Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பனித்துளியில் சில மலர்கள் - 11


எழுத்தரசர்

Status: Offline
Posts: 196
Date:
பனித்துளியில் சில மலர்கள் - 11
Permalink   
 


அப்பா அடிக்கடி தனது ஹோட்டலுக்கு வருவது உண்டு.  அவரது பிசினஸ் சம்மந்தமான மீட்டிங்குகள் அங்கு தான் நடக்கும்.  அது மட்டும் அல்ல. முக்கியமான க்ளயன்ட்டுகளை சந்திப்பதும் அங்கு தான்.

அப்படி வரும் போதெல்லாம் அங்கிருக்கும் அனைத்து ஊழியர்களுடனும் சகஜமாகவே பழகுவார் அவர். அவர்களுக்கும் தங்கள் பாஸின் தகப்பனார் என்ற மரியாதையும், கூடவே ஒரு சகஜ மனப்பான்மையும் தோன்றும்.

ஆனால்..  குறிப்பாக தன் கீழ் வேலை செய்யும் ஒருவனைப் பார்க்க - அதுவும் இதுவரை - அறிமுகமே இல்லாத ஒருவனைப் பார்க்க அவர் வருவது இதுவே முதல் தடவை.

திவாகருக்கு வியப்பாக இருந்தது.   காலையில் தான் அவன் கதிரவனைப் பற்றி அவரிடம் சொல்லி இருக்கிறான்.  அவனைச் சந்திக்க அப்படி என்ன அவசியம் அவருக்கு ஏற்பட்டு இருக்கிறது.

ஒரு கணம் ஏதும் புரியாதவனாக இருந்தவன், மறுகணம் ஏதோ முடிவுக்கு வந்தவனைப் போல,"ஸ்ரீ.  அவரை முதல்ல என் ரூமுக்கு அனுப்பி வையுங்க. நீங்க வேற எதுவுமே பேசிக்க வேண்டாம்." என்று சொல்லிவிட்டு போனை வைத்தவன்,

கதிரவனை ஏறிட்டு நோக்கி, ' கதிர்.  நீங்க போய் உங்க ரூமிலே கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்குங்க.  நான் சொன்னதை எல்லாம் நிதானமா யோசியுங்க.  ரொம்ப கன்ப்யூஸ் பண்ணிக்காதீங்க.  ஆ. பை தி பை... உங்க மதரைப் பற்றி என் கிட்டே சொன்ன மாதிரி வேற யாருகிட்டேயும் சொல்லிக்கிட்டு இருக்காதீங்க.  அதைத் தான் உங்க கிட்டே முக்கியமா சொல்லணும் என்று நேத்திக்கே நெனைச்சேன்.பட்.. எங்கே? நேத்து தான் பெரிய களேபரமே நடந்துருச்சே.  அதுலே இதை மறந்தே போயிட்டேன்.  எது வேணும் என்றாலும் என்னைக் கேளுங்க.  ஐ ஆம் ஹியர் பார் யு. " என்றான் திவாகர்.

அவன் சொல்லிய அந்த கடைசி வார்த்தை நான் உங்களுக்காகத்தான் இருக்கிறேன் என்ற வார்த்தைகள் - அதை யதார்த்தமாகத்தான் சொன்னான் திவாகர்.

ஆனால் அந்த வார்த்தைகள் கதிரவனின் மனசுக்குள் ஆழமாகப் பதிந்துவிட்டது.

இதே வார்த்தையை நேற்று அவன் கேட்டிருந்தால் கூட அதை வெகு சாதாரணமாக எடுத்துக்கொண்டிருப்பான் அவன்.  ஆனால் இன்று..  ஒரு ஆணின் உறவை நிதர்சனமாக அனுபவித்து அதனால் ருசி கண்ட பூனையாக ஆகிவிட்டிருந்த மனசுக்கு திவாகரின் வார்த்தைகள் பாதிப்பை ஏற்படுத்தி விட்டன.

அதை சற்றும் உணராத திவாகரோ,"என்ன கதிர் நான் சொல்லறது எல்லாம் புரிஞ்சுதா?"- என்று கேட்டான்.

"புரிஞ்சுது சார். " என்று அங்கிருந்து கதிரவன் கிளம்பிய அதே நேரத்தில் கதவு திறந்தது.  சோமசேகர் உள்ளே நுழைந்தார்.

நேருக்கு நேராக இருவரும் சந்தித்துக்கொண்டனர். 

"கதிரவன் .. மீட் மை டாட் - என் அப்பா " - என்று அவரை அறிமுகம் செய்து வைத்தான் திவாகர்.

"க்ளாட் டு மீட் யு சார்." என்று கை நீட்டினான் கதிரவன்.

தானும் கை கொடுத்தார் சோமசேகர்.

"ஓகே. கதிரவன்.  யு மே கோ நௌ" என்று சொல்லி அவனை அனுப்பி விட்டான் திவாகர்.

அவன் சென்றதும்,"என்ன டாட் இது.  நீங்க எதுக்கு அவனை மீட் பண்ண வரணும்?" என்று நேரடியாக கேட்டு விட்டான் திவாகர்.

மகன் இப்படி நேரடியாகவே கேட்பான் என்று எதிர்பார்க்கவே இல்லை சோமசேகர்.

ஆகவே என்ன பதில் சொல்வது என்று புரியாமல் ஒருகணம் திணறிப்போனார் அவர்.

"அது வந்து திவா.  நீ அவனைப் பற்றிச் சொன்னதும் அவன் மேல ஒரு அனுதாபம் வந்துடுச்சு.  ரொம்ப பாவமா இருந்துச்சு.  அதான் பார்த்துட்டு போகலாம்னு.  " என்றார் அவர்.

"பார்த்து என்ன சொல்லப் போறீங்க.  அவன் அம்மாவைப் பற்றி அவன் என் கிட்டே சொன்னதை நான் உங்க கிட்டே ஷேர் பண்ணிக்கிட்டதே தப்பு.  அவனோட பர்சனல் மாட்டரை அவன் பெர்மிஷன் இல்லாம நான் சொல்லி இருக்கவே கூடாது.  ஏதோ வாய் தவறி சொல்லிட்டேன்.  நீங்க வேற அவனைக் கூப்பிட்டு அதை பற்றி எல்லாம் கேட்டா  வாட் வுட் ஹீ தின்க் அபவுட் மீ?" என்று கேட்டான் திவாகர்.

தன்னை அதற்குள் சமாளித்துக்கொண்ட சோமசேகர்,"என்ன திவா இப்படி பேசறே.  இந்த மாதிரி சூழலிலே இருந்த பசங்க நம்ம கூட செட் ஆகணும் என்றால் அவங்க கிட்டே நாம சகஜமா இருந்தா தானே நல்லது.  ஏற்கெனவே அவங்க மனசுக்குள்ளே தாழ்வு மனப்பான்மை இருக்கும்.  அதுவும் வந்த முதல் நாளே பிரச்சனைய வேற சந்திச்சு இருக்கான்.  அவனுக்கு என் கைடன்ஸ் இருந்தா அது உனக்கு தானே நல்லது?" என்றார் அவர்.

அவர் சொன்னது சரி என்று பட்டது திவாகருக்கு.

"நீங்க சொல்லறது சரிதான் டாடி.  பட் ஆல் ஆப் எ சடன் ஒருத்தனை கூப்பிட்டு கைடன்ஸ் கொடுத்தா அது அவ்வளவு சரியா வராது.  தேவைப் பட்டா நானே உங்களை அவன் கிட்டே பேச வைக்கிறேன்." என்றான் திவாகர்.

சோம சேகருக்கு உள்ளுக்குள் ஏமாற்றம் ஏற்பட்டாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் - "நீ சொன்னதும் சரிதான் திவா. எனிவே வந்தது வந்திட்டேன்.  கொஞ்ச நேரம் இங்கே இருந்துட்டு போகிறேன்.  கொஞ்சம் டயர்டா இருக்கு." என்றார்.

அடிக்கடி அவர் இப்படி வந்து ரெஸ்ட் எடுப்பது வழக்கம் என்பதால் "ஒகே டாட்.  நான் கொஞ்சம் ரிஷப்சன் வரைக்கும் போயிட்டு வந்துடுறேன்." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் திவாகர்.

அவன் வெளியே போய்விட்டான் என்பதை உறுதி செய்து கொண்டதும் கதவை உட்புறமாக தாழிட்டுவிட்டு திவாகரின் மேஜையை குடைந்தார் சோம சேகர்.

 டிராயரைத் திறந்து எதையோ தீவிரமாக தேடினார் அவர்.

ஏதேதோ கோப்புகளை தவிர்த்துவிட்டு  கடைசியில் அங்கிருந்த பைல் ஒன்றை எடுத்தார் அவர்.

அது அங்கு வேலைபார்க்கும் நபர்களின் தகவல்கள் அடங்கிய பைல்.

அவர்களது பயோ டேட்டா முதல் எல்லா தகவல்களும் அதில் இருக்கும்.

அதனை புரட்டினார்.

லேட்டஸ்டாக சேர்ந்தவன் என்பதால் கதிரவனின் பயோ டேட்டா அதில் மேலாக இருந்தது.

அதனை அவசரமாக மேய்ந்தார் திவாகர்.

அதில் இருந்த அவனது சென்னை விலாசத்தை பாண்ட் பாக்கெட்டில் இருந்த டயரியை எடுத்து அதில் குறித்துக்கொண்டவர்,  அதை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார்.

அவர் எதிரில் வந்துகொண்டிருந்த ஸ்ரீதரை நிறுத்தி,'ஸ்ரீதர்.  புதுசா ஜாயின் பண்ணி இருக்கானே.. கதிரவன் அவன் எங்கே இருக்கான்.?" என்று கேட்டார்.

"அவரா சார்?.  அவரோட ரூமுலே இருக்கார்.  போய் பாருங்க" என்று கதிரவன் தங்கி இருக்கும் அறை எண்ணை அவன் சொல்ல,  அந்த அறையை நோக்கி நகர்ந்தார் சோம சேகர்.

(தொடர்ந்து மலரும்..)



__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: 20292124252423292125212825 242128 24282625292925 - 11
Permalink   
 


Fantastic story..! Pls post the next soon..! So interesting..!

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
RE: பனித்துளியில் சில மலர்கள் - 11
Permalink   
 


சோமசேகர் போய் என்ன பேச போறார்?... வில்லங்கத்தை விலைக்கு வாங்காமல் இருந்தா சரிதான்.... அருமையான கட்டம், தாமதிக்காமல் சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்க.....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



புதியவர்

Status: Offline
Posts: 41
Date:
Permalink   
 

mudiyala kadai romba nalla pogudhu adutha partukkaga waiting

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

ஐ ஆம் ஹியர் பார் யு. "...பாவம் கதிரவன் உண்மையான அன்புக்கு ஏங்கும் அவனக்கு அப்டி தோன்றுவது இயல்புதான் ...இந்த நிலையில் சோமசேகர் வேறு பார்க்க போகிறார் ...சிக்கிரம் அடுத்து பதிங்க சஸ்பென்ஸ் தாங்க முடியல...

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

சாத்தியமா கதை எந்தக் கோணத்தில் போகுதுணே தெரியல...

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard