Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அன்பைத்தேடியின் வாசகர்களுக்கு


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
அன்பைத்தேடியின் வாசகர்களுக்கு
Permalink   
 




இந்த கதை ஒரு பெரியவர் சொன்னது... 

நிகழ்வு 1 :

ஒரு மேடையில் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் உரையாற்றிக் கொண்டிருந்தார்... அவர் பேசி முடிச்சதும் வழக்கம் போல எல்லோரும் கை தட்டினாங்க. ஆனா அதில் அவருக்கு திருப்தி இல்ல. இறங்கி வந்ததும் தன்னோட நண்பர் கிட்ட, என் பேச்சு எப்படி இருந்தது என்று கேட்டார்... அதற்கு அவரும், ரொம்ப அற்புதமான பேச்சுங்க உங்களோடது, நிறைய கருத்துகளை நான் குறிப்பெடுத்து வச்சிருக்கேன்.. அப்படின்னு சொன்னார். அப்பாடான்னு நிம்மதியானார் அக்கல்லூரி பேராசிரியர்..

நிகழ்வு 2:

பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த குழந்தை விளையாடிகிட்டு இருந்துச்சு... குழந்தையோட அம்மா, பள்ளிக் கூடம் சேர்த்து மூணு மாசம் ஆயிடுச்சே என்ன சொல்லிக் கொடுத்திருப்பாங்கன்னு ஆசைப்பட்டு தன குழந்தையைக் கூப்பிட்டு தங்கம் ஒன்னு, ரெண்டு தெரியுமான்னு கேட்டாங்க, குழந்தை தெரியும்ன்னு சொல்லுச்சு... சொல்லுன்னு சொன்னதும், குழந்தை ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு... அத்தோட நிறுத்திகிச்சு. அம்மா மறுபடியும் சொல்ல சொன்னாங்க... அப்பாவும் அதே மாதிரி நாலு வரைக்கும் சொல்லி நிறுத்திகிச்சு. அம்மாக்கு கோபம், என்னடா குழந்தைக்கு ஒன்னு ரெண்டு கூட சொல்லத் தெரியலைன்னு நினைச்சு கிட்டு, அடுத்த நாள் பள்ளிக் கூடத்துக்குப் போனாங்க.. அங்க ஆசிரியர் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துட்டு இருந்தார். அவர் கிட்ட என்னங்க என் குழந்தை ஒன்னு, ரெண்டு கூட சொல்ல மாட்டேங்குது.. நீங்க சொல்லிக் கொடுக்களையான்னு கேட்டாங்க.. அதுக்கு அவர் சொன்னார் இல்லையே உங்க குழந்தை அழகா சொல்லுமே.. அப்படின்னு சொல்லிட்டு குழந்தைய கூப்பிட்டார்...

குழந்தை கிட்ட சொல்ல சொன்னார்... குழந்தை ஒன்னு சொல்லுச்சு, அப்போ ஆசிரியர் ம்ம்.. அப்படினார். குழந்தை ரெண்டு சொல்லுச்சு, ஆசிரியர் ம்ம் அப்படின்னார். குழந்தை மூணு சொல்லுச்சு, ஆசிரியர் ம்ம்.. அப்படின்னார்.. குழந்தை அப்படியே நூறு வரை சொல்லிடுச்சு... அப்போ அவங்க அம்மா சொன்னாங்க நான் நேத்து கேட்ட போது சொல்லலையே இப்போ மட்டும் எப்படி சொல்லுச்சு அப்படின்னு... அதுக்கு ஆசிரியர் சொன்னார், குழந்தை புதுசா கத்து கிட்டு வந்த விஷயத்தை நீங்க அங்கீகரிக்கனும்... ஒன்னு அப்படின்னு சொல்லி முடிச்சதும் நீங்க ம்ம்.. அப்படின்னு ஒரு சின்ன அங்கீகாரத்தை கொடுத்திருக்கணும்... இயந்திரம் தான் தொடர்ச்சியா சொல்லிகிட்டே இருக்கும். மனிதர்களுக்கு தேவை அங்கீகாரம் மட்டுமே. அதுவும் குழந்தைகளுக்கு ரொம்பவும் முக்கியம், அப்படின்னு அம்மா செய்த தவறை சுட்டிக் காட்டினார். 

ஒரு கல்லூரிப் பேராசிரியருக்கே தன் பேச்சுக்கான அங்கீகாரம் தேவைப் படுகிற போது, குழந்தைகளுக்கு, அவர்களின் சிறு சிறு முயற்சிகளுக்கு நாம் அங்கீகாரம் அளிக்கிறோமா என்பது மிக முக்கியமானது... எனவே கற்றுக் கொள்ள வேண்டியது நாம் தான், ஏனெனில், நாமும் அதே அங்கீகாரத்திற்கு தான் காத்திருக்கிறோம்... 

 

 

#வாசகர்களே,இங்க எழுதும் நம்ம எழுத்தாளர்களுக்கும் இது தான் தேவை,நீங்க வெறுமனே படிச்சிட்டு மட்டும் போகாம,அவங்களோட முயற்சியப் பாராட்டி பின்மொழி இடுங்க.

 



__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

100% true...நல்ல முயற்சி குட்டி கதை மூலமாக புரிய வைப்பது ...இது உங்களுக்கான பாராட்டு அன்பைத்தேடி...என்னது இது மாட்டை கண்பித்து மிரட்டறீங்க

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

நண்பா அது காங்கேயம் காளை

__________________



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

காங்கேயம் காளைக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்?....
ஒரே குழப்பமா இருக்கு..... எனக்கு மட்டுமா?... உங்களுக்கும் அதே குழப்பமா?....


btw... நீங்க சொன்ன இதே கருத்தை நான் பலமுறை வலியுறுத்தி பதிவுகள் செஞ்சிருக்கேன்.... ஆனால், அதை காதில் வாங்கத்தான் யாரும் இல்லை...

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

நான் இருப்பது ஈரோட்டில் நண்பா,காளை என்பது கொங்கு நாட்டின் அடையாளங்களில் ஒன்று

__________________



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

Mmmm.. nalla kathai thaan.. kutty kutty kathaigal solli.. ethir katchigalukku aappu vaikkara "avanga" technique... namma anbaithedi forumla work out aachunna methavum magizhchi..

Good job buddy.. :)

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

kutty kutty kathaigal solli.////

அண்ணாச்சி.... குட்டி கதையா?.... பலே பலே.... நல்லா செம்மையான குட்டியோட கதை இருந்தா சொல்லுங்க, சேர நாட்டு குட்டிகளா இருந்தால் பெத்த சந்தோசம்...

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

@ msvijay..

உங்க வேண்டுகோளுக்கு செவிசாய்க்காம இருக்க முடியுமா... ?

இதோ .. உங்களுக்காகவே... சேர நாட்டுக் குட்டிகள... வலை போட்டு புடிச்சிட்டு வந்தாச்சு...

1. காவியூர் மாதவன் குட்டி

2. திங்ஙள் அனூப் குட்டி

3. ஃபைசல் குட்டி

4. முகமது குட்டி (மம்முட்டி???)

5. நடுமுட்டம் சுப்ரமோணி குட்டி

6. வரப்புழா கல்யாணி குட்டி

7. அல்பின் ஜோசப் குட்டி

and the list goes... on and on..

வயசு வித்தியாசம்.. சமய வித்தியாசம்.. பாலின வித்தியாசமில்லாம... எக்கச்சக்க குட்டீஸ் உண்டு அவ்விட... எல்லாமே செ(ம்)மையான குட்டீஸ் தான்...

என்ஜாய்!!!! ;)


__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

1. காவியூர் மாதவன் குட்டி

2. திங்ஙள் அனூப் குட்டி

3. ஃபைசல் குட்டி

4. முகமது குட்டி (மம்முட்டி???)

5. நடுமுட்டம் சுப்ரமோணி குட்டி

6. வரப்புழா கல்யாணி குட்டி

7. அல்பின் ஜோசப் குட்டி/////

உங்க டேஸ்ட் ஏன் இப்படி ஆகிடுச்சு?...
ஐயோ, பாவம்.....!!!

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard