அறிவியல் ஆயிரம் கண்டாலும் அகத்தினுள் மாற்றம் அறியவில்லை சமூகம் தொல்லை செய்தாலும் சந்தர்ப்பங்கள் நாம் அறிவதில்லை கணக்கு போட்டு வாழ்ந்தாலும் கழியும் நிம்மதி குறைவில்லை ஆங்காங்கே அலைகின்ற எண்ணங்களும் அமைதியை குலைக்க மறப்பதில்லை தவிக்கும் மனத்தின் செயல்களும் தருமத்தை துணையாக கொள்வதில்லை
மனித உடல் அதில் ஆச்சரியம் கடல் மனதின் இடம் அது அறியாத நாம் ஜடம் நிலை கொண்டு குறிப்பிட அது உயிர் இல்லை உணர்வு
மூளை நியமித்த சக தோழன் மூளை நியமிக்கா எதிரி அவன் நேர்மறை சொன்னால் எதிர்மறை பேசும் எதிர்மறை சொன்னால் நேர்மறை பேசும்
சிலரின் தவறான கருத்து மனசாட்சி சரியின் குருத்து என்று சொல்வது தவறென உணர்த்து
உண்மையென்னவெனில் மனம் நம்மை வழக்கத்துக்கு மாறி புதுமையை தேர்ந்தெடுக்க தூண்டும்
சில நேரங்களில் சரியானாலும் பல நேரங்களில் தவறாகி நம்மை மீண்டுவரத் தூண்டும்
மனமும் மூளையும் நம்மை இருவேறு கருத்து சொல்லி பகுத்தறியும் பாடம் புகட்டுது
மூளையின் நினைவுகளை மனதில் புதைக்குது மனது குப்பைக் கூடமாகுது மனதில் மாற்றம் நிகழாக் கிடக்குது அதனால் ஒருமைப்படுத்த யோகா உதவுது இருந்தும் அப்பயன் அடைந்தவர் சிலரே
நினைக்கத் தெரிந்த மனதிற்கு மறக்கத் தெரியாது மறக்கத் துணியும் நினைவு என்றும் மனதில் விலகாது
இன்னல் வேண்டாம் என் இணைய நண்பர்களே இன்மை புகுத்தும் சில வினைகள் செய்தலே இம்சிக்கும் எண்ணம் பல களையும் மனத்திலே தற்காலிகம் தானென்றாலும் நிம்மதி அது வெகுமதி வாழ்வும் தற்காலிகமே அதற்கென அழுவது அறியாமைத்தனமே மனதை குறை சொல்லி புலம்புது மனமே
உன் விரைவு கணினி கூட அசரும் அசராத உன் வேகம் அதனாலே நிகழும் நமக்குள் சோகம் அதை பயிற்றுவித்து படைப்போம் ஓர் சந்தோச உலகம்
wow...just stand up and giving you a big applause for u ramnav... மூளை நியமித்த சக தோழன் மூளை நியமிக்கா எதிரி அவன் நேர்மறை சொன்னால் எதிர்மறை பேசும் எதிர்மறை சொன்னால் நேர்மறை பேசும்....இந்த வரிகள் என்னை பிரமிக்க வைக்கிறது... உன் விரைவு கணினி கூட அசரும் அசராத உன் வேகம் அதனாலே நிகழும் நமக்குள் சோகம் அதை பயிற்றுவித்து படைப்போம் ஓர் சந்தோச உலகம்....இதை படிக்கும்போது தன்னம்பிக்கை தானே வரும்....keep it up..
நன்றி சாம்ராம் தங்களால் தான் நான் தகவல் சேகரிக்கக் கற்றேன் தாங்களே எனக்கு ஆசிரியர் இருப்பினும் உடல்பசி அறிவுப்பசிக்காக என்னை மன்னிக்கவும் தங்களின் அந்த வேலையை என்னால் முடிக்க முடியவில்லை
என்னை மன்னிக்கவும்...இந்த வார்த்தை எதற்கு நண்பா...இங்கு நாம் ஒருவருக்கு ஒருவர் நல்ல தூண்டுதலாக இருந்து வாழ்வில் உயர வேண்டும் அதுவே என் ஆசை...கண்டிப்பாக அது நடக்கும் என்று நம்புகிறேன்