தமிழ் இலக்கிய வட்டத்தில் ஒரு மிகப்பெரிய மறுமலர்ச்சியை உண்டாக்கிய எங்கள் மானசீக குரு அமரர்.சுஜாதா அவர்களின் பிறந்தநாள் இன்று....
ஒரு சாதாரண வாக்கியம் கூட, சுஜாதாவின் எழுத்தாக வரும்போது அது பொன்மொழியாக ஆகும் அளவிற்கு எம் தமிழை இன்றைய இளைய சமுதாயத்திடம் கொண்டு சேர்த்த அந்த அமரர் இந்த மண்ணிலிருந்து மறைந்தாலும், ஒவ்வொரு படைப்பாளியின் மனதிலும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்....
இன்றைய, சென்ற தலைமுறையினரில் பெரும்பன்மையினருக்கு வாசிக்கும் பழக்கத்தையும், சிலருக்கு எழுதும் பழக்கத்தையும் ஏற்படுத்தியவர். என் நண்பர்களில் பலரின் முதல் வாசிப்பு சுஜாதாவே ஆகும். இன்றைக்கும் பல எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாய் இருப்பது அவரின் எழுத்துக்களே.. தமிழ் இருக்கும் வரை சுஜாதாவும் நம்முடனே இருப்பார்.
@arvin... ஆம் உண்மைதான் தம்பி.... நானே கதைகள் படிக்க தொடங்கியது அவருடைய படைப்புகளை படித்த பிறகுதான்.....
@சாம்.... நல்ல விஷயம் நண்பா..... கட்டுரைகள் என்றால் நிறைய இருக்கு.... கணையாழியின் கடைசி பக்கங்கள், கற்றதும் பெற்றதும், தலைமை செயலகம், இந்த நூற்றாண்டு சிந்தனை..... இப்படி நிறைய இருக்கு....
கதைகள் என்றால் அவருடைய சிறுகதைகளை முதலில் படியுங்கள்.... "கறுப்பு குதிரைகள்", தூண்டில் கதைகள் போன்ற சிறுகதை தொகுப்புகள் புத்தகமாக இருக்கும்....
தொடர்கதைகள் என்றால்..... "ஆ, கொலையுதிர் காலம், கனவு தொழிற்சாலை, ஆதலால் காதல் செய்வீர், பிரிவோம் சிந்திப்போம்,பேசும் பொம்மை, மேகத்தை துரத்தினவன்... இப்படி நிறைய இருக்கு......