உடல் அனலை புறம்தள்ள திடல் நீரை அகம்தழுவ வடம் போலே திரண்டுவர
ஆற்றில் அடி நீரில்லை கண் ஊற்றில் நீர் தாளவில்லை சிந்தினேன் கவலையொடு திரும்பினேன்
கடவுள் தரிசனம் காண கற்பகிரகம் நோக்கி பயணம் சனிகிழமை பெருமாளுக்கு துளசி மாலையும் சிறப்பு வழிபாடும் என ஆரவாரம் தெறிக்கும் பக்திமனம் சிந்தும் துளசி தீர்த்தம் இசைக்கும் மந்திரங்களும் தகிக்கும் குமிழ் தீபாரதனையும் காண கிட்டவில்லை
உனை கண்டு தரிசிக்க காலம் கிட்டவில்லையே நடை திறக்கும் நேரத்தை அரைமணிக்குள் நகர்த்தவில்லையே ரமேஷ்வரனை தரிசிக்க இந்த ரமேஷுக்கு வழியுமில்லையே
காலமின்றி மனமின்றி வெளியேறினேன்
அருகிலே சிவாலயம் ஆத்மா சிறக்க இறைவனை சிறப்பித்தேன் ஈசன் சித்தம் தொட தரிசித்தேன்
அடுத்த பயணம் பயிற்சி முடியும் காவலர் படை சிறப்பு விழா அதற்கு முன் உண்ண ஊண் உளுந்தூர் பேட்டை வசந்த பவன்
wow... பக்திமனம் சிந்தும் துளசி தீர்த்தம்...feel the smell of srirangam here...dont miss to visit again...உங்கள் வார்த்தைகள் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு உணர்வுகள் வெளிபடுகிறது...அருமை Ramvav....