நண்பர்களுக்கு வணக்கம், நான் இங்கு தினமும் வந்து போனாலும் அதிகம் COMMENT செய்வதில்லை. ஆனாலும் இங்கு பலரது கதைகளை படிக்கும்போது எல்லோரும் திருச்சிஇல் வந்து சேர்கின்றனர். திருச்சியை பற்றி நண்பர் விஜய் கதைகளில் அதிகம் ரசித்திருக்கிறேன். இதை எல்லாம் படிக்கும்போது திருச்சி மீது அன்பும் கொஞ்சம் காதலும் வருகிறது. திருச்சி பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆசை ...... சொன்னால் கேட்பதற்கு ஆவலாய் இருக்கிறேன்.....
@just for fun....
ரொம்ப நன்றி.... எதற்காக இந்த நன்றி?ன்னா... தெரியல.... ஆனால், திருச்சியை பற்றி உங்கள் மனதில் ஒரு நல்ல பிம்பத்தை நானும் மற்ற எழுத்தாளர்களும் உருவாக்கியதை நினைத்து நான் ரொம்ப மகிழ்கிறேன்... உண்மைதான், நிறைய கதை எழுதுபவர்களின் முதல் சாய்ஸ் "திருச்சி" தான்... அவரவருக்கும் தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம்.... நான் ஏன் திருச்சியை பிரதானப்படுத்துறேன்?னு எனக்கான விளக்கத்தை இப்போ சொல்றேன்...
ஒவ்வொரு நபருக்கும் தத்தமது சொந்த ஊர்தான் முதலில் பிடித்த ஊராக இருக்கும்... அதற்கு நானும் விதிவிலக்கல்ல... அந்த சொந்த ஊருக்கு அடுத்ததாக என்னை நேசிக்க வைத்த ஊர் திருச்சி (என் சொந்த ஊர் திருச்சி அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்)... சிறுவயது முதலே ஒரு உணர்வு பூர்வமான ஒரு உறவை எனக்குள் உண்டாக்கிய ஊர்.... மற்றவர்கள் சொல்வதை போல "மலைக்கோட்டை, திருவரங்கம், காவிரி" என்ற இயல்பான காரணங்கள் எனக்குள்ளும் இருந்தாலும், அதையும் தாண்டிய ஒரு உணர்வு திருச்சி மீது இருக்கும்...
என் வாழ்வின் பல திருப்புமுனைகளுக்கும் காரணமான ஒரு முக்கியமான ஊர்..... நிச்சயமா திருச்சிக்குள் நுழையும் ஒவ்வொருவரும் அதன் அழகை ரசிக்க தவற மாட்டிங்க.... நாகரிக நரகன் இன்னும் ஆக்கிரமிக்க முடியாத, அதே நேரத்தில் காலத்திற்கு ஏற்ற அளவில் தன்னை நிர்மாணித்துள்ள நகரம்...
"இதுதான் திருச்சியோட அழகு"னு நாம ஒரு எல்லைக்குள் அடக்கிட முடியாத அளவுக்கான அழகியல் நிறைந்த ஊர்....
அங்கு நுழையும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் சொந்த ஊர் உணர்வை கொடுத்திடும் என்பது மட்டும் உறுதி... தமிழகத்தின் மையமான ஊர், வரலாற்று சிறப்புமிக்க ஊர்..... சோழ பேரரசின் தலைநகராக உறையூர் இருந்ததை நாம் மறக்க மாட்டோம்... காவிரியின் செழிப்பை நாம் திருச்சியின் சுற்றுவாட்டாரங்களில் காணமுடியும்... ஊருக்குள் நுழைபவர்கள் நிச்சயம், காவிரியை தரிசிக்க மறக்க மாட்டீர்கள்.... அதுவும் நாமக்கம் முதல் திருச்சி வரை, சாலையோரத்தில் வாய்க்கால் வழியே பாயும் காவிரி, பயணம் செய்வோரை குளிர்வித்து அனுப்புவாள்.... திருச்சி வட்டார வழக்கு தான் இன்றைக்கு தமிழகத்தின் பிரதான வழக்காக இருக்கிறது.... மொழியை அழகாக கையாளும் வட்டார வழக்கு எங்கள் திருச்சி வழக்கு....
என் குருநாதர் "சுஜாதா"வின் பெரும்பாலான கதைகள் கூட திருச்சி புகழ் பாடியபடிதான் இருக்கும்... அதுவும் கூட எனக்கு திருச்சி மீது இன்னும் அதிக காதலை உண்டாக்க ஒரு காரணமாக இருக்கலாம்....
நிச்சயம் நான் சொல்வதைவிட, திருச்சிக்கு நீங்க வந்து அதன் அழகை ரசித்தால்தான் இன்னும் நிறைய தெரிந்துகொள்ள முடியும்...
"திருச்சியை ரசிக்கலாம் வாங்க...."னு உங்க எல்லோரையும் ஒரு "திருச்சி தாசன்"ஆக அன்போடு அழைக்கிறேன்....
ஹோட்டல் ராஜசுகம் லிமிடட் மீல்ஸ் 45 ரூபாய் மட்டுமே என்றாலும் சுகமாய் இருக்கும்,திருச்சியில் நான் இருந்தால் மதிய உணவு கண்டிப்பாக அங்கேதான், சாராதாஸ் கடைக்கு அருகே ஒரு கடையில் காபி தேவாமிர்தமாய் இருக்கும்,