Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: குளிருது குளிருது இரு உயிர் குளிருது (Songs Lyrics its very nice)


புதியவர்

Status: Offline
Posts: 16
Date:
குளிருது குளிருது இரு உயிர் குளிருது (Songs Lyrics its very nice)
Permalink   
 


 

 குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி

நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி

கடலிலே தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை

ஊர்களில் தீ பிடித்தால் காதலின் உறவுகள் எரிவதில்லை


குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி

நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி


இதயத்தில் வலி ஒன்று வருது

உன் இமைகளை மூடிக் கொண்டு தடவு

நெஞ்சிக்குள்ளும் எரியுது நெருப்பு

இதை நீர் கொண்டு அணைப்பது உன் பொறுப்பு

இது தண்ணீர் ஊற்றியா தீரும்

நான் பன்னீர் ஊற்றினால் மாறும்

தேகங்கள் பரிமாற நம் உள்ளங்கள் இடமாறும்

பேரின்ப பூசைகளே உன் பெண்மைக்கு பரிஹாரம்

மழை இல்லாமலும் தென்றல் சொல்லாமலும்

நம் நெஞ்சுக்குள் இப்போது லட்சம் பூ மலரும்



குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி

நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி


நெஞ்சுக்குழி விட்டு விட்டு துடிக்கும்

அடி நெருப்புக்குள் ஏன் இந்த நடுக்கம்

முகத்துக்கும் முகத்துக்கும் சண்டையா

அட முத்தமிட வேறு இடம் இல்லையா

மழைத்துளி மழைத்துளி தொல்லையா

அட ஆடை மழை காக்க எண்ணம் இல்லையா

சுற்றி எல்லாம் எரிகின்ற போதும் நாம் இன்பம் கொள்வது தீது

அடி பூகம்ப வேளையிலும் இரு வான் கோழி கலவிக்கொள்ளும்

தேகத்தை அணைத்து விடு சுடும் தீகூட அணைந்துவிடும்

அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும்

சுற்றி நின்றாடும் தீவண்ணம் அணிவது திண்ணம்


குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி

நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி

கடல் அலை தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை

ஊர்களில் தீ பிடித்தால் காதலின் உறவுகள் எரிவதில்லை



__________________

Thanks For Visit

By

**** Vino ****



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
RE: குளிருது குளிருது இரு உயிர் குளிருது (Songs Lyrics its very nice)
Permalink   
 


மோட்ச வழிதேடி,விரல்கள் நகர்கிறதோ..........

விரலுக்கு மட்டும் மோட்சம் கிடைத்தால் போதுமா

__________________

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard