Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: You Are Cordially Invited - இரண்டாம் பாகம்


புதியவர்

Status: Offline
Posts: 17
Date:
You Are Cordially Invited - இரண்டாம் பாகம்
Permalink   
 


“ஓரின ஈர்ப்பு பற்றிய கதைகள் என்றாலே.. அது பதின்ம வயது.. கூடிப்போனால்.. இருபதுகளின் தொடக்கத்தில் இருப்பவர்களைப் பற்றித் தான் இருக்க வேண்டுமா?.. குடும்ப வற்புறுத்தல் அல்லது சூழ்நிலை காரணமாக திருமண பந்ததினுள்.. பின் அதன் தொடர்ச்சியாக குடும்ப உறவுக்குள் ஆட்பட்டுக்கொண்டவர்கள் பற்றி இருக்காதா..?”


" EN PONTROR NILAIMAI PATRI EZHUTHUVATHAI VARAVERKIREN", MIKKA AVALUDEN KATHTHUKONDIRUKKINTREN, VAZHYHUKKAL



-- Edited by sinehidhan on Thursday 25th of July 2013 01:15:20 PM

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

ஓர்குட்டில்.. YACI பதிவிட்டு நிறைவு செய்து.. “அக்கடா” என்றிருந்த நேரம் அது.. ஒரு வாசக நண்பரிடமிருந்து ஒரு வேண்டுகோள்.. 

“ஓரின ஈர்ப்பு பற்றிய கதைகள் என்றாலே.. அது பதின்ம வயது.. கூடிப்போனால்.. இருபதுகளின் தொடக்கத்தில் இருப்பவர்களைப் பற்றித் தான் இருக்க வேண்டுமா?.. குடும்ப வற்புறுத்தல் அல்லது சூழ்நிலை காரணமாக திருமண பந்ததினுள்.. பின் அதன் தொடர்ச்சியாக குடும்ப உறவுக்குள் ஆட்பட்டுக்கொண்டவர்கள் பற்றி இருக்காதா..?” 

“அதற்கெல்லாம் எனக்கு அனுபவம் போதாது.. தவிர என் நோக்கமும் அது இல்லை” என்று மறுதலித்து விட்டேன்.. 

ஆனாலும் ஒரு எண்ணம்.. அனுபவம் என்பது சுயமாக அனுபவித்து தெரிந்தால் தானா..? பிறரது அனுபவங்களும்.. ஒரு வகையில் நமக்கு படிப்பினை தானே.. என்று தோன்றியது.. விளைவு.. பாகம் இரண்டு எழுதத் தூண்டியது..

மேற்படி நண்பரது வேண்டுக்கோளுக்கிணங்க மற்றொரு காரணமும் உண்டு.. ஆரம்பத்தில்.. படு கிளுகிளுப்பாக இருந்த கதை.. நண்ப்ர் விஜய் விக்கியின் (msvijay) கருத்துக்கிணங்க.. காதல் பாதையில் பயணிக்கத் தொடங்க.. பெருவாரியான “ஓர்குட்” வாசகர்களின் “எதிர்பார்ப்பை”ப் பூர்த்தி செய்யத் தவறியது.. ஆனாலும் கேள்வி கேட்ட அந்த நண்பர் கதை நெடுகிலும் என்னோடு பயணித்து.. ஆதரவு நல்கினவர்.. ஆகையால் அவரது கூற்றுக்கு மதிப்பளித்து செவிசாய்க்க வேண்டியது அவசியம் என்றேத் தோன்றியது.

இரண்டாம் பாகம் பதிவிட்ட சில நாட்களுக்குள்ளாக ஏற்பட்ட சில விரும்பத்தகாத காரணங்களால் என் பயனர் கணக்கு,கதைகள்,பதிவுகள்,லொட்டு லொசுக்கு என்று அனைத்தையும் நீக்கும்படி நேர்ந்தது.. மீண்டும் “ஓர்குட்”டில் பதிவு செய்ய ஒப்பவில்லை..  “அன்பைத்தேடி”யில் பதிவிடலாம் என நினைக்கிறேன்.

கதை என்பதையும் தாண்டி.. தற்கால.. LGBT சார் விஷயங்களை எனக்குத் தெரிந்தவரை தொட்டுச் செல்லலாம் என்று எண்ணம்.. 

மீண்டுமொரு முறை.. ஆதரவு நல்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.. 

 

பி.கு: வாசித்ததோடு நின்று விடாமல் தங்களது மேலான கருத்துக்களை பின்னூட்டங்களின் வாயிலாகத் தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

அருமை அண்ணா,தொடருங்க....

நானும் யோசிச்சிருக்கேன்,காதலர்கள் சேரும்/பிரியும் வரை தான் கதை நீடிக்கிறது,அதற்க்கு மேல் அவர்கள் மேற்கொள்ளும் வாழ்வு பற்றி ஏன் எழுதுவதில்லை என்று.......


எப்பவும் போல இந்தக் கதையிலும் கலக்குங்க........


வாழ்த்துக்கள்

__________________



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

அங்கு எழுதிய இரண்டாம் பாகம்தான் முடிவில்லாமல் போய்விட்டது... இங்கு நல்லதொரு முடிவை எதிர்பார்க்கிறேன்..... கலக்குங்க அண்ணாச்சி, வாழ்த்துகள்...

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 103
Date:
Permalink   
 

WAITING EAGERLY FOR UR STORY....

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 80
Date:
Permalink   
 

ஆஹா.. நல்ல முடிவு. சீக்கிரம் ஆரம்பியுங்கள்.

__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

காத்திருக்க்கிறேன் நண்பா...!!!



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink   
 

Good thought,
And we are waiting.

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

Go a head bro. waiting for your new one

keep Rocking


regards

Thiva

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
நன்றி!
Permalink   
 


கருத்து பதிவிட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி..!



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - இரண்டாம் பாகம் - 1
Permalink   
 


“போறும் சௌம்யா.. நன்னா தானிருக்கு..அழகுக்கு அழகு சேர்க்கணுமா...?”

அவள் அப்படியும் கண்ணாடியை விட்டு நகருவதாக இல்லை...

“நீங்க செத்த வாய மூடிண்டிருங்கோ.. உங்கள யாருமிங்க அபிப்பிராயம் கேட்கலை...”

அவள் இப்படியெல்லாம் கூட பேசுவாள் என்று என் பையன் பிறந்த பிறகு தான் தெரிந்தது... எப்பவேணும்.. அதை சொல்லிக் காட்டினால்.. அதற்கும் கத்துவாள்.. 

“ஏன்னா... ஒரு MCP மாதிரி நடந்துக்கறேள்..?! பொம்மனாட்டி ஆம்படையானுக்கு அடங்கிப் போகணும்னு ஒண்ணும் சட்டமில்லையே.. ?”

 

ஆனால் அப்படியெல்லாம் அவள் கேட்கும் படிக்கு நான் ஒன்றும்... அவள் சொல்வது போல... Male Chauvinist Pig இல்லை.. ! கல்யாணமாகி இந்த ஐந்து வருடத்தில் “டி” போட்டுக் கூட பேசினதில்லை.. எனக்குத் தெரிந்த வரை சமதையாகத்தான் நடத்தியிருக்கிறேன் என் சகதர்மிணியை.. !

 

அன்று முரளி.. இண்டியா வரவிருந்தான்.. போன முறை போபால் சென்று.. பின் எங்களை பார்க்க வந்தவன்.. இந்த முறை கொழும்பு வந்து கனெக்டிங் ஃப்ளைட் பிடித்து நேரடியாக பெங்களூர் வருகிறான்.. காரணம்.. சஸ்பென்ஸாம்...!

அவனை வரவேற்பதற்காக நாங்கள் முன் தினமே சென்னையிலிருந்து பெங்களூர் கிச்சா வீட்டுக்கு வந்து விட்டோம்.. கொஞ்சம் முன்னே நான் சௌம்யாவிடம் சொன்னது அந்த வரவேற்புக்காக... அவள் ஜீன்ஸ், டீ ஷர்ட்டில் கண்ணாடி முன்னேயே தவம் கிடந்த போது... !

“காட்டன் சாரி போறும் சௌம்யா”னு போராடித் தோற்றேன்..!

“நீங்க வேணா.. கட்டுக்குடுமியும்.. பஞ்சகச்சமுமா வாங்கோ... நான் இப்படித்தான் வருவேன்... அவர் அமெரிக்காலேர்ந்து வர்றார்னா.. அமிஞ்சிக்கரையில்லை.. புரியறதா..?”

இவளைப்போலில்லாமல்.. வளர்மதி புடவையில் தான் வந்தாள்.. அது அவ்வளவு பாந்தமாக இருந்தது... என்ன சொல்லுங்கோ.. புடவை தான் ஒரு modest appeal தர்றது..!

 

யஷ்வந்த்பூரிலிருந்து தேவனஹள்ளி வந்து சேர்ந்தோம்.. நான் ஸ்ரீநிஷாவை தூக்கியிருந்தேன்...  கிச்சா... க்ருஷ்ஷைத் தூக்கிக் கொண்டிருந்தான்..  ஆளுக்கொரு குழந்தையை  கையில் வைத்துக் கொண்டு ஆவலாய்... அரைவல் வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.. 

“யார் கிச்சாப்பா.. வரப் போறா...?” க்ருஷ் மழலையில் கேட்டான்... 

“முள்ளி மாமான்னு சொல்வோமே.. அவர்டா கண்ணா...”

“முள்ளி மாமான்னா... சின்னப்போ மாங்காவெல்லாம் திருடித் தின்பார்னு சொல்லுவியே... அவரா கிச்சாப்பா..?”

“டேய்... நன்னாயிருப்படா.. அவன் முன்ன... இத மாதிரியெல்லாம் பேசப்படாது.. வாய மூடிண்டிரு...”  

கிச்சா அவனிடம் மன்றாட.. வளருக்கும் சௌம்யாவுக்கும் அடக்க முடியாத சிரிப்பு... !

இமிக்ரேஷன் முடிந்து.. வெளியே வந்தவன்.. தனியாக வரவில்லை...!

“யார் அது?” எங்கள் நால்வருக்குள்ளும் ஒரே கேள்வி... குழப்பமாய்ப் பார்த்தோம்!

(தொடரும்)



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
RE: You Are Cordially Invited - இரண்டாம் பாகம்
Permalink   
 


என்னடா இவன்.. ஒரு பதிவோட நிறுத்திட்டானேன்னு நினைக்காதீங்க...

நேரடியா கதைய போஸ்ட் பண்றத விட்டுட்டு.. முன்னுரைன்னு ஒண்ணப் பதிவேத்தி.. ரொம்ப பில்டப் கொடுத்துட்டமோன்னு தோணுது..

இப்ப கதைய போஸ்ட் பண்ணனும்னாலே ரொம்ப பயம்ம்ம்ம்மாயிருக்கு..

ஒரு தடவைக்கு பல தடவை ரிவியூ பண்ணி பதிவிட வேண்டியிருக்கறதால.. கொஞ்சம் பொறுத்துக்கோங்க.. :)

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: You Are Cordially Invited - 2526232529202425 2020292425
Permalink   
 


Wow..! Mama adutha innings super ah irukku..! Kindly continue..!

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
RE: You Are Cordially Invited - இரண்டாம் பாகம்
Permalink   
 


யாரா இருக்கும்...........


__________________



உறுப்பினர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink   
 

Good,

What a curiosity!


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

interesting story... awaiting the next part...

__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

atleast ஆம்பளையா பொம்பளயான்னாவது சொல்லிருக்கலாம்!!!

பாப்போம்



__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 97
Date:
Permalink   
 

என்னது மடிசார் மாமி ஜீன்ஸ்லயா? படுபயங்கரமா இல்ல இருக்கு.

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
நன்றி!
Permalink   
 


Butterflyanbaithedinishanthtirupurbabu - நன்றி நண்பர்களே!

rajkutty kathalan - கதைல மட்டும் தான்னு பாத்தா.. கருத்து பதியறதுலயும் வித்தியாசம் தானா.. உங்க கேள்விக்கான பதில் போகப் போகத் தெரியும் நண்பா..

hot guru - மடிசாரெல்லாம் பூஜை புனஸ்காரம்னா மட்டும் தான்.. இப்பெல்லாம் யாருங்க அத ஃபாலோ பண்றாங்க..?



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - இரண்டாம் பாகம் - 2
Permalink   
 


ஹைடா.. எப்படியிருக்கேள் எல்லாரும்...? ஹை.. குட்டீஸ்”

“நாங்க நன்னா தான் இருக்கறோம்...” உடன் வந்தவளைப் பார்த்தபடியே.. கிச்சா இழுவையாக இழுத்தான்..!

“ஏங்க.. அவர்.. எப்படியிருக்கீங்கன்னு கேக்கறார்ல்ல.. அவர எப்படியிருக்கீங்கன்னு கேக்கறத விட்டுட்டு என்ன இழுவ?”

“சாரி வளர்.. சாரி.. முரளி... எப்படி அம்மாஞ்சி இருக்கேள்?”

“என்னடாயிது புதுசா... அம்மாஞ்சின்னெல்லாம் என்னை சொல்ற... அப்படி சொல்ல மாட்டியான்னு நான் தவமிருந்திருக்கேனே ஒரு காலம்...”

“நான் புதுசா சொல்றது இருக்கட்டும்... இவங்க யாரு முரளி..?” 

“கமான் பேபி.. லெட் மீ இண்ட்ரொட்யூஸ் யூ டூ தெம்” பம்மியபடி இருந்தவளை இடையோடு சேர்த்து  இழுத்து எங்கள் முன்னே நிறுத்தி...

“மீட் மை வைஃப், மை பெட்டர் ஹாஃப்.. மை ஆல் இன் ஆல்.. வாசவி...”

பரஸ்பரம் முகமன் சொன்னோம்... எல்லோர் நெற்றியும் சுருங்கியிருந்தது... அவள் மொத்த உருவமும் முரணாகவே இருந்தாள்.. 

எல்லோருமே அவளை சற்று விநோதமாகத்தான் பார்த்தோம்... குழந்தைகள் கண்களில் லேசாக மிரட்சி காட்டின... எங்களைக் கடந்து சென்றவர்கள்... திரும்பிப் பார்த்தபடியே சென்றார்கள்... காரணம்... அவளது caramel complexion... மினிமினுப்போடு.... வர்ணிக்க இயலாத அழகோடிருந்தாள்... இந்தியரைப் போலுமிருந்தாள்.. அப்படியில்லை என்பது போலுமிருந்தாள்... அதையெல்லாம் விஞ்சியது... அவள்.. கட்டியிருந்த காஞ்சிபுரம்.. மல்லிகைச்சரம்.. மெல்லிய வட்டமாய் குங்குமம்.. கழுத்தில் மெல்லியதாய் ஒரு சரடு...!  எல்லோரும் விநோதமாகப் பார்த்தது அவளை சங்கடப் படுத்திற்று போலும்.. வெட்கப்பட்டாள்...

எனக்குமே எங்கள் செய்கை அதீதமாய்த் தோன்றியது... யாரோ எவளோ.. நம் முரளியோடு.. அவன் மனைவியாக வந்திருக்கிறாள்.. அவள் இனி பிறத்தியாரில்லை.. சூழ்நிலையை சகஜப் படுத்தினேன்..

“சரி.. பாத்துண்டேயிருந்தா எப்படி... முதல்ல ஆத்துக்குப் போய்டுவோமே...”

வண்டியை நான் செலுத்தினேன்..  குழந்தைகள் அம்மாக்கள் மடியிலிருந்தவாறே அவளைப் பார்த்தன... க்ருஷ் மெல்ல அவளைத் தொட்டுப் பார்த்தான்.. 

“ச்சு.. என்ன பண்ற நீ... ஹலோ சொன்னியா அவங்களுக்கு...” வளர் அதட்டினாள்... அவளுக்குமே அவளை என்ன முறை சொல்லி அறிமுகப்படுத்த என்றுத் தெரியவில்லை... 

 

வீடு வந்தடைந்தோம்..

“கொஞ்சம் வெளியவே நில்லுங்க.. வந்துர்ரேன்...” வளர் முன்னே ஓடினாள்... 

ஆலம் கரைத்து வந்து ஆரத்தி எடுத்தாள்... சுற்றி.. அவள் நெற்றியிலும்.. அவன் நெற்றியிலும் ஒத்தி விட்டாள்... இந்த யோசனையெல்லாம் என்னாத்துக்காரிக்கு சுட்டுப் போட்டாலும் வராது... ஏன்னா ஏன்னான்னு கொஞ்சிக் குலாவி ஒரு புடவையோ.. சுரிதாரோ வேணா வாங்கத் தெரியும்.. அதெல்லாமில்ல.. வாய் கிழிய சட்டம்  பேசத் தெரியும்... எல்லாம் அவரவர் வாங்கி வர்ற வரம்.. என்ன பண்றது..?!

 

ஒவ்வொருவராக பேர் சொல்லி அவளுக்கு அறிமுகப் படுத்தினான் முரளி..

“சாரிடா... சின்னா கல்யாணத்துக்கும் வர முடியலை... அப்புறம் உன்னோட.. கலாட்டா கல்யாணத்துக்கும் வர முடியலை...”

“வந்ததும் உன் வேலைய ஆரம்பிச்சுட்டியே... இவ பேர் என்னடா சொன்ன... வாசவி... தான... வாசவியே தானா??”

 “இல்லடா.. இவ பேரு... CLAUDIA PATRICIA DELGADO..  எங்க கல்யாணத்துக்கப்புறமா.. அவளே தேடிண்ட பேரு தான் வாசவி.. நான் செலக்ட் பண்ண பேர் ம்ருணாளினி...  ஆனா அத இவ உச்சரிக்க ட்ரை பண்ணப்போ.. எங்க.. facial palsy வந்துடுமோன்னு பயந்து... அவ இஷ்டத்துக்கே விட்டுட்டேன்..”

நாங்கள் சிரிப்பதைப் பார்த்து அவளும் அரைகுறையாக புரிந்து கொண்டு சிரித்தாள்..! 

“வித்தியாசமா எடுத்துக்காதேள்.. வாசவிக்கும் புரியணுமோல்லியோ.. நாம கொஞ்சம் வெள்ளைக்காராளா மாறிடுவோமே..” 

“பேஷா மாறிட்லாம்.. அதான்.. ஏற்கனவே முக்கால்வாசி மாறினுட்டோமே..” சௌம்யா முகத்தில் வாய் கொள்ளாத சிரிப்பு.. 

இவ ஒரு லேட்டின் அமெரிக்கன்... என்னை கல்யாணம் பண்ணிண்டதும்.. இவளுக்கு நம்ம கலாச்சாரம் மேல தணியாத தாகம்.. இப்போ வரும் போது கூட நார்மலா தான் வந்தா.. கொழும்புல கனெக்டிங் ஃப்ளைட் வர இன்னும் டைம் இருக்கேன்னு... சிட்டி செண்டர் போனாலும் போனோம்.. இதெல்லாம் வேணும்னு அடம் புடிக்க ஆரம்பிச்சுட்டா... முதன் முதலா உங்கள பாக்க வர்றச்ச இது மாதிரி வரணும்னு ஆசையாம்... மல்லிச்சரம் பார்.. இன்னும் கூட வாடவேயில்ல...”

நான் சௌம்யாவை முறைத்தேன்..

“செத்த மூடிண்டிருக்கேளா..?” என்பதாய் பார்த்தாள்...

 

“அப்புறம் ஒரு விஷயம்... நீங்க ரெண்டு பேரும் தப்பா எடுத்துக்கப்படாது... ஈவினிங்... நான், வாசவி, கிச்சா, சின்னா மட்டும் வெளிய போறோம் டின்னருக்கு... வரும் போது உங்களுக்கும் சேர்த்து வாங்கி வந்துட்றோம்... டுடேஸ் டின்னர் இஸ் அப் ஆன் அஸ்...”

சௌம்யா ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள்.. வளர் முந்திக் கொண்டாள்...

“அதனாலென்னண்ணா.. நீங்க போய்ட்டு வாங்க... நாங்க குழந்தைங்கள பாத்துட்டு இங்கயே இருக்கறோம்.... இந்த வாண்டுகள வெளிய இடங்கள்ல சமாளிக்கறது கொஞ்சம் சிரமம் தான்” 

சௌம்யா என்னை முறைப்பதைப் பொருட்படுத்தாமல்.. அவளைப் பார்த்து ரகசியமாய் கண்ணடித்தேன்..!



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - இரண்டாம் பாகம் - 3
Permalink   
 


முரளி ரொம்பவும் சந்தோஷமாக இருந்தான்.. “டேய் அம்பிகளா.. டுடே அம் ஹேப்பி டு த கோர்... டின்னர் லேவிஷாயிருக்கணும்.. எங்க போலாம்?”

ஃப்ளேம்ப் போலாமாடா..? ”

ஐயோ.. போர் கிச்சா நீ... கோரமங்களாவே வேணாம்.. MG ரோட் போலாம்... டூ சேன்சரி..

“ஓகேடா .. என்ன முரளி... நோக்கு ஓகேயாடா..?”

“நேக்கென்னடா தெரியும்.. இப்பவே ரிசர்வ் பண்ணிட்றா கிச்சா..”

 

ஹோட்டலை அடைந்தோம்.. தனியாக இடம் ரிசர்வ் செய்திருந்தான் கிச்சா.. வேண்டியதை குறிப்பெடுத்து அந்த சிப்பந்தி அகன்றான்... 

“டேய்.. ரெண்டு பேரும் எழுந்து இப்படி கொஞ்சம் நில்லுங்கோடா...”

“எதுக்குடா..?”

“வாங்கடான்னா...” கையைப் பிடித்திழுத்தான்... கிச்சாவும் நானும் எழுந்து  டேபிளை விட்டு... தள்ளி நின்றோம்.. ஒன்றும் புரியவில்லை... 

“வாசவி... கமான் டியர்..” அவன் அழைத்ததும்... அவள் எங்களிருவரையும் நம்ஸ்கரிக்க... இருவரும் பதறினோம்.. 

“நன்னாயிரும்மா... ஐயோ.... என்னடா இதெல்லாம்... கெட் அப் வாசவி... ப்ளீஸ்.. இட்ஸ் ஓகே..” நான் அதிகம் உளறினேன்...

தலை நிமிர்ந்தவள்... கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர்... முரளியும் கண் கலங்கியிருந்தான்.. 

என்னடா முரளி இதெல்லாம்... அவ அழறா பார்... ஐயோ... நீயும் ஏண்டா கண்ணக் கசக்கிண்டிருக்க... மை டியர் அம்மாஞ்சி... ப்ளீஸ் ஹவ் யுவர் சீட்...”

சற்றைக்கெல்லாம் தர்ம சங்கடமாக இருந்தது...  

 

ரொம்ப எமோஷனாலாயிட்டோம்னு நினைக்கிறேன்... இல்லடா கிச்சா...  இப்பவாவது சொல்லு முரளி.. எதுக்கு இதெல்லாம்.. மனுஷா மனுஷா கால்ல ஏண்டா விழணும்.. திஸ் இஸ் டூ மச் மேன்...”

“டேய்... போன முறை நான் உங்கள சந்திச்சப்பவே... இனியும் தனியா இருக்கப்போறதில்லைன்னு சங்கல்பம் பண்ணிண்டேண்டா... உங்க ரிலேஷ்ன்ஷிப் பத்தி.. நல்ல வேளயா என்னாண்ட சொன்ன சின்னா... அதுக்கே.. நோக்கு நன்றி சொல்லணும்.. என் மேல நோக்கிருந்த நம்பிக்கைக்காக...” சொன்னவன்.. டக்கென்று நாக்கைக் கடிக்க... 

கிச்சா என்னை கோபமாக முறைத்தான்...

நான் தலை கவிழ்ந்திருந்தேன்... 

“ப்ளீஸ் கிச்சா... அவன கோச்சுக்காத... அவன் அவ்ளோ குழம்பியிருந்தான்... அப்போ... யாராண்டயாவது கொட்டணும்னு அல்லாடினான்”

“நேக்கு உன்னாண்ட சொன்னதப் பத்தி கோபமில்ல முரளி... என்னாண்ட இது வரைக்கும் இதப் பத்தி.. வாயவே திறக்கல தெரியுமா இவன்..”

“தப்புத்தாண்டா... முரளி உன் அம்மாஞ்சி... அதான் நீ எப்படி எடுத்துப்பியோன்னு...”

வாசவி.. எங்கள் சம்பாஷணையை... பதற்றமாய் கவனித்தாள்... 

அவளுக்காகவே சகஜமானோம்...

சரி.. முரளி.. இப்ப சொல்லு.. என்ன விஷயம்..” எனக்கு ஆவல் கொள்ளவில்லை... !

(தொடரும்)



__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
RE: You Are Cordially Invited - இரண்டாம் பாகம்
Permalink   
 


ஏங்க அப்படியே ஒரு பிராமணா அகத்துகுள்ள பூந்த  

எபெக்ட் இருக்கு,. ஜெயகாந்தன் கதைகள்ள வரது மாதிரி ஒரே அய்யர் பாஷை

நேக்கு ரொம்ப பிடிச்சிருக்கு'. உங்க அடுத்த பதிவுக்கு காத்திண்டு இருக்கேன்

அப்புறம் இந்த ஆலம், நு சொல்லிருக்கேளே அது அப்படியே வழக்கு மொழி

அற்புதம், அப்புறம் சங்கல்பம் இந்த வார்த்தை இப்ப உள்ள பிராமனாலே

அதிகம் உபயோக படுத்துறதில்லை. ஜமாய்ச்சு ட்டேள் போங்கோ!!!



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

தங்களின் மேலான கருத்துக்கு.. நன்றி.. ராஜ்குட்டி!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

good Idea...என்ன வாசவி ஒண்ணும் பேசவில்லையே ஒரு வேலை கொஞ்சம் இல்ல ரொம்ப புரட்சியாக அவங்கள பெண்ணாக மாறினவங்க சொல்ல போறிங்களா....சௌம்யா character இப்போ உள்ள girls மாதிரி இருக்கு ....all different characters so waiting for different story....

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

கொடுக்கிற பில்ட்-அப்புகளைப் பார்க்கும்போது அடுத்த அத்தியாயத்தில் எதோ வெடிகுண்டு வைக்கப் போறீங்க என்று தோன்றுகிறது. இப்படி சகஜமாக பிராமணாள் வழக்கில் எழுதுறீங்களே.. இதுக்கு பின்னாடி ஏதும் ரகசியம் இருக்கா?

__________________

gay-logo.jpg

 



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

//“இதுக்கு உண்மையா நான் என்ன பதில் சொல்றதுன்னு தெரியல முரளி... ஒரு பக்கம் நாம நினச்சதுநடக்கலயேன்ற அழுத்தம் மனச வாட்டும்... இன்னொரு பக்கம்.. குடும்பம்.. குழந்தேள்னு... யாருக்கும் போக்கு சொல்ல அவசியமில்லாம இருக்கோன்ற மன நிம்மதியுமிருக்கு...// maximum ippadi patta mana nilaila vaazhrava thaan adhigam..!

//எந்த விஷயமும் என்னோட இந்த நிலைப்பாட்ட மாத்திடல... என்னாலயும் என்ன மாத்திக்க முடியும்னு தோணல.. தவிர அதுக்கானஅவசியமும் இது வரைக்கும் வந்ததில்ல...//
appo ini varumnu soldrela..?

//.. டூ பி ஃப்ரங்க்... ஃபிசிக்கலா எதுவுமே எங்களுக்குள்ள இல்ல தெரியுமோ...// physically endha contactsum illaama love pandradhu romba sugamaana anubavam..!

-- Edited by Butterfly on Saturday 3rd of August 2013 03:01:30 PM

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

@ samram : எப்படிங்க இப்படி... உங்களால மட்டும் வித்தியாசமா சிந்திக்க முடியுது.. நீங்க சொல்றது சரி தான்... :)

@ ArvinMackenzie : நன்றி அர்வின்.. அது ரகசியமான்னு தெரியல.. ஆனா அது தான் காரணம்... பாலகுமாரன் நாவல்கள்!

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - இரண்டாம் பாகம் - 4
Permalink   
 


“சொல்றேண்டா... சோ... உங்கள பாத்துட்டுப் போனதும் வாழ்க்கைத்துணைனு ஒரு விஷயத்தப் பத்தி யோசிச்சேன்... நன்னா யோசிச்சா ஒன்னு புரிஞ்சது..நேக்கு கம்பேனியன்னு ஒண்ணு தேவப்படறதே தவிர.. அத தாண்டி மத்த கமிட்மெண்ட்ஸ்னாலே அலர்ஜி-னு... சோ.. கமிட்மெண்ட்ஸ் இல்லாத வாழ்க்கைய ரசனையா வாழ்ந்தா என்னன்னு தோணித்து.. ரெண்டு பேருக்கும் ஞாபகம் இருக்கான்னு தெரியல.. நாம  மனோரா போனப்ப சொன்னேனில்லயோ.. ஒருமுறை ஒரு லேட்டின் அப்சரஸ சந்திச்சேன்னு...”

கிச்சா ஆர்வமானான்... ஆமா.. ஆமா.. எப்படிடா மறக்க முடியுமா.. அந்த டி..”

ஏதோ புரிவதாகத் தோன்றியதால்.. அவன் கையை அழுத்தினேன்... “மூடு... அவன் முடிக்கட்டும்...  அது வரை பொறுமையாயிரு..”

முரளி சிரித்தான்..

“அதே தான் கிச்சா... அவள பண்ணிண்டா என்னன்னு தோணித்து.. உங்களாண்ட சொல்றதுக்கென்ன.. இவோ தான் அவோ”

விழி விரிய அவளை ஏறிட்டோம்.. மெல்லியதாய் ஒரு புன்னகை சிந்தினாள்.

“இவள நான் முதல்முற சந்திச்ச இடத்துக்கேப் போனேன்.. அந்த இடத்துக்கு அதுவரை சுகந்தேடி போனப்பெல்லாம்.. ஒரு பிரச்சனையுமில்லடா... ஆனா.. ஒரு பர்டிகுளர் ஆளத் தேடிப் போறது எவ்வளவு பெரிய தப்புன்னு அப்பத் தாண்டா புரிஞ்சது.. மாஃபியாக்கள் கீழ அங்க வேலை செய்யறவாள்லாம்... கொஞ்சமில்ல.. ரொம்பவே பாவம்டா... நேக்கு அது நாள் வரை அவா மேலெல்லாம் பெரிசா.. ஒரு அக்கறையும் இருந்ததில்லை.. இன்னும் சொல்லப் போனா கேவலமா தான் நினச்சிருக்கேன்... பணத்துக்குப் படுக்குற ஜென்மாக்கள்னு “

ஸ்டார்டர் சூப் வந்தது... பருகியபடியே தொடர்ந்தான்... 

“அந்த மாஃபியாவோட உருட்டல் மிரட்டலுக்கெல்லாம்.. உள்ளூர உதறினாலும்... பயத்த காட்டிக்காம.. இவளப் பத்தி விஜாரிச்சேன்... எதுக்குன்னு கேட்டு பளார்னு அறைஞ்சான்... இவ நான் அறை வாங்கினதப் பாத்துண்டேயிருந்திருக்கா நேக்குத் தெரியாம... நான் வெளிய வந்த கொஞ்ச நேரத்துல என் பின்னாலயே வந்து.. எதுக்காக என்ன விஜாரிச்சன்னு கேட்டா... நான் மேரேஜ் பத்தி சொன்னதும்... ரொம்ப சிரிச்சாடா... வர்ற கஸ்டம்ர்ஸ்ல முக்கால்வாசி பேர் இத சொல்றான்... என்ன நீ கொஞ்சம் லேட்டா சொல்றன்னு என்ன விரட்டிட்டாடா... ஆனாலும் அவ கிட்ட என் card கொடுத்துட்டு யோசிச்சி சொல்லுன்னு வந்தேன்.. கரெக்ட்டா மூணாவது நாள் என்னத் தேடி என் ஆஃபிஸ் வந்தா...”

“ஐ லவ் யூன்னு சொன்னாளாக்கும்...?”

“செத்த மூடிண்டிரேண்டா கிச்சா... அவன் தான் சொல்லிண்டிருக்கானோ இல்லியோ ... வழக்கமா நான் தான் பொறுமையில்லாம இருப்பேன்... இப்ப என்னாச்சு நோக்கு... தோ... என் சூப் கொஞ்சம் மிச்சமிருக்கு... எடுத்துக்கோ... ஸ்பூன போட்டு நக்கிண்டிரு..  நீ சொல்லு முரளி..” முறைத்தவனை பொருட்படுத்தாமல் முரளியிடம் கதை கேட்க ஆர்வமானேன்..

ரொம்ப சீரியசாவே ஆரம்பிச்சா.. என்னால நோக்கு ப்ரோயஜனமிருக்காது.. நான் ஒரு டி-கேர்ள்... அதுலயும் ப்ரோத்தல்ல இருக்கறவா.. நோக்கு நான் புள்ள பெத்துக் கொடுக்க முடியாதுன்னு... என்னென்னவோ... நான் எல்லாம் கேட்டுண்டு... எப்ப கல்யாணத்த வச்சிக்கலாம்னு கேட்டேன்... வேற வழி?!... ஒத்துணுட்டா... இப்படித்தான் கிடைச்சா இந்த ப்ரின்செஸ்...” அவளை அணைத்துக் கொண்டான்.. அவள் கூச்சத்தில் நெளிந்தாள்... !

“உங்க ரெண்டு பேராலயும் தான் நாங்க சேர்ந்ததா அடிக்கடி சொல்வார்... அதனால தான் உங்களுக்கு ப்ரத்யேகமா நன்றி சொல்லணும்னு தனியா அழைக்கும்படியா ஆயிடுச்சு... அவங்கள வீட்ல விட்டு வரும்படியாவும் ஆயிடுச்சு.. மன்னிக்கணும்..”

“சே.. சே.. தப்பேயில்ல... இன்ஃபக்ட்... அவங்களையும் அழைச்சிண்டு வந்திருந்தா தான் எங்களாண்ட மன்னிப்பு கேட்டிருக்கணும்.. இல்லடா சின்னா...?” நான் தலையசைத்து ஆமோதிக்கவும்... அவள் சிரித்தாள்... 

“ஐயோ.. அப்படியெல்லாம் சொல்லாதீங்க... வேற வழியில்லாம தான் அப்படி பண்ணினோம்... மத்தபடி.. சௌம்யா.. வளர்.. உங்க பையன்.. இவர் பொண்ணு எல்லாரையும் பாக்கும்போது எனக்கு சந்தோஷமாயிருக்கு...” அவள் கண்களில் ஏக்கம்..!

ஃபர்ஸ்ட் செர்விங் வந்தது... ! சாப்பிட ஆரம்பித்தோம்.. 

“டேய்... நீங்க எப்படிடா இருக்கேள்... ஐ மீன்.. உங்க.. காதல் வாழ்க்கை... தப்பா எடுத்துக்காதேள்டா... உங்களோட நான் இல்லேன்னாலும் அது பத்தி மனசு.. ரொம்பவே அடிச்சிக்கும்...” 

“தேங்க்ஸ் முரளி... நீயாவே ஆரம்பிச்சுட்டே... தப்பா எடுத்துக்க எதுவுமில்லை.. கிச்சா... நோக்கொண்ணும் objection இல்லியோன்னோ..?”

அவன் இல்லை என்பதாய்.. தலையசைத்தான்.. ஆனால் அவன் கண்கள் என்னவோ... தீவிரமாய்.. அந்த பச்சைப் பட்டாணியை ஸ்பூனில் தள்ளுவதிலேயே ஆர்வம் காட்டின... 

முரளியும் வாசவியும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர்..!



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - இரண்டாம் பாகம் - 5
Permalink   
 


“இதுக்கு உண்மையா நான் என்ன பதில் சொல்றதுன்னு தெரியல முரளி... ஒரு பக்கம் நாம நினச்சது நடக்கலயேன்ற அழுத்தம் மனச வாட்டும்... இன்னொரு பக்கம்.. குடும்பம்.. குழந்தேள்னு... யாருக்கும் போக்கு சொல்ல அவசியமில்லாம இருக்கோன்ற மன நிம்மதியுமிருக்கு... 

நான் ஆரம்பத்துல இவன நம்பல தெரியுமோ... நான் எங்கடா போப்போறேன்... உன்னோடவே தான் இருப்பேன்னு இவன் சொன்னப்போ... நேக்கென்னமோ... இவன் என்னை கல்யாணத்துக்கு சம்மதிக்கறதுக்காகத் தான் அப்படி சொல்றான்னு தோணித்து... 

ஆனா நிஜமாவே இவன் பக்கத்துலயே தான் இருக்கான்ற எண்ணம் எப்பவும் என்னுள்ளேயே இருக்கு முரளி... எந்த விஷயமும் என்னோட இந்த நிலைப்பாட்ட மாத்திடல... என்னாலயும் என்ன மாத்திக்க முடியும்னு தோணல.. தவிர அதுக்கான அவசியமும் இது வரைக்கும் வந்ததில்ல... 

காரணம்... லீவ் லீவுக்கு பெங்களூர் வந்துட்றோம்... அப்படி வரும் போதெல்லாம்... குழந்தேளோட அம்மாக்கள் தனியா போய்டுவா... நானும் இவனுமா.. மணிக்கணக்குல பேசிண்டே இருப்போம்... எங்க விஷயத்துல எதுவும் மாறிடல... டூ பி ஃப்ரங்க்... ஃபிசிக்கலா எதுவுமே எங்களுக்குள்ள இல்ல தெரியுமோ... இந்த அண்மைக்காகத் தான் நான் கல்யாணத்துக்கு மறுத்தேன்னு இப்ப யோசிச்சா புரியறது... இன் அ வே.. வீ ஆர் லக்கிடா... ஆனா பாவம் எத்தன பேருக்கு இப்படி ஒரு லைஃப் கிடைக்கும்னு தெரியலை....” 

“உண்மை தான் சின்னா... வாழ்க்கை முழுக்க நரகமாவே போனவாளும் இருப்பா இல்லியா... ஒரு வகைல நீங்க ரெண்டு பேரும் எஸ்கேப் ஆயிட்டேள்டா...”

“முரளி... ஒண்ணு தெரியுமோ... நம்ம கிச்சா இப்போ இது மாதிரி உள்ளவாளுக்குன்னு  online-ல ஏதேதோ forum-னெல்லாம் வச்சிருக்காளாண்டா.. அதுல சேந்து அவா problems என்னன்னு தெரிஞ்சிக்கறானாண்டா...”

“நிஜமாவா கிச்சா..?”

“ஐயோ முரளி... அதெல்லாமில்லை... இவன் ஏதோ உளறிண்டிருக்கான்னா... நீ வேற... ஒருத்தருக்கொருத்தர் பிரச்சனைகள பேசித் தீர்த்துக்கறா...  குமுறல்கள கொட்டித் தீர்த்துக்கறா.. அவ்வளவு தான்..”

“அ...வ்...வளவு தானா...? எங்க என் கண்ண பாத்து சொல்லுடா கிச்சா... பொய் சொல்றான் முரளி... ஆத்துக்காரியும் பேங்க்ல வேல பாக்கறான்ற ஜோர்ல.. கல்யாணம் ஆகி ஒரு வருஷ்மாகியும் கன்சீவ் ஆகலயேன்ற கவலைல.. ஐயா... ஆர்டிஃபிசியல் இன்செமினேஷன்... ஐ.வி.எஃப்-னெல்லாம் மண்டையக் கீறிண்டிருந்தான்... நான் எவ்வளவு சொல்லியும் கேக்கலத் தெரியுமோ... அப்புறம்... இவா ஃபோரம்-ல யாரோ... சொன்னான்னு தான் மனச மாத்தி தைரியமானான்... அப்புறம் தான்.. ஸ்ரீநிஷா பொறந்தது... அவர் பேர் என்னடா கிச்சா... விச்சுவா? வினயா? “வி”-ல தான் ஸ்டார்ட் ஆகும்..சின்ன பேர் தான்.. ஞாபகம் வரமாட்டேன்றது பாரேன்.. ம்ம்.. விஜயாடா?... நீ தான் சொல்லித்தொலையேண்டா?”

கிச்சா புன்னகையை மட்டும் பதிலாகத் தந்தான்.

“சொல்லமாட்டானே... சிரிச்சே மழுப்புவான் முரளி... கல்லுளிமங்கன்”

“பொண்ணாடா.. நோக்கு... அப்போ... உன்னோடவே ஒட்டிண்டு கெட்சப், கெட்சப்னு சொல்லிண்டிருந்தானே அது சின்னா பையனாடா..?”

“ஐயோ.. முரளி.. அது கெட்சப் இல்ல... கிச்சாப்பா.. கிச்சாப்பான்னு தான் இவன அவன் கூப்பிட்றது..” நானும் கிச்சாவும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்தோம்...!

வாசவி குறுக்கிட்டாள்... “இதுல என்னமோ இருக்கு... எதுக்கு சிரிச்சீங்க இப்ப நீங்க ரெண்டு பேரும்..?”

“யூ ஆர் ரைட் வாசவி... சென்னைல வளர்றது கிச்சா பொண்ணு... இங்க இருக்கறது என் பையன்..”

(தொடரும்)



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
RE: You Are Cordially Invited - இரண்டாம் பாகம்
Permalink   
 


//“யூ ஆர் ரைட் வாசவி... சென்னைல வளர்றது கிச்சா பொண்ணு... இங்க இருக்கறது என் பையன்..”//
பேசாம நீங்க மெகா சீரியல்களுக்கு கதை எழுதப் போகலாம் அண்ணா.. என்னமா டிவிஸ்ட் வெக்குறீங்க..

//உண்மை தான் சின்னா... வாழ்க்கை முழுக்க நரகமாவே போனவாளும் இருப்பா இல்லியா//
அப்படிப் போனவா தான் நிறைய இருப்பான்னு நேக்கு தோணறது.

__________________

gay-logo.jpg

 



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

வாவ் ....எப்பவும் பார்ட்-2 அவ்வளவு நல்லா,புதுசா இருக்காது even இந்த கதைப்படி யாராவது ஒருத்தர் சோகமா இருப்பாங்கன்னு நினைத்தேன் but இந்த "மாத்தி யோசி " டெக்னிக் நல்லாருக்கு ....
டூ பி ஃப்ரங்க்... ஃபிசிக்கலா எதுவுமே எங்களுக்குள்ள இல்ல தெரியுமோ... இந்த அண்மைக்காகத் தான் நான் கல்யாணத்துக்கு மறுத்தேன்னு இப்ப யோசிச்சா புரியறது... இன் அ வே.. வீ ஆர் லக்கிடா... ஆனா பாவம் எத்தன பேருக்கு இப்படி ஒரு லைஃப் கிடைக்கும்னு தெரியலை....” ரொம்ப உண்மையான வரிகள்...
ம்ம்.. விஜயாடா?... நீ தான் சொல்லித்தொலையேண்டா?”...ஓஹோ விஜய் கவுன்சிலிங் இவ்ளோ வேலை பார்க்குதா....குட் ....
----ரொம்ப ரசிச்சு படித்தேன்...இந்த பதிவை...usually ...dont find mistake find remeady that will improve your life...இது என்னோட mindல அடிக்கடி வரும் இப்போ உங்க கதைல அது இருக்கு....குட் keep it up

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

வாவ்... சுடச்சுட கமெண்ட் பாக்கற த்ரில் அலாதியா இருக்கு... அந்த வகைல... நம்ம மித்ரா.. samram ரெண்டு பேருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி...!

@ ArvinMackenzie - மெகா சீரியலா... ?? நானா??? “அண்ணாமலை” சீரியலோட... எனக்கு மெகா சீரியல் மேலயே வெறுப்பு வந்துடுச்சி...

@ samram - கில்லாடியானா ஆள்யா நீங்க... கட் அவுட் வச்சி நன்றி சொல்லாட்டியும்... கதைல நன்றி சொல்லி ஒரு சின்ன சந்தோஷம்... !!




__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

அன்புள்ள மாம்ஸ்!!

###ஃபர்ஸ்ட் செர்விங் வந்தது... ! சாப்பிட ஆரம்பித்தோம்.. ###

##ஸ்டார்டர் சூப் வந்தது... பருகியபடியே தொடர்ந்தான்... ###

கதையின்  இடையிடையே அங்கு நடக்கும் இது போன்ற சில சில விஷயங்களை ஜெயகாந்தன், ராஜேஷ் குமார் கதைகளில் பார்க்கலாம் 

அப்பொழுதுதான் அந்த இடத்தில் நாமும் இருக்கிற உணர்வை ஏற்படுத்தும் 

அதே போல நீங்களும் எழுதி தாங்கள் ஒரு தேர்ந்த எழுத்தாளர் என்பதை நிரூபிக்கிறீர்கள்.

 

தலைவர் இன்னும் படிகலையோ? (விஜய் அவர்கள்)

 



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

Very Nice episode dA very intresting pls mail the next 1 soon cant wait.


regards

Thiva

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

செம பீல் உள்ள கதை... செக்கண்ட் பார்ட் செம சூப்பர்...

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 80
Date:
Permalink   
 

அடடா என்னமா எழுதியிருக்கேள். ரொம்ப நன்னா இருக்கு, பேஷா கண்டினியு பண்ணுங்கோ.

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

@ Butterfly : இனி வரும்னு மீன் பண்ணல... ஐயோ பாவம்.. அவங்களாவது சந்தோஷமா இருந்துட்டு போகட்டுமே.. பதிவுக்கு நன்றி..!

@ rajkutty kathalan : நன்றிப்பா! அவர் ஏற்கனவே படிச்சிட்டார்.. :)

@ thiva : நன்றி திவா.. selamat hari raya!!

@ tirupurbabu : Thanks buddy!

@ chathero2006 : வருகைக்கும் பதிவுக்கும் ரொம்பவே நன்றி!

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - இரண்டாம் பாகம் - 6
Permalink   
 


நிஜமாவாடா சொல்ற? அவா ரெண்டு பேரும் எப்படிடா ஒத்துண்டா?”

“எங்க முரளி ஒத்துண்டா... இதோ... இந்த பிரஹஸ்பதி உட்பட யாருமே ஒத்துக்கல... நேக்குத்தான் ப்ரம்மபிரயத்தனம்.. பகீரதப்பிரயத்தனம் ஆயிடுத்து.. நேக்குமே முதல்ல அது மாதிரி ஒரு யோஜனை இல்ல முரளி...  க்ருஷ் பிறந்து ஒண்ணே முக்கால் வருஷம் கழிச்சுத் தான் இவன் பொண்ணு பொறந்தா... அன்னிக்கு நீ பாக்கணுமே... அப்படியே கிச்சாவ கொண்டிருந்தாடா... அப்பத் தான் நேக்குத் தோணித்து.. நாம ஏன் வளக்கப்படாதுன்னு... 

என் மன்னி கிட்ட தான் கேட்டேன்.. இதுல என்ன இருக்கு.. எல்லோரும் ஒத்துணுட்டா தாராளமா பண்ணலாமேன்னா.. அண்ணா.. அவ்வளவு பிரியப்படலைன்னாலும்.. மன்னி சொன்னப்புறம் அவன் மறுபேச்சு பேசறதில்லை... சோ... இந்த விஷயத்துல முழு மனசா ஒத்துண்டா ரெண்டு பேர்ல முத ஆள் என் மன்னி தான்... அடுத்தது.. யார் தெரியுமோ... வளர்மதி... பொக்கிஷமா பெத்த குழந்தை அது... நான் இத்தனைக்கும் அவ ஹாஸ்பிட்டல்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆறதுக்கு முன்னமே இவன் இல்லாதப்ப அவ கிட்ட தயங்கி தயங்கி கேட்டேன்.. 

உங்களுக்கில்லாமலா.. தவிர உங்க குழந்தைய எங்கள நம்பி ஒப்படைக்கறதா வேற சொல்றீங்க... தாராளமா எடுத்துக்கோங்கண்ணா... ஒரே ஒரு வருஷம் மட்டும் என்னாண்ட இருக்கட்டும்னு சொன்னாடா... சோ... வளர் தரப்புலயும் ரூட் க்ளியர்... 

அடுத்து நான் ரொம்ப பயந்தது.. சௌம்யா.. நான் சொன்னதும் தாம் தூம்னு குதிச்சா... லேபர் பெயின் பத்தி எதனா தெரியுமா..  postpartum hemorrhage பத்தி எதனா தெரியுமா.. செத்து பொழைக்கற அனுபவம்னா அது... கேள்வி பட்டிருக்கேளா.. பிரசவ வைராக்கியம் மயான வைராக்கியம்னு... என்னெல்லாமோ டயலாக் விட்டா..”

நான் இடையிடையே தமிழில் சொல்லும் போதெல்லாம்.. வாசவி முரளியைப் பார்க்க.. அவன் அதை ஆங்கிலத்திலும் ஸ்பானிஷிலுமாக மொழி பெயர்த்தான்..

செகண்ட் செர்விங் வந்தது... 

“டேய் .. இதுக்கு மேல நேக்கு போறும்னு தோணறது... நீ வேணா.. இப்பவே நாம ஆத்துக்கு எடுத்துண்டு போறதுக்கும் சேர்த்து ஆர்டர் பண்ணிட்றா...” கிச்சா அதற்கு மேல் கண்டிப்பாக சாப்பிட மாட்டான் என்பதால் மறுத்து விட்டான்

“ஆமா.. முரளி... இவன் சொல்றது சரி தான்.. ஆர்டரோட சேர்த்து.. ரெண்டு ஃபலூடா சொல்லிட்றா.. அம்மா பொண்ணு ரெண்டு பெருக்கும் அதான் ஃபேவரைட்..”

“நல்ல காலம் சொன்ன... ஒரு ஹேஷ் ப்ரௌன்னும் ஒரு பாதாம் அல்வாவும் சொல்லிட்றா... வளர கூட சமாளிச்சிட்லாம்.. அந்த குட்டி வாண்ட சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்.. அப்படியே அப்பன் புத்தி...” என்னை சீண்டினான் கிச்சா.. 

“ஹேஷ் ப்ரௌன் இப்பவாடா...? அத ப்ரேக்ஃபாஸ்ட்டோடல்ல சாப்பிடுவா..”

“நத்திங் ஹார்ட் அண்ட் ஃபாஸ்ட்... க்ருஷ்ஷுக்கு எப்ப வேணா அது ஓகே...”

நல்ல கிச்சாப்பா... நல்ல பிள்ளை... சரி.. நீ ... சொல்றா.. அப்புறம் எப்படித்தான் சௌம்யா ஒத்துண்டா...?”

“சொன்னா சிரிப்ப முரளி... அவளுக்கு தெரிஞ்ச பரதத்த கத்துக்கொடுக்க க்ருஷ்ஷ விட ஒரு பொண் குழந்தை தான் பெட்டர்னு அவளுக்காத் தோணித்து.. அவ நிஜமாத் தான் சொல்றாளான்னு நேக்கு doubt..  அதுக்கேன் அவா குழந்தைய கேக்கறது.. நாமளே இன்னொன்னு பெத்துண்டா என்னன்னு கேட்டேன்.. போறுண்டாப்பா.. இந்த ஒண்ணே ஆயுசுக்கும் போறும்னுட்டா.. சோ... சௌம்யா தரப்புலயும் ரூட் க்ளியர்...

இதென்னடா இது.. அற்ப காரணமான்னா இருக்கு.. பசங்க கத்துக்கூடாதுன்னு ஒன்னு இதுல இருக்கா..?”

“அதையும் கேட்டேன் முரளி... அதுக்கு அவ டான்ஸ் மாஸ்டரையே உதாரணம் காட்டினா.. நம்ம தஞ்சாவூர் பக்கத்து மெலட்டூர் பாணியில மனுஷன் பிச்சு உதறுவாராம்.. அதுலயும்.. ஆம்படையானும் பொம்மனாட்டியுமா சேர்ந்து ஆட ஆரம்பிச்சான்னா.. கண் ரெண்டு போறாதாம் பாக்கறதுக்கு.. அவ்வளவு திவ்யமா இருக்குமாம்... ஆனாலும் மேல் டான்சர்ன்ற ஒரு காரணத்தால அவர் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்காராண்டா..  எத்தனையோ.. ஸ்டார்ஸ் இருக்கா  டான்ஸ் தெரிஞ்சவா..  ஆனா.. நான் என் கண்ணால பாத்த நிலைமை என் பிள்ளைக்கு வரக்கூடாதுன்னுட்டா... சரி போ.. நேக்கு நீ சம்மதிச்சதே பெருசுன்னு விட்டுட்டேன்...”

“சோ... எல்லாரும் சம்மதிச்சுட்டாளாக்கும்...?”

“எங்க... தோ.. இவன் பண்ண ரகளையா நான் இன்னும் சொல்லலயே..”



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - இரண்டாம் பாகம் - 7
Permalink   
 


நான் இவன கணக்குலயே எடுத்துக்கலடா... நான் சொன்னா கேப்பான்னு ரொம்பவும் நம்பினேன்.. ஆனா.. வெண்ண திரண்டு வர்றச்ச தாழி உடைஞ்ச மாதிரி... ம்.. ஆமா.. இதையும் அவளுக்கு டிரான்ஸ்லேட் பண்ணிடு... கஷ்டம்டா சாமி... க்ராஸ் கல்ச்சர் மேரேஜஸ்ல... இது ஒரு பிரச்சனையில்ல...? நீங்க ரெண்டு பேரும் எப்படிடா பேசிக்குவேள்...? தமிழும் இங்லீஷுமா கலந்து பேசறது... நேக்கே... என்னவோ போல.. விநோதமா இருக்கு..”

“முன்னெல்லாம் இங்லீஷ்ல.. இப்ப ஸ்பானிஷ்ல... இவளுக்காகவே கத்துண்டேன்... வென் ஐ டாக் டூ ஹெர் இன் ஸ்பேனிஷ்.. ஷீ ஃபீல்ஸ் மீ க்ளோஸ் டூ ஹெர் ஹார்ட்... ரைட் பேபி?”

அவள் சிரித்து ஆமோதித்தாள்.. 

“தவிர இவளுக்கு ஒரு காம்ப்ளக்ஸ்டா... இவ இங்லீஷ் பேசும் போது ஸ்பேனிஷ் அக்செண்ட் வர்றதுன்னு..”

“கரெக்ட்.. நானே யோசிச்சேன்.. எங்க ஃபிலிப்பினோ க்ளைய்ண்ட்ஸ் கூட இதே மாதிரி தான் பேசுவா... probably because of their Spanish connections..

ம்.. நீ மேல சொல்லு...” கிச்சா கதையை நினைப்பூட்டினான்..

“அட இவன பாரேன்... இவன் கதைய கேக்கறதுக்கே இவன் ஆளா பறக்கறான் பார்.. ம்.. அதான் முரளி.. எல்லாரும் சரி சொன்ன பிறகு.. இவன் ரொம்ப பிடிவாதமா இருந்தான்... எதுக்கு இதெல்லாம் தேவையில்லாம... அவா அவா குழந்தை.. அவா அவா ஆத்துலயே வளரட்டும்னான்.. ரொம்ப கெஞ்சி பாத்தேன்.. கொஞ்சம் சத்தமெல்லாம் கூட போட்டு பாத்தேன்... ஒண்ணும் ஆகறதா தெரியல.. அப்புறம் வேற வழியில்லாம... இவன் பாணியிலையே டீல் பண்ணினேன்...

அப்படி என்ன செஞ்சீங்க..?” வாசவி ஆர்வமானாள்...

“பாரேன்... gossip கேக்கறதுக்கு எல்லா ஊர் பொம்மனாட்டிகளும் ஒருத்தருக்கொருத்தர் சளைச்சவா இல்ல போல..”

“நீ சும்மா இரு முரளி... நீங்க சொல்லுங்க சின்னா...”

“என்ன சொல்லவாடா... அந்த டெக்னிக்க..?”

“அதான் எல்லாத்தையும் சொல்லிட்டியே..  முழுக்க நனஞ்சப்புறம் முக்காடா..” கிச்சா பச்சைக் கொடி காட்டினான்.. 

இவன கொஞ்சம் வாடான்னு தனியா இழுத்துட்டுப் போய்... இப்படி இழுத்து ..  கன்னத்துல அழுத்தமா... ம்ம்ம்ம்ம்ம்”

வாசவியும் முரளியும்.. கைதட்டி ஆர்ப்பரித்தார்கள்..

எதேச்சையாக உள்ளே வந்த பேரர்.. ஒரு நிமிடம் திகைத்தான்... ஓ.. ஐ அம் சாரி..

நோ ஹார்ம்.. இட்ஸ் ஓகே..”

யுவர் டேக்-ஹோம் ஆர்டர்ஸ் ஆர் ரெடி.. எனிதிங்எல்ஸ் சார்..?”

தேங்க் யூ... வீ.. ஆர் டன்.. கேன் யூ கெட் அஸ் அவர் பில்ஸ்.. ப்ளீஸ்” 

ஷ்யுர் சார்..” கிச்சாவையும் என்னையும் ஒரு மாதிரியாக பார்த்தபடியே நகர்ந்தான்..!

நான் தெரியாமத்தான் கேக்கறேன்... அப்படி ஏண்டா..  குழந்தேள மாத்தி வளக்கணும்னு அவ்வளவு பிடிவாதமா இருந்த நீ..? நேக்கென்னமோ... கிச்சாவ விட நீ தான் பிடிவாதமா இருந்திருக்கேன்னு தோணறது சின்னா..”

“அப்படி கேளு முரளி.. இப்பத்தான் நீ என் அம்மாஞ்சின்னு ப்ரூவ் பண்ற... இவன் என்னமோ நான் மட்டும் தான் பிடிவாதம் பிடிச்சேன்ற மாதிரி பேசிண்டிருக்கான்... நேக்கென்ன ஆளில்லைன்னு நினச்சியாடா.. சின்னா படவா...”

கிச்சாவின் சீண்டலைப் பொருட்படுத்தாமல் நான் தொடர்ந்தேன்.

(தொடரும்)



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 80
Date:
RE: You Are Cordially Invited - இரண்டாம் பாகம்
Permalink   
 


பழைய கதை, நிகழ் காலம்-னு மாறி மாறி வந்தாலும் சுவாரஸ்யமா இருக்கு. இப்படியே கதை சொன்ன சௌஜன்யமா உட்காந்து கேட்டுண்டே இருக்கலாம்

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

semma rakalaiya pokuthu
cntnue dude

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Wow..! Super story..! Part two is more fun and humores..! Wonderfull..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

கொஞ்சம் லாஜிக் இல்லாத சினிமா மாதிரி இருந்தாலும் கதை நல்ல சுவாராசியமா இருக்கு.... குழந்தேள மாத்தி வளக்கணும்னு அவ்வளவு பிடிவாதமா இருந்த நீ..?,,,இதை கதையா பார்த்தால் ஓகே...ரியலாகன்னா nobody can replace a mummy and daddy...அது எவ்ளோ அன்பான உறவாக இருந்தாலும் கூட ....எல்லா காதல்களும் நம் அம்மா,அப்பாவின் அன்போ அல்லது அது கிடைக்காத தேடல்களே...
நீங்க ரொம்ப "மாத்தி யோசி"கிறீங்க...but I like ur fantasy style in ur story.... “இவன கொஞ்சம் வாடான்னு தனியா இழுத்துட்டுப் போய்... இப்படி இழுத்து .. கன்னத்துல அழுத்தமா... ம்ம்ம்ம்ம்ம்”...ha ha good it shows the real love between them...

__________________


புதியவர்

Status: Offline
Posts: 4
Date:
Permalink   
 

இது இந்த தளத்தில 'கன்னத்தில் முத்தம் கொடுக்கும் எபிசோட்' போல.. ஆளாளுக்கு கொடுக்கறாங்க.. ஹ்ம்ம்..

ஒவ்வொரு பாகத்திலும் புதுசா எதாவது ஒரு term சொல்லி அதுக்கு விளக்கத்துக்கு லிங்கும் கொடுக்கரீங்க.. நல்லாயிருக்கு.

சீரியல் எல்லாம் பிடிக்கதுன்னு சொல்லிட்டு, நீங்களும் மெகா சீரியல் ரேஞ்சுக்கு இப்படி கடைசி வரியில சஸ்பென்ஸ் வெக்குறீங்க..

__________________


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

 

 

அத்திம்பேர்,

  பகீரத பிரயத்தனம் தெரியும், படிச்சிருக்கேன்;

அதென்ன ஓய் பிரம்ம பிரயத்தனம் கேள்விபடாத ஒன்னான்னா இருக்கு நேக்கு.

ஆயிரம் இருந்தாலும் இவா ரெண்டு பேரும் அடுத்தவா முன்னால முத்தம் 

கொடுத்துக்குறது நேக்கு ஒரே வெக்க வெக்கமா போயிடுத்து போங்கோ!!!

ஒரு பிராமணாள் அகத்துக்குள்ள போய்ட்டு வந்த மாதிரின்னா இருக்கு 

ஒவ்வொரு தடவையும் வாசிக்கிரச்ச.!!!

 

 



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
நன்றி
Permalink   
 


chathero2006 : ////இப்படியே கதை சொன்ன சௌஜன்யமா உட்காந்து கேட்டுண்டே இருக்கலாம் //// நன்றி நண்பா..!! 

cutenellaimdu : Thank you dude!!

Butterfly : Thanks Buddy!

samram : லாஜிக் இல்லாத விஷயம் தாங்க.. முன்ன.. நானும் என்னவனும் இது மாதிரி தான் யோசிச்சோம்.. மாத்தி வளக்கறதுன்னு..!!! அந்த பாதிப்பு தான் இதுல அப்படி சொல்லியிருக்கேன்..!! தங்களது கருத்துக்கு என் மனமார்ந்த நன்றி!!!

Arvin : எஸ்... இது முத்த வாரம்...! அப்பாடா... அட்லீஸ்ட் ஒரு ஜீவனாவது "லிங்க்" விஷயத்த பத்தி சொல்லியிருக்கேன்னு சந்தோஷமா இருக்கு.. என்னய்யா பண்றது..? J D Cadinot.. Yandamuri Veerendranath-னு என்ன விஷயம் சொன்னாலும்.. உடனே wikipedia-ல க்ராஸ் செக் பண்ணிக்கரீங்க... உங்களுக்கோசரம் தான்!!! நன்றி அர்வின்!!!

rajkutty kathalan : முயற்சியின் தீவிரத்தை உணர்த்த பயன்படுத்தும் வார்த்தைகள் ப்ரம்மபிரயத்தனம்.. பகீரதப்பிரயத்தனம் முன்னது தோல்வி.. பின்னது வெற்றி!

//////படைக்கும் கடவுளாகிய நான்முக பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளாகிய திருமாலுக்கும், தங்களில் யார் பெரியவர் விவாதம் உண்டாகி, சிவபெருமானிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க, சிவபெருமான் தனது அடியை அல்லது முடியை உங்களில் யார் கண்டு வருகிறீர்களோ அவர் தான் பெரியவர் எனக் கூற திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியைக் குடைந்து சென்றார். அடியைக் காண இயலாமல் சோர்ந்து திரும்பினார். பிரம்மன் அன்னப் பறவையாக உருவெடுத்து சிவபெருமானது முடியைக் காண உயரப் பறந்து சென்றார். முடியைக் காண இயலாமல் தயங்கி பறக்கும்போது சிவன் தலை முடியில் இருந்து தாழம்பூ கீழே இறங்கி வந்ததை கண்டு, அதனிடம் பிரம்மன் முடியைக் காணும் முயற்சியை விடுத்து, தாழம்பூவிடம் ஒரு பொய் சாட்சி சொல்லும்படி கேட்டுக் கொண்டார். சிவனின் முடியை,பிரம்மன் கண்டதாக சாட்சி சொல்லும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாழம்பூ சாட்சி சொல்ல, பொய் சொன்ன பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் ஆலயம் மற்றும் பூசைகள் அமையாதென்றும், பொய்ச்சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூசைக்கு உதவாது என்றும் சாபமிட்டார்./////// நன்றி: wikipedia.

ஆமா... எதுக்கு வெட்கம்..??? (Nostalgia????wink)

ஏனையோருக்கு...

 thku.jpg

 

 



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
RE: You Are Cordially Invited - இரண்டாம் பாகம்
Permalink   
 


Very nice Mr. Rothiess, cant wait for next one pa.

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

@ திவாகர் : தங்களது தொடராதவுக்கு என் மனமார்ந்த நன்றி!!

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
You Are Cordially Invited - இரண்டாம் பாகம் - 8
Permalink   
 


முரளி.. நீ.. ஒரு பாட்டு கேட்டிருக்கியா..

நான் காதல் எனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே..

அந்த கவிதைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலேன்னு..

குழந்தேள காதலின் பரிசா தான் கனப்படுத்தறா.. ஏதோ செக்ஸ் வச்சிண்டதன் விளைவுன்னு நினச்சிக்கல...  நானும் இதையே தான் நினச்சேன்... heterosexual உறவுல மட்டும் தான் இது சாத்தியமா.. நம்மால முடியாதான்னு..

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இவன் பொண்ணு பொறந்த அன்னிக்கு... அப்படியே இவன மாதிரியே இருந்தாடா.. மூக்கு, நெற்றி, கைவிரல்னு.. அப்படியே கிச்சாவோட ஃபோட்டோ காப்பி மாதிரி.. எங்க காதல கனப்படுத்த அந்த குழந்தைய நாம வளர்த்தா என்னன்னு தோணித்து”

 

“நீ சொல்றத வாஸ்தவம்னே வச்சிப்போம்.. இதே எண்ணம்.. வளருக்கும் சௌம்யாவுக்கும் தோணலாமில்லயா.. அவா என்னடா பாவம் பண்ணினா..?”

 

இந்த கேள்வியை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை.. தலைகவிழ்ந்து.. டேபிளை பார்த்தபடியே அமர்ந்திருந்தேன்...

என் முக வாட்டம் கிச்சாவை சங்கடப் படுத்தியிருக்க வேண்டும்..

“ஐயோ.. ஏன் முரளி.. என் குழந்தைய ஃபீல் பண்ண வைக்கற... பார்.. மூஞ்சு தொங்கிப் போயிடுத்து...”

என் கன்னம் தடவி.. அருகே இழுத்து தோளில் சாய்த்துக் கொண்டான்...

நேக்குமே இதுல உடன்பாடில்லாம இருந்துச்சு தான்.. ஆனா... இப்ப நான் க்ருஷ்ஷ பாத்துக்கற ஒவ்வொரு நிமிஷமும்... என் சின்னா என்ன விட்டு எங்கயும் போயிடலன்னு தோணறதுடா... அப்படி ஒண்ணும் இவன் குழந்தேள வலுக்கட்டாயமா பிரிச்சிடலையே... ரமா.. அத்திம்பேர்... முக்கியமா வளரோட சம்மதம் கிடைச்சது... சௌம்யா மட்டும் ஒத்துக்கலையே ஒழிய.. அவளும் மனசு மாறினுட்டா... இன்னும் யார் சம்மதம் வேணுன்ற... இவன் சொன்ன மாதிரி குழந்தேள் காதலின் பரிசு தான்.. அத நாங்க சந்தோஷமா பரிமாறிண்டோம்.. போறுமா..?!”

பில் வந்தது.. முரளி செட்டில் செய்ததும்.. ஆளுக்கொரு பையைத் தூக்கிக் கொண்டு காரை நோக்கி நடந்தோம்.. ! முரளி முன்னிருக்கைக்கு நகர.. வாசவியும் நானும் பின்னிருக்கையை ஆக்ரமித்தோம்..

வீடு செல்லும் வழியில் ஏதோ.. பொதுக்கூட்டம் போலும்.. பேரிரை(எரி)ச்சலாக இருந்தது.. மஞ்சளும், சிவப்பும் கலந்த கொடிகள் எப்பக்கமும் வியாபித்திருக்க.. யாரோ ஒருவர்.. மைக்கில் முழங்கிக் கொண்டிருந்தார்... அவர் முழக்கம் காதில் விழவில்லையே தவிர.. “யாக்கே கொடுபேக்கு.. யாக்கே கொடுபேக்கு...” என்று மட்டும் அவர் அடிக்கடி முழங்குவது காதில் விழுந்தது.. 

“ஏண்டா.. இதெல்லாம் எப்படா மாறும்.. speaker's corner மாதிரி ஒண்ணு வச்சி.. அங்க போய் கத்திக்கடாப்பான்னு ஏன் இன்னும் விட மாட்றா.. அப்படி என்ன தாண்டா சொல்றார்.. இவர்..”

கிச்சா காரை செலுத்தியபடியே.. “நீ அமெரிக்கன் சிட்டிசனா இத கேக்கற.. நோக்கு சொன்னா புரியுமான்னு தெரியலை.. இதெல்லாம் கூட்டாட்சித் தத்துவத்தோட சில flaws டா.. இந்த ஸ்டேட்டுக்கு சுத்தி சுத்தி பிரச்ச்னை.. எதுக்கு கொடுக்கணும் எதுக்கு கொடுக்கணும்னு சொல்றார்.. நேக்குத் தெரிஞ்ச வரை.. அவர் காவேரிய மீன் பண்றாரா.. அலமாட்டி ப்ராப்ளம் பத்தி பேசறாரா.. இல்ல பெல்காம் பத்தி பேசறார்னு தெரியலை... ஆனா. இதுல ஏதோ ஒண்ணப் பத்தி மட்டும் பேசறார்னு தெரியறது... இந்த ஒரு ஸ்டேட் மட்டுமில்லை... இங்க எல்லா ஸ்டேட்லயும் இப்படி ப்ராப்ளம்ஸ் இருக்கே.. சால்வ் பண்ற வழியத் தான் காணோம்..”

வாசவி முன்பக்கம் அமர்ந்திருந்த முரளியின் முதுகைத் தட்டி.. எதையோ உணர்த்த... 

“இந்த முறை நாங்க இண்டியா வந்ததுக்கு உண்மையிலேயே வேற ஒரு ரீசனும் இருக்குடா,.. கமிட்மெண்ட்ஸ் எதுவும் வந்துடக் கூடாதுன்னு தான்.. இவள மாதிரி ஒருத்திய கல்யாணம் பண்ணிண்டேன்... ஆனா கொஞ்சம் முன்ன.. நீங்க ஒரு தத்துவம் சொன்னேளே... குழந்தேள் காதலின் பரிசுன்னு.. என் நிலைமையும் இப்ப அதே தான்...  என் வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் தந்த நோக்கு... உன் குழந்தைய வளக்கறதன் மூலமா... ஆயுள் முழுக்க நான் நன்றி சொல்லக் கூடாதான்னு ஒரு நாள் இவ என்ன கேட்டப்ப... ஆடிப்போய்டேண்டா...”

கிச்சா சடனாக ப்ரேக்கை அழுத்தி காரை நிறுத்தினான்.

(தொடரும்)



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
RE: You Are Cordially Invited - இரண்டாம் பாகம்
Permalink   
 


குழந்தேள காதலின் பரிசா தான் கனப்படுத்தறா.. இதை படிச்சதும் உண்மையில் கண் கலங்கிருச்சு...இந்த ஒரு விஷயத்திற்காகவே நாம் எதையும் இழக்க தயார் ஆயிடுறோம்....அதன் அர்த்தத்தை சரியாக சொல்லிருக்கிங்க....nd என் முக வாட்டம் கிச்சாவை சங்கடப் படுத்தியிருக்க வேண்டும்.. இது மாதிரி சின்ன சின்ன விஷயமும் நீங்க பார்த்து பார்த்து எழுதுறது எனக்கு ரொம்ப பிடிக்கும்...முரளி மனமாற்றம் நான் எதிர்பாராதது ...நல்லாருக்கு ...எல்லாருக்கும் நல்ல முடிவா யார் மனசும் நோகாமல் யோசிச்சு எழுதுவது சூப்பர்...keep it up ...கிச்சா மட்டும் பிரேக்கை போடலே நானும் தான் so pls post quick...

__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard