Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எழுத்தாளர்களே!.... என்னப்பா ஆச்சு உங்களுக்கு?...


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
எழுத்தாளர்களே!.... என்னப்பா ஆச்சு உங்களுக்கு?...
Permalink   
 


சில நாட்களுக்கு முன்பாக ஒரு கதை போட்டி பற்றி நான் பதிவு செய்தேன்....

சென்னை தோஸ்த் அமைப்பின் சார்பாக நடக்க இருந்த அந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் வாசகர்களுக்கு, விதிமுறை உட்பட அனைத்து விஷயங்களையும் இணைத்து அந்த பதிவை பதிந்தேன்...

இவ்வளவு நாள் ஆகியும் அந்த அமைப்பில் போட்டி நடத்தவில்லை என்கிற கோபம் எனக்கு இருந்தது, நேற்று எதேச்சையாக அந்த அமைப்பின் விக்ராந்துடன் பேச வாய்ப்பு கிடைத்தபோது "இதுவரைக்கும் வெறும் ஏழு கதைகள்தான் வந்திருக்கு" (அதிலும் இரண்டு நான் அனுப்பிய கதை) என்றார்....

அவங்களுக்கு போட்டியை நடத்தும் நோக்கம் இருந்தும் நம்மவர்கள் காட்டாத அக்கறையால் போட்டியை நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது....

ஆனாலும், அவர் மனம் தளரவில்லை... அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சென்னை தோஸ்த் அமைப்பின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழாவில் புக்லெட் வடிவில் கதைகளை பிரசுரிக்க போகிறார்களாம்... நாம் அனுப்பிய ஏழு கதைகளும் கூட அதற்கு பத்தாதாம்... அதனால், இன்னும் ஒரு வாரத்திற்குள்ளாவது உங்கள் சிறுகதைகள் மற்றும் கவிதைகளை அவங்களுக்கு அனுப்ப முயலுங்கள்.....

நமக்காக ஒருத்தர் அங்கீகாரம் கிடைக்க போராடுறார், நாம அதற்கு துணை நிற்க கூட தயங்கலாமா?... வாய்ப்புகள் உங்கள் வரவேற்பறை வரை வந்து காத்துக்கொண்டு நிற்கிறது, அதை உதறி தள்ளலாமா?....

(கதை பற்றிய மற்ற விபரங்களுக்கு "அரட்டை" பகுதியில் நான் முன்பு பதிந்த இடுகையை பார்க்கவும்)



__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard