கார் பார்கிங்கில் மதுவின் இடம்காலியாக இருந்தது. அதில் காரை நிறுத்திவிட்டு லிப்ட் நோக்கி வந்தான். நல்ல வேளைகாலையில் பரணி மொபைலில் அழைத்ததால் மதுதப்பித்தான். இல்லை என்றால்அன்றைய மீட்டிங்மறந்து தூங்கி இருந்திருப்பான். மூன்றாவது மாடியில் வெளியேறி அவன் வீட்டை திறந்தான் கதவுக்கு பின்னே இருட்டும் ஏராளமான தனிமையும் அவனை வரவேற்றன.
ஒரு வருடத்திற்கு முன்பு வரை மாரியப்பன், ஆஷிஷ், மஞ்சுநாத் மூவரும்அவனோடுஇந்தவீட்டில் இருந்தனர். மஞ்சு பெங்களூரிலும், ஆஷிஷ் புனேவிற்கும் சென்று விட, மண்ணின் மைந்தன் மாரிமட்டும் சில நாட்கள் தங்கி இருந்தான் அவனும் திருமணமாகி அமெரிக்கா சென்று விட்டான். அதற்கு பிறகுமதுவோடு அந்த வீட்டில் வசிப்பது சில கொசுக்களும் தனிமையும் தான்.
முந்தைய இரவில் தூக்கம் இழந்த கண்கள் அவனை காட்டி கொடுத்தன. எல்லோரிடமும் ராத்திரி கரண்ட் இல்லாததால் தூக்கம் இல்லை என்று ஒரு வழியாக சமாளித்து வைத்தான். நல்ல வேளையாக மீட்டிங்கில் தூங்கி வழியவில்லை. அது பற்றி நேற்றே மெயில் வந்தது. அமெரிக்க கஸ்டமருக்கு பிசினெஸில்திடீர் தேவை. அதை ஏற்கனவே உள்ள டிசைனில் திணித்துநான்கேநாட்களில்முடிக்க வேண்டும். இதை பற்றி அலசி ஆராயத்தான் இன்றைய மீட்டிங். கேள்வி பட்டதும் பழைய டிசைன் இதற்கு தோது படாது என்று மதுசவால் விட்டான் .மேனேஜரும் லீடரும்நேரடியாககஸ்டமரிடம் அவனை கோர்த்து விட்டனர.
மீட்டிங் முடித்து வெளியே வந்த பொது மேனேஜர் நிம்மதி பேரு மூச்சு விட்டார்.மது சொன்னதை ஏற்று எல்லாவற்றையும் திருத்தி பத்து நாட்களில் முடிக்ககஸ்டமர் ஒப்புகொண்டான் அலுவலகத்தில் நேரம் போவதே தெரியாது. யாரவது ஒருவனை தேர்ந்தெடுத்து டீ பிரேக் லஞ்ச் பிரேக்கில்எல்லோரும் கூடி கலாய்ப்பது தினமும் வாடிக்கை. எந்நேரமும் உற்சாகம் கொப்பளிக்கும் மதுவைஎல்லோரும் விரும்புவது ஒன்றும்அதிசயம் இல்லை.
பிரிட்ஜ் திறந்து காய்கறிகளை தேடினான். என்ன சமைப்பது என்று யோசித்தான் கைகளில் வெங்காயம் அள்ளி வெட்ட தொடங்கினான்.அரிசியை களைந்து குக்கரில் நீர் ஊற்றி ஸ்டவில் வைத்து சமைக்க ஆரம்பித்தான். காலையில் முதல் வேலையாக கூகுள் செய்து கனவின் பலனை தேடினான். யாரவது இறப்பது போல் கனவு கண்டால் அவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை, மாறாக நீண்ட நாள் ஆயுள் இருக்கும் என்று பதில் கிடைத்தது.அதற்கு பிறகு தான் நிம்மதியாகஉணர்ந்தான்.
அந்த கனவு இனிதொல்லை தராது. ஏதோ ஒரு முன் அறிவிப்பை மனசு வெளியிட்டு உள்ளது.அடுத்து அவரை தேடி கண்டுபிடிக்க வேண்டும்.மதன் அண்ணாவிற்கு எதுவும் நேர்ந்து இருக்கக்கூடாது.அந்த கனவை நினைக்கும் போதுலேசாக கலக்கம் உண்டானது. அவரை எப்படி தேட போகிறோம் என்று இனிமேல் தான் யோசிக்க வேண்டும். இத்தனை வருடங்களுக்கு பிறகு அவருடைய நினைவுகள் அடிமனதில் இருந்து மேல் எழும்பி கனவுகளாக உலவத்தொடங்கியது. அவரை இன்னமும் தான் மறக்கவில்லைஎன்பதே மதுவிற்கு ஆனந்தமாக இருந்தது.
சமையலறையில் அந்த பிராந்தி பாட்டில் கண்ணில் பட்டது. பகல் முழுதும் சாது பூனையாய் வீடெங்கும் வலம் வரும் தனிமை இரவானதும் அனகோண்டாவாக மாறி அவன்தூக்கத்தை கெடுக்கும். கூடவே அந்த கனவு வேறு அவனுடைய இரவுகளை நரகமாக மாற்றும். அவனுடைய பல இரவுதூக்கங்கள் பிராந்தியின் உபயத்தால் தான்.இரவெல்லாம் குடித்தான், விடிய விடியதூங்கினான். ரத்தத்தில் மதுவின் அளவு கூடி கொண்டுபோக போதையின் அளவு குறைந்தது.நிறைய குடித்தான், நிறைய தூங்கினான்.வயிறு முட்ட குடித்தால் அதிகாலையில் அடி வயிறு வீங்கி அவனை எழுப்பி விடும். தள்ளாடி கொண்டு பாத் ரூம் போய்வருவான்.
சமைத்து முடித்ததும் கொஞ்சமாக குடிக்கலாமா என்று பாட்டிலை பார்த்தான். ஆனால் சேர்த்து கொள்ள கோக் சிகரட் இரண்டும் இல்லை. குளித்து விட்டு கடைக்கு போக வேண்டும். தன்னை கண்ணாடியில் பார்த்து கொண்டான்.அவனுக்கு தன்னை ரசிக்கமிகவும்பிடிக்கும். நீரில் நனைந்தான்.நீள நீளமுடிகள் உச்சந்தலையில் இருந்து பிரிந்து காது வரை நீண்டு கண்களை மறைத்தது. செந்நிற மேனி. மெல்லிய கண்கள். அதில் நிச்சலனம். தெளிவான மூக்கு. முதல் மீசையை இன்னும் மழிக்காததால் இன்னும் புதிதாய் உதடுகளின் மேல்வரியை மறைத்து கொண்டு தொங்கியது. சிவந்த இதழ். தலையில் இருந்து நீர் வழிந்துநெற்றி மூக்கு உதடுகள் என்று கோடு போல் இறங்கி இதழ் கிண்ணத்தில் இருந்து வழிந்தது.
"உனக்கு இன்னும் வயசு இருக்கு நீ நிறைய படி. நிறைய மார்க் எடு. மனசை அலைபாய விடாதே". மதன் அண்ணா அவனிடம் எடுத்து சொன்ன வார்த்தைகள். அவன் எண்ணங்களை திருத்தி அவனை மாற்றி அமைத்தமதன் அண்ணா.
குளித்து விட்டு வெளியில் வந்தான். தலையை வாரிகண்ணாடி பார்த்தான். அவன் மாற்றி மாற்றி தலை சீவி பார்ப்பான்.
"நீ இன்னும் சின்ன பையன் டா."
இப்போ நான் பெரிய பையன் அண்ணா. நீ எங்கே இருக்கிறாய். உன்னை தேடுவது தான் என் முழு நேர வேலை.
அன்றைய சிறுவன் இன்று வளர்ந்து ஓருகடவுளின் எழிலை பெற்று இருக்கிறான் அவன் நினைவுகளில் இருக்கும் மதன் அண்ணா இன்னமும் அன்று பார்த்தது போலவே இருக்கிறார். இப்போது எப்படி இருப்பார். வயது முப்பதுக்குஅருகே இருக்கும். திருமணமாகி இருக்கலாம். ஒரு சின்ன தொப்பை. அவர் கை பிடித்து கொண்டு ஒரு குழந்தை. அவரால் மதுவை அடையாளம்காண முடியுமா? அவர் நினைவில் இவன் இன்னும் சிறுவனாக தான் கட்சி அளிப்பானா? அவரிடம் அதே கனிவும் பிரியமும் இருக்குமா அல்லது காலவோட்டத்தில் நீர்த்து போய்இருக்குமா?
கீழே இறங்கி கடையில் வாங்கி கொண்டுவந்தான். இன்னும் நிலத்தில்நேற்றைய மழையின் ஈரம் இருந்தது. அது ஏழுநூறு வீடுகள் அடங்கிய ஒரு கம்யூனிட்டிவசிப்பிடம். . மொத்தம் இருபது பிளாக்குகள்.ஏர்போர்ட் அருகில் இருப்பதால்நிறைய வட நாட்டு முகங்கள். அதிலும் நார்த் ஈஸ்ட் நிறைய. எல்லா பிளாக்குகளுக்கு நடுவே தோட்டம் போன்று மரங்களும் பச்சை தரையும் நடுவில் நீச்சல் குளமும் தான் இங்கே அழகு. அதிலும் குழந்தைகள் ஓடி விளையாடுவதை பொழுது போகாத மாலையில் ரசிக்கலாம்.
லிப்ட் அருகில் பட்டனை அழுத்தி விட்டு நின்றான். தரை தளத்திற்கு லிப்ட் வர இன்னும் மூன்று தளங்கள் இருந்தன. இன்றைய இரவும் தூக்கம் இழந்து அவனை தவிக்க வைப்பதற்குஅந்த லிப்ட்ஒவ்வொரு எண்ணாக குறைந்து கொண்டு வந்தது.
தரைக்கு வந்த லிப்ட் இரண்டாக பிளந்து அனைவரும் வெளியேற அதில் ஒருவர் மட்டும்உள்ளே இருந்தார். மது கதவருகே வந்த போது அவர் லிப்ட் கீழே செல்வதாக சைகை காட்டி புன்னகைத்தார். இரண்டு பக்கம் இருந்தும் கதவு மெல்ல மெல்ல நெருங்க தொடங்க உள்ளே இருந்த உள்ளிருந்த அவர்லிப்ட் நடுவில் நின்று இருந்தார். அவருடைய புன்னகை அவரை உற்று பார்க்க வைத்தது. கதவுகள்நெருங்கி கொண்டு வந்தது. நேற்று கனவில் வந்த முகத்துன் சாயல் அவரிடத்தில் இருந்தது. அட இவர் மதன் அண்ணாவோவா?. அவர் கண்களை பார்த்தான். புருவத்தின் கீழ் மருவைதேடினான். கதவுகள் நெருங்கி மூடும் முன்னர் பார்த்து விட்டான். அந்த இடத்தில் அதே மரு. லிப்ட் கீழே சென்று கொண்டு இருந்தது.
இதயம் வேகமாக துடித்து கொண்டு இருந்தது. டேய், நீ தேடும் மதன் இவர் தான். ஓடு, விடாதே பிடி என்று மூளை அவனை துரிதபடுத்த அவன் மனசு இன்னமும் நம்ப முடியாமல் வியப்பில்இருந்தது. நிஜத்தைஉணர்ந்த அவன் கால்கள் துடித்தது. உடனே திரும்பி பக்கவாட்டில் இருக்கும் படிக்கட்டு வழியாக கீழே செல்ல அங்கிருந்த அவன்மனதையும் இழுத்து கொண்டுஓடினான். இரண்டிரண்டு படிகளாக தாவி வளைவில் மழை நீருக்கு செருப்பு சறுக்கியது. கட்டை பிடித்து கொண்டு மீண்டும் தாவும் போது கையில் இருந்த கேரி பேக் அறுந்து கோக் பாட்டில் விழுந்தது. அவனோடு அதுவும் உருண்டு ஓடியது.
பேஸ்மென்ட்டில் அங்கோன்றும் இங்கொன்றுமாக மங்கலான வெளிச்சம். இருட்டில் அவர் எந்த பக்க போய்இருப்பார் என்று தேடினான். யாருமில்லை.அங்கே ஒருஒரு கார் மட்டும்ரிவர்சில் வந்து மெல்ல வேகமெடுத்தது.
அண்ணா, நான் தான் மது. என்னை தெரியவில்லையா? தூரத்தில் கார் சென்று கொண்டு இருந்தது. அவன் துரத்தி கொண்டுஓடினான். கார் சுற்றி கொண்டு மெயின் கேட் வருவதற்குள் குறுக்கு வழியாக சென்று விடலாம். அது என்ன கார் என்று இருட்டில் பார்க்கவில்லை.அது கருப்பா இல்லை சிவப்பா தெரியவில்லை. ராம்ப் மேலே கார் சென்று வெளியேறவும் இவன் ராம்ப் அருகே சென்றான். அவன் கால்கள் அவன் மனதை விட வேகாமாக ஓடியது. மேலே வந்துஅங்கிருந்த தடுப்பு சுவரை தாண்டி தேங்கியிருந்த தண்ணீரில் குதிக்க அது முகம் வரை தெறித்தது. அவன் சோர்ந்துவிடாமல் கேட் அருகே ஓடினான்.
இன்னும் சில வினாடிகளில் நெருங்கி விடும் தூரத்தில் கேட். அந்த கார் வருவதற்குள் அங்கு சென்று அதை மறிக்க வேண்டும். அவரிடம் நீங்கள் தான் மதன் அண்ணாவா என்று கேட்டு விட வேண்டும். ஓடினான். அந்த கார் நெருங்கி விட்டது. கைகெட்டும் தூரத்தில் கார் நழுவி சென்றது.
முழங்கால்களை பிடித்து கொண்டு அந்த கார் சென்ற திசையை பார்த்து கொண்டு நின்றான். நெற்றியில் வழிந்த வேர்வை அவன் கண்களை மறைத்தது.
ஐயோ, அந்த கார் சாலையில் இறங்கி கலந்து விட்டது. நில்லுங்கள், நில்லுங்கள் மதன். நான் மது.
ராஜேஷ் குமார் சாரின் நாவல்களில் இருக்கும் அதே விறுவிறுப்பு உங்கள் கதையிலும் இருக்கிறது.. ஒரு காதல் கதையில் இவ்வளவு விறுவிறுப்பைக் காட்டும் சக்தி வியப்பாய் இருக்கிறது.. தொடர்ந்து எழுதுங்கள்..
சின்ன சின்ன விஷயத்தில் கூட உங்கள் கவனம் தெரிகிறது...சமையல் செய்வது...ஒரு பார்வையில் வீட்டின் உள்ளவைகளை பார்ப்பது...you make the readers to involve in your story...keep it up
-- Edited by samram on Wednesday 29th of May 2013 12:32:41 PM