர், நான் கொஞ்சம் செண்டிமெண்டல், உங்கள் கதைகளில் என் பிம்பத்தை காண்கிறேன், சிரிக்கிறேன், அழுகிறேன். மனசுக்கு ரொம்ப சந்தோசமாகவும் இதமாகவும் இருக்கும் உங்கள் கதைகள் தான் என் காதல் ரணத்திற்கு மருந்து...... நன்றி என்ற வார்த்தையோடு முடித்துக்கொள்ள விரும்பவில்லை, நான் உங்களுக்கு கடமை பட்டுஇருகிரென்.
-- Edited by just for fun on Friday 2nd of August 2013 03:15:46 PM
இப்போ கூட என்னை சரியா புரிந்துகொண்ட நண்பர்கள்தான் இங்க பதில் சொல்லி இருக்கீங்க... வழக்கம்போல நான் குறிப்பிட்ட நபர்கள் படித்தும் படிக்காததை போல சென்றதை உணர்கிறேன்....
ஒன்றை நான் தெளிவா சொல்றேன், நான் இங்க "மனம் திறந்துதான் சொல்றேன்" தவிர, "மனம் நொந்து சொல்லவில்லை" என்பதை நினைவில் கொள்ளுங்கள்.... நான் அவர்களை கண்டு கோபமோ, வெறுப்போ, கவலையோ படவில்லை.... சொல்லப்போனால், பரிதாபப்படுகிறேன்..... இன்னும் அவங்க வாழ்க்கையில் நிறைய விஷயங்களை சந்திக்குறப்போ, கண்டிப்பா அவங்களால அதை எளிதா அணுக முடியாது....
அவங்களுக்கு அந்த காலம் போதிய பக்குவத்தை தரவேண்டும் என்று நான் வணங்கும் இறைவனை பிராத்திக்கிறேன்.....
@ஸ்ரீனிவாசன், சாம்ராம்....
வழக்கம்போல இப்போதும் உங்களின் பக்குவமான பேச்சால் மனம் நெகிழ்ந்தேன்.....
@just for fun....
சமீப காலத்தில் எனக்கு கிடைத்த பொக்கிஷ வாசகர் நீங்கள்.... அது எப்போதும் தொடரும் என்பதில் எனக்கு எள்ளளவு சந்தேகமும் இல்லை....
@அரவிந்த்,
இந்த பையன்குள்ள என்னவோ இருந்திருக்கு பாரேன்.... அனேகமா இந்த பையன் போட்ட மிகப்பெரிய பதிவு இதுவாகத்தான் இருக்கும்..... அட லூசுப்பைய்யா, நான் எங்கே இங்க கவலைப்பட்டதா சொன்னேன்?.... சத்தியமா நீ சொன்னதால் எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை.... இருந்தாலும் அப்படி நினைக்கும் நபர்களுக்கு, விளக்கம் கொடுக்கும் பொருட்டே இந்த பதிவு.... அதனால் குழப்பிக்கொள்ளாமல் நிம்மதியா இரு....
@ராஜ்குட்டி....
என் வளர்ச்சியா?... நான் எங்கப்பா வளர்ந்தேன்?... உண்மையை சொல்லனும்னா, அவங்க அடிப்படை பொறாமையே தவறு....
உன்னுடைய இலக்கு மாங்காய் என்றால், நிச்சயம் நீ எரியும் கல் அந்த மாங்காயை எட்டி பிடிக்க முடியாது... அதே நேரத்தில் உன் இலக்கு சூரியனாக இருந்தால், குறைந்தபட்சம் நீ எரியும் கல் மாங்காவையாவது உனக்கு பெற்றுத்தரும்.... அதனால், அவங்க பொறாமைப்பட வேண்டியது எழுத்துலக ஜாம்பவான்களை பார்த்து.... என்னை போன்ற சுண்டைக்காய் ஆசாமிகளிடம் பொறாமை பட்டால், நிச்சயம் அவங்களால கடைசிவரை எழுந்திருக்கவே முடியாது......
லேப்டாப்பின் ஒரு ஏழரையால்.. தாமதமா ஆறுதல் படுத்த வந்தா... இங்க பெரிய பாசப் போராட்டமே நடந்திருக்கும் போல..
கண்டிப்பா.. என்ன தான் பெரிய ஆதங்கத்தோட நீங்க பதிவிட்டிருந்தாலும்.. ஒரு நொடியில எல்லாத்தையும் தொடச்சிட்டு.. நக்கலும் நையாண்டியுமா அடுத்த படைப்ப ரெடி பண்ணிடுவீங்கன்னு நல்லாவேத் தெரியும்.... எனக்கெல்லாம் எத்தன முறை ஆறுதல் சொல்லியிருப்பீங்க...
இப்ப விஷயம் என்னென்ன... இங்க வந்து விழுந்திருக்கற கமெண்ட்ஸ் பாத்து தான் நான் ரொம்ப எமோஷனல் ஆகறேன்..
“அன்பைத்தேடி” வாழ்வின் ஒரு அங்கமா மாறிகிட்டே இருக்கு... :)
இந்த மாதிரியான நேரத்துல தான்.. இந்த ஓனர் காணாம போயிடுவார்... பாவம்.. ஊர் தெரியாத ஊர்ல.. என்ன பண்றாரோ... :(
-- Edited by Rotheiss on Saturday 3rd of August 2013 01:30:16 PM
@பட்டாம்பூச்சி....
கனிவான கருத்திற்கு நன்றி தம்பி....
@just for fun....
உண்மைதான் நண்பா..... சிலரின் கருத்துகளை படிக்கும்போதே, அது மனதின் ஆழத்திலிருந்து வருவதை நாம் உணரமுடியும்... அப்படி பலமுறை உங்கள் கருத்துக்களில் நான் கண்டிருக்கிறேன்.... ரொம்ப நன்றி நண்பா...
@ரோத்திஸ் அண்ணாச்சி....
உண்மைதான் அண்ணாச்சி.... எவ்ளோ பெரிய சோகமா இருந்தாலும், அடுத்த நொடி அதை மறந்திடுவேன்..... அவ்ளோ அடி வாங்கிருக்கேன்..... இதிலிருந்தும் நான் மீண்டு ரொம்ப நேரமாச்சு....
@சிவாக்குட்டி....
ரொம்ப நன்றி நண்பா... நீங்கள் உண்மையை ஒப்புக்கொண்டதே பெரிய விஷயம்..... நீங்க என்ன காரணத்துக்காக அப்படி நினைத்தீர்கள்'னு சொல்ல முடியுமா?
I read ur first post of this thread.. but i haven`t read much of other conversations.. It portrays ur concern and and shows ur social attitude.. Hope u know that u can not be good to every one in this world.. expectation of people differs.. Try to convince ur followers else just ignore and go ahead.. I really wonder how u manage ur time to all these activities..
Hoping to learn time management from u.. just go ahead, if they really like u and ur words, they ll follow u without expectations..
நன்றி ஸ்ரீ ஹரி.... ஆரம்ப காலம் முதல், எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி கதைகளை படித்து நட்பை பேணும் உங்களை போன்ற நண்பர்களும் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்......
இன்று நான் படித்த வண்ணதாசன் அவர்களின் கருத்து ஒன்றை நான் இங்கே சொல்லணும்.....
எழுத்தாளர்களுக்கு,
### அங்கீகாரத்தையும், நிராகரிப்பையும் நான் பொருட்படுத்தி இருந்திருந்தால், நிச்சயம் நான் தொடங்கிய இடத்திலேயே தான் நின்றிருப்பேன் ###
வாசகர்களுக்கு,
### சில மரங்கள் பூக்கும், சில மரங்கள் காய்க்கும், சில மரங்கள் கனியாகும்.... பூக்கும் மரத்தில் கனி இல்லை என்று, அதனை புறக்கணித்தல் முட்டாள்த்தனம்.... எல்லா மரமும் நிழலை தரும் என்கிற உண்மையை புரிந்துகொள்பவன் மட்டுமே நல்ல வாசகன்.... அவனே, வாசிப்பதை கிரகிக்கும் தன்மை கொண்டவன் ###
//இது ஒரு மாய உலகம், இதிலும் ஏன் அடுத்தவர் மீது காரணமற்ற போட்டி, காரணமில்லாத பொறாமை எல்லாம்....// சரியாய் சொன்னீர்கள்.
காரணமில்லாது நம்மை விமர்சிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும் நாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தால்,24 மணி நேரமும் பதில் மட்டுமே சொல்லிக் கொண்டிருப்போம். எனவே, இப்படிப்பட்ட வார்த்தைகளை எல்லாம் மனதிற்கு கொண்டு செல்லாது, குறுநகையோடு முடித்துவிடுங்கள்.
@நெல்லை....
நீங்க முன்பு கேட்டது போல நேரடியா அவங்க கேட்டுட்டா பிரச்சினை இல்லைங்க, சிலர் வெளியில் சொல்லாமல் மனதிற்குள் கற்பனை செய்வது தான் பிரச்சினையா இருக்கு....
ரொம்ப நன்றி தம்பி.... உங்களை போன்ற வாசகர்கள் படித்து கருத்திடுவதுதான் எங்களுக்கு கிடைக்கும் வெகுமதி... அதனால், இனி கருத்திட்டு எங்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன்....
நீங்க சொல்ற நபர் இந்த தளத்தின் நிறுவனர் தான்..... சந்தேகம் வேண்டாம்..... தமிழ் மகிழ்வன் என்கிற பெயரில் முகநூலில் இருப்பார்....