Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "பனித்துளியில் சில மலர்கள்" - 2.


எழுத்தரசர்

Status: Offline
Posts: 196
Date:
"பனித்துளியில் சில மலர்கள்" - 2.
Permalink   
 


கதிரவன் சொன்ன பதில் திவாகரை அதிரவைத்தது.

 

"வாட்?" என்று அதிர்ந்து போய் கதிரவனைப் பார்த்தான் திவாகர்.

 

"ஆமாம்.. சார். " என்றான் கதிரவன்.

 

"மிஸ்டர்.  கதிரவன்.  நீங்க பேசற வார்த்தைகளோட அர்த்தம் புரிஞ்சு தான் பேசறீங்களா?"  என்றான் திவாகர்.

 

"புரியாம பேச நான் ஒன்னும் சின்னக்குழந்தை இல்லே சார்.  ஐ ஆம் ஆல்ஸோ எஜுகெட்டெட்" என்றான் கதிரவன்.

 

என்ன சொல்வது என்று புரியாமல் இருந்தான் திவாகர்.

 

கதிரவனே தொடர்ந்தான்.

 

"சாதரணமா

கோவம் வந்தா திட்டுற மோசமான வசவே எனக்கு வாழ்க்கையா போயிருச்சு சார்.  

தேவடியாபையான்னு திட்டுற வார்த்தையே எனக்கு அடையாளமா ஆயிருச்சு சார்.  

விவரம் புரியாத வயசுலே எனக்கு அம்மா மேல கோவமா வரும்.  ஆத்திரம் ஆத்திரமா 

வரும்.  ஆனா வளர வளர அம்மாவோட அன்பும் பாசமும் புரிய புரிய அவங்களை என்னாலே

புரிஞ்சுக்க முடிஞ்சுது.  எல்லாரையும் போல ஒரு கேடுகேட்டவனை நம்பி உறவை 

எல்லாம் உதறித்தள்ளிட்டு அவன் கூட ஓடிவந்தவ அவ.   அவன் அவளுக்கு கொடுத்த 

அதிக பட்ச சுகமே நான் தான்.  ஒரு லாட்ஜ்லே வச்சு அவளை வேண்டிய மட்டும் 

சக்கையா அனுபவிச்சுட்டு கையிலே ஒரு பைசா கூட இல்லாத நிலையிலே ஒருத்தன் ஒரு 

பொண்ணை விட்டுட்டுபோனா அவளாலே வேற என்ன சார் பண்ண முடியும்?  அந்த லாட்ஜ் 

மானேஜரே அவளுக்கு வாழ இந்தப் பாதைய காட்டி கொடுத்தான்.

 

"வயத்துலே நீ மட்டும் இல்லாம இருந்திருந்தா என்னிக்கோ செத்து 

இருப்பேனடா ராஜா" என்று அவ சொன்னப்போ எனக்காக என்னை அழிக்கக்கூடாது 

என்கிறதுக்காக அவ எத்தனை அவச்சொல்லை எல்லாம் தாங்கிகிட்டு  இருந்திருக்கா. 

சின்னாபின்னப்பட்டுப் போயிருக்கா என்பதை எல்லாம் என்னாலே சரியா 

புரிஞ்சுக்க முடிஞ்சுது.  மனங்களை புரிந்து கொள்வதற்காகத்தானே சார் இந்தப் 

படிப்பெல்லாம்.  அதை சரியா புரிஞ்சுக்காம போனா என்ன படிச்சு என்ன 

பிரயோஜனம்.  எல்லாமே வீண் தானே.  நான் புரிஞ்சுகிட்டேன் சார்.  என் அம்மாவை

சரியாப் புரிஞ்சுகிட்டேன். ஒவ்வொருவருக்கு வாழ்க்கை சக்கரம் ஓட 

ஒவ்வொருமாதிரியான பொழைப்பு.  என் அம்மாவுக்கு இது தான் அமைந்தது.  மற்ற 

எல்லாத் தொழில்களையும் போல இதுவும் ஒரு தொழில் என்று நினைச்சுக்கிட்டேன்.  

அதுக்கப்புறம் எனக்கு அவங்க மேல எந்தக் கோவமும் வரலே.  அவங்களை சரியா 

புரிஞ்சுகிட்டு அன்பும் ஆதரவும் கொடுக்க ஆரம்பிச்சேன்.  அந்த பள்ளத்துலே 

இருக்குற மத்தவங்க பசங்க - ஒன்னு ஆணாக இருந்தால் "பிம்ப்" ஆக மாறுவாங்க. 

பெண்ணாக இருந்தால் ..   அப்படி எல்லாம் நான் கெட்டு சீரழியக்கூடாதுன்னு 

ஆசைப்பட்டு என்னை படிக்க வச்சாங்க அம்மா.  அவங்க ஆசையை நிராசையாக்கக் 

கூடாதுன்னு  நானும் படிச்சேன்.  மத்தவங்க பொறாமை என் மேல அள்ளி வீசின 

வார்த்தைச் சேறுகளை எல்லாம் துடைச்சுப்போட்டுட்டு படிப்பிலேயே கவனம் 

செலுத்தினேன். 

 

பி.எஸ். சி. டிகிரி வாங்கினதும் வெறும் பட்டப்படிப்பு மட்டும் போதாது 

இன்னும் மேல படின்னு அம்மா சொன்னதாலே தொடர்ந்து எம்.எஸ்.சி. படிச்சேன்.  

"இத்தனை நாள் கஷடப்பட்டுட்டேன்.  இன்னும் கொஞ்ச நாள் கூட கஷ்டப்படுறதுலே 

என்ன வந்துடப்போகுது?   எனக்கு மவுசு இன்னும் குறையலே ராஜா.   வேற எதையுமே 

சிந்திக்காம நீ படிக்கற வயசுலே எவ்வளவு முடியுமோ அவ்வளவு படிச்சுடு.  நீ 

நல்ல நிலைமைக்கு வந்தா தான் நான் வாழ்க்கையிலே ஜெயிச்சதாக அர்த்தம் என்று 

சொல்லுவாங்க அவங்க.  அவங்க ஆசைப்படியே படிச்சு முடிச்சுட்டு "இதோ இப்போ 

இந்த வேளையிலே ஜாயின் பண்ண உங்க முன்னாலே வந்து நிக்கறேன் சார்." - ஒரே 

மூச்சாக தன் கதையைச் சொல்லி முடித்தான் கதிரவன்.

 

பிரமிப்புடன் கேட்டுக்கொண்டே இருந்தான் திவாகர்.  

 

தடம் புரண்ட 

ஒரு தாயின் மகனாக இருந்தும் அதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டு  அந்த தாயை 

சிறிதும் வெறுக்காமல் எவ்வளவு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்கிறான் இவன்.

 

இன்றைக்கெல்லாம்

இருந்தால் என்னை விட இரண்டு வயது சின்னவனாக இருப்பானா என்ன?  ஆமாம் 

சின்னவன் தான்.  இவனது ரெஸ்யூமே சொல்கிறதே.    இந்த வயசில் எவ்வளவு 

மெச்யூரிட்டியுடன் சிந்திக்கிறான் இவன்.  

 

அவனது மனதில் கதிரவன் மீது உயர்ந்த அபிப்பிராயம் ஏற்பட்டது.

 

இருக்கையை

விட்டு எழுந்து வந்து கதிரவனின் பரந்த முதுகில் தட்டிக்கொடுத்து "யு ஆர் 

ரியலி கிரேட் கதிரவன். ஒக்கே.. உங்களுக்கு கஸ்டமர் கேர் டேக்கர் போஸ்ட் 

கொடுத்து இருக்கோம்.  அதை கவனமா பண்ணுங்க.   இங்கே பலவிதமான கஸ்டமர்கள் 

வருவாங்க.  அவங்க முகம் கோணாம நடந்துக்கணும்.  அவங்களை சரியா ஹாண்டில் 

பண்ணனும்.  அந்த சமயத்துலே நம்ம சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமே 

கொடுக்கக்கூடாது சரியா. நீங்க படிச்சவர். 

 

எந்த சூழ்நிலையையும் அழகா டாக்கிள் பண்ணுவீங்க என்ற நம்பிக்கை எனக்கு 

இருக்கு.  உங்களுக்கு ஏதாவது பிரச்சனையை என்றால் என் கிட்டே வாங்க.  

என்னாலே முடிஞ்ச ஹெல்ப்பை நான் பண்ணுறேன்.  ஆல் தி பெஸ்ட்.  பை தி 

பை..நீங்க இங்கேயே தங்கிக்கலாம்.  எந்த ரூம் வசதியா இருக்குன்னு 

நெனைக்கறீங்களோ அங்கேயே தங்கிக்குங்க." என்றவன் இண்டர்காமில் தொடர்பு 

கொண்டு அவனது உதவியாளரை அழைத்து வந்த இளைஞனிடம் "ஸ்ரீதர்.  இவர் நம்ம 

கஸ்டமர் கேர் டெபார்ட்மெண்டுக்கு புதுசா வந்து இருக்குற மானேஜர்.  வேண்டிய 

வசதிகளை செய்து கொடுங்க." என்று சொல்லி அனுப்பினான்.

 

 "thank  யு சார்." என்று சொல்லிவிட்டு திரும்பின கதிரவனை,"ஒன் மினிட் 

மிஸ்டர் கதிரவன்.  ஐ தின்க் வீ ஆர் இன் தி ஸேம் ஏஜ் க்ரூப்.  அதனாலே இந்த 

சார் மோர் எல்லாம் வேண்டாம். கால் மீ திவாகர். ஓகே." என்று அன்புடன் கட்டளை

இட்டு அனுப்பி வைத்தான்.

 

தனது ட்ராவல் பாக்குடன் ஸ்ரீதரைப் பின் தொடர்ந்தான் கதிரவன்.

 

அவன் போவதையே பார்த்துக்கொண்டு நின்றான் திவாகர்.

 

"இந்தக் காலத்தில் நம்ம வர்க்கம் எப்படி எல்லாம் சவால்களை ஏத்துக்குது?  பாவம்.. கதிரவன்..  

இந்த வேலையிலே எப்படித்தான் சமாளிக்கப் போகிறானோ.?" என்ற எண்ணம் தன்னையும் 

அறியாமல் திவாகருக்கு பிறந்தது.

 

(தொடர்ந்து மலரும்..)



__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

ஒவ்வொரு அடியும்
வலி தான்
நாம் நொறுங்கும் கல் என்றால் சிதறி விடு
தாங்கும் கல் என்றால்
புது உருவம் கொடு
நொறுங்குவதும்
தாங்குவதும்
நம் மனதில் தான் இருக்கிறதென்பதை கதை வடிவில் உணர்த்தினாய் நண்பா

உன் உழைப்பு உயர
நல் வினைகள் தொடர
விதியிடம் பிரார்த்திக்கிறேன்

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Superb move..! And excellent narration about a mother who lives only for her son by hiding her all pains infront of her son's education..! Hats off..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

மனங்களை புரிந்து கொள்வதற்காகத்தானே சார் இந்தப்

படிப்பெல்லாம். அதை சரியா புரிஞ்சுக்காம போனா என்ன படிச்சு என்ன

பிரயோஜனம். எல்லாமே வீண் தானே. ...அருமையான விளக்கம்...அம்மாவின் தியாகத்தை புரிந்து கொண்ட கதிரவன் உண்மையில் கதிரவன் தான் ...waiting for the next...


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

// உங்களுக்கு கஸ்டமர் கேர் டேக்கர் போஸ்ட்

கொடுத்து இருக்கோம். அதை கவனமா பண்ணுங்க. இங்கே பலவிதமான கஸ்டமர்கள்

வருவாங்க. அவங்க முகம் கோணாம நடந்துக்கணும். அவங்களை சரியா ஹாண்டில்

பண்ணனும். அந்த சமயத்துலே நம்ம சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமே

கொடுக்கக்கூடாது சரியா. நீங்க படிச்சவர். //

அடிக்கோடு போட்டுக்கலாமா?

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard