“ஓரின ஈர்ப்பு பற்றிய கதைகள் என்றாலே.. அது பதின்ம வயது.. கூடிப்போனால்.. இருபதுகளின் தொடக்கத்தில் இருப்பவர்களைப் பற்றித் தான் இருக்க வேண்டுமா?.. குடும்ப வற்புறுத்தல் அல்லது சூழ்நிலை காரணமாக திருமண பந்ததினுள்.. பின் அதன் தொடர்ச்சியாக குடும்ப உறவுக்குள் ஆட்பட்டுக்கொண்டவர்கள் பற்றி இருக்காதா..?”
" EN PONTROR NILAIMAI PATRI EZHUTHUVATHAI VARAVERKIREN", MIKKA AVALUDEN KATHTHUKONDIRUKKINTREN, VAZHYHUKKAL
-- Edited by sinehidhan on Thursday 25th of July 2013 01:15:20 PM
ஓர்குட்டில்.. YACI பதிவிட்டு நிறைவு செய்து.. “அக்கடா” என்றிருந்த நேரம் அது.. ஒரு வாசக நண்பரிடமிருந்து ஒரு வேண்டுகோள்..
“ஓரின ஈர்ப்பு பற்றிய கதைகள் என்றாலே.. அது பதின்ம வயது.. கூடிப்போனால்.. இருபதுகளின் தொடக்கத்தில் இருப்பவர்களைப் பற்றித் தான் இருக்க வேண்டுமா?.. குடும்ப வற்புறுத்தல் அல்லது சூழ்நிலை காரணமாக திருமண பந்ததினுள்.. பின் அதன் தொடர்ச்சியாக குடும்ப உறவுக்குள் ஆட்பட்டுக்கொண்டவர்கள் பற்றி இருக்காதா..?”
“அதற்கெல்லாம் எனக்கு அனுபவம் போதாது.. தவிர என் நோக்கமும் அது இல்லை” என்று மறுதலித்து விட்டேன்..
ஆனாலும் ஒரு எண்ணம்.. அனுபவம் என்பது சுயமாக அனுபவித்து தெரிந்தால் தானா..? பிறரது அனுபவங்களும்.. ஒரு வகையில் நமக்கு படிப்பினை தானே.. என்று தோன்றியது.. விளைவு.. பாகம் இரண்டு எழுதத் தூண்டியது..
மேற்படி நண்பரது வேண்டுக்கோளுக்கிணங்க மற்றொரு காரணமும் உண்டு.. ஆரம்பத்தில்.. படு கிளுகிளுப்பாக இருந்த கதை.. நண்ப்ர் விஜய் விக்கியின் (msvijay) கருத்துக்கிணங்க.. காதல் பாதையில் பயணிக்கத் தொடங்க.. பெருவாரியான “ஓர்குட்” வாசகர்களின் “எதிர்பார்ப்பை”ப் பூர்த்தி செய்யத் தவறியது.. ஆனாலும் கேள்வி கேட்ட அந்த நண்பர் கதை நெடுகிலும் என்னோடு பயணித்து.. ஆதரவு நல்கினவர்.. ஆகையால் அவரது கூற்றுக்கு மதிப்பளித்து செவிசாய்க்க வேண்டியது அவசியம் என்றேத் தோன்றியது.
இரண்டாம் பாகம் பதிவிட்ட சில நாட்களுக்குள்ளாக ஏற்பட்ட சில விரும்பத்தகாத காரணங்களால் என் பயனர் கணக்கு,கதைகள்,பதிவுகள்,லொட்டு லொசுக்கு என்று அனைத்தையும் நீக்கும்படி நேர்ந்தது.. மீண்டும் “ஓர்குட்”டில் பதிவு செய்ய ஒப்பவில்லை.. “அன்பைத்தேடி”யில் பதிவிடலாம் என நினைக்கிறேன்.
கதை என்பதையும் தாண்டி.. தற்கால.. LGBT சார் விஷயங்களை எனக்குத் தெரிந்தவரை தொட்டுச் செல்லலாம் என்று எண்ணம்..
மீண்டுமொரு முறை.. ஆதரவு நல்கும்படி கேட்டுக் கொள்கிறேன்..
பி.கு: வாசித்ததோடு நின்று விடாமல் தங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டங்களின் வாயிலாகத் தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.
நானும் யோசிச்சிருக்கேன்,காதலர்கள் சேரும்/பிரியும் வரை தான் கதை நீடிக்கிறது,அதற்க்கு மேல் அவர்கள் மேற்கொள்ளும் வாழ்வு பற்றி ஏன் எழுதுவதில்லை என்று.......
அவள் இப்படியெல்லாம் கூட பேசுவாள் என்று என் பையன் பிறந்த பிறகு தான் தெரிந்தது... எப்பவேணும்.. அதை சொல்லிக் காட்டினால்.. அதற்கும் கத்துவாள்..
“ஏன்னா... ஒரு MCP மாதிரி நடந்துக்கறேள்..?! பொம்மனாட்டி ஆம்படையானுக்கு அடங்கிப் போகணும்னு ஒண்ணும் சட்டமில்லையே.. ?”
ஆனால் அப்படியெல்லாம் அவள் கேட்கும் படிக்கு நான் ஒன்றும்... அவள் சொல்வது போல... Male Chauvinist Pig இல்லை.. ! கல்யாணமாகி இந்த ஐந்து வருடத்தில் “டி” போட்டுக் கூட பேசினதில்லை.. எனக்குத் தெரிந்த வரை சமதையாகத்தான் நடத்தியிருக்கிறேன் என் சகதர்மிணியை.. !
அன்று முரளி.. இண்டியா வரவிருந்தான்.. போன முறை போபால் சென்று.. பின் எங்களை பார்க்க வந்தவன்.. இந்த முறை கொழும்பு வந்து கனெக்டிங் ஃப்ளைட் பிடித்து நேரடியாக பெங்களூர் வருகிறான்.. காரணம்.. சஸ்பென்ஸாம்...!
அவனை வரவேற்பதற்காக நாங்கள் முன் தினமே சென்னையிலிருந்து பெங்களூர் கிச்சா வீட்டுக்கு வந்து விட்டோம்.. கொஞ்சம் முன்னே நான் சௌம்யாவிடம் சொன்னது அந்த வரவேற்புக்காக... அவள் ஜீன்ஸ், டீ ஷர்ட்டில் கண்ணாடி முன்னேயே தவம் கிடந்த போது... !
“நீங்க வேணா.. கட்டுக்குடுமியும்.. பஞ்சகச்சமுமா வாங்கோ... நான் இப்படித்தான் வருவேன்... அவர் அமெரிக்காலேர்ந்து வர்றார்னா.. அமிஞ்சிக்கரையில்லை.. புரியறதா..?”
இவளைப்போலில்லாமல்.. வளர்மதி புடவையில் தான் வந்தாள்.. அது அவ்வளவு பாந்தமாக இருந்தது... என்ன சொல்லுங்கோ.. புடவை தான் ஒரு modest appeal தர்றது..!
யஷ்வந்த்பூரிலிருந்து தேவனஹள்ளி வந்து சேர்ந்தோம்.. நான் ஸ்ரீநிஷாவை தூக்கியிருந்தேன்... கிச்சா... க்ருஷ்ஷைத் தூக்கிக் கொண்டிருந்தான்.. ஆளுக்கொரு குழந்தையை கையில் வைத்துக் கொண்டு ஆவலாய்... அரைவல் வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தோம்..
“கமான் பேபி.. லெட் மீ இண்ட்ரொட்யூஸ் யூ டூ தெம்” பம்மியபடி இருந்தவளை இடையோடு சேர்த்து இழுத்து எங்கள் முன்னே நிறுத்தி...
“மீட் மை வைஃப், மை பெட்டர் ஹாஃப்.. மை ஆல் இன் ஆல்.. வாசவி...”
பரஸ்பரம் முகமன் சொன்னோம்... எல்லோர் நெற்றியும் சுருங்கியிருந்தது... அவள் மொத்த உருவமும் முரணாகவே இருந்தாள்..
எல்லோருமே அவளை சற்று விநோதமாகத்தான் பார்த்தோம்... குழந்தைகள் கண்களில் லேசாக மிரட்சி காட்டின... எங்களைக் கடந்து சென்றவர்கள்... திரும்பிப் பார்த்தபடியே சென்றார்கள்... காரணம்... அவளது caramel complexion... மினிமினுப்போடு.... வர்ணிக்க இயலாத அழகோடிருந்தாள்... இந்தியரைப் போலுமிருந்தாள்.. அப்படியில்லை என்பது போலுமிருந்தாள்... அதையெல்லாம் விஞ்சியது... அவள்.. கட்டியிருந்த காஞ்சிபுரம்.. மல்லிகைச்சரம்.. மெல்லிய வட்டமாய் குங்குமம்.. கழுத்தில் மெல்லியதாய் ஒரு சரடு...! எல்லோரும் விநோதமாகப் பார்த்தது அவளை சங்கடப் படுத்திற்று போலும்.. வெட்கப்பட்டாள்...
எனக்குமே எங்கள் செய்கை அதீதமாய்த் தோன்றியது... யாரோ எவளோ.. நம் முரளியோடு.. அவன் மனைவியாக வந்திருக்கிறாள்.. அவள் இனி பிறத்தியாரில்லை.. சூழ்நிலையை சகஜப் படுத்தினேன்..
ஆலம் கரைத்து வந்து ஆரத்தி எடுத்தாள்... சுற்றி.. அவள் நெற்றியிலும்.. அவன் நெற்றியிலும் ஒத்தி விட்டாள்... இந்த யோசனையெல்லாம் என்னாத்துக்காரிக்கு சுட்டுப் போட்டாலும் வராது... ஏன்னா ஏன்னான்னு கொஞ்சிக் குலாவி ஒரு புடவையோ.. சுரிதாரோ வேணா வாங்கத் தெரியும்.. அதெல்லாமில்ல.. வாய் கிழிய சட்டம் பேசத் தெரியும்... எல்லாம் அவரவர் வாங்கி வர்ற வரம்.. என்ன பண்றது..?!
ஒவ்வொருவராக பேர் சொல்லி அவளுக்கு அறிமுகப் படுத்தினான் முரளி..
“சாரிடா... சின்னா கல்யாணத்துக்கும் வர முடியலை... அப்புறம் உன்னோட.. கலாட்டா கல்யாணத்துக்கும் வர முடியலை...”
“வந்ததும் உன் வேலைய ஆரம்பிச்சுட்டியே... இவ பேர் என்னடா சொன்ன... வாசவி... தான... வாசவியே தானா??”
நாங்கள் சிரிப்பதைப் பார்த்து அவளும் அரைகுறையாக புரிந்து கொண்டு சிரித்தாள்..!
“வித்தியாசமா எடுத்துக்காதேள்.. வாசவிக்கும் புரியணுமோல்லியோ.. நாம கொஞ்சம் வெள்ளைக்காராளா மாறிடுவோமே..”
“பேஷா மாறிட்லாம்.. அதான்.. ஏற்கனவே முக்கால்வாசி மாறினுட்டோமே..” சௌம்யா முகத்தில் வாய் கொள்ளாத சிரிப்பு..
“இவ ஒரு லேட்டின் அமெரிக்கன்... என்னை கல்யாணம் பண்ணிண்டதும்.. இவளுக்கு நம்ம கலாச்சாரம் மேல தணியாத தாகம்.. இப்போ வரும் போது கூட நார்மலா தான் வந்தா.. கொழும்புல கனெக்டிங் ஃப்ளைட் வர இன்னும் டைம் இருக்கேன்னு... சிட்டி செண்டர் போனாலும் போனோம்.. இதெல்லாம் வேணும்னு அடம் புடிக்க ஆரம்பிச்சுட்டா... முதன் முதலா உங்கள பாக்க வர்றச்ச இது மாதிரி வரணும்னு ஆசையாம்... மல்லிச்சரம் பார்.. இன்னும் கூட வாடவேயில்ல...”
“அப்புறம் ஒரு விஷயம்... நீங்க ரெண்டு பேரும் தப்பா எடுத்துக்கப்படாது... ஈவினிங்... நான், வாசவி, கிச்சா, சின்னா மட்டும் வெளிய போறோம் டின்னருக்கு... வரும் போது உங்களுக்கும் சேர்த்து வாங்கி வந்துட்றோம்... டுடேஸ் டின்னர் இஸ் அப் ஆன் அஸ்...”
சௌம்யா ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள்.. வளர் முந்திக் கொண்டாள்...
“அதனாலென்னண்ணா.. நீங்க போய்ட்டு வாங்க... நாங்க குழந்தைங்கள பாத்துட்டு இங்கயே இருக்கறோம்.... இந்த வாண்டுகள வெளிய இடங்கள்ல சமாளிக்கறது கொஞ்சம் சிரமம் தான்”
சௌம்யா என்னை முறைப்பதைப் பொருட்படுத்தாமல்.. அவளைப் பார்த்து ரகசியமாய் கண்ணடித்தேன்..!
good Idea...என்ன வாசவி ஒண்ணும் பேசவில்லையே ஒரு வேலை கொஞ்சம் இல்ல ரொம்ப புரட்சியாக அவங்கள பெண்ணாக மாறினவங்க சொல்ல போறிங்களா....சௌம்யா character இப்போ உள்ள girls மாதிரி இருக்கு ....all different characters so waiting for different story....
கொடுக்கிற பில்ட்-அப்புகளைப் பார்க்கும்போது அடுத்த அத்தியாயத்தில் எதோ வெடிகுண்டு வைக்கப் போறீங்க என்று தோன்றுகிறது. இப்படி சகஜமாக பிராமணாள் வழக்கில் எழுதுறீங்களே.. இதுக்கு பின்னாடி ஏதும் ரகசியம் இருக்கா?
//“இதுக்கு உண்மையா நான் என்ன பதில் சொல்றதுன்னு தெரியல முரளி... ஒரு பக்கம் நாம நினச்சதுநடக்கலயேன்ற அழுத்தம் மனச வாட்டும்... இன்னொரு பக்கம்.. குடும்பம்.. குழந்தேள்னு... யாருக்கும் போக்கு சொல்ல அவசியமில்லாம இருக்கோன்ற மன நிம்மதியுமிருக்கு...// maximum ippadi patta mana nilaila vaazhrava thaan adhigam..!
//எந்த விஷயமும் என்னோட இந்த நிலைப்பாட்ட மாத்திடல... என்னாலயும் என்ன மாத்திக்க முடியும்னு தோணல.. தவிர அதுக்கானஅவசியமும் இது வரைக்கும் வந்ததில்ல...// appo ini varumnu soldrela..?
//.. டூ பி ஃப்ரங்க்... ஃபிசிக்கலா எதுவுமே எங்களுக்குள்ள இல்ல தெரியுமோ...// physically endha contactsum illaama love pandradhu romba sugamaana anubavam..!
-- Edited by Butterfly on Saturday 3rd of August 2013 03:01:30 PM
“சொல்றேண்டா... சோ... உங்கள பாத்துட்டுப் போனதும் வாழ்க்கைத்துணைனு ஒரு விஷயத்தப் பத்தி யோசிச்சேன்... நன்னா யோசிச்சா ஒன்னு புரிஞ்சது..நேக்கு கம்பேனியன்னு ஒண்ணு தேவப்படறதே தவிர.. அத தாண்டி மத்த கமிட்மெண்ட்ஸ்னாலே அலர்ஜி-னு... சோ.. கமிட்மெண்ட்ஸ் இல்லாத வாழ்க்கைய ரசனையா வாழ்ந்தா என்னன்னு தோணித்து.. ரெண்டு பேருக்கும் ஞாபகம் இருக்கான்னு தெரியல.. நாம மனோரா போனப்ப சொன்னேனில்லயோ.. ஒருமுறை ஒரு லேட்டின் அப்சரஸ சந்திச்சேன்னு...”
கிச்சா ஆர்வமானான்... “ஆமா.. ஆமா.. எப்படிடா மறக்க முடியுமா.. அந்த டி..”
ஏதோ புரிவதாகத் தோன்றியதால்.. அவன் கையை அழுத்தினேன்... “மூடு... அவன் முடிக்கட்டும்... அது வரை பொறுமையாயிரு..”
முரளி சிரித்தான்..
“அதே தான் கிச்சா... அவள பண்ணிண்டா என்னன்னு தோணித்து.. உங்களாண்ட சொல்றதுக்கென்ன.. இவோ தான் அவோ”
விழி விரிய அவளை ஏறிட்டோம்.. மெல்லியதாய் ஒரு புன்னகை சிந்தினாள்.
“இவள நான் முதல்முற சந்திச்ச இடத்துக்கேப் போனேன்.. அந்த இடத்துக்கு அதுவரை சுகந்தேடி போனப்பெல்லாம்.. ஒரு பிரச்சனையுமில்லடா... ஆனா.. ஒரு பர்டிகுளர் ஆளத் தேடிப் போறது எவ்வளவு பெரிய தப்புன்னு அப்பத் தாண்டா புரிஞ்சது.. மாஃபியாக்கள் கீழ அங்க வேலை செய்யறவாள்லாம்... கொஞ்சமில்ல.. ரொம்பவே பாவம்டா... நேக்கு அது நாள் வரை அவா மேலெல்லாம் பெரிசா.. ஒரு அக்கறையும் இருந்ததில்லை.. இன்னும் சொல்லப் போனா கேவலமா தான் நினச்சிருக்கேன்... பணத்துக்குப் படுக்குற ஜென்மாக்கள்னு “
“அந்த மாஃபியாவோட உருட்டல் மிரட்டலுக்கெல்லாம்.. உள்ளூர உதறினாலும்... பயத்த காட்டிக்காம.. இவளப் பத்தி விஜாரிச்சேன்... எதுக்குன்னு கேட்டு பளார்னு அறைஞ்சான்... இவ நான் அறை வாங்கினதப் பாத்துண்டேயிருந்திருக்கா நேக்குத் தெரியாம... நான் வெளிய வந்த கொஞ்ச நேரத்துல என் பின்னாலயே வந்து.. எதுக்காக என்ன விஜாரிச்சன்னு கேட்டா... நான் மேரேஜ் பத்தி சொன்னதும்... ரொம்ப சிரிச்சாடா... வர்ற கஸ்டம்ர்ஸ்ல முக்கால்வாசி பேர் இத சொல்றான்... என்ன நீ கொஞ்சம் லேட்டா சொல்றன்னு என்ன விரட்டிட்டாடா... ஆனாலும் அவ கிட்ட என் card கொடுத்துட்டு யோசிச்சி சொல்லுன்னு வந்தேன்.. கரெக்ட்டா மூணாவது நாள் என்னத் தேடி என் ஆஃபிஸ் வந்தா...”
“ஐ லவ் யூன்னு சொன்னாளாக்கும்...?”
“செத்த மூடிண்டிரேண்டா கிச்சா... அவன் தான் சொல்லிண்டிருக்கானோ இல்லியோ ... வழக்கமா நான் தான் பொறுமையில்லாம இருப்பேன்... இப்ப என்னாச்சு நோக்கு... தோ... என் சூப் கொஞ்சம் மிச்சமிருக்கு... எடுத்துக்கோ... ஸ்பூன போட்டு நக்கிண்டிரு.. நீ சொல்லு முரளி..” முறைத்தவனை பொருட்படுத்தாமல் முரளியிடம் கதை கேட்க ஆர்வமானேன்..
“ரொம்ப சீரியசாவே ஆரம்பிச்சா.. என்னால நோக்கு ப்ரோயஜனமிருக்காது.. நான் ஒரு டி-கேர்ள்... அதுலயும் ப்ரோத்தல்ல இருக்கறவா.. நோக்கு நான் புள்ள பெத்துக் கொடுக்க முடியாதுன்னு... என்னென்னவோ... நான் எல்லாம் கேட்டுண்டு... எப்ப கல்யாணத்த வச்சிக்கலாம்னு கேட்டேன்... வேற வழி?!... ஒத்துணுட்டா... இப்படித்தான் கிடைச்சா இந்த ப்ரின்செஸ்...” அவளை அணைத்துக் கொண்டான்.. அவள் கூச்சத்தில் நெளிந்தாள்... !
“உங்க ரெண்டு பேராலயும் தான் நாங்க சேர்ந்ததா அடிக்கடி சொல்வார்... அதனால தான் உங்களுக்கு ப்ரத்யேகமா நன்றி சொல்லணும்னு தனியா அழைக்கும்படியா ஆயிடுச்சு... அவங்கள வீட்ல விட்டு வரும்படியாவும் ஆயிடுச்சு.. மன்னிக்கணும்..”
“சே.. சே.. தப்பேயில்ல... இன்ஃபக்ட்... அவங்களையும் அழைச்சிண்டு வந்திருந்தா தான் எங்களாண்ட மன்னிப்பு கேட்டிருக்கணும்.. இல்லடா சின்னா...?” நான் தலையசைத்து ஆமோதிக்கவும்... அவள் சிரித்தாள்...
“ஐயோ.. அப்படியெல்லாம் சொல்லாதீங்க... வேற வழியில்லாம தான் அப்படி பண்ணினோம்... மத்தபடி.. சௌம்யா.. வளர்.. உங்க பையன்.. இவர் பொண்ணு எல்லாரையும் பாக்கும்போது எனக்கு சந்தோஷமாயிருக்கு...” அவள் கண்களில் ஏக்கம்..!
“டேய்... நீங்க எப்படிடா இருக்கேள்... ஐ மீன்.. உங்க.. காதல் வாழ்க்கை... தப்பா எடுத்துக்காதேள்டா... உங்களோட நான் இல்லேன்னாலும் அது பத்தி மனசு.. ரொம்பவே அடிச்சிக்கும்...”
“இதுக்கு உண்மையா நான் என்ன பதில் சொல்றதுன்னு தெரியல முரளி... ஒரு பக்கம் நாம நினச்சது நடக்கலயேன்ற அழுத்தம் மனச வாட்டும்... இன்னொரு பக்கம்.. குடும்பம்.. குழந்தேள்னு... யாருக்கும் போக்கு சொல்ல அவசியமில்லாம இருக்கோன்ற மன நிம்மதியுமிருக்கு...
நான் ஆரம்பத்துல இவன நம்பல தெரியுமோ... நான் எங்கடா போப்போறேன்... உன்னோடவே தான் இருப்பேன்னு இவன் சொன்னப்போ... நேக்கென்னமோ... இவன் என்னை கல்யாணத்துக்கு சம்மதிக்கறதுக்காகத் தான் அப்படி சொல்றான்னு தோணித்து...
ஆனா நிஜமாவே இவன் பக்கத்துலயே தான் இருக்கான்ற எண்ணம் எப்பவும் என்னுள்ளேயே இருக்கு முரளி... எந்த விஷயமும் என்னோட இந்த நிலைப்பாட்ட மாத்திடல... என்னாலயும் என்ன மாத்திக்க முடியும்னு தோணல.. தவிர அதுக்கான அவசியமும் இது வரைக்கும் வந்ததில்ல...
காரணம்... லீவ் லீவுக்கு பெங்களூர் வந்துட்றோம்... அப்படி வரும் போதெல்லாம்... குழந்தேளோட அம்மாக்கள் தனியா போய்டுவா... நானும் இவனுமா.. மணிக்கணக்குல பேசிண்டே இருப்போம்... எங்க விஷயத்துல எதுவும் மாறிடல... டூ பி ஃப்ரங்க்... ஃபிசிக்கலா எதுவுமே எங்களுக்குள்ள இல்ல தெரியுமோ... இந்த அண்மைக்காகத் தான் நான் கல்யாணத்துக்கு மறுத்தேன்னு இப்ப யோசிச்சா புரியறது... இன் அ வே.. வீ ஆர் லக்கிடா... ஆனா பாவம் எத்தன பேருக்கு இப்படி ஒரு லைஃப் கிடைக்கும்னு தெரியலை....”
“உண்மை தான் சின்னா... வாழ்க்கை முழுக்க நரகமாவே போனவாளும் இருப்பா இல்லியா... ஒரு வகைல நீங்க ரெண்டு பேரும் எஸ்கேப் ஆயிட்டேள்டா...”
“முரளி... ஒண்ணு தெரியுமோ... நம்ம கிச்சா இப்போ இது மாதிரி உள்ளவாளுக்குன்னு online-ல ஏதேதோ forum-னெல்லாம் வச்சிருக்காளாண்டா.. அதுல சேந்து அவா problems என்னன்னு தெரிஞ்சிக்கறானாண்டா...”
“நிஜமாவா கிச்சா..?”
“ஐயோ முரளி... அதெல்லாமில்லை... இவன் ஏதோ உளறிண்டிருக்கான்னா... நீ வேற... ஒருத்தருக்கொருத்தர் பிரச்சனைகள பேசித் தீர்த்துக்கறா... குமுறல்கள கொட்டித் தீர்த்துக்கறா.. அவ்வளவு தான்..”
“அ...வ்...வளவு தானா...? எங்க என் கண்ண பாத்து சொல்லுடா கிச்சா... பொய் சொல்றான் முரளி... ஆத்துக்காரியும் பேங்க்ல வேல பாக்கறான்ற ஜோர்ல.. கல்யாணம் ஆகி ஒரு வருஷ்மாகியும் கன்சீவ் ஆகலயேன்ற கவலைல.. ஐயா... ஆர்டிஃபிசியல் இன்செமினேஷன்... ஐ.வி.எஃப்-னெல்லாம் மண்டையக் கீறிண்டிருந்தான்... நான் எவ்வளவு சொல்லியும் கேக்கலத் தெரியுமோ... அப்புறம்... இவா ஃபோரம்-ல யாரோ... சொன்னான்னு தான் மனச மாத்தி தைரியமானான்... அப்புறம் தான்.. ஸ்ரீநிஷா பொறந்தது... அவர் பேர் என்னடா கிச்சா... விச்சுவா? வினயா? “வி”-ல தான் ஸ்டார்ட் ஆகும்..சின்ன பேர் தான்.. ஞாபகம் வரமாட்டேன்றது பாரேன்.. ம்ம்.. விஜயாடா?... நீ தான் சொல்லித்தொலையேண்டா?”
//“யூ ஆர் ரைட் வாசவி... சென்னைல வளர்றது கிச்சா பொண்ணு... இங்க இருக்கறது என் பையன்..”//
பேசாம நீங்க மெகா சீரியல்களுக்கு கதை எழுதப் போகலாம் அண்ணா.. என்னமா டிவிஸ்ட் வெக்குறீங்க..
//உண்மை தான் சின்னா... வாழ்க்கை முழுக்க நரகமாவே போனவாளும் இருப்பா இல்லியா//
அப்படிப் போனவா தான் நிறைய இருப்பான்னு நேக்கு தோணறது.
வாவ் ....எப்பவும் பார்ட்-2 அவ்வளவு நல்லா,புதுசா இருக்காது even இந்த கதைப்படி யாராவது ஒருத்தர் சோகமா இருப்பாங்கன்னு நினைத்தேன் but இந்த "மாத்தி யோசி " டெக்னிக் நல்லாருக்கு ....
டூ பி ஃப்ரங்க்... ஃபிசிக்கலா எதுவுமே எங்களுக்குள்ள இல்ல தெரியுமோ... இந்த அண்மைக்காகத் தான் நான் கல்யாணத்துக்கு மறுத்தேன்னு இப்ப யோசிச்சா புரியறது... இன் அ வே.. வீ ஆர் லக்கிடா... ஆனா பாவம் எத்தன பேருக்கு இப்படி ஒரு லைஃப் கிடைக்கும்னு தெரியலை....” ரொம்ப உண்மையான வரிகள்...
ம்ம்.. விஜயாடா?... நீ தான் சொல்லித்தொலையேண்டா?”...ஓஹோ விஜய் கவுன்சிலிங் இவ்ளோ வேலை பார்க்குதா....குட் ....
----ரொம்ப ரசிச்சு படித்தேன்...இந்த பதிவை...usually ...dont find mistake find remeady that will improve your life...இது என்னோட mindல அடிக்கடி வரும் இப்போ உங்க கதைல அது இருக்கு....குட் keep it up
“எங்க முரளி ஒத்துண்டா... இதோ... இந்த பிரஹஸ்பதி உட்பட யாருமே ஒத்துக்கல... நேக்குத்தான் ப்ரம்மபிரயத்தனம்.. பகீரதப்பிரயத்தனம் ஆயிடுத்து.. நேக்குமே முதல்ல அது மாதிரி ஒரு யோஜனை இல்ல முரளி... க்ருஷ் பிறந்து ஒண்ணே முக்கால் வருஷம் கழிச்சுத் தான் இவன் பொண்ணு பொறந்தா... அன்னிக்கு நீ பாக்கணுமே... அப்படியே கிச்சாவ கொண்டிருந்தாடா... அப்பத் தான் நேக்குத் தோணித்து.. நாம ஏன் வளக்கப்படாதுன்னு...
என் மன்னி கிட்ட தான் கேட்டேன்.. இதுல என்ன இருக்கு.. எல்லோரும் ஒத்துணுட்டா தாராளமா பண்ணலாமேன்னா.. அண்ணா.. அவ்வளவு பிரியப்படலைன்னாலும்.. மன்னி சொன்னப்புறம் அவன் மறுபேச்சு பேசறதில்லை... சோ... இந்த விஷயத்துல முழு மனசா ஒத்துண்டா ரெண்டு பேர்ல முத ஆள் என் மன்னி தான்... அடுத்தது.. யார் தெரியுமோ... வளர்மதி... பொக்கிஷமா பெத்த குழந்தை அது... நான் இத்தனைக்கும் அவ ஹாஸ்பிட்டல்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆறதுக்கு முன்னமே இவன் இல்லாதப்ப அவ கிட்ட தயங்கி தயங்கி கேட்டேன்..
உங்களுக்கில்லாமலா.. தவிர உங்க குழந்தைய எங்கள நம்பி ஒப்படைக்கறதா வேற சொல்றீங்க... தாராளமா எடுத்துக்கோங்கண்ணா... ஒரே ஒரு வருஷம் மட்டும் என்னாண்ட இருக்கட்டும்னு சொன்னாடா... சோ... வளர் தரப்புலயும் ரூட் க்ளியர்...
அடுத்து நான் ரொம்ப பயந்தது.. சௌம்யா.. நான் சொன்னதும் தாம் தூம்னு குதிச்சா... லேபர் பெயின் பத்தி எதனா தெரியுமா.. postpartum hemorrhage பத்தி எதனா தெரியுமா.. செத்து பொழைக்கற அனுபவம்னா அது... கேள்வி பட்டிருக்கேளா.. பிரசவ வைராக்கியம் மயான வைராக்கியம்னு... என்னெல்லாமோ டயலாக் விட்டா..”
நான் இடையிடையே தமிழில் சொல்லும் போதெல்லாம்.. வாசவி முரளியைப் பார்க்க.. அவன் அதை ஆங்கிலத்திலும் ஸ்பானிஷிலுமாக மொழி பெயர்த்தான்..
செகண்ட் செர்விங் வந்தது...
“டேய் .. இதுக்கு மேல நேக்கு போறும்னு தோணறது... நீ வேணா.. இப்பவே நாம ஆத்துக்கு எடுத்துண்டு போறதுக்கும் சேர்த்து ஆர்டர் பண்ணிட்றா...” கிச்சா அதற்கு மேல் கண்டிப்பாக சாப்பிட மாட்டான் என்பதால் மறுத்து விட்டான்
“ஆமா.. முரளி... இவன் சொல்றது சரி தான்.. ஆர்டரோட சேர்த்து.. ரெண்டு ஃபலூடா சொல்லிட்றா.. அம்மா பொண்ணு ரெண்டு பெருக்கும் அதான் ஃபேவரைட்..”
“நல்ல காலம் சொன்ன... ஒரு ஹேஷ் ப்ரௌன்னும் ஒரு பாதாம் அல்வாவும் சொல்லிட்றா... வளர கூட சமாளிச்சிட்லாம்.. அந்த குட்டி வாண்ட சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்.. அப்படியே அப்பன் புத்தி...” என்னை சீண்டினான் கிச்சா..
“அதையும் கேட்டேன் முரளி... அதுக்கு அவ டான்ஸ் மாஸ்டரையே உதாரணம் காட்டினா.. நம்ம தஞ்சாவூர் பக்கத்து மெலட்டூர் பாணியில மனுஷன் பிச்சு உதறுவாராம்.. அதுலயும்.. ஆம்படையானும் பொம்மனாட்டியுமா சேர்ந்து ஆட ஆரம்பிச்சான்னா.. கண் ரெண்டு போறாதாம் பாக்கறதுக்கு.. அவ்வளவு திவ்யமா இருக்குமாம்... ஆனாலும் மேல் டான்சர்ன்ற ஒரு காரணத்தால அவர் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்காராண்டா.. எத்தனையோ.. ஸ்டார்ஸ் இருக்கா டான்ஸ் தெரிஞ்சவா.. ஆனா.. நான் என் கண்ணால பாத்த நிலைமை என் பிள்ளைக்கு வரக்கூடாதுன்னுட்டா... சரி போ.. நேக்கு நீ சம்மதிச்சதே பெருசுன்னு விட்டுட்டேன்...”
“சோ... எல்லாரும் சம்மதிச்சுட்டாளாக்கும்...?”
“எங்க... தோ.. இவன் பண்ண ரகளையா நான் இன்னும் சொல்லலயே..”
“முன்னெல்லாம் இங்லீஷ்ல.. இப்ப ஸ்பானிஷ்ல... இவளுக்காகவே கத்துண்டேன்... வென் ஐ டாக் டூ ஹெர் இன் ஸ்பேனிஷ்.. ஷீ ஃபீல்ஸ் மீ க்ளோஸ் டூ ஹெர் ஹார்ட்... ரைட் பேபி?”
அவள் சிரித்து ஆமோதித்தாள்..
“தவிர இவளுக்கு ஒரு காம்ப்ளக்ஸ்டா... இவ இங்லீஷ் பேசும் போது ஸ்பேனிஷ் அக்செண்ட் வர்றதுன்னு..”
“கரெக்ட்.. நானே யோசிச்சேன்.. எங்க ஃபிலிப்பினோ க்ளைய்ண்ட்ஸ் கூட இதே மாதிரி தான் பேசுவா... probably because of their Spanish connections..”
“ம்.. நீ மேல சொல்லு...” கிச்சா கதையை நினைப்பூட்டினான்..
“அட இவன பாரேன்... இவன் கதைய கேக்கறதுக்கே இவன் ஆளா பறக்கறான் பார்.. ம்.. அதான் முரளி.. எல்லாரும் சரி சொன்ன பிறகு.. இவன் ரொம்ப பிடிவாதமா இருந்தான்... எதுக்கு இதெல்லாம் தேவையில்லாம... அவா அவா குழந்தை.. அவா அவா ஆத்துலயே வளரட்டும்னான்.. ரொம்ப கெஞ்சி பாத்தேன்.. கொஞ்சம் சத்தமெல்லாம் கூட போட்டு பாத்தேன்... ஒண்ணும் ஆகறதா தெரியல.. அப்புறம் வேற வழியில்லாம... இவன் பாணியிலையே டீல் பண்ணினேன்...”
“அப்படி என்ன செஞ்சீங்க..?” வாசவி ஆர்வமானாள்...
“பாரேன்... gossip கேக்கறதுக்கு எல்லா ஊர் பொம்மனாட்டிகளும் ஒருத்தருக்கொருத்தர் சளைச்சவா இல்ல போல..”
“நீ சும்மா இரு முரளி... நீங்க சொல்லுங்க சின்னா...”
“என்ன சொல்லவாடா... அந்த டெக்னிக்க..?”
“அதான் எல்லாத்தையும் சொல்லிட்டியே.. முழுக்க நனஞ்சப்புறம் முக்காடா..” கிச்சா பச்சைக் கொடி காட்டினான்..
“இவன கொஞ்சம் வாடான்னு தனியா இழுத்துட்டுப் போய்... இப்படி இழுத்து .. கன்னத்துல அழுத்தமா... ம்ம்ம்ம்ம்ம்”
வாசவியும் முரளியும்.. கைதட்டி ஆர்ப்பரித்தார்கள்..
எதேச்சையாக உள்ளே வந்த பேரர்.. ஒரு நிமிடம் திகைத்தான்... “ஓ.. ஐ அம் சாரி..”
“நோ ஹார்ம்.. இட்ஸ் ஓகே..”
“யுவர் டேக்-ஹோம் ஆர்டர்ஸ் ஆர் ரெடி.. எனிதிங்எல்ஸ் சார்..?”
“தேங்க் யூ... வீ.. ஆர் டன்.. கேன் யூ கெட் அஸ் அவர் பில்ஸ்.. ப்ளீஸ்”
“ஷ்யுர் சார்..” கிச்சாவையும் என்னையும் ஒரு மாதிரியாக பார்த்தபடியே நகர்ந்தான்..!
“நான் தெரியாமத்தான் கேக்கறேன்... அப்படி ஏண்டா.. குழந்தேள மாத்தி வளக்கணும்னு அவ்வளவு பிடிவாதமா இருந்த நீ..? நேக்கென்னமோ... கிச்சாவ விட நீ தான் பிடிவாதமா இருந்திருக்கேன்னு தோணறது சின்னா..”
“அப்படி கேளு முரளி.. இப்பத்தான் நீ என் அம்மாஞ்சின்னு ப்ரூவ் பண்ற... இவன் என்னமோ நான் மட்டும் தான் பிடிவாதம் பிடிச்சேன்ற மாதிரி பேசிண்டிருக்கான்... நேக்கென்ன ஆளில்லைன்னு நினச்சியாடா.. சின்னா படவா...”
கிச்சாவின் சீண்டலைப் பொருட்படுத்தாமல் நான் தொடர்ந்தேன்.
கொஞ்சம் லாஜிக் இல்லாத சினிமா மாதிரி இருந்தாலும் கதை நல்ல சுவாராசியமா இருக்கு.... குழந்தேள மாத்தி வளக்கணும்னு அவ்வளவு பிடிவாதமா இருந்த நீ..?,,,இதை கதையா பார்த்தால் ஓகே...ரியலாகன்னா nobody can replace a mummy and daddy...அது எவ்ளோ அன்பான உறவாக இருந்தாலும் கூட ....எல்லா காதல்களும் நம் அம்மா,அப்பாவின் அன்போ அல்லது அது கிடைக்காத தேடல்களே...
நீங்க ரொம்ப "மாத்தி யோசி"கிறீங்க...but I like ur fantasy style in ur story.... “இவன கொஞ்சம் வாடான்னு தனியா இழுத்துட்டுப் போய்... இப்படி இழுத்து .. கன்னத்துல அழுத்தமா... ம்ம்ம்ம்ம்ம்”...ha ha good it shows the real love between them...
@ samram : லாஜிக் இல்லாத விஷயம் தாங்க.. முன்ன.. நானும் என்னவனும் இது மாதிரி தான் யோசிச்சோம்.. மாத்தி வளக்கறதுன்னு..!!! அந்த பாதிப்பு தான் இதுல அப்படி சொல்லியிருக்கேன்..!! தங்களது கருத்துக்கு என் மனமார்ந்த நன்றி!!!
@ Arvin : எஸ்... இது முத்த வாரம்...! அப்பாடா... அட்லீஸ்ட் ஒரு ஜீவனாவது "லிங்க்" விஷயத்த பத்தி சொல்லியிருக்கேன்னு சந்தோஷமா இருக்கு.. என்னய்யா பண்றது..? J D Cadinot.. Yandamuri Veerendranath-னு என்ன விஷயம் சொன்னாலும்.. உடனே wikipedia-ல க்ராஸ் செக் பண்ணிக்கரீங்க... உங்களுக்கோசரம் தான்!!! நன்றி அர்வின்!!!
@ rajkutty kathalan : முயற்சியின் தீவிரத்தை உணர்த்த பயன்படுத்தும் வார்த்தைகள் ப்ரம்மபிரயத்தனம்.. பகீரதப்பிரயத்தனம் முன்னது தோல்வி.. பின்னது வெற்றி!
//////படைக்கும் கடவுளாகிய நான்முக பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளாகிய திருமாலுக்கும், தங்களில் யார் பெரியவர் விவாதம் உண்டாகி, சிவபெருமானிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க, சிவபெருமான் தனது அடியை அல்லது முடியை உங்களில் யார் கண்டு வருகிறீர்களோ அவர் தான் பெரியவர் எனக் கூற திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியைக் குடைந்து சென்றார். அடியைக் காண இயலாமல் சோர்ந்து திரும்பினார். பிரம்மன் அன்னப் பறவையாக உருவெடுத்து சிவபெருமானது முடியைக் காண உயரப் பறந்து சென்றார். முடியைக் காண இயலாமல் தயங்கி பறக்கும்போது சிவன் தலை முடியில் இருந்து தாழம்பூ கீழே இறங்கி வந்ததை கண்டு, அதனிடம் பிரம்மன் முடியைக் காணும் முயற்சியை விடுத்து, தாழம்பூவிடம் ஒரு பொய் சாட்சி சொல்லும்படி கேட்டுக் கொண்டார். சிவனின் முடியை,பிரம்மன் கண்டதாக சாட்சி சொல்லும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாழம்பூ சாட்சி சொல்ல, பொய் சொன்ன பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் ஆலயம் மற்றும் பூசைகள் அமையாதென்றும், பொய்ச்சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூசைக்கு உதவாது என்றும் சாபமிட்டார்./////// நன்றி: wikipedia.
அந்த கவிதைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலேன்னு..
குழந்தேள காதலின் பரிசா தான் கனப்படுத்தறா.. ஏதோ செக்ஸ் வச்சிண்டதன் விளைவுன்னு நினச்சிக்கல... நானும் இதையே தான் நினச்சேன்... heterosexual உறவுல மட்டும் தான் இது சாத்தியமா.. நம்மால முடியாதான்னு..
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இவன் பொண்ணு பொறந்த அன்னிக்கு... அப்படியே இவன மாதிரியே இருந்தாடா.. மூக்கு, நெற்றி, கைவிரல்னு.. அப்படியே கிச்சாவோட ஃபோட்டோ காப்பி மாதிரி.. எங்க காதல கனப்படுத்த அந்த குழந்தைய நாம வளர்த்தா என்னன்னு தோணித்து”
இந்த கேள்வியை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை.. தலைகவிழ்ந்து.. டேபிளை பார்த்தபடியே அமர்ந்திருந்தேன்...
என் முக வாட்டம் கிச்சாவை சங்கடப் படுத்தியிருக்க வேண்டும்..
“ஐயோ.. ஏன் முரளி.. என் குழந்தைய ஃபீல் பண்ண வைக்கற... பார்.. மூஞ்சு தொங்கிப் போயிடுத்து...”
என் கன்னம் தடவி.. அருகே இழுத்து தோளில் சாய்த்துக் கொண்டான்...
“நேக்குமே இதுல உடன்பாடில்லாம இருந்துச்சு தான்.. ஆனா... இப்ப நான் க்ருஷ்ஷ பாத்துக்கற ஒவ்வொரு நிமிஷமும்... என் சின்னா என்ன விட்டு எங்கயும் போயிடலன்னு தோணறதுடா... அப்படி ஒண்ணும் இவன் குழந்தேள வலுக்கட்டாயமா பிரிச்சிடலையே... ரமா.. அத்திம்பேர்... முக்கியமா வளரோட சம்மதம் கிடைச்சது... சௌம்யா மட்டும் ஒத்துக்கலையே ஒழிய.. அவளும் மனசு மாறினுட்டா... இன்னும் யார் சம்மதம் வேணுன்ற... இவன் சொன்ன மாதிரி குழந்தேள் காதலின் பரிசு தான்.. அத நாங்க சந்தோஷமா பரிமாறிண்டோம்.. போறுமா..?!”
பில் வந்தது.. முரளி செட்டில் செய்ததும்.. ஆளுக்கொரு பையைத் தூக்கிக் கொண்டு காரை நோக்கி நடந்தோம்.. ! முரளி முன்னிருக்கைக்கு நகர.. வாசவியும் நானும் பின்னிருக்கையை ஆக்ரமித்தோம்..
வீடு செல்லும் வழியில் ஏதோ.. பொதுக்கூட்டம் போலும்.. பேரிரை(எரி)ச்சலாக இருந்தது.. மஞ்சளும், சிவப்பும் கலந்த கொடிகள் எப்பக்கமும் வியாபித்திருக்க.. யாரோ ஒருவர்.. மைக்கில் முழங்கிக் கொண்டிருந்தார்... அவர் முழக்கம் காதில் விழவில்லையே தவிர.. “யாக்கே கொடுபேக்கு.. யாக்கே கொடுபேக்கு...” என்று மட்டும் அவர் அடிக்கடி முழங்குவது காதில் விழுந்தது..
“ஏண்டா.. இதெல்லாம் எப்படா மாறும்.. speaker's corner மாதிரி ஒண்ணு வச்சி.. அங்க போய் கத்திக்கடாப்பான்னு ஏன் இன்னும் விட மாட்றா.. அப்படி என்ன தாண்டா சொல்றார்.. இவர்..”
கிச்சா காரை செலுத்தியபடியே.. “நீ அமெரிக்கன் சிட்டிசனா இத கேக்கற.. நோக்கு சொன்னா புரியுமான்னு தெரியலை.. இதெல்லாம் கூட்டாட்சித் தத்துவத்தோட சில flaws டா.. இந்த ஸ்டேட்டுக்கு சுத்தி சுத்தி பிரச்ச்னை.. எதுக்கு கொடுக்கணும் எதுக்கு கொடுக்கணும்னு சொல்றார்.. நேக்குத் தெரிஞ்ச வரை.. அவர் காவேரிய மீன் பண்றாரா.. அலமாட்டி ப்ராப்ளம் பத்தி பேசறாரா.. இல்ல பெல்காம் பத்தி பேசறார்னு தெரியலை... ஆனா. இதுல ஏதோ ஒண்ணப் பத்தி மட்டும் பேசறார்னு தெரியறது... இந்த ஒரு ஸ்டேட் மட்டுமில்லை... இங்க எல்லா ஸ்டேட்லயும் இப்படி ப்ராப்ளம்ஸ் இருக்கே.. சால்வ் பண்ற வழியத் தான் காணோம்..”
“இந்த முறை நாங்க இண்டியா வந்ததுக்கு உண்மையிலேயே வேற ஒரு ரீசனும் இருக்குடா,.. கமிட்மெண்ட்ஸ் எதுவும் வந்துடக் கூடாதுன்னு தான்.. இவள மாதிரி ஒருத்திய கல்யாணம் பண்ணிண்டேன்... ஆனா கொஞ்சம் முன்ன.. நீங்க ஒரு தத்துவம் சொன்னேளே... குழந்தேள் காதலின் பரிசுன்னு.. என் நிலைமையும் இப்ப அதே தான்... என் வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் தந்த நோக்கு... உன் குழந்தைய வளக்கறதன் மூலமா... ஆயுள் முழுக்க நான் நன்றி சொல்லக் கூடாதான்னு ஒரு நாள் இவ என்ன கேட்டப்ப... ஆடிப்போய்டேண்டா...”
குழந்தேள காதலின் பரிசா தான் கனப்படுத்தறா.. இதை படிச்சதும் உண்மையில் கண் கலங்கிருச்சு...இந்த ஒரு விஷயத்திற்காகவே நாம் எதையும் இழக்க தயார் ஆயிடுறோம்....அதன் அர்த்தத்தை சரியாக சொல்லிருக்கிங்க....nd என் முக வாட்டம் கிச்சாவை சங்கடப் படுத்தியிருக்க வேண்டும்.. இது மாதிரி சின்ன சின்ன விஷயமும் நீங்க பார்த்து பார்த்து எழுதுறது எனக்கு ரொம்ப பிடிக்கும்...முரளி மனமாற்றம் நான் எதிர்பாராதது ...நல்லாருக்கு ...எல்லாருக்கும் நல்ல முடிவா யார் மனசும் நோகாமல் யோசிச்சு எழுதுவது சூப்பர்...keep it up ...கிச்சா மட்டும் பிரேக்கை போடலே நானும் தான் so pls post quick...