சினிமா உலகின் மேதை கவுண்ட மணி அண்ணனுக்கு, எப்படி இப்போதும் படத்திலும் சரி, நேரிலும் சரி ஒரு இளைஞன் போல் இருக்கிறீர்கள். நீங்கள் மட்டும் டை அடித்தால் உங்களுக்கு யாரும் நாற்பது வயதுக்கு மேல் சொல்ல மாட்டார்கள். (மறுபடியும் நீங்கள் டை அடிக்க வேண்டும்). தலைவரே! எப்படி உங்கள் முகம் எப்போதும் கண்ணாடி போல் பளபளவென்று உள்ளது. அதற்கு என்ன செய்கிறீர்கள் தயவு செய்து சொல்லுங்கள். 30 வயதிலே எனக்கு டொக்கு விழுந்து விட்டது. இந்த ரகசியத்தைச் சொல்ல கட்டணம் வேண்டும் என்றாலும் தருகிறேன். நன்றி மோகனசுந்தரம். டேய் மோசு வண்டுருட்டாந்தலையா, எத்தன வாட்டி கிளிப்புள்ளைக்கு சொன்னாப்டி படிச்சு படிச்சு சொல்லீருக்கறேன்! நான் வெச்சிருக்கறது விக்குனு... அதுவே கருப்பாதாண்டா இருக்கு அதுக்கெதுக்குடா டையடிக்கணும்? டொக்கு பத்தியும் மண்ணுக்கேத்த பொண்ணு படத்துல கூட சொல்லீருக்கேன். டொக்கு ஏன் உழுவுது? நூல் வரைக்கும் பீடிய இழுக்கறதாலதான். காணாத நாயி கருவாட்டக் கண்டாப்புடி ஊ ஊனு உறிஞ்சா கன்னம் ரெண்டும் உள்ளார பூந்து கொகையாட்டம் ஆவாம பின்ன மணக்குமாடா மயிராண்டி? வெள்ளக்காரன் என்ன தம்மடிக்காமலா இருக்கான்? அவனுக்கு ஏண்டா நாயே டொக்கு உழுவறதில்ல? இதே மாதிரிதான் பொயில போடறேன்னு பொந்துல பொகப்போட்டாப்டி வாய நாறடிச்சுக்கறீங்க? இன்னொன்னு சொல்லலாம் ஆனா அதெல்லாம் கிட்னி சம்பந்தப்பட்டது. உனக்கு சொன்னா ஏறாதுதான். இருந்தாலும் சொல்றேன். நெஞ்சுல முடி மொளச்ச காலத்துல இருந்து நான் டெய்லி 4 கிலோமீட்டராச்சும் ஓடிட்டு இருக்கேன். நடுவுல ஒரு நாலு மாசம் நாய் கடிச்சு படுத்துட்டு இருந்தங்காட்டி ஓட முடில. அப்பல்லாம் எதையுமே செய்யல. கவுத்துக்கட்டுலே கதினு கெடந்தேன். துண்டு பீடிய மட்டுமே இழுத்துட்டு லோல் பட்டுட்டு கெடந்தேன். அந்த கேப்ப உட்டுட்டு பாத்தம்னா நான் எம்பட பாடிய சும்மா கன் மாதிரி வெச்சிருக்கேன். சும்மா பேரன் லவ்லி பாக்கெட்ட வாங்கி பூசிட்டா மட்டும் பூனக்குட்டியாட்டம் பொசு பொசுனு ஆயிரமுடியாது. சொல்றன் கேட்டுக்க... காலையில் கழுத மூத்திரம் ஒரு டம்ளர் குடிக்கிறேன். குடிக்கும் போது “மணியா! இந்த மானங்கெட்ட பொழப்பு உனக்கு தேவதானானு தோணும். முக்க நாத்தமடிக்கும். தொண்டக்குள்ள நொழையற நேரமா பாத்து விக்கிக்கும். நாத்தத்துல அழுவாச்சியே வந்துரும். ஆனாலும் இப்பிடி ஸ்டீல் பாடி வேணும்னா இதெல்லாம் செஞ்சுதான் ஆவணும். நீ ஆம்பளைன்றதால இப்பிடி சொல்றேன்! இதே ஒரு பொட்டப்புள்ள ஐடியா கேட்டுருந்துச்சுனா வெய்யி நம்ம ஸ்டைலே வேற அக்காங். அடுத்து காடு கர கக்ஸுக்கு ஒரு ஓட்டம். கண்டங்கத்திரி முள்ளு இத்துணூண்டு, கருவாட்டு ரத்தம் காப்படி, கொசு மூத்திரம் அரைப்படி. இது மூணையும் மிக்சில போட்டு அடிச்சு ஜூஸக்குடிப்பேன். இத சொல்றதுக்கு இப்பிடி ஈசியா இருக்கும். ஆனா செய்யறது நெம்ப கஸ்டம். கொசு றெக்கைய மெதுவா பிக்கோணும், ஒரு றெக்கையோ காலோ உள்ள உழுந்துருச்சுனாலும் போச்சு.. அப்பறம் வெக்க கெளம்பி வேகு வேகுனுதான் திரியோணும் பாத்துக்க. கொசு மூத்திரத்த எப்பிடி புடிக்கறதுனு கேனத்தனமா கேள்வி கேட்டு லெட்டர் போட்டுத்தொலையாத.. வந்தன்னா குறுக்கு மேல எட்டி ஒதச்சுப்போடுவேன். மூடிட்டு நான் சொன்னத மட்டும் புடுங்கு சொரையப்புடுங்காத.. ஆளையும் வாயயும் பாரு வடச்சட்டியாட்டமா... கருவாட்டையும் அதே மாதிரி புழிஞ்சு ரத்தத்த எடுத்துட்டு எல்லாத்தையும் கலக்கி மிக்ஸில அடிச்சு வடிகட்டி வெச்சுக்கணும். அப்பறம் கரப்பாம்பூச்சி நால புடிச்சு கருவேப்பல கொத்தமல்லி போட்டு வறுத்து அதையும் இதுல சேத்து அடிச்சா ஒரு டம்ளர் வரும். அப்பிடியே பல்லுப்படாம குடிச்சுட்டு பாத்ரூம் செவுத்த போயி நாக்கு படாம நக்கிரணும். இது மாதிரி பலவருசமா பண்ணிட்டு வரேன். கொசு புடிக்கறதுக்கு பேட்டு வந்துருக்குனு சொல்றானுக. அது வாங்கலாம்னா காசு வேற இல்ல. நீ வேணாம் அதுக்கு ஒரு நூத்தி நுப்பது ரூவா அனுப்பு. ஓசிலயே ஐடியா வாங்குனீனா புழு புடிச்சுதான் சாவ. படுத்துட்டு இருக்கும்போது எந்திரிக்கணும்னா கையக் கீழ ஊனாம தவ்வி எந்திரிக்கணும். இது நான் நித்தி மடத்துல கத்துகிட்டது. (அங்கே ஆன்மீகத்தைத் தவிர மத்த எல்லா அய்ட்டமும் சூப்பரா இருக்கும்!) நைட்டுக்கா சுண்டக்கஞ்சி ஆலிவ் பழம், வாரத்துக்கு ஒருக்கா பட்டை.. அப்பப்ப தென்னங்கள்ளு.. இதெல்லாம் நான் கஞ்சியானுகள பாத்து கத்துக்கிட்டது. நாம 11 மணிக்கு போயி தோப்புல நின்னம்னா கள்ளு புளிச்சிருக்கும்! வெடியக்காத்தாலயே போயிரணும். தூங்கறதுக்கு முன்னாடி பல்லி ஒண்ண புடிச்சு அடிப்பேன் வால அத்து உட்டுட்டு ஓடிரும்! அந்த வால எடுத்து வெத்தலைக்குள்ள போட்டு கொதப்பிக்குவேன். இதெல்லாம் செலவே இல்ல.. ஆனா பாக்கதான் கொஞ்சம் டிப்டாப்பா இருக்கும்! பல்லி என்ன பஞ்சவர்ணக்கிளியா? ஆனா அத புடிக்கறதுக்கு மெனக்கெட்டு வேல செய்யணும். அதான் மேட்டரு.
அதும் நாம் மூஞ்சுக்கு போட சோப்பெல்லாம் யாருமே போடாததாக்கும். எல்லாம் பொண்வண்டு சோப்புதான். இது குமரி முத்துவுக்கு மட்டும் தான் தெரியும்.. இப்ப உனக்கு! பொன்வண்டு சோப்புல என்னா கெத்துனா அது முச்சூடும் பொன்வண்டுலயே செய்வாங்களாக்கும்.
இது போக காலைல கப்ளிங்ஸ், மத்தியானம் டிக்கிலோனா நைட்டுக்கா ஜலபுலஜங்ஸ்னு ஸ்போர்ட்ஸ்லயே தான் பொழுத ஓட்டுவேன். இதான் நம்ம அழகோட சூச்சுமம்.