நான் அன்று மதியம் வீட்டில் இருந்து வெளியேறினேன். மறக்காமல் லேப்டாப் எடுத்து வைத்தேன். அது கார்த்தியின் லேப்டாப். அவனிடம் திருப்பி தருவதற்காக அவன் வீட்டிற்க்கு போகலாம் என்று முடிவு செய்தேன். வசந்த பவனில் ஒரு நல்ல லஞ்ச் சாப்பிட்டு கார்த்தி நம்பரை மொபைல்-இல் இருந்து எடுத்து ஒரு std பூத்தில் இருந்து போன் செய்து அவனை சந்திக்க வருவதாக சொன்னேன். வந்தவாசி வந்ததும்போன் பண்ண சொன்னான். என்னுடைய mobile வெறும் contacts பார்க்க மட்டும் தான். அதில் இருந்து missed கால் கூட கொடுக்க முடியாது. என் மொபைல் மட்டும் தான் டம்மி பீஸ்.
“என்ன பண்ண போற, இன்னும் three weeks இருக்கே? தனியா இருப்பியா ? என் லேப்டாப் வேணுமா?” அன்று தவறவிட்டதை இன்று பிடிக்க போகிறேன். அந்த நினைப்பே உற்சாகமாய் இருந்தது. இன்று இரவு அவனோடு தான்.
கார்த்தி என் உயிர் நண்பன். கடந்த இரண்டு வருடங்களாக என் உயிர் முழுதும் அவன் நினைவுகளால்ஆக்கிரமித்து இருந்தான்.இருவரும் தோற்றத்திலும் உயரத்திலும் ஒரே மாதிரி இருப்போம். நிறம் மட்டும் வேறு.அவன் சிவந்த நிறம், நான் நம் தமிழ் நிறம்.இதை தவிர மேலும் இரண்டு வித்தியாசங்கள் உள்ளது. அவன் மிக பெரிய பணக்காரன், அவன் அப்பா தொழிலதிபர். என் அப்பா போலீஸ் SI. அவன் வெகுளி, மிக சாதுவானவன்.நான் ரௌடி என்று form ஆனவன்
எனக்கு மென்மையான இளைஞர்களை மிக பிடிக்கும். அதிலும் சிவப்பாக, கண்களில் அப்பாவித்தனத்தை தேக்கி வைத்துகொண்டு ஒரு காம்ப்ளான் boy மாதிரி கார்த்தி இருந்தான்.என்னை கண்டு சீனியர்களே ராக்கிங் செய்யமால் பயந்து நகரும்போது, முதல் வருடம் கார்த்தி என்னிடம் பேசவே பயந்தான். அவனை தூரத்தில் இருந்து ரசிப்பதோடு சரி. ஆனாலும் அவன் அழகு என்னை காத்திருக்க விடவில்லை. அவனை துரத்தி துரத்திநண்பனாகி கொண்டேனே தவிர அந்த குழந்தையிடம் என்னால் அத்து மீற முடியவில்லை
அதிக பட்சமாக அவன் கன்னத்தில் முத்தம் தந்து இருக்கிறேன்.இந்த மூன்று வருடங்களில் அவனை பின்புறமாக அணைத்து இருக்கிறேன், பஸ் பயணத்தில் என் தோளில்சாய்ந்து இருக்கிறான், அவனை மெதுவாக இறுக்கி அணைத்து இருக்கிறேன். சினிமா theatre-இல் அவன் விரல்களை கோர்த்து அப்படியே இருட்டில் மெதுவாக அவன் கைகளை முகர்ந்து பார்த்து மெலிதாக முத்தம் இட்டு இருக்கிறேன். ஓர் இரவு என்னுடைய ரூமில் அவன் என்னோடு தூங்கினான். அவன் தொப்புளை தடவி என் விரல்களால் அவன் மேனி முழுதும் வரைந்து கொண்டு இருக்கும்போது, தூக்கம் வருது சும்மா படுடா என்று என்கழுத்தில் மாலையாக அவன் கைகளை சேர்த்து என் மார்பில் அவன் தலை சாய்ந்து உறங்கியபோது, காமம் கட்டிலை விட்டு இறங்கி ஓடியது.