(இது முழுக்க முழுக்க ஒரு கற்பனை நிகழ்வே.... இதில் நான் குறிப்பிட்டுள்ள நண்பர்கள் யாருக்கும், இந்த கலாய்ப்புகள் பிடிக்கவில்லை என்றால், தயவுசெய்து வெளிப்படையா சொல்லிடுங்க.... அடுத்தமுறை நிச்சயம் உங்கள் பெயரை பயன்படுத்த மாட்டேன்.... கலாய்ப்புகளை ஜாலியாக எடுத்துப்பாங்கன்னு நான் நினைத்த சிலரை வைத்தே இந்த கற்பனையை நான் வடித்துள்ளேன்... அதனால் ஒன்னும் பிரச்சினை இல்லை என்றே நினைக்கிறேன்).....
சரி, வாங்க விஷயத்துக்கு போகலாம்.....
ஒரு புதுமுக இயக்குனர் படம் இயக்குவதற்காக நம் தளத்தில் உள்ள சில எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல் வைக்கிறார்.... இங்கு நம்மிடம் கதை பேசிய எழுத்தாளர்கள், இயக்குனருக்கு என்ன சொல்ல போகிறார்கள்? என்ற ஒரு சிறு கற்பனை நிகழ்வு இது....
இயக்குனர் : வணக்கம் நண்பர்களே!... இந்த “வம்பைத்தேடி” தளத்துல இருக்குற உங்கள மாதிரி ஜீனியஸ் (@#$%^&*&&^%$) எழுத்தாளர்கள் கிட்ட ஸ்டோரி டிஸ்கசன் வைக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு....
போத்திஸ் அண்ணாச்சி : சரி சரி... முதல்ல கதையோட கரு என்ன? சொல்லுங்க... எனக்கு அல்ரெடி நேரமாச்சு....
இயக்குனர் : கரு ஒன்னும் புதுசு இல்லைங்க... இப்போலாம் பழைய கதைகளை ரீமேக் பண்றதுதான் ட்ரெண்டு... ராமாயணத்தை “ராவணனா” ஆக்குனர் மணி, இப்போ பொன்னியின் செல்வனை எடுக்க போறாராம்... அது மாதிரி நான் சொல்ல போற கதை, “பாட்டி வடை சுட்ட கதை”....
பர்வின் : சூப்பர்’ங்க... கலக்கிடலாம்.... நம்ம ஹீரோ ஒரு விண்வெளி விஞ்ஞானி... மிகப்பெரிய ரகசியத்தை தெரிஞ்சுக்க யாருக்கும் தெரியாம நிலாவுக்கு போறார்...
இயக்குனர் : யோவ்! யோவ்!... இருய்யா..... நம்ம கதை பாட்டி வடை சுடுறதை பத்தி... அதுக்கும் நீ சொல்றதுக்கும் என்ன சம்மந்தம்?...
பர்வின் : லூசு மாதிரி பேசாதிங்க சார்... நிலாவுல யார் இருக்குறது?
இயக்குனர் : யாரு? (தலையை சொறிகிறார்)
பர்வின் : நிலாவுல ஒரு பாட்டி ரொம்ப வருஷமா வடை சுட்டுட்டு இருக்குறதா எங்க பாட்டி சொல்லிருக்காங்க... அந்த பாட்டிய வச்சுதான் நம்ம கதை... அந்த பாட்டி சுட்ட வடையை காணும்னு தான் நம்ம ஹீரோ, டிடெக்டிவ் ஏஜென்ட்டா போறார்....
இயக்குனர் : அய்யய்யோ!... ஆரம்பமே ரணகளம் பன்றியேப்பா!... என்னோட கதையோட பட்ஜெட் ரொம்ப குறைவு... நீலாங்கரை தாண்டினா கூட பட்ஜெட் இடிக்கும், நீ நிலா வரைக்கும் போக சொல்றியேப்பா....
போத்திஸ் : டென்ஷன் ஆகாதிங்க டைரக்டர் சார்.... அந்த பாட்டியோட கணவன் ஐம்பது வருஷம் கழிச்சு தன் மனைவியை பாக்குறதுக்கு ஹைதிராபாத் போறாரு....
இயக்குனர் : ஏன் சம்மந்தமே இல்லாம ஹைதிராபாத் போறாரு?
போத்திஸ் : எனக்கு ஆந்திரா பிரியானின்னா ரொம்ப பிடிக்கும் சார்... அதான்...
இயக்குனர் ; பிரியாணி வேணும்னா நான் வாங்கித்தரேன், கதையை முதல்ல சொல்லுங்க...
போத்திஸ் ; அந்த தாத்தா எக்மோர் ஸ்டேசன்’ல ஏறினது முதல், அங்க நடக்குற விஷயங்களை மட்டும் மூணு மணி நேரம் காட்டுறோம்....
இயக்குனர் : அட ஆண்டவா!... படமே ரெண்டரை மணி நேரம்தான்பா...
போத்திஸ் : அங்கதான் நான் ட்விஸ்ட் வச்சிருக்கேன்... பாட்டிய பாக்குறதுக்கு முன்னாடியே முதல் பார்ட்டை முடிச்சிடுறோம்... பாட்டியை தாத்தா பாப்பாரா? இல்லையா?னு ரெண்டாவது பார்ட்டில்தான் சொல்றோம்.... அதுவரை ஆடியன்ஸ் தலைய பிச்சுகிட்டு அலையுறாங்க...
இயக்குனர் ; ஆடியன்ஸ் தலைய பிச்சுக்கறாங்களோ இல்லையோ? நான் நிச்சயமா படம் எடுத்து முடிக்குறதுக்குள்ள அப்டிதான் ஆகப்போறேன்... அஜய் நீங்க சொல்லுங்க, கதை எப்டி போகலாம்?...
அஜய் : போத்திஸ் அண்ணாச்சி சொன்ன மாதிரியே நாற்பது வருஷம் கழிச்சு அந்த பாட்டிய பாக்கப்போறார் நம்ம தாத்தா... போற வழியல்லாம் பாட்டியோட சின்ன வயசுல தாத்தா டூயட் பாடின விஷயங்களை சொல்றோம்...
இயக்குனர் : வாவ்... சூப்பர்... அப்புறம்....?
அஜய் : ஒருவழியா பாட்டிய தாத்தா பாக்கப்போற அந்த நேரத்துல மியூசிக் அலறுது.... பாட்டிய கட்டி பிடிக்கிறார் தாத்தா... யாரும் எதிர்பார்க்காத நேரத்துல அந்த பாட்டியோட கழுத்தை நெரிச்சு கொன்னு போட்டிடுறார் தாத்தா....
இயக்குனர் : யோவ்... பாட்டி வடை சுடுற கதை சொல்ல சொன்னா, நீ திகில் கதையா சொல்றியே.... குழந்தைகள் பாக்குற படம்யா இது....
தாஜ்குட்டி : இங்க யாருக்கும் கதை சொல்லவே தெரியல சார்.... படத்தோட பெயர் “இரட்டைக்கிளவி”...
இயக்குனர் : யோவ் படத்துல ஒரு கிழவிதான்யா இருக்கு... இன்னொரு கிழவி எங்க?
தாஜ்குட்டி : அதுதான் படத்தோட சஸ்பென்ஸ்.... படம் முடியுற வரைக்கும் அந்த கிழவி யாருன்னு சொல்லப்போறதில்ல.... படம் முடிஞ்சவுடன் ஒரு விளக்கம் கொடுக்குறோம்.... இது நீங்க நினைக்குற மாதிரி “இரட்டை கிழவி” இல்லை... அது “இரட்டைக்கிளவி”... “சலசல, தகதக” போன்ற வார்த்தைகள் பிரித்தால் பொருள் வராது, அப்படிப்பட்ட வார்த்தைகளுக்கு பெயர் இரட்டைக்கிளவி... அதுபோல அந்த பாட்டியிடம் இருக்கும் வடையை யாராலும் பிரிக்க முடியாதுன்னு சொல்றோம்....
இயக்குனர் : யோவ் படம் பாக்க வர்றவங்களுக்கு இலக்கணம் கிளாஸ் எடுக்க சொல்றியா?....
வம்பைத்தேடி : இலக்கணம் கற்காத தமிழனுக்கு தலைக்கனம்....
இயக்குனர் : இது யாரு புதுசா?.. அவர்பாட்டுக்கு வந்தாரு, சொன்னாரு, இப்போ வெளில போய்ட்டாரு....
பர்வின் : அவருதான் ஓனர்... இப்டி வருவாரு, ஒரு பன்ச் சொல்லிட்டு போயிடுவாரு... இனி அடுத்த மாசம்தான் வருவாரு....
இயக்குனர் : என்னய்யா, வீட்டு வாடகை வாங்க வர்ற வீட்டு ஓனர் மாதிரி சொல்ற?... சரி அதைவிடு... தாஜ்குட்டி, நீங்க மேற்கொண்டு சொல்லுங்க... இலக்கணம் பத்தி கடைசியா பாத்துக்கலாம்...
தாஜ்குட்டி : நம்ம கதை நடக்குற களம் கச்சத்தீவு... கடலுக்கு நடுவுல இருக்குற தீவு...
இயக்குனர் : அப்பா சாமி!.. ஏற்கனவே கச்சத்தீவு பிரச்சினைல கவர்மன்ட்டே உருளுது... என்னையும் வம்புல மாட்டி விட்ராத... நம்ம கதைக்கும் கடலுக்கும் என்னய்யா சம்மந்தம்?...
தாஜ்குட்டி : இருக்கே.... நம்ம பாட்டி சுடுற வடை என்ன வடை?
இயக்குனர் : என்ன வடை?
தாஜ்குட்டி : ஆமை வடை....
இயக்குனர் : சரி அதுக்கு என்ன?
தாஜ்குட்டி : என்ன சார் லூசுத்தனமா பேசுறீங்க?... ஆமை எங்க இருக்கும்?... கடல்ல... அதான் நம்ம கதையும் கடல்ல நடக்குற மாதிரி வச்சிருக்கேன்.... ஆமையை பற்றி வள்ளுவர் என்ன சொல்லிருக்கார் தெரியுமா?....
இயக்குனர் : போதும்..... நீ சொன்னதே எனக்கு தலை சுத்துது....
அஜய் : சரி சார் கோவம் வேண்டாம்... நம்ம கதைல செண்டிமெண்ட் மசாலா போட்டு தாளிக்கிறோம்....
இயக்குனர் : எப்டி?... அந்த கிழவிய கொன்னிடுவ, தாத்தா தற்கொலை பண்ணிப்பார்... மொத்த குடும்பமும் டமால்....
அஜய் : சார்... நீங்க ப்ரில்லியன்ட்.... எப்டி சார் நான் நினச்ச கதையை அப்டியே சொல்றீங்க?... ஆனால், இன்னும் ரெண்டு பேரை நீங்க மறந்துட்டிங்க...
இயக்குனர் : அது யாரு?... புரியுது... நானும் தயாரிப்பாளருமா?... எப்டியும் படம் வர்றதுக்கு முன்னாடியே எங்க கதையும் அப்டி ஆகிடும்னு நினைக்குறேன்....
அஜய் : இல்ல சார்..... காக்கா, நரி... இதை ரெண்டையும் மறந்துட்டிங்களே?
இயக்குனர் : சொல்லு... அதையும் சொல்லு... அதுகளையாவது உயிரோட விட்டுடுவியா?
அஜய் : காக்கா கரண்ட் கம்பத்துல மாட்டி செத்திடும், நரி இதை பாத்த அதிர்ச்சில ஹார்ட் அட்டாக் வந்து நுரை கக்கிடும்....
பர்வின் : ஏன் அண்ணா இவ்ளோ சோகமான முடிவு?...
அஜய் : சரி... நரியை விட்டுடலாம்... அது ஜாலியா பாத்ரூம் போகுது...
பர்வின் : அந்த இடத்துல நம்ம புத்ராவ இறக்குறோம்....
அஜய் : ச்சி ச்சி... பாத்ரூம் போற இடத்துலையா?
பர்வின் : இல்லைண்ணா.... கதைல அந்த இடத்துல....
அஜய் : அது யாரு புத்ரா?.. ஆள் எப்டி இருப்பான்?... அவனை செட்யூஸ் செய்ற மாதிரி ஒரு பிட்டு சொருகுவோமா?
பர்வின் : ஐயோ அது ரோபோ... மித்ராவோட தம்பி புத்ரா... மறந்தாச்சா?
அஜய் : கதைல ரோபோவுக்கு என்ன சம்மந்தம்?...
பர்வின் : இவ்ளோ நேரம் நீங்க சம்மந்தத்தோடதான் கதை சொன்னிங்களா?... அதல்லாம் எனக்கு தெரியாது, கதைக்குள்ள புத்ரா வந்தே ஆகணும்...
போத்திஸ் : அங்க என்ன சத்தம்? அங்க என்ன சத்தம்?.... ஏன் சண்டை போடுறீங்க?... எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா? (கண் கலங்குகிறார் அண்ணாச்சி)
பர்வின் : கஷ்டமா இருந்தா அந்த சேர்’ல உட்காருங்க அண்ணாச்சி...
போத்திஸ் :என்னப்பா கிண்டலா?... பாவம் நம்ம டைரக்டர்... நம்மள நம்பி வந்திருக்காரு... கதையை தாஜ்குட்டி சொல்ற மாதிரி கச்ச்சதீவுல வச்சுக்கலாம், நான் சொன்ன மாதிரி ட்ரெயின்ல முதல் பாதிய ஓட்டிடலாம்... அஜய் சொன்ன மாதிரி அந்த பாட்டி மர்டரை வச்சுக்கலாம்... அதை கண்டுபிடிக்க நம்ம பர்வின் சொன்ன மாதிரி புத்ராவ வச்சுக்கலாம்.... அவ்ளோதான் ப்ராப்ளம் ஓவர்.... பீ ஹேப்பி....
எல்லோரும் அவரவர் பேசிக்கொண்டு இருக்கும்போது, இயக்குனரின் காதுகளுக்குள் வித்தியாசமான சத்தங்கள் ஒலிக்க தொடங்கின.... கண்கள் இருட்டி, அந்த நாற்காலியில் மயங்கி விழுந்துவிட்டார்.... அப்புறம் என்ன ஆச்சு?... இன்னும் சில புது கதாபாத்திரங்களோடு அடுத்த அத்தியாயத்தில் சொல்றேன்.....
super...vijay ...அஜய் : காக்கா கரண்ட் கம்பத்துல மாட்டி செத்திடும், நரி இதை பாத்த அதிர்ச்சில ஹார்ட் அட்டாக் வந்து நுரை கக்கிடும்....ha ha ha....I enjoyed it...நவரச எழுத்தாளர் ஆகிட்டு இருக்கீங்க....keep it up
##தாஜ்குட்டி : என்ன சார் லூசுத்தனமா பேசுறீங்க?... ஆமை எங்க இருக்கும்?... கடல்ல... அதான் நம்ம கதையும் கடல்ல நடக்குற மாதிரி வச்சிருக்கேன்.... ஆமையை பற்றி வள்ளுவர் என்ன சொல்லிருக்கார் தெரியுமா?....
இயக்குனர் : போதும்..... நீ சொன்னதே எனக்கு தலை சுத்துது....###
//எல்லோரும் அவரவர் பேசிக்கொண்டு இருக்கும்போது, இயக்குனரின் காதுகளுக்குள் வித்தியாசமான சத்தங்கள் ஒலிக்க தொடங்கின....//
விஜய் அண்ணா கதைன்னா கொலை கண்டிப்பா இருக்கும். இந்த வரியைப் படிக்கும்போது அப்படி விழற முதல் கொலை இந்த இயக்குனர்தான்னு நினைக்குறேன்... பாவம் யார் பெத்த பிள்ளையோ..
குறிப்பு:
இந்த தளத்தின் கதாநாயகன், பன்ச் சூறாவளி அன்பைத்தேடி (தமிழன்) அவர்களைப் பற்றி சும்மா ஒரு வரியில் மட்டும் கலாய்த்துவிட்டு எழுத்தாளர் விட்டுவிட்டதன் பின்னணியில் இருக்கும் அரசியல் சதியை விசாரித்து, லஞ்சப் பணம் ஏதும் கைமாறியதா என்று உறுதிசெய்ய, சிறப்புப் புலனாய்வு படை இயக்குனர் samram அவர்கள் விசாரணை மேற்கொள்வார் என்பதை இந்தத் தருணத்தில் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
"கதறக்கதற கலாய்ப்போம்....." - கற்பனை சந்திப்பு....
அஜய் : ஒருவழியா பாட்டிய தாத்தா பாக்கப்போற அந்த நேரத்துல மியூசிக் அலறுது.... பாட்டிய கட்டி பிடிக்கிறார் தாத்தா... யாரும் எதிர்பார்க்காத நேரத்துல அந்த பாட்டியோட கழுத்தை நெரிச்சு கொன்னு போட்டிடுறார் தாத்தா....
தாஜ்குட்டி : இங்க யாருக்கும் கதை சொல்லவே தெரியல சார்.... படத்தோட பெயர் “இரட்டைக்கிளவி”...
இயக்குனர் : யோவ் படத்துல ஒரு கிழவிதான்யா இருக்கு... இன்னொரு கிழவி எங்க?
தாஜ்குட்டி : அதுதான் படத்தோட சஸ்பென்ஸ்.... படம் முடியுற வரைக்கும் அந்த கிழவி யாருன்னு சொல்லப்போறதில்ல.... படம் முடிஞ்சவுடன் ஒரு விளக்கம் கொடுக்குறோம்.... இது நீங்க நினைக்குற மாதிரி “இரட்டை கிழவி” இல்லை... அது “இரட்டைக்கிளவி”... “சலசல, தகதக” போன்ற வார்த்தைகள் பிரித்தால் பொருள் வராது, அப்படிப்பட்ட வார்த்தைகளுக்கு பெயர் இரட்டைக்கிளவி... அதுபோல அந்த பாட்டியிடம் இருக்கும் வடையை யாராலும் பிரிக்க முடியாதுன்னு சொல்றோம்....
@பிரவீன், ரோத்திஸ் அண்ணாச்சி, பட்டாம்பூச்சி, bad guy, சிவாக்குட்டி, கவிதன்....
ரொம்ப நன்றி நண்பர்களே...... இப்டி பாராட்டி என் காலில் சலங்கையை காட்டிவிட்டீர்கள், இனி நடக்கப்போகும் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல....
@chathero...
எவ்வளவு நாளா உங்களுக்கு என்மேல இந்த காண்டு?.... விகடன்'ல வர்ற லூசுப்பையன்னு சொல்லுங்க, நீங்க பாட்டுக்கு "லூசுப்பையன் மாதிரி இருக்கு"ன்னு சொல்லிட்டா, அப்புறம் பாக்குற ஆளுங்க என்னைய ஒரு மாதிரி பாக்குறாங்க.... நன்றிப்பா...
@ராஜ்குட்டி, அர்விந்.....
நான் நினைத்தபடியே இதை நீங்க ரெண்டு பேரும் ஜாலியா எடுத்துக்கொண்டமைக்கு நன்றி.... இன்னும் கொஞ்சம் டேமேஜ் பன்னிருக்கலாமோ;னு நான் யோசிக்குற அளவுக்கு உங்க சப்போர்ட் என்னை பெருமைப்பட வைத்துவிட்டது..... ரொம்ப நன்றி...
தம்பி அர்விந், என்ன சின்னப்புள்ளத்தனமா விசாரணை எல்லாம் வச்சுகிட்டு?..... நாங்கல்லாம் குடிக்குற தன்ணிக்கே கோர்ட்டு வரை போற ஆளுக (காவிரி பாசனத்து ஆளுங்க), எங்கிட்டயே விசாரணையா?..... என்மேல கமிஷன் வச்சா, ஆடிப்பெருக்குக்கு காவிரில தண்ணி ஓடாது, ரத்தம்தான் ஓடும்..... ஹ ஹ ஹா ஹா ஹா (வில்லன் சிரிப்பு!)....
முதல்ல இந்த விஷயத்துக்கு நான் கற்பனை செய்தது தமிழன், சாம்ராம், பட்டாம்பூச்சி மூவரையும் சேர்த்துதான்.... ஆனால், இந்த ஓவர் டோஸ் அவங்க மனசை புண்படுத்திடுமோ'ன்னு பயந்துதான், "எவ்வளவு அடிச்சாலும் தாங்குற" என் உடன் பிறப்புகளோடு நிறுத்திட்டேன்.... ஒருவேளை உங்களால இந்த வலியை தாங்க முடியும்னா சொல்லுங்க, அடுத்த ஆட்டத்துல "டர்ர்..." ஆக்கிடலாம்...
Enna paatha ungalukku kudava seriouseana person ah theriyudhu..!?? Once upon a time i'm also a prankster..! so neenga kalaaicha badhilukku naanum ungala lalaaikka poren thats it...!
இன்னொரு விஷயத்தை சொல்லிக்கறேன்.... இங்க பெரும்பாலானவங்க என்னை "அண்ணன்"னு சொல்றீங்க, நானும் அதை வரவேற்கிறேன்.... என்னை அண்ணன்னு சொல்ற நீங்க எல்லோருமே அவரவரும் அண்ணன் தம்பிகள் தான்னு நினச்சுக்கொங்க.... நான் சொல்றது புரியும்னு நினைக்கிறேன்......
ஓ!... இந்த பையனுக்கு மிஷின் பத்தியே படிச்சு, மூளை ஒரு மூலையில் ஒதுங்கிடுச்சு போல.....
அதாவது என்னை "அண்ணன்"னு சொல்ற எல்லோருமே, அவரவரும் அண்ணன் தம்பிகள்'னு சொல்றேன்..... அதாவது, இந்த ரூபன்'னு பெயர்ல வந்திருக்கும் என் முதல் தம்பி தான் உங்க எல்லாரோட இரண்டாவது அண்ணன்.... மாமியா மேல சத்தியம் பண்ற அர்விந்த் தம்பி, குட்டி தம்பி கவிதனோட அண்ணன்.... இப்டி எல்லோரும் அண்ணன் தம்பியா, அங்காளி பங்காளியா பழகுங்கன்னு சொன்னேன்.... இப்போ புரிய்தா?
ஹிஹிஹீ .. நல்லாவே புரியுது.. அதனாலதான் நான் எல்லாரையும் 'நண்பர்களா' பாவிக்கிறேன்; நண்பர்கள் என்றே அழைக்கிறேன். மத்த தம்பிகள் எல்லாம் நல்லா மாட்டிக்கிட்டாங்க!!
@chathero....
ஹ ஹ ஹா..... க க க போ..... இந்த பசங்கல்லாம் அவங்க வயச குறைச்சு காண்பிக்க, என்னைய அண்ணன்னு கூப்பிட்டாங்க..... ஒரு விஷயம் தெரியுமா, எனக்கு சமீபத்தில் மின்னஞ்சல் செய்த ஒரு நண்பர் "அண்ணா"னு சொல்லி அனுப்பினார்.... நேற்றுதான் தெரிந்தது அந்த தம்பியின் வயது 44 என்று.... 27 வயது அண்ணனுக்கு 44 வயது தம்பி இருக்கிறது இங்க மட்டும்தான்.....
@arvin....
காவி வேஷ்டியா?.... நீ எந்த நோக்கத்துல அதை கேட்குறன்னு தெரியுதுப்பா...... நித்திக்கு "சீடர்கள் தேவை"னு விளம்பரம் பார்த்தேன்..... அங்க ஐக்கியமாக, ஒரு காவி வேஷ்டி வேணும், அதுக்கு நான்தான் கிடைச்சேனா?.....