ஒரு வினாடிநேரம் தான். அதற்குள் தன் முகமாற்றத்தை மாற்றிக்கொண்ட சோமசேகர், "பாவம். பரிதாபத்துக்கு உரியவன் தான்" என்றார் ஆதங்கத்துடன்.
திவாகர் தொடர்ந்தான்.
"இன்பாக்ட் நான் எல்லாம் படிச்சு முன்னுக்கு வருவது ஒன்றும் அவ்வளவு பெரிய அதிசயம் இல்லை டாட். கதிரவனோட கம்பேர் பண்ணினா ஐ ஆம் நத்திங்" - என்றான்.
"நோ திவா. யு ஷுட் நாட் சே லைக் திஸ். இதை நான் ஒத்துக்க மாட்டேன்." என்றார் சோமசேகர்.
"இட் ஈஸ் எ பாக்ட் டாட். அதை நாம அக்செப்ட் பண்ணிட்டு தான் ஆகணும் அப்பா." என்றான் திவாகர்.
"அப்பா கைவிட்டுட்டு போன பசங்க எத்தனயோ பேரு தனக்காக அம்மா படுற கஷ்டங்களைப் பார்த்துட்டு அவங்களுக்காக முன்னுக்கு வரணும் என்று தீவிரமா படிச்சு முன்னுக்கு வருவதில்லையா? அவங்களில் ஒருத்தனா கதிரவனும் வந்து இருக்கான். அவனை பாராட்டறேன். அதே சமயம் நீயும் அவனுக்கு எந்த விதத்திலும் குறைந்தவன் இல்லை திவா" - என்றார் சோமசேகர்.
"நீங்க சொல்லறது சரிதான் டாட். ஆனா கதிரவனோட அம்மா நீங்க நெனைக்கற மாதிரி நாலு வீட்டுக்கு சமைத்துப் போட்டோ, பத்து பாத்திரம் தேய்த்தோ கஷ்டப் படலை டாடி. அவங்க நிலைமை இன்னும் பரிதாபம். " என்று நிறுத்தினான் திவாகர்.
புருவம் சுருங்க மகனை ஏறிட்டார் சோமசேகர்.
"எஸ். டாட். அப்படி நம்பினவன் நட்டாத்துலே விட்டுப் போனதுக்கு அப்புறம் விதி அவங்களை இந்த சமூகம் அருவருக்கக் கூடிய ஒரு பெண்ணாக மாற்றி விட்டது டாடி. எஸ். ஷி ஹாஸ் பிகம் எ செக்ஸ் வொர்க்கர். " என்றான் திவாகர்.
கையில் எடுத்த இட்லியை வாய்க்கு கொண்டு போன சோமசேகர் அப்படியே விக்கித்துப்போனார்.
அந்த விஷயம் அவரை மிகவும் அதிரச் செய்து விட்டது.
ஆனால் ஒரு வழியாக தன்னை மீட்டுக்கொண்டவர், "இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்? அந்தக் கதிரவனே சொன்னனா?" என்று கேட்டார்.
"ஆமாம்" என்பதுபோல தலை அசைத்தான் திவாகர்.
"அது சரி.. அவங்க அம்மா பேரு என்ன தெரியுமா?" - என்று மகனைக் கேட்டார் சோமசேகர்.
"அதை அவன் சொல்லலே. பட் வேலைக்கு பார்மலா அவன் அனுப்பி இருந்த விண்ணப்பத்துலே அவங்க பேரு இருந்துச்சு. " என்ற திவாகர் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, "எஸ். ஐ காட் இட். அவங்க பேரு ஜமுனா" என்றான்.
அப்படியே நிலைகுலைந்து போனார் சோமசேகர்.
*******************************
அவினாசி சாலையில் லக்ஷ்மி மில் சிக்னலைத் தாண்டி சேரன்மா நகரை நோக்கி விரைந்து கொண்டிருந்தது சோம சேகரின் கார்.
அதனை செலுத்திக்கொண்டிருந்த சோம சேகரின் மனமோ அதை விட வேகமாக விரைந்து பழைய சம்பவங்களை ரீவைண்ட் செய்துகொண்டிருந்தது.
காலம் விந்தையான ஒன்றுதான். மனிதன் மறக்க நினைக்கும் கடந்த காலம் - எப்படியோ - என்றோ ஒரு நாள் மறுபடி அவன் முன் வந்து நிற்கத்தான் செய்கிறது.
சில சமயங்களில் அது அவனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வைத்தும் விடுகிறது.
ஜமுனா - இந்தப் பெயரைக் கேட்டதும் அவரது மனதில் ஏற்பட்ட அதிர்ச்சி சாதரணமானது அல்ல. அதுவும் அவள் ஒரு பாலியல் தொழிலாளி என்று அறிந்த போது அந்த அதிர்ச்சி பலமடங்கானது.
அவளது மகனையும், திவாகரையும் சந்திக்க வைத்திருக்கிறது விதி.
இதனால் என்ன என்ன சிக்கல்கள் முளைக்குமோ?
திவாகர் சொன்னதைக் கேட்டபிறகு சாப்பாட்டு மேஜையில் கைகழுவி விட்டு எழுந்தவர், நேராக தனது தனி அறைக்கு சென்று சில நிமிடம் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். ஏதோ யோசனையில் இருந்த அவரது முகம் சற்று நேரத்தில் ஒரு முடிவுக்கு வந்தது.
அவர் எதையும் மறைக்காமல் - தன் மனைவியிடம் கூட சில விஷயங்களை மறைத்திருந்தாலும் - ஒரு நபரிடம் எதையும் மறைத்ததே இல்லை.
அவர் தான் அவரது நெருக்கமான நண்பரும், மகன் திவாகரின் மாமனாருமான சந்திரசேகர்.
ஒரு நிமிடம்,"சந்துருவுக்கு இந்த விஷயத்தை சொல்லித்தான் ஆகவேண்டுமா?" என்று தோன்றியது.
ஆனால் - இல்லை, கண்டிப்பாக சந்துருவுக்கு இதை தெரியப் படுத்தியே ஆகவேண்டும் - என்று தோன்றவே அதனை செயல்படுத்த சேரன் மாநகருக்கு அப்போது விரித்து கொண்டிருந்தார்.
ஹோப் காலேஜ் சிக்னலில் திரும்பி தண்ணீர்ப் பந்தல் வழியாக சேரன் மாநகரை நோக்கி பயணித்து சந்திரசேகரின் பங்களாவை அடைந்து போர்டிகோவில் நின்றது சோம சேகரின் கார்.
காரில் இருந்து பழக்கூடை ஒன்றை எடுத்துக்கொண்டு இறங்கினார் அவர்.
வாசலில் யாரோ வருவதை பார்த்துவிட்ட பத்மா சம்பந்தி வருவதைக் கண்டதும், "வாங்க அண்ணா வாங்க. அண்ணி, மாப்பிள்ளை, கல்பனா எல்லாரும் சவுக்கியமா?" என்று கேட்டபடி வரவேற்றாள்.
"ஏண்டா. நமக்குள்ளே எதுக்குடா இந்த பார்மாலிடி எல்லாம். பழம் எல்லாம் வாங்கிட்டு வந்துதான் என்னை சந்திக்கணுமா?" என்று நண்பனை வரவேற்றார் சந்திரசேகர்.
"தட் ஈஸ் different . இப்போ நீ என் சம்பந்திகூட இல்லையா. அந்த ஸ்தானத்துக்கு நான் மரியாதையை கொடுத்துதானே ஆகணும்." என்றார் சோம சேகர்.
"நீங்க பேசிட்டு இருங்க. காபி கொண்டுட்டு வரேன்." என்று திரும்பிய பத்மாவிடம்,"அதெல்லாம் ஒன்னும் இப்போ வேண்டாம்மா. வீட்டுலே டிபன் சாப்பிட்டு விட்டுத் தான் வந்து இருக்கேன். ஜஸ்ட் கொஞ்சம் ஐஸ் வாட்டர் இருந்தா கொண்டுட்டு வா. அது போதும்" என்று அவளை அனுப்பியவர் அவள் உள்ளே சென்றுவிட்டதை உறுதி செய்து கொண்டதும் சந்திரசேகரை நோக்கி,"உன்கிட்டே ரொம்ப முக்கியமான ஒரு விஷயத்தை பேச வந்திருக்கேண்டா." என்றார்.
"உள்ளே வாடா. என் ரூமுக்கு போய்டலாம்" என்று நண்பனை அழைத்துச் சென்றார் சந்திரசேகர்.
உள்ளே சென்றதும், "ஜமுனா உயிரோடதான் இருக்காடா" என்றார் சோமசேகர்.
சட்டென்று இப்படி சொன்னதும் ஒருகணம் ஒன்றும் புரியவில்லை சந்திரசேகருக்கு.
"ஜமுனாவா? எந்த ஜமுனாடா?" என்று புரியாமல் கேட்டார் அவர்.
அவரையே ஒரு கணம் கூர்ந்து பார்த்துவிட்டு நிதானமாக சொன்னார் சோம சேகர்.
"எந்த ஜமுனாவா? நீ காதலிச்சு சென்னை ஹோட்டல்லே தவிக்க விட்டுட்டு வந்தியே அந்த ஜமுனா."
இது வித்தியாசமான திருப்பம்....சோமசேகர் நண்பன் சந்திரசேகர் very interesting...கதிரவனோட கம்பேர் பண்ணினா ஐ ஆம் நத்திங்"...proud of the characters...waiting for the next....
அப்படி நம்பினவன் நட்டாத்துலே விட்டுப் போனதுக்கு அப்புறம் விதி அவங்களை இந்த சமூகம் அருவருக்கக் கூடிய ஒரு பெண்ணாக மாற்றி விட்டது டாடி. எஸ். ஷி ஹாஸ் பிகம் எ செக்ஸ் வொர்க்கர். " என்றான் திவாகர்.........wow very interesting story post next part soon plz