Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பனித்துளியில் சில மலர்கள். - 1


எழுத்தரசர்

Status: Offline
Posts: 196
Date:
பனித்துளியில் சில மலர்கள். - 1
Permalink   
 


மதியம் மணி இரண்டு பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது.   கோவை எக்ஸ்பிரஸ் 
வடகோவை ரயில் நிலையத்தைக் கடந்து கோயமுத்தூர் ரயில் நிலையத்தை 
நெருங்கிக்கொண்டிருந்தது.

ரயில் வண்டியில் இருந்த சொற்ப பயணிகள் தங்கள் உடமைகளை எடுத்துவைத்துக்கொண்டு இறங்குவதற்காக தங்களைத் தயார் படுத்திக் கொண்டிருந்தனர்.

கதிரவனும்
தன் கையில் இருந்த புத்தகத்தை மூடி தான் கொண்டு வந்திருந்த டிராவல் பாகில்
வைத்து   ஜிப்பை இழுத்து மூடி கையில் எடுத்துக் கொண்டு 
கம்பார்ட்மெண்ட்டின் கதவுக்கு பக்கத்தில் வந்து நின்று கொண்டான்.

அவினாசி ரோடு மேம்பாலத்தில் சிக்னலுக்காக வண்டி நின்றது.

ரயில்பாதையை
ஒட்டியிருந்த ப்ரூக்பாண்ட் ரோடு சாலையில் டவுன் பஸ்கள் ஆட்களை 
சுமந்துகொண்டு டவுன்ஹாலுக்கும், ஐந்து முக்குக்கும் விரைந்து 
கொண்டிருந்தன.  எதிர் சுவரில் இருந்த போஸ்டர் ராயல் தியேட்டரில் நாடோடி 
மன்னன் படம் ஓடிக்கொண்டிருப்பதை தெரிவித்துக்கொண்டிருந்தது. 

அடுத்த
போஸ்டர் இருதயா தியேட்டரில் "இனிக்கும் இரவை" கண்டு கழிக்க விடலைப் 
பையன்களையும், முப்பந்தைந்து வயதுக்கு மேற்பட்ட வாலிப(?!) அன்பர்களையும் 
ரகசியமாக அழைத்துக்கொண்டிருந்தது.

சிக்னல் கிடைத்து வண்டி ரயில் நிலையத்தை அடையும் முன்னால் நமது கதாநாயகன் கதிரவனைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம்.

கதிரவன்
-  இருபத்தைந்து வயது நிரம்பிய கட்டிளம் காளை.  நெடுநெடுவென்ற உயரமும் 
அந்த உயரத்தை ஒல்லி என்று சொல்லிவிடமுடியாதபடி அதற்கேற்ற வாட்ட சாட்டமான 
உடற்கட்டும் -  அந்த கட்டுடலுக்கு கூடுதலான ப்ளஸ் பாய்ண்டாக அவனது கோதுமை 
நிறமும் -  அவனுக்கு படைத்தவன் கொடுத்த வரம்.

சிறிய ஆனால் 
கவர்ந்திழுக்கும் காந்தக் கண்கள்.  அளவாகச் செதுக்கி வைத்தது போன்ற 
எடுப்பான நாசி, பரந்த நெற்றி, கச்சிதமாகச் செதுக்கி வைத்த மீசை....  என்று 
பிரம்மன் மிகவும் கவனத்துடன் படைத்துஅனுப்பி இருந்தான்.

எம்.எஸ்.சி.
- எம். பி. ஏ. படித்துவிட்டும் வேலை கிடைக்காத வாலிபர் சங்கத்தில் ஒரு 
பிரதிநியாக இதுநாள் வரை இருந்தவன், ஒருவழியாக இப்போது கோவையில் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில்  வேலை கிடைத்து அதில் சேர்வதற்காக சென்னையில் இருந்து பயணித்து
கோவைக்கு வந்துகொண்டிருக்கிறான்.

சிக்னல் கிடைத்து ரயில் நகரத் தொடங்கியது.

இரண்டு
நிமிட நேரத்தில் கோயமுத்தூர் சந்திப்பு என்ற பெயர்ப்பலகை மஞ்சள் நிறத்தில்
தெரிய இரண்டாவது நடைமேடையில் தடக் தடக் என்று சீரான தாளத்தில் பயணித்து 
கோவை எக்ஸ்பிரஸ் வந்து நின்றது.

பிளாட்பாரத்தில் துள்ளிகுதித்து இறங்கினான் கதிரவன்.

நடைமேடையில்
சென்னை செல்வதற்காக அந்த வண்டியை மொய்க்க தொடங்கிய ஜனத்திரளில் கலந்து 
முன்னேறி படிகளில் கீழிறங்கி ஒருவழியாக வெளியே வந்தான் கதிரவன்.

கோவைக்கே உரிய குளிர் காற்று அந்த மதிய நேரத்திலும் கதிரவனின் முகத்தில் அடித்து அவனை வரவேற்றது.

"கதிரவன்"
என்ற காகித வரிகளை உயர்த்திப் பிடித்துக்கொண்டு அவனை வரவேற்க வந்திருந்த 
வெள்ளைச் சீருடை அணிந்திருந்த டிரைவரை அடையாளம் கண்டுகொண்டு அவனை 
நெருங்கினான் கதிரவன்.

அறிமுகப் படலம் முடிந்ததும் அலுவகம் அவனை வரவேற்க அனுப்பி வைத்திருந்த காரில் ஏறிக்கொண்டான் கதிரவன்.

ஸ்டேட்
பாங்க் ரோடில் பயணித்து சாந்தி தியேட்டரை கடந்து திரும்பிய கார் வேகம் 
எடுத்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தைக் கடந்து நேராக பயணித்து வலதுபக்கம் 
திரும்பி கே.ஜி. காம்ப்ளெக்ஸ் முன்னால் வந்து இடதுபுறம் திரும்பி ரேஸ் 
கோர்ஸ் ரோட்டில் நுழைந்து சாரதாம்பாள் கோவிலைத்தாண்டி தாமஸ் பார்க் 
முன்னால் இருந்த பரந்து விரிந்து கிடந்த காம்பவுண்ட் கேட்டின் முன்னால் 
வந்து நின்றது.  வாசலில் இருந்த செக்யூரிட்டி கதவை திறந்துவிட கார் உள்ளே 
நுழைந்து அந்த நட்சத்திர ஹோட்டலின் என்ட்ரன்சில் வந்து நின்றது.

காரிலிருந்து இறங்கி உள்ளே சென்று ரிஷப்ஷனிச்டை நெருங்கி தான் வந்த விபரத்தை சொன்னான் கதிரவன்.

"ஜஸ்ட் எ மினிட் ப்ளீஸ் சார்." என்று முத்துப்பற்கள் தெரியச் சிரித்த அந்த வரவேற்பாளினி இண்டர்காமில் தொடர்பு கொண்டு யாரிடமோ அவனது வருகையைப் பற்றித் தெரிவித்துவிட்டு, மறுமுனையில் வந்த பதிலுக்காக "எஸ் சார் . எஸ். சார்" என்று இரண்டு முறை சொல்லிவிட்டு கதிரவன் புறம் திரும்பி, "நேராக பயணித்து இடதுபுறம் திரும்பினா ரெண்டாவது ரூமில் மானேஜர் இருக்கிறார் சார். போய்ப் பாருங்க." என்று சொல்லி வழிகாட்டினாள்.

அவள் காட்டிய வழியில் பயணித்து இரண்டாவது ரூமின் முன்னால் போய் நின்றான் கதிரவன்.   "எஸ். திவாகர்-மானேஜர்" என்ற பித்தளைப் பெயர்ப்பலகையை தாங்கிய அறையின் கதவில் நாசூக்காக இரண்டு தட்டு தட்டிவிட்டு கதவை திறந்து உள்ளே நுழைந்தான் கதிரவன்.

குனிந்து எதையோ எழுதிக்கொண்டிருந்த திவாகர் சட்டென்று தலை நிமிர்ந்து கதிரவனைப் பார்த்தான்.  அவனுக்கு கதிரவனை விட இரண்டு மூன்று வயது கூட இருக்கலாம்.

"ப்ளீஸ். பீ. சீட்டெட்" என்று தனக்கு முன்னால் இருந்த இருக்கையை காட்டினான் திவாகர்.

"தேங்க்ஸ் சார்." என்று சொல்லிவிட்டு அவன் முன்னால் அமர்ந்தான் கதிரவன்.

"யு ஆர் மிஸ்டர். கதிரவன். இல்லையா?" என்று கேட்ட திவாகர் தன முன்னால் இருந்த கணினியில் பதிவாகி இருந்த கதிரவனின் பயோ டேட்டா வில் அவனைப்பற்றிப் பதிவாகி இருந்த தகவல்களின் மீது பார்வையை ஓட விட்டான்.

"உங்க பாதர் என்ன பண்ணறார் கதிரவன்?" என்ற திவாகரின் கேள்விக்கு "எனக்கு அப்பாவே கிடையாது சார்.  என் அம்மா தான் என்னை வளர்த்தாங்க." என்றான் கதிரவன்.

"ஒ. ஐ.சி.  உங்க மதர் வேலைக்கு போறாங்களா?" அடுத்த கேள்வியைக் கேட்டான் திவாகர்.

"எஸ்.சார்." என்றான் கதிரவன்.

"எங்கே வொர்க் பண்ணறாங்க?" என்று அடுத்த கேள்வியை சாதரணமாகத்தான் கேட்டான் திவாகர்.

ஆனால் அதற்கு கதிரவன் சொன்ன பதில் திவாகரைத் தூக்கி வாரிப்போட வைத்தது.

நிதானமாகச் சொன்னான் கதிரவன்.

""ஷி இஸ் எ செக்ஸ் வொர்க்கர்.  பாலியல் தொழிலாளி சார்."

(தொடர்ந்து மலரும்.)



__________________


புதியவர்

Status: Offline
Posts: 7
Date:
Permalink   
 

அருமை..........

புதிய கதைக்களம்.........

வாழ்த்துக்கள் நண்பா......

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

அழைப்பை ஏற்றமைக்கு நன்றி நண்பா......

__________________



கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

கோவை வீதிகளும்
கோர்வை மொழிகளும்
கொங்கு தமிழில் கூறியிருந்தால் 100 மதிப்பு
ஒன்றே குறைந்துள்ளது
அருமை நண்பரே
அடிக்கடி ரயிலில் பயணம் செய்யும் என்னால் எழுத முடியவில்லை
நீவிர் அருமையாக செய்துள்ளீர்
நல்வரவு நண்பரே

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Nice narration..! Felt like travelled through..! .cause those area's 're so familiar for me..!

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

வருகைக்கு நன்றி நண்பா.... உங்கள் கதைப்பயணம் இனிதே தொடர வாழ்த்துறேன்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

ஆரம்பமே அமர்களமாக இருக்கு...welcome...

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 97
Date:
Permalink   
 

nice continue

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

ஆரம்பமே அதிரடியாக இருக்கு?

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

கோவைக்கே உரிய குளிர் காற்று அந்த மதிய நேரத்திலும் கதிரவனின் முகத்தில் அடித்து அவனை வரவேற்றது. \\\ is it true ?? i nvr cam2 covai

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard