அறிந்த விளக்கம்: மிகப் பிரபலமான இந்த பழமொழிக்கு அறிந்த விளக்கம் சொல்வது என்பது, "கைப்புண்ணுக்கு கண்ணாடி தேடுவது போல..!" (பாருங்கள் எடுத்துக்காட்டுக்கு கூட பழமொழியைத்தான் உபயோகிக்க வேண்டியிருக்கிறது..!) பாம்பைக் கண்டால் தனியாக இருக்கும் போது வேண்டுமானால், நடுங்கிப் போவோம்..! படையோடு இருந்தால், பாம்புக்கு நாம் நடுங்க மாட்டோம்..! பாம்பை நடுங்கவைப்போம்..! முடிந்தால் 'மோட்சம்' கொடுத்து விடுவோம்..! ஆனால் இந்த பழமொழிக்கு மிக முக்கியமானதொரு விளக்கத்தை நிறைய பேர் மூலம் கேள்விப்பட்டேன்..!
அறியாத விளக்கம்: புராண கால போர்களில் வாள், அம்பு, வேல் இந்த ஆயுதங்கள் எல்லாம் பயன்படுத்தப்பட்டதற்கு பிறகு, போரின் கடைசிகட்டமாக அல்லது உச்சகட்டமாக, பெரிய அழிவைத் தரும் ஆயுதங்களை பயன்படுத்த தொடங்குவார்கள்..! அதில் ஒன்று, 'நாகாஸ்திரம்' என்பது..! நாகத்தைப் போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் இது, ஏவப்பட்ட இடத்திலிருந்து தன் இலக்கை அடையும் போது, பெரும் சேதத்தை விளைவித்து நிறையபேரை அழித்து விடும்..! இதை மிக முக்கியமானவர்கள் மட்டுமே பயன் படுத்துவார்கள் என்பதால், இதை எடுப்பதை பார்த்தவுடனே எதிராளியினர் பதறியடித்து பின்வாங்குவார்கள்..! என்பதனால், "பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்..!" என சொல்லிவைத்தார்கள்..! "மகாபாரத்தில் கர்ணன் இடமும் ஒரு நாகாஸ்திரம் இருத்தது..! அதை கண்டு தானே அர்ஜுனன் நடுங்கினான்..!"
butterfly இதுவரை கதை,கவிதை, கலக்குனீங்க...இப்போ புராணம்...proud of u...("மகாபாரத்தில் கர்ணன் இடமும் ஒரு நாகாஸ்திரம் இருத்தது..! அதை கண்டு தானே அர்ஜுனன் நடுங்கினான்..!"...thats why krishna ask gundthi devi to meet karna)...good work...keep it up