குழந்தையில் நடக்கையில் கால்தடுக்கையில் கீழ் விழுந்தேன் அழுதேன் கண் நீர் விழுதே வீழ்ந்தே கிடந்தால் என் கால் பழுதே
பள்ளியில் படிக்கையில் பிழை சில பிறக்கையில் அடி வாங்கினேன் அழுதேன் தழும்புகள் தங்குதே வீழ்ந்தே கிடந்தால் அறியாமை பொங்குதே
கல்லூரியில் கழிவறையில் மூத்தவர் தீங்கு இழைக்கையில் மூத்திரம் ருசித்தேன் அழுதேன் மூச்சு முட்டுதே வீழ்ந்தே கிடந்தால் கழிக்க கூட்டம் சேருதே
ஆன்லைனில் ஆண்கள் சிலரில் நட்பெனும் பெயரில் கற்பு களைய துணிந்தான் அழுதேன் கண நேரத்தில் கடிந்து ஓட்டம் வீழ்ந்தே கிடந்தால் வியாதிகள் எனக்குள் அரங்கேற்றும் திண்டாட்டம்
நன்றி சாம் நான் அடுத்து மே மாதம் 25 வரை நான் இத்தளம் வர இயலாது உங்களை எல்லாம் பார்த்தது இல்லை ஆனால் நான் இத்தளத்தில் நுழையும் போது நீங்கள் என் அருகில் இருப்பது போல் உணர்கிறேன் ஆனால் இந்த சில நாட்களுக்கு மனது ரணம் அடையும் வேறு வழியில்லை எல்லோரும் வாழ்வில் சிறக்க விதியிடம் பிரார்த்திக்கிறேன்