Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஊடகங்களால் அழிந்து வரும் பெரியோர் மரியாதை.


இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
ஊடகங்களால் அழிந்து வரும் பெரியோர் மரியாதை.
Permalink   
 


                                                           ஊடகங்களால் அழிந்து வரும் பெரியோர் மரியாதை.

அன்புள்ள நண்பர்களே! விமர்சகர்களே!! படைப்பாளிகளே!!! 

                                           

                           எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்                            

                           பெரியார்ப் பிழைத் தொழுகுவார்.  : குறள்

(நெருப்பில் விழுந்தவர்கள் கூட பிழைக்க வாய்ப்புண்டு, பெரியாரை மதிக்காதவர்களுக்கு என்றுமே பிழைக்க வாய்ப்பில்லை)

 

       என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெரியவர்களை மரியாதையுடன் நடத்த 

வேண்டும் என்று ஒன்னேமுக்கால் அடியில் சொல்லி விட்டான் நம் பாட்டன் வள்ளுவன். அதனால் தான் எதிரியாய் இருந்தால் கூட 

அவர்களின் பெயருக்கு முன்னால் திரு, திருமதி, செல்வி, செல்வன் என்ற அடைமொழி இட்டும் பின் பகுதியில் அவர்கள் என்று குறிப்பிட்டும்  அழைத்தனர் நம் தமிழர்கள்.

இந்த நடைமுறை தொலைக்காட்சி எனும் தொல்லை வரும் வரை  வாழ்ந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் எப்பொழுது செய்தி தொலைகாட்சிகள்

பெருக ஆரம்பித்ததோ அவர்கள் ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டு கொண்டு நடுநிலையாக இருக்கிறேன் பேர் வழி என்று 

எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அவர்களுடைய பெயரை எதோ அவர்கள் வீட்டு வேலைக்காரனை அழைப்பது போல 

உச்சரிக்கின்றனர்.

 ஊதாரணமாக குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு முன் செல்வி ஜெயலலிதா என அழைக்க பட்ட முதலவர் இப்பொழுது

அனைத்து ஊடகங்களிலும் வெறும் ஜெயலலிதா அல்லது ஜெ தான்

 திரு கருணாநிதி என அழைக்க பட்ட முன்னாள் முதல்வர் அவருடைய வயதை கூட பொருட்படுத்தாமல்  வெறும் கருணாநிதி தான்.

இதற்கு தற்போதய உதாரணம் அண்மையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுள்ள

திரு சதாசிவம் அவர்களை நீதி மன்ற வளாகத்திலேயே பேட்டி கண்டார் ஒரு "புதிய" செய்தி தொலைகாட்சியின் நிருபர்

அவர் அந்த பெட்டிக்கு முன் கூறியவை வருமாறு: நாளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்க இருக்கும் சதாசிவம்  நமது தொலைகாட்சிக்காக சிறப்பு பேட்டி அளிக்க இருக்கிறார். 

இது ஒரு உதாரணம் மட்டும்தான் எதிரியாக இருந்தால் கூட மரியத்யுடன் பேசுவதுதான் நமது தமிழர் பண்பாடு அத்தகைய

பண்பாட்டை இன்றைய நவீன ஊடகங்கள் அழித்து வருகின்றன. அதே சமயம் அகில இந்திய வானொலியிலும், பொதிகை தொலைகாட்சியிலும்

திரு, திருமதி, செல்வி, செல்வன் போன்ற வார்த்தைகள் இன்றும் யுரோடு வாழுகின்றன என்பதையும் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்

இந்த போக்கு சரியான ஒன்றா.? வளர வேண்டிய ஒன்றா? உங்களுடய மேலான கருத்துகளை பதிவு செய்யுங்கள் 

நண்பர்களே..!

 

   



__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
RE: ஊடகங்களால் அழிந்து வரும் பெரியோர் மரியாதை.
Permalink   
 


இந்த பதிவை பார்க்கும் போது, எனக்கு ஒரு நிகழ்ச்சி நியாபகம் வருகிறது..
நான் பள்ளியில் படிக்கும் நாட்களில் எங்கள் பள்ளியில் தினமும் காலைவணக்கத்தின் போது, அதாவது தமிழ்த்தாய் வாழ்த்து நிறைவுபெற்றவுடன் செய்தி வாசிக்க வேண்டும்.. ஒவ்வொரு வகுப்பின் மாணவரும் தினமும் வரிசையாக அன்றைய நாளின் முக்கியமான செய்திகளை வாசிப்பார்கள்.. அதாவது ஒரு நாள் 11ஆம் வகுப்பு மாணவர் செய்தி வாசிப்பார்.. அடுத்த நாள் 12ஆம் வகுப்பு மாணவர் வாசிப்பார்.. இவ்வாறு நடக்கும்.. நீங்கள் கூறியது போல மாணவர்கள் எல்லோருமே செய்தி வாசிக்கும் பொழுது வெறும் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என்றே அழைத்துவந்தனர்.. நானும்தான்.. இதை கவனித்து வந்த எங்கள் தலைமை தமிழ் ஆசிரியர்.. ஒவ்வொரு வகுப்பிலுமே சென்று நீங்கள் கூறியது போல் மாணவர்களிடம் அறிவுறுத்தினார்.. இவ்வாறு எங்கள் அறிவு கண்களை திறந்தார்(lol)..
அதிலிருந்து நாங்களும் அத்தவறை திருத்திக்கொண்டோம்..
மிக முக்கியமான, தேவையான பதிவு.. வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இவ்வாறு நடந்து கொள்வது வருத்ததை அளிக்கிறது..
நன்றி..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

வருத்தமளிக்கும் விஷயம் தானிது!

சமீபத்தில்.. நடிகை ஸ்ரீதேவி அவர்கள் பங்கேற்ற “நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” நிகழ்ச்சியின் காணொளியை youtube-ல் காண நேர்ந்தது.. 

தமிழ்த்திரையுலகைத் தவிக்க விட்டு வடநாட்டில் தஞ்சம் அடைந்தவர்.. என்ற போதிலும்.. தனது பேச்சினூடே யாரையேனும் குறிப்பிடுவதாயின்.. மறக்காமல்.. பெயருக்கு முன் “மரியாதை விகுதி” அல்லது.. பெயருக்குப் பின் “அவர்கள்” என்று சேர்த்தே சொன்னார்.. ஆச்சர்யமாக இருந்தது!

இப்போதெல்லாம்.. அவ்வாறான நேரங்களில்.. இதையே நானும் கைக்கொள்ள.. என்னால் இயன்ற வரை முயற்சிக்கிறேன்.. 

 

 

 



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

தொலைகாட்சி நிறுவனர்கள் அனைவரும் ஒவ்வொரு கட்சியுடன் தொடர்புடையவர்கள்,எனவே அவர்களுக்கு சாதகமான தலைவர்களை மரியாதையுடனும்,பாதகமான தலைவர்களை பெயர் சொல்லியும் அழைக்கிறார்கள்.........

__________________



முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

தொலைகாட்சிகள் மரியாதையை தருவது இருக்கட்டும்
நாம் நம் வீட்டில் பல நேரங்களில் பல இடங்களில்
வயதில் மூத்தவராக இருந்தாலும் அவர் பிரபலமான சினிமா நடிகரோ இல்லை நடிகையோ
அரசியல் தலைவரோயோ மரியாதையுடன் அலைபதிலையே

விஜய் அஜித் சிவாஜி சிம்ரன் ஜெயலலிதா கருணாநிதி என்று பெயர் சொல்லிதானே அழைக்கிறோம்

இதுவும் தவறு தானே


__________________

praveen



முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

தனியார் தொலைக்காட்சியில் பிரமாண்ட குரல் தேடும் நிகழ்ச்சி அது
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடந்தது மிகவும் வருத்தம் அளிக்கும் செயல்
ஒவ்வொரு முறை அவரை அழைக்கும் போதும் அவருடைய வயதினை முன்னிலைபடுத்திதான் அழைக்கப்படுகிறார்
60 வயது பெரியவர் ஒரு பாடலை பாடுகிறார்
அதன் பின் அதற்கு நடுவர்கள் அளிக்கும் comments ம் உண்மையில் வருத்தம் அளிக்கும் வகையில் தான் இருந்தது
அவரை அந்த நிகழ்ச்சியில் ஒரு காமெடி purpose காக மட்டும் தான் உபயோகபடுத்துகிறார்கள்
அது தெரியாமல் அவரும் வெள்ளந்தியாக சிரிதுகொண்டுஇருகிறார்

www.youtube.com/watch

__________________

praveen



இனியவன்

Status: Offline
Posts: 201
Date:
Permalink   
 

சரிதான் நண்பர்களே!!

        தங்கள் குறிப்பிட்ட னைத்து கருத்துக்களுமே அனைத்து ஊடகங்களாளும் கவனிக்க பட வேண்டிய கருத்துக்கள் தான்



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 62
Date:
Permalink   
 

Our parents brought us by insisting us to respects our grand parents which in turn we learnt to respect our elders.But now since most of us live n nuclear families,the chances of interacting with grand parents is less for todays kids.We should instil this in the minds of our kids to enable the next generation follow the same.

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard