மனம் என்பது மாயை அதில் நிலையானவன் மேதை காரியங்களோ நம் செய்கை அதற்கான உறுதியதில் தேவை
உலகமே பழித்தது ஹிட்லரை நான் கூசாமல் புகழ்வேன் அவரை தன் கருத்தில் மாறாது நின்றார் கடைசி வரை காலம் கடந்து காதுகளில் கேட்கும் வகையில் ஆக்கிவிட்டார் அவர் பெயரை
அமெரிக்கா அலட்சியப் படுத்திய கறுப்பினர் அவர் அமிழ்ந்த அடிமை அவிழ்த்து அடிமைக் கெதிராய் ஆசானம் ஒன்றை ஆணையிட்ட ஆப்ரஹாமை அமெரிக்காவே புகழும் அளவிலான உறுப்பினர் அவர்
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தந்தை மரணமுற்ற பின் தங்க தேவதை பிறந்தாள் தாயின் நலமும் குன்றி தளிர் தவிக்கும்படி இறந்தாள் நார்மாஜின் டென்சன் என்ற பெயருடைய அவள் வளரும் வரை அனாதை இல்லத்தில் இருந்தாள் வளர்ந்த பின் வீடு வீடாய் அசுத்தம் விலக்க விளக்கினாள் இருந்தும் இடமில்லை தவித்தாள் ஒரு கால உணவுக்கு ஒரு காலண்டர் படத்துக்கு உடையின்றி நடித்தாள் அதுதான் அவள் கண்ட மாற்றம் அன்றோ அடுத்தடுத்த வெற்றிகளோ சேர்ந்தது போல் குன்றோ பல பெண்கள் இவர் கண்டு கடிந்தொழுகிய வசனம்தான் இது நன்றோ இறந்த பின்னும் இடை அழகில் சிறந்தது இன்றோ உலகம் புகழும் அழகி அவள் மர்லின் மன்றோ
கையேந்தி கடையில் நின்றவள் கால் கஞ்சிக்கும் கதியற்றவருக்காக கையில் கடந்துவருது கண்ணியவானின் காரிய கருமம் கைகளை துடைத்து விட்டு கருமம் அதை நான் கொள்வேன் செய் தருமம் அதை ஈகையாக்குவேன் என்றாள் கருணை கடலவள் அன்னை தெரஸா
அவர்களுக்கும் உங்களுக்கும் இருக்கும் வித்தியாசம் ஒன்று தான்
மனதில் உறுதி கொண்டவர்கள் அவர்கள் சொல் மாறிய கணத்தில் நொடிந்து விடுவீர்கள் நீங்கள்
சிறு சிறு சொற்களுக்கும் பெரியதொரு விளைவு காண்போம் அந்த விளைவு வழியே மன உளைச்சல் காண்போம் உளைச்சலின் உச்சியில் விரக்தி காண்போம் விரக்தியின் இறுதியில் உயிர் முக்தி காண்போம்
வார்த்தை ஒன்றும் பெரிய வாளில்லை எவர் சொல் அதிகாரமும் இங்கு மாறவில்லை அவர் கடிந்த மொழியில் நீர் ஒடியப் போவதுமில்லை இருந்தும் அது புரிவதில்லை புரிந்தவர் இங்கு பலரில்லை எல்லை கடந்தும் இது நிற்பதில்லை எல்லையில்லாமல் செல்கிறது இதில் பாதித்தவரின் நிலை
பிறர் வார்த்தைகளை பெரிது படுத்தாதீர் உம் குற்றம் உரைத்தால் அதை கேட்க தவிர்க்காதீர் புகழ்ந்து கூறினால் மயங்காதீர் இகழ்ந்து பேசினால் நிற்காதீர் தட்டிக் கொடுத்ததற்காக செயலில் இறங்காதீர் வெட்டி எறிந்தால் துளிர்க்க மறவாதீர்
மனதினில் உறுதி கொள் உறுதியில் வலிமை கொள் வலிமையில் நேசம் கொள் நேசத்தில் நெகிழ்ந்து கொள் பின்பு உலகமே உன்னை எண்ணி நெகிழும்
wow...பாரதியார் பாடலில் உள்ள மனதில் உறுதி வேண்டும் ஏற்படுத்திய தாக்கம் உங்கள் கவிதையிலும் இருக்கு,ஹிட்லர்,ஆபிரகாம் லிங்கன்,மர்லின் மன்றோ,அன்னை தெரசா பற்றிய வரிகள் உங்கள் விசாலமான அறிவை காட்டுகிறது, பின்வரும் ---வார்த்தை ஒன்றும் பெரிய வாளில்லை...நீர் ஒடியப் போவதுமில்லை...அருமை நண்பா...முடிவில் மனதினில் உறுதி கொள் உறுதியில் வலிமை கொள் வலிமையில் நேசம் கொள் நேசத்தில் நெகிழ்ந்து கொள் பின்பு உலகமே உன்னை எண்ணி நெகிழும்....you give a conclusion for life to over come the fears in us...good work...super...super...please join in kavithai competition...